Chapter 5

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“என்னம்மா கவிதா… எங்க போயிட்டு வர?? இவ்வளவு நேரம் வெளியேவா இருந்த?” என்று அக்கறையுடன் விசாரித்தார் முத்து, கவிதாவின் தந்தை. “அது ஒன்னும் இல்லப்பா அந்த பாட்டிய பார்க்க போனேன் என்று கவிதா கூறினாள்.

“அவங்களை ஏன்மா பார்க்க போனா.. அவங்க தான் நம்ம எப்ப போய் கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டாங்களே… எதுக்கு அவங்க கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு” என்று முத்து கூறினார்.

“அப்படி இல்லப்பா இந்த ஊருக்கு நல்லா தெரியும் அபர்ணா பிறந்ததிலிருந்து தான் அவங்க அப்பா அம்மா எப்போ போய் என்ன கேட்டாலும் அந்த பாட்டி பேச ஆரம்பிச்சாங்க… அவங்க தான், அபர்ணா வந்து நிறைய விஷயத்தை இந்த கிராமத்துக்காக பண்ணுவான்னு சொன்னாங்க…. அதே மாதிரி அவ நிறைய நல்ல விஷயம் பண்ணா… எல்லாரையும் படிக்க வைக்கிறது முதற்கொண்டு எல்லாத்துக்குமே நிறைய உதவி பண்ணி இருக்கா…. அதே மாதிரி இதுவும் சொன்னாங்க அப்பு ரொம்ப நாள் இருக்கவும் மாட்டான்னு….. இப்ப அதே மாதிரி நடக்கவும் நடந்திருச்சு… அப்புறம் அவங்க வீட்டுக்கு வர போற பொண்ணையும் அபர்ணாவே காட்டியும் குடுப்பான்னு சொன்னாங்க…. அப்பு இங்க இருந்து கிளம்பும் போது என்கிட்ட தான் பேசிட்டு போனா… என்ன தோணுச்சுன்னு தெரியல எல்லாரையும் நல்ல பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போனா…. அப்போ அப்பு என்னை தானே அவங்க வீட்டுக்கு வர போற பொண்ணுன்னு நினைச்சு சொல்லி இருப்பா…. அதான் எதுவும் பாட்டி கிட்ட கேட்டுப்போம்னு போனேன் பா” என்று கவிதா கூறினாள்.

“உனக்கு எத்தனை வாட்டி சொல்றது கவிதா….. என்ன நடந்தாலும் சரி விக்ரம்கு தான் உன்னை கட்டிக் குடுப்பேன் வேற யாருக்கும் இல்லன்னு…. அங்க குடுத்தா தான் நானும் நிம்மதியா கண்ணு மூட முடியும்” என்று முத்து கூறினார்.

“என்ன பா இப்படி சொல்றீங்க நான் சந்தோஷமா வாழ்றதை பார்க்கணும்னு ஆசையே இல்லையாப்பா உங்களுக்கு…. எப்போ இந்த பேச்சு வந்தாலும் நீங்க அதை தான் சொல்றீங்கப்பா” என்று கவிதா ஆதங்கத்துடன் கேட்டாள்.

“அப்படி இல்லம்மா உங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் உனக்காக மட்டுமே தான் நான் வாழ்ந்திட்டு இருக்கேன்… அப்படி இருக்கும் போது உன்னை ரொம்ப பாதுகாப்பான ஒரு இடத்தில நான் கட்டிக் குடுத்தேனா தானே எனக்கு நிம்மதி இருக்கும்… எனக்கு அப்புறம் அவங்க நல்லா பார்த்துப்பாங்கன்னு எனக்கு தெரிஞ்சா தானே நானும் நிம்மதியா இருக்க முடியும்…. அப்படி ஒரு இடம்னா அது கண்டிப்பா ஸ்ரீனிவாசன் ஐயாவோட குடும்பம் மட்டும் தான்…. அவங்க தான் இந்த ஊருக்கும் நல்லது நினைப்பாங்க அப்படி இருக்கும் போது அந்த வீட்டுக்கு போனா தானே மா நீயும் சந்தோஷமா இருப்ப… நானும் நிம்மதியா இருப்பேன்…. எனக்கும் இந்த ஒரு நம்பிக்கையும் இருக்கு நீ அங்க கண் கலங்காம இருப்பேன்னு…. அதனால தான் சொல்றேன் அதை பத்தி எல்லாம் நீ யோசிக்காத… எல்லாம் நாங்க பெரியவங்க பேசிப்போம்…. நீ ரொம்ப மண்டைய போட்டு குழப்பிக்காத” என்று முத்து கூறினார்.

“சரிங்கப்பா நம்ம சாப்பிடலாம் வாங்க….. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…. சாப்பிட்டு தூங்குவோம் வாங்க” என்று கவிதா முத்து இருவரும் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.

விக்ரம் வீடு வாசலில் மரத்தால் செய்த சிறிய கேட், உள்ளே சென்றாள் ஒரு சிறிய பூந்தோட்டத்தை அபர்ணா அமைத்திருந்தாள். வீட்டின் நுழைவாயில் இரு பக்கமும் திண்ணை, ஒரு விசாலமான ஹால், இரண்டு அறைகள் பின்னால் சமையலறை மற்றும் பூஜையறை என ஒரு சிறிய வீடு விக்ரம் உடையது. பின் கொல்லை பக்கத்தில் குளியலறை அமைந்திருக்கும். இது போக தனியாக ஒரு அறை மட்டும் கொல்லை பக்கத்தில் இருக்கும் அந்த அறையில் மட்டும் பெரிய வசதிகள், மின்சாரம் முதற்கொண்டு எதுவும் இருக்காது அங்கு பழைய பொருட்களை போட்டு வைப்பதற்காக மட்டும் உபயோகித்துக் கொள்வார்கள்.

பின் மொட்டை மாடியில் பாதி அளவில் ஷீட் போடப்பட்டிருக்கும் அங்கே தான் பெரும்பாலும் விக்ரம் வந்தால் உறங்குவான். அதற்காகவே விக்ரமின் தந்தை அதை ஏற்பாடு செய்தார். விக்ரமின் வீட்டிற்கு பக்கத்தில் சரவணனின் ஒரு சிறிய வீடு…. அங்கே ஒரு ஹால் ஒரு சிறிய அறை ஒரு சமையலறை மட்டும் இருக்கும் எப்பொழுதாவது சரவணனின் பெற்றோர்கள் வந்தால் தங்குவதற்கு என ஏற்பாடு செய்திருந்தான்.

விக்ரம் மற்றும் சரவணன் உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் விக்ரம் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டிருந்தனர். “அம்மா அப்பா இப்ப கொஞ்சம் பரவால்ல தானே டா” என்று சரவணன் கேட்க, “ஆமா மச்சான் அவங்க அந்த பாட்டி சொன்னத ரொம்பவே நம்பி இருந்தாங்க… ஏன்னா அவங்க சொன்னபடி தான் நிறைய நடந்ததுன்னு நம்பி இருந்தாங்க….. அதனால அவங்க ஒரு பக்கம் பயத்துலயும் இருந்தாங்க, இன்னொரு பக்கம் நடக்காம இருக்கணும்னு வேண்டிக்கிட்டும் இருந்தாங்க… ரெண்டுமே பண்ணிட்டு இருந்தாங்க” என்று விக்ரம் கூறினான்.

“இப்போ அப்பு இருந்தா நம்ம கூட இங்க உக்காந்துட்டு…. அவ ஏதாவது பேசிட்டு உன்கிட்ட என்கிட்ட வம்பு இழுத்துட்டு இருப்பா இல்ல” என்று சரவணன் அபர்ணாவின் நினைவுகளை சிலாகித்துக் கொண்டு பேச, “அபர்ணா எங்க வீட்டு பொண்ணா மட்டுமே இல்ல மச்சான் இந்த ஊருக்கே அவ சொந்தமானவ மாதிரி தான் இருந்தா… அதனால தான் இங்க இருக்கிற எல்லாருக்குமே அவளை ரொம்ப புடிச்சிது…. அவள மிஸ் பண்ணாத நாளோ நேரமோ இல்லவே இல்ல” என்று விக்ரம் கண் கலங்க கூறினான்.

“ரொம்ப சாரி விக்கி!!! என்னமோ இங்க வந்த உடனே அப்பு ஞாபகம் வந்துதுன்னு நானும் பேசிட்டேன் உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன் சாரி டா” என்று சரவணன் விக்ரமை அணைத்துக் கொண்டு கூற, “அது பரவாயில்லடா நீ இப்ப என் கூட இருக்குறதுனால ஏதோ இதை நான் உன்கிட்ட பேசுறேன்… நீயும் இல்லன்னா நான் மட்டுமே தனியா இருந்தா ஏதோ யோசனை எல்லாம் இருந்திருக்கும் எனக்கு” என்று விக்ரம் கூறினான்.

“சரி அதை விடு வேற ஏதாவது பேசலாம்…. சரி, ஆமா உண்மையிலேயே அந்த பொண்ண கூட்டிட்டு வர தான் போறியா விக்கி” என்று சரவணன் கேட்க, “இப்போதைக்கு என்கிட்ட அதுக்கு உறுதியான பதில் எதுவும் இல்லை சரவணா… கோபத்துல பேசிட்டு வந்துட்டேன்…. இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்கல அதுக்குள்ள என்ன மனசுக்கு தோணுதோ அதுக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கலாம்னு தான் இருக்கேன்” என்று விக்ரம் கூறினான். “நீ எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு டா” என்று சரவணன் கூற, ம்ம் சரி டா என்றான் விக்ரம்.

சரவணன் கட்டிலில் இருந்து எழுந்து சற்று தூரம் முன்னே சென்று வானத்தை பார்த்து, “என்ன இருந்தாலும் இந்த நைட் நேரத்துல நம்ம ஊர இங்க பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியாக இருக்கு டா” என்று சரவணன் கூற, விக்ரமும் அவனுடன் சேர்ந்து கொண்டு, “ஆமா மச்சான் இது மட்டும் தான் ஒரே விஷயம் மனசுக்கு நிம்மதிய குடுக்குது” என்றான் விக்ரம்.

“ஹே…. ஆமா மச்சான்!!!! அந்த பொண்ணு என்ன ஆனா??” என்று சரவணன் கேட்க, “அது தெரியலடா ஆல்ரெடி ஒரு தடவ ஊட்டில பார்த்தேன்… அதோட அந்த பொண்ண அன்னிக்கு பார்ட்டில பார்த்தேன்…. சரி பேசலாம்னு போனேன்… ஆனா, அதுக்குள்ள அவ எங்க போனான்னு தெரியல…. அவ யாரு என்ன பேருன்னு கூட தெரியல” என்று விக்ரம் கூறினான்.

“பேரு கூட தெரியாம தான் அன்னிக்கு பார்த்தேன்னு சொல்லிட்டு தெருத்தெருவா சுத்தி சுத்தி பார்த்தியா ஊட்டியில” என்று கேலியாக சரவணன் கேட்க, “நமக்கு ஒரு சிலரை பார்த்ததுமே அவங்க யாரு என்ன பண்றாங்கன்னு அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க தோணும்…. அதுக்கும் மேல நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க மாதிரி தோணும்ல… அந்த மாதிரி தான் எனக்கும் தோணுச்சு அந்த பொண்ண பார்த்ததும்…. அன்னிக்கும் மிஸ் பண்ணிட்டேன் பார்டில பார்த்தப்பவும் நான் மிஸ் பண்ணிட்டேன்” என்று விக்ரம் கூறினான்.

“ஆனா, அந்த பொண்ண பார்த்தா நம்ம கிராமத்துக்கு எல்லாம் வந்து இருப்பாளான்னு தெரியலையே… உனக்கு எப்படி செட் ஆகும் டா… உனக்கு கவிதா தான்டா கரெக்ட்டு” என்று சரவணன் விக்ரமை வம்பு இழுக்க, “உனக்கு பல தடவை சொல்லிட்டேன் கவிதாவையும் என்னையும் வெச்சு கிண்டல் பண்ணாத… அவளும் எனக்கு இன்னொரு தங்கச்சி மாதிரி தான்” என்று விக்ரம் உறுதியாக கூறினான்.

“சரி கவிதாவை விடு… அந்த பொண்ணு எப்படி வந்து இங்க இருப்பான்னு நினைக்கிற” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் பார்த்த உடனே எல்லாம் முடிவு பண்ண முடியாது டா… பார்த்ததும் எனக்கு பிடிச்சிருந்தது…. அதனால நான் தேடினேன் அவள…. ஆனா, கிடைக்கல திருப்பி இன்னொரு தடவ பார்த்தேன்…. அப்போ தான் உனக்கும் காட்டினேன் அவள… அப்ப அவளும் என்னை பார்த்தா… பேச முயற்சி பண்ணேன்…. எங்க போனான்னே தெரியல அப்பவும் தேடினேன் கிடைக்கல…. திருப்பி நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணணும்னு எழுதி வெச்சி இருந்தா அவளை கண்டிப்பா பார்ப்பேன்” என்று விக்ரம் கூறினான்.

“உனக்குன்னு எழுதி வெச்சிருந்தா எப்படி இருந்தாலும் அந்த பொண்ண நீ மீட் பண்ணுவ டா” என்று சரவணன் கூறிக் கொண்டே, “விக்கி இந்த ரூம மட்டும் ஏன் அப்படியே விட்டு வெச்சிருக்கீங்க… இதையும் நல்ல க்ளீன் பண்ணி அங்க ஒரு லைட் ஃபேன் போட்டோம்னா அப்பப்போ இந்த இன்ஸ்பெக்டர்ஸ் எல்லாம் வந்து தங்குறாங்க இல்ல அவங்களுக்கு எல்லாம் கூட யூஸ் ஆகும்” என்று சரவணன் கூறினான்.

“அப்படித் தான் நானும் நினைச்சேன்…. சரி நம்ம வீட்டு கிட்ட எதுக்கு, அவங்களுக்கு தான் ஆஃபீஸ் கிட்டயே ரூம்ஸ் இருக்குல்ல அங்க இருந்துப்பாங்கனு நான் விட்டுட்டேன்டா…. ஏன்னா திருப்பி அம்மா தான் சமைக்கணும் குடுக்கணும்…. எப்பயாவது ஒரு நாள் அவங்களா ஆசைப்பட்டு சமைச்சு குடுக்கிறது ஓகே…. இங்க தங்க வெச்சா அவங்க இருக்குற வரைக்கும் அது அம்மாவுக்கு ஒரு தனி பிரஷர் மாதிரி இருக்கும்ல அதனால தான் நான் இந்த ரூம் சரியா ரெடி பண்ணல” என்று விக்ரம் கூற, அதுவும் சரி தான் டா என்று சரவணன் கூறினான்.

இப்படி இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டே விக்ரம் மற்றும் சரவணன் மொட்டை மாடியில் கட்டில் மேலே உறங்கினர்.

மெதுவாக கிராமம் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தது அபர்ணாவின் இறப்பிற்கு பின். இருப்பினும், கிராமமே ஏதோ ஒரு கலை இழந்தாற் போல் அனைவரும் உணர்ந்தனர். என்ன தான் அங்கிருக்கும் பெரியவர் முதல் சிறு பிள்ளைகளும் அன்றாட வாழ்க்கையை தொடர்ந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அபர்ணாவை நினைத்துக் கொண்டே தான் இருந்தனர். இப்படியே சில நாட்கள் கழிந்தது.

