வள்ளி அவரது வேலையை முடித்துக் கொண்டு அனைத்தும் எடுத்து வைக்கவும், சனா சனா!!! என்ற சத்தம் கேட்க, அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்க்கவும் அங்கே திலோ பாட்டி சனந்தாவை அழைத்துக் கொண்டு இருந்தார். “என்ன இந்த நேரத்துல வந்து இருக்காங்க இவங்க” என்று வள்ளி நினைத்துக் கொண்டு, “சரி என்னன்னு போய் பார்க்கலாம்” என்று வள்ளி நினைத்து ஒரு அடி எடுத்து வைக்கவும் சனந்தா கதவை திறந்து அழுது கொண்டே பாட்டியை அணைத்துக் கொண்டாள்.
“என்னம்மா இப்படி அழுதுட்டு இருக்க??? நீ வாங்கிட்டு வந்த புடவையை கட்டிட்டு வந்து இருக்கேன் அதை காட்டிலாம்னு வந்தா நீ என்ன இப்படி இருக்க… என்ன ஆச்சு உனக்கு” என்று பாட்டி கேட்க, சனந்தாவுக்கோ இன்னும் அழுகை நின்ற பாடில்லை. “சரி வா உள்ள போய் பேசலாம்” என்று சனந்தாவை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குள் சென்றார்.
“என்ன இப்படி அழுதுட்டு இருக்கா என்ன நடக்குது ஏதோ சின்ன பிரச்சனையா இருக்கும்ன்னு பார்த்தா இப்படி அழுகுறாளே…. அய்யோ!! பார்க்க எனக்கே கஷ்டமா இருக்கு…. பாவம் அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே” என்று வள்ளி அவருக்குள் நினைத்துக் கொண்டு, “என்னன்னு போய் கேட்கலாம்” என்று வள்ளியும் சனந்தாவின் அறைக்கு சென்றார்.
“என்ன ஆச்சு சனா??? ஏன் இப்படி அழுதுட்டு இருக்க” என்று பாட்டி பதற்றத்துடன் கேட்க, பாட்டியின் மடி மீது படுத்து கொண்டு தேம்பி தேம்பி அழுது தீர்த்தாள்.
“இப்ப நான் கதவு தட்டவா?? வேண்டாமா??? என்ன பண்ணலாம்…. இன்னும் அழுகுற சத்தம் மட்டும் கேக்குதே… என்ன ஆச்சு??? பாவம் அவ….. எதுக்கும் இத விக்ரமுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லுவோம்” என்று வள்ளி அவருடைய கைபேசியை எடுக்க சென்றார்.
சனந்தா தன்னை சமன்படுத்திக் கொண்டு எழுந்து அமரவும், “என்ன மா இப்படி அழுதுட்டு இருக்க??? இங்க பாரு நான் எவ்வளவு சந்தோஷமா வந்து நீ வாங்கிட்டு வந்த புடவையை கட்டி இருக்கேன்னு, உன்கிட்ட காட்டுறதுக்கு வந்தேன்… ஆனா, நீ ஏன் இப்படி அழுதுட்டு இருக்க??” என்று பாட்டி ஆதங்கத்துடன் கேட்டார்.
“நான்…. நான் யாரோ தானே பாட்டி இங்க…. எனக்குனு சொந்தம் எல்லாம் உருவாக்கிக்கவே கூடாதுல்ல…. அம்மா அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் வளர்ந்தாங்க அவங்க அப்படி இருந்ததுனாலேயோ என்னவோ தெரியல, அவங்கள பார்த்து வளர்ந்ததுனால நானும் என்னை ரொம்ப இறுக்கமாக வெச்சுட்டு நிறைய படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும் முன்னேறனும்னு மட்டுமே இருந்தேன்… அதனால எனக்கு பெருசா ஆட்களோட பழக்கம் இல்லாமலே இருந்துட்டேன்…. ஃபிரண்ட்ஸ் கூட எனக்கு பெருசா இல்ல….. இங்க வந்து எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது…. ஆனா… ஆனா….” என்று சனந்தா மீண்டும் அழுக ஆரம்பித்தாள்.
“என்ன சனா உன்னை எல்லாருக்கும் பிடிக்கும்…. இதுவரைக்கும் வந்தவங்கலேயே உன்ன தான் எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்” என்று பாட்டி சமாதானம் கூற, “நீங்க என்னை சமாதானம் பண்ணனும்னு தானே சொல்றீங்க பாட்டி…. என்ன இருந்தாலும் நான் இன்னிக்கு வந்தேன் நாளைக்கு போயிருவேன் தானே…. அப்படித் தானே என்னை எல்லாரும் இங்க பார்க்கிறாங்க” என்று சனந்தா அழுதாள்.
“யாருடா… யார் அப்படி உன்ன பார்க்குற…. என்ன பேசுற நீ” என்று பாட்டி வருத்தத்துடன் கேட்க, “வள்ளி ஆன்ட்டி இப்ப தான் கவிதா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க…. நான் உங்களுக்கு புடவை கொடுக்க வரும் போது கூட நான் சொன்னேன்ல கவிதா ஏதோ கோபமா இருக்காங்க என் மேல என்ன ஆச்சுன்னு தெரியலன்னு சொன்னேன்ல…. அதை பத்தி வள்ளி ஆன்ட்டி இன்னிக்கு கவிதா கிட்ட கேட்டிருப்பாங்க போல… அப்போ ஆன்ட்டி சொல்லிட்டு இருந்தாங்க, “என்ன இருந்தாலும் கவிதா நீ இங்க இருக்கிற பொண்ணு… நம்ம வீட்டு பொண்ணு… ஆனா, சனா அப்படி இல்ல….. அவ இன்னிக்கு இருப்பா நாளைக்கு போயிருவா” அப்படின்னு சொன்னாங்க பாட்டி” என்று நடந்ததை அழுது கொண்டே சனந்தா கூறினாள்.
“எனக்கு மத்தவங்க எப்படின்னு தெரியாது சனா…. ஆனா, நான் உன்னை என் சொந்தமா தான் நினைக்கிறேன்… வள்ளி கூட வேற ஏதாவது சொல்ல தான் இப்படி பேசி இருப்பா டா… வள்ளி அப்படி நினைக்குற ஆள் இல்ல சனா” என்று பாட்டி ஆறுதல் கூறினார்.
வள்ளி, விக்ரம்க்கு ஃபோன் செய்துவிட்டு மீண்டும் சனந்தாவின் அறைக்கு வரவும், “இங்க இருந்தா நீ இதையே நினைச்சிட்டு அழுதுட்டு இருப்ப வா நம்ம ரெண்டு பேரும் அப்படியே ஆத்து கிட்ட போலாம்…. அப்படியே நான் உனக்கு ஏதாவது சமைச்சு கொடுக்கிறேன் சாப்டுட்டு வேணும்னா நீ அங்கேயே கூட தூங்கிடு நான் வேணா வள்ளி கிட்ட சொல்றேன்” என்று பாட்டி கூறினார்.
“அப்படி என்ன ஆச்சு சனாக்கு… ஐயோ!!! நான் ஃபோன் பேச போகாம இருந்திருக்கலாமோ??? ஏதாச்சும் சொல்லியிருப்பாளோ சனா, பாட்டிகிட்ட??? அது தெரிஞ்சாளாவது என்னன்னு பார்த்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி அவளை சமாதானம் பண்ணலாம்… இப்ப எதுவுமே தெரியாம நான் என்னன்னு பேசுவேன் அவகிட்ட” என்று வள்ளி யோசித்துக் கொண்டிருந்தார்.
“இல்ல பரவால்ல பாட்டி நீங்க வீட்டுக்கு போங்க… நீங்களும் எதுக்கு என் கூட இருந்திட்டு…. பரவால்ல நான் பார்த்துக்குறேன்…. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா நானே சரியாயிடுவேன்” என்று சனந்தா கூற, “அதெல்லாம் ஒன்னும் பரவால்ல நான் தான் சொல்றேன்ல… நீ எந்திரி போய் முகத்தை கழுவு வா போலாம் அவ்வளவு தான்” என்று பாட்டி கறாராக கூறவும், சனந்தாவுக்கும் இடமாற்றம் தேவைப்பட்டு இருந்ததால் சரி என்று ஒத்துக் கொண்டாள்.
“பாட்டி நான் இப்ப இத உங்க கிட்ட சொல்லலாமான்னு எனக்கு தெரியல…. ஆனா, எனக்கு வேற யார் கிட்டயும் இது சொல்லவும் மனசு வரல….. சரவணன் பல வாட்டி கேட்டாரு… ஆனா, என்னால அவங்க கிட்ட மனசு விட்டு பேச முடியல…. ஏதோ ஒன்னு தடுத்துட்டே இருக்கு…. எனக்கு இப்போ உங்க கிட்ட சொல்லணும்னு தோணுது என்னை தப்பா எடுத்துக்காதீங்க நீங்க” என்று சனந்தா கூற, “தப்பா எடுத்துக்க என்ன இருக்கு உன் மனசுக்கு புடிச்சிருக்குன்னா அப்போ அதுல தப்பா இருக்க என்ன இருக்கு சனா??” என்று பாட்டி கேட்டார்.
“பாட்டி உங்களுக்கு எப்படி என் மனசுல இருக்குறது தெரியும்??” என்று சனா ஆச்சரியத்துடன் கேட்க, “அது தான் மா விதி” என்று பாட்டி கூறினார். “ஆனா அந்த விதி எனக்கு வேண்டாம் பாட்டி…. எனக்கு அவர புடிச்சிருக்கு…. ரொம்ப பிடிச்சிருக்கு…. என்னோட வாழ்க்கையில முதல் முறையா ஒருத்தர புடிச்சிருக்குனா அது அவர் தான்…. ஆனா, அவர சுத்தி இருக்கிற ஆட்களுக்கு என்னை புடிக்கல பாட்டி” என்று சனந்தா கூறவும், “அது முக்கியமில்லை இப்போ உன் மனசு என்ன சொல்லுதோ அதை யோசி” என்று பாட்டி கூறினார்.
“என்னால அப்படி நினைக்க முடியல…. அவருக்கு இந்த ஊரும் இந்த ஊர் மக்களும் இங்க இருக்கிற ஆட்கள் எல்லாருமே தான் அவருக்கு ரொம்ப முக்கியம்…. அப்படி இருக்கும் போது என்னால இங்க இருக்குறவங்கள உதாசின படுத்திட்டு தான் என்னுடைய விருப்பத்தையும் ஆசையும் வெளிப்படுத்தணுமான்னு எனக்கு குழப்பமாக இருக்கு”.
“எல்லாத்துக்கும் மேல முதல்ல சொன்னேன்ல…. நான் இப்படி வந்து அப்படி போயிடுற ஆளாவே இருந்துட்டு போயிடலாம்னு எனக்கு தோணுது பாட்டி” என்று சனந்தா கூற, “இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ முதல்ல எந்திரி கிளம்பற வழிய பாரு” என்று பாட்டி கூறினார்.
வள்ளி வேகமாக வீட்டில் நுழைய, சனந்தா வெளியே வந்து முகத்தை கழுவிக் கொண்டு அவளுடைய உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட தயாரானாள்.
“ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வந்துடறேன் பாட்டி” என்று சனந்தா கூற, “நானும் உன் கூட வரேன் வா போலாம்” என்று இருவரும் வள்ளியை தேடி சென்றனர்.
“அவளுக்கு யார புடிச்சிருக்குன்னு சொல்றா…. ஒரு வேள சரவணனை சொல்றாளா?.. இல்லையே அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி இல்லையே…. விக்ரமுக்கு தான் சனாவ புடிச்சிருக்கு…. அவளுக்கும் விக்ரம தான் ஒரு வேள புடிச்சிருக்கோ…. அவன சுத்தி இருக்குறவங்கன்னா??? எங்களை எல்லாரையும் யோசிக்கிறாளோ, நாங்க தப்பா எடுத்துக்குவோம்னு… இல்ல கவிதா அப்படி நடந்துக்கிட்டதுனால யோசிக்கிறாளோ… இல்ல ஒரு டீச்சரா இங்க வந்து இப்படி ஒருத்தர புடிச்சிருக்குன்னு சொன்னா ஊர்ல இருக்கிறவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறாளோ” என்று வள்ளி குழப்பத்தில் இருக்க, சனந்தா மற்றும் பாட்டி அவரை தேடி வந்தனர்.
“ஹய்யோ சனா முகம் என்ன இப்படி ஆகி இருக்கு” என்று வள்ளி பதற்றத்துடன் கேட்ட, “ஆன்ட்டி… அது” என்று தயக்கத்துடன் சனந்தா நின்று கொண்டிருக்க, “சனா நீ வெளிய இரு நான் வள்ளி கிட்ட பேசிட்டு வரேன்” என்று பாட்டி கூறவும், சனந்தா அமைதியாக வெளியே சென்றாள்.
“அவளோட நிறத்துக்கு அவ அழுததுனால எப்படி சிவந்திருச்சுல… கண் வீங்குற அளவுக்கா அழுவா அவ” என்று வள்ளி சனந்தாவின் தோற்றத்தை நினைத்து வருத்தபட்டு கொண்டிருக்க, “வள்ளி நான் சனந்தாவ வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்… ஒரு நாள் என் கூட இருக்கட்டும்” என்று பாட்டி கூறினார்.
“எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு மா அவள இப்படி பார்க்க…. அவ ஏதோ யோசிக்கிறான்னு தெரியுது… ஆனா, என்னன்னு வாய்விட்டு பேசினா தானே புரியும்” என்று வள்ளி ஆதங்கத்துடன் கேட்க, “அவ சரியானா அவளே பேசுவா…. நீயும் ரொம்ப குழப்பிக்காத” என்று பாட்டி கூறினார்.
“எப்படிமா நான் எதுவும் யோசிக்காம இருப்பேன்…. அவ முகத்த பாருங்க எப்படி அழுது இருக்காளோ…. என்ன யோசிக்கிறான்னு சொன்னா தானே தெரியும்…. இப்படி திடீர்னு நீங்க கூட்டிட்டு போறீங்கன்னு சொன்னா… அவர் கேட்டா நான் பதில் சொல்லணும் வேற…. எனக்கே இதுல உடன்பாடில்ல…. இங்க இருக்குற பொண்ணு திடீர்னு என்னனே விஷயம் தெரியாம அவள நாங்க வேற இடத்துக்கு அனுப்புறோம்னா…. எப்படி… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்று வள்ளி வருத்தத்துடன் கூறினார்.
“என்னை நம்பு வள்ளி அவளே தெளிவில்லாம இருக்கா…. கொஞ்ச நாள் போகட்டும் எல்லாம் பிரச்சனைக்கும் தீர்வு வரும் அவளும் அப்ப கண்டிப்பா சரியாயிடுவா… நீ ரொம்ப யோசிக்காத வருத்தப்படாதே” என்று பாட்டி கூறவும், வேறு வழி என்று அமைதியானார் வள்ளி.
சனந்தா வெளியே நின்று கொண்டிருக்க, விக்ரம் மற்றும் சரவணன் வந்தடைந்தனர். “அம்மா ஃபோன் பண்ணாங்க… இவ இங்கே ஏதோ பேக்கோட நின்னுட்டு இருக்கா… என்ன நடக்குது இங்க… ஹய்யோ அவ முகத்தை பாரு வீங்கி இருக்கு” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டு தலை முடியை கோதி பெருமூச்சு விட்டு, சனந்தாவிடம் நெருங்க பாட்டி மற்றும் வள்ளி வந்தடைந்தனர்.
“என்ன சனா பையோட நின்னுட்டு இருக்க என்ன ஆச்சு??” என்று சரவணன் கேட்க, “அவ பாட்டி வீட்டுக்கு போறாளாம் ரெண்டு நாளைக்கு” என்று வள்ளி கூறினார். “சாரி ஆன்ட்டி நான் உங்கள வேற ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்….. நான் அங்கிளுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன் நான் போய்ட்டு வந்திடுறேன்” என்று சனா கூற,
வள்ளி வந்து சனந்தாவின் தலையை கோதி விட்டு, “உன் மனசுலயும் மண்டையிலயும் நிறைய ஓடுது அது மட்டும் தெரியுது சனா…. ரொம்ப நாள் எங்கள காக்க வெச்சிடாத எப்பவுமே இந்த வீடு உனக்காக காத்துட்டு இருக்கும்” என்று வள்ளி கூறவும், சனந்தாவின் கண்கள் குளமாகின.
“நீங்க சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி…. நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறி, சரவணனை பார்த்து, “நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு அப்புறமா” என்று கூறி பாட்டியுடன் சென்றாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.