மீரா : மொதல் கேள்வி. இப்போ நீ உதையான்னு சொல்ற இந்த அர்ஜுன் உன்னவிட்டு பிரிஞ்சா, நீ சந்தோஷமா இருந்திருவியா?
சந்ரா அதை கேட்டதும் திடுக்கென மீராவை பார்த்தாள். அவளை அறியாமலே அவள் கண்கள் கலங்கின. அதை அவள் அவசர அவசரமாக துடைத்தாள்.
மீரா : இந்த கேள்விக்கான பதில, உன்னோட கண்ணு சொல்லீருச்சு சந்ரா. அர்ஜுன பிரிஞ்சு உன்னால இருக்க முடியாதுன்னு.

சந்ராவுக்கு புரிந்துவிட்டது.
மீரா : செரி. என்னோட ரெண்டாவது கேள்வி. அர்ஜுனோட கேரிங், காதல் இதெயெல்லா பாத்து நீ அர்ஜுன காதலிக்க ஆரம்பிச்ச. இப்போ அர்ஜுனுக்கு பூர்வ ஜென்மோ ஞாபகோ வந்த ஒரே காரணத்துக்காக, அவ உனக்காக பண்ண எல்லா இல்லன்னு ஆயிருமா?
சந்ரா அமைதியாக இருந்தாள்.
மீரா : சொல்லு சந்ரா. இத நீ சொல்லிதா ஆகனு.
சந்ரா : அப்பிடி ஆகாது மீரா அக்கா.
மீரா : செரி. என்னோட கடைசி கேள்வி. நீ அர்ஜுன வெறுக்க ஆசப்படுறியா?
சந்ரா : (உடனே) கண்டிப்பா இல்ல மீரா அக்கா.
மீரா : உன்னோட பிரச்சன என்னன்னு உனக்கே தெரியல சந்ரா. உதையா மேல இருக்கிற வெறுப்புக்காக நீ, உன்னோட காதல விட்டுக்குடுக்க முயற்ச்சி பண்ற. ஆனா அதுக்கு பதிலா, அர்ஜுன் மேல இருக்கிற காதலுக்காக உன்னோட வெறுப்ப விட்டு குடுக்கலால்ல?
இந்த வார்த்தைகள் சந்ராவின் மனதை தொட்டது.

