Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-47

அன்புள்ள அரக்கனே CH-47

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

அவ‌ள் காதோர‌ம் உர‌சிய‌ த‌ன் சுருண்ட‌ முடியை புழுவென்று நினைத்து அல‌றிய‌வ‌ள், வேக‌மாய் அதை உத‌றிவிட்டு அவ‌ன் மார்புக்குள் புகுந்திருந்தாள். அதில் அவ‌ன் திடுக்கிட்டு தடுமாறி குனிந்து அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் மார்புக்குள் பயந்து ந‌டுங்க‌, அவ‌னோ அவ‌ளை அணைக்க‌ கூட இல்லாது அப்படியே பார்வையை நகர்த்தி அவ‌ள் உத‌றிவிட்ட‌ த‌ன்  தாம‌ரையைதான் பார்த்தான்.

“அதுல‌ என்ன‌மோ..” என்று அவ‌ள் நடுங்கியபடி கூற‌ வ‌ர‌, அவ‌ள் கூந்த‌லுள் முழு விர‌ல்க‌ளையும் நுழைத்து இறுக‌ பிடித்த‌வ‌ன், அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்கும் முன் ப‌ட்டென்று அவ‌ளை த‌ண்ணீருக்குள் த‌ள்ளியிருந்தான்.

அதில் பொத்தென்று அவ‌ள் உள்ளே விழுந்து‌ த‌ண்ணீர்  அவ‌ன் முக‌த்தில் அடிக்க‌, அதை தன் விர‌ல்க‌ளால் அழுத்தி துடைத்த‌வ‌னின் க‌ண்க‌ள் கோவ‌த்தில் சிவ‌க்க‌, அவ‌ன் ம‌று க‌ர‌மோ த‌ன் பின்னிடையிலிருந்த‌ துப்பாக்கியை மெதுவாய் உருவி, ப‌ட்டென்று திரும்பி தூர‌த்திலிருந்த‌ ம‌ர‌த்தை நோக்கி சுட்டான். அதிலிருந்து வெளி வ‌ந்த‌ புல்ல‌ட் பாய்ந்து சென்று அந்த‌ ம‌ர‌த்தின் கிளையில்  ம‌றைந்திருந்த‌வ‌னின் த‌லையை துளைத்து இற‌ங்கிய‌து. அடுத்த‌ நொடி அவ‌ன் பொத்தென்று கிழே விழ‌, அங்கிருந்த‌ ப‌ற‌வைக‌ள் ச‌ட‌ச‌ட‌வென்று எழும்பி ப‌ற‌ந்த‌து.

அதை பார்த்த‌ ருத‌னின் விழிக‌ள் மேலும் சிவ‌க்க‌, அப்ப‌டியே இந்த‌ தோட்ட‌மெங்கும் ச‌ந்தேக‌மாய் பார்வையை ப‌ட‌ர‌விட்டான்.

அப்போதே மூச்சை இழுத்துவிட்டு த‌ண்ணீருக்குள்ளிருந்து வெளி வ‌ந்தாள் அமீரா. அதில் இவ‌னும் அவ‌ச‌ர‌மாய் துப்பாக்கியை பின்னால் ம‌றைத்த‌ப‌டி அவ‌ள் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ளோ த‌ன் முக‌த்தில் வ‌ழிந்த‌ த‌ண்ணீரை க‌ர‌த்தால் அழுத்தி துடைத்து மூச்சு வாங்க‌ சுற்றியும் பார்க்க‌,  அவ‌ளின் க‌ழுத்த‌ள‌வுதான் இருந்த‌து அந்த‌ த‌ண்ணீரின் ம‌ட்ட‌ம். அதில் இருமிய‌ப‌டி மீண்டும் த‌ன் முக‌த்தை அழுத்தி துடைத்த‌வ‌ள் ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்த‌, அவ‌ள் முன் கூலாய்  குனிந்து க‌ர‌த்தை நீட்டினான் ருத‌ன்.

அதில் த‌ய‌க்க‌மாய் அவ‌ன் க‌ர‌த்தை பார்த்த‌வ‌ளின் ப‌த‌ற்ற‌ம் எச்சிலுட‌ன் தொண்டையில் இற‌ங்க‌, த‌ன் நீர் வ‌ழியும் கீழ் இத‌ழை அழுத்தி ம‌ட‌க்கி மூச்சை சீராக்கி ப‌த‌ற்ற‌த்துட‌னே அவ‌ன் க‌ர‌த்தை பிடித்தாள். அடுத்த‌ நொடி அவ‌ள் க‌ர‌த்தை அழுத்தி பிடித்தவ‌ன், அப்ப‌டியே அவ‌ளை மேலே தூக்கிவிட‌, அவ‌ளும் தாடுமாறி ம‌று க‌ர‌த்தால் அவ‌ன் தோள்ப‌ட்டையை பிடித்து மெதுவாய் மேலே ஏறி வ‌ந்தாள்.

அப்ப்ப‌டியே முழுதாய் ஏறி நின்ற‌வ‌ளின்  உட‌ல் முழுக்க‌ சொட்டிக்கொண்டிருந்த‌ நீர், அவ‌ள் தேக‌ம் முழுக்க‌ க‌டுக‌டுவென்று குளிரை க‌ட‌த்த‌, உட‌லை குறுக்கி க‌ர‌ங்க‌ளை மார்ப‌ருகே ம‌ட‌க்கி வெகுவாய் ந‌டுங்கியவ‌ளின் மார்பை முழுதாய் உர‌சி நின்ற‌து அவ‌ன் தேக‌ம். அதில் அவ‌ள் ந‌டுக்க‌மாய் பார்வையை நிமிர்த்த‌, அவ‌ள் மீது த‌ன் ஜேக்கெட்டை போர்த்தினான் அவ‌ன்.

அதை த‌ய‌க்க‌மாய் இறுக்கி பிடித்து த‌ன் மார்போடு சேர்த்து ப‌ற்றிக்கொண்ட‌வ‌ளின் தேக‌ம் இன்ன‌முமே ந‌டுங்க‌, அவ‌ன் தேக‌ம் மெல்ல‌ அவ‌ளைவிட்டு வில‌கிய‌து. அதில் அவ‌ள் புரியாது பார்வையை நிமிர்த்த‌, அப்ப‌டியே அவ‌ள் முன் ஒற்றை காலை ம‌ட‌க்கி த‌ரையில் வைத்து, கீழிருந்த‌ தாம‌ரையை கையில் எடுத்தான். அவ‌ள் உத‌றிவிட்ட‌ அதே தாம‌ரைதான். அதை த‌ன் மார்ப‌ருகே கொண்டு வ‌ந்து, த‌ன் மார்பு ச‌ட்டையில் அதை அழுத்தி துடைத்த‌வ‌ன்,  “என‌க்கு புடிச்ச‌த இன்ச‌ல்ட் ப‌ண்ணாலும் என‌க்கு சுத்த‌மா பிடிக்காது.” என்ற‌ப‌டி அப்ப‌டியே நிமிர்ந்து அவ‌ளிட‌ம் நீட்டினாள்.

அந்த‌ பூவினுள் பார்வையை குவித்த‌வ‌ள், அப்போதே அவ‌ன் வார்த்தையை உள்வாங்கி சிறு அதிர்வாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ பார்வையில் அழுத்த‌ம் கொடுத்து நீட்டினான். அதில் தாடுமாறி பார்வையை தாழ்த்திய‌வ‌ள், மெல்ல‌ அதை வாங்கிக்கொள்ள‌, அவ‌ன் இத‌ழில் ஒரு மெல்லிய‌ வ‌ளைவு.

அந்த‌ காட்சி அப்ப‌டியே இங்கே ஒரு துப்பாக்கியின் பாயின்ட‌ர் வ‌ழி தெளிவாய் தெரிய‌, “நானும் அவ‌ங்க‌ள‌ பாத்துட்டேன். ஷ‌ல் ஐ?” என்று கேட்டான். அதில் ப்ளூ டூத்தில் இருந்த‌ ம‌ற்றொருவ‌ன், “டூ இட்.” என்றான்.

“ஓகே” என்ற‌ப‌டி அவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு ச‌ரியாய் குறி வைத்து ட்ரிக‌ரை அழுத்தும் நொடி, ப‌ட்டென்று அங்கிருந்த‌ மொத்த‌ லைட்டும் அணைக்க‌ப்ப‌ட்ட‌து. அதில் இவ‌ன் திடுக்கிட்டு பாயின்ட‌ரிலிருந்து விழியை நிமிர்த்தி அவ‌ர்க‌ளை பார்க்க‌, அங்கே சுற்றியும் மை இருட்டாக‌ இருக்க‌ ஒன்றுமே தெரிய‌வில்லை.

அதில் அவ‌ச‌ர‌மாய் த‌ன் ப்ளூ டூத்தில் க‌ர‌த்தை ப‌தித்த‌வ‌ன், “ஐ மிஸ்ட்” என்றான்.

“ச்செ. தேடுங்க‌ அவ‌ங்க‌ த‌ப்பிச்சிர‌ கூடாது.” என்று கூறிய‌ இவ‌னும் த‌ன் கையிலிருந்த‌ துப்பாக்கியை இற‌க்கிவிட்டு தேட‌ ஆர‌ம்பிக்க‌, அந்த‌ தோட்ட‌த்தில் ம‌றைந்திருந்த‌ இன்னும் சில‌ரும் அவ‌ச‌ர‌மாய் அவ‌ர்க‌ளை தேட‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

அந்த‌ கார்ட‌ன் முழுக்க‌ இருள் சூழ்ந்து கிட‌க்க‌, அதைவிட‌ இருள் பூசியிருந்த‌ அந்த‌ இருண்ட‌ வானில் வெண்ணிற‌மாய் அம‌ர்ந்திருந்த‌ முழு நில‌வு, அத‌ன் ஒளி அப்ப‌டியே கீழே அந்த‌ குள‌த்தின் ந‌டுவே அம‌ர்ந்திருந்த‌ க‌ண்ணாடி அறையின் மீது ப‌ட‌ர்ந்து பிர‌காச‌மாய் ஒளிர‌ வைத்த‌து. அந்த‌ இருட்டிலும் பிர‌காசித்த‌ ஒரே இட‌ம் அது ம‌ட்டுமே. ஆனால் அத‌ன் உள்ளே இருளாய் இருக்க‌ அத‌னுள்ளே அவ‌ளை அணைவாய் அழைத்து வ‌ந்த‌ ருத‌ன், “ஒரு நிமிஷ‌ம்” என்ற‌ப‌டி மெதுவாய் வில‌கினான். அதில் அவ‌ள் புரியாது அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ள் முன்னிருந்த‌ மெழுகுவ‌ர்த்திக‌ள் குப்பென்று ப‌ற்றிய‌து.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு பின்னெட்டு வைக்க‌, அவ‌ள் முதுகை அழுத்தி உர‌சிய‌து அவ‌ன் மார்பு. அதில் அவ‌ள் வேக‌மாய் திரும்ப‌ முய‌ல‌, அவ‌ள் இடையில் க‌ர‌த்தை ப‌தித்து அழ‌காய் த‌ன் ப‌க்க‌ம் திருப்பினான் அவ‌ன். அதில் முழுதாய் அவ‌ன் ப‌க்க‌ம் வ‌ந்த‌வ‌ள், த‌டுமாறி நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌ள் இத‌ழில் த‌ண்ணீரை புகுத்தினான் ருத‌ன்.

அதில் திடுக்கிட்ட‌ அவ‌ளும் அந்த‌ க்ளாஸில் க‌ர‌த்தை ப‌தித்து கொஞ்ச‌மாய் குடிக்க‌, அவ‌ள் ஈர‌ இமைக‌ள் தய‌க்க‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்த்த‌து. அத‌ன் அர்த்த‌ம் போதும் என்ப‌து. அதில்  இர‌ச‌னையாய் இத‌ழ் வ‌ளைத்து க்ளாஸை வில‌க்கி கீழே வைத்த‌வ‌ன், அப்ப‌டியே பார்வையை இற‌க்கி அவ‌ள் ஈர‌ இத‌ழில் குவித்தான். அந்த‌ ஈர‌ இத‌ழில் ஒட்டியிருந்த‌ நீர் மொட்டுக‌ள் உடைந்து அவ‌ள் இத‌ழ் குழியில் வ‌ழிய‌, அவ்வித‌ழ்க‌ள் ப‌த‌ற்ற‌த்தில் மெல்லிய‌தாய் பிரிந்து சுவாச‌த்தை வெளியேற்றிய‌து. அதில் இவ‌ன் சுவாச‌ம் சூடாக, அவ‌ள் இடையில் ப‌திந்திருந்த‌ க‌ர‌த்தை அழுத்தி பிடித்து, மெதுவாய் அவ‌ள் இத‌ழ் நெருங்கினான். அதில் அவ‌ள் மூக்கின் நுனியில் பூத்திருந்த‌ நீர் துளி ஒன்று உர‌சி நின்ற‌ அவ‌ன் நாசிக்கு இட‌ம் பெய‌ர‌, அப்ப‌டியே அவ‌ன் சாய்ந்து அவ‌ள் நீர் பூத்த‌ பூவித‌ழில் இத‌ழ் ப‌தியும் நேர‌ம், ச‌ட்டென்று முக‌த்தை திருப்பினாள் அவ‌ள்.

அதில் அவ‌ள் இத‌ழை அடையாது அப்ப‌டியே நிறுத்திய‌வ‌னின் முக‌ம் கோவ‌த்தில் வெகுவாய் இறுக‌, அவ‌ள் தாடையை அழுத்தி பிடித்து த‌ன் ப‌க்க‌ம் திருப்பினான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் விழி ச‌ந்திக்க‌, அவ‌ள் விழிக‌ள் கோவ‌த்தில் க‌ல‌ங்கியிருந்த‌து.

அதில் ச‌ட்டென்று இவ‌ன் புருவ‌ங்க‌ள் விரிய‌, முத‌ல் முறையாய் இந்த‌ மான் விழிக‌ளில் கோவ‌த்தை க‌ண்ட‌வ‌னின் விழிக‌ளில் சுவார‌சிய‌ம் க‌ல‌க்க‌, அவ‌ளோ வேக‌மாய் இமையை தாழ்த்திக்கொண்டாள். அதில் அவ‌ள் தாடையை அழுத்தி பிடித்திருந்த‌ த‌ன் க‌ர‌த்தை மெல்ல‌ ந‌க‌ர்த்தி அவ‌ள் இத‌ழை அழுத்தி பிடித்தான். அதில் அவ‌ள் கீழ் இத‌ழ் அழ‌காய் குழிய‌ அதில் அழுத்தி முத்த‌மிட‌வ‌ன், “ஓய்!” என்றான். அவ‌ளோ பார்வையை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, “எங்கிட்ட‌ எதாவ‌து சொல்ல‌ணுமா?” என்றான்.

அவ‌ள் விழிக‌ளில் இன்னுமே குறையாது தெரிந்த‌ கோவ‌த்தில் க‌ண்ணீர் அதிகம் பெருக, அவ‌ன் விர‌ல்க‌ள் அழுத்தி பிடித்திருந்த‌ த‌ன் இத‌ழில் வெளி வ‌ர‌ துடித்த‌ வார்த்தையை இறுக்கி அட‌க்கி, மெதுவாய் இல்லை என்று த‌லைய‌சைத்தாள். ஆனாலும் அவ‌ள் விழியில் அப்ப‌ட்ட‌மான‌ கோவ‌ம். வெறும் ஒரு பூவுக்காக‌ த‌ன்னை த‌ண்ணீருக்குள் த‌ள்ளிவிட்டுவிட்டான் என்று. அது அவ‌னுக்குமே புரிய‌ மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்தவ‌ன், “நெஜ‌மா ஒன்னும் இல்லையா?” என்று மீண்டும் கேட்டான்.

