CHAPTER-8

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அர்ஜுன்தான் த‌ன‌க்கான‌ உயிர் என்று உண‌ர்ந்த‌ அடுத்த‌ நொடியே, அந்த‌ சாமியாரை தேடி அதே கோவிலுக்கு சென்ற ச‌ந்ரா க‌ண்ணீரில் க‌ரைந்த‌ப‌டி, "நீங்க‌ சொன்ன‌த‌ நா இப்போ ந‌ம்புறேன் சாமிஜி. என‌க்கு அர்ஜுன் திரும்ப‌ வேணும். ப்ளீஸ் சாமிஜி. டாக்ட‌ர் அவ‌ன் செத்துட்ட‌தா சொல்றாங்க‌. ஆனா அவ‌ன‌ என்னால‌தா காப்ப‌த்த‌ முடியும்னு நீங்க‌ சொன்ன‌து என‌க்கு நியாப‌க‌ம் இருக்கு. ப்ளீஸ் அர்ஜுன‌ காப்ப‌த்த‌ எதாவ‌து வ‌ழி இருந்தா சொல்லுங்க‌." என்று கூற‌,

சாமிஜி, "வ‌ழி இருக்கு." என்றார்.

அதை கேட்டு அழுகையை நிறுத்திய‌வ‌ள், "என்ன‌ வ‌ழி?" என்று உட‌னே கேட்க‌,

சாமிஜி, "நீதா அந்த‌ வ‌ழி" என்றார்.

அதை கேட்டு ஒரு நிமிட‌ம் குழ‌ம்பிய‌வ‌ள், "நானா?" என்று கேட்க‌,

சாமிஜி, "ஆமா நீதா. உன்னால‌ ம‌ட்டுந்தா இப்ப‌ அர்ஜுன‌ காப்ப‌த்த‌ முடியும்." என்றார்.

மேலும் குழ‌ப்ப‌த்தோடு, "ஆனா எப்பிடி?" என்று கேட்டாள்.

சாமிஜி, "நீ ஒரு மூலிகை கொண்டுவ‌ர‌ணும்." என்றார்.

ச‌ந்ரா, "மூலிகையா?" என்று மேலும் குழ‌ம்பிய‌வ‌ள், பிற‌கு அவ‌ரை பார்த்து, "செரி நா கொண்டுவர்றேன். அது எங்க‌ இருக்குன்னு சொல்லுங்க‌." என்றாள்.

சாமிஜி, "நீ நினைக்கிற‌ மாதிரி அது அவ்வ‌ள‌வு சுப‌ம் இல்ல‌. இற‌ந்துபோன‌வ‌ங்க‌ளுக்கு உயிர் கொடுக்குற‌து, அந்த‌ சிவ‌ப்பெருமானால் மட்டும்தான் முடியும். அதுக்கு நீ க‌டும் த‌வ‌ம் இருக்க‌ணும்." என்றார்.

அத‌ற்கு உறுதியுட‌ன் க‌ண்க‌ளை துடைத்த‌ ச‌ந்ரா, "எதுவா இருந்தாலும் நா த‌யாரா இருக்கேன். நா என்ன‌ செய்ணுன்னு சொல்லுங்க‌ சாமிஜி." என்றாள்.

அத‌ற்கு அவ‌ர், "இங்கிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள‌ ஒரு காட்டிற்கு ந‌டுவில் உள்ள‌ ச‌ங்க‌ர‌ன் கோவிலுக்கு செல்.
அங்கு சிவ‌ப்பெருமானை வேண்டி த‌வ‌ம் இரு. அதில் அந்த‌ சிவ‌ப்பெருமான் ம‌ன‌திறங்கினால், அந்த‌ மூலிகை உன‌க்கு நிச்ச‌ய‌ம் கிடைக்கும்." என்று ஏதோ புத்த‌க‌த்தை ப‌டிப்ப‌துப்போல் கூறினார்.

அதை கேட்ட‌ சந்ரா, "க‌ண்டிப்பா சாமிஜி. நா ஒட‌னே போறேன்." என்று கூறி உட‌னே செல்ல‌ முய‌ற்சிக்க‌,

சாமிஜி, "நில்லு ச‌ந்ரா." என்றார்.

உட‌னே நின்ற‌வ‌ள், "சொல்லுங்க‌ சாமிஜி." என்றாள்.

சாமிஜி, "அது அவ்வ‌ள‌வு சுல‌ப‌ம் இல்ல‌. அந்த‌ மூலிகையை தேடி போன‌ யாரும் உயிரோட‌ திரும்புன‌தே கெடையாது. போன‌வ‌ங்க‌ளுக்கு அங்கேயே ச‌மாதிதான்." என்றார்.

அதை கேட்ட ச‌ந்ரா ஒரு நிமிட‌ம் அதிர்ந்தாலும், பிற‌கு த‌ன‌க்காக‌ அர்ஜுன் செய்த‌ தியாக‌ம் மீண்டும் அவ‌ள் நினைவ‌டுக்கில் வ‌ந்து செல்ல‌, "இல்ல‌ சாமிஜி. என்னால‌ முடியும். என்னோட‌ உயிர‌ குடுத்தாவ‌து நா அர்ஜுன‌ காப்பாத்துவேன்." என்றாள்.

சாமிஜி, "நிஜ‌மாக‌வே உன் உயிரையே கொடுக்கும் நிலை வ‌ர‌லாம்." என்றார்.

ச‌ந்ரா, "என‌க்கு ச‌ம்ம‌த‌ம் சாமிஜி. நா அங்க‌ போறேன்." என்றாள்.

அவ‌ள் உறுதியை பார்த்த‌ சாமிஜி, "அர்ஜுனின் உட‌லையும் உட‌ன் எடுத்து செல்." என்று கூறி அத‌ன் பிற‌கு சில‌ விவ‌ர‌ங்க‌ளையும் கூறி சென்று வா என்றார்.

அத‌ற்கு ச‌ந்ரா, "ந‌ன்றி சாமிஜி." என்று கும்பிட்டாள். அவ‌ரும் ப‌திலுக்கு புன்ன‌கைவிடுக்க‌, ச‌ற்றும் தாம‌திக்காம‌ல் அங்கிருந்து புற‌ப்ப‌ட்டாள் ச‌ந்ரா.

ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்து அனைத்து ஃபார்மாலிட்டியையும் முடித்துவிட்டு, அர்ஜுனின் உட‌லை த‌ன்னுட‌ன் எடுத்து சென்ற‌வ‌ள், த‌ன்னுடைய‌ காரில் ஏற்றி, அந்த‌ சாமிஜி கூறிய‌ இட‌த்திற்கு புற‌ப்ப‌ட்டாள். ஆனால் செல்லும் வ‌ழியில் ச‌ந்ராவின் க‌ண்க‌ள் ம‌ணிக்கு ஒரு முறை அர்ஜுனை பார்த்துக்கொண்டே இருக்க‌, அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்கிக்கொண்டேதான் இருந்த‌து.

அப்போதுதான் அவ‌னை முத‌ல் முறை பார்த்த‌து முத‌ல் அவ‌னுட‌னான‌ அனைத்து நிக‌ழ்வுக‌ளையும் எண்ணி பார்த்த‌வ‌ள், இறுதியில் த‌ன் த‌ந்தை இற‌ந்த‌து, அத‌ன் பிற‌கு அவ‌ள் அந்த‌ கோவிலுக்கு சென்ற‌தும், அங்கு அந்த‌ சாமியாரை ச‌ந்தித்த‌தும், அத‌ன் பிற‌கு அவ‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ குழ‌ப்ப‌ம், அதை தொட‌ர்ந்து அர்ஜுனின் இழ‌ப்பு என்று அனைத்தையும் நினைத்து பார்த்த‌வ‌ளுக்கு, ஏதோ க‌ன‌வு க‌ண்ப‌து போல‌வே தோன்றிய‌து. ஆனால் இது க‌ன‌வாக‌வே இருந்தாலும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ளால் தாங்கிக்கொள்ள‌வே முடிய‌வில்லை. இப்போது தான் செல்லுகின்ற‌ பாதை ச‌ரியா த‌வ‌றா என்றுக்கூட‌ அவ‌ளுக்கு தெரிய‌வில்லை. எப்ப‌டியாவ‌து அர்ஜுனை காப்ப‌ற்ற‌ வேண்டும் என்ப‌துதான் அவ‌ளின் ஒரே எண்ண‌மாக‌ இருக்க‌, "நா உன்ன‌ எப்பிடியாவ‌து காப்பாத்துவேன் அர்ஜுன்." என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டவ‌ள், அவ‌னுக்காக‌ எதையும் செய்ய‌ துணிந்த‌வ‌ளாய் அந்த‌ அட‌ர்ந்த‌ காட்டு ப‌குதிக்கு சென்று காரை நிறுத்தினாள்.

அவ‌ளின் வாச‌ம் அந்த‌ காட்டில் உள்ள‌ ம‌ர‌ங்க‌ளின் சுவாச‌த்தில் க‌ல‌ந்த‌ அடுத்த‌ நொடியே, அங்கு ப‌ய‌ங்க‌ர‌மான‌ காற்று அடிக்க‌ ஆர‌ம்பித்த‌து. அதோடு தூர‌த்தில் காட்டிற்கு ந‌டுவே உள்ள‌ அந்த‌ சிவ‌ன் கோவிலின் ம‌ணிக‌ள் அனைத்தும் ஒன்றுட‌ன் ஒன்று மோதி ஒலி எழுப்ப‌ ஆர‌ம்பித்த‌து.

அதை கேட்ட‌ ச‌ந்ராவின் காதுக‌ளுக்கு அந்த‌ ச‌த்த‌ம் ஏனோ ஒருவித‌ குடைச்ச‌லை ஏற்ப‌டுத்த‌, த‌ன் காதுக‌ளை அழுந்த‌ மூடிக்கொண்டு காரைவிட்டு இற‌ங்கினாள். அவ‌ள் அந்த‌ ம‌ண்ணில் கால் வைத்த‌ அடுத்த‌ நொடி அந்த‌ காற்று அமைத‌ல‌டைந்துவிட‌, ம‌ணியின் ஓசையும் நின்றுவிட்ட‌து.

அத‌ன் பிற‌கு நிம்ம‌திய‌டைந்த‌வ‌ள், அங்கு அவ‌ர் கூறிய‌துப்போல் ஏதேனும் கோவில் தெரிகிற‌தா என்று பார்த்தாள். அந்த‌ ம‌ணியின் ச‌த்த‌ம் எங்கே இருந்து வ‌ந்த‌து என்ப‌தை ஆராய்ந்த‌ப‌டியே நேராக‌ காட்டிற்கு ந‌டுவில் பார்த்த‌வ‌ள், அங்கு ஒரு உய‌ர‌மான‌ ப‌குதியில் மித‌ப்ப‌துப்போல‌ நிற்கும் அந்த‌ பிர‌மாண்ட‌ ம‌ற்றும் ப‌ழ‌மையான‌ சிவ‌ன் கோவிலை பார்த்து திகைத்து நின்றாள். அதை பார்த்த‌ அடுத்த‌ நொடி அவ‌ளின் க‌ண்க‌ள் ஏதேதோ காட்சிக‌ளை அவ‌ளிட‌ம் காட்ட‌ முய‌ற்சிக்க‌, அவை அனைத்தும் அவ‌ளுக்கு பெரும் த‌லைவ‌லியை கொடுத்த‌து. ஆனாலும் க‌டின‌ப்ப‌ட்டு த‌ன்னை ச‌ம‌ன்ப்ப‌டுத்திய‌வாறு மீண்டும் காரில் ஏறி அம‌ர்ந்த‌வ‌ள் அந்த‌ கோவிலை நோக்கி காட்டிற்குள் காரை செலுத்தினாள்.

பிற‌கு அவ‌ளின் கார் அந்த‌ சிவ‌ன் கோவிலின் முன்பே வ‌ந்து நிற்க‌, காரை விட்டு இற‌ங்கிய‌வ‌ள், அர்ஜுனையும் த‌ன்னுட‌ன் இற‌க்கி, அவ‌னை க‌டின‌ப்ப‌ட்டு தூக்கிய‌ப‌டி உள்ளே சென்றாள்.

அந்த‌ கோவிலின் முத‌ல் அடியை எடுத்து வைத்த‌ அந்த‌ நொடியும் அவ‌ள் க‌ண்க‌ளுக்கு ஏதேதோ காட்சிக‌ளும் அச்சுறுத்தும் ப‌ல‌ நினைவுக‌ளும் தோன்ற‌ ஆர‌ம்பித்த‌து. அதில் த‌லையை பிடித்துக்கொண்டு த‌ள்ளாடிய‌வ‌ள், பிற‌கு த‌ன் அருகில் கிட‌ந்த‌ அர்ஜுனை பார்த்துவிட்டு, பிற‌கு க‌டின‌ப்ப‌ட்டு த‌ன் சுய‌நினைவை கொண்டு வ‌ந்து, த‌ன்னை தானே ச‌ம‌நிலை ப‌டுத்தி அர்ஜுனுட‌ன் அந்த‌ கோவிலுக்குள் நுழைந்தாள்.

அந்த‌ கோவிலுக்குள் நுழைந்த‌ அடுத்த‌ நொடி, அவ‌ளின் க‌ண்க‌ளுக்கு ப‌ட்ட‌து மிக‌ பிர‌ம்மாண்ட‌மாக‌ நிற்கும் சிவ‌னின் சிலை ம‌ட்டுமே. அதை பார்த்த‌வ‌ளுக்கோ ச‌ற்று அச்சுறுத்திய‌ ப‌ல‌ நினைவுக‌ள் மீண்டும் அவ‌ளுள் தோன்ற‌ ஆர‌ம்பிக்க‌, அவை அனைத்தையும் க‌டின‌ப்ப‌ட்டு த‌ன‌க்குள் அட‌க்கிய‌வ‌ள், சுற்றி த‌ன் பார்வையை செலுத்தினாள்.

அப்போது அவ‌ள் அதிர்ந்து நிற்கும் வ‌ண்ண‌மாக‌, அங்கு நிறைய‌ ம‌னித எலும்புக‌ள் இருந்த‌ன‌. அதை பார்த்த‌ ஒரு பெண்ணாக‌ அவ‌ளின் ம‌ன‌ம் ப‌த‌றினாலும், ப‌ய‌ந்தாலும் அவ‌ள் முன் நிற்கும் சிவ‌னே இப்போது அவ‌ளின் தைரிய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ சாமிஜி கூறிய‌துப்போல‌வே அந்த‌ மூலிகைக்காக‌ வ‌ந்த‌ சில‌ரின் எலும்புக‌ள்தான் என்று புரிந்துக்கொண்டாள் ச‌ந்ரா.

பிற‌கு த‌ன‌க்குள்ளே எழுந்த‌ ப‌ய‌த்தையும் ப‌த‌ற்ற‌த்தையும் க‌டினிப்ப‌ட்டு அத‌ன‌க்குள் ட‌க்க‌ முய‌ற்சித்தாலும், அது அப்ப‌ட்ட‌மாய் வெளியில் தெரிய‌, ஏனோ அந்த‌ எலும்புக‌ளுள் தானும் ஒரு ப‌குதியாக‌ ஆகிவிடுவோமோ என்றுதான் அவ‌ள் ம‌ன‌தின் ஆழ‌த்தில் ஒரு ப‌ய‌ம் எழுந்த‌து. ஆனால் த‌ன‌க்காக‌ ச‌ற்றும் யோசிகாம‌ல் உயிரைவிட‌ முன் வ‌ந்த‌வ‌ன் அவ‌ன், அவ‌னை காப்பாற்ற‌ தான் இவ்வாறு த‌ய‌ங்குவ‌து த‌ன‌க்கே கேவ‌லாமாக‌ இருந்த‌து. க‌டின‌ப்ப‌ட்டு த‌ன் ப‌ய‌த்தை தூர‌ போட்ட‌வ‌ள், த‌ன் ம‌ன‌தில் அர்ஜுனை காக்கும் எண்ண‌த்தை ம‌ட்டுமே ஆழ‌மாக‌ விதைத்தாள். பிற‌கு சிவ‌ பெருமானின் ச‌ந்நிதியை நோக்கி த‌ன் கைக‌ளை மெல்ல‌ அவ‌ர் முன் கூப்பி, "சிவ‌பெருமானே! எங்கிட்ட‌ இருக்குற‌ ஒரே வ‌ழி இப்போ நீங்க‌ ம‌ட்டுந்தா. த‌ய‌வுசெஞ்சு என் அப்பாவ‌ எங்கிட்ட‌ இருந்து பிரிச்ச‌ மாதிரி, அர்ஜுனையும் எங்கிட்ட‌ இருந்து பிரிச்சிராதீங்க‌. என‌க்காக‌ உயிர‌ குடுத்த‌ அவ‌ன் உயிருக்கு எதுவும் ஆக கூடாது. நா அவ‌ன‌ காப்பாத்தியே ஆக‌ணும். த‌ய‌வுசெஞ்சு என‌க்கு அந்த‌ மூலிகைய‌ கொடுங்க. இல்ல‌ன்னா என்னையும் அர்ஜுன்கூட‌வே அனுப்பிருங்க‌." என்று க‌ண்ணீருட‌ன் வேண்டினாள்.

இப்பொழுது அவ‌ள் ம‌ன‌தில் உள்ள‌ வார்த்தைக‌ள்தான் வெளியில் வ‌ந்துள்ள‌து என்றாலும், அத‌ற்கான‌ அர்த்த‌ங்க‌ளை அவ‌ளால் அறிய‌ முடிய‌வில்லை. இப்போது அவ‌ற்றை அறிந்துக்கொள்வ‌த‌ற்கான‌ நேர‌மும் இது இல்லை என்று எண்ணிய‌வ‌ள், த‌ன் முன் இருக்கும் அர்ஜுனின் உட‌லை சிவ‌பெருமானின் முன்பு கிட‌த்திய‌வ‌ள், அவ‌னின் உட‌ல் அழுகாம‌ல் இருக்க‌, சில‌ மூலிகைக‌ளை அவ‌ன் மீது போர்த்திவிட்டு, அந்த‌ சாமிஜி கூறிய‌துப்போல‌வே அவ‌ன் அருகில் அம‌ர்ந்து சிவ‌னை நோக்கி த‌வ‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்தாள்.

நேர‌ம் சிறிது சிறிதாய் ந‌க‌ர‌ ந‌க‌ர‌, அவ‌ளின் தியான‌மும் ஆழ‌மான‌து. நொடிக‌ள் ந‌க‌ர‌, நேர‌ங்க‌ள் ந‌க‌ர‌, நாட்க‌ளும் ந‌க‌ர‌ ஆர‌ம்பித்த‌தே த‌விர‌, அவ‌ளின் த‌வ‌மும் க‌லைய‌வில்லை, மூலிகையும் கிடைக்க‌வில்லை. இப்ப‌டியே நாட்க‌ள் வார‌ங்க‌ள் ஆக‌ அவ‌ளின் த‌வ‌ம் தொட‌ர்ந்துக்கொண்டே சென்ற‌து. தொட‌ர்ந்து 15 நாட்கள் அவ‌ளின் த‌வ‌ம் தொட‌ர‌, அது வ‌ரை அர்ஜுனின் உட‌ல் அழுகாம‌ல் அந்த‌ சாமியார் கூறிய‌ சில‌ மூலிக‌ள் அவ‌னை காத்த‌து.

அவ‌ளின் த‌வ‌ நாட்க‌ளில் 15 வது நாள் முடியும் த‌ருவாயில் அவ‌ள் உட‌லிலோ எந்த‌ ஒரு அசைவும் இல்லாம‌ல் இருக்க‌, க‌ண்க‌ளோ மூடிய‌து மூடிய‌ப‌டியே இருக்க‌, உட‌லோ க‌ற்சிலை போல் இருக்க‌ நிலை மாறாம‌ல் அம‌ர்ந்திருந்தாள்.

அப்போது "சந்ரா!" என்ற‌ ஒரு குர‌ல் ஒலிக்க‌,

அதை கேட்ட‌ சந்ராவின் த‌வ‌ம் மெல்ல‌ க‌லைந்து, அவ‌ள் க‌ண்க‌ள் மெல்ல‌ அசைந்து மெல்ல‌ மெல்ல‌ திற‌ந்த‌து. அப்போது த‌ன் முன் தெரிந்த‌ காட்சியை பார்த்த‌வ‌ளுக்கு பெரும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து.

- ஜென்மம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.