Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-52

அன்புள்ள அரக்கனே CH-52

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

இங்கே அமீரா க‌ண்ணீரை துடைத்த‌ப‌டி வேக‌மாய் த‌ன் அறைக்குள் நுழைய‌, ச‌ட்டென்று அவள் க‌ழுத்தை அழுத்தி பிடித்து சுவ‌ரில் சாய்த்தான் ருத‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு சுவ‌ரில் புதைந்து விழியை விரிக்க‌, அத்த‌னை அருகில் அவ‌ளை அழுத்த‌மாய் பார்த்த‌வ‌னின் க‌ண்க‌ள் கோவ‌த்தில் சிவ‌ந்திருந்த‌து.

அதில் அவ‌ள் புரியா ப‌த‌ற்ற‌மாய் எச்சில் விழுங்க‌ முய‌ல‌, அவ்விட‌த்தை மேலும் அழுத்தி பிடித்த‌வ‌ன், “ஃபோன‌ ஏன்டி எடுக்க‌ மாட்டிங்குற‌?” என்று ப‌ல்லை க‌டித்து கேட்டான்.

அதில் மேலும் அழுத்த‌மாய் சுவ‌ரில் புதைந்த‌வ‌ளின் வார்த்தை தொண்டையில் அடைக்க‌, “சொல்லு” என்று மேலும் அழுத்தி கேட்டான் ருத‌ன்.

அதில் க‌ழுத்தை நிமிர்த்தி க‌டின‌ப்ப‌ட்டு எச்சிலை விழுங்கிய‌வ‌ள், “வெ..வெளிய‌ இருந்..தேன்.” என்று கூற, மேலும் அன‌லாய் முறைத்த‌வ‌ன், “ஏ மொபைல‌ எடுத்துட்டு போக‌ல‌?” என்று அழுத்தி கேட்டான்.

அதில் அவ‌ள் சுவாச‌ம் அடைத்து தொண்டை வலிக்க, கையிலிருந்த‌ ஓவிய‌த்தை இறுக்கி பிடித்த‌வ‌ள்,  “ம்..ம‌ற‌ந்துட்டேன். நீ..நீங்க‌  அத்தைக்கு..” என்று கூறும் முன் ப‌ட்டென்று அவ‌ள் தாடையை பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்திருந்தான். அதில் அவ‌ள் மொத்த‌மாய் அவ‌ன் மார்பில் மோதி திடுக்கிட்டு ப‌ய‌ந்து விழியை விரிக்க‌, அவ்விழிக‌ளில் த‌ன் அன‌ல் விழியை அழுத்த‌மாய் திணித்த‌வ‌ன், “என‌க்கு உன்கூட‌ பேச‌னும்னு தோனுனா நா உன‌க்குதா கால் ப‌ண்ணுவேன், உன் வாய்ஸ‌ ம‌ட்டுந்தா கேப்பேன். வேற‌ யாருக்கும் கால் ப‌ண்ண‌னும்னு என‌க்கு அவ‌சிய‌ம் கெடையாது. புரியுதா?” என்றான் அழுத்த‌மாக‌. அதில் முழுதாய் புருவ‌த்தை விரித்த‌வ‌ள், த‌ன் தாயையே ஏன் இவ்வாறு எடுத்தெறிந்து பேசுகிறான் என்று புரியா அதிர்வாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, ப‌ட்டென்று அவ‌ளை அதே சுவ‌ரில் அழுத்தி அவ‌ள் தேக‌த்தோடு மொத்த‌மாய் சாய்ந்தான் அவன். அதில்  திடுக்கிட்டு உட‌லை விறைத்த‌வ‌ள், ப‌த‌ற்ற‌மாய் பார்வையை ம‌ட்டும் இற‌க்கி கையிலிருந்த‌ ஓவிய‌த்தை பார்த்தாள். அதுவோ இருவ‌ரின் உட‌லிடையே சிக்காம‌ல் ஓர‌மாய் அவ‌ள் க‌ர‌ம் பிடித்திருக்க‌, அவ‌ன‌றியாம‌ல் அதை மெல்ல‌ அருகே இருந்த‌ மேசையில் த‌ள்ளி வைத்தாள்.

