Chapter-42

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
“அப்ப உங்க ஃபிரண்டோட சிஸ்டர் சியாவோட ஃபிரண்டா?” என்று தேன்மொழி எதையோ கண்டுபிடித்து விட்டவளை போல வேகமாக கேட்க,

ஆமாம் என்று தலையாட்டிய அர்ஜுன்,

“நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம எப்படியும் அந்த பொண்ணோட ஐடியா எனக்கு பிடிக்கும்னு சொல்லி என் ஃபிரண்ட் அந்த பொண்ண என்னை பார்க்க கூட்டிட்டு போனான்.

அங்க போய் பார்த்தா என் சியா இருந்தா.

எனக்கு அவளை பார்த்த உடனே லாஸ்ட்டா அவளை கான்ஃபரன்ஸ் ஹால்ல வச்சு திட்டி துரத்துனது தான் ஞாபகம் வந்துச்சு.

அப்பவே அவ பொட்டிய கட்டிக்கிட்டு மறுபடியும் இந்தியா பக்கம் அழுதுகிட்டே போயிப்பான்ன்னு நினைச்சேன்.‌

ஆனா அவ மறுபடியும் ரெண்டு வருஷம் கழிச்சு தனியா ஒரு ஸ்டார்ட் ஆப் கம்பெனி வைக்கணும்னு யோசிக்கிற அளவுக்கு வளர்ந்து வந்திருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

அப்பயே நான் கொஞ்சம் அவளை பார்த்து இம்ப்ரஸ் ஆயிட்டேன்.

இருந்தாலும் அவ ஏதோ ஆர்வக்கோளாறுல பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறா..

அதெல்லாம் எப்படியும் உருப்படாது.

இதுல போய் நம்ம எதுக்கு இன்வெஸ்ட் பண்ணனும்னு நான் அவளை பார்த்த உடனே என்னால இவ கம்பெனில இன்வெஸ்ட் பண்ண முடியாதுன்னு டைரக்டா சொல்லிட்டேன்.

உடனே அவளும் கோபமா ‌ இவர் காசுல என் கம்பெனிய ஸ்டார்ட் பண்ணனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை.

எனக்கு வேற எந்த இன்வெஸ்டர்ரும் கிடைக்காம‌ போனா கூட நான் இவர்கிட்ட போய் நிக்க மாட்டேன்.

என்னோட ட்ரீம்சை ‌ எப்படி fullfil பண்ணனும்னு எனக்கு தெரியும்ன்னு சொல்லிட்டு உடனே அங்க இருந்து கிளம்பி போயிட்டா.

என் கம்பெனில வேலை கிடைக்காம போயிடுச்சுன்னா, இந்த ரஷ்யால வாழ வழியில்லைன்னு சொல்லிட்டு அந்த வேலைக்காகவே என் கால்ல விழுந்து கெஞ்சிட்டு இருந்தவ,

என் முன்னாடி அவ்ளோ தைரியமா ‌ திமிரா அவளோட செல்ஃப் ரெஸ்பெக்ட்காக பேசிட்டு போனது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

ஒரு பக்கம் அவ ஆட்டிடியூட் எனக்கு பிடிச்சிருந்தாலும், இன்னொரு பக்கம் என் மேல் ஈகோவ அவ டச் பண்ணிட்ட..‌

சோ என் ஃபிரண்டு கிட்ட இவளுக்கு என்ன இவ்வளவு திமிரு?

என்ன மீறி இந்த ரஷ்யால இவ எப்படி கம்பெனி ஸ்டார்ட் பண்றான்னு நானும் பாக்குறேன்னு கோபமா சொல்லிட்டு கிளம்பிட்டேன்.” என்று அர்ஜுன் செல்ல,

“அப்போ நீங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலையா?

மறுபடியும் நீங்க எப்ப அவங்கள பார்த்தீங்க?” என்று கேட்டாள் தேன்மொழி.

“நான் வேலை இல்லைன்னு சொல்லி துரத்தி விட்டதுக்கு அப்புறம் அவ என் ஃப்ரெண்ட் ஆபீஸ்ல தான் போய் வேலைக்கு சேர்ந்து இருக்கா..

அது எனக்கு தெரியல. அங்க தான் அவளும் என் ஃபிரண்டோட தங்கச்சி சுருதியும் ஃபிரண்ட்ஸ் ஆகிருக்காங்க.

சியா நினைச்ச மாதிரி எப்படியாவது வேற யாராவது ஒரு இன்வெஸ்டரை பிடிச்சு அவ ஆசைப்பட்ட மாதிரி அவளோட கன்சல்டன்சி கம்பெனிய ஸ்டார்ட் பண்றதுக்கு எத்தனையோ இன்வெஸ்டர்ஸ் கிட்ட போய் பேசி இருக்கா.

நான் அவகிட்ட கோபமா பேசிட்டு வந்திருந்தாலும், அவளுக்கு எதிரா எதையும் பண்ணல.

ஆனா அப்பயும் அவளால ஒரு இன்வெஸ்டரை கண்டுபிடிக்க முடியல.” என்றான் அர்ஜுன்.

“ஏன் அவங்க கம்பெனில யாரும் இன்வெஸ்ட் பண்ணல?

அவங்க ஐடியா அவ்ளோ மோசமா இருந்துச்சா என்ன?” என்று தேன்மொழி கேட்க,

“அவளோட ஐடியா பக்காவா தான் இருந்துச்சு..

ஸ்ருதி கூட அவ ஐடியாவை பத்தி சொல்லி அவளுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி என்கிட்ட வந்து நிறைய தடவை பேசுனா..

சியா மட்டும் என்கிட்ட வாய் பேசி என்னை டென்ஷன் பண்ணாம இருந்திருந்தா,

அட்லீஸ்ட் ஸ்ருதிக்காகவாவது நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன்.

எனக்கு ஜனனி மாதிரி ஸ்ருதியையும் ரொம்ப பிடிக்கும்.

ஆனா சியா தான் திமிரு புடிச்சவளாச்சே..

என்ன ஆனாலும் என்கிட்ட மட்டும் வந்து நின்னுட கூடாதுன்னு பிடிவாதமா இருந்தா..

ஆனா தினமும் ஒவ்வொருத்தனோட ஆபீஸ்க்கு போய் அவ கம்பெனில இன்வெஸ்ட் பண்ண சொல்லி ஏரி இறங்கி அசிங்கப்பட்டுட்டு இருந்தா.

ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு எந்த பேக்ரவுண்டும் இல்லாம இங்க வந்து பெரிய ஆள் ஆகணும்னா,

அதுக்கு அவ எவ்ளோ கஷ்டப்பட்டு ஒர்க் பண்ணாலும், திடீர்னு ஏதாவது லக் அடிக்கணும்.

அப்பதான் அவளால ஜெயிக்க முடியும்.

இல்லைனா, யார்கிட்ட எல்லாம் வேலையாக வேண்டியது இருக்கோ, அவனுங்க எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவங்க சொல்றதை கேட்டு நடந்துக்கணும்.

இல்லைனா இங்க முன்னேற முடியாது.

பட் சியா அந்த மாதிரி பொண்ணு இல்லையே..

சோ அவளோட டேலண்டை ரெஸ்பெக்ட் பண்ணி அவளுக்கு சப்போர்ட் பண்ற ஒருத்தர் கிடைக்கறதுக்காக அவ வெயிட் பண்ணிட்டு இருந்தா.

அதேசமயம் முதல்ல ஸ்ருதிக்காகன்னு நெனச்சு அவள வாட்ச் பண்ணிட்டு இருந்த நான்,

அவ எனக்கு ஒவ்வொரு செகண்டும் இன்ட்ரஸ்டிங்கா தெரிஞ்சதுனால அவளை நோட் பண்றதையே வேலையா வச்சுக்க ஆரம்பிச்சிட்டேன்.‌

தூரத்துல இருந்து அவ பண்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாத்தையும் பாக்க பாக்கவே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சது.

அப்படியே எனக்கே தெரியாம அது ஒன் சைட் லவ்வா மாறிடுச்சு.

சோ நானே என் ஃபிரண்டை வெச்சு அவளுக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணேன்.

ஆனா அவ என் ஃபிரண்டு ஹெல்ப் பண்ணா கூட, அவன் அதை சுருதிக்காக அவளுக்கு பண்ற மாதிரி தான் இருக்கும்.

அவளோட திறமைக்கு தான் அவளுக்கு ஆப்பர்சூனிட்டி கிடைக்கணும்.‌

அதுவரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டா.” என்றான் அர்ஜுன்.

“கடைசியில என்னதான் ஆச்சு? நீங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணீங்களா இல்லையா?” என்று தேன்மொழி கதை கேட்கும் ஆர்வத்தில் பொறுமை இல்லாமல் கேட்க,

“ம்ம்.. அதான் எனக்கு அவ மேல லவ் வந்துருச்சே..

அப்புறம் அவளுக்கு நான் ஹெல்ப் பண்ணாம எப்படி?

உடனே ஆகாஷை ஒரு கம்பெனியை fake identityல வேற ஒருத்தன bossஆ போட்டு கிரியேட் பண்ண சொன்னேன்.

அப்படி தான் ஆகாஷ்க்கு அசிஸ்டன்ட்டா இருந்த சந்தோஷ் எங்க நியூ கம்பெனிக்கு C.E.Oஆகி என் தங்கச்சிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டான்.

சந்தோஷை வச்சி இன்டைரக்டா ‌ நான் சிவாவுக்கு ஹெல்ப் பண்ணேன்.

அவளும் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ஒரே வருஷத்துல அதை பெருசா கொண்டு போய்ட்டா.

நானும் அவள தூரத்தில இருந்து பாத்து லவ் பண்ணிட்டே இருந்தேன்.” என்று அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்க,

அவனை இடைநிறுத்திய தேன்மொழி, “அப்புறம் எப்படி சியாவுக்கு நீங்க அவங்கள லவ் பண்றது தெரிஞ்சது?

நீங்களே போய் டைரக்டா சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள்.‌

“ஆமா சொல்லிட்டேன். பட் அவ கிட்ட இல்ல, அவளோட பேரண்ட்ஸ் கிட்ட.

அவ இங்க செட்டில் ஆனதும் அவ ஃபேமிலியையும் கூட்டிட்டு வந்து இங்க வச்சுக்கிட்டா.

நான் டைரக்டா அவ பேரன்ட்ஸ் கிட்ட பேசி அவங்கள கன்வின்ஸ் பண்ணி எங்க மேரேஜ்க்கு ஓகே வாங்கிட்டேன்.

அவ வீட்ல இருக்கிறவங்க சொல்லி தான் அவளுக்கு நான் அவளை லவ் பண்ணது, அவளுக்கே தெரியாம அவளுக்கு ஹெல்ப் பண்ணது எல்லாமே அவளுக்கு தெரியும்.

சோ அவ உடனே டென்ஷனாகி என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா.

அதுக்கப்புறம் அப்படியே ஒரு ரெண்டு மூணு வருஷம் அவ பின்னாடி சுத்தி அவளை கன்வின்ஸ் பண்ணி, அவளை கரெக்ட் பண்ணி,

அவளுக்கும் என் மேல லவ் வர்றத்துக்கு என்னென்னமோ பண்ணி கடைசியில ரெண்டு ஃபேமிலியும் சமாதிச்சு எங்களுக்கு மேரேஜ் நடந்துச்சு.” என்றான் அர்ஜூன்.

‌“பார்றா.. முதல்ல அவங்கள உங்க ஆபீஸ்ல வச்சு உங்க முகத்திலேயே முழிக்க கூடாதுன்னு சொல்லி துரத்தி விட்டுட்டு..

கடைசில அவங்க உங்களை வேண்டாம்னு சொல்லி துரத்தினாலும் அவங்க பின்னாடி சுத்தி நீங்க அவங்கள லவ் பண்ணி அவங்களையும் லவ் பண்ண வச்சு கல்யாணம் பண்ணி இருக்கீங்க..

நெஜமாவே பெரிய விஷயம் தான்..

‌ உங்கள ஃபர்ஸ்ட் டைம் ‌பார்த்தா யாரா இருந்தாலும் சரியான உம்முனா மூஞ்சி டெரர் பீஸ்ன்னு தான் நினைப்பாங்க..

பட் உங்க கூட பழகி பார்த்ததுக்கு அப்புறம் தான் நீங்க அப்படி ஒன்னும் மோசம் இல்லைன்னு தோணும்.” என்று தேன்மொழி சொல்லிவிட்டு சிரிக்க,

அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

கூடவே அவனுக்கு சியாவை பற்றிய ஞாபகங்களும் வந்துவிட, இதுவரை அவன் அவளிடம் கதையாக சொன்ன அனைத்தும் அவன் மனதில் படமாக ஓடியது.

சியாவின் அழகான சிரித்த முகத்தை நினைத்து பார்த்தான்.

இப்போது அவள் அவன் வாழ்வில் இல்லை என்று அவனால் நம்பவே முடியவில்லை.

ஆனால் அவன் முன்னே அமர்ந்திருந்த தேன்மொழி அவனுக்கு நிதர்சனத்தை உரக்க சொல்லாமல் சொல்ல,

இறுதியில் பெருமூச்சுவிட்டு இன்று எதற்காகவும் மனம் தளரக்கூடாது என்று நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்டான் அர்ஜுன்.

அவன் முகம் நார்மலாக இருப்பதை உறுதி செய்த தேன்மொழி அவன் கண் விழித்ததில் இருந்து தன் மனதிற்குள் உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியை இப்போது அவனிடம் கேட்டாள்.

“நீங்க சியாவை பார்த்ததுல இருந்து உங்களுக்கு மேரேஜ் ஆன வரைக்கும் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டீங்க..

பட் அவங்களுக்கு என்ன ஆச்சு?

அவங்க எப்படி இறந்தாங்கன்னு மட்டும் இன்னும் சொல்லலையே..

நான் அத பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு தான் உங்ககிட்ட இந்த கொஸ்டினே கேட்டேன்.

ஏன்னா நீங்க கோமால இருந்து கண்ணு முழிச்ச உடனே,

நீங்க இத்தனை வருஷமா இவ்ளோ லவ் பண்ண சியாவை உங்க கையால கொன்னேன்னு சொன்னதயே இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல.

எனக்கு உண்மையா என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கணும்.

அது தெரியாம உங்க விஷயத்துல என்னால ஒரு முடிவுக்கு வர முடியாது.

அதை நெனச்சு பார்த்தாலே நீங்க சியாவை கொன்னதுனால அவங்கள மாதிரி இருக்கிற என்னையும் கொன்னுடுவீங்களோனு எனக்கு பயமா இருக்கு.” என்று அவள் வெளிப்படையாகவே சொல்லிவிட,

அவளை ஏறிட்ட அர்ஜுன் விரக்தி புன்னகை ஒன்றை சிந்திவிட்டு,

“நெஜமாவே நான் சியாவை கொல்லனும்னு நெனச்சு கொல்லலடி.

அது எனக்கே தெரியாம என் கையால நடந்த ஒரு ஆக்சிடென்ட்.

இருந்தாலும் அது என்னால நடந்ததுனால தான், அதை ஏத்துக்க முடியாம இருந்த கில்டி ஃபீலிங்ல நான் கோவமாவுக்கே போனேன்.

சோ என்னால உனக்கு ஏதாவது ஆயிடுமானு நீ நெனச்சு பயப்பட வேண்டிய அவசியமே இல்ல.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

அவன் என்னதான் சியாவின் மரணத்தை பற்றி ஒரு விளக்கம் கொடுத்தாலும் கூட,

அவளுக்கு என்ன ஆனது, அர்ஜுன் ஏன் நேற்று குண்டடிப்பட்டு வீட்டிற்கு வந்தான்? என்று தெரிந்து கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாக நினைத்தாள் தேன்மொழி.

அதனால் அவள் “நீங்க சொல்றது எனக்கு புரியுது. பட் எனக்கு எல்லாமே கிளியரா தெரியணும்னு நான் நினைக்கிறேன்.‌

நீங்க என்ன நடந்துச்சுன்னு எதையும் மறைக்காம சொல்லுங்க.

உங்களுக்கு மேரேஜ் ஆனதுல இருந்து நேத்து உங்களுக்கு என்ன ஆச்சுன்ற வரைக்கும் எனக்கு எல்லாமே தெரியணும்.” என்று சொல்ல,

“எங்க மேரேஜ் லைஃப் பத்தி சொல்லனும்னா, இந்த ஜென்மம் முழுக்க நான் உன்கிட்ட சொல்றதுக்கு நிறைய இருக்கு.

என் சியா கூட நான் ஒவ்வொரு செகண்டும் அவ்ளோ சந்தோஷமா வாழ்ந்தேன்.

She is my source of happiness.

அவளை மேரேஜ் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் நான் தான் என்னமோ அவளை ரொம்ப லவ் பண்றேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

பட் எப்ப அவ கூட சேர்ந்து எப்ப வாழ ஆரம்பிச்சனோ, அப்பதான் ஒரு பொண்ணு நம்மல பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணா,

எப்படி இருக்கும்னு நான் எக்ஸ்பிரியன்ஸ் பண்ணி பாத்தேன்.

அவ என் மேல உயிரையே வச்சிருந்தா. நானும் தான்.

ஆனா ஃபிரண்டு ஃபிரண்டுன்னு சொல்லிட்டு ரொம்ப வருஷமா என் கூட என் காலையே சுத்திட்டு இருந்த ஒரு நாய் என் கழுத்தை கடிக்க ட்ரை பண்ணி அதுல அநியாயமா என் சியாவ இழக்க வேண்டியதா போயிடுச்சு.” என்று கண் கலங்கச் சொன்னான் அர்ஜுன்.

அவன் தோள்களில் கை வைத்த தேன்மொழி “உங்க ஃபிரண்டுனா யாரு ஸ்ருதியோட அண்ணனா?

ஜனனிக்கு கூட அந்த பொண்ணு ஃபிரண்டுன்னு சொன்னிங்களே!” என்று கேட்க,

இறுகிய முகத்துடன் ஆமாம் என்று தலையாட்டினான் அர்ஜுன்.

அதனால் அதிர்ந்து போன தேன்மொழி “என்ன சொல்றீங்க.. ரொம்ப வருஷமா உங்க கூட ஃபிரண்டா இருந்தவர் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டாரா?

அவர் எப்படி சியா உங்க கையால இறந்ததற்கு காரணமா இருக்க முடியும்?” என்று நம்ப முடியாமல் கேட்க,

“பதவி ஆசை. யாருக்குமே கிடைக்காத சூப்பர் பவர் ஈஸியா அவனுக்கு கிடைக்கணும்னு ஆசை. நீ ரொம்ப நாளா எந்த ஒரு விஷயத்துக்காக காத்துட்டு இருக்கியோ,

அந்த சூப்பர் பவர் உனக்கு கிடைச்சா உன்னால இந்த உலகத்தையே கைக்குள்ள வச்சுக்க முடியும்னு தெரிஞ்சா,

என்ன பண்ணியாவது அதை உனக்கு சொந்தமாக்கிக்கணும்னு நினைப்பில..

அதே மாதிரி தான் அவனும் நினைச்சான்.

அங்க தான் என் பெஸ்ட் ஃபிரண்ட் என்னோட worst எனிமியா மாறினான்.” என்றான் அர்ஜூன்.

“நான் ரொம்ப சாதாரண பொண்ணு மிஸ்டர் அர்ஜுன். உங்கள மாதிரி எல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது.

நானெல்லாம் அந்த மாதிரி எந்த பெரிய விஷயத்துக்கும் ஆசைப்பட்டது இல்ல.

இனியும் ஆசைப்பட மாட்டேன். சோ இதுக்குள்ள என்ன எக்ஸாம்பிள்க்கு இழுக்காம என்ன நடந்துச்சுனு மட்டும் சொல்லுங்க.” என்று தேன்மொழி சொல்ல,

“நான் ஹை ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது, எங்க அப்பாவ கொல்ல வந்த ஒருத்தனை ‌ அவரை காப்பாத்துறதுக்காக நான் கொன்னதுனால உடனே நான் ஃபேமஸ் ஆயிட்டேன்.‌

அப்ப நான் ரொம்ப சின்ன பையனா இருந்தனாலயும், எங்க அப்பாவ காப்பாத்துறதுக்காக மட்டும்தான் நான் அப்படி பண்ணேன் என்றதாலையும்,

மத்தபடி என் இன்டென்ஷன்ல எந்த தப்பும் இல்லைன்னு அங்க இருந்த சிசிடிவி கேமரா புட்டேஜை வச்சு எங்க அப்பா ப்ரூவ் பண்ணிட்டதுனாலயும்,

என் மேல எந்த தப்பும் இல்லைன்னு ‌ கோர்ட்ல ஜட்ஜ்மெண்ட் வந்துருச்சு.

பட் அதுக்கப்புறம் என் கூட பழகிட்டு இருந்தவங்க, எனக்கு தெரிஞ்சவங்க, ஏன் சும்மா என்ன பாக்குறவங்க கூட ‌ என்ன டிஃபரண்டா பாக்க ஆரம்பிச்சாங்க.

அதுக்கு முன்னாடி என்ன பாசத்தோடையும், மரியாதையோடையும் பார்த்துட்டு இருந்தவங்க எல்லாரும் பயத்தோட பாத்தாங்க.‌

முதல்ல அது‌ எனக்கு வித்தியாசமா இருந்தாலும், போகப்போக அவங்களோட பயம் என் ஈகோவ சேட்டிஸ்ஃபை ‌ பண்ணதுனால எனக்கு அது ரொம்ப புடிச்சிருந்துச்சு.

சோ நானும் என் ஃபேமிலி அண்ட் என் க்ளோஸ் ஃபிரண்ட்ஸை தவிர மத்தவங்க எல்லார் கிட்டயும் வேணும்னே என்னை ஒரு திமிரான ஆளா காட்டிக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்.

அந்த வயசுல எனக்கு எதுவும் புரியல. எனக்கு அது புடிச்சிருந்துச்சு சோ ஒரு கெத்துக்காக செஞ்சேன்.‌

ஆனா என்னோட அந்த ஆட்டிடியூட் ‌ என்ன வேற ஒரு ‌ டிராக்ல கூட்டிட்டு போகும்னு நான் எதிர்பார்க்கல.

நான் ஹை ஸ்கூல் முடிக்கும்போது, என்ன திடீர்னு யாரோ நாலு பேர் வந்து கடத்திட்டு போய்ட்டாங்க.

அவங்க யாருன்னு எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது.

அவங்க என்கிட்ட சீக்ரெட் சொசைட்டியை பத்தி சொல்லி அதுல ஜாயின் பண்றதுக்கு எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கான்னு கேட்டாங்க.

அந்த சொசைட்டில இருக்கிறதுனால என்னென்ன கிடைக்கும்னு அவங்க சொன்னத கேட்கும்போது யாருக்கா இருந்தாலும்,

கண்டிப்பா அதுக்குள்ள போகணும்னு ஆசையா தான் இருக்கும்.

ஆனா எனக்கு அது எல்லாத்தையும் தாண்டி, நிஜமாவே அவங்க சொல்றது உண்மையா,

அப்படி இருந்தா அங்க என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்ன்னு ஒரு இன்ட்ரஸ்ட் மட்டும்தான் இருந்துச்சு.

சோ அப்பவே ஓகேன்னு சொல்லி ஜாயின் பண்ணிட்டேன்.

அதுக்கப்புறம் அவங்களும் என்ன எங்க கடத்தினாங்களோ அங்கயே கொண்டு போய் திரும்ப விட்டுட்டு கிளம்பி போயிட்டாங்க.

அதுக்கப்புறம் நான் யாரையும் பாக்கல.

ஆனா அந்த சொசைட்டி கூட சேர்ந்து எப்படி வொர்க் பண்றதுன்னு அப்பப்ப ஏதோ ஒரு விதத்துல எனக்கு இன்பர்மேஷன் மட்டும் கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு.

நானும் அத ஃபாலோ பண்ணி கொஞ்சம் கொஞ்சமா அந்த சொசைட்டியில டெவலப் ஆக ஆரம்பிச்சேன்.

பட் இத பத்தி இப்ப வரைக்கும் நானா யார் கிட்டயும் சொன்னது இல்ல.

சொல்லவும் கூடாது. எல்லா ரகசியத்தையும் சாகுற வரைக்கும் காப்பாத்தணும்.

அதுதான் அந்த சொசைட்டில இருக்குறதுக்கான முதல் தகுதியே..

இப்ப அதையும் மீறி உன்கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கேன்னா..

நீ எனக்கு எவ்ளோ இம்பார்டன்ட், நான் உன்னை எவ்ளோ நம்பரேன்னு நீ யோசிச்சு பார்க்கணும்.” என்றான் அர்ஜுன்.

‌ அவன் சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க ஏதோ சினிமாவில் வரும் கதையை கேட்பதைப்போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட,

“நிஜமாவே இவன் லைஃப்ல இதெல்லாம் நடந்திருக்கா?

இவங்க அப்பாவ காப்பாத்துறதுக்காக இருந்தாலும் சின்ன வயசுலயே இவன் ஒரு கொலை பண்ணி இருக்கான்.

அது இவன் வாழ்க்கையவே மாத்தி எங்கெங்கயோ கூட்டிட்டு போயிருக்கும் போல!” என்று நினைத்த தேன்மொழி அர்ஜுனை விசித்திரமாக பார்த்தாள்.

- மீண்டும் வருவாள் ‌💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.