அத்தியாயம்: 5
Beachஇல் இருந்த ரதிக்கு அவளது தோழி மீரா கால் செய்து அவளை கிளம்பி ஆபிஸிற்கு வர சொல்கிறாள். அதனால் சாப்பிட்டுவிட்டு தன் ஸ்கூட்டியில் மீண்டும் ஆபீசை நோக்கி சென்று கொண்டிருந்தாள் ரதி. அவள் பின்னே விக்ரமின் ஆத்மா அமர்ந்திருக்கிறது. தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கையை பற்றியும் யோசித்தபடி வேகமாக சென்று கொண்டு இருந்த ரதிக்கு திடீரென விக்ரம் அடிபட்டு கிடத்த்ததைப் பற்றி ஞாபகம் வந்தது.
அதனால் “பாவம்... அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல...!! அவருக்கு எதுவும் ஆகாம கடவுள் தான் காப்பாத்தணும்." என்று முனுமுனுத்தாள். ஆனால் அவள் தனக்குள் அப்படி பேசிக் கொண்டு இருந்தது கூட விக்ரமின் ஆத்மாவிற்கு தெளிவாக கேட்டது. அதனால் அவளைப் பார்த்து முதன் முறையாக புன்னகைத்தவன் அவள் தோள்களில் தன் கையை வைத்து “நீ என்ன பத்தி யோசிக்கிறியா ரதி?" என்று அவள் காதோரம் கேட்டான்.
சட்டென தன் அருகில் யாரோ இருப்பதைப் போல உணர்ந்த ரதி, பின்னே திரும்பி பார்த்தாள். ஆனால் அங்கே அவள் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. ஆனால் அவள் அந்த கண பொழுது கவன சிதறலில் எதிரே வந்தவர்களின் மீது தன் ஸ்கூட்டியைக் கொண்டு போய் விட்டு இருப்பாள். ஆனால் அதை அவளுக்கு முன்னே கவனித்த விக்ரம், அவள் கையின் மீது தன் கையை வைத்து சட்டென பிரேக் போட்டான். அதனால் சில அதிர்வலைகளுடன் அந்த ஸ்கூட்டி நின்று ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னே அவள் திரும்பி பார்த்துவிட்டு முன்னே திரும்புவதற்கு இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதால், என்ன நடந்தது என்று புரியாமல் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்ற ரதி, அவள் பின்னே வந்தவர்கள் தொடர்ந்து Horn அடித்துக் கொண்டே இருந்ததால் மீண்டும் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சென்றாள். தொடர்ந்து நடப்பவை அனைத்தும் வித்தியாசமாக இருந்தாலும் அவள் மனம் முழுவதும் இப்போது அடிபட்டு கிடந்த விக்ரமை சுற்றியே இருந்ததால் அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தித்தாள். அவனுக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்குள் இருந்தது. அதனால் கோவிலை விட்டு வெளியில் வந்து விக்ரமின் மேனேஜர் ஆகாஷ் நம்பருக்கு கால் செய்தாள். ஆனால் அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
அதனால் கடுப்பான ரதி தன் ஸ்கூட்டியை எட்டி உதைத்துவிட்டு “ச்சே..!! நம்பர் ஸ்விட்ச் offனு வருது. இப்போ அவர் எப்படி இருக்காருன்னு நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்று நினைக்க, அவள் வேகமாக எட்டி உதைத்ததால் அவளது கால் வலித்தது. அதனால் தன் முகத்தை உர்றென வைத்து கொண்டு தனது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.
சில நிமிட பயணத்திற்கு பின் அவள் தனது ஆபிஸை சென்றடைந்தாள். தனது ஸ்கூட்டியை அவள் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று சத்தம் இல்லாமல் தனது டேபிளில் அமர்ந்து கொண்டாள். அவளை பின் தொடர்ந்து தானும் உள்ளே வந்த விக்ரம் அந்த ஆபிஸை சுற்றி பார்த்துவிட்டு “இவ இங்க தான் work பண்றாளா?" என்று நினைத்தபடி அவள் அருகில் சென்றான். தன் முன்னே இருந்த சிஸ்டமில் லாகின் செய்த ரதி ஏற்கனவே அவள் லேட்டாக வந்திருந்ததால் அன்றைய நாளுக்கான அவளுடைய வேலையை சீக்கிரமாக செய்ய வேண்டும் என்பதற்காக பரபரப்பாக தன் வேலையை செய்ய தொடங்கியிருந்தாள்.
அவளது பத்து விரல்களும் கீ போர்டில் வேகமாக நடனமாடிக் கொண்டிருந்தது. அவள் என்ன செய்கிறாள் என்று உற்று கவனித்த விக்ரம், “பரவால்ல.. நான் எதிர்பார்த்ததை விட இவ talented தான். இவ்ளோ கஷ்டமான ப்ராஜெக்ட்ட இவ்ளோ வேகமா ஜஸ்ட் லைக் தட் செஞ்சிட்டு இருக்கா..!! இவ working styleஜ பார்த்தாலே தெரியுது. இவ கண்டிப்பா hard worker and dedicated employee. But உன்னோட டேலண்டுக்கு இது சரியான பிளேஸ் இல்ல." என்று நினைத்தான்.
அப்போது அந்த வழியாக சென்ற மேனேஜர் ரதி வந்துவிட்டதை கவனித்து விட்டு அவள் அருகில் சென்று “என்ன ஒரு வழியா உனக்கு ஆபீஸ் வர மனசு வந்திருச்சா? நீ எல்லாம் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டிலேயே படுத்து தூங்க வேண்டியது தானே..!! எதுக்கு வேலைக்கு கிளம்பி வந்து என் உசுர வாங்குற? உனக்கெல்லாம் பர்மிஷன் கேக்குறதுக்கு கூட கஷ்டமா இருக்கு. உனக்கு பர்மிஷன் கேக்குறதுக்கு ஒரு ஆள் வச்சிருக்க. சரி அது கூட பரவாயில்லை. தொறந்த வீட்டுக்குள்ள ஏதோ பூருற மாதிரி நீ பாட்டுக்கு வந்து வேலை பார்த்துட்டு இருக்க? இப்ப கூட என்கிட்ட வந்து இன்ஃபார்ம் பண்ணனும்னு கூட அறிவில்லையா?" என்று கரகரவென்று இருந்த தன் குரலில் சத்தமாக கேட்க, அந்த சிறிய ஆபீஸ் முழுவதும் அவர் பேசியது எதிரொலித்தது. அதனால் அனைவரும் திரும்பி இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் சங்கடமாக உணர்ந்த ரதி எழுந்து நின்று அவரைப் பார்த்து தலைகுனிந்து “சாரி சார்" என்றாள்.
என்ன தான் வெளியில் அவள் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் தொடர்ந்து நடக்கும் சோகமான சம்பவங்களால் அவளது மனம் காயப்பட்டு இருந்தது. அதனால் “இன்னும் நான் யார் கிட்ட எல்லாம் பேச்சு வாங்கணும்ன்னு என் தலையில எழுதி இருக்கோ..!!!" என்று நினைத்து கண்கலங்கினாள். அந்த மேனேஜர் தனக்கு கீழே வேலை செய்பவர்களை இப்படி எல்லாம் மரியாதை இல்லாமல் நடத்துவதை கண்ட விக்ரமிற்கு கோபம் கோபமாக வந்தது. இப்போது அவன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் வேகமாக சென்று அந்த மேனேஜரின் முகத்தில் ஒரு குத்து குத்தி அவரது மூக்கை உடைத்து அவன் முகம் முழுவதும் தக்காளி சட்னி வர வைத்திருப்பான்.
ஆனால் இப்போது தான் அவன் வெறும் ஆத்மா ஆகிவிட்டானே.. அதனால் அவன் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எறிய, தன் கைகளை முறுக்கியபடி ரதியை திட்டு விட்டு செல்லும் மேனேஜரை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த ஆளை ஏதாவது செய்தியாக வேண்டும் என்று இருந்தது. அதனால் வேண்டுமென்றே தரையில் இருந்த கார்பெட்டை விக்ரம் த இழுத்து அவரை கீழே விழ வைக்க, அனைவரும் அவரைக் கண்டு சிரித்தார்கள்.
அவர் விழுந்த வேகத்தில் அவரது புட்டி கண்ணாடி கீழே விழுந்து உடைந்து விட்டது. அதனால் அவர் எழுந்து கொள்ள முயற்சி செய்யும்போது கண்ணு தெரியாமல் அருகில் இருந்த டேபிளில் இடித்துக் கொண்டார். அந்த மேனேஜர் மனசாட்சி இல்லாமல் அனைவரையும் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்துபவன் என்பதால் அனைவரும் இவனுக்கு இதெல்லாம் தேவை தான் என்று நினைத்து அவனுக்கு சென்று உதவி செய்ய நினைக்கவில்லை.
“என்ன பேச்சு பேசிட்டு போன நீ? உனக்கு இதெல்லாம் தேவை தான்டா." என்று தான் நம் ரதியும் நினைத்தாள். ஆனால் அவருக்கு அடிபட்டதை பார்த்தவுடன் அவளது மனம் இறங்கியது. அதனால் தானே வேகமாக அவர் அருகில் சென்று அவரது கையை பிடித்து தூக்கி விட்டவள் “நான் உங்களை கூட்டிட்டு போய் உங்க கேபின்ல விடட்டுமா சார்?" என்று கேட்க, தனது கண்களுக்கு 144P தெரிந்த அவளது உருவத்தை வைத்தும் அவளது குரலை வைத்தும் அது ரதி தான் என்று உறுதி செய்த அந்த மேனேஜர் “என்னை இருந்தாலும் இந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். மத்தவங்க எல்லாரும் என் மேல இருக்கிற கடுப்புல நான் கீழே விழுந்தத பார்த்து சிரிக்கும் போது, நான் இப்ப தான் இவ்வளவு திட்டிட்டு வந்தேன். ஆனா அத பத்தி எல்லாம் யோசிக்காமல் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறா." என்று நினைக்க, அவளது உதவியை பெற்றுக் கொள்ள அவருக்கு கூச்சமாக இருந்தது. அதனால் “பரவால்ல மா நானே பார்த்து போய்க்கறேன்." என்ற மேனேஜர் எப்படியோ உடைந்து தலையில் கிடந்ததன் கண்ணாடியை தேடி எடுத்துக் கொண்டு தனது கேபினுக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற பின் ரதி மீண்டும் வந்து தன் டேபிளில் அமர்ந்தாள். அப்போது “ஏண்டி உன்ன அந்த ஆளு என்ன பேச்சு பேசிட்டு போனான்.... அவனுக்கு எதுக்கு நீ பாவம் பாக்குற?" என்று மீரா அவளிடம் கேட்க, “கடிக்கிறது, பாசமா இருக்கிறது இரண்டுமே நாயோட குணம். ஆனா மனுஷங்களுக்கு நாய் மாதிரி எல்லாரையும் கடிச்சு வைக்கிற பழக்கம் இல்லையே..!! எனக்கும் அந்த ஆள பிடிக்காது தான். அதுக்காக கீழ விழுந்து கிடக்கும் போது கூட ஹெல்ப் பண்ணாம இருக்க முடியுமா?" என்ற ரதி தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
அவள் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த விக்ரம், “அட போடி." என்று சாலிப்புடன் சொல்லிவிட்டு அவள் அருகில் சென்று அவள் தலையின் மீது கை வைத்து அவள் தலை முடியை லேசாக கலைத்தவன் “you are impressive ரதி." என்றுவிட்டு அவளை பார்த்து புன்னகைத்தான். திடீரென தன் தலையின் மீது யாரோ கை வைத்தது போல உணர்ந்த ரதி மேலே அன்னாந்து சீலிங்கை பார்த்துவிட்டு, தன் பின்னே யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தாள். அங்கே யாரும் இல்லை. அதனால் அவள் மீண்டும் திரும்பி தன் முன்னே இருந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்க்க, அதில் யாரோ ஒருவரின் உருவம் அவளுக்கு தெரிந்தது. அதனால் யாரது? என்று பார்க்க நினைத்த ரதி மீண்டும் திரும்பிப் பின்னே பார்க்க, அங்கே யாரு
ம் இல்லை. அதனால் அவளுக்கு குழப்பமாகவும் சற்று பயமாகவும் இருந்தது.
தொடரும்..
அமேசானில் படிக்க..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.