மீண்டும் தண்ணீரில் விழுந்த அமீராவின் நினைவுகள் திறந்து, அந்த மின்னல் இரவில் நடந்த அனைத்தும் கண்முன் வர துவங்கியது.
இன்று மட்டுமல்ல எப்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்குகிறாளோ அப்போதெல்லாம் இந்த நினைவுகள் அவளுள் வர துவங்கும். அப்படித்தான் திருமணத்தன்று அந்த தாமரை நிறைந்த குளத்தில் முங்கி எழுந்தவளின் நினைவுகள் திறந்து இவையெல்லாம் அவள் கண்முன் வந்திருந்தது. அதைதான் கதையின் ஆரம்பத்தில் நாம் பார்த்தது.
இப்போதும் அந்த நினைவுகளுக்குள் இருந்தவளை சட்டென்று தண்ணீரிலிருந்து தூக்கி நிறுத்தினான் ருதன்.
அதில் அவள் மூச்சை இழுத்துவிட்டு வெளியில் வர, அவள் கரத்தில் ஏதோ சிக்கியிருந்தது. அதில் அவள் மெதுவாய் தன் கரத்தை தூக்கி, மெல்ல விரல்களை திறக்க, அடுத்த நொடி அவள் விழிகள் அகல விரிந்தது.
அன்று அந்த மின்னல் இரவு அவள் தலையில் வைத்திருந்தாளே, அதே சிவப்பு தாமரை தான் இது.
சிவப்பு தாமரை என்பது மிகவும் அரிதான மலராகும். அது அவ்வளவு எளிதில் அனைத்து இடங்களிலும் கிடைத்துவிடாதே. அதில் அவள் அதிர்வாய் சுற்றி பார்க்க, அந்த குளம் முழுக்க அந்த சிவப்பு தாமரைதான் நிறைய இருந்தது.
அதில் அவள் இதயம் துடிப்பை அதிகரிக்க, தனக்கு வரும் கனவிற்கும் இந்த இடத்திற்கும் சம்மந்தம் உள்ளதா என்று அவள் பலமாய் யோசிக்கும் நேரம், ஏதேதோ நினைவுகள் அவள் மூளையில் புகுந்து, தலை சுற்றி அப்படியே அவன் மார்பில் சரிந்தாள்.
அதில் பதறி அவளை தாங்கி பிடித்தவன், குனிந்து அவள் கன்னத்தை தாங்கி பிடித்து, “அம்மு!” என்று அவள் முகம் பார்க்க, அவளோ முழு மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் அவள் விழிகள் மெதுவாய் பிரிய, அவளால் அசையக்கூட முடியவில்லை. அவள் ஈர தலை நன்றாகவே உளர்ந்து காய்ந்திருக்க, அவளின் ஆடையுமே காய்ந்திருக்க, புரியாது புருவம் குறுகி சுற்றியும் பார்வையை நகர்த்தினாள்.
அதே ஊஞ்சல் படுக்கையில் (Hammock) இம்முறை தனியாக அல்லாமல் அவன் அருகாமையில் அவன் அணைப்பிற்குள் இருந்தாள். அதில் அவள் திடுக்கிட்டு அவன் கரங்களை பார்க்க, அதுவோ அவளை பத்திரமாய் தன்னோடு சேர்த்து அணைத்திருக்க, இம்முறை விழ மாட்டாய் என்பதை சொல்லாமல் சொல்லியது. அதில் அப்படியே நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவனோ உறக்கத்தில் இருந்தான்.
அதில் அவள் முகம் அப்படியே இரசனை பூச, அவன் நெஞ்சில் தன் தாடையை வைத்து அவனையே இரசிக்க துவங்கினாள்.
இவன் ஆரம்பத்தில் தன்னிடம் நடந்துக்கொண்ட விதம் என்ன… இப்போது நடந்துக்கொள்ளும் விதம் என்ன? அந்த அரக்கனா இவன் என்று வியக்கும் விதமாக அவன் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்க, அந்த அரக்கனும் இந்த அன்பாளனும் இந்நொடி ஒன்றாய் அவள் நினைவில் வந்து நின்றனர்.
அதில் அப்படியே அவன் இதயத்தில் சாய்ந்துக்கொண்டவளின் முகத்தில் இந்த அன்பாளனின் மீதான இரசனை மட்டுமே தெரிந்தது. அதில் சற்று முன் குளத்தில் நடந்தவற்றை முற்றிலுமாய் மறந்திருந்தவள், அவனையே இரசித்தபடி படுத்திருக்க, உறக்கத்தில் மெல்ல அசைந்து படுத்தவன், ஏதோ வித்தியாசமாய் உணரவும் மெதுவாய் இமைகளை பிரிக்க, சட்டென்று விழியை மூடி உறங்குவதுப்போல் நடித்தாள் இவள்.
அதில் புரியாது புருவம் குறுகியவன், அவள் முகத்தையே பார்க்க, அவளின் இதயம் அத்தனை பலமாய் துடித்தது. அது அவள் மார்பில் புதைந்திருந்த இவன் இதயம் தெளிவாய் உணர, புருவம் குறுகி அவளை பார்த்தான். அவளோ சிறிதும் அசையாது விழி மூடியிருக்க, இவன் இதழ்கள் மெல்லியதாய் வளைந்தது.
உறங்கினால் இதயம் சீராக அல்லவா இருக்க வேண்டும், இது குதிரை வேகத்தில் துள்ளும்போதே அவனுக்கு புரிந்துவிட, மெதுவாய் அசைந்து திரும்பி படுத்தான் அவன்.
அதில் அவள் மனம் கேள்வியாய் குறுகினாலும் அசையாது படுத்திருக்க, சட்டென்று தன் அணைப்பை விட்டிருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு விழித்தவள் கீழே விழ போக, அதிர்ந்து இறுக்கி விழி மூடியவள், நீருக்குள் விழும் நேரம் சட்டென்று அவளை இழுத்து அவளிடையை சுற்றி பற்றியிருந்தான் ருதன்.
அப்போதும் அவள் விழிகள் இறுக்கி மூடியபடியே இருக்க, அவள் மூக்கின் நுனியை நறுக்கென்று கடித்தான். அதில் திடுக்கிட்டு விழி திறந்து அதிர்ந்தவள், மீண்டும் பின்னால் சாய போய் சட்டென்று அவன் சட்டையை பிடித்து அவன் மார்புக்குள் வந்துவிட, அவனோ அழகாய் இதழ் வளைத்தான்.
இங்கே அவன் மார்புக்குள் இருந்தவளின் விரல்கள் அவன் சட்டையை இறுக்கி பிடித்திருக்க, அவள் இதயம் இன்னுமே அதிவேகத்தில்தான் துடித்தபடி இருந்தது.
“ஓய்!” என்ற அவனின் குரலில் அவள் மெதுவாய் நிமிர, அவனோ அவள் மீது படர்ந்திருந்தான். அதில் திடுக்கிட்டு நாம் எப்போது அடியில் வந்தோம் என்று அவள் பதறும் முன், சட்டென்று அவள் இதழ்களை நெருங்கியிருந்தான் அவன். அதில் அவள் இறுக்கி விழி மூட, அவள் இதழை தொடாமல் மெல்லிய இடைவெளியிலேயே நின்றிருந்த அவன் இதழ்கள், அவள் இதழை மெல்லியதாய் உரச, “திரும்ப எப்படி ஓடலான்னு யோசிக்கிறியா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அதில் அவள் திடுக்கிட்டு விழி திறந்து அவனை பார்க்க, “ம்ம்?” என்றவனின் சுவாசமும் நாசியும் சேர்ந்தே அவள் நாசி இதழ் பள்ளத்தை உரசியது.
அதில் கூற வந்த பதில்கூட தொண்டையில் இறங்க, மெதுவாய் விழி மூடினாள். அப்போது மெல்ல அவள் காதருகே அவன் மீசை நகர, இவளும் கூச்சத்தில் தேகத்தை குறுக்க, “இனி அதுக்கு அவசியமே இருக்காது.” என்றான் மெல்லிய குரலில்.
அவன் மீசை குறுகுறுப்பில் மெதுவாய் குறுகியபடி விழி திறந்தவள், புரியா பதற்றமாய் அவனை பார்க்க, அவள் கன்னத்தில் தன் தாடியை அழுத்தி உரசியபடியே அவள் இதழை அடைந்தவன், “இனி அத பத்தியெல்லா யோசிக்காத.” என்று மெல்லிய குரலில் கூறியபடியே அவள் இதழை முழுதாய் கைப்பற்றினான்.
அதில் புருவத்தை குறுக்கியவளின் மனமோ விலக முயல, கரமோ அவன் முதுகில் படர்ந்தது. அதில் அவள் மேனியில் மொத்தமாய் புதைந்தவன், மேலும் ஆழமாய் சுவைக்க துவக்க, வன்மையும் மென்மையும் ஒன்றாய் கூட்டி அவன் இரு இதழ் காட்டும் ஜாலத்தில், அவளின் இதழ் வழியாகவே அவளின் பெண்மையும் தொட்டு தூண்டினான் அந்த அரக்கன்.
அதில் அவள் கரங்கள் அவன் பின் சட்டையை இறுக்கி பிடிக்க, விழிகளோ மோகத்தில் சொருக, கூச்சத்தில் குறுகி நெளிந்த அவள் கால்களோ முழுதாய் நீண்டதில் அவள் அணிந்திருந்த சட்டை மெதுவாய் மேலே சென்றது. அதன் வழியே அவனின் கரமும் மெதுவாய் பின் தொடர, அதில் அவள் கால்கள் இரண்டும் கூச்சத்தில் மடங்கி குறுகிக்கொள்ள, அதன் கீழே மெதுவாய் கரத்தை நுழைத்து அவளை அள்ளி தூக்கியிருந்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு அவன் இதழைவிட்டு பிரிய முயல, அதற்கு வாய்ப்பே அளிக்காமல் முழுதாய் அவள் இதழ்களை சுவைத்தபடியே நடக்க துவங்கினான்.
அவன் இதழ் கொடுத்த மயக்கத்தில் மீண்டும் சொருகிய அவளின் இமைகளின் நடுவே, அவன் இதழின் ஜாலம் மட்டுமே பதிய, அவள் விரல்களோ அவனின் பின் சிகைக்குள் நுழைந்து இறுக பற்றியது.
அதில் அங்கிருந்த அவனின் காயம் வெகுவாய் வலிக்க, வலியில் உடலை இறுக்கி இதழில் வன்மையை கூட்டியவன், அதையும் அவள் இதழில்தான் அழுத்தமாய், ஆழமாய், வேகமாய் காண்பித்தான்.
அதில் இறுக்கி விழி மூடிய அவளுக்குமே மூச்சு திணற ஆரம்பிக்க, தொண்டை குழி வரண்டு ஈரம் மொத்தமும் வற்ற ஆரம்பித்த நொடியே, மெதுவாய் அவள் இதழை விடுவித்தான்.
அதில் அவள் மூச்சு வாங்க அவன் இதழிலிருந்து பிரிய, தன் தாமரை மெத்தையில் இருந்தாள். அதில் அவள் திடுக்கிட்டு சுற்றி பார்க்க, தங்கள் அறையில் இருந்தாள்.
அதில் அவள் மூச்சு வாங்க புரியாமல் விழிக்க, அவள் கூந்தலுள் மெதுவாய் நுழைந்தது அவனின் விரல்கள். அதில் அவள் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்ப, அவள் முகம் உரச அவள் மீது படர்ந்திருந்தவன், அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.
அதில் அவள் அப்படியே விழி மூட, அவன் இதழ்களும் அப்படியே இறங்கி அவள் புருவத்தின் நடுவே முத்தமிட்டு, அவன் நாசி வழியே நாசி நுனியிலும் முத்தமிட, கூச்சத்தில் அவள் விரல்கள் தன் வயிற்றிலிருந்த சட்டை பட்டனை மெதுவாய் திருகியது. அப்படியே அவன் இதழ்கள் அவள் நாசி இதழ் பள்ளத்திலும் பதிய, அங்கே அவன் மீசையும் சேர்ந்து உரசிய கூச்சத்தில், அந்த பட்டனை இறுக்கி பிடித்தாள். அதில் அது கழன்று வந்திருக்க, அதனுள் மெதுவாய் நுழைந்தது அவன் விரல்கள்.
அதில் அவள் நடு இடை கூச்சத்தில் குழியாய் குறுக, அவள் கரம் அவன் விரல்களை பிடித்து தடுத்தது. அதில் அவள் கரத்தை மீறி அங்கிருந்த ஆடைக்குள் அவன் விரல்களை நுழைக்க, அவள் நாபி குழிக்குள் நுழைந்தது அவனின் ஒரு விரல். அதில் வெகுவாய் சிலிர்த்து அடங்கியவளின் கூச்சம் மொத்தமும் அந்த ஒரு இடத்தில் வந்து குவிய, இதழை பிரித்து அனலாய் மூச்சுவிட்டவளின் கீழ் இதழை மெல்ல கடித்திழுத்தான். அந்த செவ்விதழ் உருவாக்கிய பள்ளத்தில் முத்தாய் தெரிந்த அந்த பல்லில் மெல்லியதாய் முத்தமிட்டான் அவன்.
அதில் அவன் பற்கள் விடுவித்த அவள் இதழ் மீண்டும் மேலிதழோடு சேர்ந்துவிட, அப்படியே இறங்கி அவள் இதழ் சரிவில் மெல்லிய முத்தம் வைத்தவனின் விரல்கள் இங்கு அந்த திறந்த பட்டனை மெல்ல பூட்டியது.
அதில் அவள் உடல் வெகுவாய் நெளிய, தன் மார்பு சட்டையை இறுக்கி பிடித்தது அவள் விரல்கள். அவ்விரல்கள் மீது மெதுவாய் அவன் விரல்களும் படர, அதில் பதற்றமாய் நடுங்கிய அவளின் இதழ்கள் மீண்டும் அவன் இதழை தேட, அதற்கு மீண்டும் மெல்லியதாய் ஒரு முத்தம் வைத்தவன், “ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். வந்தர்றேன்.” என்றான்.
அதில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அவனோ விலகி எழுந்தான். அதில் அவள் திடுக்கிட்டு திரும்பி அவனையே பார்க்க, அவனோ அறையை தாண்டி சென்றிருந்தான். அதில் அப்படியே மூச்சுவிட்டவளுக்கோ, தன் உடல் நிலை ஒரு புறம், அவன் கொடுத்த முத்தங்கள் ஒரு புறம் என்று சோர்வூட்டியிருந்தது. அதில் அயர்ந்த பெருமூச்சாய் தலையணையுள் புதைந்துவிட்டவளின் விழிகள் அன்னிச்சையாய் தரையை கவனிக்க, சட்டென்று அதிர்வாய் நிமிர்ந்து உற்று பார்த்தாள்.
கீழே அந்த தரையில் அவன் நடந்து சென்ற காலடி தடங்கள் மொத்தமும் இரத்தமாய் பதிந்திருந்தது.
– நொடிகள் தொடரும்…