சந்ரா : (மனதிற்க்குள்) மீரா அக்கா சொல்ற மாதிரி, நா வெறுப்புக்காக காதல விட்டு குடுக்க முயற்ச்சி பண்றே. அதுதா இத்தன கொழப்பத்துக்கும் காரணோ.
மீரா : நா சொன்னது ஞாபகோ இருக்கா உனக்கு? நீ காதல சொல்லாததால அர்ஜுன் ரொம்ப வேதனப்படுறான்னு.
சந்ரா : (வருத்ததுடன்) ஞாபகோ இருக்கு மீரா அக்கா.
மீரா : அந்த வருத்தோ, நீ காதல சொல்லாததால இல்ல சந்ரா.
சந்ரா : அப்றோ?
மீரா : நீ அவன காதலிக்கிற விஷியமே அவனுக்கு இன்னும் தெரியாது. நீ அவன காதலிக்க மாட்டியான்னு அவ ஏங்கிக்கிட்டு இருக்கா. அதுதா அவனோட வேதனைக்கு காரணோ.
சந்ரா : ஆனா மீரா அக்கா....
மீரா : இதெல்லா எனக்கு எப்பிடி தெரியுன்னு கேக்குறியா? இன்னிக்கு ரூம்ல அர்ஜுன் உன்னோட கைய புடிஞ்சிருந்தப்போ, நீ அவன கைய விட சொன்னதும் அவ விட்டட்டுடால்ல?
சந்ரா : ஆமா?
மீரா : அப்போ உன்னோட அந்த வார்த்த அவன எவ்ளோ வேதனப்படுத்திச்சுன்னு தெரியுமா?
சந்ரா திடீரென அதிர்ச்சியாக மீராவை பார்த்தாள்.
மீரா : ஆனா அப்பவு, அர்ஜுன் அது உனக்கு தெரிய கூடாதின்னு திரும்பி நின்னுட்டா. அப்ப அவ என்ன சொன்னான்னு தெரியுமா?
....பிளாஷ் பேக்....
அர்ஜுன் : (வேதனையுடன்) இன்னு உனக்கு என்மேல காதல் வரலையா சந்ரா? நா இன்னு எத்தன ஜென்மோ காத்துகிட்டு இருக்கனு?
.....பிளாஷ் பேக் முடிந்தது.....
சந்ரா நடந்ததை நினைத்து பார்த்தாள். அர்ஜுன் அவள் பார்க்கும்போது திரும்பி நின்றுக்கொண்டிருந்ததை நினைத்து பார்த்தாள். இப்போது அவளுக்கு புரிந்துவிட்டது. உடனே சந்ராவின் கண்களில் கண்ணீர் வந்தது. மிகவும் அழ ஆரம்பித்தாள்.
மீரா : உனக்கே கஷ்ட்டமா இருக்கில்ல சந்ரா? தயவு செஞ்சு அவன புரிஞ்சுக்கோ. நீ நெனைக்கிற மாதிரி அவ உதையாவா இருந்தாலும், அவந்தா அர்ஜுன் அப்பிடிங்கிறதையும் ஞாபகோ வெச்சுக்கோ. உதையாவ வெறுக்கிறன்னு நெனச்சு, அர்ஜுனோட மனச காயப்படுத்தாத.
சந்ரா வேதனையுடன் வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.

மீரா : இப்பவாவது நீ அர்ஜுன புரிஞ்சுகிட்டு நல்ல முடிவு எடுப்பன்னு நம்புறே சந்ரா.
சந்ரா வெளியே ஓடிப்போய், ஒரு இடத்தில் நின்று அழுதாள்.
சந்ரா : எனக்காக அர்ஜுன் எத்தனையோ வலிய அனுபவிச்சிருக்கா. அதுவும் என்ன காப்பாத்த மட்டுந்தா. அப்பிடி சுய நலமே இல்லாம எனக்காக காயப்படுற அர்ஜுன, நா ஒவ்வொரு நிமிஷமு மனசளவுல காயப்படுத்தியிருக்கே. என்ன நெனச்சா எனக்கே வெறுப்ப இருக்கு.
சந்ரா மிகவும் அழுதாள்.
சந்ரா : நா எதுக்காக இப்பிடி பண்றே? என்னோட காதல் பொய்யாயிற கூடாதின்னுதான? ஆனா இப்போ நா வாழுற வாழ்க்கையே பொய்யாயிரிச்சு. அர்ஜுன காதலிக்காத மாதிரி பொய்யான வாழ்க்க வாழுறே. ஆனா அர்ஜுன நா நெருங்கும்போதெல்லா, என்னால அர்ஜுன் மேல இருக்கிற காதல மறைக்கவே முடியல. அது என்ன மீறி வெளிய வருது.
சந்ரா அங்கு நின்று அழுது கொண்டிருக்கும்போது, அர்ஜுன் அந்த வழியாக வந்தான். தூரத்திலிருந்து சந்ராவை பார்த்த அர்ஜுன்,
அர்ஜுன் : இங்க நின்னு சந்ரா என்ன பண்றா?
அர்ஜுன் மெதுவாக அவள் அருகில் வந்தான்.அர்ஜுன், சந்ராவின் அருகில் வந்து அவளுடைய கண்களை தன் கைகளால் மூடினான்.

சந்ரா திடீரென பயந்து, அவனுடைய கைகளை தொட்டு பார்த்தாள். அர்ஜுன் அவனுடைய கைகளில் ஈரம் இருப்பதை உணர்ந்து, அவன் கைகளை பார்த்தான்.
அர்ஜுன் : என்ன இது? சந்ரா நீ அழுகிறியா?
சந்ரா வேகமாக கண்ணீரை துடைத்துவிட்டு,
சந்ரா : இல்லையே.
அர்ஜுன், சந்ராவின் முகத்தில் கை வைத்து,

அர்ஜுன் : பொய் சொல்லாத. உன்னோட கண்ணு அழுது, அழுது எப்பிடி செவந்து போய் இருக்குன்னு பாரு. சொல்லு என்ன ஆச்சு?
சந்ரா : ஒன்னு இல்ல அர்ஜுன். நீ விடு.
அர்ஜுன் : ஒன்னு இல்லன்னா என்ன அர்த்தோ? சொல்லு.
சந்ரா : ஒன்னு இல்ல அர்ஜுன் விடு.
அப்போது அர்ஜுன் ரூமில் நடந்ததை நினைத்து பார்த்தான்.
....பிளாஷ் பேக்....
சந்ரா செல்ல முயற்ச்சிக்கும்போது, அர்ஜுன் அவள் கையை பிடித்தான்.
அர்ஜுன் : நீ இப்போ என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு.
சந்ரா : நா எதுவும் சொல்லல. எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு. என்னோட கைய விடு.
..... பிளாஷ் பேக் முடிந்தது....
அதை நினைத்து பார்த்த அர்ஜுன்,மிகவும் வருத்தமாக, சந்ரவின் முகத்திலிருந்து மெதுவாக தன் கையை எடுத்தான்.
அர்ஜுன் : நா உன்ன தொடறது உனக்கு புடிக்கல. அதனாலதான நீ அழுகுற? செரி நா உன்னோட விருப்போ இல்லாம உன்ன தொடமாட்டே. பிலீஸ் இப்பிடி அழாத.
திடீரென சந்ரா, அர்ஜுனை பார்த்தாள். அவளுடைய கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தது.
சந்ரா : இல்ல நீ தப்பா
கூறி முடிப்பதற்க்குள், அதை பார்த்த அர்ஜுன், அவளுடைய கண்ணீரை துடைக்க வந்தான். ஆனால் கையை கீழே இறக்கிவிட்டான்.
அர்ஜுன் : பிலீஸ் அழாத.
என்று கூறிவிட்டு, திரும்பினான். திரும்பிய அர்ஜுனின் கண்களில் கண்ணீர் வந்தது. தன்னுடைய கண்ணீரை துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
சந்ரா : அர்ஜுன் நில்லு. அப்பிடி இல்ல.
அதற்க்குள் அர்ஜுன் சென்றுவிட்டான்.
சந்ரா : அர்ஜுன் என்ன தப்பா புரிஞ்சுகிட்டா. அவன நா எப்பிடி சமாதான படுத்துறது?
இரவு வந்தது.
சந்ரா ரூமுக்கு சென்று பார்த்தாள். அங்கு அர்ஜுன் ஜென்னலில் சாய்ந்து திரும்பி நின்று கொண்டிருந்தான். சந்ரா அவன் அருகில் சென்று,
சந்ரா : அர்ஜுன் நீ நெனைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நா அதனால அழல.
அர்ஜுன் திரும்பாமலே நின்றுக்கொண்டிருந்தான்.
சந்ரா : அர்ஜுன் ! நீ ஏ என்னோட மொகத்த பாக்க மாட்டிங்குற? என்மேல கோவமா இருக்கியா? பிலீஸ் நா சொல்றத கேளு.
அர்ஜுன் எதுவும் பேசாமல் அசையாமல் நின்றுக்கொண்டிருந்தான்.
சந்ரா : அர்ஜுன் !
என்று கூறியபடி சந்ரா, அர்ஜுன் மீது கை வைத்தாள்.
சந்ரா : அர்ஜுன் !
ஆனாலும் அர்ஜுன் அசையவே இல்லை.
தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.