Chapter-5

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அத்தியாயம் 4: அழகழகா அவ தெரிவா..!!

கத்திக்குத்து வாங்கி ரத்தம் சொட்ட சொட்ட தன்னை துரத்திக் கொண்டு வந்த ரவுடிகளிடம் இருந்து தப்பித்து சென்று ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்து ஒரு இடத்தில் பூச்செடிகளுக்கு நடுவே மறைந்து அமர்ந்திருந்தான் பிக் பாஸ். அப்போது பலத்த இடி ஒன்று இடிக்க, மின்னல்கள் வெட்ட தொடங்கி சாரல் மழை பெய்ய தொடங்கியது. உள் பக்கமாக பூட்டி இருந்த அந்த வீட்டின் ஹாலில் சத்தமாக டிவி வால்யூம் வைத்து அதில் ஓடிய பாடலை தானும் சேர்ந்து பாடியபடி சந்தோஷமாக ஆடிக் கொண்டு இருந்த இளம் பெண் ஒருத்தி ‌வெளியில் இடி இடிக்கும் சத்தத்தை கவனித்து விட்டு “அச்சச்சோ.. வெளிய துவச்ச துணியை காய போட்டுட்டு வந்தேனே.. அது நினைறதுக்குள்ள போய் எடுக்கணும்.” என்று நினைத்து வேகவேகமாக கதவை திறந்து படிகளில் இறங்கி வெளியே சென்றாள்.


அந்த பலத்த இடி மின்னல் சத்தத்திற்கு நடுவிலும் ஜல் ஜல் என்ற அவளது கால் கொலுசின் ஓசை மறைவாக அமர்ந்து இருந்த நம் பிக் பாஸின் காதுகளில் இன்னிசை ராகமாய் வந்து பாய்ந்தது. அதனால் “யாரோ வர்றாங்க போலையே! ச்சே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? ஒரு பக்கம் இந்த சனியன் புடிச்ச மழை.. இப்ப எவ்வளோ ஒருத்தி வந்திருக்கா.. இவ கண்ணுல மாட்டாம இருக்கணும்.” என்று நினைத்து அவன் திக் திக் இதயத்துடன் இருக்க, அங்கே இருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் லேசாக மழையில் நனைந்தவாறு கொடியில் தொங்கிக் கொண்டு இருந்த ஆடைகளை வேகமாக எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அருகில் எங்கேயோ ஸ்ஸ்.. ஸ்ஸ்.. என்று அவளுக்கு சத்தம் கேட்பதை போல இருந்தது.


முதலில் அந்த சத்தத்தை “நம்ம பிரம்மையா இருக்கும்.” என்று நினைத்து உதாசீனப்படுத்திய அந்த பெண் வெளியில் கிடந்த அனைத்து துணிகளையும் எடுத்து தனது தோள்களில் போட்டுவிட்டு திரும்பும்போது அவள் முன்னே 4 அடி நீளமுள்ள ஒரு பாம்பு நின்று அவளைப் பார்த்து சிறியபடி ஸ்ஸ்.. ஸ்ஸ்.. என்றது. அதை பார்த்தவுடன் அவளது சப்த நாடிகளும் அடங்கிப் போய்விட்டது. சத்தமாக கத்தி யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று கூட அவளால் யோசிக்க முடியவில்லை. அவளது உதடுகள் “பாம்பு.. பாம்பு.. ஐயோ பாம்பு..!!” என்று முணுமுணுத்து கொண்டு இருக்க, அந்த பெரிய பாம்பு அவளை நோக்கி வந்தது.


“அய்யோ இது என்ன நம்மள பாத்து ஹை ஸ்பீடுல வருது.. இதுக்கு விஷம் அதிகமாச்சே.. இது ஒரு போடு போட்டா நான் பொட்டுன்னு மேல போய் சேர்ந்திடுவனே.. இப்ப என்ன பண்றது?” என்று நினைத்து பயத்தில் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டு இருந்த அந்த பெண் உடனே தன் தோள்களில் இருந்த துணிகளை கீழே போட்டுவிட்டு “ஐயோ பாம்பு.. பாம்பு வந்துருச்சு.. யாராவது வாங்க.. என்ன காப்பாத்துங்க ப்ளீஸ் ஹெல்ப்.. ஹெல்ப்..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து அலற தொடங்கி விட்டாள்.‌ அதனால் தான் இருந்த இடத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த பிக் பாஸ் “அட கிறுக்கி வாய மூடு டி. இவ சத்தமா கத்தி ரோட்ல சுத்திட்டு இருக்கிற ரவுடி பயலுங்கள இவளே வாலண்டியரா வாங்க வாங்கன்னு இவ வீட்டுக்கு வர சொல்லுவா போல..!! அவனுங்க இங்க வந்தா, உன்னையும் விட மாட்டானுங்க. என்னையும் விட மாட்டானுங்க டி.” என்று முணுமுணுத்தபடி விரைந்து சென்று அவள் பின்னே இருந்து அவளது வாயை பொத்தினான்.


ஏற்கனவே கடும் பயத்தில் இருந்த அந்தப் பெண் திடீரென தடிமாடு போல இருக்கும் எவனோ ஒருவன் தன்னை வந்து பின்னே இருந்து அப்படி வாயை பொத்தியதால், ஏற்கனவே வேகமாக துடித்துக் கொண்டு இருந்த அவளது இதயம் இப்போது விட்டால் வெளியே வந்து விழுந்து விடுவேன் என்ற நிலையில் இருந்தது. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் முன்னே அவளை கொத்த துடிக்கும் பாம்பு. அவளுக்கு பின்னே இருப்பவன் யார் என்றே தெரியவில்லையே..‌!! இருப்பினும் முன்னே இருக்கும் விலங்கை விட மனிதர்கள் தான் மிகவும் மோசமானவர்கள் என்று அவளது மூளை அவளிடம் அடித்து சொன்னதால், நமது பிக் பாஸுன் கையில் தொடர்ந்து அடித்த அந்த பெண் அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்காக போராடினாள்.


ஆனால் அவளது 4 அடி சிறிய உருவத்தால் அந்த ஆறு அடி பெரிய உருவத்தை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. அவள் முன்னே இருந்த பாம்பு வேறு மெல்ல மெல்ல ஊர்ந்து அவள் அருகில் வந்து கொண்டு இருக்க, பயத்தாலும் மழை பெய்ததால் குளிராலும் அவளது உடல் நடுங்கியது. அதை எல்லாம் துளியும் கண்டு கொள்ளாத பிக் பாஸ் “இப்ப எதுக்கு டி பாம்பு பாம்புன்னு கத்துன?” என்று அவள் காதோரம் கிசுகிசுக்க “டேய் லூசு புடிச்சவனே முன்னாடி என்ன இருக்குன்னு பார்த்து தொலை டா..!! கண்ணு தெரியாத கபோதி.‌.!!” என்று சொல்ல நினைத்தவள், அவன் தன் வாயை இறுக்கமாக மூடி இருந்ததால், அவன் கையில் தட்டிவிட்டு தன் முன்னே இருந்த பாம்பை அவளது ஒற்றை விரலால் சுட்டிக்காட்டினாள்.‌


‌ அப்போதுதான் அதை கவனித்த பிக் பாஸ் “ஓஓ... நிஜமாவே இங்க பாம்பு இருக்கா? இதை பார்த்து தான் இவ பயந்தாளா? நான் கூட என்ன அவனுங்க கிட்ட போட்டு குடுக்க தான் வேணும்னே இவ இப்படி கத்துறான்னு இவளை தப்பா நினைச்சுட்டேன்.” என்று நினைத்தவன், பயத்தில் அவளது உடல் நடுங்கிக் கொண்டு இருப்பதையும் உணர்ந்தான். அதனால் அவள் காதோரம் “இங்க பாரு.. எனக்கு இந்த பாம்பை கொல்றது எல்லாம் ஒரு விஷயமே இல்ல ஆனா நான் உன் வாயில இருந்து கையை எடுத்ததுக்கு அப்புறம் நீ கத்தி சத்தம் போட்டு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட என்ன போட்டுக் கொடுத்திடக் கூடாது. உன் வாயில இருந்து சத்தம் வந்துச்சு, மொத்தமா உனக்கு பால் ஊத்தி உன்னை மேல அனுப்பிடுவேன். புரிஞ்சுதா?” என்று அவளை மிரட்டினான். இருந்த பயத்தில் அவளும் “மொதல்ல இந்த பாம்பு கிட்ட இருந்து தப்பிக்கணும். அப்புறமா இந்த காண்டாமிருகத்துக் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிக்கணும்.” என்று நினைத்து அவனுக்கு சரி என்று சொல்வதைப்போல தன் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.


“நான் உன் வாயில இருந்து கையை எடுக்க போறேன். நீ கத்தக் கடாது.” என்று மீண்டும் ஒரு‌ முறை அவன் அவளை எச்சரிக்கை செய்ய, “கத்தி தொலைய மாட்டேன் டா.. தடிமாடு லூசு பயலே.. அந்த பாம்பை துரத்துறத விட்டுட்டு சும்மா டயலாக் பேசிட்டு இருக்கான்.. பக்கத்துல வந்துட்டு இருக்கு டா பயமா இருக்கு..!!” என்று மைண்ட் வாய்ஸில் பேசிய அந்தப் பெண் இம்முறை கத்தமாட்டேன் என்று சொல்வதைப் போல வேகவேகமாக தன் தலையை இடவலமாக ஆட்டினாள்.


அதனால் அவள் வாயில் இருந்து தைரியமாக தன் கையை எடுத்த பிக் பாஸ் அவள் தோள்களில் கை வைத்து அவளை தன் பின்னே நிற்க வைத்தவன் இப்போது அவனைப் பார்த்து சீறிக் கொண்டு இருந்த பாம்பை பார்த்தான். “எனக்கு ஆப்பு எந்த எந்த ரூபத்துல எல்லாம் வருது..!!” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு, அந்த பாம்பை தாக்குவதற்கு ஏதுவாக ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்றி முற்றி பார்த்தான். அப்போது துணி துவைக்க பயன்படுத்தும் ஒரு பெரிய கல் ஒன்று அவன் கண்களில் தென்பட்டது. உடனே வேகமாக அதன் அருகில் சென்று அவனது பலத்தைக் கொண்டு நரம்புகள் புடைக்க சிரமப்பட்டு அதை தூக்கி வந்த பிக் பாஸ் ஒரே போடாக அதை அந்தப் பாம்பின் மீது தூக்கி போட, நசுங்கி சட்னியாகி செத்துப் போனது அந்த பாம்பு. அவன் தனது மேல் சட்டையை கழட்டி வயிற்றில் உள்ள காயத்தை மறைத்து கட்டி இருந்ததால், அவன் அந்தக் கல்லை தூக்கும்போது அவனது முறுக்கேறிய புஜங்களில் புடைத்துக் கொண்டு இருந்த பச்சை நரம்புகளை அந்த இருட்டிலும் கூட அவளால் காண முடிந்தது.


அதைப் பார்த்து ஒரு நொடி தன் வாயை பிளந்த அந்த இளம் வயது பெண் “யார்றா இவன் பார்க்க பாடி பில்டர் மாதிரி இப்படி இருக்கான்..!! இவனால அந்த பாம்பு கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன். இப்ப இவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது?” என்று நினைத்து பயத்தில் எச்சில் விழுங்கினாள். அப்போது தன் முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டிவிட்டு அவளை திரும்பி பார்த்தான் பிக் பாஸ். அவன் அந்த வெயிட்டான கல்லை தூக்கியதால் ஏற்கனவே அவன் கத்திக்குத்து வாங்கி இருந்த நிலையில், அவனது காயத்தில் இருந்து அவன் கட்டியிருந்த சட்டையை‌ தாண்டி ரத்த கசிவு ஏற்பட தொடங்கியது. அதை கண்டு மேலும் பயந்துப்போன அந்த பெண் “ஐயையோ இரத்தம் வருது.” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் சென்றவள், “நீங்க கல்ல தானே தூக்கினீங்க! அதுக்கு அடி படுற மாதிரி இருந்தா கைல தானே பட்டு இருக்கணும்! உங்களுக்கு என்ன வயத்துல இருந்து பிளட் வருது? முதல நீங்க உள்ள வாங்க. உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணி இந்த bleedingஐ stop பண்ணனும்.” என்று சொல்லி அவன் தோள்களில் கை வைத்து கை தாங்கலாக அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். ‌


அவன் அவளை திரும்பி பார்த்த நொடியில் இருந்து அவள் பேசிய எதுவுமே நம் பிக் பாஸுன் காதுகளில் விழவே இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அவன் தான் அவளிடம் விழுந்து விட்டானே! சரியாக அவன் திரும்பிப் பார்க்கும்போது, வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கலந்த top and skirt அணிந்திருந்த அந்த 25 வயது மதிக்கத்தக்க அழகிய இளம் பெண் அவளது நீண்ட கூந்தலை தூக்கி ஹை போனி டேயில் போட்டு இருந்தாள். அவளது மொத்த உடலும் மழையில் நனைந்திருந்ததால் அவளது ஆடைகள் மொத்தமாக ஈரமாகி அவளது உடலோடு ஒட்டிக் கொண்டு, அவளது அங்க வளைவுகளை அழகாக காட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் அதன் மீது ஒரு நொடிக்கு மேல் அவனது பார்வையை நிலைக்க விடாமல், அவளது செவிதழ்கள் அவனுக்காக உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் முகத்தை தவிர அவனை வேறு எங்கேயும் பார்க்க விடவில்லை.

தொடரும்...

SNK Booksஇன் புதிய நாவல்களை இலவசமாக எங்களது வெப்சைட்டில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.