அடுத்த‌ நொடி அவ‌ள் தேக‌த்தில் மொத்த‌மாய் புதைந்தவ‌ன், அதில் திடுக்கிட்டு நிமிர்ந்த‌ அவ‌ள் விழிக‌ளை அழுத்த‌மாய் ச‌ந்தித்து, “இனிமே நீ எங்க‌ போனாலும் மொபைலோட‌தா போயாக‌ணும். நா கால் ப‌ண்ண‌ மொத‌ல் தெட‌வையில‌யே எடுத்தாக‌ணும். ரெண்டாவ‌து தெட‌வ‌ கால் ப‌ண்ண‌ வெச்ச‌.. அடுத்த‌ நிமிஷ‌ம் இங்க‌ இருப்பேன்.” என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அவ‌ள் இமைக‌ள் முழுதாய் விரிந்து நிற்க‌, “நா திரும்ப‌ கால் ப‌ண்ணும்போது ஒட‌னே வாங்கி பேசுற‌. நீ என்ன‌ கிழிச்சுட்டு இருந்தாலும் ப‌ர‌வால்ல‌.” என்ற‌ த‌ன் த‌ந்தையின் வார்த்தைக‌ள் காதில் ஒலிக்க‌, த‌ன் விழியின் நெருக்க‌த்தில் நிற்கும் இவ‌னின் முக‌த்திலும் அவ‌ரின் பிம்ப‌மே தெரிந்த‌து அவ‌ளுக்கு.

அதில் அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, அவ‌ன் இன்னுமே இறுக்கி பிடித்திருந்த‌ அவ‌ளின் தாடை மெல்லிய‌தாய் ந‌டுங்கிய‌து. அப்போது அவ‌ன் கைப்பேசி ஒலிக்க‌, அவ‌ளோ திடுக்கிட்டு கீழே பார்த்துவிட்டு அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ளையே அழுத்த‌மாய் பார்த்த‌ப‌டி மெல்ல‌ அவ‌ள் தாடையிலிருந்த‌ க‌ர‌த்தை வில‌க்கி த‌ன்  மொபைலை எடுக்க‌, அப்போதே சீராய் மூச்சுக்காற்று கிடைத்த‌ நிலையில் பார்வையை தாழ்த்தி  மூச்சுவாங்கிக்கொண்டாள் அவ‌ள்.

அதை பார்த்த‌ப‌டியே அவ‌ள் தேக‌த்திலிருந்து ச‌ற்றும் பிரியாம‌ல் மொபைலை காதில் வைத்தவ‌ன், “சொல்லு” என்றான் இறுக்க‌மாக‌.

“பாஸ்! இங்க‌ எல்லாரும் உங்க‌ளுக்காக‌தா வெயிட்டிங். எப்போ வ‌ருவீங்க‌ பாஸ்?” என்று யோகி கேட்க‌, “கேன்ச‌ல் எவ்ரிதிங்.” என்றான் ருதன்.

அதில் ச‌ட்டென்று இவள் விழியை நிமிர்த்த‌, அவ‌னோ கூர்மையாய் அவ‌ள் விழிக‌ளை ஆராய்ந்தான். அதில் த‌டுமாறி அவ‌ள் இமைக‌ளை தாழ்த்திவிட‌, இவ‌னோ இணைப்பை துண்டித்துவிட்டு அதே க‌ர‌த்தை அவள் தோளை உர‌சிய‌ப‌டி சுவரில்  பதிக்க, அவ‌ளோ மேலும் சுவ‌ரோடு ஒட்டி நின்றாள். அதில் அவ‌ன் அடுத்த‌ க‌ர‌த்தையும் அவ‌ள் க‌ழுத்துர‌ச‌ சுவ‌ரில் ப‌தித்து சிறை பிடிக்க‌, மேலும் அழுத்த‌மாய் சுவ‌ரில் புதைந்த‌வ‌ள், ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்தாதிருக்க‌, அந்த‌ க‌விழ்ந்த‌ இமை குடைக‌ளை குழப்பமாய் ஆராய்ந்த‌ப‌டியே அவ‌ள் முக‌முர‌ச‌ நெருங்கிய‌வ‌ன், “ஓய்!” என்றான் மெல்ல‌மாக‌.

அதில் அவ‌ன் மீசை அவ‌ள் நாசி நுனியை குத்தி உர‌ச‌, தொந்த‌ர‌வாய்  முக‌த்தை திருப்பிய‌வ‌ள், “ம்ம்” என்றாள். அதில் மெதுவாய் அவ‌ள் க‌ன்ன‌த்தில் த‌ன் மீசை முடிக‌ளை வைத்து மெல்ல‌ வ‌ருடிய‌வ‌ன், “என்ன‌ பாரு” என்றான். அதில் அவ‌ள் மெல்ல‌ அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப, அப்போதும் நிமிராத‌ அவ‌ள் இமைக‌ளில் பார்வையை குவித்தவ‌ன், “என்ன‌ பாருன்னு சொன்னேன்.” என்றான்.

அதில் அவ‌ள் இமைக‌ள் த‌டுமாறி மெதுவாய் நிமிர‌, அவ‌ள் விழிக‌ளுள் நீர் த‌ழும்பி நின்ற‌து. அதில் இவ‌ன் மீசையோர‌ம் மெல்லிய‌தாய் வ‌ளைய‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் விழி க‌ருவை அசைத்து அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அந்த‌ அசைவில் த‌ழும்பிய‌ நீர் மெல்ல‌ இற‌ங்கி அவ‌ள் கீழ் இமை நுனியில் வ‌ந்து நின்ற‌து. அந்த‌ துளியை த‌ன் க‌ட்டை விர‌லால் மெல்ல‌ எடுத்தவன், அதை அப்படியே பூவாய் கொண்டு வ‌ந்து த‌ன் விழிய‌ருகே நிறுத்தி, அந்த‌ க‌ண்ணாடி துளி வ‌ழியே அவ‌ள் முக‌த்தை பார்த்தான். அவ‌ளுக்கோ அதே துளியின் ம‌றுப‌க்க‌ம் அவ‌ன் பெரிய‌ விழிதான் தெரிய‌,  ச‌ட்டென்று அதை சுண்டிவிட்டது அவ‌ன் விர‌ல். அது ப‌ட்டென்று அவ‌ள் முக‌த்தில் தெளிக்க‌, திடுக்கிட்டு விழி மூடினாள்.

அதில் அவ‌ள் விழியினுள்ளிருந்த‌ க‌டைசி க‌ண்ணீரும் முழுதாய் வெளியேறி க‌ன்ன‌ம் தொட‌, அதில் மென்மையாய் இத‌ழை அம‌ர்த்தி உறிஞ்சி எடுத்தான் அவ‌ன். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் நெற்றியை குறுக்க‌, இவ‌னோ மெதுவாய் இத‌ழை வில‌க்கி அவ்விட‌த்தை மீசையால் மெல்ல‌ துடைத்து மெல்லிய‌ முத்த‌ம் வைத்து, “அம்மு!” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அந்த‌ அழைப்பில் அவ‌ளுள் மெல்லிய‌ கோப‌ம் எட்டி பார்க்க‌, புருவ‌த்தை சுருக்கி முக‌த்தை திருப்பினாள். அதில் காட்டிய‌ அந்த‌ ம‌று க‌ன்ன‌த்திலும் இத‌ழை தேய்த்து க‌ண்ணீரை துடைத்த‌வ‌ன், அப்ப‌டியே மீசையை புதைத்து முத்த‌மிட்டு, “ஓய்!” என்றான் அதே மெல்லிய‌ குர‌லில்.

அவ‌ளோ மேலும் கோப‌மாய் புருவ‌த்தை சுருக்கி, முழுதாய் முக‌த்தை திருப்பிக்கொள்ள‌, அதில் வ‌ளைந்த‌ அவ‌ள் வெண் க‌ழுத்தில் இர‌ச‌னையாய் அவ‌ன் பார்வை ப‌ட‌ர்ந்த‌து. அந்த‌ வெண்ச‌ங்கில் அவ‌ன் அழுத்தி பிடித்த‌ இட‌ம் ச‌ற்று சிவ‌ந்திருக்க‌, அங்கே மெல்ல‌ த‌ன் ஈர‌ இத‌ழை ப‌தித்தான் அவ‌ன்.

அதில் அவ‌ளின் சுருங்கி நின்ற‌ புருவ‌ங்க‌ள் இத‌மாய் த‌ள‌ர‌, அவ‌னோ மெல்ல‌ த‌ன் இத‌ழை ந‌க‌ர்த்தி சிவ‌ந்த‌ இட‌மெங்கும் மென் மெதுவாய் த‌ன் ஈர‌ முத்த‌ங்க‌ளை வைக்க‌, அவ‌ளோ சிலிர்வாய் க‌ழுத்தை விரிக்க‌, அங்கே அழுத்த‌மாய் இத‌ழை புதைத்தான் அவ‌ன். அதில் ஜிவ்வென்று அவ‌ள் க‌ழுத்து ந‌ர‌ம்பில் உண‌ர்ச்சி கிள‌ம்ப‌, சிலிர்வாய் க‌ழுத்தை நெளித்தாள். அங்கே மெல்ல‌ ஈர‌ம் செய்து மெல்லிய‌தாய் முத்த‌மிட்ட‌வ‌ன், “சாரி” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் ஈர‌ விழிக‌ள் பிரிய‌, அவ‌ள் தாடையை பிடித்து மெல்ல‌ த‌ன் ப‌க்க‌ம் திருப்பினான் அவ‌ன். அதில் அவ‌ளும் மெல்ல‌ திரும்பி அவ‌ன் விழி ச‌ந்திக்க‌, அவ்விழிக‌ளுள் இர‌ச‌னையாய் த‌ன் பார்வையை க‌ல‌க்க‌விட்ட‌வ‌ன், “இனி இப்பிடி ப‌ண்ண‌ மாட்டேன். போதுமா?” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் விய‌ப்பாய் விழியை விரிக்க‌, த‌ன் மீசையில் உர‌சிக்கொண்டிருந்த‌ அவ‌ளிதழை மேலும் அழுத்தி உர‌சி மெல்லிய‌தாய் முத்த‌மிட்டவ‌ன், “நீ இப்பிடி ப‌ண்ணாத‌ வ‌ரைக்கும்.” என்றான். அதில் ச‌ட்டென்று அவ‌ள் முக‌ம் சுருங்க‌, வேக‌மாய் முக‌த்தை திருப்பினாள். அதில் ப‌ட்டென்று அவ‌ள் தாடையிலிருந்த‌ அவ‌ன் க‌ர‌ம் ச‌ரிந்து விழ‌, அவ‌ளோ முழுதாய் திரும்பி கோப‌மாய் முக‌த்தை இறுக்கினாள். அதில் இர‌ச‌னையாய் இத‌ழை வ‌ளைத்த‌வ‌ன், மெதுவாய் அவ‌ள் தேக‌த்தைவிட்டு பிரிந்து வில‌கினான்.

அவ‌ன் மொத்த‌ பார‌மும் வில‌கிய‌தை உண‌ர்ந்த‌வ‌ள் திரும்பாம‌லே குழ‌ப்ப‌மாய் புருவ‌த்தை சுருக்க‌, அவ‌ளின் பாத‌த்தில் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் திடுக்கிட்டு அவ‌ள் கீழே பார்க்க‌, அவ‌ள் முன் ம‌ண்டியிட்டு அம‌ர்ந்திருந்த‌வ‌ன் அவ‌ளின் பாத‌த்தை தூக்கி த‌ன் உள்ள‌ங்கையில் வைத்து, அவ‌ள் கால‌ணியை மெல்ல‌ க‌ழ‌ற்றினான். கார்ட‌ன் வ‌ரை சென்று வ‌ந்த‌ த‌ன் அழுக்கு கால‌ணியை அவ‌ன் வெறும் கையால் தொட‌வும் ப‌த‌றிய‌வ‌ள், உட‌னே த‌ன் காலை உருவ‌ முய‌ல‌, அதை அழுத்தி பிடித்தான் அவ‌ன். அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ த‌ன் பார்வையில் அழுத்த‌ம் கொடுத்து அவ‌ளை த‌டுத்துவிட்டு, மீண்டும் குனிந்து அவ‌ள் கால‌ணியை மெதுவாய் க‌ழ‌ற்றினான். அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அந்த‌ மேசை நுனியை இறுக்கி பிடித்து சுவ‌ரில் சாய‌, அத‌ற்குள் அவ‌ள் கால‌ணியை முழுதாய் வில‌க்கி அதை பூவாய் கீழே வைத்த‌வ‌ன், அவ‌ள் பூ பாதத்தை மெதுவாய் ஏந்தி த‌ன் முக‌த்த‌ருகே உய‌ர்த்த‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் கால் விர‌ல்க‌ளை குறுக்க‌, அந்த‌ பாத‌த்தில் அழுத்தி ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் சிலிர்வாய் அவ‌ள் இமைக‌ள் மூட‌, அவ‌ள் கால் விர‌ல்க‌ள் கூசி விரிந்த‌து. அதில் அவ‌ன் மீசை முடிக‌ள் உர‌சி விலக, அவ‌ளோ கூச்ச‌த்தில் புருவ‌த்தை குறுக்கி விழியை திற‌க்க‌, அப்ப‌டியே அவ‌ள் உள்ள‌ங்கால் குழியிலும் அழுத்தி புதைந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ள் மொத்த‌ உட‌லும் சிலிர்த்து விரிய‌, பின்னிருந்த‌ சுவ‌ரில் அழுத்தி க‌ர‌த்தை ப‌தித்து முழுதாய் அதில் புதைந்தாள்.

அதில் நிமிர்ந்து அவ‌ளை பார்த்த‌வ‌னின் இத‌ழ்க‌ள் இர‌ச‌னையாய் வ‌ளைய‌, அவ‌ளையே பார்த்த‌ப‌டி அந்த‌ காலை எடுத்து த‌ன் மார்பில் ப‌தித்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு குனிந்து த‌ன் காலை வில‌க்க‌ முய‌ல‌, அதை அழுத்தி த‌ன் ந‌டு இத‌ய‌த்தில் புதைத்த‌வ‌ன், “ஐய‌ம் சாரி” என்றான் அத்த‌னை மென்மையாக‌.

அதில் அவ‌ளோ விய‌ப்பாய் புருவ‌ம் விரிக்க‌, அவ‌னோ குறும்பாய் இத‌ழை வ‌ளைத்து   அந்த‌ பாத‌த்தை ப‌ட்டென்று இழுத்திருந்தான். அதில் ச‌ட்டென்று அவ‌ள் மொத்த‌மாய் அவ‌ன் மீது விழ, அவ‌ளை வாரி அணைத்து பொத்தென்று த‌ரையில் சாய்ந்தான் அவ‌ன். அதில் அவ‌ன் தேக‌ம் த‌ரையில் புதைய‌, அவ‌ள் தேக‌ம் அவ‌ன் உட‌லில் புதைய‌, இருவ‌ரின் இத‌ழ்க‌ளும் அழுத்த‌மாய் புதைந்த‌து.

அதில் அக‌ல‌ விழி விரித்தவ‌ள் உட‌னே பிரிய‌ முய‌ல‌, அவ‌ள் பின்ன‌ந்த‌லையை அழுத்தி  இழுத்து ஆழ‌மாய் அவ‌ளித‌ழுள் புகுந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் விரிந்த‌ விழிக‌ள் அதிர்வாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ்விழிக‌ளுள் இர‌ச‌னையாய்  த‌ன் விழியை நுழைத்த‌வ‌ன், மெல்லிய‌தாய் முகத்தை சாய்த்து மேலும் வ‌ன்மையாய் அவ‌ள் இத‌ழை சுவைத்தான். அதில் அழுத்தி விழி மூடிய‌வ‌ளின்  விர‌ல்க‌ள் அவ‌ன் கால‌ரை இறுக்கி பிடிக்க‌, அவ‌னோ அவ‌ள் கூந்த‌லை சுருட்டி பிடித்து மேலும் த‌ன‌க்குள் புகுத்தி, அவ‌ள் உயிர் வ‌ரை உறிஞ்சியெடுக்க‌ துவ‌ங்கினான். அதில் புருவ‌த்தை குறுக்கி திண‌றிய‌வ‌ளின் சுவாச‌ குழ‌ல் அடைத்து தொண்டை மேலேறி இற‌ங்க‌, அப்ப‌டியே  சுவைத்த‌ப‌டி அவ‌ளை பிர‌ட்டி த‌ரையில் த‌ள்ளி அவ‌ள் மீது ப‌ட‌ர்ந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழி திற‌க்க‌, இன்னுமே அவ‌ன் விழிக‌ள் அவ‌ள் விழிக‌ளையே பார்த்த‌ப‌டி இருந்த‌து. அதில் அவ‌ள் விழிக‌ள் த‌டுமாற, மெல்ல‌ அவ‌ன் இத‌ழ்க‌ள் வ‌ன்மையை குறைத்து மென்மையாய் சுவைத்த‌து. அதில் மெல்ல‌ அவ‌ள் தொண்டை தளர்ந்து சுவாச‌ம் சீராக‌, மெதுவாய் த‌ன் இத‌ழை பிரித்தான் அவ‌ன். அதில் மெல்ல‌ விடுப்ப‌ட்ட‌ அவ‌ள் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் பிரிந்து மூச்சு வாங்க‌, அவ‌ன் வ‌ன்மையில் சிவ‌ந்து நின்ற‌ கீழ் இத‌ழில் மெல்லிய‌தாய் க‌சிந்து நின்ற‌து இர‌த்த‌ம். அதை த‌ன் க‌ட்டை விர‌லால் அழுத்தி துடைத்து, அங்கே மெல்லிய‌தாய் முத்த‌மிட்ட‌வ‌ன், மெதுவாய் நிமிர்ந்து அவ‌ள் விழி பார்த்து, “என் சாரிய‌ அக்ச‌ப்ட் ப‌ண்ற‌ வ‌ரைக்கும் உன்ன‌ கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா டேஸ்ட் ப‌ண்ணுவேன்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் இமைக‌ளில் விரிந்த‌ ப‌ய‌ம் அவ‌ள் விழிக‌ளுள் நிறைய‌, அவ்விழிக‌ளில் இர‌சனையாய் த‌ன் பார்வையை க‌ல‌க்க‌விட்ட‌வ‌ன், மெல்ல‌ பா‌ர்வையை இற‌க்கி அவ‌ள் இத‌ழில் குவித்தான். அதில் ப‌த‌ற்றமாய் அவ‌ள் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் பிரிந்து சுவாச‌த்தை வெளியிட‌, அதனுள் மெதுவாய் அவ‌ன் சூடான‌ சுவாச‌ம் நிர‌ம்பும் அள‌வு நெருங்கிய‌து அவ‌ன் இத‌ழ். அதில் அவ‌ள் கீழ் இத‌ழ் மெல்லிய‌தாய் ந‌டுங்க‌, அதில் மெல்ல‌ த‌ன் மேல் இத‌ழை உர‌சி மெதுவாய் வ‌ருடிய‌வ‌ன், அப்ப‌டியே இத‌ழை சாய்த்து அவ‌ள் கீழ் இத‌ழின் ச‌ரிவில் பூத்திருந்த‌ விய‌ர்வை மொட்டுக்க‌ளில் முத்த‌மிட்டான்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் புருவ‌த்தை சுழித்து விழி மூடிய‌வ‌ளின் விர‌ல்க‌ள் அவ‌ன் புஜ‌த்தின் ச‌ட்டையை சுருட்டி பிடிக்க‌, அவ‌னோ அவ்விட‌த்தை த‌ன் மீசையால் மெல்ல‌ துடைத்து  அவ‌ள் தாடையில் அழுத்தி முத்த‌மிட்டான். அதில் சுழிந்த‌ புருவ‌ங்க‌ள் மெதுவாய் த‌ள‌ர‌, அப்ப‌டியே அவ‌ள் த‌டையில் மீசையுர‌ச‌ சாய்ந்து அவ‌ள் தாடை வ‌ளைவில் மெல்லிய‌தாய் முத்த‌மிட்டான். அதில் சிலிர்வாய் தாடையை விரித்த‌வ‌ளின் வெண் ச‌ங்கில் அவ‌ன் நாசி ந‌ழுவி வர, அங்கே அழுத்தி இத‌ழை ப‌தித்து மெல்ல‌ எச்சிலை தேய்த்தான். அதில் அவ‌ன் விர‌ல் ப‌திந்து சிவ‌ந்த‌ இட‌ம் இத‌மாய் ஈர‌த்தை க‌ட‌த்த‌, அவ‌ளோ சிலிர்வாய் க‌ழுத்தை திருப்பினாள். அங்கே த‌ன் மீசையை அழுத்தி தேய்த்து எச்சிலை துடைத்த‌வ‌ன், அங்கே மெல்லிய‌தாய் முத்த‌மிட்டு, “ஐய‌ம் சாரி.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் உட‌லெங்கும் கூசியெழும்பி புருவ‌ங்க‌ள் குறுக‌, அவ‌ள் க‌ழுத்தெங்கும் த‌ன் இத‌ழை ப‌ட‌ர‌விட்டு சிவ‌ந்த‌ இட‌ங்களில் த‌ன் எச்சிலால் ம‌ருந்திட்டான். அதில் சிலிர்வாய் விரிந்து நெளிந்த‌ அவ‌ள் க‌ழுத்து வ‌ளைவில் முழுதாய் அவ‌ன் முகத்தை புதைக்கும் நேரம், அவ‌ன் க‌ன்ன‌த்தில் அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ள் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ன் திடுக்கிட்டு அப்ப‌டியே நிறுத்த‌, அவன் கன்னத்திலிருந்த த‌ன் இதழை மெதுவாய் பிரித்து அவ‌ன் க‌ன்ன‌முர‌ச‌, “அக்ச‌ப்ட‌ட்” என்றாள் மெல்லிய‌ குர‌லில். அதில் மெல்ல இதழ் வளைத்தவன், அவ‌ள் க‌ழுத்து ந‌ர‌ம்பை ந‌றுக்கென்று க‌டித்தான். அதில் திடுக்கிட்டு “ஸ்ஸ்” என்று திரும்பிய‌வ‌ளின் முக‌த்தை மொத்த‌மாய் உர‌சி நின்றது அவ‌ன் முக‌ம். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌ள் மூக்குர‌ச‌ தன் இதழை அசைத்து, “நெஜ‌மா அக்ச‌ப்ட‌டா?” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ளும் ப‌த‌ற்ற‌மாய் ஆம் என்று மெல்ல‌ த‌லைய‌சைத்தாள். அதில் மெதுவாய் பார்வையை இற‌க்கி அவ‌ள் இத‌ழில் குவித்த‌வ‌ன், அதிலிருந்த‌ மெல்லிய‌ காய‌த்தில் மெல்லிய‌தாய் இத‌ழ் வைத்து முத்த‌மிட்டு, “குட்” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌னையே பார்க்க‌, அவ‌னோ மெதுவாய் வில‌கி அவ‌ளைவிட்டு பிரிந்து எழுந்தான். அதில் அவ‌ள் புரியாது பார்வையை நிமிர்த்த‌, அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்து ச‌ட்டென்று அவ‌ளையும் தூக்கினான் அவ‌ன். அதில் அவ‌ளும் மொத்தமாய் வந்து அவ‌ன் மார்பில் புதைய‌, அவ‌ளை அப்ப‌டியே வாரி அள்ளி தூக்கியிருந்தான் அவ‌ன்.

அடுத்த‌ நொடி அவ‌ன் கைக‌ளுக்குள் வ‌ந்திருந்த‌வ‌ள், திடுக்கிட்டு அதிர்வாய் அவ‌ன் முக‌ம் பார்க்க‌, அவ‌ள் முக‌த்தை உர‌சும் அள‌வு நெருக்க‌த்தில் இருந்த‌வ‌னின் பார்வை இர‌ச‌னையாய் அவ‌ள் முக‌மெங்கும் த‌ழுவ அவள் மூக்கின் நுனியில் மெல்லியதாய் முத்தமிட்டு‌, “அக்ச‌ப்ட் ஆன‌துக்கு அப்ற‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா எதுக்கு? மொத்த‌மாவே டேஸ்ட் ப‌ண்ணிர‌லாம்தான‌?” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ள் முழுதாய் விழி விரிக்க‌, அதில் அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்தபடியே ந‌ட‌ந்த‌வ‌ன், பொத்தென்று அவ‌ளை அந்த‌ மெத்தையில் போட்டான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌த‌றி எழ‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ள் இடையுர‌ச‌ மெத்தையில் காலை வைத்து த‌டுத்தான் அவ‌ன். அதில்  திடுக்கிட்டு மீண்டும் மெத்தையில் புதைந்த‌வ‌ள் ப‌த‌ற்ற‌மாய் நிமிர‌, அவ‌னோ அவளை பார்வையாலே மென்று விழுங்கியபடி த‌ன் க‌ருப்பு கோட்டை மெதுவாய் க‌ழ‌ற்றினான்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌ம் வெகுவாய் அதிக‌ரித்து இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, காலையில் த‌ன் ஆடைக‌ளை அவ‌ன் க‌லைத்து வீசிய‌துதான் க‌ண்முன் வ‌ந்த‌து. அதை இப்போது நினைத்தாலும் உட‌லெங்கும் ந‌டுக்க‌ம் ப‌ர‌வ‌, த‌ன் மார்பு சேலையை இறுக்கி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

அத‌ற்குள் த‌ன் கோட்டை முழுதாய் க‌ழ‌ற்றி வீசிவிட்டு மொத்த‌மாய் அவ‌ள் மீது விழுந்தான் அவ‌ன். அதில் சித‌றிய‌ கோட் சென்று அந்த‌ மேசையிலிருந்த‌ அவ‌ளின் ஓவிய‌த்தை மூட, இவ‌ளோ இறுக்கி விழியை மூடினாள்.