“அபி, நானும் சரவணனும் கோயம்புத்தூர் வரைக்கும் போயிட்டு வரோம் அதுவரைக்கும் கொஞ்சம் எல்லாம் பார்த்துக்கோ…. இரண்டு இன்ஸ்பெக்டர் இருக்காங்க இருந்தாலும் நீயும் பார்த்துக்கோ” என்று விக்ரம் கூறி இருவரும் புறப்பட்டனர்.

“மச்சான் இங்க ஹாஸ்பிடல்ல அபர்ணாவோட ஆர்கன் டோனேஷனோட ஒரு சின்ன ஃபார்மாலிட்டி ஒன்னு சொல்லி இருக்காங்க அதை முடிச்சுட்டு அதுக்கப்புறம் மீட்டிங்கு போயிடலாம்” என்று விக்ரம் கூற, “சரிடா இத முடிச்சுட்டே போலாம்… டைம் தான் இருக்கே நமக்கு” என்று சரவணன் கூறினான்.

இருவரும் மருத்துவமனையை வந்தடைந்ததும், “சரி நீ இங்க பார்க்கிங்ல வெயிட் பண்ணிட்டு இரு நான் போயிட்டு சைன் பண்ணிட்டு டாக்குமெண்ட்ஸ் மட்டும் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று விக்ரம் கூறி உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் விக்ரம் கையில் டாக்குமென்டுடன் அறக்க பறக்க ஓடி வரவும் சரவணன் அவனை பார்த்து, “என்னடா என்ன ஆச்சு??” என்று பதற்றத்துடன் கேட்டான்.

“மச்சான் மச்சான் இப்போ இங்க ஒரு வைட் கலர் டிரஸ் போட்டு ஒரு பொண்ண வந்தா மச்சான் பார்த்தியா நீ” என்று விக்ரம் கேட்க, சரவணன் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “அதுக்கா டா இப்படி ஓடி வந்த… நான் கூட என்னவோ எதோன்னு நினைச்சு பயந்துட்டேன்டா” என்று சரவணன் கூறினான்.

“ப்ச்…. அதை விடுடா நீ பார்த்தியா…. நான் உனக்கு ஃபோன் பண்ணி இருக்கனும்… அந்த நேரத்துல எனக்கு எதுவுமே தோணல…. நான் திருப்பி அந்த பொண்ண பார்த்தேன்… இப்ப தான் ஹாஸ்பிடல்ல பார்த்தேன்… உள்ள போய் டாக்குமெண்ட் வாங்கிட்டு வரும் போது பார்த்தேன்…. அதுக்குள்ள எப்படி மாயமானேன்னே தெரியல…. அந்த பொண்ணு மட்டும் தான் இருந்தா… லிஃப்ட்ல இறங்கிட்டா அதனால தான் நான் படிக்கட்டுல ஓடி வந்துட்டு இருக்கேன்…. பார்க்கிங்கு தான் வந்து இருக்கனும்” என்று விக்ரம் மூச்சு வாங்க கண்கள் அலைபாய்ந்து கொண்டே கூறினான்.

“அது சரி வெறும் வெள்ளை டிரஸ்னா என்னன்னு தேடுறது… இங்க டாக்டர் கூட வெள்ளையா தான் கோட் போட்டு சுத்திட்டு இருக்காங்க… எனக்கு எப்படிடா தெரியும்” என்று சரவணன் கேட்க, “நீ தான் பார்த்து இருக்குல ஒரு வாட்டி” என்று விக்ரம் கேட்க, “பார்த்தேன் தான்… அதுக்காக உன்ன மாதிரியே ஞாபகம் வெச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா…. எனக்கு முகம் சரியாவே ஞாபகம் இல்ல…. மீட்டிங்கு டைம் ஆகுது முதல்ல அதை போய் முடிப்போம் வா” என்று சரவணன் கூறி, விக்ரமை இழுக்காத குறையாக வண்டியில் ஏற்றி இருவரும் புறப்பட்டனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.