சரவணன் சனாவிடம் பேசி முடித்து அவனுடைய வீட்டிற்கு வந்த பின், அவனின் மனது பாரமாக உணர விகாஷுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான். விகாஷ் உடனே ஃபோன் செய்யவும், “உனக்கு கிளாஸ் இருக்கும்ன்னு தான் நான் மெசேஜ் பண்ணேன்… நீ ஃப்ரீ ஆகிட்டே எனக்கு ஃபோன் பண்ணு” என்று சரவணன் கூற, “அது பரவால்ல சரவணன்… நீங்க ஏதாவது முக்கியமா இருந்தா மட்டும் தான் இப்படி பேசணும்னு சொல்லுவீங்க…. அதனால தான் நான் உடனே ஃபோன் பண்ணிட்டேன்… என்ன ஆச்சு??” என்று விகாஷ் கேட்டான்.
சரவணன் நடந்ததை கூறி, “எனக்கு சனா, விக்ரம் ரெண்டு பேரும் இப்படி இருக்குறது கஷ்டமா இருக்கு… ஆனா, விக்ரம் மனச விட்டு பேச நான் இருக்கேன்… ஆனா, சனா அப்படி யார் கிட்டயும் பேசவும் மாட்டேங்கறா… என்ன பண்றதுன்னு தெரியாம தான் உன்கிட்ட கேட்கலாம்னு உன்ன ஃபோன் பண்ண சொன்னேன்” என்று சரவணன் கூறினான்.
“பெரிய ஆச்சரியமே விக்ரம் கிட்ட அவ்வளவு க்ளோஸா பேசி இருக்கான்னு நீங்க சொல்றது தான்… சனா இது வரைக்கும் க்ளோஸ் ஆன ஆள் விக்ரம் தான், இதுவரைக்கும் அவ கொஞ்சம் ஃப்ரீயா பேசினா ஒரே ஆள் விக்ரம் மட்டும் தான்… சின்ன வயசுல இருந்து அப்பா அம்மாவோட கஷ்டம் எல்லாத்தையும் பார்த்து வளர்ந்ததுனால நல்லா படிக்கணும் ஏதாவது பண்ணனும் இதுவே தான் அவளுக்கு ஓடும்”.
“என்னை விட நிறைய பொறுப்பும் இருந்துது அவளுக்கு… என்னை விட ரெண்டு வயசு தான் பெரிய பொண்ணு ஆனா, அவ வயசுக்கு மீறி அப்பா அம்மா கஷ்டத்த புரிஞ்சு நடந்துப்பா… அதனாலயோ என்னவோ தெரியல காலேஜ் படிக்கும் போது கூட ரொம்ப சின்சியரா படிச்சா… லவ் அப்படி எல்லாம் எதுவுமே இல்ல அவளுக்கு…. ஃபிரண்டஸ் கூட இருக்காங்க ஆனா, ஒரு க்ளோஸ் ஃபிரண்ட் அப்படின்னு சொல்லிக்க அவளுக்கு ஆள் இல்ல தான் சரவணன்”.
“இப்ப நீங்க சொல்றதெல்லாம் கேட்கும் போது அவ கண்டிப்பா விக்ரம லவ் பண்றான்னு தான் நினைக்கிறேன், இல்லனா அவ இப்படி இருக்க மாட்டா…. அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் என்ன வேணுமோ பண்ணுவா கூட சுத்துவா எல்லாமே ஒரு லிமிட்லயே தான் வெச்சிருப்பா, அவ்வளவு ஏன் என் கிட்ட கூட எல்லாம் பேசுவா… ஆனா, அவளுடைய பர்சனல்னு வந்தா யார் கிட்டயும் அவ சொல்ல மாட்டா…. சின்ன வயசுல இருந்து அப்படித்தான் அவ….. ம்ம்… நான் வேணா பேசி பார்க்கவா??” என்று விகாஷ் கேட்டான்.
“இல்ல விகாஷ் வேண்டாம் நாங்க பார்த்துக்குறோம்…. எனக்கு அவளை எப்படி கையாள்றதுன்னு தான் தெரியல அதனால தான் உன்கிட்ட ஃபோன் பண்ண சொன்னேன்” என்று சரவணன் கூற, “இதுக்கு எதுவுமே பண்ண முடியாது…. அவளே சரியாகி வருவா…. எப்பவும் அப்படித்தான் ஆகும்… நாங்களும் விட்டுடுவோம்” என்று விகாஷ் கூறினான்.