அதில் அவ‌ள் விழிய‌ருகே மெல்லிய‌தாய் நீர் க‌சிய‌, அதை அழுத்தி துடைத்த‌ப‌டியே அவ‌ள் முக‌மெங்கும் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் முக‌த்தை குறுக்க‌, அந்த முகமெங்கும்  அவன் அனல் சுவாசம் சூடாய் படர்ந்தது. அதில் அவள் முகத்தோரம் மெல்லியதாய் வியர்வை மொட்டுக்கள் பூக்க, அதில் சிதறி ஓட்டியிருந்த கூந்தலை இதழாலே விலக்கி அவள் கன்னத்தின் கீழ் சேர்த்தவன், அப்படியே அவள் காதடியில் நாசியை நுழைக்க,  அவளோ ப‌த‌ற்ற‌மாய் இமையை இறுக்கி க‌ழுத்தை நெளிக்க‌, அங்கே அழுத்த‌மாய் இதழை புதைத்தான் அவன். அதில் சிலிர்விற்கு ப‌தில் அவ‌ள் உட‌ல் ப‌த‌ற்ற‌த்தையே க‌ட‌த்த‌, த‌ன் சேலையை மேலும் இறுக்கி பிடித்தது அவ‌ள் விர‌ல்க‌ள்.

அவனோ அப்படியே இதழை நகர்த்தி அவ‌ள் தோள் வ‌ளைவில் முகத்தை புதைக்க, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் தோளை நெளித்தாள். அதில் வாகாய் அதனுள் புகுந்து அவ்விடம் முழுக்க நாசியை அழுத்தி தேய்த்தவனின் உடலெங்கும் அவள் வாசம் அனலால் ஏற, அவன் மோக நரம்புகள் மெல்ல புடைத்தது. அதில் நாசி உரசிய இடமெங்குமே இதழை அழுத்தி  படரவிட்டவன், இதழாலே மெதுவாய் அங்கிருந்த‌ சேலையை நகர்த்த, அதில் மெல்ல திரை விலகிய வெற்று தோள்பட்டையில் அவன் சுவாசம் அனலாய் படர்ந்தது.

அந்த அனல் அவளின் நடுக்கத்தை அதிகரிக்க, அவனோ அங்கே அழுத்தி இதழ் பதித்து, அங்கிருந்த பின்னை கடித்து கழற்றினான். அதில் திடுக்கிட்டு அவள் அவன் பக்கம் திரும்ப அவள் சேலை முந்தி மெல்லியதாய் சரிந்தது. அதில் வெளிப்பட்ட மேனியில் மெல்லிய முத்தம் வைத்தவன், அந்த திரையை  முழுதாய் விலக்க போக, சட்டென்று அதை பிடித்து தடுத்தது அவள் விரல்கள். அதில் திடுக்கிட்டு அவன் புருவத்தை குறுக்க, அவன் விழியருகே அந்த சேலையை இறுக்கி பிடித்தவள், “ஒன்..னு கேக்க‌ணும்.”  என்றாள் த‌டுமாற்ற‌மாக‌. அதில் புருவம் நெளித்தவன் நிமிர்ந்து அவளை பார்க்க, அவள் விழிகள் வலியுடன் நீரை சுமந்து நின்றது.

அதில் அவன் குழப்பமாய் அந்த விழிகளை ஆராய, அவளோ தயக்கமாய் அவன் விழிகளை சந்தித்து, “நா அழ‌கா இருக்..குற‌தால‌தா.. எ..ன்ன‌ புடிச்சிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

அதில் ச‌ட்டென்று அவ‌ன் புருவ‌ங்க‌ள் விரிய‌, இவ‌ளோ க‌ண்ணீருட‌ன் அவ‌ன் விழிகளிடம் ப‌திலை எதிர்பார்த்தாள்.  ஏனோ இன்று காலையில் த‌ன் வெற்று உட‌லின் மேடு ப‌ள்ள‌ங்க‌ளில் முழுதாய் பார்வையில் விழுங்கியபடியே, “பியூட்டிஃபுல்” என்ற‌ அவ‌னின் ஆழ்ந்த குரல் இன்னுமே அவ‌ள் காதுக‌ளில் ஒலிக்க‌, அவன் ஒவ்வொரு முறையும் கூறிய பியூட்டிஃபுல் என்ற வார்த்தைக‌ள் ஒன்றாய் கண்முன் வந்து குவிந்த‌து. நேற்று பால்கனியில் என்னை ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டதற்கு கூட, அத்தனை அழகாய் அத்தனை விரிவாய் தன் உடலைதானே வர்ணித்தான். இப்போதுக்கூட இவ‌ன் ச‌மாதான‌ப்ப‌டுத்திய‌து  இந்த‌ உட‌லை இப்போதே முழுதாய் எடுத்துக்கொள்ளதான் என்று தோன்றியது. எனவே அவள் மனம் வேதனையில் துடிக்க‌, அதை அவ‌னிட‌மே கேட்டுவிட்டாள்.

      – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured