Chapter-45

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
காலையில் தேன்மொழி தூங்கி எழுந்துக் கொள்வதற்கு முன்பாகவே அர்ஜுன் சத்தம் இல்லாமல் எழுந்து கிளம்பி ஆபீஸுற்ருக்கு சென்றிருந்தான்.

அதனால் யாரும் தன்னை எழுப்பாததால் காலை 10 மணி அளவில் தூங்கி எழுந்த தேன்மொழி,

தன் அருகில் அர்ஜுன் இல்லாததை பார்த்துவிட்டு தான் சுவரில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.

“அய்யோ மணி என்ன 10 ஆயிடுச்சு.. இந்நேரம் ஆபீஸ்க்கு அவர் கிளம்பி போயிருப்பாரே?

ஆனா அவர் ஏன் என்னை எழுப்பவே இல்லை?

பாவம் தூங்கட்டும்ன்னு நினைச்சு விட்டுட்டாரு போல..

ஆனா இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் இந்த வீட்ல இருக்கிறவங்களும் சரி, இவரும் சரி, ஏதோ பரவால்ல..

இங்க எல்லாத்துக்கும் வேலைக்கு ஆளுங்க இருக்காங்க. சோ நம்ம எதையும் செய்ய தேவையில்லை.

இதுவே நான் வேற யார் வீட்டுக்காவது கல்யாணமாகி போயிருந்தா,

வீட்ல இருக்கிறவங்களுக்கு முன்னாடி விடியறதுக்குள்ள எந்திரிச்சு எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சு நான் ஸ்கூலுக்கும் கிளம்பி வேலைக்கு போயிருக்கணும்.

முதல்ல நான் இந்த வீட்டுக்கு வரும்போது, கையில மொபைல் ஃபோனும் போனும் இல்ல!

இங்க இருக்கவும் எனக்கு பிடிக்காம நான் பாட்டுக்கு அப்படியே பைத்தியக்காரி மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு இருந்தேன்.‌

இப்பதான் எல்லாமே பழகிருச்சே! ஹால்ல பெருசா 52 இன்ச்ல ஸ்மார்ட் டிவி வாங்கி வச்சிருக்காங்க.

இங்க வர்ற சேனல்ல இருந்து, ott platformsல ரிலீஸ் ஆகுற சீரிஸ், மூவிஸ் வரைக்கும் எல்லாத்தையும் ஜாலியா தியேட்டர்ல பாக்குற மாதிரி உக்காந்து பார்க்கலாம்.‌

இங்கயே ஜிம் வச்சிருக்காங்க. ப்ளே ஸ்டேஷன் வச்சிருக்காங்க.

எதுக்காகவும் வெளிய போக வேண்டிய அவசியமே இல்லையே!

தினமும் இந்த பேலசை சுத்தி பார்த்துட்டு அப்படியே நடந்து வந்தாலே பொழுது போயிரும்.

இப்ப யோசிச்சு பாத்தா இந்த லைஃபும் நல்லா இருக்க மாதிரி தான் இருக்கு.

இப்ப அர்ஜுன் வேற ரொம்ப மாறிட்டாரு. என்னை வெளியில எல்லாம் கூட்டிட்டு போகிறாரு‌.

இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ பாப்போம்!”

என்று நினைத்து மெதுவாக எழுந்து குளித்து தயாராகி சாப்பிட கீழே சென்றாள்.

அங்கே ஏற்கனவே அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு சென்று இருக்க,

தேன்மொழியை கண்டவுடன் மகேஷின் அம்மா அவளுக்கு அன்புடன் சாப்பாடு பரிமாறிவிட்டு சென்றாள்.

அங்கே இன்று இந்திய உணவுகளை சமைத்து வைத்திருந்தார்கள்.

அதைப் பார்த்த தேன்மொழி “என்ன அதிசயமா இன்னைக்கு இந்தியன் ஃபுட் சமைச்சிருக்காங்க?

ஒருவேளை அர்ஜுன் எனக்காக இதை சமைக்க சொல்லிட்டு போயிருப்பானா?

இருந்தாலும் இருக்கும்.” என்று நினைத்து திருப்தியாக அதை சாப்பிட தொடங்கினாள்.

இவ்வளவு நேரமாக ‌அவள் எப்போது சாப்பிட வருவாள் என்று ஓரமாக ஏதோ வேலை செய்தபடி கவனித்துக் கொண்டிருந்த மகேஷ்,

தானும் அவள் அருகில் சென்று சாப்பிடுவதற்காக அமர்ந்தான்.

ஆச்சரியமாக அவனை திரும்பிப் பார்த்த தேன்மொழி “நீயும் இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்க,

“உனக்காக தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

அன்னைக்கு உனக்கு ஒரு ஐடியா குடுக்கிறேன்னு சொன்னேன்ல!

அது என்னென்னனு நான் யோசிச்சிட்டேன். அத பத்தி உன் கூட டிஸ்கஸ் பண்றதுக்கு தான் இவ்ளோ நேரம் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

சாப்பிட வராம இவ்வளவு நேரமா என்ன பண்ணிட்டு இருந்த நீ?” என்று அவளிடம் கேட்டான் மகேஷ்.

‌“அதுவா.. நைட்டு தூங்க லேட் ஆயிடுச்சு.” என்று சாதாரணமாக சொன்ன தேன்மொழி தன் தட்டில் இருந்த இட்லியை பிய்த்து வாயில் போட்டு மெல்ல தொடங்கி விட,

அவள் சொன்னதை வைத்து ஏதேதோ கற்பனை செய்த மகேஷிற்கு கடுப்பானது.

அதனால் தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு “ஏன் அவர் கூட பிஸியா இருந்தியா?” என்று இரட்டை அர்த்தத்தில் அவன் கேட்க,

அதைக் கூட புரிந்து கொள்ள தெரியாத அப்பாவியாக இருந்த தேன்மொழி,

“ஆமா, நேத்து நைட்டு நானும் அவரும் அவுட்டிங் போயிருந்தோம்.

அப்புறம் வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். டைம் போனதே தெரியல.

எங்க ரூமுக்கு போய் தூங்கவே எப்படியும் ரெண்டு, மூணு மணிக்கு மேல இருக்கும்.” என்றாள்.

அவர்கள் அறைக்கு திரும்பியவுடன் என்ன நடந்தது என்று தேன்மொழி தெளிவாக சொல்லாததால்,

“எது வேணும்னாலும் நடந்திருக்கும். அர்ஜுன் சார் ரொம்ப ரொமான்டிக்கான ஆளுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.‌

இன்னும் எத்தனை நாளைக்கு இவ்வளவு சின்ன பொண்ண கல்யாணம் பண்ணி பக்கத்துல வச்சுக்கிட்டு அவர் பாத்துகிட்டே மட்டும் இருக்க முடியும்?

இவளே அவர் கூட சேர்ந்து வாழணும்னு முடிவு பண்ணிட்டா, நம்மளால என்ன பண்ண முடியும்?

இவ தலையெழுத்த மாத்துறத்துக்கு நான் யாரு..??

நம்ம சொல்ல வேண்டியத அவகிட்ட சொல்லிடலாம்.

லாஸ்ட்டா இந்த ஒரு ஹெல்ப் ஐ மட்டும் அவளுக்கு பண்ணிடுவோம்.

அதுக்கப்புறம் அவ lifeஐ அவ பாத்துக்கட்டும்." ‌

என்று நினைத்த மகேஷ், “சரி சரி நீங்க என்னமோ பண்ணுங்க.

நீ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்.‌

நான் சொல்ல வந்தத சொல்லிட்டு சாப்பிட்டு கிளம்புறேன்.‌

என்னால ரொம்ப நேரம் இங்க உன் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது.

இங்க எல்லா பக்கமும் ஹைடெக் சிசிடிவி கேமரா இருக்கு.

கேமரால வாய்ஸ் ரெக்கார்ட் ஆகாது.

இருந்தாலும் நம்ம மேல அவங்களுக்கு ஏதாவது டவுட் வந்துச்சுன்னா லிப் மூமென்ட்டை வச்சு கூட நம்ம என்ன பேசுறோம்னு கண்டுபிடிச்சிடுவாங்க.” என்றான்.

“ஓகே ஓகே, என்ன ஐடியா? சீக்கிரம் சொல்லு.

எனக்கு இங்க இருந்து தப்பிச்சு போகணும்னு கூட ஆசை இல்லை.

நான் இங்க நல்லா தான் இருக்கேன்‌ என்ன பத்தி கவலைப்படாதீங்கன்னு என் ஃபேமில இருக்குறவங்களுக்கு சொல்லணும்.

அதை மட்டும் செஞ்சிட்டா போதும்.

நான் இங்க நிம்மதியா இருப்பேன்.” என்று தேன்மொழி சொல்ல,

“ம்ம்‌. என் பிளான் ரொம்ப சிம்பிள். நீ அதை கரெக்டா பண்ணினா எந்த பிரச்சனையும் வராது.

‌ சித்தார்த் கொஞ்சம் தெளிவான ஆளு. இதுல நீ அவன இழுக்காம ஆருத்ராவை மட்டும் வெச்சு பண்ணு.

அவகிட்ட எப்படியாவது கேம் விளையாடுறத பத்தி பேசு.

இங்க தனியா ப்ளே ஸ்டேஷன் இருந்தாலும், ஃபோன்ல கேம் விளையாடற மாதிரி வராதுன்னு சொல்லு.

உடனே அவ யார் கிட்டயாவது ஃபோன கெஞ்சி கேட்டு அடம் பிடிச்சு வாங்கிட்டு வந்து கேம் விளையாடுவா.

மேபி அவளுக்கு அதுல விளையாட தெரியலன்னா, உன் கிட்ட வந்து அத பத்தி அவ கேக்குறதுக்கு கூட சான்ஸ் இருக்கு.

அந்த டைம்ல எப்படியாவது அவளை டிஸ்டிராக்ட் பண்ணி வெளிய ஏதாவது ரீசன் சொல்லி அனுப்பிவிட்டுட்டு அந்த ஃபோன்ல இருந்து உன்னோட ஃபேஸ்புக் அக்கௌன்ட் இல்லனா instagram அக்கவுண்ட் ஓட ஐடி பாஸ்வேர்ட்டை போட்டு பிரவுசர்ல லாகின் பண்ணி உன் ஃபேமிலில இருக்கிறவங்க யாருக்காவது மெசேஜ் பண்ணி நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு.

பட் எந்த காரணத்தை கொண்டும் நீ எங்க இருக்கன்னு மட்டும் தெளிவா சொல்லிடாத.

உடனே உணர்ச்சிவசப்பட்டு அவங்க இத பத்தி மீடியாவுல சொல்லிட்டாங்கனா, இங்க இருக்குறவங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.

இவங்க ஈசியா எல்லாத்தையும் சமாளிச்சுருவாங்க.‌

ஆனா இந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு அர்ஜுன் சார் விசாரிக்க ஆரம்பிசார்னா,

நம்ம ரெண்டு பேருமே மாட்டுவோம். சோ அத மைண்ட்ல வச்சுக்கிட்டு இந்த உலகத்துல ஏதோ ஒரு மூலையில நீ நல்லா இருக்கன்னு மட்டும் அவங்களுக்கு சொன்னா போதும்.

உனக்கு ரொம்ப நேரம் டைம் இருக்காது.

சோ சொல்ல வேண்டியதை சொல்லிட்டு உன் ஐடியை logout பண்ணிட்டு மறுபடியும் ஆருத்ரா கிட்டையே அந்த மொபைல் ஃபோனை கொடுத்து யார்கிட்ட வாங்கினாளோ அவங்க கிட்ட குடுக்க சொல்லிடு.

எமோஷனல் ஆகாம நீ நான் சொல்றத மட்டும் கரெக்டா பண்ணா,

எந்த பிரச்சனையும் வராது பாத்துக்கோ.

எனக்கு வேலை இருக்கு. நான் வெளிய போறேன்.

இனிமே எதுவா இருந்தாலும் நீ தான் அதை தனியா சமாளிச்சுக்கணும்.

என்னால இதுக்கு மேல இங்க உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாது சாரி."

என்ற மகேஷ் அரைகுறையாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு அவன் சொன்ன திட்டத்தை பற்றி யோசித்தபடியே சாப்பிட்டு முடித்த தேன்மொழி ‌ ஆருத்ராவை தேடி சென்றாள்‌.

அவளுடைய அறையில் ஒரு பிரைவேட் டீச்சர் அவளுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

அதை பார்த்தவுடன் “ச்சே! இப்பதான் இவளுக்கு இந்த கிளாசஸ் ஸ்டார்ட் ஆகணுமா?

இதுக்கு முன்னாடி கூட எனக்கு தெரியல. இப்ப மகேஷ் ஒரு ஐடியா குடுத்துட்டு போன உடனே,

எப்படியாவது இதை சீக்கிரம் செஞ்சு என் ஃபேமிலில இருக்குறவங்கள காண்டாக்ட் பண்ணி இப்பவே பேசிடனும்னு தோணுதே!”

என்று நினைத்து கடுப்பானவள், ஆருத்ராவிற்காக குட்டி போட்ட பூனை போல அவளது அறை வாசலிலேயே வெகு நேரமாக நடந்து கொண்டிருந்தாள்.

அதில் நேரம் செல்ல செல்ல டயர்ட்டாகி அவளுக்கு கால் வலிக்க,

“இவளுக்கு கிளாஸ் முடியறதுக்கு லேட் ஆகும் போல.

அதுக்குன்னு நம்ம எவ்வளவு நேரம் நடந்துக்கிட்டே இருக்க முடியும்? கால் வேற வலிக்குது.

கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்துரலாம்.” என்று நினைத்து மீண்டும் தனது ரூமிற்கு சென்று படுத்துக் கொண்டாள்.

சில மணி நேரங்களுக்கு பிறகு அவள் தூங்கி எழுந்து வெளியில் வந்து பார்க்கும்போது கிட்டத்தட்ட ஈவினிங் டைமாகி இருந்தது.

“அட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சு வந்து படுத்தா இவ்ளோ நேரம் ஆயிடுச்சு!

இந்நேரம் அவளுக்கு கிளாஸ் முடிஞ்சிருக்கும்.

அவ என்ன பண்றான்னு போய் பார்க்கலாம்.” என்று நினைத்த தேன்மொழி எழுந்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு ‌ பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது அவளை தேடிக் கொண்டு அங்கே ஓடி வந்த ஆருத்ரா,

“ஹாய் மம்மி.. என்ன பண்றீங்க நீங்க?

என்ன இன்னைக்கு நான் உங்களை வந்து பார்க்கும்போதெல்லாம் நீங்க தூங்கிட்டே இருக்கீங்க?

டாடி மாதிரி நீங்களும் தூங்குமூஞ்சி ஆயிட்டிங்களா?” என்று கேட்டபடி ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

எலி தானாக தன் வலையில் வந்து விழுந்ததைப் போல தேன்மொழிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.‌

உடனே அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்துக் கொண்ட தேன்மொழி,

“ஆமா டா இன்னைக்கு உன் மம்மிக்கு ரொம்ப போர் அடிச்சது. அதான் தூங்கிட்டேன்.

உனக்கு இன்னைக்கு கிளாஸ் இருந்துச்சில்ல.. சோ என் கூட விளையாட யாருமே இல்ல.

அப்புறம் நான் தனியா இங்க ஒக்காந்து இருந்து என்ன பண்றது சொல்லு?” என்று நைசாக கேட்க,

“தேர்ட் ப்ளோர்ல ப்ளே ஸ்டேஷன் இருக்கே மம்மி உங்களுக்கு தெரியாதா?

எனக்கும் சித்தார்த் அண்ணாவுக்கும் போர் அடிச்சா நாங்க ரெண்டு பேரும் அங்க போய் தான் விளையாடுவோம்.

எனக்கு கிளாஸ் முடிஞ்சிருச்சு. நீங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் அங்க போய் விளையாடலாம்.”

என்ற ஆருத்ரா அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு லிஃப்ட்டை நோக்கி ஓடினாள்.

“எது செஞ்சாலும் அதை அர்ஜூன் ரூம்ல இருந்து செய்றதும் டேஞ்சர் தான்.

அதுக்கு அங்கயே போய் என்ன பண்ண முடியுதுன்னு பார்க்கலாம்.” என்று நினைத்த தேன்மொழி எதுவும் சொல்லாமல் அவளுடன் சென்றாள்.

அங்கே மேலே இருந்த ப்ளே ஸ்டேஷனுக்கு சென்று அவர்கள் இருவரும் சேர்ந்து சில நிமிடங்கள் கேம் விளையாடினார்கள்.

உடனே தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்ட தேன்மொழி,

“அட போம்மா இங்க இருக்கிற எல்லா கேமும் மொக்கையா தான் இருக்கு.

இதுக்கு மொபைல் ஃபோன்ல சும்மா ஆங்கிரி பேர்ட் விளையான்டா கூட நல்லா இருக்கும் போல!

இதுலாம் ரொம்ப கான்சென்ட்ரேட் பண்ணி விளையாடுற மாதிரி இருக்கு.

சும்மா என்டர்டெயின்மெண்ட்டுக்கு சாதாரண கேம்ஸ் தான் விளையாடனும்.

எனக்கு இதெல்லாம் பிடிக்கல.” என்று ஒரு பிட்டை போட்டாள்.

அவள் உண்மையாகவே சோகமாக இருக்கிறாள் என்று உடனே நம்பிய ஆருத்ரா,

“ஆங்கிரி Birdஆ அப்படி கூட ஒரு கேம் இருக்கா?

எனக்கு தெரியாதே.. நீங்க விளையாடிருக்கீங்களா அந்த கேம்?

எனக்கு சொல்லித் தாங்களேன் ப்ளீஸ்.. நானும் விளையாடுறேன்.

இங்க இருக்கிற எல்லா கேமும் நான் ஆல்ரெடி விளையாடிட்டேன்.

எனக்கு புதுசா கேம் வேணும் மம்மி ப்ளீஸ்..!!”

என்று அவளது குர்தாவின் நுனியை பிடித்துக் கொண்டு கெஞ்சலாக கேட்டாள்.

தனது திட்டம் ஒர்க் அவுட் ஆகிறது என்று நினைத்து சந்தோஷப்பட்ட தேன்மொழி,

வெளியில் இன்னும் சோகமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு “எனக்கும் உன் கூட சேர்ந்து ஆங்கிரி பேர்ட் விளையாடனும்னு ஆசையா தான் இருக்கு.

ஆனா என்கிட்ட தான் மொபைல் ஃபோன் இல்லையே!

அப்புறம் எப்படி நம்ம கேம் விளையாடுறது?

உனக்கு சொல்லிக் குடுக்கிறது? உனக்கு வேணும்னா நீ போய் வேற யார் கிட்டயாவது ஃபோன் வாங்கி கேம் விளையாடு.

நான் இங்க இருக்கிற மொக்கை கேமையே விளையாடுறேன்.” என்றாள்.‌

“இல்ல இல்ல நீங்க வெயிட் பண்ணுங்க.

நான் போய் அத்தை இல்லனா பாட்டிகிட்ட ஃபோன் குடுக்க சொல்லி வாங்கிட்டு வரேன்.

நம்ம நீங்க சொன்ன கேமை விளையாடி பார்க்கலாம்.” என்ற ஆருத்ரா உடனே குடுகுடுவென்று கீழே செல்வதற்காக ‌லிஃப்ட்டை நோக்கி ஓடினாள்.

அதனால் மகிழ்ந்த தேன்மொழி “கடவுளே இதுவரைக்கும் நீயா எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணல.

ஏதோ மகேஷ் போட்டுக் குடுத்த பிளான்‌ workout ஆகுற மாதிரி தெரியுது.

தயவுசெஞ்சு நடுவுல ஏதாவது பண்ணி ஆப்பு வச்சிராத.

அங்க எங்க அம்மாவும், ஆதவனும் நான் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்களோ தெரியல..

நான் நல்லா இருக்கேன்னு முதல்ல அவங்க கிட்ட சொல்லணும்.” என்று நினைத்து தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டாள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.