Chapter 94

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
“ஏய் என்னடா இவ்ளோ காலையில ஃபோன் பண்ணி இருக்க…. நான் இன்னும் ஸ்கூலுக்கு கூட கிளம்பவே இல்லை” என்று சனந்தா ஃபோனில் பேச, “ரிசல்ட்ஸ் நேத்து நைட்டே வந்துருச்சு நம்ம சப்மிட் பண்ணதுக்கு…. அதுக்கு தாண்டி பண்ணேன்” என்று கௌதம் கூறினான். “அப்படியா!!! என்ன ஆச்சு எல்லாம் ஓகேவா??? பாஸிடிவ்வா??” என்று சனந்தா ஆர்வமாக கேட்டாள்.

“எல்லாம் ஓகே ரிசல்ட்ஸ் பாசிட்டிவ் தான்…. அந்த ஹெர்ப் வெச்சு பண்ண ரீசர்ச் சக்சஸ்” என்று கௌதம் கூற, “ஹப்பாடா… அப்ப நான் ஏற்கனவே அப்ளை பண்ணி இருக்க பி.ஹெச்.டி ஃபார்ம்ல அதோட இந்த ரிசல்டும் சேர்த்து நான் அப்லோட் பண்ணிடுறேன்…. ஃபோன் இன்டர்வியூ நடந்துச்சுன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…. இல்லன்னா நான் ஊருக்கு வரைக்கும் வர வேண்டி இருக்கும் திருப்பி” என்று சனந்தா கூறினாள்.

“ஒரு நாள் தான டி வந்து அட்டென்ட் பண்ணிட்டு போயிரு…. நேர்ல வந்தா அட்மிஷனோட சேர்த்து முடிச்சுட்டு போயிடலாம்…. எங்க அமிர்தா யுனிவர்சிடில தானே அட்மிஷன் அப்ளை பண்ணி இருக்க??” என்று கௌதம் கேட்க, “ஆமாண்டா அதான் நம்ம வீட்டுக்கு கொஞ்சம் கிட்டயும் இருக்கு…. இன்டர்வியூ வேற எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல பார்க்கலாம்” என்று சனந்தா கூறினாள்.

“அவங்க ஒரு சில டேட்ஸ் கொடுப்பாங்க அதுல உன்னால எப்ப வர முடியுமோ அதுக்கு ஏத்த மாதிரி நீ இன்டர்வியூஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டு வா அவ்வளவு தானே” என்று கௌதம் கூறவும், “ம்ம்…. அப்படித் தான்டா பண்ணனும்…. எப்படியோ காலைல ஒரு நல்ல செய்தி கேட்டேன் சந்தோஷம் டா…. சரி நீ எப்ப வேலைக்கு போக போற??” என்று சனந்தா கேட்கவும், “எப்படியும் இந்த வாரத்தில் போக ஆரம்பிச்சிருவேன் தான்” என்று கௌதம் கூறினான்.

“சரி டா அப்போ ஓகே… நான் இன்னும் இந்த ரீசர்ச் சென்டர் மட்டும் ஃபிக்ஸ் பண்ணனும்…. சீனியர் இன்ட்ரோ பண்ண அட்வைசர், முரளி சார் கிட்ட தான் கேட்கலாம்னு இருக்கேன்” என்று சனந்தா கூறவும்,

“அவர் நம்ம முதல்ல இந்த ரீசர்ச் பத்தி பேசும் போதே ஒரு வேல பி.எச்.டி பண்றதா இருந்தா அத ஊட்டியிலயே பண்ணலாம்னு சொன்னாரு…. அதனால அவர் கிட்ட கேட்டா கண்டிப்பா ஊட்டியில தான் சொல்லுவாரு…. ஊட்டி தான டி கிட்ட தான்… அதனால ஒரு பிரச்சனையும் இல்ல பார்த்துக்கலாம்” என்று கௌதம் கூறினான்.

“அதுவும் சரி தான் ஒரு வேல சென்னை எல்லாம் போட்டாங்கன்னா போயிட்டு வரவே எனக்கு கஷ்டமா இருக்கும்…. அதனால இங்கேயே அட்வைசர் அண்ட் சென்டர் ஓகே ஆகிட்டா நிம்மதியா இருக்கும்…. எல்லாம் அமைஞ்சுட்டா நல்லா இருக்கும் டா” என்று சனந்தா கூறவும்,

“எல்லாம் அமையும் தான் டி…. சரி நீ கிளம்பு உனக்கு நேரம் ஆகுதுல” என்று கௌதம் கூறவும், “ஆமாண்டா நேரம் ஆகுது தான் போய் சாப்பிட்டு கிளம்பனும்…. சரி அது இருக்கட்டும் நான் அந்த கம்பெனி பத்தி கேட்டிருந்தேனே இந்த எக்ஸ்போர்ட் டீடைல்ஸ்காக அது இப்ப நீ ஜாயின் பண்ற கம்பெனியோட கன்சர்ன் தான்னு சீனியர் சொன்னாருடா, அப்படியா??” என்று சனந்தா கேட்டாள்.

“ஆமா நீ கேட்டத சீனியர் என்கிட்ட சொன்னாரு… அத பத்தின டீடெயில்ஸ் எல்லாமே அவரே உன்கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்காரு” என்று கௌதம் கூறினான். “அப்போ சரி நான் அவருக்கு ஃபோன் பண்ணிட்டு என்ன ஏதுன்னு பார்க்கிறேன் சரியா…. கிளம்புறேன் பாய்” என்று கூறி ஃபோனை வைத்தாள் சனந்தா.

சனந்தா மகேஷிடம் முக்கியமான செய்தி பேச வேண்டும் என்று குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு வள்ளி ஸ்ரீனிவாசன் விக்ரம் சரவணன் அவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டு முடித்தாள்.

“அங்கிள் நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறமா நீங்க சொன்ன வேலை எல்லாத்தையும் டிஸ்கஸ் பண்ணிடலாம்… கார்த்திக்கையும் வர சொல்றேன்” என்று சனந்தா கூற,

“சரி மா அப்படியே பண்ணிடலாம்…. சனா இப்ப கால் பரவாயில்லையா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “பரவால்ல தான் அங்கிள்…. காலையிலிருந்து நீங்களும் ஆன்ட்டியும் பத்து வாட்டி கேட்டுட்டீங்க… நல்லா இருக்கேன் பாருங்க…. நான் நல்லா தான் நடந்துட்டு இருக்கேன்…. நைட் கால் நீவி விட்டப்போ நான் உண்மையிலேயே பயந்துட்டேன் ரொம்ப வலிச்சுது…. ஆனா, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே தெரியல ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று சனந்தா கூறவும், “உனக்கு கால் சரியானா அதுவே போதும் எங்களுக்கு” என்று வள்ளி கூறினார்.

பின் சனந்தா அவளது பையை எடுத்துக் கொண்டு வருவதாக கூறி அவளுடைய அறைக்கு சென்று எடுத்து வருவதற்குள் அவளது கைபேசி ஒலித்தது. அதில் சீனியர் என்று வந்தவுடன் சரவணன் சிரித்துக் கொண்டே விக்ரமை பார்க்க விக்ரம் அவனை முறைத்து கொண்டே, “போய் கொடு” என்று கூறினான்.

“இதோ அவளே வந்துட்டா” என்று சரவணன் கூறி சனந்தாவிடம் அவளுடைய கைபேசியை கொடுக்க அவள் பேசிக் கொண்டே வாசலில் திண்ணையின் மீது அமர்ந்து கொண்டாள்.

“என்ன சனா பேசணும்னு சொன்ன??” என்று மகேஷ் கேட்கவும், “இல்ல சீனியர் ஒரு சின்ன ஹெல்ப் தான்…. நான் அப்பா சைடுலையும் இத பத்தி பேசி இருக்கேன் சீனியர்… இப்ப கௌதம் ஜாயின் ஆக போற அந்த கம்பெனியும், ஊட்டில நான் உங்களுக்கு ஒரு கம்பெனி டீடைல்ஸ் அனுப்பினேன் இல்லையா அந்த கம்பெனியும் ரெண்டுமே ஒரே குரூப் தானா??” என்று சனந்தா கேட்டாள்.

“ஆமா நீ ஏற்கனவே இதைப் பத்தி கேட்ட, நானும் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னேன்ல… ரெண்டும் ஒரே கன்சர்ன் தான் சனா… ஏன் ஏதாவது ஹெல்ப் வேணுமா??” என்று மகேஷ் கேட்கவும்,

“இல்லை இங்க தயாரிக்கிற அந்த சேஜ் ஹெர்ப் ப்ராடக்ட்ஸ் எல்லாமே எக்ஸ்போர்ட் குவாலிட்டி தான்…. அதனால தான் நான் டெஸ்டிங் கூட அனுப்பி இருந்தேன்… அதோட ரிப்போர்ட் வந்ததுக்கப்புறமா, எக்ஸ்போர்ட் பண்ணனும்னா நமக்கு இந்த கம்பெனி, கவர்மெண்ட்க்கு ப்ரொவைட் பண்ண வேண்டிய டீடைல்ஸ் இதெல்லாம் தேவைப்படும்ல”….

“ஆனா, இப்போதைக்கு கம்பெனி மாதிரி இங்க ஏற்பாடு பண்ண முடியாது…. இந்த மாதிரி ஒரு ஆல்ரெடி எக்ஸ்போர்ட் பண்ற கம்பெனி மூலமா நாங்க எக்ஸ்போர்ட் பண்ணிட்டு அவங்களுக்கு நம்ம கமிஷன் கொடுக்கிற மாதிரி பிளான் பண்ணி இருக்கோம்…. அப்படித் தான் பண்ண முடியும்னு அப்பா கிட்ட விசாரிச்சப்போ ஐடியா கொடுத்து, அந்த கம்பெனி பத்தியும் சொன்னாரு”…

“அதான் நான் கௌதம் கிட்டயும் உங்க கிட்டயும் அந்த கம்பெனி டீடெயில்ஸ் அனுப்பினேன்…. அப்ப தான் கௌதம் சொன்னான் இது அவன் சேரப் போற கம்பெனியோட கன்சர்ன் தான்னு… அது தான் உங்க கிட்ட இதுல ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்க தான் சீனியர் பண்ணேன்” என்று சனந்தா கூறினாள்.

“கேட்டுக்கோ டா… அவ இப்ப கூட ஒரு வேலை விஷயமா தான் பேசுறா…. அப்படியே பொத்துக்கிட்டு வந்துருமே உன்னோட பொசசிவ்னஸ்” என்று சரவணன் விக்ரமை கேலியாக கூற, “எனக்கு அப்படி தாண்டா நான் என்ன பண்றது…. எனக்கும் புரியுது இருந்தாலும் ஒரு சின்ன பொறாமை வருது தான் என்ன பண்றது” என்று விக்ரம் கூறினான்.

“உங்களுக்கு அட்வைசர் இன்ட்ரோடியூஸ் பண்ணேன் ஞாபகம் இருக்கா??” என்று மகேஷ் கேட்க, “என்ன சீனியர் இப்படி கேக்குறீங்க…. அவர் சொன்னதுனால தான் ரீசர்ச நானும் கௌதமும் ஸ்டார்ட் பண்ணோம்… முரளி சார் தானே….. இன்னும் சொல்ல போனா பி.ஹச்.டி க்கு கூட அவர தான் அட்வைசரா போட போறேன்” என்று சனந்தா கூறினாள்.

“அவரே தான்… அவரக்கு ஊட்டில இருக்குற நீ சொல்லுற கம்பெனிய நல்லா தெரியும்…. அவர் அங்க ஒரு பெரிய பொசிஷன்ல இருக்காரு…. நான் அவர் கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு சொல்றேன்…. இல்லன்னா அப்படியே நான் உன் நம்பருக்கே அவரை ஃபோன் பண்ண சொல்லிடுறேன் ஓகேவா??” என்ற மகேஷ் கேட்க,

“ஓகே சீனியர்!!! நான் தான் உங்களை நிறைய டிஸ்டர்ப் பண்ணிட்டேன் சாரி” என்று சனந்தா கூறவும், “அதெல்லாம் ஒன்னும் பரவால்ல சனா…. நான் பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்…. அவரையே உனக்கு ஃபோன் பண்ண சொல்றேன் சரியா” என்று மகேஷ் கூறவும், “ரொம்ப தேங்க்ஸ்…. ரொம்ப தேங்க்ஸ் சீனியர்” என்று கூறி சனந்தா ஃபோனை வைத்தாள்.

“சனா கிளம்பலையா நீ??” என்று சரவணன் கேட்க, “இல்ல நீங்க போங்க நான் அங்கிள் கிட்ட பேசிட்டு வரேன்” என்று சனந்தா கூறினாள். “அதுக்குள்ள பசங்க வந்துட்டா என்ன பண்ணுவ??” என்று விக்ரம் கேட்கவும், சரியாக ஸ்ரீனிவாசனும் வெளியே வந்தார்.

“அதுக்குள்ள பசங்க வந்தா வெயிட் பண்ணுவாங்க… இப்பல்லாம் யாரும் குறும்பு பண்றது இல்ல… அப்படியே இருந்தாலும் அங்க கார்த்திக் இருப்பான்…. ஏன்னா இன்னிக்கு ஆஃபீஸ் கிட்ட தான் ஆக்ட்டிவிட்டி” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், சரி என்று சரவணன் மற்றும் விக்ரம் புறப்பட்டனர்.

என்ன சனா?? என்று ஸ்ரீனிவாசன் கேட்க, மகேஷுடன் நடந்த உரையாடலை கூறி முடித்தாள் சனந்தா.

“அப்படியா அப்ப ஒரு வாட்டி நேர்ல வேணா போய் பார்த்துட்டு வந்துடவா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ஃபோன் வரும் அங்கிள்…. அப்படிஃ போன் பண்ணாருன்னா அதுக்கப்புறம் நம்ம நேர்ல போறதா இருந்தா நானும் உங்க கூட வரேன் நம்ம போயிட்டு வரலாம்” என்று சனந்தா கூற,

“நிறைய அலையுற…. நான் போயிட்டு வரேன்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “ஐயோ அங்கிள் நானும் கூட வரேன்… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நானும் கூட வரேன் போயிட்டு வந்துரலாம்” என்று சனந்தா கூறினாள்.

“சரிமா நான் சொன்னா நீ கேட்க மாட்ட” என்று ஸ்ரீனிவாசன் புன்னகையுடன் கூற, “அப்படிலாம் இல்ல அங்கிள்… நான் கிளம்புறேன், டைம் ஆகுது எனக்கு ஸ்கூலுக்கு” என்று சனந்தா கூறி விடை பெற்றாள்.

ஸ்ரீனிவாசன் வெளியவே இருக்கவும், “என்னங்க நீங்க போலயா?? இங்கயே உக்காந்துட்டு இருக்கீங்க??” என்று வள்ளி கேட்கவும், சனந்தாவுடன் நடந்த உரையாடலை கூறி முடித்தார்.

“அவ அப்படி தானங்க அதுல என்ன இருக்கு” என்று வள்ளி கேட்கவும், “எனக்கு சனா பத்தி தெரியும் மா அவளும் நமக்கு கஷ்டத்தோட எல்லாம் பண்ணல… ரொம்ப விருப்பப்பட்டு தான் செய்றா…. இதெல்லாம் எனக்கும் புரியுது”…..

“ஆனா, விக்ரம் ஏம்மா இப்படி இருக்கான்… நேத்து சனா அப்படி அலற்ரா வலியில… எதிர்கவே தான் உட்கார்ந்து இருக்கான் விக்ரம் ஒரு கையையாவது புடிக்கிறானா…. அவளையே ஆன்னு பார்த்துட்டு தான் இருந்தான்…. சரி அதைக் கூட விடு….. என் கிட்ட பேச தான் வெயிட் பண்ணா…. அதுக்கே பசங்க வந்துட்டா என்ன பண்ணுவ அப்படின்னு குரலை ஒசத்தி கேட்குறான்மா” என்று ஸ்ரீனிவாசன் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 94
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.