Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-46

அன்புள்ள அரக்கனே CH-46

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

எம்புட்டு இருக்குது ஆச..!
உன்மேல.. அத காட்ட போறேன்..!

என்ற‌ பாட‌ல் வ‌ரிக‌ளில் இவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் திரும்பி அவ‌னை பார்க்க‌, அவ‌னுமே அவ‌ளை பார்வையாலே விழுங்கிக் கொண்டிருக்க‌, இமையை விரித்து எச்சில் விழுங்கிய‌வ‌ள், ப‌த‌ற்ற‌மாய் திரும்பி சாலையை பார்த்தாள்.

அந்த‌ இருட்டில் அவ‌ளுக்கு இது என்ன‌ சாலை என்றுக்கூட‌ ச‌ரியாக‌ புரிய‌வில்லை. ஆனால் வீட்டை விட்டு வெகு தூர‌ம் வ‌ந்துவிட்டோம் என்ப‌து ம‌ட்டும் புரிய‌, மீண்டும் ப‌த‌ற்ற‌மாய் மெல்ல அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பும் நொடி ச‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வியிருந்தான் ருத‌ன்.

அதில் ப‌ட்டென்று அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அந்த‌ விரிந்த‌ விழிக‌ளை இர‌சித்த‌ப‌டியே அவ‌ள் இத‌ழுள் ஆழ‌மாய் புகுந்தான்.

அதில் அவ‌ள் இறுக்கி விழி மூட‌, ச‌ட்டென்று ச‌ட‌ன் ப்ரேக் அடித்து கார் நின்றது. அதில் திடுக்கிட்டு இத‌ழை விலக்கி பொத்தென்று இருக்கையில் சாய்ந்தவள் முன்னால் பார்க்க‌, ஒரே இருட்டாக‌ இருந்த‌து. அதில் அவ‌ள் புரியாது சுற்றி பார்க்க‌, அத‌ற்குள் அவ‌ள் ப‌க்க‌ க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து. அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்ப‌, “க‌ம் அவுட்” என்றான் ருத‌ன்.

அதில் அவ‌ள் விய‌ந்து ஓட்டுந‌ர் இருக்கையை பார்த்துவிட்டு அவ‌னை பார்க்க‌, அவ‌ளிட‌ம் த‌ன் க‌ர‌த்தை நீட்டினான் ருத‌ன். அதில் கேள்வியாய் அவ‌ன் க‌ர‌த்தை பார்த்த‌வ‌ள், தய‌க்கமாய் அதை பிடித்து கீழே இற‌ங்க‌, சுற்றியும் மை இருட்டாக‌ சூழ்ந்து இருந்த‌து.

அதில் அவ‌ள் புரியாது சுற்றி பார்க்க‌, ச‌ட்டென்று ஒரு சொட‌க்கிட்டான் ருத‌ன். அடுத்த‌ நொடி ப‌ட்டென்று வெளிச்ச‌ம் வ‌ர‌, அக‌ல‌ விழி விரித்து சுற்றியும் பார்த்தாள் அவ‌ள்.

சுற்றியும் ப‌ல்வேறு வ‌கையான‌ வ‌ண்ண‌ பூக்க‌ள் சூழ்ந்திருக்க‌, கீழே முழுதாய் ப‌ட‌ர்ந்திருந்த‌து ஒரு குள‌ம். அதில் மேலிருந்த முழு நிலவின் ஒளி அழகாய் படர்ந்து கண்ணாடியாய் பிரகாசிக்க, அதன் ந‌டுவே நிஜ கண்ணாடியாலான ஒரு அழ‌கிய‌ பாள‌ம், ந‌டை பாதையாய் அமைந்து செல்ல, அதன் முடிவில் குளத்தின் நடுவே அதே க‌ண்ணாடியால் ம‌ட்டுமே ஆன‌ அழ‌கிய‌ அறை போன்ற‌ அமைப்பு. அது மொத்தமும் மேலிருந்த நில‌வின் ஒளியில் வெள்ளி நிற‌த்தில் ஜொலிக்க‌, அத‌னை சுற்றியும் அனைத்து வ‌கையான‌ தாம‌ரை ம‌ல‌ர்க‌ளும் ஒரே குள‌த்தில் பூத்திருந்த‌து. அதில் அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அங்கே பிங்க், ம‌ஞ்ச‌ள், வெள்ளை, நீல‌ம் என்று அவ‌ள் க‌ன‌விலும் பாராத‌ ப‌ல்வேறு வ‌கையான‌ தாம‌ரை ம‌ல‌ர்க‌ள், இன்று இய‌ற்கைக்கு மாறாக‌ ஒரே குள‌த்தில் நிறைந்து இருந்த‌து. அதுவும் ப‌க‌லில் ம‌ட்டுமே விரியும் அத‌ன் இத‌ழ்க‌ள், இந்த‌ க‌ரும் இருளிலும் சிறிதும் சுருங்காது அழ‌காய் ம‌ல‌ர்ந்த‌ப‌டி இருந்த‌து.

