தொடர்ச்சி 👉🏻

என்ன விட்டு போ நங்க
😳

என்ன விட்டும் என் லைஃப் அ விட்டும் போயிடு.

என்ன சொல்றீங்க மாறன் சார்.

நான் உண்மையா தான் சொல்றேன் நங்க

நீ என்ன விட்டு போயிடு.

நங்கைக்கு மாறன் கூறுவது ஒன்றுமே புரியவில்லை.

இத்தனை நாள் என்னை விட்டு போகாத போகாதுன்னு சொல்லுவீங்க.

இப்போ என்னை விட்டு போனு சொல்றீங்களே மாறன் சார்.

அப்படி நான் என்ன தப்பு பண்ணினேன்.

அமைதி காத்தான் மாறன்.

சொல்லுங்க மாறன் சார் நான் என்ன தப்பு பண்னேன்.

நீ ஏதும் தப்பு பண்ணல நங்க நான்தான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்.

உன் விருப்பம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டி உன்ன என்

மனைவியா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.

உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட நான் தப்பா அத்துமீறி நடந்துகிட்டேன்.

உன்னைய கட்டாயப்படுத்தி இருக்கேன்.

என்ன உனக்கு துளி கூட பிடிக்கலைன்னு தெரிஜும் நான் உன்ன என் வாழ் நாள் முழுவதும் என்கூட சேர்ந்து வாழ வற்புறுத்தி இருக்கேன்.

இப்போ தான் நான் புரிஞ்சுகிட்டேன் கட்டாயப்படுத்தி அன்பை யாராலையும் விலைக்கு வாங்க முடியாது.

பிடிக்காத ஒரு வாழ்க்கையை யாராலையும் வாழ முடியாது நங்க.

அது மட்டும் இல்லாம நீ சொன்ன மாதிரி எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கு.

ஆமாம் நங்க எனக்கு நீ பேசுனா ஒவ்வொன்னும் எனக்கு ஞாபகத்துல இருக்கு.

இல்ல மாறன் சார் நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்.

இல்ல நங்க நீ தெரியாம பேசினியோ இல்ல தெரிஞ்சி பேசுனியோ ஆனால் உண்மையை தான் பேசி இருக்க.

எனக்கு எத்தனை நாள் மறந்து போன விஷயத்தை நீ எனக்கு ஞாபகம் படுத்தி இருக்க.

இப்போ தான் நான் யாரு?

என் நிலைமை என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.

அது மட்டும் இல்லாம என் கூட இருக்கிறது உனக்கு ஆபத்து.

நீதானே சொன்ன நங்க,👆🏻

ஐயோ மாறன் சார் என்ன புரிஞ்சுக்கோ ஏதோ சரியான புரிதல் இல்லாம அப்படி உங்கள பேசிட்டேன்.

அதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை கொடுக்காதீங்க.

அங்கே வந்தால் சத்யா.

மாமா என்ன பேசுறீங்க நீங்க அக்காவை நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னு தான் நான்

உங்க மேரேஜ்க்கு ஹெல்ப் பண்ணேன்

ஆனால் இப்ப நீங்க இப்படி பண்றீங்களே மாமா இது உங்களுக்கே நல்லா இருக்கா?

சத்யா

நான் எட்டு பேர கொன்ன ஒரு கொலைக்காரன்

ஒரு மன நோயாளி என் கூட வாழ்றது ரொம்ப ஆபத்தான விஷயம்.

நங்கைக்கு சேப் கிடையாது.

நங்க மட்டும் இந்த உண்மைய என்கிட்டே சொல்லன்னா என்னோட வாழ்க்கையில இந்த பகுதி எல்லாம் நான் மறந்து போயிருப்பேன்.


அவ எங்க இருந்தாலும் யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கன்னும்

தயவு செஞ்சு நங்கைய கூட்டிட்டு போயிடு சத்யா.

என்று முகத்தை திருப்பிக் கொண்டான் மாறன்.

மாறன் சார் என்ன பாருங்க என் முகத்தை பார்த்து நீ போயிடுனு சொல்லுங்க நான் போயிரேன்.

அவளை எதிர்க் கொள்ள முடியாமல் சுவற்றை பார்த்தபடி திரும்பிக் கொண்டவன்.

நங்க ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ.
தயவு செஞ்சு இங்கிருந்து போயிரு

உன்ன பாக்க நான் விரும்பல.

அங்கே கீழே மண்டியிட்டவள் மாறனின் கைகளை பற்றி கொண்டு.

ப்ளீஸ் மாறன் சார் என்ன வெறுத்துறாதீங்க.

நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்

என்ன போக மட்டும் சொல்லாதீங்க.

உங்க வீட்ல ஏதாவது ஒரு மூலையில நானும் வாழ்ந்துக்கிறேன்.

என்றவள் முகத்தை பார்த்த மாறனுக்கு அவள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நங்க நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்

என் கூட இருக்கறது உனக்கு ரொம்ப ஆபத்து

நான் எந்த நேரத்துல என்ன செய்வேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது.

என்ன கண்ட்ரோல் பண்ணிக்க என்னால முடியல.

நங்க என்னையும் மீறி உன்னை நான் காயப்படுத்திட்டேனா என்னோட மனசாட்சி என்னைய வாழ விடாது.

ஏற்கனவே எங்க அம்மாவை இழந்து நான் இந்த நிலைமையில் நிற்கிறேன் மேலும் நான் உன்னையும் இழக்க விரும்பல.

என்ன புரிஞ்சுக்கோ.

என்ன மாறா நீ என்ன பேசுற? உனக்கு தெரியுதா.

என்று அசோக் கேட்க

சத்தம் கேட்டு ஷ்யாம்மும் உள்ளே வந்தான்.


என் சொந்த விஷயத்துல யாரும் தலையிடாதீங்க

இது எனக்கும் என் வைஃப்க்குமான பிரட்சன

என்ன மாறா பேசிட்டு இருக்க அந்த பொண்ணு எங்க போகும்.

அத பத்தி எனக்கு கவலை இல்லை

அவ இந்த வீட்ல இனி இருக்கக் கூடாது

போக சொல்லுங்க என்றான்
மாறன்.


சரி விடுங்க ஷ்யாம் அண்ணா விடுங்க

இனி மாறன் சார யாரும் தொல்லை பண்ண வேண்டாம்

நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன்.

என்றவள் எழுந்து மெதுவாக நடக்க துவங்கினால்.

மாறா நங்க போற அவள போக வேணாம்னு சொல்லு போ.

அசையாமல் நின்றான் மாறன்.

மாறன் மாமா நங்க அக்காவுக்கு யாருமே கிடையாது திரும்பியும்
அந்த ஜெயிலுக்கே போக வச்சுட்டீங்களே.

அதுக்கு நீங்க ஏன் நங்க அக்காவ கல்யாணம் பண்ணுனீங்க.

இப்போ அவங்க வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு?

இனி நங்கை அக்காவோட வாழ்க்கை என்று சத்யா கலங்கினாள்.

மாறன் எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை.

ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனான் மாறன்.

வீட்டுக்கு வந்த மாறன்

விட்டின்னுள் நுழைய தன் கடந்த கால வாழ்க்கை யாவும் அவன் கண் முன்னே பிம்பங்களாக தோன்றி மறைந்தது.


மாறா என்ற சீதாவின் குரல் வீடு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது.

தன் அன்னையின் கொலுசின் ஓசையும் சிரிப்பு சத்தமும் இடை விடாது ஒலிக்க மாறன்.

மா ....என்றபடி ஒவ்வொரு அறையாக தேடினான் தன் அன்னையை.

இறுதியில் சீதா இறந்து கிடந்த இடத்தில் அந்த சம்பவம் மீண்டும் அரங்கேருவதை போலே அவனுக்கு தன் கண் முன்னே காட்சிகள் நிகழ அவனால் அங்கு நிற்க்க முடியாமல் தன் அறைக்கு ஓடினான்.

மெல்ல இருல துவங்க.

சத்யா விட்டிருக்கு வந்தாள்

மாறன் மாமா சிக்கிரம் வாங்க என்ற அழைப்பின் ஓசையில் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தான் மாறன்.

என்ன சத்யா என்ன ஆட்சி.

மாறன் மாமா நங்கை அக்காவ எவ்ளோ தேடியும் கிடைக்கல.

அவங்க எங்க போனாங்கன்னு தெரியல.

என்ன சொல்ற சத்யா ஆம்மம் மாமா.

அக்கா ஹாஸ்பிடல் ல இருந்து எங்க வீட்டுக்கு வரல.

வேற எங்கையோ போயிட்டாங்க போலிருக்கு.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா.

ஷ்யாம் மற்றும் அசோக்கும் அதிர்ந்தனர்.

பாரு மாறா இப்போ உனக்கு சந்தோசமா.

அவ என்ன தப்பு பண்ணினா.பாவம் நங்க அவ எங்கப்போனாலோ என்ன ஆனாலோ தெரியலையே எல்லாம் இந்த மாறன் ஆள தான்.

வா சத்யா நம்ம போய் தேடலாம் என்று அழைத்தான் ஷ்யாம்.

உங்க அக்கா எங்க எங்க போவாங்கன்னு தெரியுமா?

அவங்க வீட்டை தவிர வேற எங்கையிம் போக மாட்டாங்க சார்.


தொடரும்

Shahiabi. Writer ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.