அத்தியாயம்: 7
ரதி தனது அம்மா சுட்ட இட்லியை பற்றி ரோஜா பாட்டியிடம் குறை சொல்ல, பாட்டி அன்னலட்சுமிக்கு வக்காலத்து வாங்குகிறார். அதனால் “நீ என்னைக்கு ரோசா உன் மருமகள விட்டுக் கொடுத்து இருக்க..!!" என்று கேட்டுவிட்டு சிரித்தாள் ரதி. அப்போது சரியாக அன்னலக்ஷ்மி கிச்சனிலிருந்து பூரியை கொண்டு வந்து தனது மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துக் கொண்டு இருக்க, “அன்னம் எனக்கு மருமக இல்ல. அவ என் மகள் மாதிரி." என்று ஒருவித ஃபீலிங் உடன் சொன்னாள் பாட்டி.
அதனால் கையில் கரண்டியுடன் தன் மாமியாரை திரும்பி பார்த்த அன்னலட்சுமி “ஆமா.. ஆமா.. அத்தை. காலம் போன கடைசியில எல்லா மாமியாருக்கும் அவங்க மருமக மகளா தான் தெரியுவாங்க. ஏன்னா அவங்க தானே உங்களை பாத்துக்கிறாங்க..!! ஆனா நான் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தப்ப, நீங்க என்ன எப்படி எல்லாம் கொடுமை படுத்துனீங்க? அதை எல்லாம் மறந்துட்டு உங்க மகன் போனதுக்கப்புறமும் நான் தான் உங்களை என் அம்மா மாதிரி நினைச்சு நல்லா பார்த்துக்கிறேன்." என்று சொல்ல சிரித்து சமாளித்த பாட்டி, “அது ஏதோ புதுசா மாமியார் ஆன திமிர்ல என் மாமியார் எனக்கு பண்ணத எல்லாம் நான் உனக்கு பண்ணிட்டேன். ஆனா உன் நல்ல குணத்தை புரிந்து கொண்டதுக்கு அப்புறம் நான் அப்படி எல்லாம் பண்ணவே இல்லையேடி..!!!" என்றார்.
“ஆமாமா.. அப்படின்னு நீங்களே சொல்லிக்கோங்க." என்ற அன்னலட்சுமி கிச்சன் -க்கு சென்று விட்டாள். அதனால் ரதி “என்ன உன் மருமகள் கரெக்டா டைம் பார்த்து வார்ற மாதிரி இருக்கு..!! முன்னாடி எல்லாம் நீ சரியான சூனியக்காரி கிழவியா இருந்திருப்ப போலவே! இத்தனை வருஷமா எனக்கு இது தெரியாம போயிடுச்சு." என்று கிண்டலாக சொல்லிவிட்டு சிரிக்க, “அட போடி அவ என்னமோ சொல்லிட்டு போறா. அவ சொல்றதுக்கு தகுந்த மாதிரி நானும் அப்ப எல்லாம் இவளை கொடுமைப்படுத்தினேன் தான். அதையெல்லாம் நான் இல்லைன்னு சொல்லலையே.. ஆனா அதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு என் பையன் போனதுக்கப்புறம் உங்க எல்லாரையும் நான் நல்லா பாத்துக்கிட்டேன்." என்று கண் கலங்கச் சொன்னார் ரோஜா பாட்டி.
சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்த ரதி தனது பாட்டியின் அருகே சென்று ஒரு கையால் அவளை கட்டி அணைத்து “எனக்கு தெரியும் பாட்டி. நான் சும்மா உன்னை கலாய்க்க தான் அப்டி சொன்னேன். நீ feel பண்ணாத." என்று சொல்ல, “ஆமா இந்த காலம் போன கடைசியில நான் இதையெல்லாம் நெனச்சு feel பண்ணி மட்டும் என்ன ஆகப்போகுது? நான் நாடகம் பார்க்கிறேன் நீ நகரு." என்ற ரோஜா பாட்டி தனது புட்டி கண்ணாடியை சரி செய்தபடி தன் கண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் டிவி பார்க்க தொடங்கினார்.
அதனால் கிச்சன்-க்கு சென்று தன் கையில் இருந்த தட்டை சிங்க்இல் போட்டு விட்டு கை கழுவி விட்டு வந்த ரதி, நேராக தனது அறைக்கு சென்றாள். தானும் அவளை பின் தொடர்ந்து சென்றான் விக்ரம். கட்டிலில் அமர்ந்த ரதி சில நிமிடங்கள் தனது மொபைல் போனை நோண்டிக் கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு மீண்டும் விக்ரமை பற்றிய ஞாபகம் வர, ஆகாஷுக்கு கால் செய்தாள். அப்போதும் ஸ்விட்ச் ஆஃப் என்று தான் வந்தது. அதனால் கடுப்பான ரதி “ஒருவேளை அங்க ஏதோ பிரச்சனையா இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இல்லன்னா அவர யாரோ ஒருத்தர் கத்தில குத்த போறாங்க..!! அதான் இந்த ஆகாஷ் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு எங்கேயோ தலை மறைவு ஆயிட்டான் போல." என்று நினைத்து தன் போனை ஓரமாக வைத்துவிட்டு, எழுந்து சென்று பேப்பரையும் டிராயிங் வரைவதற்காக சில பென்சில்களையும் பிற உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
அதை எல்லாம் கவனித்த விக்ரம் “இவ என்ன இந்த நேரத்துல draw பண்ண போறாளா?" என்று நினைத்து தானும் அவள் அருகில் சென்று அமர்ந்தான். ஒரு A4 ஷீட் பேப்பரை எடுத்து Pad இல் சொருகிய ரதி, அவள் போனில் இருந்த ஒரு ஆணின் புகைப்படத்தை பார்த்து வரைய தொடங்கினாள். அவள் வைத்திருந்த போட்டோவில் இருந்தவனும் பார்க்க Handsomeஆக தான் இருந்தான். அதனால் அவனைப் பார்த்த விக்ரம் “ஒருவேளை இவன் இவ பாய் Friendஆ இருப்பானோ?" என்று நினைத்தவன், “இவளுக்கு ஆல்ரெடி ஆள் இருந்தா.. இவ ஏன் வந்த மாப்பிள்ளை இவளுக்கு ஓகே சொல்லலைன்னு Feel பண்ண போறா?" என்று யோசித்து குழம்பினான்.
பேப்பரில் வரைந்து கொண்டு இருந்த ரதி விக்ரம் பற்றிய சிந்தனைகளால் டிஸ்டர்ப் ஆகி சரியாக வரமுடியாமல் கிறுக்கி கிறுக்கி நிறைய பேப்பர்களை கசக்கி தன் அறையில் இருந்து வெளியே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக சென்ற பாட்டி அதை கவனித்து விட்டு உள்ளே வந்து ரதியின் அருகே அமர்ந்து, “இன்னிக்கும் உனக்கு இந்த ட்ராயிங் பண்ற வேலை வந்துருச்சா? ஏற்கனவே ராத்திரி வரைக்கும் வேலை செஞ்சிட்டு தானே வீட்டுக்கு வர.. நைட் கூட தூங்காம எதுக்கு இந்த வேலையெல்லாம் செஞ்சுகிட்டு இருக்க நீ?" என்று கேட்டார். சலிப்புடன் பாட்டியின் தோளில் சாய்ந்த ரதி “நான் வேற என்ன பாட்டி பண்றது? மகேஷுக்கு எப்படியோ இந்த வருஷம் ஸ்கூல் fees எல்லாம் கட்டி முடிச்சிட்டேன். அவ்ளோ தான் இப்போ இந்த எக்ஸாம் வந்துருச்சுன்னா, அவன் 11th Std போயிடுவான். அப்புறம் அடுத்தடுத்து term fees, Book Fees எல்லாம் கட்டனுமே... அதையெல்லாம் நான் என் மாச சம்பளத்தை மட்டும் வைத்து எப்படி சமாளிக்கிறது? அதான் வர்ற வேலை எல்லாத்தையும் வேணாம்னு சொல்லாம வாங்கி பண்ணிக்கிட்டு இருக்கேன்." என்றாள்.
“அதான் உங்க அம்மா பாத்துக்குறேன்னு சொன்னாள்ல... அப்புறம் நீ ஏன் இப்படி எல்லாம் பண்ற? இதனால தான் அவளுக்கு உன் மேல கோபம் வருது. உன்ன உடனே புடிச்சு எவனுக்காவது கட்டி வைக்கணும்னு நெனச்சு அவசரப்படுறா. உன்ன வேலைக்கு அனுப்பி உன் காசுல குடும்ப செலவை சமாளிக்கிறதே அன்னலட்சுமிக்கு பிடிக்கல ரதி." என்று பாட்டி சொல்ல, “அட போ ரோஜா..!! நானும் வேலைக்கு போகவில்லை என்றால், நம்ம எல்லாரும் சோத்துக்கு நடு தெருவுல போய் பிச்சை தான் எடுக்கணும். உன் மருமக இட்லி சுட்டு வித்து உடனே நம்ப அம்பானி ஆகுறதுக்கு இது என்ன சினிமாவா? நான் ஏதாவது கேட்டுட்டா உடனே இந்த அம்மா கல்யாண பேச்சை எடுத்து என் வாயை அடைச்சிடுது. நான் என்ன கல்யாணம் வேணாம்னு ஒத்த கால்லயா நிக்கிறேன்? அது நடக்கலைன்னா ஆளாளுக்கு என் மேல கோவப்படுறீங்க. என்னை எவனுக்கும் பிடிக்கலைன்னா நான் என்ன பண்றது?" என்று கேட்டவள் ரோஜாவிடம் இருந்து பிரிந்து “நீயே என் மூஞ்ச நல்லா பாரு பாட்டி. இந்த மூஞ்சிய எல்லாம் யாருக்கு பிடிக்கும்? இந்த வயசுலயும் நீ கூட அழகா இருக்க. சின்ன வயசுல என்ன மாதிரி இருந்தப்போ நீ எவ்ளோ அழகா இருந்திருப்ப...!! நான் மட்டும் ஏன் இப்படி குண்டா அசிங்கமா இருக்கேன்? அம்மா சொல்ற மாதிரி நெஜமாவே நான் நிறைய சாப்பிடுகிறேனா? ஆனா எனக்கு பசிக்குதே...!! நான் என்ன பண்றது? ஒருவேளை எனக்கு அடிக்கடி பசி எடுக்கிற மாதிரி ஏதாவது வியாதி இருக்குமோ..!! எனக்கு என்னன்னு ஒன்னும் புரியல. ஆனா நடக்கிறது எல்லாத்தையும் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு." என்றுவிட்டு கண் கலங்கினாள்.
அவள் அழுவதை அவளது பாட்டி பார்த்து வருத்தப்படுவதை அவள் விரும்பவில்லை. அதனால் உடனே தன் முகத்தை மறைப்பதற்காக ரோஜாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரதி. ஆதரவாக தனது பேத்தியின் தலையை வருடிய ரோஜா பாட்டி “உனக்கு என்ன ரதிமா குறை? நீ சின்ன வயசுல எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா? நீ பார்க்கவே நல்ல கொழு கொழுன்னு அழகா இருக்கேனு தான் உனக்கு நான் ரதிதேவின்னு பெயரே வச்சேன். நீ ஏன் உன்னை யாருக்கும் படிக்காதான்னு நெனச்சு வருத்தப்படுற? நீ என்ன சினிமா நடிகையா உன்னை எல்லாருக்கும் பிடிக்கணும்னு ஆசைப்படுறதுக்கு..!! உனக்கே உனக்கென எங்கேயாவது ஒருத்தன் பிறந்து இருப்பான். அவன் நிச்சயமாக உன்னை தேடி சீக்கிரமா வருவான். அவனுக்கு எங்க பப்ளிமாஸ் ரதியை ரொம்ப பிடிக்கும். அவன் வந்தியத்தேவன் குதிரையில வர்ற மாதிரி இப்போ இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி கார்ல வந்து உன்ன தூக்கிட்டு போவான்." என்றார்.
தன் பாட்டி சொன்னதை கற்பனை செய்து பார்த்த ரதிக்கு உண்மையில் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது. அதனால் லேசாக சிரித்தவள், “நீ சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில நடக்கிறதுக்கு நான் ஒன்னும் சிண்டரெல்லாவும் இல்ல. இது சினிமாவும் இல்லை. சும்மா எதாவது சொல்லனும்னு சொல்லாத. இந்த காலத்துல எல்லா பொண்ணுங்களும் என்னென்னவோ பண்ணி அழகா இருக்காளுங்க. அவளுக எல்லாத்தையும் விட்டுட்டு எனக்காக தான் வந்தியத்தேவன் மாதிரி வரப்போறார்களாக்கும்..!!!" என்று சொல்லி சலித்துக் கொண்டாள்.
ஆனால் அப்போதும் “நீ வேணா பாரு. நான் சொன்னது கண்டிப்பா நடக்கும். நீ சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு தூங்கு." என்ற ரோஜா பாட்டி அவளது அறையை விட்டு வெளியேறினாள். ஒரு பெரு மூச்சு விட்ட ரதி மீண்டும் பேப்பரில் படம் வரைய தொடங்கினாள். அப்போது அந்த அறைக்குள் பறந்து வந்த சிம்ரன் கிளி ரதியின் தோள்களில் அமர்ந்து
கீ... கீ... என்று கத்தியது.
நேசம் தொடரும்..
amazon-ல் படிக்க..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.