உண்மையில் இப்ப‌டியொரு காட்சி சாத்திய‌மே அல்ல‌ என்று அவ‌ள் தாவ‌ர‌விய‌ல் ப‌டிப்பு அடித்து கூற‌, அதே விய‌ப்பாய் ஒரு முறை அந்த‌ குள‌த்தை சுற்றியும் பார்த்த‌வ‌ள், “இ..து  எ..எப்டி..” என்று அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌, “வொய் நாட்?” என்று மெல்லிய‌தாய் தோளை உலுக்கினான் ருத‌ன்.

அதில் அவ‌ள் புரியா வியப்பாய் அவ‌னையே பார்க்க‌, அவ‌ள் இடையில் க‌ர‌மிட்டு இழுத்து ப‌ற்றிய‌வ‌ன், அதில் திடுக்கிட்டு மிர‌ண்டு விழித்த‌ அவ‌ள் மான் விழிக‌ளை இர‌ச‌னையாய் ஆராய்ந்த‌ப‌டியே, “க‌ட‌வுள் உருவாக்குன‌துக்குதா அந்த‌ க‌ன்டிஷ‌னெல்லா. இது இந்த‌ ருத‌ன் உருவாக்குன‌து.” என்றான் ஆழ்ந்த‌ குர‌லில்.

அதில் சட்டென்று புருவ‌ம் விரித்தவள், “நீங்..க‌ளேவா?” என்று த‌ய‌ங்கி கேட்க‌, அவ‌னும் அவ‌ள் மூக்கில் மீசையுர‌ச‌ நெருங்கி, “ம்ம்” என்றான் மென்மையாக.

அதில் விய‌ப்பாய் மீண்டும் அவ்விட‌த்தை சுற்றியும் பார்த்த‌வ‌ள், மெதுவாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பி, “அ..அப்டின்னா நீங்க‌..” என்று அத்தனை வியப்பாய் கூற‌ வ‌ர‌, அவள் இதழில் இதழ் வைத்து தடுத்தவன், “ப்ளேன்ட் ஜெனிட்டிஸ்ட்” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் புருவ‌ங்க‌ள் முழுதாய் விரிய‌, அதை இர‌சித்த‌ப‌டியே அவ‌ள் இத‌ழில் மேலும் அழுத்தமாய் ஒரு முத்த‌மிட்ட‌வ‌ன், “க‌ம்” என்ற‌ப‌டி அப்ப‌டியே அழைத்து சென்றான்.

அதில் அவ‌ளும் விய‌ப்புட‌னே அவ‌னுட‌ன் ந‌ட‌க்க‌, அந்த‌ அழ‌கிய‌ குள‌த்தின் மீது அமைந்திருந்த‌ கண்ணாடி பாதை அவர்களை அழ‌காய் அந்த‌ க‌ண்ணாடி அறைக்குள் அழைத்து சென்ற‌து.

அவனுடன் மெதுவாய் உள்ளே நுழைந்த‌வ‌ள் சுற்றியும் பார்க்க‌, வெளியிருந்து பார்க்க வெள்ளி நிறத்தில் ஜொலித்த பிரதிபலிப்பு சுத்தமாய் இல்லாமல், உள்ளே வெளி காட்சி அத்த‌னை தெளிவாய் அப்ப‌டியே தெரிந்தது. அதில் அவள் விழியில் மெல்ல இரசனை பூச, அப்படியே பார்வையை கீழே நகர்த்த அங்கே அதே க‌ண்ணாடியால் ஆன‌ ஒரு அழ‌கிய‌ மேசை. அதில் கூல் ட்ரிங் முத‌ல் உண‌வுக‌ள் வ‌ரை அனைத்தும் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.

அதில் ச‌ட்டென்று அப்ப‌டியே நின்றுவிட்ட‌வ‌ளின் ம‌ன‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, அன்று அந்த‌ ரோஜா மாளிக‌ையில் அவ‌ள் முன் குவிந்திருந்த‌ உண‌வுக‌ள்தான் க‌ண்முன் வ‌ந்து நின்ற‌து.

“என்ன‌ தாங்குற‌துக்கு உன‌க்கு  ஸ்ட்ரென்த் வேணும்” என்ற அவ‌னின் வார்த்தைகள் ம‌ன‌தில் ப‌ல‌மாய் ஒலிக்க‌, அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் அடித்த‌து. இன்றும் அதேப்போல் அந்த உணவுகளின் மையத்தில் ஒரே ஒரு இருக்கை ம‌ட்டுமே இருக்க‌, அவ‌ன் த‌ன‌க்கு ம‌ட்டுமே அனைத்தையும் அன்று ஊட்டிய‌து மீண்டும் க‌ண்முன் வ‌ந்த‌து. அனைத்தையும் ஊட்டி முடித்துவிட்டு, “இப்ப‌ நா சாப்ப‌ட‌ட்டுமா?” என்று அவ‌ன் அடித்த‌டுத்து செய்த‌ ஒவ்வொன்றும் க‌ண்முன் வ‌ர‌, அவ‌ள் உட‌ல் மெல்லிய‌தாய் ந‌டுக்க‌ம் கொண்ட‌து.

அதில் அவ‌ளோ அப்ப‌டியே உறைந்து நிற்க‌, அத‌ற்குள் அந்த‌ ஒற்றை இருக்கையில் வந்து ந‌ன்றாய் சாய்ந்த‌ம‌ர்ந்தான் ருத‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌னை பார்க்க‌, அவனுமே வசதியாய் நிமிர்ந்து அவளை பார்த்து, “வா வ‌ந்து உக்காரு.” என்றான். 

அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் அந்த‌ மேசையை சுற்றி பார்த்துவிட்டு, “எ..எங்க‌?” என்று கேட்க‌, அவ‌னோ கீழிருந்த மேசை காலில் த‌ன் காலை அழுத்தி உதைத்து ப‌ட்டென்று இருக்கையுட‌ன் பின்னால் ந‌க‌ர்ந்து, “இங்க‌” என்று த‌ன் க‌ர‌ங்க‌ளை விரித்தான். அதில் அவ‌ளோ அக‌ல‌ விழி விரிக்க‌, “க‌ம் குயிக்” என்று விரிந்த‌ க‌ர‌த்தை அழகாய் அசைத்து அழைத்தான்.

அவ‌ளோ த‌ய‌க்க‌மாய் அப்ப‌டியே நிற்க‌, அதில் இவ‌னின் முக‌ம் இறுகிய‌து. அதில் ப‌த‌ற்றம் கொண்டவள் மெல்ல அடியெடுத்து வைத்து அவன் அருகே வ‌ந்து நின்றாள். அதில்தான் மீண்டும் புன்ன‌கைத்த‌வ‌ன், அவ‌ள் இடையை இழுத்து த‌ன் ம‌டியில் அம‌ர‌ வைத்தான். அதில் திடுக்கிட்டு அவ‌ன் க‌ர‌ங்க‌ளுக்குள் வ‌ந்துவிட்ட‌வ‌ளின் பின் த‌லை, அவ‌ன் தோளில் அழுத்த‌மாய் புதைய, நிமர்ந்து‌ அவ‌ன் முக‌ம் பார்த்தாள். அதில் அவ‌ள் முக‌த்தில் வந்து விழுந்த‌ கூந்த‌லை அழ‌காய் வில‌க்கி ஒதுக்கிய‌வ‌ன், அவ‌ள் காதோர‌ம் சொருக‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மான‌ சிலிர்வாய் இமையை மூட‌, அவள் இதழில் காரமாய் எதோ அழுந்திய‌து.

அதில் அவ‌ள் இமையை பிரித்து கீழே பார்க்க‌, அவன் கரம்தான் உணவை அவள் இதழிடம் நீட்டியது. அதில் அவள் ப‌த‌ற்ற‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ விழியில் அழுத்த‌ம் கொடுக்க, தயக்கமாய் இதழை பிரித்து அதை வாங்கி கொண்டாள்.

அதில் மெல்ல இதழ் வளைத்தவன்,  அடுத்த வாயை அவளிடம் நீட்டினான். அவளும் அவசரமாய் விழுங்கிவிட்டு அதையும் வாங்கிக்கொள்ள, அவள் இதழோரம் மெல்லியதாய்  ஒதுங்கிய‌து ஒரு உணவு துணிக்கை. அதையறியாமல் அவள் இதழ்கள் அழகாய் உணவை மென்றுக்கொண்டிருக்க, அதில் அப்படியே அந்த துணிக்கை மெல்ல இதழோர நுனியில் வழிந்து சரியும் நேரம், அதை அழுத்தி சுவைத்து எடுத்துக்கொண்டது அவன் இதழ்கள். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ இரசனையாய் அவள் கன்னமுரச விலகி, தன் கட்டை விரலால் அவள் இதழோரம் படிந்த தன் எச்சிலை அழுத்தி துடைத்தான். அதில் அவள் பதற்றமாய் இதழை மடித்து அவன் விரலை பார்க்க, அதற்குள் அழகாய் துடைத்துவிட்டு அடுத்த வாயை ஊட்டினான்.

அதில் ப‌த‌ற்ற‌மாய் அவ‌னையே பார்த்த‌வ‌ள், மெதுவாய்  இத‌ழ் பிரித்து அதையும் வாங்கிக்கொள்ள, அப்படியே அடுத்தடுத்து அவளுக்கு மட்டுமே அனைத்தையும் ஊட்டி முடித்தவன், இறுதியாய் கூல் ட்ரிங்கை  அவ‌ள் இத‌ழில் வைத்தான்.

அதில் குனிந்து கீழே பார்த்தவள், அந்த கூல் ட்ரிங் க‌ருப்பு நிற‌த்தில் ம‌து போன்று இருக்க‌வும் பதற்றமாகி, “இ..இது என்ன‌?” என்று கேட்டாள்.

“மை ஃபேவ்ரட்.” என்ற‌ப‌டி மேலும் அவளிதழில் அழுத்த, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் மெல்ல அதை குடிக்க‌, “க்ரேப் ஜூஸ்” என்றான்.

அதில் ப‌ட்டென்று அது வெளியில் வந்திருக்க‌, இவ‌னோ குறும்பாய்  இத‌ழை வ‌ளைத்தான். அவ‌ளோ  அவ‌ச‌ர‌மாய் தடுமாறி, “ச‌..சாரி” என்றப‌டி தன் இதழை துடைக்க‌ போக‌, அவ‌ள் க‌ர‌த்தை பிடித்து த‌டுத்த‌து அவ‌ன் க‌ர‌ம்.

அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌ள் இத‌ழிலிருந்து க‌ழுத்து வ‌ழியே வ‌ழிந்து சென்ற‌து அந்த‌ க்ரேப் ஜூஸ். அதை விழியிலேயே ப‌ருகிய‌ப‌டி நிமிர்ந்து அவ‌ள் விழி பார்த்த‌வ‌ன், “என‌க்கு புடிச்ச‌த வேஸ்ட் ப‌ண்ணா என‌க்கு சுத்த‌மா பிடிக்காது.” என்றான். அதில் அவ‌ள் புரியாது விழிக்க‌, அவ‌ள் விழிக‌ளை இர‌சித்த‌ப‌டியே மெதுவாய் அவள் கழுத்தை நோக்கி இவன் நெருங்க, அதில் அவள் தொண்டை எச்சிலை விழுங்க, அதில் ஏறி இறங்கிய குழியில் மேலும் வழுக்கி சென்ற ஜூஸ் துளியில் மெதுவாய் த‌ன் இத‌ழ் வைத்து, மெல்ல சுவைத்து எடுத்தது அவன் இதழ்கள்.

அதில் அவ‌ள் சிலிர்வாய் கழுத்தை விரிக்க, அதில் வளைந்த வெண்சங்கை அழுத்தமாய் அவன் சுவைக்க‌, அதில் முழுதாய் அவ‌ன் தோள் வ‌ளைவில் புதைந்தளின் விரல்கள் கூச்சத்தில் அவன் பின் சிகையை சுருட்டி பிடித்தது. அதில் வாகாய் அவ‌ள் க‌ழுத்தெங்கும் அவன் இதழை படரவிட்டு ருசிக்க, இவளோ இருக்கையின் நுனியை இறுக்கி பிடித்து சிலிர்க்க, அவள் மார்புக்குழி வழியே வழிந்து சென்ற ஒரு துளியை அழுத்தி துடைத்தது அவன் நாவின் நுனி. அதில் சிலிர்த்து மார்பை விரித்தவளின் உடலெங்கும் ரோமம் கொப்பளிக்க, அவன் உடல் சூட்டோடு புதைந்து மெதுவாய் அவன் இடையை சுற்றி கட்டிக்கொண்டது அவள் கரம்.

அவனோ இங்கே ஒரு துளியில்லாது துடைத்து எடுத்து, அவள் மார்பு சேலையில் தன் இதழை துடைத்துக்கொள்ள, அதில் பட்டும்படாமல் உரசிய அவன் தாடி குறுகுறுப்பில் அவள் மார்புக்குழி குறுக, அதனுள் மீசையை நுழைத்து மெல்லியதாய் முத்தமிட்டான் அவன். அதில் மேலும் கூசி சிலிர்த்தவளின் உள்ளங்கால் கூச்சத்தில் குறுகி விரிய, அவனோ அப்படியே அவள் கழுத்தெங்கும் இதழை படரவிட்டு மேலேறினான். அதில் அவன் அனல் சுவாசம் அவள் கழுத்தெங்கும் சூடாய் படர்ந்து மெல்ல மேலேற, அதில் முழுதாய் கழுத்தை விரித்தவளின் மூச்சு காற்றும் அனலாய் வெளியில் வந்தது. அப்படியே அவ‌ள் தாடை தாண்டி இதழை உரசி நின்றவன், அந்த இதழ் சுழையில் வழிந்து நின்ற துளியையும் மெல்ல இதழ் வைத்து உறிஞ்சினான். அதில் ஆழமான அனல் மூச்சை வெளியில் விட்டவளின் விரல்கள், அவன் சிகையிலிருந்து நகர்த்தி அவ‌ன் பின்ச‌ட்டை கால‌ரை சுருட்டி பிடித்தது. இவனோ அவள் இதழ் தந்த மோகத்தில் நாவையும் சேர்த்து அவ‌ள் இத‌ழுள் நுழைத்து, அந்த பழச்சாறோடு அவளின் பூவிதழ் சாறையும் சேர்த்து உறிஞ்சினான். அதில் இவள் விழிகள் மொத்தமாய் சொருக, அவள் விரல்கள் அவன் சட்டையை மேலும் கசக்கி பிடித்தது.

அதில் வாகாய் அவள் முழு உடலையும் தனக்குள் சுருட்டிக்கொண்டவன், அவள் கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து தனக்குள் நெருக்கி, மேலும் அழுத்தி சுவைக்க துவங்கினான். அதில் முழுதாய் அவன் தாபம் அவள் உடலுக்கு இடம்பெயர்ந்திருக்க, அவன் முதுகு சட்டையையும் சேர்த்து கசக்கினாள். அவனோ மேலும் தாகமாய் இன்னும் ஆழமாய் அவளின் தொண்டை குழி வற்றி போகும் வரை உறிஞ்சியெடுத்தவன், பிறகுதான் மெதுவாய் இதழை பிரித்தான். அவன் விலகில் தாபம் அடங்காது இமையை தாழ்த்தியவள் மெல்ல மூச்சு வாங்க, மெதுவாய் அவள் முகமெங்கும் படர்ந்தது அவன் இதழ்கள். அதில் மீண்டும் பரவிய உணர்வில் அவள் தேகமெங்கும் சிலிர்த்து விரிய, அவள் காதோரம் பதிந்தது அவனின் சூடான முத்தம். அதில் அவன் தோள் சட்டையை இறுக்கி பிடித்தவளின், உடலெங்கும் மோக அனல் ஏகத்திற்கும் பரவ, அதில் மேலும் தீ மூட்டும் விதமாக மீசையை அவள் காதின் கீழும் படரவிட்டு அழுத்தி முத்தமிட்டான்.  அதில் அனல் மூச்சாய் கழுத்தை நெளித்தவளின் மோக உணர்வுகள் முழுதாய் உடலை ஆக்கிரமிக்க துவங்க, மெல்ல அவன் சட்டைக்குள் படர முயன்ற தன் கரத்தை கடினப்பட்டு அடக்கி, அவ‌ன் மார்பில் ப‌தித்து அவனை வில‌க்க முயன்றாள். அதில் அவ‌ள் கழுத்துரச மெல்லியதாய் நிமிர்ந்தவன், மெல்ல இமையை நிமிர்த்தி அவ‌ள் விழி பார்த்தான். அதில் அவன் விழியில் தழும்பி நின்ற மோகத்தில் பதற்றமாய் இதழ் மூடி சுவாசத்தை விழுங்கியவள், “உங்க‌..கிட்ட‌ ஒன்னு.. கேக்..க‌லா‌மா?” என்று தட்டு தடுமாறி த‌ய‌க்க‌மாய் கேட்டாள்.

அவள் தடுமாற்றமுமே இவன் மோகத்தை அதிகரிக்க, அவ‌ள் இத‌ழில் ப‌ட்டும் ப‌டாம‌ல் முத்த‌மிட்ட‌வ‌ன், “ம்ம்” என்றான். அதில் த‌டுமாறிய‌ இத‌ழ்க‌ளை க‌டின‌ப்ப‌ட்டு முழுதாய் பிரித்து, “உங்க..‌ளுக்கு க‌ல‌ர்ஸ்.. பிடிக்காதா?” என்று கேட்டாள்.

அதில் சட்டென்று புருவ‌த்தை சுழித்த‌வ‌ன், “பார்ட‌ன்?” என்றான் அதே மெல்லிய குரலில். அவளுக்கோ அவன் நெருக்கம் அவளுள் ஏதோதோ உணர்வுகளை கிளப்பியிருக்க, முடிந்த மட்டும் தன்னை கட்டுப்படுத்தவே இதை கேட்டவள், இவன் பார்வையில் மேலும் தடுமாறியபடி, “இ..இல்ல‌ எப்ப‌வுமே ப்ளேக் க‌ல‌ர்ல‌..” என்று அவ‌ள் த‌ய‌ங்க‌, நடுங்கும் அவள் இதழில் தன் முரட்டு இதழை அழகாய் மோதி பிரித்தவன், “என‌க்கு இதுதா க‌ம்ஃப‌ர்ட‌பிள்.” என்றான் மெல்லிய குரலில்.

அதில் தடுமாறி விழித்தவள், “ஏ.. அப்..பிடி…” என்று அவ‌ள் த‌ய‌ங்கி கேட்க‌, அவ‌ள் விழிக‌ளின் ஆர்வ‌த்தில் இர‌ச‌னையாய் மெல்ல அவள் நாசி நுனியை ஈரம் செய்தவன், “இப்ப‌ வேண்டா. ச‌ம் அத‌ர் டைம்” என்றான் மெல்லிய குரலில்.

அதில் அவ‌ளும் பதற்றமாய் ச‌ரியென்று தலையசைத்து பார்வையை தாழ்த்த‌, அந்த நாசி நுனியை மெல்ல கடித்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு  இமையை நிமிர்த்தி அவ‌ன் விழி சந்திக்க‌, அவ‌ன் விழிக‌ளோ அப்ப‌டியே இற‌ங்கி அவ‌ள் செவ்வித‌ழில் குவிய‌, “மை மோஸ்ட் ஃபேவ்ர‌ட் க‌ல‌ர் ஒன்னு இருக்கு.” என்றான்.

அதில் அவ‌ள் புரியாது அவ‌னையே பார்க்க‌, “அது யாருக்குமே தெரியாது.” என்றபடி அந்த இதழ்களின் மேல் உள்ள பள்ளத்தில் மீசை புதைய முத்தமிட்டவன், “லைக் அ சீக்ரெட்.” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ளோ விய‌ப்பாய் விழியை உருட்ட, அப்படியே பார்வையை நிமிர்த்தி அவ‌ள் விழியில் குவித்தவன், “டூ யூ வான்ட் டு சீ?” என்ற‌ான் மென் குரலில்.

அதில் அவ‌ளும் ப‌த‌ற்ற‌மாய் மெல்ல‌ ஆம் என்று த‌லையசைக்க‌, அவ‌ள் இடையில் அழுத்தி ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் திடுக்கிட்டு குனியும் முன் அவ‌ளை தூக்கி கீழே நிறுத்திய‌வ‌ன், மெதுவாய் எழுந்தான். அதில் அவ‌ளும் புரியாது மெல்ல நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, “க‌ம்” என்ற‌ப‌டி அவ‌ள் தோளை அணைத்து பிடித்து அழைத்து சென்றான்.

அதில் அவ‌ளும் புரியாது முன்னால் பார்க்க‌, அவ‌ள் க‌ண்க‌ளை தன் க‌ர‌த்தால் மூடினான். அதில் அவ‌ள் த‌டுமாறி அவ‌ன் க‌ர‌த்தை தொட்டு பார்க்க‌, “பாத்து வா.” என்ற‌ப‌டி மெதுவாய் அழைத்து சென்றான்.

அப்ப‌டியே நடக்க இரு பக்கமும் அந்த‌ வ‌ண்ண‌ வ‌ண்ண‌ தாம‌ரைக‌ள் குவிந்து இருக்க‌, அத‌ன் ந‌டுவே அமைந்திருந்த‌ கண்ணாடி பாதையில் அவ‌ள் க‌ண்க‌ளை மூடி அப்ப‌டியே அழைத்து வந்த‌வ‌ன், அப்ப‌டியே ஒரு இட‌த்தில் நிற்க‌, அவ்ளோ கேள்வியாய் நெற்றியை குறுக்க‌, மெதுவாய் த‌ன் க‌ர‌த்தை வில‌க்கினான் ருதன். அதில் அவ‌ளும் க‌ண்க‌ளை சுருக்கி ஆர்வ‌மாய் இமையை பிரிக்க‌, அடுத்த‌ நொடி அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌,  உல‌கிலேயே இல்லாத‌ ஒரு அதிச‌ய‌ம் அவ‌ள் க‌ண்முன் இருந்த‌து.

அவ‌ள் முன்னிருந்த‌ அந்த‌ ப‌குதி குள‌ம் முழுக்க‌ நிறைந்திருந்த‌ தாம‌ரைக‌ள் மொத்த‌மும், இர‌த்த‌ சிவ‌ப்பு நிற‌த்தில் இருந்த‌து. உண்மையில் தாம‌ரை வ‌கையில் சிவ‌ப்பு நிற‌மே கிடையாது. ஆனால் க‌ல‌ப்பு முறையில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ Crimson Lotus என்னும் ஒரு வ‌கை தாமரை,  ஓர‌ளவு சிவ‌ப்பு நிற‌த்தை ஒத்திருக்கும். ஆனால் அது முழு சிவ‌ப்பு நிறம் அல்ல அடர் இளஞ்சிவப்பு நிறம் ஆகும்.

ஆனால் இங்கிருக்கும் இந்த‌ தாம‌ரைக‌ள் உண்மையான சிவப்பில் முழு இர‌த்த‌ நிற‌த்தில் இருக்க‌, இவ‌ளுக்கோ இது அறிவிய‌ல் உல‌க‌மே காணாத ஒரு‌ ப‌டைப்பாக‌ தோன்றிய‌து. அதில் அவ‌ள் விய‌ப்பாய் சுற்றியும் பார்த்தபடியே அப்படியே அத‌ன் நடுவே ஒரு பூவில் பார்வையை குவிக்க‌, அந்த‌ பூவை அழ‌காய் பறித்து எடுத்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் திடுக்கிட்டு பார்வையை நிமிர்த்த‌, அதை அப்ப‌டியே உய‌ர்த்தி அவ‌ள் முக‌த்தின் முன் கொண்டு வ‌ந்து நீட்டினான். அதில் அவ‌ளோ வியப்பாய் அதனுள் பார்வையை குவிக்க, “மை மோஸ்ட் ஃபேவரட் கலர், ஃபார் த மோஸ்ட் பியூட்டிஃபுல் வுமன்.” என்றான் இரசனையாக.

அதில் முழு வியப்பாய் அவள் பார்வையை நிமிர்த்த, அப்ப‌டியே அதை உயர்த்தி அவ‌ள் காதோர‌ம் சொருகியது அவன் விரல்கள். அதில் ஜில்லென்று அவ‌ள் காதோர‌ம் ஈர‌ம் ப‌டிய‌, சிலிர்வாய்  விழியை மூடினாள். அதில் அந்த‌ காதோர‌ம் வ‌ழிந்து வ‌ந்த‌ நீர் துளியை அவன் அழ‌காய் த‌ன் மீசையால் துடைத்தெடுக்க‌, அவளோ குழைவாய் உட‌லை நெளிக்க, அவள் மார்பை மெத்தமாய் உரசி நின்றவன், அந்த காதுக்குள் மெல்லியதாய் மீசையை உரசி,  “யூ லைக் லோட்ட‌ஸ் ரைட்?” என்றான் மென்குரலில்.

அதில் ப‌ட்டென்று விழியை திற‌ந்த‌வ‌ள் அவ‌னை திகைப்பாய் பார்க்க‌, அவ‌னோ அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்து அவ‌ள் க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டான். அதில் அவ‌ளோ புரியா வியப்பாய் அவனையே பார்த்து, “உ..உங்க‌ளுக்கு எப்பிடி..” என்று கேட்க‌ வ‌ர‌, “உன் க‌ண்ணுலையே தெரியுது.” என்றான் அத்தனை மென்மையாக.

அதில் அவ‌ள் புரியாது இமையை விரிக்க‌, அந்த இமையருகே இரசனையாய் தன் ஒற்றை விரலால் கோடிழுத்தவன், “உன்ன‌ மொத‌ல் மொத‌ல்ல‌ பாக்கும்போது என் க‌ண்ணுல‌ என்ன‌ தெரிஞ்ச‌தோ, அதுதா இன்னிக்கு உன் க‌ண்ல‌ பாக்குறேன்.” என்றபடி அவள் விழியில் பார்வையை பதித்து, “சோ லோட்ட‌ஸ் இஸ் யுவ‌ர் ஃபேவ்ர‌ட்.” என்றான் மெல்லிய குரலில்.

அதில் மொத்த‌மாய் திகைத்து நின்றவ‌ளுக்கோ, இவ‌னால் எப்பிடி த‌ன் ம‌ன‌தில் உள்ள‌தை கூறாமலே புரிந்துக்கொள்ள‌ முடிகிற‌து என்ற‌ விய‌ப்பாய் அவனையே பார்க்க, அப்போது மெதுவாய் வீசிய தென்றலில் அவ‌ள் காதோர‌ம் ஏதோ ஊறியது. அதில் திடுக்கிட்டு தெளிந்தவள், குழப்பமாய் அந்த‌ பூவை தொட்டு பார்க்க‌, அவளின் சுருண்ட முடிதான் காதோரம் உரசியது. அதை தொட்டு பார்த்தவளுக்கு புழுவின் உருவ‌ம்தான்  க‌ண்முன் வ‌ர‌, விழியை அகல விரித்து “அ..!” என்று அலறியபடி வேக‌மாய் அதை உத‌றிவிட்டாள். அதில் பொத்தென்று அந்த பூ கீழே விழ‌, அவ‌ன் திடுக்கிட்டு அதை பார்க்கும் நொடி ப‌ட்டென்று அவ‌ன் மார்புக்குள் புகுந்திருந்தாள் அவ‌ள். அதில் அவ‌ன் பட்டென்று தடுமாறி குனிந்து அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் மார்புக்குள் பயந்து ந‌டுங்க‌, அவ‌னோ அவ‌ளை அணைக்க‌ கூட இல்லாது அப்படியே பார்வையை நகர்த்தி அவ‌ள் உத‌றிவிட்ட‌ த‌ன்  தாம‌ரையைதான் பார்த்தான்.

“அதுல‌ என்ன‌மோ..” என்று அவ‌ள் நடுங்கியபடி கூற‌ வ‌ர‌, அவ‌ள் கூந்த‌லுள் முழு விர‌ல்க‌ளையும் நுழைத்து இறுக‌ பிடித்த‌வ‌ன், அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்கும் முன் ப‌ட்டென்று அவ‌ளை த‌ண்ணீருக்குள் த‌ள்ளியிருந்தான்.

அதில் பொத்தென்று அவ‌ள் உள்ளே விழுந்து‌ த‌ண்ணீர் தெறித்து அவ‌ன் முக‌த்தில் அடிக்க‌, அதை தன் விர‌ல்க‌ளால் அழுத்தி துடைத்த‌வ‌னின் க‌ண்க‌ள் கோவ‌த்தில் இர‌த்த‌மாய் சிவ‌ந்த‌து.

   – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured