பாகம் -48

ஏண்டி அழுவுற நான் ஏதும் உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா.
என்னன்னு சொல்லுடி பயமா இருக்கு.
சத்யா கலங்கிய விழிகளுடன் ஷாமை நிமிர்ந்து பார்த்து ஐ லவ் யூ ஷாம் ஐ ரியலி லவ் யூ என்றால் சத்யா.
சத்யாவின் கன்னங்களை பற்றியவன் அவள் கண்களைப் பார்த்து தெரியும் சத்தியா என்று அவள் கன்னங்களை நனைத்து கொண்டு இருக்கும் கண்ணீரை மெல்ல அவன் கைகளால் வருடி துடைத்தான்.

அவ செந்தாமரை இதழ்களின் மேல் அவன் பார்வை படர அப்படியே தன் ஒற்றை விரலால் அவள் இதழ்களை மெல்ல வருடி இதழின் வேகங்களை எல்லாம் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான்.

தன்னவனின் பரிசம் தீங்க தன்னை அறியாமலேயே கண்களை மூடினால் சத்யா தாபத்தால் மூச்சு வாங்க துவங்க அவள் இதயத்துடிப்பின் வேகம் கூட அதிகரித்தது வாங்கும் மூச்சுக்காற்றும் சூழலில் அவள் நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.

தன்னவனின் நெருக்கம் அவனின் வியர்வை வாசனையும் மேலும் மோகத்தைக் கூட்ட உடல் சிலிர்த்தது கன்னி அவளுக்கு.
அவள் இதழை கூர்ந்து கவனித்தவன் தன் விரலால் இதனை வருடி கொண்டே
சத்யா..
ம்ம்..
அன்னைக்கு கிஸ் பண்ணல
ம்ம்..
உனக்கு கிஸ் பண்ணவே தெரியலடி
மூடி இருந்த கண்களை சடார் என திறந்து போடா உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது என்று போக பார்த்த அவள் கையை பிடித்து இழுத்து ஹெய் கோச்சிக்காத டி என்று அடி குரலில் மயங்க கூறினான்.

அவள் முகத்தை மறைத்திருந்த அவள் கார் மேகக் குழலை அவள் காதருகில் ஒதுக்கியவன் கொடி இடையை பற்றி அழுத்தினான்.

ஸ்... ஷ் என்று கண்களை மூடிக்கொண்டு ஷாம் என்ன விடுங்க என்றாள்.

அவள் கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து வருடியபடி பதில் ஏதும் சொல்லாமல் ஒற்றை நொடியில் அவள் இதழை தன் இதழால் சிறை பிடித்தான் ஷாம்.

மெல்ல மெல்ல அவள் இதழில் எதையோ தேடி கொண்டு இருந்தான்.
அந்த தேடல் வெற்றி பெற்றதா என்பது ஷாமிற்கு தான் வெளிச்சம்.

சில நிமிடங்கள் முத்தம் தொடர தன்னவளின் உயிர் மூச்சை மொத்தமாக இதழ் வழியே உறிஞ்சி எடுத்தான் சத்யாவின் காதல் மன்னன் ஷாம்.

மூச்சு விட திணறிய போது சத்யாவின் இதழை மெல்ல தன் இதழின் சிறை பிடிப்பிலிருந்து விடுதலை வழங்கினான்.

இதழ் பிரிக்க மனமில்லை என்றாலும் சத்யா பாவமல்லவா அதனால் தான். நாணத்தால் முகம் சிவக்க தன் தலையை அனிச்சமலராய் தரை நோக்கி தாழ்த்தினாள். ஓய் சத்யா முத்தம் நா இப்படித்தான் இருக்கணும் சும்மா நச்சுன்னு.
நீயும் தான் அன்னைக்கு கொடுத்தியே உப்பு சப்பு இல்லாம என்று மீசையை முறுக்கு விட்டு இனி போக போக ஒவ்வொன்னா கற்று தருகிறேன் டி இந்த மாமன் என்று கூறிய ஷாமை ஏறிட்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் தன் கைகளைக் கொண்டு முகத்தை மூட அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

தென்னவன் அமைப்பில் முழுவதும் கரைந்த சத்யா ஷாமை இறுகி கட்டிக்கொண்டாள். இருவரும் கண்கள் மூடி அத்தருணத்தை ரசித்தனர் தங்களுக்கு உள்ளாகவே. அந்த இரவு முழுவதும் காதல் மலையில் நனைந்து கொண்டு இருந்தனர் இவ்விரு ஜோடி பறவைகளும்.

இங்கே சத்யா ஷாம்
அங்கே நங்கை மாறன். இவ்வேளையில் அன்பில் திளைத்து கொண்டு இருக்கும் இந்த இரு ஜோடிகளுக்கும் யார் கண்ணும் படாமல் இருக்கட்டும்.

அடுத்த நாள் காலை மெல்ல விடிய துவங்க வழக்கம் போல் அன்றைய தினமும் துவங்கியது. அசோக் பேப்பர் வாசித்துக் கொண்டிருக்க சார் காபி என்றால் நங்கை.
சிறு புன்னகையோடு அவளை நிமிர்ந்து பார்த்து காபியை எடுத்து பருகினார் அசோக்.

என்ன நாங்க மாறன் இப்போ எப்படி
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார் அவர் நல்லா இருக்காரு,
சரி மா நீ கொஞ்சம் கேரிங்க பாத்துக்கோ.
சரிங்க சார்.
அப்புறம் நங்க நீ என்ன இனி மாமானு கூப்பிடுமா
அது வந்து சார்
எனக்கு புரியுது என்னடா இவன் அப்போ என்னன்னா சார் என்று கூப்பிட சொன்னவரு இப்போ மாமானு கூப்பிட சொல்றேன்னு பாக்குறியா.

அதெல்லாம் மறந்துரு மா.
இப்போ இங்கே எல்லாம் நீ தான் நான் பிசினஸ் பண்ணனும்னு சுத்துறேன். எனக்கு அன்பும் ஆறுதலோ தேவைப்பட்டது இல்லை ஏன்னா நான் சின்ன வயசுல இருந்தே பணத்தை மட்டும் தான் பெருசா நினைச்சேன். இப்போ வரை எனக்கு பணம் தான் முக்கியம்.
ஆனா மாறன் அப்படி இல்லமா எனக்கு எல்லாம் அவன் அம்மா தான் சீதா போனதுக்கு அப்புறம் அவன பாத்துக்கோ நேசிக்கவோ அன்பு காட்டவோ மாறனுக்கு யாரும் இல்லமா.

அதனால எனக்கு மாறன் மேல பாசம் இல்லைன்னு அர்த்தம் இல்ல எனக்கு யார் மேலயும் பாசம் காட்டத் தெரியாது நான் அப்படியே வாழ்ந்துட்டேன்.

இனிமே நீ மாறனுக்கு ஒரு நல்ல மனைவியா இந்த குடும்பத்துக்கு ஒரு நல்ல மருமகளா இருக்கணும்.

இனி வீட்டு பருப்பு முழுக்க உன்னுடையது தான் நங்க.

சரிங்க மாமா உங்க நம்பிக்கையை எப்பவும் நான் காப்பாற்றுவேன் மாமா என்றிட அசோக் புன்னகைத்தான்.

வர வர சத்யா போக்கை சரியில்லங்க.
ஏன் என்ன ஆச்சு.
சத்யா எப்போ பாத்தாலும் அந்த மாறன் வீட்ல தான் இருக்கா. அது நமக்கு நல்லது தான் அது நமக்கு நல்லது தானே.
ஏன் அப்படி சொல்றீங்க.
ஆமாம் மாது
சத்யா அந்த வீட்டுக்கு போக வர இருந்தால்தான் நங்க பத்தின ஏதாவது ஒரு நியூஸ் ஆச்சும் நம்ம காதுக்கு வரும்.
ஓ அப்படி சொல்றீங்களா.
ஆமாம் மாது.
ஆனா அன்பு
சத்யா அந்த மாறனோட மாமா ஷியாம் மோட சுத்திட்டு இருக்கா ஏதாவது காதல் கத்திரிக்காய்ன்னு வந்து நின்று வாழனும்னு பயமா இருக்கு அன்பு.
நீ சொல்வது உண்மையா மாது
ஆமாங்க.
இத வளர விடக்கூடாது
ஆமாம் அன்பு.

அதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு.

ஒருத்தி என்னன்னா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கரா
இன்னொருத்தி என்னன்னா நமக்கு எதிரி குடும்பத்து பையனோட ஊர் சுத்துற
கவலைப்படாத மாது எல்லாத்தையும் சரிக்கு கொண்டு வரேன்
உனக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன் எனக்கான சந்தர்ப்பம் அமையட்டும் அப்புறம் தெரியும் இந்த அன்பரசு யாருன்னு.
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -48
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.