அதில் அவ‌ள் கோவ‌ க‌ண்ணீர், அவளின் கீழ் இமையை தாண்டி வெளியில் வ‌ர‌ துடிக்க‌, அப்போதும் இமையை அசைத்து இல்லை என்று த‌லைய‌சைத்தாள் அவ‌ள். அதில் முழுதாய் இத‌ழ் வ‌ளைத்தவ‌ன் மெதுவாய் அவ‌ள் இத‌ழிலிருந்த‌ க‌ர‌த்தை வில‌க்கினான். அதில் அவ‌ள் பார்வையை தாழ்த்தி அவ‌ன் க‌ர‌த்தை பார்க்க‌, அவ‌னுமே மெதுவாய் அவ‌ளைவிட்டு வில‌கினான்.

அதில் அவ‌ள் புரியாது நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அங்கில்லை. அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் பார்வையை சுழ‌ல‌விட‌, பின்னிருந்து மெதுவாய் அவ‌ள் மீதிருந்த‌ த‌ன் ஜேக்கெட்டை க‌ழ‌ற்றிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அதை இறுக்கி பிடிக்க‌, மெதுவாய் அவ‌ளின் காத‌ருகே சூடாய் த‌ன் சுவாச‌த்தை ப‌ட‌ர‌விட்ட‌வ‌ன், “இப்ப‌ இது தேவ‌ இல்ல‌.” என்றான்.

அதில் ச‌ட்டென்று விழியை விரித்து அவ‌ள் திரும்ப‌ முய‌ல‌, ப‌ட்டென்று அதை பிடித்திழுத்திருந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் சுற்றிக்கொண்டு அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌னின் விழிக‌ளோ இர‌ச‌னையாய் விரிந்து அப்ப‌டியே அவ‌ளை மேலிருந்து கீழ் அள‌ந்த‌து.

ந‌னைந்து ஒழுகிக்கொண்டிருந்த‌ அவ‌ள் உட‌லில், தேக‌த்தோடு ஒட்டியிருந்த‌ அந்த‌ ஈர‌ சேலை ச‌ல்ல‌டையாய் அவ‌ளின் வெண்ணிற‌ அங்க‌ங்க‌ளை வெளியில் காட்ட‌, குளிரில் குறுகியிருந்த‌ அவ‌ளின் மார்புக்குழி, அத‌னுட‌ன் ஏறி இற‌ங்கிய‌ அவ‌ள் மார்பு அமைப்பு வெளிப்ப‌டையாய் தெரிய‌, அப்ப‌டியே அவ‌ளின் பொன் இடையின் வ‌ள‌வு, அத‌னோடு ஒட்டிக்கொண்ட‌ அந்த‌ சல்லடை திரையின் உள்ளே அவ‌ளின் நாபி குழி வ‌ரை அப்ப‌ட்ட‌மாய் தெரிய‌, அனைத்தையும் விழியிலே விழுங்கிய‌ப‌டியே த‌ன் ஜேக்கெட்டை தூர‌ வீசிய‌வ‌ன் மெதுவாய் அவ‌ளை நெருங்கினான்.

அவ‌ன் பார்வையிலேயே இவ‌ளின் ஈர‌ தொண்டை மீண்டும் எச்சிலை விழுங்க மெல்ல‌ பின்னெட்டு வைத்தாள். அவ‌னோ வேக‌மாய் முன்னெட்டு வைக்க‌, அவ‌ளும் அவ‌ச‌ர‌மாய் பின்னெட்டு வைக்க‌,  ப‌ட்டென்று பின்னிருந்த‌ க‌ண்ணாடி சுவ‌ரில் அழுத்த‌மாய் சாய்ந்தாள். அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, அந்த‌ சுவ‌ரில் க‌ர‌த்தை ப‌தித்து அவ‌ள் ஈர‌ தேக‌த்தை மொத்த‌மாய் உர‌சி நெருங்கினான் அவ‌ன். அதில் அவ‌ள் மேலும் சுவ‌ரில் புதைந்து விழி விரிய‌ அவ‌னை பார்க்க‌, அவ‌ள் முக‌முர‌ச‌ நெருங்கிய‌வ‌ன், “உன் கோவ‌த்த‌ நா செரி ப‌ண்ண‌வா..” என்றான் மெல்லிய‌ குர‌லில். அந்த‌ குர‌லில் வ‌ந்த‌ அன‌ல் அவ‌ள் சுவாச‌த்தை சூடாக்க‌, அவ‌ள் ஈர‌ இத‌ழின் மேல் உள்ள‌ ப‌ள்ள‌த்தில் விய‌ர்வை மொட்டுக‌ள் பூத்து நின்ற‌து. அதில் அவ‌ன் மீசை அழுத்த‌மாய் புதைந்து மென்மையாய் துடைத்து எடுக்க‌, இவ‌ளோ சிலிர்வாய் விழி மூடினாள்.  அப்ப‌டியே அவ‌ன் மீசை அவ‌ள் இத‌ழ் ஈர‌த்தையும் அழுத்தி துடைக்க‌, அவ‌ள் கையில் தொங்க‌லாய் பிடித்திருந்த‌ ஈர‌ தாம‌ரையை இறுக்கி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

அப்ப‌டியே அவ‌ள் இத‌ழோர‌ம் உர‌சிய‌ப‌டி அவ‌ள் க‌ன்ன‌த்தில் தாடியை ப‌ட‌ர‌விட்ட‌வ‌ன், அங்கிருந்த‌ ஈர‌த்தையும் அழுத்தி துடைத்து எடுத்தான். அதில் அவ‌ள் சிலிர்வாய் புருவ‌த்தை குறுக்க‌, மெதுவாய் அவ‌ள் ஈர‌ கூந்த‌லுள் க‌ர‌த்தை நுழைத்தவன், அவ‌ள் முக‌மெங்கும் த‌ன் மீசையை அழுத்தி தேய்த்து அவ‌ள் ஈர‌த்தை த‌ன‌தாக்க‌, அவ‌ன் ச‌ட்டை நுனியை சுருட்டி பிடித்து குறுகிய‌து அவ‌ள் தேக‌ம்.

அந்த‌ தேக‌த்தில் மொத்த‌மாய் அவ‌ன் தேக‌ம் புதைய‌, அவ‌ளின் ஈர‌ம் மொத்த‌மும் அவ‌ன் ஆடைக்குள் நுழைந்து ஆடை தாண்டி அவ‌ன் தேக‌த்தில் ப‌ட‌ர்ந்த‌து. அதில் அவ‌ன் தேக‌த்திலிருந்த‌ உஷ்ண‌ம் அனைத்தும் இவ‌ள் தேக‌த்திற்கு இட‌ம்பெய‌ர, அவ‌ன் மீசையும் மெல்ல‌ அவ‌ள் க‌ழுத்திற்கு இட‌ம்பெய‌ர்ந்த‌து. அதில் அவ‌ள் சிலிர்வாய் க‌ழுத்தை விரிக்க‌, அந்த‌ ஈர‌ ச‌ங்கில் த‌ன் தாடியை அழுத்தி துடைத்தான் அவ‌ன். அதில் அவ‌ள் கூசிய‌ப‌டி அவ‌ன் பின் சிகைக்குள் க‌ர‌த்தை நுழைத்து சுருட்டி பிடிக்க‌, அப்ப‌டியே க‌ழுத்து வ‌ளைவில் புதைந்தது அவ‌ன் மீசை. அதில் அவ‌ள் சிலிர்வாய் க‌ழுத்தை நெளிக்க‌, அந்த‌ நெளிந்த‌ வ‌ளைவில் ஒட்டியிருந்த‌ ஈர‌த்தையும் அழுத்தி துடைத்த‌து அவ‌ன் மீசை. அதில் அவ‌ள் கூச்ச‌மாய் முக‌த்தை குறுக்க‌, அவ‌ள் தோள்ப‌ட்டையில் அழுத்தி முத்த‌ம் வைத்தான் அவன். அதில் அவ‌ள் தோள்க‌ள் சிலிர்த்து அட‌ங்க‌, அங்கே சேலையோடு குத்தியிருந்த‌ பின்னை மெல்ல‌ க‌டித்து உருவினான். அதில் ஈர‌ சேலை மெதுவாய் விடுப்ப‌ட்டு ச‌ரிய‌, அவ‌ள் ஈர‌ மார்புக‌ள் மெல்ல‌ ஏறி இற‌ங்கிய‌து. அத‌னுள் குழிந்து நின்ற‌ மார்பு குழியில் ப‌னி துளிக‌ள் உடைந்து ஒழுக‌, அத‌னுள் மீசையை அல்ல‌ இத‌ழை அழுத்தி வைத்து உறிஞ்சினான் அவ‌ன். அதில் அவ‌ள் சிலிர்வாய் மார்பை விரிக்க‌, அவ‌ள் விர‌லிடையில் த‌ள‌ர்ந்த‌ தாம‌ரை ந‌ழுவி பொத்தென்று விழுந்த‌து. அதை ப‌ட்டென்று அவ‌ன் விர‌ல்க‌ள் பிடித்துவிட‌, அதை விட்டிருந்த அவ‌ள் விர‌ல்க‌ளோ இப்போது அந்த‌ க‌ண்ணாடி சுவ‌ரில் அழுத்தி ப‌திந்த‌து. அதில் மெதுவாய் அந்த‌  தாம‌ரையை உய‌ர்த்தி, அவ‌ள் திரையில்லா ஈர‌ ம‌ணிவ‌யிற்றில் மெதுவாய் உர‌சினான். அதில் அவ‌ள் வெண் இடை சிலிர்த்து குறுக‌, அங்கே ஒழுகி சென்ற‌ ஒரு நீர் துளி, வழுக்கி வந்து அந்த‌ நாபி குழிக்குள் நுழையும் முன்,  அதை அழ‌காய் துடைத்து எடுத்த‌து அவ‌ன் நாவின் நுனி. அதில் சிலிர்வாய் அவ‌ள் உட‌ல் விரிந்து த‌ள‌ர‌, அந்த‌ நீர் துளி நுழையா நாபி குழியில் இப்போது அவ‌ன் நாவின் நுனி  முழுதாய் நுழைந்த‌து. அதில் மொத்தமாய் சிலிர்த்து சுவ‌ரில் புதைந்த‌வ‌ள், அவ‌ன் பின் சிகையை இறுக்கி பிடிக்க‌, அவ‌னோ முழுதாய் நாவை புதைத்து அத‌னுள்ளிருந்த‌ ஈர‌த்தை துடைத்து எடுத்தான்.

அதில் சிலிர்வாய் மூச்சை இழுத்து நெளிந்த‌வ‌ளின் நெஞ்சுக்குழி அடைத்து மேலேற‌, அவ‌ளின் கிள‌ர்ச்சி புள்ளியில் அவ‌ன் நாவு செய‌ல்ப‌டுத்தும் உணர்வூட்டத்தில் அவ‌ள் உட‌லெங்கும் காம‌ உண‌ர்வுக‌ள் க‌ட்டுக்க‌ட‌ங்காம‌ல் கிள‌ம்பிய‌து.

அதில் அவ‌ன் சிகையிலிருந்த‌ அவ‌ள் விர‌ல்க‌ள் அழுத்தி ப‌திந்து அவ‌ன் த‌லையை த‌ன் இடைக்குள் அழுத்த‌, அத‌னுள் முழுதாய் புதைந்த‌வனின் முக‌ம் மொத்த‌மும் அங்கிருந்த‌ ஈர‌த்தை அழுத்தி துடைத்த‌து. அதில் உட‌லெங்கும் உண‌ர்வுக‌ள் விரிய‌, அவ‌ன் சிகையை இறுக்கி பிடித்து சுருட்டி போராட்ட‌மாய் நெளிந்த‌வ‌ளின் இத‌ழ்க‌ள் பிரிந்து சுக‌ முன‌ங்க‌ளை வெளியேற்ற‌, ஏறி இற‌ங்கிய‌ அவ‌ளின் மார்பின் ந‌டுவே மெதுவாய் மேலிறிய‌து அவ‌ன் முக‌ம். அதில் அவ‌ள் முழுதாய் சுவ‌ரில் புதைந்து அவ‌ன் தோள் ச‌ட்டையை சுருட்டி பிடித்து உட‌லை விரிக்க‌, அதில் அன‌லாய் த‌கித்த‌ அவ‌ள் மார்பு குழிக்குள் மீண்டும் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ள் சுக‌மாய் மார்பை குறுக்க‌, அவ‌ள் தொண்டை குழி அடைத்து குழிந்த‌து. அத‌னுள் இத‌ழை புதைத்த‌வ‌ன், மீசை புதைய‌ சூடாய் முத்த‌மிட‌, உட‌லெங்கும் அன‌லாய் ப‌ர‌விய‌ உண‌ர்ச்சியில் அவ‌ள் கீழ் இத‌ழ் ஓர‌த்தை க‌டித்து உணர்வை அட‌க்கினாள். அவ்வித‌ழில் விர‌லை வைத்து மெல்ல‌ விடுவித்த‌வ‌ன், அவ‌ள் இத‌ழ் குழியில் அவ‌ன் சுவாச‌த்தை நிர‌ப்பி, “இத‌ நா ம‌ட்டுந்தா க‌டிப்பேன்.” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ள் மோக‌ விழிக‌ள் மெல்லிய‌தாய் பிரிய‌, அவ‌னோ அந்த‌ ப‌ல் ப‌திந்த‌ இத‌ழ் அச்சில் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌மிட்டு, “புரிஞ்ச‌தா?” என்றான். அதில் அவ‌ன் மீசை அவ‌ள் இத‌ழை உர‌சி நிற்க‌,  அவ‌ன் இத‌ழுள் புதைய‌ கூறி அவ‌ள் இரு இத‌ழ்க‌ளும் தாப‌த்தில் துடித்த‌து. அந்த‌ இத‌ழிலிருந்து மெதுவாய் பார்வையை நிமிர்த்தி அவ‌ள் விழி பார்த்த‌வ‌ன், “கோவ‌ம் போயிருச்சா?” என்றான் அதே மெல்லிய‌ குர‌லில். அதில் துடித்துக்கொண்டிருந்த‌ அவ‌ள் இத‌ழ்க‌ள் முழுதாய் அவ‌ன் இத‌ழை க‌வ்விய‌து. அதில் அவ‌ன் ச‌ட்டென்று புருவ‌ம் விரிக்க‌, அவ‌ளோ சுத்த‌மாய் கட்‌டுப்பாடில்லாம‌ல் அவ‌ன் கால‌ரை சுருட்டி பிடித்து முழுதாய் அவ‌ன் இத‌ழுள் புதைந்தாள்.

அதில் விய‌ப்பாய் அவ‌ன் விழிக‌ள் விரிய‌, அவ‌ளோ முத்த‌மிட‌ தெரியாம‌ல் அவ‌ன் இத‌ழுள் தன் இத‌ழை நுழைத்து ஏதேதோ செய்து திண‌றிக் கொண்டிருந்தாள். அதில் புரியாது புருவத்தை குறுக்கி, பிறகுதான் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட‌வ‌னின் பார்வை, அன்னிச்சையாய் த‌ன் முன்னிருந்த‌ க‌ண்ணாடி சுவ‌ரின் வெளியே க‌வ‌னிக்க‌, அங்கே ப‌ல‌ புத‌ர்க‌ள் அசைந்து ப‌ற‌வைக‌ள் க‌லைந்து ப‌ற‌ந்த‌து. அதை பார்த்து ந‌க்க‌லாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அதை பார்த்தபடியே த‌லையை சாய்த்து முழு வ‌ன்மையாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்தான்.

    – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured