CHAPTER-9

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
தொட‌ர்ந்து 15 நாட்க‌ள் ச‌ந்ராவின் த‌வ‌ம் தொட‌ர‌, அது வ‌ரை அர்ஜுனின் உட‌ல் அழுகாம‌ல் அந்த‌ சாமியார் கூறிய‌ சில‌ மூலிகைக‌ள் அவ‌னை காத்த‌து.

ச‌ந்ராவின் த‌வ‌ நாட்க‌ளில் 15வ‌து நாள் முடியும் த‌ருவாயில் அவ‌ள் உட‌லிலோ எந்த‌ ஒரு அசைவும் இல்லாம‌ல் இருக்க‌, க‌ண்க‌ளோ மூடிய‌து மூடிய‌ப‌டியே இருக்க‌, உட‌லோ க‌ற்சிலை போல் இருந்த‌ நிலை மாறாம‌ல் அம‌ர்ந்திருந்தாள்.

அப்போது "சந்ரா!" என்ற‌ ஒரு குர‌ல் ஒலிக்க‌,

அப்போதே க‌ற்சிலையாய் அம‌ர்ந்திருந்த‌வ‌ளின் தேக‌ம் அசைவை உண‌ர்ந்த‌து. சந்ராவின் த‌வ‌ம் மெல்ல‌ க‌லைந்து, அவ‌ள் க‌ண்க‌ள் மெல்ல‌ அசைந்து மெல்ல‌ மெல்ல‌ திற‌ந்த‌து. அப்போது த‌ன் முன் தெரிந்த‌ காட்சியை பார்த்த‌வ‌ளுக்கு பெரும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து.

த‌ன் முன் நிற்கும் மாபெரும் பிர‌ம்மாண்ட‌ சிவ‌ன் சிலையின் பின்னால் ஒரு ஒளி ம‌ட்டுமே வீச‌, அதை பார்த்த‌ அவ‌ளின் க‌ண்க‌ள் கூசிய‌து. என‌வே த‌ன் கைக‌ளால் க‌ண்க‌ளை ம‌றைத்த‌வ‌ள், உட‌னே எழுந்து நிற்க‌ முய‌ற்சிக்க‌, கால்க‌ளோ நிலை த‌டுமாறிய‌து. உட‌லிலும் தெம்பே இல்லாத‌ நிலைதான். ஆனாலும் அந்த‌ குர‌ல் அவ‌ளுக்கு தெம்பாய் மாற‌, த‌ட்டு த‌டுமாறி எழுந்து நின்று கைக‌ளை கூப்பிய‌வ‌ள், அப்போதே அது யாருடைய‌ குர‌ல் என்று உண‌ர்ந்துக்கொண்டாள்.

"ஈஷ்வரா! இ..இது நீங்கதான? நா கனவு காணலல்ல?" என்று க‌ண்ணீருட‌ன் த‌ன் க‌ண்க‌ளை தானே ந‌ம்ப‌ முடியாம‌ல் கேட்க‌, அப்போதும் அவ‌ள்ன் ம‌ன‌தின் ஒரு ஓர‌த்தில் இது க‌ன‌வென்றே தோன்றிய‌து.

"இது கனவல்ல ச‌ந்ரா." என்றார் சிவ‌ப்பெருமான்.

அதை கேட்டு மேலும் க‌ண்க‌ள் க‌ல‌ங்கிய‌வ‌ள், த‌ன் வாழ்வில் ச‌ற்றும் எதிர்ப‌ர்த்திராத‌ த‌ருண‌த்தில் இன்று நிற்ப‌தை உண‌ர்ந்து பேரான‌ந்த‌ம் கொண்டாள். அதே நேர‌ம் அந்த‌ அள‌விற்கு தான் த‌குதியான‌வ‌ளா என்று க‌ண்ணீரும் சிந்தினாள்.

அப்போது அவ‌ள், "ஈஷ்வ‌ரா! இது க‌ன‌வில்ல‌ன்னு நா ந‌ம்புறேன். இவ்ளோ பெரிய‌ பாக்கிய‌ம் என‌க்கு கெடைக்கும்னு நா கொஞ்ச‌ங்கூட‌ எதிர்பாத்த‌து இல்ல‌. ஆனாலும் நா ஏ இவ்ளோ தூர‌ம் அர்ஜுனுக்காக‌ வ‌ந்தேன்னும் என‌க்கு தெரிய‌ல‌. என் வாழ்க்கையில‌ எல்லாமே ட‌க்கு ட‌க்குனு ந‌ட‌ந்து முடிஞ்ச‌ மாதிரி இருக்கு. திரும்ப‌ யோசிச்சா என‌க்கு ஒன்னுமே புரிய‌ மாட்டிங்குது. இப்ப‌ நா நிக்கிற‌ இந்த‌ நிமிஷ‌ங்கூட‌ வெறும் கேள்விக‌ளையும் கொழ‌ப்ப‌ங்க‌ளையும் ம‌ட்டுந்தா சொம‌ந்து நிக்கிறேன். இது எல்லாத்துக்கும் நீங்க‌ ஒரு தீர்வா இருப்பீங்க‌ன்னு நா ந‌ம்புறேன். அந்த‌ ந‌ம்பிக்கைய‌ பொய்யாக்கிறாதீங்க‌ ஈஷ்வ‌ரா." என்று க‌ண்ணீருட‌ன் கூற‌,

சிவ‌ப்பெருமான், "ச‌ந்ரா! உன்னுடைய‌ அனைத்து கேள்விக‌ளுக்கும் குழ‌ப்ப‌ங்க‌ளுக்கும் கால‌மே தீர்வாக‌ அமையும். அது வ‌ரை நீ பொறுமையாக‌ காத்திருக்க‌ வேண்டும். ஏனென்றால் அனைத்தும் கால‌த்தால் தான் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து." என்றார்.

அதை கேட்டு மேலும் குழ‌ம்பிய‌ ச‌ந்ரா, "என‌க்கு புரிய‌ல‌ ஈஷ்வ‌ரா. இப்போ ந‌ட‌க்குற‌தெல்லா என்ன‌? மொத‌ல்ல‌ என் குடும்ப‌ம், அப்ற‌ம் என் அப்பா, இப்போ அர்ஜுன். இப்பிடி தொட‌ர்ந்து என் வாழ்க்கையில‌ சாவ ம‌ட்டுமே நா பாத்துகிட்டிருக்கேன். இதுக்கெல்லா என்ன‌ அர்த்த‌ம்? இத்த‌ன‌ நாள் வ‌ராத‌ நீங்க‌, அர்ஜுனுக்காக‌ ம‌ட்டும் ஏ வ‌ந்தீங்க‌? என் குடும்ப‌ம் அழியும்போதே அந்த‌ சாமிஜிய‌ ஏ நா பாக்க‌ல‌? உங்க‌ மேல‌ அவ்வ‌ள‌வு ப‌க்தியா இருந்த‌ என் அப்பாவ‌ ஏ எடுத்துகிட்டீங்க‌? என‌க்கு ப‌தில் வேணும் ஈஷ்வ‌ரா." என்று த‌ன் ம‌ன‌தில் உள்ள‌ அனைத்து கேள்விக‌ளையும் ஆத‌ங்க‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்தாள்.

அத‌ற்கு சிவ‌ப்பெருமான், "நான் ஏற்க‌ன‌வே கூறிய‌துதான் ச‌ந்ரா. உன்னுடைய‌ இந்த‌ எல்லா கேள்விக‌ளுக்கும் கால‌ம்தான் தீர்வு. அத‌ற்கு உன் பொறுமையே ஒரே வ‌ழி. பொறுமை கொள்." என்றார்.

அதை கேட்டு மேலும் க‌ல‌ங்கி நின்ற‌வ‌ள், "த‌ய‌வு செஞ்சு இதுக்கு ம‌ட்டும் ப‌தில் சொல்லுங்க‌ ஈஷ்வ‌ரா." என்று குமுறிய‌வ‌ள், "என‌க்கும் அர்ஜுனுக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்? அவ‌ன் எதுக்காக‌ என‌க்காக‌ அவ‌னோட‌ உயிர‌ குடுக்க‌ணும்? அவ‌னுக்காக‌ நா ஏ இங்க‌ வ‌ர‌ணும், நீங்க‌ ஏ என் முன்னாடி வ‌ர‌ணும்? என் வாழ்க்கையில‌ என்ன‌தா ந‌ட‌க்குது? இல்ல‌ நா க‌ன‌வு க‌ண்டுகிட்டிருக்க‌னா?" என்று பெரும் குழ‌ப்ப‌த்துட‌ன் கேள்விக‌ளை அடுக்கினாள்.

சிவ‌ப்பெருமான், "விதி ம‌க‌ளே! அதுதான் உன் விதி. யார் யாரோ அவ‌ர்க‌ளின் வாழ்வை கால‌த்தின் உத‌வியால் ஒன்றாக‌ இணைப்ப‌தே விதி. அது ஒருவ‌ரின் வாழ்வில் தென்ற‌லாக‌வும் வீச‌லாம், புய‌லாக‌வும் வீச‌லாம். அதுதான் உன் வாழ்வில் இப்போது வீசிக்கொண்டிருக்கிற‌து. அத‌ன் ஆர‌ம்ப‌ம் ஆப‌த்தாக‌ இருந்தாலும் அத‌ன் முடிவு அமைதியாக‌வே இருக்கும். உன் வாழ்விலும் அது நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்கும். அதை ம‌ட்டும் நீ ந‌ம்பு." என்றார்.

அதை கேட்டு த‌ன் ம‌ன‌தை ச‌ம‌நிலைப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ள், "செரிங்க‌ ஈஷ்வ‌ரா. உங்க‌ வார்த்தைய‌ நா மூழுசா ந‌ம்புறேன். ஆனா இப்ப‌க்கூட‌ என‌க்காக‌ ஒரு உயிர் இருக்குன்னு உண‌ர்த்துன‌து நீங்க‌தா. அந்த‌ உயிர‌ எங்கிட்ட இருந்து ப‌றிச்சிராதீங்க‌. அர்ஜுனையாவ‌து என‌க்கு திரும்ப‌ குடுங்க‌ ஈஷ்வ‌ரா." என்று க‌ண்ணீர்விட்டாள்.

அப்போது சிவ‌ப்பெருமானின் கால‌டியிலிருந்து ஒரு நாக‌ம் புற‌ப‌ட்ட‌து. அது நேராக‌ அர்ஜுனின் அருகில் சென்று அவ‌ன் மீது போர்த்த ப‌ட்டிருந்த‌ மூலிகைக‌ளில் ஒன்றை நோக்கி, த‌ன் விஷ‌ காற்றை வெளியிட்ட‌து. அந்த‌ காற்று ப‌ட்ட‌தும் அந்த‌ ஒரு மூலிகையின் நிற‌ம் ம‌ட்டும் அட‌ர் ப‌ச்சையாக‌ மாறுவ‌தை க‌ண்டாள் ச‌ந்ரா.

அப்போது சிவ‌ப்பெருமான், "இதுவே உன் த‌வ‌த்திற்கான‌ வ‌ர‌ம். அந்த‌ மூலிகையை எடுத்து உன் உள்ள‌ங்கைப்ப‌ட‌, அவ‌ன் நெற்றியில் வை. உன் எண்ண‌ம் நிறைவேறும்." என்று கூறிய‌ப‌டியே அந்த‌ ஒலியும் ஒளியும் இர‌ண்டும் ம‌றைந்துவிட்ட‌து.

பிற‌கு சிவ‌ப்பெருமானின் சிலையை க‌ண்ணீருட‌ன் ந‌ன்றி என்று வ‌ண‌ங்கிய‌வ‌ள், அப்ப‌டியே திரும்பி அர்ஜுனின் அருகிலிருந்து அந்த‌ நாக‌த்தையும் வ‌ண‌ங்கினாள். த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையை முடித்துவிட்ட‌ அந்த‌ நாக‌மும் வ‌ந்த‌ வ‌ழியே சென்று, சிவ‌னின் காலடையில் உள்ள‌ பொந்துக்குள் சென்று ம‌றைந்த‌து.

அதை பார்த்த‌ ச‌ந்ரா சிவ‌ப்பெருமான் கூறிய‌வாரே அவ‌ன் உட‌லில் இருந்த‌ முலிகைக‌ளில் அந்த‌ அட‌ர் ப‌ச்சை நிற‌ மூலிகையை த‌னியாக‌ பிரித்து, அவ‌ற்றை த‌ன் உள்ள‌ங்கையில் வைத்து அழுத்திய‌வாரே, அவ‌ன் நெற்றியில் ப‌தித்து, த‌ன் க‌ண்க‌ளை மூடி சிவ‌னை வேண்டினாள். பிற‌கு ந‌ம்பிக்கையோடு த‌ன் க‌ண்க‌ளை மெல்ல திற‌ந்தவ‌ள், அர்ஜுனை உற்று நோக்க‌, அவ‌னோ எழ‌வே இல்லை. அதை பார்த்து ப‌த‌றிய‌ ச‌ந்ரா மீண்டும் அதேப்போல் செய்ய‌, அப்பொழுதும் அவ‌ன் உட‌லில் சிறு அசைவைக்கூட‌ காணாத‌வ‌ளுக்கு அழுகைதான் வ‌ந்த‌து.

"ஏ அர்ஜுன் எந்திரிக்க‌ மாட்டிங்குற‌? ப்ளீஸ் க‌ண்ண‌ தெற‌ந்து என்ன‌ பாரு." என்று அவ‌னை உலுக்கிய‌ப‌டி க‌த‌றி அழுதாள். அவ‌னோ அப்பொழுதும் சிறு அசைவில்லாம‌ல் கிட‌க்க‌, மேலும் ப‌ய‌ம் எழ, "அர்ஜுன் ப்ளீஸ். நீயும் என்ன‌விட்டு போயிராத‌. இப்போ என‌க்கு இருக்குற‌து நீ ம‌ட்டுந்தா அர்ஜுன். ப்ளீஸ் க‌ண்ண‌ தெற‌ந்து பாரு. என‌க்காக‌ க‌ண்ண‌ தெற‌." என்று க‌த‌றி அழ‌, அப்போது அவ‌ளின் க‌ன்ன‌ம் தாண்டிய‌ க‌ண்ணீர் அவ‌னின் நெற்றியில் இருந்த‌ மூலிகையில் க‌ல‌ந்த‌து.

அடுத்த‌ நொடி இருமிய‌வ‌ன், "ச‌ந்ரா!" என்றான் விழிக‌ளை அசைத்த‌ப‌டி.

அதை கேட்டு திடுக்கிட்டு அவ‌னை பார்த்த‌வ‌ள், பெரும் நிம்ம‌தியுட‌ன், "அர்ஜுன்! நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌? உன‌க்கு ஒன்னும் ஆகாது அர்ஜுன். நா ஆக‌ விட‌மாட்டேன்." என்று கூறிய‌ப‌டி அவ‌ன் க‌ன்ன‌ம் ப‌ற்ற‌,

அதை கேட்டு மெல்ல‌ த‌ன் இமைக‌ளை பிரித்த‌வ‌ன், க‌ண்க‌ளை திற‌ந்து அவ‌ளை பார்த்து, "ச‌ந்ரா!" என்றான் கேள்வியுட‌ன்.

அதை கேட்டு அவ‌ன் க‌ர‌த்தை இறுக‌ ப‌ற்றிய‌வ‌ள், "உன‌க்கு ஒன்னும் இல்ல‌ அர்ஜுன். நீ ந‌ல்ல‌ இருக்க‌." என்றாள் அழுத்த‌மாக‌.

அதை கேட்டு குழ‌ம்பிய‌வ‌ன், தோட்டா பாய்ந்த‌ த‌ன் இத‌ய‌ ப‌குதியை ஆடையை ச‌ற்று வில‌கி சோதித்து பார்க்க‌, அவ்விட‌த்தில் தோட்டா பாய்ந்த‌த‌ற்கான‌ த‌ட‌ய‌மே இல்லாம‌ல் இருந்த‌து. அதை பார்த்து அதிர்ந்த‌வ‌ன், "என்ன‌ இது?" என்ற‌ப‌டி மெல்ல‌ எழுந்து சுற்றியும் க‌வ‌னிக்க‌, அப்போதுதான் தான் இருப்ப‌து ம‌ருத்துவ‌ம‌னைய‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து, "இது என்ன‌ எட‌ம்? நாம‌ எங்க‌ இருக்கோம்?" என்று குழ‌ப்ப‌த்துட‌ன் கேட்க‌, அடுத்த‌ நொடியே அவ‌னை க‌ட்டிக்கொண்டு க‌த‌றி அழுதாள் ச‌ந்ரா.

அவ‌னோ ஒன்றும் புரியாம‌ல் அவ‌ளை அணைத்த‌ப‌டி, "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா. எதுக்காக‌ அழ‌ற‌?இது என்ன‌ எட‌ம்? அதோட‌ என் காய‌ம் எப்பிடி செரியாச்சு?" என்று குழ‌ப்ப‌த்துட‌ன் கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா அவ‌ன் அணைப்பிலிருந்த‌ப‌டியே ந‌ட‌ந்த‌ அனைத்தையும் ஒன்றுவிடாம‌ல் கூறினாள். ஆனால் அதை கேட்ட‌ அர்ஜுனுக்கோ இதெல்லாம் ச‌ற்றும் ந‌ம்ப‌ முடிய‌வில்லை.

"என்ன‌ சொல்ற‌? இதெல்லா எப்பிடி?" என்று குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ன் யோசிக்க‌,

"என‌க்கும் ஒன்னும் புரிய‌ல‌ அர்ஜுன். க‌ண் இமைக்குற‌துள்ள‌ எல்லாமே ந‌ட‌ந்து முடிஞ்ச‌ மாதிரி இருக்கு. இப்ப‌க்கூட‌ எல்லாத்தையும் நென‌ச்சா க‌ன‌வு மாதிரிதா இருக்கு." என்றாள் ச‌ந்ரா.

அதை கேட்டு மேலும் குழ‌ம்பிய‌வ‌ன், அப்போதுதான் அங்கு நிற்கும் பிர‌ம்மாண்ட‌ சிவ‌ன் சிலையை க‌வ‌னிக்க‌, அவ‌ன் கால்க‌ள் தானாய் எழுந்து நிற்க‌, அவ‌னின் கைக‌ளும் ஒன்றாய் சேர்ந்து அவ‌ரை வ‌ண‌ங்கிய‌து. பிற‌கு க‌ண்க‌ளை மூடி அவ‌ரை வ‌ண‌ங்கி வேண்டிக்கொண்ட‌வன், "என் பாஸ் அடிக்க‌டி சொல்லுவாரு. ந‌ம்ப‌ முடியாத சில‌ விஷ‌ய‌ங்க‌ள் உன் வாழ்கையில‌ ந‌ட‌க்கும்போது, நீ க‌ண்டிப்பா அந்த‌ க‌ட‌வுள் இருக்காருன்னு ந‌ம்புவ‌ன்னு. இப்போ ந‌ம்புறேன்." என்று த‌ன‌க்குள் கூறினான்.

அர்ஜுன் ப‌ல‌ முறை லிங்கேஷ்வ‌ர‌னுட‌ன் கோவிலுக்கு சென்றிருந்தாலும், பெய‌ருக்குதான் வ‌ண‌ங்குவானே த‌விற‌, என்றும் ம‌ன‌தார‌ அவ‌ரை வ‌ண‌ங்கி நின்ற‌தில்லை. சிறுவ‌ய‌திலிருந்து அவ‌னும் த‌ன் தாய் த‌ந்தையிட‌ம் ப‌ல‌ புராண‌ க‌தைக‌ளை கேட்டிருக்கிறான். அதிலும் சிவ‌ன்தான் அவ‌னின் இஷ்ட‌ தெய்வ‌ம். அதோடு அவ‌ர் மீது அள‌வில்லா ப‌க்தியும் அவ‌னுக்கு இருந்த‌து. த‌ன‌க்கு எது வேண்டுமானாலும் சிவ‌னிட‌ம்தான் முத‌லில் கேட்பான். அவ்வாறுதான் அன்று த‌ன் எழு வ‌ய‌தில், த‌ன் குடும்ப‌மே உயிருக்கு போராடும் நிலையில் ம‌ருத்துவ‌ம‌னையில் இருக்கும்போது, அவ‌ர்க‌ளை திரும்ப‌ த‌ந்துவிடுமாறு சிவ‌னிட‌ம் வேண்டினான். அதுதான் க‌டைசியாக‌ அவ‌ன் சிவ‌னை வ‌ண‌ங்கிய‌து. பிற‌கு அவ‌ர்க‌ள் இற‌ந்த‌ செய்தியை கேட்ட‌ நொடியே வ‌ண‌ங்கிய‌ கைக‌ளை கீழே இற‌க்கிய‌வ‌ன், அத‌ன் பின் என்றுமே அந்த‌ கைக‌ளை உய‌ர்த்த‌வில்லை. அன்று த‌ன் மொத்த‌ குடும்ப‌த்தையும் இழ‌ந்தவ‌ன், க‌ட‌வுளின் மீதுள்ள‌ மொத்த‌ ந‌ம்பிக்கையையும் இழ‌ந்திருந்தான்.

அப்போது ச‌ந்ராவும் அவ‌ன் அருகில் சென்று நின்று க‌ண்க‌ளை மூடி, "என்னோட‌ எல்லா கொழ‌ப்ப‌த்தும் சீக்கிர‌மே ப‌தில் கெடைக்கும்னு நா ந‌ம்புறேன்." என்று ம‌ன‌தினுள் கூறிக்கொண்ட‌வ‌ளுக்கு, ப‌ல‌ கேள்விக‌ள் ஓயாம‌ல் ம‌ன‌தினுள் ஓடிக்கொண்டேதான் இருந்த‌து.

அதே நேர‌ம் அர்ஜுன், "நீங்க‌ எதுக்காக‌ என் குடும்ப‌த்துக்காக‌ நா கூப்புட்ட‌ப்போ வ‌ர‌ல‌ன்னு என‌க்கு தெரிய‌ல‌. ஆனா இன்னிக்கு என‌க்காக‌ ச‌ந்ரா கூப்புட்ட‌ப்போ வ‌ந்திருக்கீங்க‌. இதுக்கான‌ அர்த்த‌ம் பாஸ் என‌க்கு குடுத்த‌ வேலைய‌ நா முழுசா முடிக்க‌ணுங்குற‌துதான்னு என‌க்கு தோனுது. அத‌ நா முழுசா ந‌ம்புறேன். க‌ண்டிப்பா ச‌ந்ராவுக்கு நா ஒரு பாதுகாப்பு அர‌னா இருப்பேன். அவ‌ளுக்கு வ‌ர‌ போற‌ எந்த‌ ஆப‌த்தும் என்ன‌ தாண்டிதா அவ‌கிட்ட‌ போக‌ முடியும். இனி அவ‌ளுக்கு எல்லாமாவும் நானே இருப்பேன். என் பாஸ்க்கு குடுத்த‌ ச‌த்திய‌த்த‌ நா க‌டைசி வ‌ரைக்கும் காப்ப‌த்துவேன். இது உங்க‌ முன்னாடி நா செய்யிற‌ ச‌த்திய‌ம்." என்று த‌ன‌க்குத்தானே ச‌த்திய‌ம் செய்த‌ப‌டி க‌ண்க‌ளை திற‌ந்தான்.

அப்போதே ச‌ந்ராவும் க‌ண்க‌ளை திற‌க்க‌, அர்ஜுன் அவ‌ளை பார்த்து, "இது வ‌ரைக்கும் ந‌ட‌ந்த‌ எத‌ ப‌த்தியும் நாம‌ யோசிக்க‌ வேண்டா ச‌ந்ரா. இனி ந‌ம‌க்கான‌ புது வாழ்கைய‌ நாம‌ ஆர‌ம்பிக்க‌ணும்." என்றான்.

அதை கேட்டு கேள்வியுட‌ன் அவ‌னை பார்த்த‌வ‌ள், "என்ன‌ சொல்ற‌ அர்ஜுன்? அப்போ உன்ன‌ ஷூட் ப‌ண்ண‌து யாருன்னு க‌ண்டுபுடிக்க‌ வேண்டாமா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "அவ‌ங்க‌ யாரா வேணுன்னாலும் இருக்க‌ட்டும். இப்ப‌ நாம‌ உயிரோட‌ இருக்குற‌து அவ‌ங்க‌ளுக்கு தெரியாதில்ல‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "ம்ம்" என்றாள் கேள்வியுட‌ன்.

அர்ஜுன், "அது அப்பிடியே இருக்க‌ட்டும். நாம‌ இங்கிருந்து போய‌ராலாம். ந‌ம்ப‌ பாஸ்ட் ந‌ம்ப‌ள‌ நெருங்க‌ முடியாத‌ எட‌த்துக்கு நாம‌ போய‌ராலாம்." என்றான்.

அதை கேட்டு மேலும் கேள்வியுட‌ன் அவ‌னை பார்த்த‌வ‌ள், "என‌க்கு புரிய‌ல‌ அர்ஜுன். நீ என்ன‌ சொல்ற‌? நாம‌ எதுக்காக‌ ஓட‌ணும்? அதோட‌ எங்க‌ போலான்னு சொல்ற‌?" என்று கேட்க‌,

அர்ஜுன், "நா உன‌க்கு எல்லாத்தையும் சொல்றேன் ச‌ந்ரா. ஆனா இங்க‌ வெச்சு இல்ல‌. நீ மொத‌ல்ல‌ என்கூட‌ வா." என்று அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றி அழைக்க‌,

அவ‌ளோ ந‌ட‌க்க‌ முடியாம‌ல் த‌டுமாறி அவ‌ன் மீதே விழ, உட‌னே அவ‌ளை தன் மார்பில் தாங்கிய‌வ‌ன், "என்ன‌ ஆச்சு உன‌க்கு?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா சோர்வுட‌ன், "என‌க்கு தெரிய‌ல‌ அர்ஜுன். நா எத்த‌ன‌ நாளா இங்க‌ இருந்த‌ன்னு என‌க்கே சுத்த‌மா தெரிய‌ல‌. ஒட‌ம்புல‌ தெம்பே இல்லாத‌ மாதிரி இருக்கு." என்றாள்.

அதை கேட்டு குழ‌ம்பிய‌வ‌ன், "ப‌ட் என‌க்கு ஏ அப்பிடி இல்ல‌?" என்று யோசிக்க‌,

ச‌ந்ரா, "ஏன்னா அந்த‌ சிவ‌ப்பெருமான் உன‌க்கு ச‌க்திய‌ குடுத்திருக்காரு. இது உன்னோட‌ புது பிற‌ப்பு." என்றாள்.

அதை கேட்டு யோச‌னையுட‌ன் அவ‌ளை பார்த்த‌வ‌ன், "செரி அப்போ நானே உன்ன‌ தூக்கிட்டு போறேன்." என்று கூறி ச‌ற்றும் யோசிக்காம‌ல் அவ‌ளை தூக்கி த‌ன் கையில் ஏந்திக்கொண்டான்.

அதில் திடுக்கிட்ட‌வ‌ள், "இல்ல‌ அர்ஜுன் ப‌ர‌வால்ல‌. நாம‌ வ‌ந்த‌ கார் வெளிய‌தா இருக்கு. நானே மெதுவா நட‌ந்து வ‌ர்றேன்." என்றாள்.

அத‌ற்கு அர்ஜுன் சாத‌ர‌ண‌மாக‌, "வெளியில‌ வ‌ரைக்கும்தான‌? நானே தூக்கிட்டு போறேன்." என்று அவ‌ளை தூக்கி சென்றான்.

அவ‌ன் எந்த‌ உண‌ர்வும் காட்டாம‌ல் சாத‌ர‌ண‌மாக‌தான் தூக்கி சென்றான், ஆனால் ச‌ந்ராவிற்குதான் இது ஒரு புது உண‌ர்வை த‌ட்டி எழுப்பிய‌து.

பிற‌கு அவ‌ளை காருக்கு அருகில் சென்று இற‌க்கிவிட்ட‌வ‌ன், காரின் க‌த‌வை திற‌ந்து அவ‌ளை அம‌ர‌ வைத்துவிட்டு, "நானே ட்ரை ப‌ண்றேன்." என்று கூறி ஓட்டுந‌ர் இருக்கையில் சென்று அம‌ர்ந்தான்.

அப்போது ச‌ந்ரா, "அர்ஜுன் நாம‌ எங்க‌ போறோம்?" என்று கேட்க‌,

அர்ஜுன், "சொல்றேன்." என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தான்.

அவ‌ன் காரை ஸ்டார்ட் செய்த‌ நொடி, மீண்டும் அந்த‌ ப‌ய‌ங்க‌ர‌ காற்று வீச‌ ஆர‌ம்பிக்க‌, அத‌னால் அந்த‌ கோவிலின் ம‌ணிக‌ள் அனைத்தும் ஒன்றுட‌ன் ஒன்று மோதி மீண்டும் ஒலி எழுப்ப‌ ஆர‌ம்பித்த‌து. அதை கேட்ட‌தும் ச‌ந்ராவிற்கும் மீண்டும் அந்த‌ அச்சுறுத்தும் காட்சிக‌ள் நினைவிற்கு வ‌ர‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌ள் க‌ண்க‌ளுக்கு இர‌த்த‌ க‌ரையும் க‌த‌ற‌ல்ச‌த்த‌மும் அதிக‌மாக‌ கேட்க‌ ஆர‌ம்பித்த‌து. அதை ச‌ற்றும் தாங்க‌ முடியாம‌ல் த‌ன் த‌லையை இறுக‌ ப‌ற்றிய‌வ‌ள், "என்ன‌ ஆச்சு என‌க்கு?" என்று இறுகிய‌ குர‌லில் கூற‌,

அதை பார்த்து ப‌த‌றிய‌ அர்ஜுன், "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா?" என்று கேட்க‌,

அத‌ற்கு த‌ன் த‌லையை ப‌ற்றிய‌ப‌டியே, "ஒன்னும் இல்ல‌ அர்ஜுன். நாம‌ சீக்கிர‌மா இங்கிருந்து போலாம்." என்று ம‌ட்டும் கூறினாள். அதை கேட்ட‌ அர்ஜுனும் உட‌னே காரை அங்கிருந்து இய‌க்கினான்.

ச‌ந்ராவின் இந்த‌ நினைவுக‌ளுக்கு அர்த்த‌ம் என்ன‌? அது இவ‌ளை அச்சுறுத்துவ‌து ஏன்? அர்ஜுன் இவ‌ளை எங்கு அழைத்து செல்கிறான்? யாருக்கும் கிடைக்காத‌ சிவ‌னின் த‌ரிச‌னும், அந்த‌ மூலிகையும் ச‌ந்ராவுக்கு கிடைக்க‌ கார‌ண‌ம் என்ன‌? த‌ன் மொத்த‌ குடும்ப‌த்தை இழ‌ந்து நிற்கும்போது த‌ரிச‌ன‌ம் த‌ராத‌ சிவ‌ப்பெருமான், அர்ஜுனுக்காக‌ இற‌ங்கி வ‌ந்த‌து ஏன்? கால‌ம் இவ‌ர்க‌ளை எங்கு அழைத்து செல்ல‌ போகிற‌து? இவ‌ர்க‌ள் இவ‌ருக்குமான‌ ப‌ந்த‌ம்தான் என்ன‌? இவ‌ர்க‌ளின் பூர்வ‌ ஜென்ம‌ க‌தைதான் என்ன‌? என்ற‌ ந‌ம் எல்லா கேள்விக‌ளுக்கும் கால‌மே தீர்வாக‌ அமையும்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.