அத்தியாயம்: 6
தனது ஆபிஸ்-க்கு சென்ற ரதி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது விக்ரமின் ஆத்மாவால் சில விசித்திரமான விஷயங்களை அவள் உணர்கிறாள். அதனால் அவளுக்கு சற்று குழப்பமாக இருந்தாலும், அதையெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்க அவளுக்கு நேரம் இல்லாததால், தொடர்ந்து அவள் தனது வேலையில் கவனம் செலுத்தினாள்.
அப்படியே நேரம் உருண்டோடியது. இரவு 8 மணி அளவில் தனது ஆபிஸில் இருந்து கிளம்பினாள் ரதி. அவள் சாலையில் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருக்க, இப்போதும் அவள் பின்னே விக்ரமின் ஆத்மா அமர்ந்திருந்தது. ரதி இப்போது காலையில் அவள் விக்ரமை பார்த்த அதே சாலை வழியாக வந்து கொண்டு இருக்க அவளால் அவனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அதனால் “ச்சே..!! அந்த மேனேஜர் ஆகாசுக்கு எத்தனை தடவை தான் கால் பண்ணி தொலையுறது..!! படுபாவி பயன்.. இன்னும் அவன் Phoneஐ சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான். இப்போ அந்த விக்ரமுக்கு என்ன ஆச்சுன்னு நான் எப்படி தெரிந்து கொள்வது? அவர் இப்ப நல்லா தான் இருப்பார் என்று நம்புறது தவிர எனக்கு வேற வழி இல்ல." என்று புலம்பியப்படியே தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தாள் ரதி. அவள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கு அவனது தாயின் ஞாபகம் வந்தது.
ஒருவேளை அவனது அம்மா சாரதா உயிருடன் இருந்திருந்தால், தனக்காக அவளும் இப்படி தானே யோசித்து கவலைப்பட்டு இருப்பாள்..!! தங்களது குடும்பம் பிளவு பட்டு இத்தனை பிரச்சனைகள் வந்து, அவன் மீது பாசமாக இருக்க வேண்டிய அவனது தம்பிகள் எல்லாம் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டு அவனையே கொல்லும் அளவிற்கு துணிந்திருக்க மாட்டார்களோ... என்றெல்லாம் யோசித்த விக்ரமிற்கு, அவனை அறியாமல் கண் கலங்கியது. அதனால் அவன் ஆதரவாக ரதியின் முதுகில் சாய்ந்து கொண்டான்.
என்னமோ அவளுடன் இருப்பது அவனுக்கு ஒரு நல்ல உணர்வை கொடுத்தது. அவர்கள் இருவரும் இப்போது வரை ஒரு வார்த்தை கூட பேசிக் இருக்கவில்லை. இதற்கு மேல் பேசவும் வழி இல்லை. ஆனால் அவளோடு தனக்கு ஒரு புரியாத பந்தம் இருப்பதைப் போல உணர்ந்த விக்ரம், தன்னை அறியாமல் பின்னே இருந்து அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான். அதனால் ஒரு வித்தியாசமான உணர்வை அனுபவித்த ரதி, திடீரென தன் அருகில் யாரோ இருப்பதைப் போல உணர்ந்து Sudden பிரேக் போட்டு தனது ஸ்கூட்டியை நிறுத்தினாள்.
அப்போது ஒரு தெரு நாய் ரதியின் பின்னே அமர்ந்திருந்த விக்ரமின் ஆத்மாவை பார்த்து சத்தமாக குறைத்தது. அதனால் பயந்த ரதி “இது என்ன நம்மள பாத்து இப்படி கத்துது? விட்டா பாஞ்சு வந்து ஒரே கவ்வா கவ்வி.. 10, 15 கிலோ சதய உருவி எடுத்துடும் போல." என்று நினைத்து மீண்டும் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினாள். அவள் அந்த நாய் தன்னை பின் தொடர்ந்து வருகிறதா என்று திரும்பி பார்த்தபடி சென்று கொண்டு இருக்க, இன்னும் அந்த நாய் வவ்.. வவ்.. என்று சத்தமாக அவளை தான் பார்த்து குறைத்துக் கொண்டிருந்தது.
அந்த நாயின் குரல் தன்னை டிஸ்டர்ப் செய்வதாக நினைத்து கடுப்பான விக்ரம் அதை திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தான். அதனால் பயந்து போன அந்த நாய் கப் சிப் என்று தன் வாயை மூடி கொண்டு, திரும்பி பார்க்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டது. அதனால் விக்ரம் திருப்தியாக புன்னகைத்தான். இன்னும் அந்த நாய் தன்னை துரத்தி கொண்டு வருகிறதா? என்று திரும்பிப் பார்த்த ரதி அது அங்கே இல்லாமல் போகவே, “பார்றா...!! இந்த ரதியோட பவர் என்னன்னு அந்த நாய்க்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதான் என்ன பார்த்த உடனே அது பயந்து ஓடிடுச்சு." என்று நினைத்து தலைக்குள் சிரித்துக் கொண்டாள்.
கிட்டத்தட்ட ஒன்பது மணி அளவில் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ரதி. அங்கே தன் மகளுக்காக அவளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் செய்து வைத்துவிட்டு அவள் வருவதற்காக காத்திருந்தாள் அன்னலட்சுமி. ரதியின் ஸ்கூட்டி அவர்களது வீட்டு வாசலில் வந்து நின்றவுடன், அந்த சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்து பார்த்த ரமேஷ் ரதி வந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு “அம்மா அக்கா வந்துட்டா..!!" என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடினான்.
கிச்சனில் இருந்து கையில் ஒரு ஹாட் பாக்ஸ் உடன் ஹாலிற்கு வந்த அன்னலட்சுமி “இந்தா இத கொண்டு போய் வை. எப்படியும் அவ இன்னிக்கு ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்டா. நான் எல்லாமே ரெடி பண்ணிட்டேன். பூரி மட்டும் மாவு தேச்சு வச்சிருக்கேன் சூடா போட்டுட்டு வரேன். எல்லாரும் உக்காந்து சாப்பிடுங்க." என்று தன் மகனிடம் சொன்னவள் அவளிடம் இருந்த ஹாட் பாக்சை அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்கு சென்று விட்டாள்.
தனது ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்ற ரதி வாசல் வரை வரும் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலாவின் வாசத்தை நன்றாக மோப்பம் பிடித்தபடி “அம்மா.. பூரி சுடுறியா?" என்று காலையில நடந்த அனைத்தையும் அவள் மறந்து விட்டு சாதாரணமாக கேட்க, “ஆமாண்டி இப்ப தான் சுட ஆரம்பிச்சிருக்கேன். சுட்டு வச்சதுக்கு அப்புறம் எனக்கு பத்தலைன்னு சொன்னா கடுப்பாயிடுவேன். போய் சீக்கிரமா மூஞ்சி கழுவிட்டு வா சாப்பிடலாம்." என்று கிச்சனிலிருந்து கத்தினாள் அன்னலட்சுமி.
அதற்கு “சரிமா..!!!" என்று கத்திய ரதி, நேராக தனது அறைக்கு Refresh ஆவதற்காக சென்றாள். இதற்கிடையில் “இது தான் இவ வீடா? இவ்ளோ சின்னதா இருக்கு..!! இந்த வீட்டுக்குள்ள எப்படி இத்தனை பேர் வாழ்றாங்க?" என்று நினைத்த விக்ரம், அவள் வீடு முழுவதும் சுற்றி பார்த்தான். ரதி freshஆகி சாப்பிடுவதற்காக வந்து ஹாலில் தரையில் அமர்ந்தாள். ரமேஷ் தனக்கும், ரதிக்கும் சாப்பிடுவதற்காக இரண்டு எவர்சில்வர் தட்டுகளை கொண்டு வந்து தரையில் வைத்தான். அதில் பெரியதாக இருந்த ஒரு தட்டை எடுத்து தன் முன்னே வைத்துக்கொண்ட ரதி, தயாராக இருந்த குருமாவை எடுத்து தனது தட்டில் ஊற்றியபடி “அம்மா பூரி எங்கே?" என்று கத்தினாள்.
கிச்சனில் பூரி சுட்டுக் கொண்டு இருந்த அன்னலட்சுமி ஒரு குண்டாவில் இதுவரை அவள் சுட்டு வைத்திருந்த பூரியை கொண்டு வந்து அவளது தட்டில் கொட்டி விட்டு செல்ல, ஒரு முழு பூரியை எடுத்து அதை குருமாவில் நினைத்து அப்படியே அதை தூக்கி தன் வாய்க்குள் போட்டு ரசித்து சுவைத்து சாப்பிட்ட ரதி “இந்தா மா.. சீக்கிரமா சுடு. இத நான் சாப்பிட்டு காலி பண்றதுக்குள்ள, மறுபடியும் சுட்டு கொண்டு வந்து போடு." என்று கிச்சனை பார்த்து கத்த, மூன்று பூரியை கொண்டு வந்து தனது மகனின் தட்டில் போட்ட அன்னலக்ஷ்மி “முதல்ல அதை தின்னுடி. நான் மாவு நிறைய தான் பேசஞ்சு வச்சிருக்கேன். ஒன்னு தீந்து போய்ட்டாது. கவலைப்படாத." என்றுவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.
ரதியின் அருகே சென்று அமர்ந்த விக்ரமுக்கு அவள் சாப்பிடும் அழகை பார்த்து அவனுக்கே அந்த பூரியை தானும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் அவனால் இப்போது சாப்பிட முடியாதே... என்று யோசித்த விக்ரம், அப்போது தான் அவன் இறந்து விட்டதை உணர்ந்தான். கடந்த இத்தனை மணி நேரங்களில் அவன் இறந்து விட்டானோ என்று நினைத்து அவன் ஒரு நொடி கூட வருத்தப்படவில்லை. ஆனால் இப்போது ரதியின் குடும்பத்தை பார்த்தவுடன் அவர்களுடன் பேசி பழக வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது. சிறு வயதில் இருந்து அவன் வாழ்ந்த வாழ்க்கையில் அன்பு பாசத்திற்கு எல்லாம் பெரும் அளவில் இடம் இருந்ததில்லை. அவனது அம்மா இறந்த சோகத்தில் அவன் சிறுவனாக இருக்கும் போதே அவனது அப்பா கடும் உடல்நல பாதிப்பால் அவதிப்பட தொடங்கினார்.
அதனால் வீட்டில் மூத்தவனாக இருந்ததால் குடும்ப பொறுப்பும், ஆபீஸ் பொறுப்பும் அவனது தலையில் வந்து விழுந்தது. அவனும் இத்தனை ஆண்டுகளாக அதை சுகமான சுமையாக நினைத்து சந்தோஷமாக செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனது அப்பா இறக்கும் தருவாயில் அவருக்கு பின் அடுத்த சேர்மன் ஆக அவனை பதவியேற்க சொன்னதால், அவனது தம்பிகள் இருவருக்கும் அது பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரும் திட்டமிட்டு அவனை கொலை செய்ய நினைத்தார்கள். அந்த சதியில் சிக்கிக் கொண்டு தான் கத்தி குத்து வாங்கி இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தான் விக்ரம்.
ஆனால் இப்போது ரதியின் குடும்பத்தை பார்த்த பிறகு தான் அப்படி ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து இப்படி எந்த அன்பும் கிடைக்காமல் இந்த வாழ்க்கையில் முழுவதாக எதையும் அனுபவிக்காமல் இறந்து போய்விட்டதற்கு, ரதியைப் போல ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் தனக்கும் இப்படி ஒரு அன்பான குடும்பம் கிடைத்திருக்குமோ? என்று நினைத்து சற்று வருந்தினான் விக்ரம். சாப்பிட்டு கொண்டு இருந்த ரதி டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டி ரோஜாவை பார்த்து “என்ன கிழவி சாப்பிட்டியா?" என்று கேட்க, “அதெல்லாம் நான் எப்பவோ சாப்பிட்டேன்டி. என் மருமக எனக்கு சுட சுட இட்லி சுட்டு கொடுத்தா." என்று பெருமையாகச் சொன்னாள் ரோஜா பாட்டி.
அதனால் சிரித்த ரதி “உன் மருமக காலையில கடைக்கு சுட்ட மீதி இருந்த இட்லிய உனக்கு சூடு பண்ணி குடுத்திருக்கும். அதை தின்னுட்டு நீ இத பெருமையா வேற சொல்றியா?" என்று கிண்டலாக கேட்க, “என் மருமக அப்படி எல்லாம் பண்ண மாட்டா. அப்படியே சூடு பண்ணி கொடுத்தாலும் என்ன தப்பு? நம்ம வீட்ல செஞ்சது தானே..!! அதெல்லாம் தின்னா ஒன்னும் ஆகாது." என்று அன்னலட்சுமியை வி
ட்டுக் கொடுக்காமல் பரிந்து பேசினாள் பாட்டி.
தொடரும்..
அமேசானில் படிக்க..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.