Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-17

அன்புள்ள அரக்கனே CH-17

by oviyablessy
246 views
அன்புள்ள அரக்கனே CH-56

யோகி த‌ன் மொபைலில் சில‌ ஆதார‌ங்களை ‌அவ‌ளிட‌ம் காட்ட‌, அதை வேக‌மாய் வாங்கி ஸ்லைட் செய்து பார்த்த‌ அவ‌ளுக்கோ அத்த‌னை அதிர்வாய் விழிக‌ள் விரிய‌, “அவ‌ங்க‌ ரெண்டு பேருமே ஃப்ராட்ஸ்.” என்றான் யோகி.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌னை பார்க்க‌, “இந்த‌ ரெண்டு வ‌ருஷ‌ம் உங்க‌ளுக்கு அம்மா அப்பாவா ந‌டிக்குற‌துதா அவ‌ங்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட‌ ப்ராஜ‌க்ட்.” என்றான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் ம‌ன‌ம் துடிப்பை நிறுத்த‌, அவ‌னும் ஆம் என்று த‌லைய‌சைத்தப‌டி, “உங்க‌ளோட‌ அம்னீஷியா ப‌த்தி உங்க‌ளுக்கு க‌ண்டிப்பா தெரிஞ்சிருக்கும்னு நெனைக்குறேன்.” என்றான்.

அதில் அவ‌ளின் மூளையோ அப்ப‌டியே பின்னால் ந‌க‌ர்ந்து அந்த‌ நாளுக்கு சென்று நின்ற‌து. அன்றுதான் அவ‌ள் மூளையில் ப‌திவாகிருந்த முத‌ல் நாள். அவ‌ள் இமைக‌ளை மெதுவாய் பிரிக்க‌, “ஸ்லோலி. ஸ்லோலி ஒப்பன் யுவ‌ர் ஐஸ்” என்ற‌ ம‌ருத்துவ‌ரின் குர‌லில் முழுதாய் விழி திற‌ந்தாள்.

அப்போது ம‌ங்க‌ளாய் தெரிந்த‌ அவ‌ர் உருவ‌ம், “பெயின் எதுவும் இருக்கா?” என்று அவ‌ர் உத‌டுக‌ள் அசைக்க‌, குர‌ல் மெதுவாக‌தான் அவ‌ள் செவியை அடைந்த‌து.

அப்போதே அவ‌ளின் காய‌ம்ப‌ட்ட‌ த‌லை ப‌ய‌ங்கர‌மாய் வ‌லிக்க‌, அதை தாங்கி பிடிக்க‌ கூட‌ அவ‌ள் உட‌லில் தெம்பில்லை.

“உங்க‌ பேரென்ன‌?” என்று அவ‌ர் மென்மையாய் கேட்க‌, அதில் சோர்வாய் விழி க‌ருவை உருட்டிய‌வ‌ளுக்கோ அது சுத்த‌மாய் நினைவில்லை.

“இந்த‌ அடி எப்பிடி ப‌ட்டுச்சு?” என்று அவ‌ர் அடுத்து கேட்க‌, அதுவும் நினைவில்லாது  அவ‌ள் மூளை மொத்த‌மும் வெள்ளையாக‌ இருந்த‌து.

அதில் அவ‌ள் யோசிக்க‌ முய‌ன்று நெற்றியை குறுக்க‌, அந்த‌ ம‌ருத்துவ‌ரோ அப்ப‌டியே வில‌கி, “இவ‌ங்க‌ யாருன்னு தெரியுதா?” என்றார்.

அதில் சோர்வாய் அவ‌ள் இமைக‌ள் மூடி திற‌க்க‌, அத‌ன் ந‌டுவே க‌ண்ணீருட‌ன் அந்த‌ போலி தாய் த‌ந்தை நின்றிருந்த‌ன‌ர்.

அதில் அவ‌ள் புரியாது இமைக‌ளை குறுக்க‌, “சொல்லுங்க‌. யாருன்னு தெரியுதா?” என்று மென்மையாய் கேட்டார் ம‌ருத்துவ‌ர்.

அத‌ற்கு அவ‌ளும் த‌ன் மூளையில் தேடி பார்க்க‌ முய‌ல‌, எதாவ‌து இருந்தால்தானே தேட‌, சுத்த‌மாய் வெள்ளையாய் இருக்கும் மூளையில் எந்த‌ ஒரு நிக‌ழ்வும் ப‌தியாதிருக்க‌, இவ‌ர்க‌ள் யாரென்று அவ‌ளுக்கு சுத்த‌மாக‌ தெரிய‌வில்லை. “ம்ஹூம்” என்று அவ‌ள் மெல்ல‌மாய் த‌லைய‌சைக்க‌, அதில் க‌ண்ணீர் பெருக‌ த‌ன் முந்தாணையால் க‌ண்ணீரை துடைத்த‌ ச‌குந்த‌லாவை, த‌ன் தோளில் சாய்த்துக்கொண்டு க‌ண்ணீருட‌ன் ச‌மாதான‌ம் செய்தார் அவ‌ரின் க‌ண‌வ‌ன்.

அதில் இவ‌ள் புரியாது ம‌ருத்துவ‌ரின் ப‌க்க‌ம் பார்வையை திருப்ப‌, “வேற‌ எதாவ‌து நியாப‌க‌ம் இருக்காம்மா? இல்ல‌ எதாவ‌து தோனுதா?” என்று அவ‌ர் கேட்க‌, அவ‌ளுக்கோ ம‌ண்டை காலியாக‌ இருக்க‌, “ம்ஹூம்” என்று மெல்ல‌ த‌லைய‌சைத்தாள்.

அதில் க‌வ‌லை பெருமூச்சாய் த‌ன் க‌ண்ணாடியை க‌ழ‌ற்றிய‌ ம‌ருத்துவ‌ர், அப்ப‌டியே திரும்பி அவ‌ர்க‌ளை பார்த்து, “ஐய‌ம் சாரி. உங்க‌ பொண்ணுக்கு Severe Retrograde Amnesia. அதாவ‌து டோட்ட‌ல் மெம‌ரி லாஸ்” என்று கூற‌, க‌த‌றி அழுதார் ச‌குந்த‌லா.

அந்த‌ நாட‌க‌த்தில் இங்கு மீராவின் ம‌ன‌து ப‌றித‌விப்பை உண‌ர‌, அவ‌ர்க‌ளையேதா‌ன் பார்த்தாள்.

“ஏக்சிட‌ன்ட்டுக்கு முன்னால‌ ந‌ட‌ந்த‌ எல்லாத்தையும், அதோட‌ ஏக்சிட‌ன்ட் எப்பிடி ந‌ட‌ந்த‌துன்னுக்கூட‌ அவ‌ங்க‌ளுக்கு இப்ப‌ நியாப‌க‌ம் இல்ல‌.” என்றார் ம‌ருத்துவ‌ர்.

அதில் அமீராவிற்குமே சிறு அதிர்வாய் புருவ‌ங்க‌ள் விரிய‌ முய‌ல‌, சோர்வில் சுத்த‌மாய் முடியாம‌ல் விழிக‌ள் மூடியிருந்த‌து.

“அன்னிக்குதா அவங்க உங்க‌ அப்பா அம்மாவா உங்க‌ முன்னாடி வ‌ந்து நின்னாங்க‌, ந‌டிச்சாங்க‌, அப்ற‌ம் வாழ‌வே ஆர‌ம்பிச்சாங்க‌.” என்றான் யோகி.

அதில் இவ‌ள் க‌ண்ணீர் வேத‌னையில் பெருக‌, மீண்டும் த‌ன் கையிலிருந்த‌ ஆதார‌ங்க‌ளை பார்த்த‌வ‌ளுக்கு அதை ந‌ம்ப‌வே அத்த‌னை சிர‌மமாக‌ இருந்த‌து. அவ‌ர்க‌ள் காட்டிய‌ அன்பும் பாச‌மும் பொய் என்று அவ‌ள் ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுத்த‌து.

அவ‌ர்க‌ளின் ம‌க‌ளாக‌ அவ‌ர்க‌ளின் வீட்டிற்குள் நுழைந்த‌வ‌ள், த‌ன் பிற‌ந்த‌ நாள், ப‌ள்ளி க‌ல்லூரி வாழ்கை என்று அனைத்தையுமே அவ‌ர்க‌ள் காட்டிய‌ ஆல்ப‌ம் மூல‌ம் அறிந்துக்கொண்டாள். த‌ன‌க்கு பிடித்த‌ நிற‌ம், பூ, உண‌வு முத‌ல் அவ‌ர்க‌ளுக்குமே தெரிந்திருந்த‌து.

“எப்பிடி தெரியாம‌ இருக்கும்? ஃபுல் ட்ரெயிங்கையும் குடுத்துதான‌ அவ‌ங்க‌ள‌ உங்க‌ வாழ்க்கைக்குள்ளையே கொண்டு வ‌ந்தாங்க‌.” என்றான் யோகி.

அதில் அவ‌ள் புரியா க‌ண்ணீராய் நிமிர்ந்து, “யாரு?” என்று க‌ம‌றிய‌ குர‌லில், அத்த‌னை வ‌லியுட‌ன் கேட்க‌, “விக்ர‌ம‌ன்.” என்றான் யோகி.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் க‌ண்ணீர் உறைய‌, இங்கே மெதுவாய் விழிக‌ளை பிரித்தார் விக்ர‌ம‌ன். ச‌ட்டென்று அவ‌ர் முக‌த்தில் லைட் அடிக்க‌, ப‌ட்டென்று முக‌த்தை திருப்பி க‌ர‌த்தால் முக‌த்தை ம‌றைத்தார்.

“ஐயா என்ன‌ ஆச்சு?” என்ற குர‌லில் அவ‌ர் மெதுவாய் க‌ர‌த்தை வில‌க்கி விழியை திற‌க்க‌, அந்த‌ வாட்ச் மேன்தான் ப‌த‌ற்ற‌மாய் முக‌த்தில் டார்ச் அடித்துக்கொண்டிருந்தான்.

அதில் வேக‌மாய் அந்த‌ டார்ச்சை வில‌க்கிவிட்டு மெதுவாய் எழுந்த‌ம‌ர‌ முய‌ன்றார். “பாத்துங்கைய்யா” என்ற‌ப‌டி வாட்ச் மேனும் அவ‌ரை தூக்கி அம‌ர‌ வைக்க‌, சுள்ளென்ற‌ வ‌லியில் த‌ன் பின் ம‌ண்டையை அழுத்தி பிடித்தார் விக்ர‌ம‌ன்.

“ஐயா என்ன‌ ஆச்சு?” என்று அவ‌ன் ப‌த‌றி கேட்க, அவ‌ரோ வ‌லியில் க‌ண்க‌ளை இறுக்கி மூட‌, ச‌ட்டென்று த‌ன் விழிய‌ருகே தெரிந்த‌ ருத‌னின் முக‌ம். அதில் திடுக்கிட்டு விழியை திற‌ந்த‌வ‌ருக்கோ அத‌ற்குமேல் எதுவும் நினைவில்லாது பின் த‌லையை அழுத்தி பிடிக்க‌, அங்கே ப‌ல‌மாய் அடிப்ப‌ட்ட‌து போல் வ‌லித்த‌து.

காற்று வேறு ப‌ல‌மாய் அடிக்க‌, ம‌ண்ணும் ச‌ருகுக‌ளும் முக‌த்தில் வ‌ந்து அடிக்க‌வும், த‌லையை பிடித்த‌ப‌டி த‌டுமாறி மெல்ல‌ எழுந்து நின்ற‌வ‌ர், அப்போதே மீண்டும் அந்த‌ தொங்கிக்கொண்டிருந்த‌ ட்ரைவ‌ரை க‌ண்டு விழி விரித்து பின்னால் சாய்ந்தார்.

அதில் அவ‌ரை தாங்கி பிடித்த‌  வாட்ச் மேன், “போலிஸ்க்கு த‌க‌வ‌ல் சொல்லியாச்சுங்க‌ய்யா. அவ‌ங்க‌ வ‌ந்துகிட்டிருக்காங்க‌.” என்றான்.

அதில் ப‌ட்டென்று அவ‌னை பார்த்த‌வ‌ர், “என்ன‌?” என்று கேட்க‌, “போலீஸ்க்கு த‌க‌வ‌ல்..” என்று கூறும் முன் ப‌ளாரென்று அவ‌ன் க‌ன்ன‌த்தில் அறைந்தார் விக்ர‌ம‌ன்.

அதில் அவ‌ன் பொத்தென்று த‌ரையில் விழ‌, “அறிவு கெட்ட‌வ‌னே.” என்று ப‌ல்லை க‌டித்த‌வ‌ர், “ம‌ரியாதையா அவ‌ங்க‌ வ‌ர்ற‌துக்குள்ள‌ பாடிய‌ டிஸ்போஸ் ப‌ண்ணு. இத‌ ப‌த்தி வெளிய‌ எங்கையாவ‌து மூச்சுவிட்ட‌.. தொல‌ச்சிருவேன்.” என்று அத்த‌னை கோப‌மாய் அழுத்தி கூற‌, வாட்ச் மேனிற்கோ இத‌ய‌ம் அடித்துக்கொள்ள‌ ஒன்றும் புரிய‌வில்லை.

“சீக்கிர‌ம்.” என்று க‌த்திவிட்டு அவ‌ச‌ர‌மாய் ந‌க‌ர்ந்தார் விக்ர‌ம‌ன்.

இவ‌னும் வேக‌மாய் எழுந்து அவ‌ர் பின்னால் செல்ல‌, அவ‌ரோ அந்த‌ கார்ட‌னை தாண்டி வெளியில் வ‌ந்த‌தும் ச‌ட்டென்று அப்ப‌டியே நின்றார்.

அங்கிருந்த‌ அவ‌ரின் காரை காண‌வில்லை. அதில் அவ‌ர் வேக‌மாய் சுற்றி பார்க்க‌, அடுத்த‌ நொடி எதையோ உண‌ர்ந்து வேக‌மாய் த‌ன் வீட்டிற்குள் ஓடி, ம‌ற்றொரு காரை எடுத்துக்கொண்டு கிள‌ம்பியிருந்தார்.

இங்கே யோகி கூறிய‌தை கேட்டு அவ‌ளின் உறைந்த‌ க‌ண்ணீர் த‌ரையை தொட‌, “ஆமா. இந்த‌ அப்பா அம்மாவா நாட‌க‌மெல்லா, நீங்க‌ விராஜ‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ வ‌ரைக்கும்தா. அதுக்க‌ப்ற‌ம் அவ‌ங்க‌ உங்க‌ க‌ண்ணுலையே ப‌ட‌ கூடாதுங்குற‌துதா. உங்க‌ மாமா விக்ர‌ம‌னோட‌ ஆட‌ர்.” என்றான் யோகி.

அதில் மேலும் அவ‌ள் இத‌ய‌ம் நின்று துடிக்க‌, “வி..விராஜ்..” என்று அத்த‌னை அதிர்வாய் அவ‌ள் இத‌ழ்க‌ள் உதிர்க்க‌, “ம்ம். அந்த சார‌ ப‌த்தியும் சொல்லியாக‌ணும். சொந்த‌ அண்ண‌ பொண்டாட்டி மேல‌யே ஆச‌ப்ப‌ட்ட‌ ஒரு கேவ‌ல‌மான‌ பிற‌வி.” என்று அருவ‌ருப்பாய் ப‌ல்லை க‌டித்தான்.

அதில் இவ‌ளுக்குதான் ம‌ற்றொமொரு அதிர்வாய் இருக்க‌, “அண்..ண‌னா?” என்று அத்த‌னை அதிர்வாய் வார்த்தையை உதிர்க்க‌, இங்கே ம‌ய‌க்க‌த்திலிருந்த‌ விராஜின் காதுக‌ளில், “டிய‌ர் பிர‌த‌ர்…” என்று அழுத்த‌மான‌ இழுவையாய் ருத‌னின் குர‌ல்.

அதில் ச‌ட்டென்று அவ‌ன் மூளை விழிக்க‌ முய‌ல‌, ப‌ட்டென்று அவ‌ன் க‌ழுத்திலிற‌க்கிய‌தை உருவியிருந்தது அவ‌ன் க‌ர‌ம். அது பொத்தென்று கீழே விழ‌, அது ஒரு இஞ்ச‌க்ஷ‌ன்.

அடுத்த‌ நொடி அந்த‌ மானிட்ட‌ரில் வ‌னின் ஹார்ட் ரேட்டிங் அதிக‌ரித்து ச‌த்த‌மிட‌ ஆர‌ம்பிக்க‌, மார்பை விரித்து தூக்கி, மீண்டும் பொத்தென்று  மெத்தையில் புதைந்த‌வ‌னின் ஆகிஸிஜ‌ன் மாஸ்க் கீழே விழுந்து உடைந்த‌து.

அப்போதே க‌ழிவ‌றையிலிருந்து வெளி வ‌ந்த‌ விம‌லா, அங்கு க‌ண்ட‌ காட்சியில் அதிர்ச்சியாகி “விராஜ்!” என்று க‌த்திய‌ப‌டி அவ‌ன‌ருகே செல்ல‌, அவ‌னோ விழியை விரித்து உட‌லை பிர‌ட்டி த‌லையை திருப்பி க‌ர‌த்தை எங்கோ நீட்டினான்.

அவ‌ன் திடீரென்று விழித்த‌தில் அவ‌ர் அதிர்ந்து அப்ப‌டியே உறைந்திருக்க‌, அவ‌ன் விரிந்த விழிக‌ளோ இர‌த்த‌மாய் சிவ‌ந்த‌ நிலையில் ஜ‌ன்ன‌லின் ப‌க்க‌மே க‌ண்ணை காட்டிய‌து. அதில் அவ‌ரும் வேக‌மாய் திரும்பி ஜ‌ன்ன‌லை பார்க்க‌, காற்றுதான் ப‌ல‌மாய் அடித்த‌தே த‌விர‌  யாருமே இல்லை. அதில் மீண்டும் இவ‌ன் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ரின் க‌ண்க‌ளில் ஆன‌ந்த‌ க‌ண்ணீர் பொங்க‌, “விராஜ்!” என்றப‌டி ம‌க‌னின் அருகில் சென்றார்.

இங்கே மீண்டும் ம‌ய‌ங்கத்திற்கு சென்ற‌ அமீராவின் க‌ன்ன‌ம் த‌ட்டி எழுப்ப‌ முய‌ன்றான் யோகி. அதில் அவ‌ளின் ம‌ங்கிய விழிக‌ள் மெதுவாய் பிரிய‌ முய‌ல‌, அத‌ன் ந‌டுவே ப‌த‌ற்ற‌மாய் யோகியின் முக‌ம்.

“மேட‌ம் ரொம்ப‌ வீக்கா இருக்கீங்க‌. ப்ளீஸ் எதாவ‌து சாப்புடுங்க‌.” என்று அவ‌ன் உண‌வை நீட்ட‌, அவ‌ளோ க‌டின‌ப்ப‌ட்டு அதை வில‌க்கிவிட்டு மெதுவாய் எழுந்து அம‌ர்ந்தாள்.

அவ‌ளின் த‌லை இன்னுமே சுற்றுவ‌துப்போல் இருக்க‌, அப்ப‌டியே த‌லையை பிடித்து க‌ட்டில் சாய்வில் சாய்ந்தாள்.

“மேட‌ம் அட‌ம்புடிக்காதீங்க‌. மீதிய‌ அப்ற‌ம் சொல்றேன். மொத‌ல்ல‌ சாப்புடுங்க‌.” என்றான்.

அதில் இருட்டிக்கொண்டு வ‌ந்த‌ இமைக‌ளை க‌டின‌ப்ப‌ட்டு பிரித்து, “என‌க்கு வேண்டா.” என்று அவள் சோர்வாய் ம‌றுக்க‌, அதில் நொந்துக்கொண்ட‌வ‌ன், “பாஸ் வ‌ந்தாதா ச‌ரியா இருக்கும்.” என்று முன‌ங்கிவிட்டு, “ச‌ரி அதுவ‌ர‌ இந்த‌ பாலையாவ‌து குடிங்க‌.” என்று பால் க்ளாஸை எடுத்து அவளுக்கு புக‌ட்டினான்.

அவ‌ள் தொண்டையுமே அழுது அழுது வ‌ர‌ண்டிருக்க‌, மெதுவாய் வாய் திற‌ந்து அதை ப‌ருகினாள். அதில்தான் அவ‌னுக்கு ச‌ற்று நிம்ம‌தியாய் இருக்க‌, “ச‌ரி ரெஸ்ட் எடுங்க‌.” என்ற‌ப‌டி அவ‌ளை மெதுவாய் ப‌டுக்க‌ வைத்தான்.

“இல்ல‌ நா..” என்று எழ‌வே முய‌ற்சித்த‌வ‌ளின் மீது போர்வையை போர்த்திவிட்டு “ப்ளீஸ் மேட‌ம். மொத‌ல்ல‌ ரெஸ்ட் எடுங்க‌.” என்றான் யோகி.

ம‌ன‌ம் ஆர்ப‌ரித்தாலும், ஓய்வுக்கு ஏங்கிய‌ உட‌லோ போர்வையின் க‌த‌க‌த‌ப்பில் மெதுவாய் உற‌க்க‌த்திற்கு செல்ல‌, அப்ப‌டியே உற‌ங்கியிருந்தாள் அவ‌ள். அதில் அவ‌னும் ச‌ற்று நிம்ம‌தியாய் எழுந்து உண‌வுக‌ளை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.

இங்கே இவ‌ளோ அழுது அழுதே க‌ரைத்த‌ ச‌க்தி மொத்த‌மும் இப்போது உற‌க்க‌த்திற்கு எடுத்து செல்ல‌, அமைதியாய் உற‌ங்கினாள். நிமிட‌ங்க‌ள் க‌ட‌ந்து அப்ப‌டியே ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருந்த‌வ‌ள் த‌டாரென்று அடித்த‌ இடி ச‌த்த‌த்தில் திடுக்கிட்டு விழிக்க‌, அவ‌ள் முன்னிருந்த‌ க‌ண்ணாடி ஜ‌ன்ன‌லில் மின்ன‌லின் வெளிச்ச‌ங்க‌ள்.

அதில் ப‌த‌ற‌லாய் முக‌த்தை ம‌றைத்த‌வ‌ளின் க‌ண்முன் அந்த‌ மின்ன‌ல் இர‌வுதான் வ‌ந்து நிற்க‌, அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் அடித்துக் கொண்ட‌து. ஏனோ அந்த‌ ஒரு க‌ன‌வால் அவ‌ளுக்கு இடி மின்ன‌ல் என்றாலே ப‌ய‌மாய் இருக்க‌, அத‌ற்குள் த‌டார் த‌டாரென்று அடுத்த‌டுத்து அடித்த‌ இடி ச‌த்தில் திடுக்கிட்டு ப‌ய‌ந்து ந‌டுங்கிய‌வ‌ள், அடுத்து மின்ன‌ல் அடிக்கும் முன் வேக‌மாய் திரும்பி ப‌டுக்க‌, பாதுகாப்பாய் அவ‌ன் மார்புக்குள் இருந்தாள்.

அதில் அவ‌ளின் ந‌டுக்க‌ம் அப்ப‌டியே அட‌ங்க‌, இத‌ய‌மும் மெல்ல‌ சீராக‌, அனைத்து எண்ண‌ங்க‌ளும் வில‌கி மெதுவாய் இமைக‌ளை பிரித்தாள். பிரிந்த‌ இமைக‌ளின் ந‌டுவே அவ‌னின் ஆர் வ‌டிவ‌ க‌ருப்பு டால‌ர் அழ‌காய் மின்ன, ருதன் என்ற அவனின் பெயர் மீண்டும் அவள் இதயத்தில் ஒலித்தது. அதில் அப்படியே அவன் இதயத்தில் இதழுரச, அந்த டாலருக்கு முத்தமிட்டாள். அது அவனின் பெயருக்கே கொடுத்த முத்தமோ என்னவோ. அவள் இதழ்கள் இரசனையாய் வளைந்தது.

       – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured