Chapter-6

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அத்தியாயம் 6: என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத..!!!



பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தன்து நண்பன் சந்திரனின் மொபைல் ஷோரூமிற்கு முன் வந்து தனது பைக்கை நிறுத்தினான் இசை.

அவனை பின் தொடர்ந்து வந்த பிரியாவும், தான் வந்த பைக்கை அவனுக்கு அருகே நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கினாள்.

இசை ராகுலையும், பிரியாவையும், அழைத்து கொண்டு அந்த மொபைல் ஷோரூமின் உள்ளே சென்றான்.

வெகு நாட்கள் கழித்து இசை தனது ஷோரூமிற்கு வந்ததால் அவனைக் கண்டு மகிழ்ந்த சந்திரன், அவனை வரவேற்பதற்காக அவன் அருகே எழுந்து சென்று‌ “வா டா மச்சான்..!! இப்ப தான் உனக்கு இந்த பக்கம் எல்லாம் வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா டா..??" என்று கேட்டபடியே இசையின் கையை பிடிக்க வர,

அவனுக்கு பின் வந்த பிரியாவையும் ராகுலையும் கவனித்தவன், அப்படியே வாயடைத்து போய் நின்று விட்டான்.

சந்திரன் பிரியாவை யாழினி என்று நினைத்துக் கொண்டான். அதனால் தான் இந்த ஷாக்.

ஆச்சரியம் நிறைந்த கண்களோடு இசையை பார்த்து, “டேய்.. இது நம்ப... இது நம்ம..‌ யாழினியா..??

அப்ப யாழினி உயிரோட தான் இருக்காளா..??" என்று சந்திரன் கேட்க

அவனை பார்த்து லேசாக புன்னகைத்த இசை

“இவ யாழினி இல்ல டா, பிரியா." என்று சொல்லி அவன் யாழினி போலவே இருக்கும் இந்த பிரியாவை எப்படி சந்தித்தான் என்ற கதையை சுருக்கமாக அவனிடம் விவரித்தான்.

இசை சொன்னதை கேட்டு ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும், இருந்த சந்திரன் அதை தன்து மனைவியுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து உள்ளே இருந்த அவனுடைய மனைவி ஸ்வேதாவை அழைக்க,

“வரேன்..‌ வரேன்.. ஏன் இப்ப கத்துறீங்க..??" என்று கேட்டபடியே கையில் தங்களது ஒரு வயதான குழந்தை அபிநயாவை எடுத்து கொண்டு அங்கே வந்து கொண்டு இருந்தாள் ஸ்வேதா.



“அட சீக்கிரம் வா ஸ்வேதா..

இங்க வந்து யார் வந்து இருக்காங்கன்னு பாரு.

நீ இவங்கள பாத்தா ஷாக் ஆயிருவ." என்றான் சந்திரன் ‌சத்தமாக.

“அப்டி யாரு இப்ப வந்து இருக்காங்க..??" என்று கேட்டபடியே அவர்களின் அருகே வந்த ஸ்வேதாவும், சந்திரனை போல் பிரியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

ஸ்வேதாவின் கைகளில் இருந்த அபிநயா கூட பிரியாவை பார்த்து அழகாக சிரித்தவள், தன்னை தூக்கும்படி அவளை பார்த்து தனது இரு கைகளையும் நீட்டி கொண்டு அவளிடம் சென்றாள்.



பார்பி டால் போல் க்யூட்டாக இருக்கும் குழந்தை அபிநயாவை பார்த்தவுடனே பிரியாவிற்கு மிகவும் பிடித்து விட்டது.

அதனால் அவளை பார்த்து அழகாக புன்னகைத்தவள், ஸ்வேதாவிடம் இருந்து அவளை வாங்கிக் கொண்டாள்.

“ஹாய் க்யூட்டி.. உன் பேர் என்ன டா..??" என்று அவள் கேட்க,

பிரியாவின் ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்து ரசித்து கொண்டு இருந்த இசை “அபிநயா" என்றான்.

“உன் பேரு அபிநயாவா..??

உன்ன மாதிரியே உன் பேரும் சூப்பரா இருக்கு பேபி.

என் பேரு பிரியா." என்று அந்த குழந்தையை கொஞ்சியபடி சொன்னாள் அவள்.

பிரியா பேசுபவை எல்லாம் அபிநயாவிற்கு புரிந்ததோ, புரியவில்லையோ, தெரியவில்லை.

ஆனால் அவளுக்கு பிரியாவிடம் இருப்பது மிகவும் பிடித்து இருந்தது.

அதனால் தனது பிஞ்சு கைகளால் பிரியாவின் கன்னத்தை பிடித்து கிள்ளி விளையாடினாள் அபிநயா.

அந்த குழந்தையின் ஸ்பரிசம் பிரியாவின் மனதை பெருளவில் ஆறுதல் படுத்தியது.

அதனால் அவளோடு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தாள் இவள்.

பின் அபிநயா ராகுலை பார்த்தவுடன், தான் அவனிடம் செல்ல வேண்டும் என்று அவனிடம் தாவினாள்.

தான் எங்கே அவளை கீழே போட்டு விடுவோமோ என்ற பயத்துடனே அவளை வாங்கிய ராகுலும் அவளோடு விளையாடினான்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்வேதா அதிர்ச்சியாக இசையையும், தனது கணவனையும் பார்த்து

“என்ன டா நடக்குது இங்க..??" என்று கேட்டாள்.

ஏற்கனவே அவள் யாழினி எப்படி உயிரோடு வந்தாள்..??என்று நினைத்து அந்த அதிர்ச்சியில் இருந்தாள்.

இப்போது ஏன் யாழினி தன்னை பிரியா என்று அபிநயாவிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறாள் என்று வேறு அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

குழம்பிய முகத்தோடு தங்களை பார்த்துக் கொண்டு இருந்த தனது மனைவியை பார்த்து சிரித்த சந்திரன், இசை அவனிடம் பிரியாவை பற்றி சொன்ன அனைத்தையும் ஸ்வேதாவிடம் தெளிவாக சொன்னான்.

அதைக் கேட்ட ஸ்வேதாவிற்கு கண்களில் இருந்து ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.

யாழினி அனைவரிடமும் எளிதில் நன்கு பழகக் கூடியவள்.

அவளுடைய அப்பாவியான முகத்தாலும், இன்னசென்டான பிஹேவியராலும், அவளது நல்ல குணத்தாலும் தன் பக்கம் அனைவரையும் சுலபமாக இழுத்து விடுவாள் யாழினி.

இசையும், யாழினியும், ஒருவரை ஒருவர் காதலித்ததால், இசையின் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் அனைவருடனும் நெருங்கி பழகிய யாழினி அனைவருக்கும் பிடித்தமானவளாக மாறிவிட்டாள்.

கடந்த சில வருடங்களாகவே தனது தோழியை பிரிந்த வருத்தத்தில் இருந்த ஸ்வேதாவிற்கு அவளைப் போலவே இருக்கும் இந்த பிரியாவை பார்த்தவுடனே மிகவும் பிடித்து விட்டது.

அதனால், பாசமாக அவளை கட்டி அணைத்து அவளிடம் பேச தொடங்கினாள்.

தங்களின் மீது உண்மையாக அன்பு செலுத்தும் உறவு என்று யாருமே தங்களுக்கு இருக்க மாட்டார்களா? என்று நினைத்து ஏங்கிய பிரியாவிற்கும், ராகுலுக்கும், இசையால் கிடைத்த இந்த புதிய நண்பர்களை மிகவும் பிடித்து இருந்தது.

ராகுல் சந்திரனுடனும் ஸ்வேதாவிடனும் கூட நன்றாக பேசினான்.

ஆனால், அவனுக்கு இசையை பார்க்க பார்க்க தான் எரிச்சலாக இருந்தது.

இசை தனது அக்காவை கரெக்ட் செய்வதற்கு மிகவும் மெனக்கெடுக்கிறான் என்று அவனுக்கு தோன்றியது.

பின் தாங்கள் வந்த வேலையை பார்க்கலாம் என்று நினைத்த பிரியா, அங்கு இருந்த மொபைல் ஃபோன்களை ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினாள்.

அந்தப் பெரிய மொபைல் ஷோரூம்ல் அனைத்து விதமான மொபைல்களும் அவைலபிலாக இருந்தது.

“உனக்கு என்ன ஃபோன் பிடிக்குதோ பாரு மா.

வேணும்னா இ.எம்.ஐ. கூட போட்டுக்கலாம்." என்றான் சந்திரன்.

பிரியா இதற்கு முன் ஆப்பிள் பிராண்டின் நியூ மாடல் விலை உயர்ந்த ஐபோனை வைத்து இருந்தாள்.

ஆனால் இப்போது அவள் இருக்கும் சூழ்நிலையில், இ.எம். ஐ. போட்டு உயர்தர மொபைல் ஃபோனை வாங்க வேண்டும் என்று எல்லாம் அவளுக்கு தோன்றவில்லை.

அதனால் சந்திரனை சலிப்பாக பார்த்தவள்

“இல்லை அண்ணா இ.எம்.ஐ. எல்லாம் வேண்டாம்.

நான் இனி எப்படியும் அதிகமா மொபைல் ஃபோன் போன் யூஸ் பண்ண மாட்டேன்.

சோ டென் தொளசண்ட் ரேஞ்சுல டீசன்டான மொபைலா காட்டுங்க போதும்." என்றாள்.

வாடிய முகத்துடன் பிரியாவை பார்த்துக் கொண்டு இருந்தான் ராகுல்.

அதை கவனித்த இசை “ஏன் நல்ல மொபைலாவே வாங்கிக்கலாம்ல்ல பிரியா..??" என்று கேட்க,

அவனை கேஷுவலாக பார்த்த பிரியா, “எல்லா மொபைலும் நல்ல மொபைல் தான்." என்றாள்.

அதனால் தேவை இல்லாமல் அவளிடமும், அவளது தம்பியிடமும் பேசி வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த இசை அமைதியாகவே நின்று கொண்டு இருந்தான்.



பிரியா கேட்டது போலவே ஒரு மொபைல் ஃபோனை சந்திரன் அவளிடம் எடுத்து காட்ட, பிரியாவிற்கு அந்த போன் பிடித்து இருந்தால், அதையே தான் வாங்கிக் கொள்வதாக சொன்னாள்.

அந்த மொபைலை ப்ராப்பராக பேக் செய்து பில்லுடன் பிரியாவின் கையில் கொடுத்தான் சந்திரன்.

அந்த மொபைல் ஃபோனின் எம்.ஆர்.பி. விலை 12, 000 ரூபாய் என்று போட்டு இருந்தது.

இசைக்காக கன்சசன் செய்து இருந்த சந்திரன், அதில் ஆஃபர் பிரைஸ் ஆக இசைக்காக 10, 500 என்று போட்டுக் கொடுத்து இருந்தான்.

பிரியா அதை பார்த்துக் கொண்டு இருக்கும்போது அவளுடைய கையில் இருந்து அந்த பில்லை வாங்கிய இசை, “10, 500 தானே நானே குடுத்திடுறேன்." என்றவன், அவனது பர்ஸில் இருந்து கிரெடிட் கார்டை வெளியில் எடுத்தான்.

அவனது இந்த செய்கையால் கோபப்பட்டு அவனைப் பார்த்து முறைத்த பிரியா

“நான் வாங்குன ஃபோனுக்கு நீ எதுக்கு இப்ப பே பண்ற..??

நான் உன் கிட்ட கேட்டனா...???

இந்த மாதிரி தேவை இல்லாத வேலை எல்லாம் பண்ணாத." என்று முகத்தில் அரைவதைப் போல் பட்டென்று சொன்னாள்.

பிரியா தன்னை தனது நண்பனின் முன் எடுத்து எரிந்து பேசியதால், இசை வருத்தம் அடைந்தான்.

“இல்ல நீ பே பண்ணா என்ன..

நான் பே பண்ணா என்ன...??

உனக்கு நான் இந்த ஃபோனை கூட வாங்கி தர கூடாதா..???" என்று பாவமாக தன் முகத்தை வைத்து கொண்டு சோகமாக அவன் கேட்க,

“கூடாது. நீ எதுக்கு எனக்கு மொபைல் ஃபோன் வாங்கி தரணும்..??

சும்மா என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத." என்று ஸ்டிரிக்டாக சொன்னாள் பிரியா.

அதனால் இசை அமைதியாகி விட்டான்.

இசை தன் அக்காவிடம் திட்டு வாங்குவதை பார்த்த ராகுலுக்கு ஆனந்தமாக இருந்தது.

பின் பிரியா, தனது ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு 1 லட்சம் ரூபாய் கட்டை வெளியில் எடுத்தவள், அதில் இருந்து பத்தாயிரத்தி ஐநூறு ரூபாயை எண்ணி சந்திரனிடம் கொடுத்துவிட்டு மீதியை பத்திரமாக தன்னுடைய ஹாண்ட் பேகிற்க்குள் வைத்துக் கொண்டாள்.

அப்போது ஸ்வேதா ஒரு தட்டில் டீ மற்றும் ஸ்னாக்ஸுடன் அங்கே வந்து இசையை பார்த்து “இந்தா எடுத்துக்கோ." என்றாள்.

இசை ஸ்வேதாவை பார்த்து புன்னகைத்தபடியே அவள் கொண்டு வந்த டீயை எடுத்துக் கொண்டு

“என்ன ஸ்வேதா..

நாங்க வந்து இவ்ளோ நேரம் ஆச்சு..

இப்ப தான் உனக்கு ஒரு டீ குடுக்கணும்ன்னு தோணுதா..??

இவன் சும்மா இங்க நம்மள பாத்துட்டு போறதுக்கு வந்து இருக்கானா, இல்ல ஏதாவது வாங்க வந்திருக்கானான்னு தெரியலையே..

கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாப்போம்.

இவன் ஏதாவது வாங்கனா அப்ப ஸ்னாக்ஸ் குடுத்துக்கலாம்னு இருந்தியா...?? "என்று நக்கலாக கேட்டான்.

“ஆமாம்மா...!!! நீ மட்டும் வந்து இருந்தா, நான் உனக்கு சுடு தண்ணி கூட குடுத்திருக்க மாட்டேன் டா.

நீ பிரியாவ கூட்டிட்டு வந்ததுனால தான் உனக்கு இந்தத கவனிப்பு." என்று அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே சொன்னவள், பிரியாவிற்கும் ராகுல்க்கும் உணவுகளை பரிமாறினாள்.

இசை “இப்ப மட்டும் என்ன..??

நீ வைக்கிற டீக்கும், சுடு தண்ணிக்கும், பெருசா எந்த வித்தியாசமும் இருக்காது.

பாவம் உன் புருஷன் டெய்லியும் இதை எப்படி தான் குடிக்கிறானோ...!!" என்றான் கிண்டலாக.

உடனே ‌சந்திரன் “ஏன் டா போற போக்குல அப்படியே அவ கிட்ட என்ன கோத்து விடுற...??

உனக்கு என்னப்பா நீ செஃப் ஆகி ரெஸ்டாரண்ட் வச்சுட்ட.

நீ எல்லாம் டெய்லியும் நல்ல சோறு சாப்பிடுவ...

நான் அப்படியா...??

கஞ்சிசோ, கூலோ...

என் பொண்டாட்டி எத போடுறாளோ அத சாப்பிட்டு தானே ஆகணும்..!!

அதுக்கும் நீ உலை வெச்சிட்டு போயிடாத டா ராசா..

உனக்கு புண்ணியமா போகும்.” என்று சொல்ல,

“சரி விடு டா, அழுவாத. நான் எதுவும் சொல்லல.” என்றான் இசை.

ஸ்வேதா‌ இசை பேசியதற்காக அவனை எதுவும் சொல்லாமல், தன் கையில் இருந்த ட்ரேயால் தனது கணவனின் மண்டையில் நங்கென்று ஒரு அடித்து

“இன்னொரு தடவ ஸ்வேதா பிரியாணி செஞ்சுத்தா...

நீ செஞ்சு தந்தா தான் சூப்பரா இருக்கும்னு எவனாவது என் கிட்ட சொல்லி பாருங்க...

ரெண்டு பேரையும் போட்டு தள்ளிடுவேன் பாத்துக்கோங்க." என்றாள் கோபமாக.

சந்திரன் அவள் அடித்த இடத்தில் தேய்த்த படியே

“அடியே.. அவன் தானே சொன்னான்...

அதுக்கு அவன அடிக்காம என்ன எதுக்கு டி அடிக்கிற..??" என்று பாவமாக கேட்க,

“அவன் உன் ஃபிரண்டு தானே..

அந்த பொண்ணு முன்னாடி அவன அடிச்சா நல்லா இருக்காதுல..‌

அதான் உன்ன அடிச்சேன்." என்றாள் ஸ்வேதா கேஷுவலாக.

இசை “அப்ப நான் உன் ஃப்ரெண்ட் இல்லையா..??” என்று அவளிடம் உரிமையாக கேட்க,

“இல்ல பே.. இனிமே பிரியா மட்டும் தான் என் ஃபிரண்டு." என்ற ஸ்வேதா பிரியாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

இப்படியே இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஒருவரோடு ஒருவர் சிறிது நேரம் ‌ பேசி நடுநடுவில் செல்ல சண்டை போட்டு கொண்டு இருந்துவிட்டு பின் அங்கிருந்து பிரியாவையும், ராகுலையும், இசை வெளியே அழைத்து கொண்டு வந்தான்.

பிரியா தங்களுக்கு தேவையான ஆடைகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் வாங்க வேண்டும் என்று சொன்னதால், ஒவ்வொரு கடைக்காக இசை அவர்களை அழைத்துச் சென்று அவர்களோடு இருந்து அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்குவதற்கு உதவினான்.

இசை அவர்களுக்கு உணவு இலவசம் என்று சொல்லிவிட்டதால், பிரியா சமைப்பதற்கு தேவையான எந்த பொருட்களையும் வாங்கவில்லை.

அதை தவிர்த்து தேவைப்படும் அனைத்து முக்கியமான பொருட்களையும் வாங்கிய பின் இசையை பார்த்த பிரியா,

“இங்க நாட்டு மருந்து எல்லாம் விக்கிற கடை எங்க இருக்கு..??" என்று கேட்டாள்.

இவள் ஏன் அந்த கடையை பற்றி கேட்கிறாள் என்று யோசித்த இசை ‌

“என்னாச்சு உனக்கு ஏதாவது உடம்பு சரி இல்லையா..??" என்று அக்கறையுடன் விசாரித்தான்.

“இல்ல.. இல்ல.. எனக்கு ஒன்னும் இல்ல.

நான் நல்லா தான் இருக்கேன்.

எனக்கு அங்க சில திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு.

நான் யூஸ் பண்ற சோப்புல இருந்து, ஹேர் ஆயில் வரைக்கும் எல்லாமே ஆர்கானிக் தான்.

அத நாங்களே வீட்ல செஞ்சு யூஸ் பண்ணுவோம்.

அதுக்கு தேவையானது எல்லாம் வாங்கணும்ல..

அதான் கேட்டேன்." என்று தெளிவாகச் அவள் சொல்ல,

அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இசை

“பார்றா... அப்ப உனக்கு அதெல்லாம் கூட செய்ய தெரியுமா...??" என்று நம்ப முடியாமல் கேட்டான்.

“ம்ம். எல்லாமே இல்லைன்னாலும், எங்களுக்கு தேவைப்படற அளவுக்கு தெரியும்.

என் ஃபேமிலியே பரம்பரை பரம்பரையா சித்த வைத்தியம் பாக்கிறவங்க தான்.

எங்க பாட்டி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக் குடுத்திருக்காங்க.” என்று அவள் சொல்ல,

“ஓ..!! அதனால தான் நீ உன் அம்மாவ கூட சித்த வைத்திய சாலையில அட்மிட் பண்ணி இருக்கியா..??” என்று வினவினன் இசை.

“எஸ்.. இந்த மெடிசன்ல கொஞ்சம் டிலே ஆனாலும் பர்மனண்ட் க்யூர் கிடைக்கும்.” என்று பிரியா சொல்ல,

“அதுவும் உண்மை தான்." என்ற இசை அருகில் இருந்த ஒரு நாட்டு மருந்து கடைக்கு அவளையும், ராகுலையும், அழைத்து சென்றான்.

பிரியா ஒவ்வொரு பொருளின் பெயராக சொல்லச் சொல்ல அந்த கடைக்காரர் வேகவேகமாக அவற்றை தேடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.

பிரியா வாங்கிய பொருட்களை பற்றி எல்லாம் கண்டிப்பாக சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்த அந்த கடைக்காரர்,

“நீ டாக்டரா மா..??" என்று கேட்டார்.

“இல்ல என் பாட்டி டாக்டரா இருந்தாங்க.

நான் அவங்க கிட்ட இருந்து இத பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்." என்றாள் அவள்.

பின் அவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு‌ இசையின் ரெஸ்டாரண்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஜீவா சொன்னது போலவே அவர்கள் வருவதற்குள் பிரியாவும், ராகுலும், தங்கப்போகும் வீட்டை அவன் ரெடி செய்து வைத்து இருந்தான்.

அந்த 2 BHK வீடு ஒரு குடும்பம் தங்குவதற்கு தாராளமாக இருந்தது. அதை கண்டு திருப்தியாக உணர்ந்தாள் பிரியா.

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.