அத்தியாயம் 8: இவன் கிட்ட என்னமோ இருக்கு
பிரியா இசையையும், ராகுலையும், தன்னுடன் அழைத்து கொண்டு அவள் தன் அம்மாவை தான் அட்மிட் செய்து இருக்கும் டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலைக்கு வந்து சேர்ந்தாள்.
அவர்கள் வருவதை கவனித்த அங்கு வேலை செய்யும் நர்ஸ் பிரியாவை கோபமாகபமாக பார்த்து
“என்ன மா நீ பாட்டுக்கு உங்க அம்மாவ இங்க அட்மிட் பண்ணிட்டு..
உன்னோட ஃபோன் நம்பரை கூட குடுக்காம அப்படியே கிளம்பி போயிட்ட..??
அவங்களுக்கு ஏதாவது எமர்ஜென்ஜின்னா நாங்க எப்படி உங்களை காண்டாக்ட் பண்றது..??
கொஞ்சமாவது ரெஸ்பான்சிபிலா இருக்க மாட்டீங்களா..??
காலையில போனவங்க..
இப்ப தான் வரீங்க.
நீ தான் இப்படி தான் இருப்பன்னா உங்க அம்மாவ பேசாம வேற எங்கேயாவது கொண்டு போய் அட்மிட் பண்ணிக்கோ.
நான் அப்பவே பேசாம போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஃபார்ம் பண்ணிடலாம்னு சொன்னேன்.
பெரிய டாக்டர் தான் எப்படியும் அந்த பொண்ணு வரும்னு, உன் மேல நம்பிக்கை வச்சு உங்க அம்மாவ இவ்ளோ நேரம் இங்க இருக்க விட்டாரு." என்று பொறிந்து தள்ளினாள்.
“ஐயையோ.. ப்ளீஸ் சிஸ்டர்...
அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க.
சாரி.. என் மேலயும் தப்பு இருக்கு.
நான் அத இல்லைன்னு சொல்லல.
ஆனா என் சிச்சுவேஷனையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்..
உங்க ஹாஸ்பிடலை பத்தி நிறைய பேர் நல்ல விதமா சொல்றத கேள்வி பட்டிருக்கேன்.
அதனால தான் எங்க அம்மா இங்க இருந்தா, சீக்கிரம் சரி ஆயிடுவாங்கன்ற நம்பிக்கையில அவங்கள இங்க அட்மிட் பண்ணி இருக்கேன்.
நான் இன்னைக்கு காலையில தான் இந்த ஊருக்கு முதல் தடவயா வந்தேன்.
எனக்கு இங்க யாரையுமே தெரியாது.
நாங்க பஸ்ல வரும்போது என் மொபைல் ஃபோனும் தொலைஞ்சு போயிருச்சு.
நான் புதுசா ஃபோன் வாங்கி, நாங்க தங்கறதுக்கு வீடு பாத்து, எனக்கு ஒரு வேலை தேடி, எல்லாத்தையும் ரெடி பண்றதுக்கு, எனக்கு இவ்ளோ நேரம் ஆயிடுச்சு." என்று எதை சொன்னால், அவளை சமாளிக்க முடியுமோ சரியாக அதை சொல்லி அவளுடைய வாயை அடைத்து விட்டாள் பிரியா.
அவள் சொன்னதை கேட்ட அந்த நர்சருக்கு அவள் மீது மரியாதையும், கூடவே கொஞ்சம் இறக்கமும் தோன்றியது.
அதனால் அவள் “நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது மா.
உன் இடத்துல இருந்து பாத்தா இவ்வளோத்தையும் இந்த சின்ன வயசுல சமாளிக்கிறது கஷ்டம் தான்.
ஆனா, இங்க ஹாஸ்பிடலுக்குன்னு ஒரு புரோசிஜர் இருக்குல்ல..
நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா அத நாங்க தானே ஃபேஸ் பண்ணனும்..?? அத நீங்களும் புரிஞ்சுக்கணும்." என்று கனிவாக சொன்னாள்.
“புரியுது சிஸ்டர். இனிமே இந்த மாதிரி எந்த தப்பும் நடக்காம நான் பாத்துக்கிறேன்.
நான் இங்க பக்கத்துல தான் வீடு பாத்து இருக்கேன்.
சோ ஒன்னும் பிரச்சனை இல்ல.
இனிமே நான் அடிக்கடி வந்து அம்மாவ பாத்துட்டு போறேன்.
நான் டாக்டருக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிருங்க." என்று பிரியா சொல்ல,
“அதெல்லாம் இருக்கட்டு மா.
முதல்ல வந்து அந்த ஃபார்ம் ஐ முழுசா fill பண்ணி குடு." என்றாள் நர்ஸ்.
“Yeah sure, குடுங்க." என்ற பிரியா அந்த நர்ஸிடம் இருந்து அட்மிஷன் ஃபார்ம் ஐ வாங்கி அதில் இசையுடைய வீட்டின் அட்ரஸை அவனிடம் கேட்டு எழுதினாள்.
பின் பிரியா இப்போது வைத்து இருக்கும் அவனது மொபைல் நம்பரையும் கேட்டு அதை எழுதிக் கொடுத்தாள்.
அதில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து பார்த்த நர்ஸ் பின் பிரியாவை பார்த்து, “நீங்க இப்ப அட்மிஷன் பீஸ் 5,000 பே பண்ணிருக்கனால, இந்த மந்த்க்கு மட்டும் நீங்க 12,000 பே பண்ணா போதும்.
நெக்ஸ்ட் மந்த்ல இருந்து மந்த்லி 15,000 பே பண்ணிடுங்க.
நீங்க அந்த மாசம் முடியறதுக்குள்ள காச பிரிச்சு பிரிச்சு கூட கட்டலாம்.
ஆனா நீங்க அந்த மாசம் முடியறதுக்குள்ள ஃபுல்லா கட்டி முச்சு இருக்கணும்." என்றாள்.
“ஓகே மேடம். அதெல்லாம் நான் கரெக்டா கட்டிடறேன்.
இந்த மன்த்துக்கான அமௌன்ட் இப்பவே கூட பே பண்ணிறேன்." என்ற பிரியா,
தனது ஹேண்ட் பேக்கில் இருந்து 12,000 ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, பின் தான் பணம் கட்டியதற்கான ரசீதை வாங்கிக் கொண்டாள்.
“நீங்க இப்போ போய் உங்க அம்மாவ பாக்குறதுனா பாத்துட்டுத்துட்டு கிளம்புங்க.
நீங்க மார்னிங் அவங்கள எப்ப வேணாலும் வந்து பாக்கலாம்.
ஆனா, 9 மணிக்கு மேல நைட் ஹாஸ்பிடல் க்ளோஸ் பண்ணிடுவோம்.
இருந்தாலும், ஏதாவது எமர்ஜென்சினா நீங்க வந்து அவங்கள பாக்கலாம்." என்றாள் நர்ஸ்.
“சரி" என்ற ப்ரியா தன் அம்மாவை பார்ப்பதற்காக உள்ளே சென்றாள்.
பிரியா முன்னே செல்ல; இசையும், ராகுலும், அவளை பின் தொடர்ந்தனர்.
அவர்கள் அங்கே செல்லும்போது ரேணுகாவை பரிசோதனை செய்து கொண்டு இருந்த பிசியோதெரபிஸ்ட் அங்கு வேலை பாக்கும் பெண்மணியிடம்,
“இந்த அம்மாவோட அட்டெண்டர் இவங்கள பாக்க இங்க வந்தாங்களா, இல்லையா..???" என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
அங்கே இருந்த நர்ஸ், “இல்ல சார்.
காலைல இவங்க பொண்ணு இவங்கள இங்க வந்து அட்மிட் பண்ணதோட சரி.
அதுக்கப்புறம் அவங்க இங்க வரவே இல்ல." என்று சொல்லிக் கொண்டு இருக்க,
அவர்களது பேச்சில் குறுக்கிட்ட பிரியா, “நான் வந்துட்டேன்.
நான் தான் அவங்க அட்டெண்டர்.
இப்ப அவங்க எப்படி இருக்காங்க டாக்டர்...??" என்று கேட்டாள்.
பிரியாவின் தேன் குரல் அந்த பிசியோதெரபிஸ்ட் அண்ட் சித்தா டாக்டர் கார்த்திகேயனின் காதுகளில் தேனிசைத் தென்றலாய் வந்து பாய,
ஒரு நொடி அந்த குரலில் மயங்கிய அந்த இளம் வைத்தியன்,
“யார்ரா அந்த பொண்ணு..??" என்று நினைத்தபடி குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்.
பிரியாவை பார்க்கும் வரை அவனுக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டில் எல்லாம் நம்பிக்கை இருந்ததே இல்லை.
ஆனால் இப்போது அவளை பார்த்தவுடனேயே....
“நெஞ்சை பூப்போல் கொய்தவளே..
என்னை ஏதோ செய்தவளே..."
என்ற பாடலை அவளுக்காக அவன் இதயம் ப்ளே செய்தது.
ராகுல் தன் அம்மாவை நினைத்து சோகமாக இருந்ததால், டாக்டரை சரியாக கவனிக்கவில்லை.
ஆனால், பிரியாவை பார்த்தவுடனேயே அவனது பார்வையில் ஏஅவனதுட சிறு சிறு மாற்றங்களை கூட தெளிவாக கவனித்துக் கொண்டு இருந்த இசை அந்த டாக்டர் கார்த்திகேயனை பார்த்து முறைத்தான்.
அந்தப் பார்வையில் அவள் தன்னுடையவள் என்று சொல்லாமல் சொல்லி இசை டாக்டரை எச்சரிப்பதை போல இருந்தது.
தான் தனது அம்மாவை பற்றி கேட்டும் தனக்கு எந்த பதிலும் சொல்லாமல் டாக்டர் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவர் தன் மீது கோபமாக இருக்கிறார் போல என்று நினைத்துக் கொண்ட பிரியா,
“ஐ அம் சாரி டாக்டர்.
நான் லேட்டா வந்தது தப்பு தான்.
இப்போ, என் அம்மா எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்க ப்ளீஸ்.." என்று வருத்தமான குரலில் கேட்டாள்.
மீண்டும் ஒலித்த பிரியாவின் குரலால் சுய நினைவிற்கு வந்த டாக்டர் கார்த்திகேயன்,
“சோ நீங்க தான் மிஸ் பிரியாவா..??" என்று கேட்டான்.
அவள் “எஸ் டாக்டர்.” என்று சொல்ல,
“நீங்க போய் இவ்ளோ நேரம் ஆனதுனால, நீங்க திரும்பி வருவீங்கன்னு எங்களுக்கு எல்லாம் நம்பிக்கையே இல்லை.
ஆனா எங்க அப்பா தான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தாரு.
நைட் ஹாஸ்பிடல் கிளோஸ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு சொன்னாரு.
கரெக்டா நீங்களும் வந்துட்டீங்க." என்று கார்த்திக் சிறு புன்னகையுடன் சொல்ல,
“அப்ப நீங்க சுவாமிநாதன் சாரோட சன்னா..??" என்று கேட்டாள் பிரியா.
உடனே அவன் “எஸ், ஐ அம் கார்த்திகேயன்.
பிசியோதெரபிஸ்ட் கம் சித்தா டாக்டர்." என்று சொல்லி கை குலுக்குவதற்காக பிரியாவின் முன் தன் ஒற்றை கையை நீட்டினான்.
பிரியா அவன் கையுடன் தன் கையைக் கோர்த்து ஹேண்ட் ஷேக் செய்துவிட்டு
“நைஸ் டு மீட் யு டாக்டர் கார்த்திக்." என்று சொல்லி ஃபார்மலாக அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.
அந்த காட்சியை பார்த்த இசைக்கு தன் காதில் இருந்து புகை வராத குறை தான்.
அவனே இன்னும் பிரியாவுடன் சரியாகப் பேசி பழகி இருக்காத நிலையில்,
இவன் தன் முன்னேயே அவள் கையை பிடிக்கிறானே என்று நினைத்த இசைக்கு வயிறு எரிந்தது.
“அதென்ன.. அந்த நட்டை கொக்கே அவன் பேரை கார்த்திகேயன்னு தானே சொல்றான்.
இவ என்ன.. அவன் பேர செல்லம்மா ஷர்ட்டா கார்த்திக்குன்னு சொல்றா..??" என்று நினைத்து கோபப்பட்டான்.
ஆனால் இதைப் பற்றி பிரியாவிடம் பேசும் தைரியம் சத்தியமாக அவனுக்கு இல்லை.
“இனிமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க பிரியா.
இந்த மாதிரி நடக்காம பாத்துக்கோங்க.
பேஷண்ட பத்தி நீங்க அடிக்கடி அப்டேட் ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி கூட விசாரிச்சுக்கிட்டே இருங்க.
உங்க கிட்ட ஹாஸ்பிடலோட நம்பர் இருக்கா..??" என்று கார்த்திக் கேட்க,
“இருக்கு சார்.
இப்ப தான் ரிசப்ஷன்ல குடுத்தாங்க.
இப்ப என் அம்மா எப்படி இருக்காங்க..??" என்று அவள் கேட்க,
டாக்டர் என்ன சொல்லப் போகிறரோ என்று நினைத்து பயந்து கொண்டு இருந்த ராகுல் கலங்கிய கண்களுடன் டாக்டரையும், ரேணுகாவையும், மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதை கவனித்த இசை, ஆறுதலாக ராகுலின் கையை பிடித்துக் கொண்டான்.
அந்த ஆறுதல் அவனுக்கும் தேவைப்பட்டதால், அவன் அமைதியாகவே இருந்தான் ராகுல்.
“நீங்க இன்னைக்கு தான் அவங்கள இங்க அட்மிட் பண்ணி இருக்கீங்க.
சோ, நீங்க அவங்கள விட்டுட்டு போகும்போது, அவங்க எப்படி இருந்தாங்களோ இப்பவும் அப்படியே தான் இருக்காங்க பிரியா.
அவங்களுக்கு பிசிகலி இருக்கிற பிராப்ளம் கூட கியூரபுல் தான்.
போகப் போக அது சரியாயிடும்.
ஆனா அவங்க ரொம்ப டிப்ரஸ்டாா இருக்காங்க.
அவங்க இதே கண்டிஷன்ல இருந்தாங்கன்னா, நம்ப அவங்களுக்கு பிசிகலி குடுக்கிற ட்ரீட்மென்ட் கூட ஒர்க் ஆகாது.
முதல்ல அவங்க மெண்டல் ஹெல்த் தான் நம்ம க்யார் பண்ணனும்.
இனிமே டெய்லியும் சைக்காட்ரிஸ்ட் அவங்களுக்கு கவுன்சிலிங் குடுப்பாங்க.
ஆனா இவங்க அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணுவாங்களான்னு தான் தெரியல.
ரொம்ப அமைதியாகவே இருக்காங்க.
சோ யாரோ ஒரு டாக்டர் பேசுறத விட, அவங்க ஃபேமிலில இருக்கிற நீங்க அவங்க கிட்ட அடிக்கடி வந்து பேசணும்.
நான் இப்ப சொல்றத கேட்டு உங்க அம்மாவுக்கு சரியாகவே ஆகாதுன்னு நினைச்சு பயந்துடாதீங்க.
அவங்க present கண்டிஷனை பத்தி உங்களுக்கு தெரியணும்ன்றதுக்காக தான் சொல்றேன்.
நானும் நாளைல இருந்து என் Therapy session ஸ்டார்ட் பண்ணிடுவேன்.
உங்களுக்கு உங்க அம்மாவ பத்தி என் கிட்ட ஏதாவது கேட்கணும்னா, இல்ல சொல்லனும்னா, இது என் கார்ட்.
இதுல இருக்குற என் நம்பருக்கு கால் பண்ணுங்க." என்ற கார்த்திக் தனது கார்டை எடுத்து பிரியாவிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட பிரியா, “தேங்க்ஸ் டாக்டர்” என்றாள்.
கார்த்திகையே பார்த்துக் கொண்டு இருந்த இசை,
“நாசுக்கா எப்படி அவன் நம்பர அவ கிட்ட குடுக்கரான் பாரு நட்ட கொக்கு..
இவன பாத்தாலே காண்டாகுது." என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அப்போது தான் பிரியாவின் பின்னே ராகுலும், இசையும், நின்று கொண்டு இருப்பதை கவனித்த கார்த்திக்,
“இவங்க யாரு..??" என்று அவர்களை கை காட்டி கேட்டான்.
அவன் யாரை காட்டுகிறான் என்று சரியாக கவனிக்காத பிரியா அவன் ராகுலை பற்றி தான் கேட்கிறான் என்று நினைத்து,
“அவன் என் தம்பி." என்றாள்.
கார்த்திக் இசை, ராகுல், இருவருமே பிரியாவின் தம்பிகள் தான் போல; அதை தான் அவள் அவன் என்று தவறாக சொல்லிவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.
இது ஹாஸ்பிடலை க்ளோஸ் செய்யும் டைம் என்பதால் அவன் இறுதியாக அங்கே இருக்கும் அனைத்து பேஷ்களையும் ரவுண்ட்ஸ் சென்று பார்க்க வேண்டியது இருந்தது.
அதனால் பிரியாவிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான் கார்த்திக்.
கார்த்திக் அங்கு இருந்து சென்றவுடன், தன் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு ரேணுகா படுத்து இருந்த பெட்டில் அமர்ந்தாள் பிரியா.
ராகுலும் தன் அம்மாவின் அருகே சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.
கலங்கிய கண்களோடு ரேணுகாவை பார்த்த பிரியா,
“அம்மா டோன்ட் வரி. உங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும்.
எங்கள பத்தி நெனச்சு கவலைப்படாதீங்க.
உங்கள இங்க அட்மிட் பண்ண உடனே, நாங்க இந்த ஊர்ல தங்கரத்துக்கும் நான் வீடு பாத்துட்டேன்.
எனக்கு இங்க ஜாப் கூட கிடைச்சிருச்சு.
சோ நான் என்னையும், ராகுலையும், நல்லா பாத்துப்பேன்.
நீங்க சீக்கிரம் சரியாகி வந்து எங்க கூட முன்னாடி மாதிரி நார்மலா பேசுங்க." என்று தழுதழுத்த குரலில் பேசினாள்.
அதுவரை தன் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு இருந்த ராகுலும் கூட பிரியா பேசியதை கேட்டு அழ தொடங்கி விட்டான்.
அவர்களால் தங்களது அம்மாவை இந்த அவல நிலையில் பார்க்கவே முடியவில்லை.
ராகுலும், பிரியாவும், அழுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத இசை ராகுலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் ரேணுகாவை பார்த்து,
“அம்மா உங்களுக்கு என்னை யாருன்னு தெரியாது.
சோ, ஃபர்ஸ்ட் நான் என்ன இன்ட்ரோ பண்ணிக்கிறேன்.
என் பேரு இசை.
இதான் என் சொந்த ஊரு.
பிரியாவும், ராகுலும், இந்த தெரியாத ஊர்ல வந்து இருந்துட்டு என்ன பண்ண போறாங்களோன்னு நெனச்சு நீங்க வருத்தப்படாதீங்க.
அவங்க கூட நான் இருக்கேன்.
அவங்க ரெண்டு பேரையும் நீங்க ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க.
அவங்களே அவங்கள பாத்துப்பாங்க தான்.
இருந்தாலும் நான் எப்பவும் அவங்க கூட சப்போர்ட்டிவா இருப்பேன்.
நான் பேசறது எல்லாம் நீங்க இப்ப கேட்டுட்டு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் மா.
சோ நீங்களும் எங்க கிட்ட பேசுங்க." என்றான்.
முதலில் அவன் நார்மலாக தான் பேச தொடங்கினான்.
ஆனால், அவன் பேச.. பேச.. தானாக அவன் கண்கள் கலங்கியது.
பின் தான் தனது அம்மாவிற்காக வாங்கி வந்து இருந்த ஆடைகளை எல்லாம் அங்கே இருந்த நட்ஸிடம் கொடுத்த பிரியா, தன் மொபைல் நம்பரை அவளிடம் எழுதிக் கொடுத்துவிட்டு,
ஏதாவது எமர்ஜென்சி என்றால் தனக்கு கால் செய்யும் படி சொல்லிவிட்டு அங்கு இருந்து இசை மற்றும் ராகுலுடன் வெளியே வந்தாள்.
அவர்கள் இசையின் ரெஸ்டாரண்டை நோக்கி தெருவில் நடக்க தொடங்கினர்.
தனக்கு அருகில் வந்து கொண்டு இருந்த இசையின் முகத்தை திரும்பிப் பார்த்தபடியே வந்து கொண்டு இருந்தாள் பிரியா.
அவனைப் பார்க்கும்போது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் யாரையும் நம்பி அவர்களுடன் எளிதில் பழக கூடியவள் அல்ல பிரியா.
ஆனால், ஏன் என்று தெரியவில்லை; வெளியில் இசையை அவள் தன்னை விட்டு ஒரு அடி தள்ளியே எப்போதும் நிற்க வைத்தாலும், அவனது ஆழ்மனதிற்கு அவன் மிகவும் பரிச்சயமானவனாக தெரிந்தான்.
அவளால் அவனுடன் இருக்கும்போது சாதாரணமாகவும், நிம்மதியாகவும், அவளால் உணண முடிந்தது.
அவள் இப்போது தன்னைப் பற்றிய உண்மைகளை அவனிடம் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், தன் மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் தயக்கம் இன்றி அவளால் சொல்ல முடிந்தது.
இப்படி இசையைப் பற்றியே யோசித்து கொண்டு வந்த பிரியா,
“இவன் கிட்ட என்னமோ ஒன்னு இருக்கு." என்று நினைத்துக் கொண்டாள்.
இவன் யார் என்று தெரியவில்லை.
எதற்காக இவனை சந்தித்தேன் என்றும் புரியவில்லை..
ஆனால் என்னால் இவனை தவிர்க்கவோ, புறக்கணிக்கவோ, முடியவில்லை.
எங்களுக்குள் இருக்கும் இந்த உறவு என்னவென்று நான் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை.
இது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில், ஒன்றும் எனக்கு தயக்கம் இல்லை.
நீ என் கலங்கரை விளக்கமா? இல்லை வானின் மேகமா..?? என்று காலமே பதில் சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டாள் பிரியா.
தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.