Chapter 42

Bhavani Varun

Member
Jan 23, 2025
44
0
6
அபிலாஷ் மற்றும் சனந்தா இருவரும் நடந்த செல்ல அவளை டைவர்ட் செய்து கொள்ள அபிலாஷிடம் பேசிக் கொண்டே வந்தாள். “நீங்க இங்க வாலண்டியரா வந்த டாக்டர் தானா?? எப்படி இங்கே தங்கிடீங்க” என்று சனந்தா கேட்க, “தெரியல எனக்கு இங்க புடிச்சிருந்தது அதனால தங்கிட்டேன்” என்று அபிலாஷ் கூறவும், “எனக்கு ஒன்னு தோணுது கேட்கலாமா?? கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??” என்று சனா கேட்க, “கேளுங்க நீங்க கேட்டதுக்கு அப்புறமா பார்க்கலாம்” என்று அபிலாஷ் கூறவும், “அப்படின்னா வேண்டாம்” என்று சனந்தா கூற, “இல்ல பரவால்ல கேளுங்க” என்று அபிலாஷ் கூற, “அபர்ணாவ லவ் பண்றீங்களா??” என்று சனந்தா கேட்டாள்.

அபிலாஷ் அதிர்ச்சியுடன் நின்று சனந்தாவை பார்க்க, “ம்ம்…. இல்ல ஆன்ட்டி அங்கிள் அப்பப்ப அபர்ணா இருக்குற இடத்துக்கு போறது வர்றதை பார்த்து இருக்கேன்… அதே மாதிரி விக்ரம் சாரும் சரவணனும் போவாங்க…. இங்க இருக்கிற மக்கள் கூட எப்பயாவது போவாங்க அதெல்லாம் நான் பார்த்து இருக்கேன்”.

“ஆனா, நீங்க எல்லாருக்கும் முன்னாடி காலையிலேயே போயிடுவீங்க…. அதுவும் தினமும் போவீங்க…. இப்போ ஆன்ட்டி அங்கிள் போறது கூட எப்பயாவது ஒரு நாளா மாறிடுச்சு…. நான் வந்த புதுசுல அவங்களும் தினமும் போயிட்டு இருந்தாங்க…. அதுக்கப்புறம் வாரத்துல ஒரு நாள் அந்த மாதிரி மாறிடுச்சு…. ஆனா, நீங்க இப்ப வரைக்கும் தினமும் போயிட்டு இருக்கீங்க”.

“அதுவும் இல்லாம நீங்க போயிட்டு வரும் போது எப்பவுமே உங்க கண்ணுல தண்ணி இருக்கும்…. இன்னுமும் அந்த வலி உங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன் அதனால தான் கேட்டேன்…. நீங்க பதில் சொல்லலனாலும் பரவால்ல” என்று சனந்தா கூறினாள்.

சனந்தா கேட்ட பின், அபிலாஷ் கண்கள் ஈரத்துடன், “ஆமா சனா அப்புவ நான் லவ் பண்றேன்…. இன்னுமும் பண்ணிட்டு தான் இருக்கேன்” என்று அபிலாஷ் வலியுடன் கூறினான். “எனக்கு என்ன சொல்லும்னு தெரியல…. ஆனா எல்லாம் சரி ஆகும் கவல படாதீங்க” என்று சனந்தா கூற, “ம்ம்… நடந்திட்டே பேசலாம் வா” என்று அபிலாஷ் கூறினான்.

“என்னோட காதல நான் அப்பு கிட்ட சொல்ல ஒரு வாட்டி முயற்சி பண்ணேன்… நான் சொல்றதுக்கு முன்னாடி அவ புரிஞ்சுகிட்டு வேண்டாம் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டா…. அதுக்கு அவ சொன்னா ஒரே காரணம், “எனக்கு உங்கள புடிச்சிருக்கு அதனால தான் நீங்க கஷ்டப்பட வேண்டாம்னு நினைக்கிறேன்” அப்படின்னு சொன்னா”.

“எனக்கு அப்ப புரியல இத ஏன் அப்பு அப்படி சொல்றான்னு…. அதுக்கப்புறம் ஊர்ல எல்லாரும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்… இந்த மாதிரி அப்பு ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க மாட்டான்னு பாட்டி சொன்னாங்க அப்படின்னு…. இத யாராவது நம்புவாங்களான்னு நினைச்சேன்”.

“ஆனா, அவங்க சொல்றதெல்லாம் நடக்கும்னு சொன்னாங்க….. இதெல்லாம் கேள்விப்பட்டப்போ அத என்னால நம்பவே முடியல….. நான் அவளை கன்வின்ஸ் பண்ண நிறைய முயற்சி பண்ணேன்….. ஆனா, அது எதுக்குமே இடம் கொடுக்கல…. அவளும் ஏதோ ஒரு இடத்துல பாட்டி சொன்னத நம்பினா…. அதனால தான் அபர்ணாவும் என்கிட்ட க்ளோஸ் ஆக கூட இல்ல”.

“அவளுக்கு என்னை பிடிக்கலன்னு வேண்டாம்னு சொல்லி இருந்தா கூட எனக்கு இவ்வளவு வலி இருந்திருக்குமான்னு எனக்கு தெரியல சனா…. “எனக்கு உங்களை பிடிக்கும் நீங்க சந்தோஷமா இருக்கணும்னு” மட்டும் அவ சொல்லிட்டு போனா….. அதை நினைக்க நினைக்க…..” என்று அபி கூறி அதற்கு மேல் வார்த்தை வராமல் கண்களில் கண்ணீர் தான் பதிலாக வந்தது.

“ரொம்ப சாரி டாக்டர்… இப்படி கேட்டு உங்களை கஷ்டப்படுத்திட்டதுக்கு” என்று சனந்தா கூற, “இல்ல இது ரொம்ப நாளா எனக்குள்ளேயே வெச்சிருக்கேன்…. இப்போ உன் கிட்ட சொன்னதுக்கு அப்புறமா எனக்கு உண்மையிலேயே ஒரு ரிலீஃப் கிடைச்சுது…. இது விக்ரம் சரவணன் ரெண்டு பேருக்கும் தெரியாது…. அவளுக்காக மட்டுமே தான் நான் இங்க இருந்தேன்…. அதுக்கப்புறம் எனக்கும் இந்த ஊரும் பிடிக்க ஆரம்பிச்சுது, அதுவும் ஒரு காரணம் தான்… இருந்தாலும், அபர்ணா என்னிக்குமே எனக்கு ஸ்பெஷல் தான்” என்று அபிலாஷ் கூறினான்.

“ம்ம்… அவங்களுக்கு இது புரியாம இருக்குமான்னு எனக்கு தெரியல…. கேட்டு சங்கடப்படுத்திக்க வேண்டாம்னு மட்டும் இருந்திருப்பாங்களோனு எனக்கு தோணுது” என்று சனந்தா கூற, “அது என்னன்னு எனக்கு தெரியல….. ஆனா, ஒரு டாக்டரா நான் கூட இருந்தும் கடைசியா அந்த பாட்டி சொன்னது தான் இப்ப நடந்துருச்சு” என்று அபிலாஷ் கூறினான்.

“ம்ம்…. வருத்தப்படாதீங்க டாக்டர் அபர்ணாவே உங்களுக்கு ஒரு பொண்ண காட்டுவாங்க…. அதுக்காக அபர்ணாவ ரீப்ளேஸ் பண்ண முடியும்னு நான் சொல்லல…. என்னிக்குமே அபர்ணா உங்க லைஃப்ல ஒரு ஸ்பெஷல் பர்சன், அதை மாத்தவே முடியாது…. அதே மாதிரி வர போற பொண்ணும் அவங்களோட தாக்கத்தை உங்களுடைய வாழ்க்கையில ஏற்படுத்துவாங்க அந்த நம்பிக்கையிலேயே இருங்க டாக்டர்” என்று சனந்தா கூறவும், அபிலாஷ் தலையை மட்டும் அசைத்தான்.

“ரியாலிட்டி புரியுது தான் சனா…. இருந்தாலும் மனசு இன்னும் ஸ்டெடி ஆகல” என்று அபிலாஷ் கூறவும், “அப்படித் தான் டாக்டர் புத்திக்கு நல்லாவே புரியும் இது நடக்கும் நடக்காது இல்ல பிரச்சனை வரும் வராதுன்னு… இது சரியா இருக்கும்னு எல்லாமே சொல்லுவோம்… இருந்தாலும் நம்ம மனசு இருக்கு பார்த்தீங்களா, அது சொல் பேச்சே கேட்காது” என்று சனா கூறினாள்.

அபிலாஷுக்கு சனாவின் வருத்தத்தையும் சேர்த்து கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டு, “எனக்கு இப்போ உண்மையிலேயே உன் கிட்ட இத சொன்னதுக்கு அப்புறம் என்னையும் மீறி அழுது நான் ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்… அதே மாதிரி நீயும் உன் மனசுல இருக்குறத யார் கிட்டயாவது சொல்லு… அதுக்கான சொல்யூஷன் கிடைக்குமான்னு எனக்கு தெரியல… ஆனா, கட்டாயம் நீயாவது ரிலாக்ஸா இருப்ப” என்று அபிலாஷ் கூறவும்,

“இவர் விக்ரமுடைய பிரச்சனையை தான் சொல்றாரு…. மூணு பேரும் ஃபிரண்ட்ஸ் அதனால கண்டிப்பா இவருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கும் தானே நான் பேச மாட்டெங்குறேன்னு” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டு, “முயற்சி பண்றேன் டாக்டர்” என்று சனந்தா கூறினாள்.

“என்கிட்ட பேசுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சனா” என்று அபிலாஷ் கூற, சனந்தா புன்னகைத்து, “நீங்க இதெல்லாம் என்கிட்ட பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல…. உங்க கிட்ட கேட்கணும்னு ரொம்ப நாளா தோணுச்சு அதனால தான் நான் கேட்டேன், ஆனா, நீங்க என்கிட்ட இதெல்லாம் பேசி இப்போ ரிலாக்ஸ்டா இருக்கீங்கனா எனக்கும் சந்தோஷம் தான்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்…. இதைப் பத்தி… இப்போதைக்கு யார் கிட்டயும்…..” என்று அபிலாஷ் இழுத்து பேச, “எனக்கு புரியுது டாக்டர் நான் சொல்ல மாட்டேன்” என்று சனந்தா உறுதி அளித்தாள்.

“இதுக்கும் ரொம்ப தேங்க்ஸ்!!!” என்று அபிலாஷ் புன்னகையுடன் கூற, “இப்ப தான் நீங்க சிரிச்சு நான் பார்க்கிறேன் வந்து இந்த ரெண்டு மாசத்துல” என்று சனந்தா கூற, “எனக்குள்ள இந்த ஒரு விஷயம் தான் இவ்வளவு அழுத்தத்தை கொடுத்துட்டு இருந்து இருக்குன்னு எனக்கு தெரியல… இப்போ உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் ஏதோ ரிலாக்ஸ்டா இருக்கு…. இனிமே படிப்படியா எல்லாம் மாறும்னு நம்புறேன்” என்று அபிலாஷ் கூறினான்.

“எல்லாம் மாறட்டும் சந்தோஷமா இருங்க” என்று சனந்தா மனதார வாழ்த்தினாள். சனந்தா வீடு வந்ததும், “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் கூட வந்ததுக்கு” என்று சனந்தா கூற, “ம்ம்… பரவால்ல எப்போ எந்த ஹெல்ப் வேணாலும் என் கிட்டயும் கேட்கலாம் நானும் செய்ய ரெடி” என்று அபிலாஷ் கூற, “நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி டாக்டர்… ஏதாவது வேணும்னா கண்டிப்பா உங்க கிட்ட கேட்கிறேன்” என்று சனந்தா கூறி அவளுடைய அறைக்கு சென்றாள்.

“என்ன அத்தை தூங்கிட்டு இருப்பீங்க இந்த நேரத்துக்கு…. ஆனா, கீரை ஆஞ்சிட்டு இருக்கீங்க” என்று கவிதா வீட்டுக்குள் வந்து கொண்டே பேசி அவளும் வள்ளியுடன் அமர்ந்து கொண்டாள். “காலையில மாமா கொண்டு வந்து கொடுத்தாரு… இப்ப தான் எனக்கு நேரம் கிடைச்சுது… அதான் இத நான் சுத்தப்படுத்தி வெச்சா நாளைக்கு சமைக்கிறதுக்கு” என்று வள்ளி கூறினார்.

“ஆமா கவிதா உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்… மாமா சொன்னாரு சனா உனக்கு பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தப்போ நீ ஏதோ வெடுக்குனு பேசிட்டு போயிட்டேன்னு மாமா ரொம்ப வருத்தப்பட்டாரு” என்று வள்ளி கூறவும், கவிதாவின் முகம் மாறியது.

சனந்தா சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பின் அவள் காய போட்ட துணியை எடுத்து வர சென்றாள். “ஏன் கவிதா அப்படி பேசின சனா கிட்ட… என்ன இருந்தாலும் அவ இந்த ஊருக்கு வாலண்டியரா வந்திருக்கிற பொண்ணு…. நீ நம்ம வீட்டு பொண்ணு…. அவ இப்ப இருப்பா நாளைக்கு போயிடுவா, இருக்கிற வரைக்கும் அவள நம்ம தானே நல்ல பார்த்துக்கணும்” என்று வள்ளி கூறியது, சனந்தா காதில் விழ, அவளுடைய துணிகளை விரைவாக எடுத்துக் கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள் சனந்யா.

சனந்தாவிற்கு, அவளையும் மீறி அழுகை பீறிட்டுக் கொண்டு வரவும் தேம்பி தேம்பி அழுது தீர்த்தாள். “இதே தான கவிதாவோட அப்பாவும் சொன்னாரு, அப்போ எனக்கு இவ்வளவு கஷ்டமா இல்ல…. ஆனா… ஆனா, ஆன்ட்டி கூட என்னை வெளி ஆளா தான் பார்க்குறாங்க…. அப்ப நான் யாரோ தானே என்ன இருந்தாலும்…. கவிதா தான் இங்க சொந்தமானவங்க…. நான் கிடையாது இதை புரிஞ்சுக்கோ சனா” என்று அவளுக்குள் கூறிக் கொண்டே அழுது கொண்டிருந்தாள்.

“என்னமோ அத்தை அந்த பொண்ணு வந்ததுக்கு அப்புறம் எல்லாரும் அந்த பொண்ணுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி இருக்கு” என்று கவிதா முறையிட,

“இங்க புதுசா வந்திருக்குற பொண்ணு அவ….. நம்ம கூட நல்லா பழகுறா நமக்காகவும் சேர்ந்து உழைக்கிறா…. அதுவும் இல்லாம அவ நமக்கு எல்லாம் ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு அதையும் மீறி அவ ஒரு அன்புல தானே இதெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுக்கிறா…. அதை நம்ம உதாசின படுத்தினா அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்”.

“அதுவும் இல்லாம இத்தனை வருஷமா வந்த வாலண்டியரல இந்த பொண்ணு உண்மையிலேயே நம்ம வீட்ல ஒருத்தி ஆயிட்டா…. கொஞ்ச நாள் இருந்துட்டு போயிடுவான்னு நினைக்கவே எனக்கு எல்லாம் கஷ்டமா இருக்கு… அவ்வளவு நல்ல பழகுறா அந்த பொண்ணு…. அவ கிட்ட இப்படி நடந்துக்கிட்டா அவளும் எவ்வளவு வருத்தப்படுவா” என்று வள்ளி சனந்தாவுக்கு வக்காலத்து வாங்க,

“இங்க இருந்தா இவங்க அவளை பத்தி பேசி என்னை கோபப்படுத்திட்டே இருப்பாங்க” என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டு, “அத்தை நான் கிளம்புறேன் அப்பா சீக்கிரம் வர சொன்னாரு” என்று மட்டும் கூறி கவிதா சென்று விட்டாள்.

“என்ன இவ இதுக்கே இவ்ளோ கோவப்படுற…. விக்ரமுக்கு சனாவை புடிச்சிருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது… அது மட்டும் கவிதாவுக்கு தெரிஞ்சா இன்னும் என்ன ஆட்டம் ஆடுவான்னு தெரியலையே…. ஆண்டவா!!!! நீ தான் எல்லாம் கூட இருந்து சுமூகமா நடத்தி வைக்கணும்” என்று மானசீகமாக வேண்டிக் கொண்டார் வள்ளி.

வள்ளி அவரது வேலையை முடித்துக் கொண்டு அனைத்தும் எடுத்து வைக்கவும், சனா சனா!!! என்ற சத்தம் கேட்க, அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அங்கே திலோ பாட்டி சனந்தாவை அவளது அறையின் வெளியே நின்று அழைத்துக் கொண்டு இருந்தார். “என்ன இந்த நேரத்துல வந்து இருக்காங்க இவங்க” என்று வள்ளி நினைத்துக் கொண்டு, “சரி என்னன்னு போய் பார்க்கலாம்” என்று வள்ளி நினைத்து ஒரு அடி எடுத்து வைக்கவும் சனந்தா கதவை திறந்து அழுது கொண்டே பாட்டியை அணைத்துக் கொண்டாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.