அத்தியாயம் 7: தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்
பிரியா, இசை, ராகுல், மூவரும் தங்களுக்கு தேவையானவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு இசையின் ரெஸ்டாரண்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஜீவா சொன்னது போலவே அவர்கள் வருவதற்குள் பிரியாவும், ராகுலும், தங்கப்போகும் வீட்டை அவன் ரெடி செய்து வைத்து இருந்தான்.
அந்த 2BHK வீடு ஒரு குடும்பம் தங்குவதற்கு தாராளமாக இருந்தது. அதை கண்டு திருப்தியாக உணர்ந்தாள் பிரியா.
ஜீவா அந்த வீட்டை ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்தாலும், பிரியா அதில் தங்களுடைய வசதிக்கு ஏற்ப சிறிது மாற்றங்கள் செய்தாள்.
இசையும் அவர்களுடனே இருந்து அவர்களுக்கு உதவினான்.
அவர்களுடைய வீட்டில் அவன் பயன்படுத்தாமல் தேவை இல்லாமல் வைத்து இருந்த அனைத்து பர்னிச்சர்களையும் பிரியாவின் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டான் இசை.
அதனால், பிரியா பெரிதும் எந்த சிரமமின்றி தனது வீட்டை பக்காவாக செட் செய்து விட்டாள்.
அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததால் ஒரு அறையை பிரியாவும், இன்னொரு அறையை ராகுலும், எடுத்துக் கொண்டனர்.
ராகுளுடன் ஹாலில் அமர்ந்து இருந்த பிரியா, தான் நாட்டு மருந்து கடையில் வாங்கி வந்து இருந்த மருந்து பொருட்களை எல்லாம் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது தான் அவற்றை வைத்து அவளுக்கு தேவையானவற்றை அவளால் உருவாக்க முடியும்.
பின் அவற்றை எல்லாம் சரியான அளவில் கலந்த பிரியா, அவர்கள் பயன்படுத்துவதற்கான ஃபேர்னஸ் கிரீம், முதல் ஹேர் ஆயில், சோப்பு, என அனைத்தையும் சில மணி நேரங்களிலேயே தயார் செய்து விட்டாள்.
இசையும் அவர்களோடு அமர்ந்து பிரியா என்ன செய்கிறாள் என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
இப்போது தான் ஒருவர் இதை எல்லாம் வீட்டிலேயே செய்வதை இசை நேரில் பார்க்கிறான்.
அதனால், அது அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதை செய்வதற்கு ஆர்வமாகவும், இருந்தது.
இடையிடையில் பிரியா
“அதை எடு, இத இதுல ஊத்தி மிக்ஸ் பண்ணு, இத ஃபிரிட்ஜில வை." என்று அவனுக்கு எடுபிடி வேலை சொல்ல,
அவற்றை எல்லாம் சமத்து பிள்ளையாக அப்படியே செய்தான் இசை.
ராகுலும் பிரியாவிற்கு உதவியாக அவளுடனேயே இருந்தான்.
பிரியா சொல்ல சொல்ல இசை அதை தட்டாமல் கேட்பதை பார்த்த ராகுலுக்கு ஏன் என்று தெரியவில்லை அது மிகவும் பிடித்து இருந்தது.
இசை தங்களுக்கு உதவுவதாக சொன்னது வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், அவன் நிஜமாகவே தங்களுடனே இருந்து தங்களது அனைத்து வேலைகளிலும், உதவியாக இருப்பது அவன் மீது ராகுலுக்கு ஒரு நல்ல எண்ணத்தை வரவழைத்தது.
இப்படி இசையை பற்றி யோசித்துப் பார்த்த ராகுலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் அவனும், அவனது அக்காவும், நடு ரோட்டில் நின்று கொண்டு அடுத்த தாங்கள் எங்கே செல்ல போகிறோம் என்று யோசித்துக் கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது.
அதனால் வாஞ்சையுடன் இசையை பார்த்தவன், “இன்னைக்கு மட்டும் நாங்க இவர பாக்கலைன்னா இந்நேரம் நாங்க என்ன பண்ணிட்டு இருந்து இருப்போம்ன்னே தெரியல..
என்ன இருந்தாலும், இந்த மனுஷன் கொஞ்சம் நல்லவர் தான் போல...
ஆனா இத எல்லாம் அவர் பிரியா அவரோட எக்ஸ் கேர்ள் ஃபிரண்ட் மாதிரி இருக்கறதுனால மட்டும் தானே செய்றாரு..!!" என்று யோசித்தான்.
பின் “எது எப்படி இருந்தாலும் நாங்க இங்க வந்ததுனால, இவங்களுக்கு கண்டிப்பா பெனிஃபிட்டா தான் இருக்கும்.
பிரியா எவ்ளோ பெரிய கம்பெனிய தனியா மேனேஜ் பண்ணிட்டு இருந்தா...
இந்த ரெஸ்டாரன்ட் ஐ மேனேஜ் பண்றது எல்லாம் அவளுக்கு ஒரு விஷயமே இல்ல.
கண்டிப்பா அவ சொன்ன மாதிரி இன்னும் ஒன் மந்த்ல இந்த ரெஸ்டாரன்ட் பெஸ்ட் செல்லிங் ரெஸ்டாரன்ட் ஆயிடும்." என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராகுல்.
இரவு 7:30 மணி....
பிரியா தான் வாங்கி வந்த ஆடைகளை அவளுடைய அலமாரியில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவள் தனது அம்மாவிற்காக வாங்கிய ஆடைகள் அவள் கண்களில் பட,
அப்போது தான் தனது அம்மாவை அங்கே விட்டுவிட்டு வந்ததற்குப் பின், மீண்டும் தான் அங்கே சென்று பாக்கவே இல்லை என்று அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதனால் உடனே தான் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே பாதியில் நிறுத்தியவள், ராகுலை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு கீழே வந்தாள்.
பிரியாவும், ராகுலும், எங்கேயோ வெளியே செல்வதை கவனித்த இசை,
“பிரியா அதான் எல்லாம் வாங்கியாச்சுல்ல..??
இந்த டைம்ல இப்ப எங்க போற..???
டின்னர் ரெடி ஆயிடுச்சு.
வந்து சாப்பிட்டு போங்க." என்றான்.
பிரியா முன்பு போல் இருந்து இருந்தால் அவன் கேட்டதற்கு,
“நீங்க சாப்பிடுங்க.
நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கறோம்.
அண்ட் நாங்க இங்க இருக்கிறதுனால நாங்க எங்க போறோம், எப்ப வருவோம்னு எல்லாம் கேள்வி கேட்டு இருக்காத." என்று அவன் முகத்தில் அரைவதைப்போல பதில் சொல்லி இருப்பாள்.
ஆனால் இப்போது அவள் இசையுடன் சில மணி நேரங்களை செலவிட்டு இருந்ததால், அவன் மேல் அவளுக்கு ஒரு சிறிய மரியாதை துளிர்விட்டு இருந்தது.
அதனால் அவன் தங்கள் மீது இருக்கும் அக்கறையில் தானே கேட்கிறான் என்று நினைத்தவள்,
“நான் மார்னிங் அம்மாவை அங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வந்ததோட சரி...
திரும்பவும் அவங்கள போய் பாக்கவே இல்ல.
நான் அவங்கள அட்மிட் பண்ணும் போது அப்ளிகேஷன் ஃபார்ம்ல என் மொபைல் நம்பரையும், அட்ரஸையும், எழுதி தர சொன்னாங்க.
அப்ப அது ரெண்டுமே என் கிட்ட இல்ல.
சோ அப்புறமா வந்து சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.
அம்மாவுக்கு ஏதாவது எமர்ஜென்சின்னா கூட அவங்க கிட்ட என்ன காண்டாக்ட் பண்றதுக்கு என் மொபைல் நம்பர் இல்ல.
நான் அதுக்காக தான் புதுசா மொபைல் ஃபோனே வாங்கினேன்.
பட் இருந்த டென்ஷன்ல அங்க போனும்னே மறந்துட்டேன்." என்றாள்.
“அட ஆமா.. நானும் அவங்கள வந்து பாக்கலாம்ன்னு தான் இருந்தேன்.
இரு நானும் வரேன்.
ஒன்னா போலாம்." என்று சொன்ன படியே சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான் இசை.
பிரியா அவன் சொன்னதற்கு மறுப்பு சொல்லாமல் “சரி" என்றாள்.
இசை “அட்ரஸ்க்கு நம்ம வீட்டோட அட்ரஸை குடுத்தரலாம்.
அது ஒன்னும் பிரச்சனை இல்ல.
பட் நீ மொபைல் மட்டும் தானே வாங்குன..??
அதுல இன்னும் சிம்மே போடலையே..
அப்புறம் அவங்க கிட்ட போய் எந்த நம்பரை குடுப்ப..???" என்று அர்த்தமாக கேட்க,
இப்போது இசை அதைப்பற்றி ஞாபகப்படுத்தியவுடன் தான் அவளுக்கு அது ஞாபகம் வந்தது.
அவள் இப்போது புதிதாக வாங்கி இருந்த மொபைல் ஃபோனை கூட வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு தான் வந்து இருந்தாள் பிரியா.
அதனால், “ஆமால்ல.. நான் மறந்துட்டேன்.
தேங்க்ஸ் இசை, நீ இப்ப ஞாபகப்படுத்தலைன்னா நான் போயிட்டு இன்னொரு தடவ திருப்பி இங்க வந்து இருப்பேன்.
நான் வாங்குன ஃபோனும் மேல தான் இருக்கு." என்றவள்,
ராகுலிடம் வீட்டின் சாவியை கொடுத்து போய் அந்த மொபைல் ஃபோனை எடுத்து வருமாறு சொல்லி அனுப்பினாள்.
பிரியாவின் பதட்டமான முகத்தை பார்த்த இசை,
“உங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்றத தாண்டி உன் லைஃப்ல பெருசா வேற ஏதோ நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
நீ நார்மலா இருக்கிற மாதிரி காமிச்சிக்கிட்டாலும், உன் ஃப்பேச பார்த்தாலே நீ ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்குற மாதிரி தெரியுது.
அத பத்தி இப்ப நான் உன் கிட்ட கேட்டு உன்னை கஷ்டப்படுத்த விரும்பல.
அண்ட் எப்படியும் நான் அத பத்தி கேட்டாலும் என் கிட்ட நீ சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும்.
உனக்கா எப்ப உன்ன பத்தி என் கிட்ட சொல்லணும்னு தோணுதோ, நீ அப்ப என் கிட்ட சொன்னா போதும்.
நான் இப்ப உன் கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லணும்னு நினைக்கிறேன்.
நீ என்ன பத்தி என்ன நினைக்கிறன்னு எல்லாம் எனக்கு கவலை இல்லை.
என்ன ஆனாலும் சரி, எந்த சிச்சுவேஷன்லையும் நான் உனக்கு சப்போர்ட்டிவா உன் கூடவே இருப்பேன்.
ஐ ப்ரோமிஸ் யூ.
எப்பவும் ஒரு மாதிரி டென்ஷனாவே இருக்காத.
அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்க." என்று பிரியாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி தன் மனதில் இருந்து உண்மையாகவும், உறுதியாகவும், அவளிடம் சொன்னான்.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மை பிரியாவிற்கு புரியத்தான் செய்தது.
ஆனால் அவனுக்கு பதிலுக்கு அவனிடம் தான் என்ன செல்ல வேண்டும் என்று தான் அவளுக்கு தெரியவில்லை.
அதனால் ஒரு மரியாதைக்காக அவனைப் பார்த்து லேசாக சிரித்தவள், அவனிடம் எதுவும் பேசவில்லை.
பிரியாவின் மொபைல் ஃபோனை ராகுல் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய பிரியா தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு இருக்க;
அதை கவனித்த இசை, “சிம் புதுசா வாங்கணும்னா அதுக்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் கேப்பாங்க.
ஒரிஜினல் இருந்துச்சுன்னா எடுத்துட்டு வா.
போற வழியில ஜெராக்ஸ் போட்டுக்கலாம்." என்றான்.
ஏற்கனவே தங்களை யாரும் கண்டு பிடித்து விட கூடாது என்று தான் பிரியா இந்த தெரியாத ஊரில் வந்து தங்கி இருக்கிறாள்.
இப்போது அவள் தனதே ஆதார் கார்டை இங்கே பயன்படுத்தி சிம் வாங்கினால், அதை வைத்து தன்னை யாராவது கண்டுபிடித்து விட கூடும்.. என்று நினைத்து பயந்த பிரியா,
“என் கிட்ட ஆதார் கார்டு இல்லை." என்று பொய் சொன்னாள்.
இசை “அது ஒன்னும் பிரச்சனை இல்ல.
UIDAI வெப்சைட்ல இருந்து உன்னோட ஈ ஆதார் கார்டு டவுன்லோட் பண்ணிக்கலாம்.
நம்ம மொபைலுக்கு வர ஓ. டி. பி. ஐ பாத்து என்டர் மட்டும் பண்ணா போதும்.
மொபைலையே டவுன்லோட் பண்ணிக்கலாம்.” என்று சொல்ல,
“என் மொபைல் தான் தொலைஞ்சு போயிருச்சுல்ல..
அப்புறம் எப்படி என் ஓல்ட் மொபைல் நம்பருக்கு வர ஓ.டி.பி. ஐ பாக்க முடியும்?” என்று அவன்டமே கேட்டாள் பிரியா.
“ஆமால்ல.. நீ தான் வந்தோனே சொன்னியே..
நான் தான் மறந்துட்டேன்.
பேசாம உன் மொபைல் காணாம போயிருச்சுன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்துடலாமா?” என்று இசை கேட்க,
“வேணா அந்த மொபைல் போனா போட்டும்.
அதுக்காக எல்லாம் என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டு இருக்க முடியாது." என்று கேஷ்வலாக சொன்னாள் பிரியா.
அவளுக்கு தனதே ஒரு லட்சத்து 90 ஆயிரம் மதிப்புடைய பிராண்ட் நியூ மொபைல் ஃபோனை விட,
தங்களுடைய பாதுகாப்பு தான் முக்கியமாக இருந்தது.
அதனால் தான் வரும் வழியில் அதை எளிதாக தூக்கி எறிந்து விட்டாள்.
“ ஓகே அதுவும் கரெக்ட் தான்.
நான் வேணா என் ஆதார் கார்ட யூஸ் பண்ணி உனக்கு நியூ சிம் வாங்கி தரட்டுமா?" என்று என்று அவளிடம் கேட்ட இசைக்கு,
அப்போது தான் அவன் காலேஜ் படிக்கும் போது உபயோகப்படுத்திய சிம்மை இப்போது அவன் உபயோகப்படுத்தாமல் வைத்து இருப்பது ஞாபகம் வந்தது.
அதனால், “இல்ல வேண்டாம்.
என் கிட்டயே இன்னொரு சிம் இருக்கு.
நான் இப்ப அத யூஸ் பண்றது இல்ல.
அந்த சிம்முக்கு ரீசார்ஜ் பண்ணாததுனால இன்கமிங் அண்ட் அவுட்கோயிங்கை கட் பண்ணிட்டாங்க.
உனக்கு ஓகேனானா சொல்லு..
நான் அந்த சிம்மையே உனக்கு ரீசார்ஜ் பண்ணி, ரீஆக்டிவேட் பண்ணி தரேன்." என்று கேட்டான் இசை.
சில நொடிகள் அமைதியாக யோசித்துப் பார்த்தாள் பிரியா.
அவன் சொல்வதை போல் செய்வதை தவிர தனக்கு வேறு எந்த ஆப்ஷனும் இல்லை என்று நினைத்து அதற்கு ஒப்புக்கொண்டாள்.
அவள் தனது நம்பரையே பயன்படுத்த ஒப்பு கொண்டு விட்டதை நினைத்து மகிழ்ந்த இசை,
பிரியாவிடம் இருந்து அவளது ஃபோனை வாங்கி தனது மொபைல் ஃபோனில் இருந்த சிம்மை கழட்டி அதில் போட்டு,
அந்த நம்பருக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு, முதல் முதலில் அவளது மொபைல் ஃபோனில் தனது நம்பரை காண்டாக்ட்டில் சேவ் செய்தான்.
பிரியாவிற்காக அவன் செய்யும் ஒவ்வொரு சிறிய விஷயங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவை அவனுக்கு மன நிம்மதியை கொடுத்தது.
பின் எதற்கும் இருக்கட்டுமே என்று நினைத்த இசை பிரியாவின் மொபைலில்... ஜீவா, ஸ்வேதா, சந்திரன், என தனது நண்பர்களின் நம்பரையும் சேவ் செய்து அவளிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட பிரியா, அவன் தனது நம்பருக்கு ரீசார்ஜ் செய்த பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு இசையை நன்றியோடு பார்த்து
“தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்." என்று சிறு புன்னகையுடன் சொன்னாள்.
ஏற்கனவே மொபைல் ஃபோனை வாங்கியபோது அவள் தான் கொடுத்த பணத்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி அவனை திட்டியது அவனுக்கு ஞாபகம் வந்தது.
அதனால் எதுவும் பேசாமல் அவள் கொடுத்த பணத்தை பெற்று கொண்ட இசை,
பதிலுக்கு அவளைப் பார்த்து சினேகமாக புன்னகைத்து “நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு எல்லாம் நான் உனக்கு பெருசா எதுவும் பண்ணிரல." என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த பிரியா, “நான் இருக்கிற சிச்சுவேஷன்ல, நீ எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்கேன்னு உனக்கே தெரியாது." என்றாள் ஒரு உள்ள அர்த்தத்துடன்.
டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்தியசாலை இசையின் உணவகத்திற்கு மிக அருகிலேயே இருப்பதால், பிரியாவும், ராகுலும், இசையையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு தங்களது அம்மாவை பார்ப்பதற்காக நடந்தே அங்கே சென்றனர்.
பிரியா நடுவில் நடக்க அவளது ஒரு பக்கம் ராகுலும், இன்னொரு பக்கம் இசையும், அவளுடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
இரவு நேர தென்றல் காற்று அவர்களை தழுவ அதில் சிலாகித்துப் போன இசை, தன்னுடன் வந்து கொண்டு இருக்கும் பிரியாவை ரசித்தப்படியே தெருவில் நடந்தான்.
இந்தப் பாதை இப்படியே நீண்டு கொண்டே செல்ல வேண்டும் என்று அவனா மனம் அவனுக்குத் தெரிந்த எல்லா கடவுள்களையும் பிரார்த்தித்தது.
நீ என்னுடன் காதல் மொழிகள் பேசவில்லை என்றாலும் நீயும், நானும், இந்த சாலையில் சேர்ந்து நடக்கையிலே...
எதேர்ச்சியாக என் தோளை உரசும் உன் தோள்கள், என்னை தொடாமல் தொட்டுச் செல்லும் உன் கூந்தல்...
பல காதல் மாயைகள் சத்தமின்றி செய்து என்னுள் மின்சாரத்தை பாய்ச்சுதடி...
இதுவரை வெளி வர மனமின்றி என்னை நானே ஒரு கண்ணாடி கூண்டுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு,
சுவாசத்திற்காக திணறியபடி மரணத்திற்காக காத்திருந்தேன்.
திடீரென்று இதமான சாரல் மழையாய் வந்து...
என் இதயத்தை தாக்கி, எனக்கு மறு வாழ்வு தந்த என் காதல் தேவதையே...
நீ என்னை எனது கண்ணாடி சிறையில் இருந்து மீட்டு விட்டாய்.
என் கரம் கோர்த்து, உன் சுவாசத்தை என் உயிரில் சேர்த்து, எனக்கு உயிர் பிச்சை போடுவாயா...??? என்று இசை கண்களில் காதலை தேக்கி வைத்து அவன் தன் யாழினியாகவே பார்க்கும் பிரியாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் வருவாள்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.