CHAPTER-7

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
க‌ண் இமைக்கும் நொடிக்குள் அனைத்தும் ந‌ட‌ந்துவிட‌, ச‌ந்ராவோ நெஞ்சில் இர‌த்த‌ம் தெறித்து நிற்கும் அர்ஜுனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அப்போது அவ‌ளின் இத‌ழ்க‌ள் ம‌ட்டும் மெல்ல‌ பிரிந்து, "அர்ஜுன்!" என்று ஒலிக்க‌, உட‌னே சுருண்டு த‌ரையில் ச‌ரிந்த‌வ‌னை த‌ன் ம‌டியில் தாங்கினாள் ச‌ந்ரா.

இங்கு துப்பாக்கியை இற‌க்கிய‌வ‌னோ உட‌னே த‌ன் மொபைலை எடுத்து த‌ன் பாஸிற்கு கால் செய்து, "அவ‌ள‌ கொல்லும்போது, அந்த‌ அர்ஜுன் எடையில‌ வ‌ந்துட்டான் பாஸ்." என்று கூற‌,

அதை கேட்ட‌ அவ‌ன் பாஸ், "ரொம்ப‌ ந‌ல்ல‌தா போச்சு. அவ‌னையும் சேத்து முடிச்சிருச்சு." என்றான்.

அத‌ற்கு அவ‌ன், "ஓகே பாஸ்." என்று கூறி இணைப்பை துண்டித்த‌வ‌ன், உட‌னே த‌ன் துப்பாக்கியை தூக்கி பிடித்து மீண்டும் அவ‌ர்க‌ளுக்கு குறி வைக்க‌, அங்கே அவ‌ர்க‌ளை காண‌வில்லை.

அதை பார்த்து அதிர்ச்சிய‌டைந்த‌வ‌ன், இருவ‌ரும் எங்கே சென்ற‌ன‌ர் என்று தேட‌, அப்போதுதான் கீழே அடிப்ப‌ட்ட‌ அர்ஜுனை தாங்கிக்கொண்டே அவ‌னை த‌ன் காருக்கு அழைத்து வ‌ந்த‌ ச‌ந்ரா, அவ‌னை காருக்குள் அம‌ர‌ வைத்துவிட்டு க‌த‌வை மூடினாள். அப்போது இங்கு அவ‌ர்க‌ளை தேடிக்கொண்டிருந்த‌வ‌னின் பார்வை ச‌ந்ராவின் மீது விழ‌, அங்கு ச‌ந்ராவும் காரின் ஓட்டுந‌ர் இருக்கையில் அம‌ர்ந்தாள். அதை மேலிருந்து பார்த்த‌வ‌ன் குரோத‌மான‌ புன்ன‌கையுட‌ன் அந்த‌ காருக்கு குறி வைக்க‌, அந்த‌ கார் ந‌க‌ர்ந்து வெளியில் செல்ல‌, அந்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியே அங்கு குறி வைக்க‌ முடியாம‌ல் அருகில் இருந்த‌ அறைக்கு சென்று, அங்குள்ள‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியே அவ‌ர்க‌ளின் காருக்கு குறி வைத்தான். அங்கிருந்து அந்த‌ காரின் பெட்ரோல் டேக்கிற்கு தெளிவாக‌ குறி வைத்த‌வ‌ன், நொடியும் யோசிக்காம‌ல் சுட்டுவிட‌, வெளி வ‌ந்த‌ தோட்டா ச‌ரியாக‌ பாய்ந்து, அந்த‌ காரே நெருப்பாய் வெடித்து சித‌றிய‌து. ஆகாய‌த்தில் ப‌ற‌ந்த‌ அந்த‌ கார், அக்கினிக‌ர‌மாய் த‌ரையை தொடுமுன் நொறுங்கி த‌னி த‌னியாய் சித‌ற‌, அதை பார்த்து வெற்றி புன்ன‌கை விடுத்த‌வ‌ன், உட‌னே த‌ன் பாஸிற்கு கால் செய்து த‌க‌வ‌லை கூறினான்.

அதை கேட்டு அவ‌னின் இத‌ழ்க‌ளும் குரோத‌மாக‌ புன்ன‌கைத்து, "குட்" என்று கூறி இணைப்பை துண்டித்தான்.

அத‌ன் பிற‌கு த‌ன் வேலை ந‌ல்ல‌ப‌டியாக‌ முடிந்த‌து என்று அங்கிருந்து கிள‌ம்பிவிட்டான். வெடித்து சித‌றிய‌ அதே காரின் அருகில் இருந்த‌ முன் வாச‌லுக்குள்ளே தீர்க்க‌மாக‌ க‌வ‌னித்தால், பின் வாச‌ல் வ‌ழியாக‌ ஒரு க‌ருப்பு நிற‌ கார் சென்ற‌து. அதை அவ‌ன் க‌வ‌னிக்க‌வில்லை.
அவ‌ன் இற‌ந்துவிட்ட‌தாக‌ எண்ணிய‌ ச‌ந்ராவும் அர்ஜுனும் பாதுகாப்பாக‌ அந்த‌ க‌ருப்பு நிற‌ காரில் சென்றுக்கொண்டிருந்த‌ன‌ர்.

யாரோ எங்கோ இருந்து த‌ங்க‌ளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்க‌ள் என்ப‌து தெரிந்தும், அவ‌ர்க‌ள் முன்பே த‌ப்ப‌ முய‌ற்சிப்ப‌து முட்டாள்த‌ன‌ம் என்று ச‌ந்ராவிற்கு ந‌ன்றாக‌வே தெரியும். அத‌னால்தான் த‌ன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் த‌ன்னுடைய‌ காரில் அர்ஜுனை அம‌ர்த்திவிட்டு, அவ‌ள் ம‌ட்டும் வீட்டின் முன் சென்று த‌ன் த‌ந்தையுடைய‌ வெண்ணிற‌ காரில் அவ‌ன் பார்க்கும் வ‌கையில் ஏறினாள். அதைதான் அவ‌னும் க‌வ‌னித்து அந்த‌ காரை குறி பார்த்து சுட்டிருந்தான். ஆனால் அவ‌ன் அடுத்த‌ அறைக்கு சென்று அங்கிருந்து குறி வைத்த‌ கேப்பில், வாச‌லை தாண்டும் முன்பே அதிலிருந்து குதித்திருந்தாள் ச‌ந்ரா. ஆனால் அவ‌ள் க‌ணித்த‌தோ வாச‌லை தாண்டும் முன் ஒரு ம‌றைப்பு வ‌ரும், அத‌ற்குள் குதித்துவிட‌லாம் என்றுதான். ஆனால் அதையும் அவ‌ன் நின்றிருந்த‌ இட‌த்திலிருந்து தெளிவாக‌ பார்த்துவிட‌ முடியும் என்ப‌து அவ‌ளுக்கு தெரிய‌வில்லை. ஆனால் அவ‌ளின் ந‌ல்ல‌ நேர‌மோ இல்லை அவ‌னின் கெட்ட‌ நேர‌மோ, அவ‌ள் குதிக்கும் நிமிட‌ம் அவ‌ன் ப‌க்க‌த்து அறைக்கு சென்று த‌ன் குறியை ச‌ரி பார்த்தான். அந்த‌ இடைவெளியில் அவ‌ளும் குதித்துவிட‌ சுல‌ப‌மாக இருவ‌ரும் த‌ப்பித்துவிட்ட‌ன‌ர். வாச‌லிலிருந்து வெளியேறிய‌ வெறும் கார் ம‌ட்டுமே வெடித்து சித‌றியிருந்த‌து.

இங்கு முன் சீட்டில் ஓட்டுந‌ர் இருக்கையில் அம‌ர்ந்த‌ப‌டி விரைவாக‌ காரை ஓட்டிக்கொண்டிருந்த‌ ச‌ந்ராவின், க‌ண்க‌ளில் க‌ண்ணீர் நிற்காம‌ல் வ‌ந்துக்கொண்டிருக்க‌, அவ‌ளின் இதய‌மோ ப‌த‌ற்ற‌த்தில் வேக‌மாக‌ துடித்துக்கொண்டிருந்த‌து. அவ‌ள் க‌ண்க‌ளோ சாலையும் பார்த்துக்கொண்டு நொடிக்கு ஒரு முறை த‌ன் அருகில் அம‌ர்ந்திருந்த‌வ‌னையும் பார்த்துக்கொண்டே இருந்த‌து.

அவ‌னோ இர‌த்த‌ம் வ‌ழிந்துக்கொண்டிருக்கும் அவ‌ன் நெஞ்சு பகுதியை ஒற்றை கையால் அழுத்தி பிடித்த‌ப‌டி, அரை ம‌ய‌க்க‌ நிலையில் இருந்தான். அவ‌ன் த‌ன் சுய‌நினைவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இழ‌ந்துக்கொண்டிருக்கிறான் என்ப‌தை க‌வ‌னித்த‌ ச‌ந்ரா ப‌த‌றி, "அர்ஜுன் ப்ளீஸ். க‌ண்ண‌ ம‌ட்டும் மூடாத அர்ஜுன். ப்ளீஸ் என்ன‌ பாரு. எங்கிட்ட‌ எதாவ‌து பேசு." என்று கூறிய‌ப‌டி காரை வேக‌மாக‌ இய‌க்க‌,

அவ‌ளின் குர‌லில் க‌டின‌ப்ப‌ட்டு சுய‌நினைவை இழுத்து பிடித்த‌வ‌ன், "ச‌ந்ரா! ச‌ந்ரா!" என்று ம‌ட்டும் மெல்ல‌ வ‌லியில் முன‌ங்கிக்கொண்டிருந்தான்.

அதை க‌ண்ட‌ ச‌ந்ராவிற்கோ ப‌ய‌மும் ப‌த‌ட்ட‌மும் அதிக‌ரித்துக்கொண்டே போக‌, அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ள், "ஏ அர்ஜுன் இப்பிடி பண்ண‌? நீ எதுக்காக‌ குறுக்க‌ வ‌ந்த‌? சாக‌ வேண்டிய‌வ‌ நாந்தா. என்ன‌ எதுக்காக‌ காப்பாத்துன‌?" என்று வேத‌னையுட‌ன் கூறிய‌வ‌ளுக்கு அவ‌னை எப்ப‌டியாவ‌து காப்பாற்றியே தீர‌ வேண்டும் என்று ம‌ட்டும்தான் ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌து.

அவ‌னோ தொட‌ர்ந்து "ச‌ந்ரா ச‌ந்ரா" என்று முன‌ங்கிக்கொண்டே இருக்க‌, "ப்ளீஸ் க‌ண்ண‌ ம‌ட்டும் மூடிராத‌ அர்ஜுன். உன‌க்கு ஒன்னும் ஆகாது." என்று கூறிக்கொண்டே இன்னும் வேக‌மாக‌ காரை ஓட்டினாள்.

அடுத்த‌ ப‌த்து நிமிட‌த்தில் ம‌ருத்துவ‌ம‌னையை அடைந்துவிட‌, உட‌னே இற‌ங்கி அர்ஜுனின் ப‌க்க‌ க‌த‌வை திற‌ந்த‌வ‌ள், அவ‌னை இற‌க்கும் முன் அங்கிருந்த‌ வார்டு பாய்ஸ் வ‌ந்து அவ‌னை ஸ்ட்ர‌ச்ச‌ரில் ஏற்றின‌ர்.

பிற‌கு அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குள் எடுத்து செல்ல‌, அவ‌னை பார்த்த‌ ம‌ருத்துவ‌ர், "என்ன‌ ஆச்சு?" என்று ச‌ந்ராவிட‌ம் கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "ஷூட் ப‌ண்ணிட்டாங்க‌ டாக்ட‌ர்." என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கூறினாள்.

அத‌ற்கு ம‌ருத்துவ‌ர், "ஷூட்டா?அப்பிடின்னா மொத‌ல்ல‌ போலீஸ் க‌ம்ளைன்ட் குடுத்தீங்க‌ளா?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா திரும்பி அர்ஜுனின் நிலையை பார்த்துவிட்டு, நேர‌ம் க‌ட‌க்க‌ விரும்பாம‌ல் ம‌ருத்துவ‌ரை பார்த்து, "குடுத்தாச்சு டாக்ட‌ர். நீங்க‌ ப்ளீஸ் ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் ப‌ண்ணுங்க‌." என்று பொய் கூறினாள்.

அதை கேட்ட‌ ம‌ருத்த‌வ‌ர், "ஓகே டோன்ட் வ‌ரி." என்று கூறி "ந‌ர்ஸ்!" என்று அழைத்து அர்ஜுனை ஐ.சி.யூவிற்குள் அழைத்து சென்ற‌ன‌ர். பிற‌கு அர்ஜுனுக்கு தீவிர‌ சிகிச்சை பிரிவில் சிகிச்சை ந‌டைபெற்ற‌து. அவ‌ற்றை வெளியில் இருந்து ப‌த‌ற்ற‌த்துட‌ன் பார்த்துக்கொண்டிருந்த‌ ச‌ந்ராவிற்கு க‌ண்ணீர் நிற்க‌வே இல்லை. நேற்றுதான் த‌ன் த‌ந்தையை இழ‌ந்திருக்கிறாள். அத‌ற்குள் இன்று மீண்டும் ஒரு இக்கட்டான‌ நிலையில் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் வ‌ந்து நிற்க‌ அவ‌ளின் உட‌லில் ம‌ட்டும் அல்ல‌, ம‌ன‌தில்கூட‌ தெம்பில்லை. அதுவும் அர்ஜுனின் இந்த‌ நிலைக்கு தான் தான் கார‌ண‌ம் என்று எண்ணும்போது, அவ‌ளால் நிம்ம‌தியாக‌ மூச்சுக்கூட‌ விட‌க்கூட‌ முடிய‌வில்லை. குற்ற‌ உண‌ர்வே அவ‌ளை கொன்று திண்ற‌து. யார் அவ‌ர்க‌ள், எத‌ற்காக‌ த‌ன்னை கொல்ல‌ நினைக்கிறார்க‌ள் என்ற‌ கேள்வியைவிட‌, யார் இவ‌ன் எத‌ற்காக‌ த‌ன்னை காப்பாற்ற‌ அவ‌ன் உயிரையே கொடுக்கிறான் என்ற‌ கேள்விதான் முத‌லில் வ‌ந்து நின்ற‌து. இருவ‌ருக்கும் நீண்ட‌ நாள்கூட‌ ப‌ழ‌க்க‌ம் இல்லை, ச‌ந்தித்த இர‌ண்டே நாட்க‌ளில் ந‌ட்புக்கூட‌ இவ்வ‌ள‌வு ஆழ‌மாக‌ உருவாகியிருக்காது. ஆனால் இவ‌ன் செய்த‌து அதையும் தாண்டிய‌ ஒரு செய‌ல். த‌ன் உயிரை அவ‌ன் உயிரைவிட‌ துச்ச‌மாக‌ எண்ணிய‌து ஏன்? தோட்டாவை நெஞ்சில் வாங்கும் முன் ஒரு நொடிக்கூட‌வா அவ‌னின் ம‌ன‌ம் த‌டுமாற‌வில்லை? அவ்வாறு த‌டுமாறியிருந்தாள் இந்நிமிட‌ம் அவ‌ன் அல்ல‌, இவ‌ள்தான் இந்நிலையில் இருந்திருப்பாள் என்று அவ‌ளுக்கும் தெரியும்.

அதை எண்ணி பார்த்த‌வ‌ளுக்கு அவ‌னின் செய‌ல் பெரும் விய‌ப்பாக‌தான் இருந்த‌து. அவ்வாறான‌ எண்ண‌ங்க‌ளில் மூழ்கிய‌ப‌டி உள்ளே சிகிச்சையில் இருக்கும் அவ‌னை வெளியிருந்து பார்த்து க‌ண்ணீர்விட்ட‌வ‌ள், "உன‌க்கு ஒன்னும் ஆகாது அர்ஜுன். நா ஆக‌வும் விட‌மாட்டேன்." என்று த‌ன‌க்குள்ளே கூறிக்கொண்டு அங்கிருந்த‌ இருக்கையில் சென்று அம‌ர்ந்தாள்.

தொட‌ர்ந்து சிகிச்சை ந‌டைப்பெற்றுக்கொண்டிருக்க‌, ச‌ந்ராவும் வெளியில் ப‌ற்ற‌த்துட‌ன் அம‌ர்ந்திருந்த‌வ‌ள், ஐந்து நிமிட‌த்திற்கு ஒருமுறை எழுந்து சென்று வார்டுக்குள் உள்ள‌ அர்ஜுனை பார்த்துக்கொண்டே இருந்தாள். அடுத்த‌ 2 ம‌ணி நேர‌ம் க‌ழித்து ம‌ருத்துவ‌ர் வெளியில் வ‌ர‌, அவ‌ரை பார்த்த‌வுட‌ன் ப‌த‌றி எழுந்து அவ‌ர் அருகில் சென்ற‌ ச‌ந்ரா, "டாக்ட‌ர்! அர்ஜுன் எப்ப‌டி இருக்கான்?" என்று கேட்க‌,

அத‌ற்கு ம‌ருத்துவ‌ர், "அவ‌ர் நெல‌ம‌ ரொம்ப‌ க்ரிட்டிக‌லா இருக்கு. எங்க‌ளால‌ முடிஞ்ச‌ வ‌ரைக்கும் போராடி பாத்துட்டோம்." என்று கூற‌,

அதை கேட்டு அவ‌ளின் ப‌ய‌ம் அதிக‌ரிக்க‌, "ப்ளீஸ் டாக்ட‌ர். எப்பிடியாவ‌து அவ‌ன‌ காப்பாத்துங்க‌." என்று கெஞ்சினாள்.

ம‌ருத்துவ‌ர், "இதுக்குமேல‌ எங்க‌ கையில‌ இல்ல‌. சோ நீங்க‌ உள்ள‌ போய் அவ‌ர‌ பாருங்க‌. அவ‌ருகிட்ட‌ இப்ப‌ ரொம்ப‌ நேர‌ம் இல்ல‌." என்றார்.

அதை கேட்டு அதிர்ந்த‌ ச‌ந்ரா, "என்ன‌ டாக்ட‌ர் சொல்றீங்க‌?" என்று கேட்க‌,

ம‌ருத்துவ‌ர், "அவ‌ரு உங்க‌கிட்ட‌ எதோ சொல்ல‌ நெனைக்கிறாரு. நீங்க‌ போய் பாருங்க‌. அவ‌ரு நெல‌ம‌ ரொம்ப‌ கிரிட்டிக்க‌லா இருக்கு." என்று கூறி முடிக்கும் முன், வேக‌மாக‌ ஐ.சி.யூவிற்குள் நுழைந்தாள் ச‌ந்ரா.

பிற‌கு ம‌ருத்துவ‌ர் அங்கிருந்து ந‌ர்ஸ்க‌ளை வெளியில் அழைக்க‌, அனைவ‌ரும் வெளியில் சென்றுவிட்ட‌ன‌ர். அப்போது வேக‌மாக‌ உள்ளே நுழைந்த‌ ச‌ந்ராவிற்கு அவ‌ன் நிலையை க‌ண்ட‌தும் கால்க‌ள் வ‌ர‌வில்லை. க‌ண்க‌ள் மேலும் க‌ல‌ங்க‌ கால்க‌ள் செல்ல‌ ம‌றுக்க‌, த‌ய‌ங்கி நின்ற‌வ‌ளை பார்த்து மெல்ல‌ த‌ன் ப‌க்க‌ம் வ‌ரும்ப‌டி த‌ன் விர‌ல்க‌ளை அசைத்தான் அர்ஜுன்.

அதை பார்த்த‌ பிற‌கே அவ‌ன் அருகில் சென்ற‌வ‌ள், அவ‌ன் அருகில் அம‌ர்ந்து க‌ண்ணீருட‌ன் அவ‌ன் கைக‌ளை ப‌ற்றி, "ஏ அர்ஜுன் இப்பிடி ப‌ண்ண‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் த‌ன் செய‌ற்கை சுவாச‌ க‌ருவியை மெல்ல க‌ழ‌ற்ற‌, உட‌னே அதை த‌டுத்த ச‌ந்ரா, "அர்ஜுன் என்ன‌ ப‌ண்ற‌?" என்று ப‌த‌ற‌, அவ‌ள் கைக‌ளை வில‌க்கிவிட்டு த‌ன் ஆக்சிஜ‌ன் மாஸ்கை க‌ழ‌ற்றி மெல்ல‌ அவ‌ளை பார்த்து, "நா இருக்க‌ போற‌து இன்னும் கொஞ்ச‌ நேர‌ந்தா. அதுக்குள்ள‌ உன்கிட்ட‌ ஒரு விஷ‌ய‌ம் சொல்லி ஆக‌ணும்." என்று வார்த்தைக‌ள் கூட‌ வெளியில் வாராத‌ அள‌விற்கு சோர்வுட‌ன் கூறினான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா, "அப்பிடி சொல்லாத‌ அர்ஜுன். உன‌க்கு ஒன்னும் ஆகாது." என்று கூறி அழுதாள்.

அத‌ற்கு அர்ஜுன் விர‌க்தி புன்ன‌கையுட‌ன், "இல்ல‌ என‌க்கு தெரியும். நா பொழைக்க‌மாட்டேன். நா சொல்லுற‌த‌ த‌ய‌வு செஞ்சு கேளு." என்று சோர்வுட‌ன் கூற‌,

ச‌ந்ரா, "செரி அர்ஜுன் கேக்குறேன், சொல்லு." என்றாள் க‌ண்ணீருட‌ன்.

அத‌ற்குள் அர்ஜுனுக்கு மூச்சு வாங்க‌ ஆர‌ம்பிக்க‌, த‌ன்னை க‌டின‌ப்ப‌ட்டு நிலைப்ப்டுத்திய‌வ‌ன், "உன் அப்பா உன‌க்கு குடுத்த‌ பிராமிஸ‌ பிரேக் ப‌ண்ண‌ மாதிரி, நானும் என் பிராமிஸ‌ பிரேக் ப‌ண்ணிட்டேன்." என்று வ‌ருத்த‌த்துட‌ன் கூறும்போதே அவ‌னின் மூச்சு அடைப்ப‌துப்போல் இருக்க‌, அதில் ப‌த‌றிய‌வ‌ள் அவ‌ன் வாயில் கை வைத்து க‌ண்ணீருட‌ன் பேச‌ வேண்டாம் என்று கூற‌,

அவ‌ள் கையை வில‌க்கிவிட்டு மூச்சு வாங்கிய‌ப‌டியே, "ப்ளீஸ் என்ன‌ முழுசா சொல்ல‌விடு ச‌ந்ரா." என்று கூற‌, அவ‌ளும் க‌ண்ணீருட‌ன் அவ‌னை பார்த்தாள்.

அப்போது அர்ஜுன், "அந்த‌ ச‌த்திய‌த்த‌ என்னால‌ காப்பாத்த‌ முடிய‌ல‌. ஆனா போற‌துக்கு முன்னாடி உன்ன‌ காப்ப‌த்திட்டேங்குற‌ நிம்ம‌தியோட‌ நா போறேன்." என்று கூற‌, ச‌ந்ராவின் க‌ண்க‌ள் மேலும் க‌ல‌ங்கி வேண்டாம் என்று க‌ண்க‌ளால‌ கூறி அழுதாள்.

ஆனால் அவ‌னோ த‌ன் மூச்சை இழுத்து பிடித்த‌ப‌டி, "அப்ற‌ம் இன்னொன்னும் சொல்ல‌ணும் ச‌ந்ரா." என்று கூற‌, அவ‌ளும் க‌ண்ணீருட‌னும் அவ‌னை கேள்வியுட‌னும் பார்க்க‌, அப்போது அர்ஜுனின் மூச்சு அடைத்து அவ‌ன் மூச்சுக்காக‌ சிற‌ம‌ப்ப‌ட்டு இழுத்து, "ச‌ந்ரா!" என்று அவ‌ள் க‌ர‌த்தை இறுக‌ ப‌ற்றிய‌வ‌ன், "ஐ.. ஐ.." என்று கூறுவ‌த‌ற்குள் அவ‌ன் க‌ர‌த்தை இறுக‌ ப‌ற்றிய‌ ச‌ந்ரா ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ன் நிலை க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌, அவ‌னோ "ஐ.." என்று கூறும் முன் அவ‌னின் மூச்சு நின்றிருந்த‌து.

அடுத்த‌ நொடி அதிர்ந்து அவ‌னை பார்த்த‌வ‌ள், அவ‌னிட‌ம் எந்த‌ அசைவும் தெரியாம‌ல் இருக்க‌, மேலும் ப‌த‌றி, "அர்ஜுன்! அர்ஜுன் என்ன‌ பாரு." என்று அவ‌ன் உட‌லை உலுக்கினாள். ஆனால் அவ‌னிட‌ம் எந்த‌ சைவும் தெரியாம‌ல் இருக்க‌, உட‌னே ப‌ய‌ந்து, "டாக்ட‌ர்! டாக்ட‌ர்!" என்று க‌த்தினாள்.

அவ‌ள் ச‌த்த‌ம் கேட்டு உள்ளே வ‌ந்த‌ ம‌ருத்துவ‌ர், உட‌னே அர்ஜுனை ப‌ரிசோதிக்க‌, ச‌ந்ரா ப‌த‌ற்ற‌த்துட‌ன் ம‌ருத்துவ‌ரை பார்க்க‌, அவ‌னை ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ரோ மெல்ல‌ திரும்பி ச‌ந்ராவை பார்த்து, "சாரி. ஹீ இஸ் டெட்." என்றார்.

அதை கேட்டு அதிர்ந்து நின்ற‌ ச‌ந்ரா உட‌னே அர்ஜுனை பார்த்து, "நோ. நோ இப்பிடி ந‌ட‌க்க‌ கூடாது." என்று கூறி வேத‌னையுட‌ன் அவ‌னை உலுக்கி, "அர்ஜுன் எந்திரி! அர்ஜுன் ப்ளீஸ் நீயும் என்ன‌ த‌னியா விட்டுட்டு போகாத‌. ப்ளீஸ் அர்ஜுன் கண்ண தெற." என்று கூற‌,

அவ‌ள் நிலை புரிந்த‌ ம‌ருத்துவ‌ர், "க‌ன்ட்ரோல் யுவ‌ர் செல்ஃப். ப்ளீஸ் ரிலேக்ஸ்." என்று அவ‌ள் தோள்க‌ளை ப‌ற்றினார்.

அத‌ற்குமேல் முடியாம‌ல் ம‌ன‌ம் உடைந்து அழுத‌வ‌ள், அர்ஜுனின் இந்த‌ நிலைக்கு தான் தான் கார‌ண‌ம் என்று எண்ணி குற்ற‌ உண‌ர்வால் நொந்தப‌டி அர்ஜுனை பார்க்க‌, ஏதோ நினைவு வ‌ந்த‌வ‌ள‌ய் த‌ன் இரு கைக‌ளையும் பார்த்தாள். அவ‌ளின் கைக‌ள் முழுக்க‌ அர்ஜுனின் இர‌த்த‌த்தால் நிற‌ப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து.

"உன் க‌ண்ணு முன்னாடியே அந்த‌ உயிர் போகும். அப்போ உன் க‌ண்க‌ள்ல‌ குற்ற‌ உண‌ர்வு நெற‌ஞ்சிருக்கும், உன் கைக‌ள்ல‌ அவ‌னோட‌ இர‌த்த‌ க‌ர‌ ப‌டிஞ்சிருக்கும். அப்போ நீயே என்ன‌ தேடி இங்க‌ வ‌ருவ‌." என்று அந்த‌ சாமியார் கூறிய‌து அவ‌ள் நினைவடுக்கில் வ‌ந்து நின்ற‌து.

அதே ச‌ம‌ய‌ம், "அந்த‌ உயிர‌ உன்னால‌ ம‌ட்டுந்தா காப்பாத்த‌ முடியும்." என்று கூறிய‌தும் நினைவிற்கு வ‌ர‌, இப்போதுதான் அந்த‌ உயிர் யாரென்று புரிந்துக்கொண்ட‌வ‌ள், எதற்காக‌ அவ‌னை என்னால் காப்ப‌ற்ற‌ முடியும் என்று அவ‌ர் கூறினார் என்ப‌து புரியாம‌ல் குழ‌ப்ப‌த்தில் ஆழ்ந்தாள்.

ஆனால் வெறும் குழ‌ப்ப‌த்தோடு நிற்காம‌ல் அர்ஜுனை காப்ப‌ற்ற‌ நூறில் ஒரு ச‌த‌வீத‌மாவ‌து வாய்ப்பு இருந்தாலும் ப‌ராவாயில்லை என்று அந்த‌ சாமியாரை பார்க்க‌, இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அருகிலுள்ள‌ அதே கோவிலுக்கு ப‌த‌றிய‌டித்து ஓடி சென்றாள்.

அங்கு உள்ளே சென்ற‌தும் இவ‌ளுக்காக‌வே காத்திருந்த‌ அந்த சாமியார் தியான‌த்திலிருந்து விழிக்காம‌லே, "வா ச‌ந்ரா." என்றார்.

அப்போதே அவ‌ர் அனைத்தும் அறிந்த‌வ‌ர் என்று அவ‌ளுக்கு பாதி புரிந்துவிட‌, அழுகையுட‌ன் த‌ன் கைக‌ளை கூப்பி நின்று, "சாமிஜி. நீங்க‌ சொன்ன‌ மாதிரியே என‌க்கான‌ உயிர் யாருன்னு நா க‌ண்டுபுடிச்சுட்டேன்." என்று க‌ண்ணீர் ம‌ல்க‌ கூறினாள்.

அப்போது க‌ண்க‌ளை திற‌ந்து நிதான‌மாக‌ அவ‌ளை பார்த்த‌வ‌ர், சிறு புன்ன‌கையுட‌ன் எழுந்து நின்று, "நான் அனைத்தையும் அறிவேன் ச‌ந்ரா." என்றார்.

அதில் மேலும் க‌ண்ணீரில் க‌ரைந்த‌ ச‌ந்ரா, "நீங்க‌ சொன்ன‌த‌ நா இப்போ ந‌ம்புறேன் சாமிஜி. என‌க்கு அர்ஜுன் திரும்ப‌ வேணும். ப்ளீஸ் சாமிஜி. டாக்ட‌ர் அவ‌ன் செத்துட்ட‌தா சொல்றாங்க‌. ஆனா அவ‌ன‌ என்னால‌தா காப்ப‌த்த‌ முடியும்னு நீங்க‌ சொன்ன‌து என‌க்கு நியாப‌க‌ம் இருக்கு. ப்ளீஸ் அர்ஜுன‌ காப்ப‌த்த‌ எதாவ‌து வ‌ழி இருந்தா சொல்லுங்க‌." என்று கூற‌,

சாமிஜி, "வ‌ழி இருக்கு." என்றார்.

அதை கேட்டு அழுகையை நிறுத்திய‌வ‌ள், "என்ன‌ வ‌ழி?" என்று உட‌னே கேட்க‌,

சாமிஜி, "நீதா அந்த‌ வ‌ழி" என்றார்.

- ஜென்மம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.