Chapter-6

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 6: அடுத்து ஃபர்ஸ்ட் நைட் தான்

ஜனனி தனது அண்ணனான அர்ஜுன் பிரதாப் என்ற ஏ.ஜேவை பற்றி சொன்னதை எல்லாம் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது திரும்பி தனது வருங்கால கணவனின் முகத்தை பார்த்தாள்.

அவன் சோர்வுடன் அசைவின்றி அப்படியே வீல்சாரில் கிடந்தான். அவன் கோமாவில் இருந்தாலும் கூட, அவனது முகம் இறுக்கமாகவும் கவலையாகவும் இருப்பதைப்போல அவளுக்கு தோன்றியது.

ஆனால் அப்போதும் ஜனனி சொன்னதை மனதில் வைத்து அவனை பார்க்கும்போது, அவனிடம் ஒரு ஆளுமை இருப்பதைப் போல உணர்ந்த தேன்மொழி அர்ஜுனின் மீது இருந்து தன் பார்வையை விளக்காமல் “உங்க அண்ணனோட ஏஜ் என்ன?” என்று பயந்த குரலிலேயே கேட்க, “நீங்க அவரை விட ரொம்ப சின்ன பொண்ணு தான்னு எனக்கு தெரியும். என்னை விடவே உங்களுக்கு ஒரு வயசு கம்மி.

அதுக்காக நான் உங்க கிட்ட அவர் வயசை குறைச்சு பொய் சொல்ல விரும்பல அண்ணி. இன்னும் 2 மந்த்ஸ்ல எங்க அண்ணனுக்கு பர்த்டே வரப்போகுது. அது வந்துட்டா, 40ஆக போகுது.” என்று தயக்கத்துடன் சொன்னாள் ஜனனி.

“என்னது 40ஆ?” என்று ஷாக்காகி கேட்ட தேன்மொழி அர்ஜுனை குறுகுறுவென பார்த்துவிட்டு ஜனனியை பார்த்து “நீங்க நெஜமா தான் சொல்றீங்களா? இவருக்கு 40ஆக போகுதா?

நீங்க சொல்ற எதையுமே என்னால நம்ப முடியல ஜனனி. இவர் ரெண்டு வருஷமா கோமால இருக்காருன்னு சொல்றீங்க‌.

ஆனா எனக்கு என்னமோ இப்ப இவரை பார்த்தா கூட ஏதோ தூங்கிட்டு இருக்கிற மாதிரி தான் தெரியுது. இத்தனை நாளா bedriddenஆ இருந்த மனுஷன் அதுவும் இந்த வயசுல எப்படி இவ்ளோ handsome and fitஆ இருக்க முடியும்?

என்னை கடத்திட்டு வந்து கட்டாயப்படுத்தி இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க. அது முடிவாயிடுச்சு. இதுக்கு மேல எதுவும் பண்ணி என்னால அதை மாத்த முடியாது. அட்லீஸ்ட் வேற எந்த விஷயத்திலயும் என் கிட்ட பொய் சொல்லாமையாவது இருக்கலாம் இல்ல?

நீங்க என்ன சொன்னாலும் இவர் கோமால இருக்காதுன்னு என்னால நம்பவே முடியல.” என்று கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.

அவளை இங்கே ஏன் கடத்திக் கொண்டு வந்தார்கள்? என்று கேட்டு தன்னை திருப்பி அனுப்பச் சொன்னால், கண்டிப்பாக அவர்களிடம் அது செல்லுபடி ஆகாது என்று அவளுக்கே நன்றாக தெரியும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் கோபத்தை எப்படி காட்டுவது என்று தெரியாமல் இந்த விதத்தில் காட்டினாள்‌ தேன்மொழி.

அவள் பேசியதில் ஜனனியின் கண்கள் கலங்கிவிட்டது. அதை பார்க்க தேன்மொழிக்கு வருத்தமாக தான் இருந்தது.

ஆனால் தன்னை கடத்திக் கொண்டு வந்து தனக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய காத்திருக்கும் இவர்களிடம் அவள் இரக்கம் காட்ட தயாராக இல்லை. அதனால் அவள் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.‌

“நாங்க உங்க விருப்பம் இல்லாம உங்கள கடத்திட்டு வந்து இந்த மேரேஜ் அரேஞ்ச் பண்ணத தவிர வேற எந்த தப்பும் பண்ணல அண்ணி.

நீங்க என் கிட்ட இப்படி பேசுற மாதிரி ஆகாஷ் அண்ணா கிட்ட எல்லாம் பேசிடாதீங்க. அர்ஜுன் அண்ணாவுக்கு இப்படி ஆனதில இருந்து அவன் பாதி சைக்கோ ஆயிட்டான்.‌ அவனோட ரெஸ்பான்சிபிலிடிஸ் அதிகமாயிடுச்சு.

அதை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம அவனும், அவனையும் இப்படி கோமால இருக்கிற அர்ஜுன் அண்ணாவையும் எப்படி சரி பண்றதுன்னு தெரியாம நாங்களும் ரெண்டு வருஷமா பெரிய மெண்டல் டார்ச்சர அனுபவிச்சிட்டு இருக்கோம்.

எங்க அண்ணனோட ஹெல்த் கண்டிஷன் பத்தியோ, ஏஜ் பத்தியோ நான் சொன்னது எதுவுமே பொய்யில்லை. டாக்டர்ஸ் ஒரு பக்கம் எங்க அண்ணா கில்டி ஃபீலிங்ல இருக்கிறதுனால அவர் கோமால இருந்து ரெக்கவர் ஆகணும்னு அவரே நினைக்கல. அதனால தான் இத்தனை வருஷம் ஆகியும் அவர் சரியாகம அப்படியே இருக்காருன்னு‌ சொல்றாரு.

அது இல்லாம அவருக்கு ஹெட் இஞ்சுரி இருக்கனால ரெண்டு மாசத்துக்குள்ள அவர் கோமால இருந்து ரெக்கவர் ஆகி அவருக்கு சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணலைனா, இன்னும் அவரோட ஹெல்த் கண்டிஷன் கிரிட்டிக்கல் ஆயிடும்னு சொல்றாரு.

எங்க குடும்ப ஜோசியர் அண்ணாவுக்கு 40 வயசுல ஒரு கண்டம் இருக்கு. சோ அவருக்கு 40 ஆகுறதுக்குள்ள மேரேஜ் பண்ணி வெச்சே ஆகணும். வர்ற பொண்ணோட தாலி பாக்கியம் தான் அவரைக் காப்பாற்றும்.

அவரும் அந்த பொண்ணும் சேர்ந்து சந்தோஷமா வாழ ஆரம்பிச்சாங்கன்னா, தான் ‌ எங்க ஃபேமிலில இருக்கிற ப்ராப்ளம்ஸ் எல்லாம் சால்வாகும்னு சொல்லிட்டாரு.

இவங்க எல்லாரும் பாக்குறதுக்கு ரொம்ப Hi-Fiஆ இருக்காங்க. ஆனா இப்படி மூடநம்பிக்கையோட பேசுறாங்கன்னு நீங்க நினைக்கலாம். அதே ஜோசியர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க குடும்பத்துல ஒரு உயிர் போக போகுதுன்னு சொன்னாரு.

இப்போ நாங்க எந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்குமோ அது எல்லாமே நடக்கும்னு முன்னாடியே சொன்னாரு. பட் எங்க அண்ணா உட்பட நாங்க யாருமே அத பெருசா எடுத்துக்கல.

கடைசியில அவர் சொன்ன மாதிரி தான் நடந்துச்சு. ஒருவேளை ஜோசியர் சொன்னதைக் கேட்டு அவர் சொன்ன பரிகாரத்தை எல்லாம் பண்ணி இருந்தா, எங்க அண்ணாவுக்கும் அண்ணிக்கும் அப்படி நடந்திருக்காதுன்னு இப்ப வரைக்கும் எங்க அம்மாவும் பாட்டியும் கில்டி ஃபீலிங்கில இருக்காங்க.

அப்புறம் ஜோசியர் பரிகாரமா சொன்னதுனால தான் இந்த கோவிலேயே நாங்க கட்டினோம். அதே மாதிரி ஜோசியர் கண்டிப்பா எங்க அண்ணனுக்கு இரண்டாவது கல்யாணம் 40 வயசுக்குள்ள நடக்கும்னு சொன்னாரு. முதல்ல எங்களுக்கு அதுலையும் நம்பிக்கை இல்ல.

ஆனா கோமால இருந்த எங்க அண்ணன் உங்க வாய்ஸ்சை கேட்டு லேசா ரியாக்ட் பண்ணாரு. ஆனா அதுக்கப்புறம் அவர் கிட்ட எந்த முன்னேற்றமும் இல்ல.

சும்மா உங்க குரலை கேட்டதுக்கே அவர் கிட்ட நல்ல சேஞ்சஸ் தெரிஞ்சது. நீங்க இன்னும் அவர் கூடவே எப்பவும் இருந்தா, கண்டிப்பா அவர் சீக்கிரம் சரியாகிவிடுவாருன்ற நம்பிக்கையில தான் இந்த மேரேஜை அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.” என்று சொல்லிவிட்டு தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட ஜனனி அவளது மொபைல் ஃபோனில் இருந்த அர்ஜுனின் பழைய போட்டோக்களை காட்டினாள்.

அதில் ஒரு சில போட்டோக்களில் அவன் கம்பீரமாக கோட் சூட் அணிந்து டிக் டாப் ஆக விளம்பரங்களில் வரும் மாடல் போல அழகாக இருந்தான். பின் ஜனனி அவளது திருமண புகைப்படத்தை காட்டினாள்.

அதில் அர்ஜுன் சிரித்த முகமாக ஜனனியின் அருகில் நிற்க, அவளுடன் சித்தார்த், ஆருத்ரா மற்றும் தேன் மொழியின் சாயலில் இருந்த ஒரு பெண்ணும் நின்று அழகாக புன்னகைத்துக் கொண்டு இருந்தாள்.

அந்தப் பெண்ணை கவனித்த தேன்மொழி உடனே ஜனனியின் மொபைல் ஃபோனை வாங்கி அந்த பெண்ணின் முகத்தை ஜூம் செய்து பார்த்தாள். அவளும் இவளும் சகோதரிகள் என்று சொன்னால் யாராக இருந்தாலும் உடனே நம்பி விடுவார்கள்.

அந்த அளவிற்கு அவர்கள் இருவருக்கும் நடுவில் உருவ ஒற்றுமை இருந்தது. அந்த போட்டோவில் இருந்த பெண் கொஞ்சம் கலராக பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் இருந்தாள். தேன் மொழியும் நன்றாக மேக்கப் போட்டு தொடர்ந்து அவளை பராமரித்து வந்தால், அந்தப் பெண்ணை போலவே தான் இருப்பாள்.

அதனால் அவளை ஆச்சரியமாக பார்த்த தேன்மொழிக்கு இப்போது தான் ஜனனி சொன்னதை வைத்து அங்கே என்ன நடக்கிறது என்று ஓரளவிற்கு புரிய தொடங்கியது. அதனால் அவள் ஜனனியிடம் அந்தப் பெண்ணைக் காட்டி “இவங்க யாரு? ஏன் இவங்க என்ன மாதிரியே இருக்காங்க?” என்று கேட்டாள்.

“இவங்க தான் என் அண்ணி.” என்ற ஜனனி தொடர்ந்து தன் அண்ணியை பற்றி அவளிடம் ஏதோ சொல்ல வர, அதற்குள் ஐயர் “இப்ப பொண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாத்திக்கணும்.” என்றதால் உடனே தனது மொபைல் ஃபோனை வாங்கி கொண்டு கிளாராவிடம் மாலைகள் இருந்த தட்டை வாங்கி மாலை ஒன்றை எடுத்து தேன்மொழியின் கைகளில் கொடுத்தாள்.

ஆகாஷின் மீது இருந்த பயத்தால் அதை வாங்கிக் கொண்ட தேன்மொழிக்கு தன் கையில் இருந்த மாலையைப் பார்க்கும்போது “பலி கொடுக்கப் போற ஆட்டை கூட இப்படித்தான் சிவி சிங்காரிச்சு மாலை மரியாதை எல்லாம் செஞ்சு கொண்டு போய் பலி மேடையில நிறுத்துவாங்க.

இந்த மாலையைப் பார்த்தா எனக்கும் அந்த ஃபீல் தான் வருது. இப்போ நான் என் ஃபேமிலில இருக்கிறவங்கள நினைச்சு வருத்தப்படுறதா?

இல்லை என் நிலைமை அவங்களை விட மோசமா இருக்கேன்னு நெனச்சு வருத்தப்படுறதா? எனக்கு ஒன்னும் புரியல.

ஒருவேளை டாக்டர் சொன்ன மாதிரி ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இவருக்கு ஏதாவதாகி இவர் இறந்துட்டா, என்னால அதுக்கப்புறம் எந்த யூஸும் இல்லைன்னு நினைச்சு இவங்க எல்லாரும் சேர்ந்து என்னை கொன்னுட்டா என்ன பண்றது?

கடவுளே..!! எப்படியாவது இந்த கும்பல் கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க.” என்று நினைத்து கடவுளை வேண்டிக் கொண்டு வேண்டா வெறுப்பாக ஜனனி கொடுத்த மாலையை தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.

மற்றொரு மாலையை எடுத்து ஜனனி ஆகாஷின் கையில் கொடுக்க, அதை வாங்கி அர்ஜுனின் கழுத்தில் அணிவித்தான் அவன். திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்தது.

ஐயர் சில மந்திரங்களை சொல்லி அதை தேன்மொழியையும் சொல்ல சொன்னார். பின் அவள் கைகளில் சில மலர்களை கொடுத்து முன்னே இருந்த சிறிய விநாயகர் சிலைக்கு அதனால் பூஜை செய்து வழிபடச் சொன்னார்.

இப்படியே தொடர்ந்து அவளை வைத்தே அனைத்து திருமண சடங்குகளையும் செய்து முடித்தார்கள். இறுதியில் ஐயர் தாலியை எடுத்து அக்னியின் முன்னே நீட்டி “இப்போ மாப்பிள்ளை தாலி கட்டலாம்.” என்றார்.

இதற்கு பெயர் எல்லாம் திருமணமா? இதற்கு ஐயர் ஒருவர் வந்து சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் செய்பவது ஒன்று தான் குறைச்சல்! என்று நினைத்து தன் முகத்தை சுழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேன்மொழி.

ஆகாஷ் ஜனனியை பார்க்க, ஐயர் கொடுத்த தாலியை வாங்கிய ஜனனி அதை அர்ஜுனின் கைகளில் வைத்து பிடித்துக் கொள்ள, அவன் கைகள் இரண்டையும் தூக்கி தேன்மொழியின் கழுத்துக்கு அருகே கொண்டு சென்றான் ஆகாஷ்.

அர்ஜுன் தொட்டுக் கொடுத்த தாலியை அவன் கைகளில் இருந்து வாங்கி அதை தேன்மொழியின் கழுத்தில் கட்டினாள் ஜனனி. ‌பின் அவளாகவே அர்ஜுனின் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து அதை தேன்மொழியின் நெற்றிப் பொட்டில் வைத்தாள்.

அங்கே இருந்தவர்கள் அனைவரும் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, தங்கள் கையில் இருந்த மலர்களை அவர்கள் இருவரின் மீதும் தூவி ஆசிர்வாதம் செய்தார்கள்.

அப்படியே வீல் சாரில் இருந்தவாறு தேன்மொழி அர்ஜுன் இருவரையும் லிண்டாவும், ஆகாஷும் ஏழு முறை அக்னியை வலம் வர வைத்தார்கள்.

தன் கழுத்தில் தொங்கிய கனமான எழுப் பவுன் கொண்ட தங்க தாலியை தொட்டுப் பார்த்த தேன்மொழி “அவ்ளோ தானா? இதுக்கு பேரு தான் கல்யாணமா? என்ன இவங்க எல்லாத்தையும் அவங்க இஷ்டத்துக்கு இவ்வளவு சிம்பிளா பண்ணிட்டாங்க!

இனிமே என் லைஃப் என்னாகும்? என் குடும்பத்தில இருக்கிறவங்களை நான் சாகறதுக்குள்ள ஒரு தடவையாவது பார்ப்பனா?” என்று நினைத்து கண்ணீர் சிந்தினாள்.

அவளது கண்ணீர் துளி அந்த தாலியின் மீது விழ, “அடுத்து இவங்க இரண்டு பேருக்கும் நல்லபடியா ஃபர்ஸ்ட் நைட் மட்டும் நடந்து முடிஞ்சிட்டா போதும்‌.
கண்டிப்பா இன்னும் ஒரு மாசத்துல என் பையன் எந்திரிச்சு நார்மலாகி நடக்க ஆரம்பிச்சிடுவான்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள் ஜானகி.

அது தேன்மொழியின் காதுகளிலும் விழ, அவளுக்கு பக்கென்று இருந்தது. கோமாவில் கிடைப்பவனுக்கு இப்படி ஒரு திருமணத்தை பக்காவாக பிளான் செய்து வைத்திருக்கும் இந்த குடும்பம் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருப்பார்களோ.. என்று நினைத்தால் இப்போதே அவளுக்கு தலை சுற்றுவதை போல இருந்தது.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.