Chapter-57

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அப்போது பூஜை முடிந்துவிட, மாலையும் கழுத்துமாக யாக குண்டத்தின் முன்னே அமர்ந்திருந்த யாழினியும் தினேஷும் ஜோடியாக எழுந்து நின்று தினேஷின் பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். “சீக்கிரம் உங்களுக்குனு ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க.” என்று அவர்கள் ஆசிர்வாதம் செய்ய, இவர்கள் இருவருக்கும் சுருக்கென்று இருந்தது.



பின் வந்தவர்கள் அனைவரையும் அந்த பிரம்மாண்ட பங்களா வீட்டில் இருந்த டைனிங் ஹாலிற்க்கு அழைத்து சென்று தங்கள் வீட்டில் உள்ள வேலையாட்களை வைத்து தினேஷும் யாழினியும் உணவு பரிமாற சொன்னார்கள்‌. ஷங்கரின் மகன் சக்தி அவ்வப்போது அழுது கொண்டே இருக்க, பால் பாடடிலில் சுவாதி அவனுக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தாள். தன் மடியில் நட்சத்திராவை அமர வைத்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த சங்கர் ஸ்வாதி குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருந்ததால் அவளுக்கும் ஊட்டி விட்டான். அதை கவனித்த யாழினிக்கு இதுபோன்று அவன் அவளுக்கு உணவு ஊட்டி விட்டதெல்லாம் ஞாபகம் வர, அவள் தினேஷை திருமணம் செய்து கொண்ட பிறகு அப்படி ஒரு சம்பவம் அவள் வாழ்வில் நடந்ததாகவே அவளுக்கு நினைவில் இல்லை.



அவர்கள் இருவருக்குமே சமைக்க தெரியாது என்பதால் சமையல் வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள். வேறு வழியில்லாமல் வீட்டு வேலைகளை இருவரும் பங்கு போட்டு செய்தார்கள். ஆனால் சங்கரிடம் இருந்து தனக்கு கிடைத்த ஏதோ ஒன்று ‌ தினேஷை திருமணம் செய்த பிறகு இல்லாமல் போய்விட்டது என்று யாழினிக்கு தோன்ற, அவள் கண்கள் அவளையும் மீறி கலங்கியது. இப்படி ஒருபுறம் சுவாதியைப் பிரிந்த தினேஷ் தனது குழந்தையை நினைத்து ஏங்க, ஷங்கரை பிரிந்த யாழினி அவன் தனக்கு அள்ளி அள்ளி கொடுத்த அன்பிற்காக ஏங்கினாள். ஆனால் சங்கரும் ஸ்வாதியும் அவர்களுக்கு நேர்மாறாக தங்களது வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து சந்தோஷமாக தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்தார்கள்.



அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும்போது நட்புடன் சுவாதியை அணைத்துக் கொண்ட யாழினி “குழந்தை குழந்தைன்னு ஒன்னுக்கு ரெண்டு குழந்தை பெத்துக்கிட்ட.. இனிமேலாவது கரியர்ல போக்கஸ் பண்ணு.” என்று சொல்ல, அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்த சுவாதி “நான் ஆல்ரெடி என் கரியர்ல போக்கஸ் பண்ணிட்டு தான் இருக்கேன் ‌ யாழினி. நட்சத்திரா பிறந்து மூன்று மாதத்தில இருந்தே நான் work from home job பண்ணிட்டு தான் இருக்கேன். என் கூட இருந்து குழந்தையை பாத்துக்கணும் என்பதற்காக என் ஹஸ்பண்டும் வாலண்டியரா வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆகி இன்னும் work from home job தான் பாத்துட்டு இருக்காரு.

நாங்க இதுக்கு முன்னாடி வாங்கிட்டு இருந்ததை விட இப்ப நல்ல செலரி தான் வாங்குறோம். கொஞ்சம் கொஞ்சமா இத்தனை வருஷமா மணியை சேவ் பண்ணிட்டு இருந்தோம். இப்ப ஊர்ல எங்க அப்பா வீட்டு பக்கத்திலேயே ஒரு தோட்டம் விலைக்கு வந்திருக்குன்னு சொன்னாரு. அதை வாங்கிட்டோம். நாங்க வீட்ல இருந்து தானே வேலை பார்க்கிறோம்.. சோ அங்க பண்ண வீட்ல ஸ்டே பண்ணி அப்படியே ஆர்கானிக் பிராடக்ட்ஸ் மேனுஃபாக்சரிங் பிசினஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணி இருக்கோம்.” என்று பெருமையாக சொன்னாள்.

அப்போது அவள் குழந்தை அழ, “நீ பேசிட்டு இரு இவனை நான் பார்த்துக்கிறேன்.” என்ற சங்கர் தன் மகனை தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டான். அப்போது தினேஷ் அவளை பார்த்து “நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்க, “ம்ம்.. கண்டிப்பா.” என்ற சுவதி தன் மகளை தூக்கி வைத்துக் கொண்டு அவன் மொபைல் கேமராவை பார்த்தாள். தானும் கேமராவை பார்த்து அழகாக சிரித்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த நட்சத்திரா தினேஷ் மட்டும் உர்ரென்று தன் முகத்தை வைத்திருந்ததால் “அங்கிள் கேமராவை பார்த்து நல்லா சிரிங்க. உங்களுக்கு சிரிக்க தெரியலனா cheese சொல்லுங்க. அப்பதான் ஃபோட்டோ அழகா வரும்.” என்று சொல்லிவிட்டு அவளும் cheese என்று கத்தினாள்.

அப்போது கையில் தனது குழந்தையுடன் அங்கே வந்த சங்கர் அவர்களைப் பார்க்க, அவன் அவர்களுக்கு பின்னே இருந்ததால் கேமராவில் அவன் உருவமும் சரியாக தெரிந்தது. நட்சத்திரா சொன்னதற்காக தினேஷ் cheese என்று சொல்ல, அவனது ஃபோன் அவர்களை அழகாக ஒரு செல்ஃபி எடுத்தது.

Opposite poles may attract each other better.

But only similar poles can stay long together.

-இது முடிவல்ல ஆரம்பம்.


அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

இந்த புத்தகத்தை ஆடியோ வடிவில் கேட்க:


எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 
Last edited:

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-57
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.