“எனக்கு என்னன்னா அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே இது சரியாயிடும்னு தோணுது…. அதுக்கு அப்புறம் தான் பெரியவங்களோட சம்மதம்…. முதல்ல அவங்க ரெண்டு பேரும் பேசணும்” என்று சரவணன் கூற,
“அதுக்கு அவ தயாரானா கண்டிப்பா பேசுவா… இப்ப அவ மண்டைக்குள்ள ஆயிரம் ஓடும்… அது எல்லாம் ஆராய்ச்சி பண்ணி எது எல்லாருக்கும் சரின்னு தான் முடிவு பண்ணுவா… அவளுக்கு எது வேணுமோ அத விட அவள சுத்தி இருக்குறவங்களுக்காக தான் யோசிச்சு முடிவு பண்ணுவா… அதுகுள்ள விக்ரம பேச சொல்லுங்க இல்லேன்னா அவ கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அங்க வேலையை முடிச்சிட்டு வெளிய வந்திடனும்னு மட்டும் தான் நினைப்பா” என்று விகாஷ் கூறினான்.
“நீ சொல்றத பார்த்தா இனிமே அவளா விக்ரம் கிட்ட வந்து பேசுறது கஷ்டம் தான் போல… நான் விக்ரம சீக்கிரமா சனா கிட்ட பேச சொல்லுறேன்” என்று சரவணன் கூற, “அதுவும் இல்லாம கௌதம் வந்துருவான் இன்னும் கொஞ்ச நாள்ல அவனும் வந்துட்டான்னா அவளுக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்” என்று விகாஷ் கூறினான்.
“அப்படியா எப்ப வராங்க??” என்று சரவணன் கேட்க, “இந்த வாரம் கிளம்பிடுவான், அங்க வந்து அதுக்கப்புறம் வருவான்” என்று விகாஷ் கூறினான். “ம்ம்… சரி இதை கேட்க தான் பண்ணேன்… நீ சனாவை பத்தி யோசிக்காத நான் கண்டிப்பா பத்திரமா பார்த்துக்குறேன்” என்று சரவணன் உறுதி அளிக்க,
“அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…. எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆகுது நான் சாயந்திரம் வேணா வந்து பேசவா??” என்ற விகாஷ் கேட்க, “ரொம்ப சாரி நான் டைம் பார்க்காம உனக்கு மெசேஜ் பண்ணிட்டேன்” என்று சரவணன் கூறவும், “அதெல்லாம் பரவாயில்லை சரவணன், நான் வந்து பேசுறேன் பாய் குட் நைட்” என்று கூறி சென்றான் விகாஷ்.
சனந்தா பள்ளி வேலை முடித்துவிட்டு ஸ்ரீனிவாசனை அழைத்துக் கொண்டு கீழே ஆஃபீஸுக்கு சென்றாள். “என்னப்பா இந்த நேரத்துல வந்து இருக்கீங்க??” என்று சரவணன் கேட்க, “சனா தான் பா கூப்பிட்டா அதனால வந்தேன்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார். “ஒரு வேள வேலையை விட்டு போயிடுவாளோ??” என்று சரவணன் மற்றும் விக்ரம் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின.
“என்ன சனா என்ன வேணும் என்ன ஆச்சு??” என்று சரவணன் கேட்க, “ஒன்னும் இல்ல பசங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ் கரிக்குளம்ல இருக்கு அதனால அதை எப்படி பண்ணலாம்னு பேசலாம்னு தான் அங்கிள வர சொன்னேன்” என்று சனந்தா கூறினாள்.
சனந்தா அவ்வளவு நேரம் பள்ளியை பற்றியும் பள்ளி பாடத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதும் ஒரு நொடியும் விக்ரமை திரும்பி கூட பார்க்கவில்லை. விக்ரமுக்கு அது கோபத்தை ஏற்படுத்தியதை விட அவனுக்கு மிகவும் வலியை தான் கொடுத்தது.
சரவணன், சனந்தா மற்றும் ஸ்ரீனிவாசன் பள்ளியை பற்றி பேசிக் கொண்டிருக்க, “சரவணன் அண்ணா…. ஐயா… விக்ரம் அண்ணா…. எப்படி இருக்கீங்க??” என்று கார்த்திக் கூறிக் கொண்டே உள்ளே வந்தான். “ஹே கார்த்திக்!!! வாடா… என்ன எக்ஸாம் முடிஞ்சிருச்சா???” என்று சரவணன் கேட்க, “ஆமா அண்ணா” என்றான் கார்த்திக்.
கார்த்திக் சனந்தாவை பார்த்து, “வாலன்டியர் டீச்சர் தானே நீங்க…. நீங்க வந்த அன்னிக்கு பார்த்தது… அப்போ நீங்க மயக்கம் போட்டு விழுந்ததுனால உங்களை நான் அப்புறம் பார்க்கவே முடியலை.. பேசவும் முடியல…. என் பேரு கார்த்திக் பி.எஸ்.சி பிசிக்ஸ் ஃபைனல் இயர் எக்ஸாம் எழுதி முடிச்சிருக்கேன்” என்று கார்த்திக் கையை நீட்ட, “என் பேர் சனந்தா இங்க வாலன்டியர் டீச்சரா இருக்கேன்” என்று கையை நீட்டி கூறினாள்.
கார்த்திக் இன்னும் அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, “கார்த்திக் இங்க என்ன பண்ற வந்ததும்??” என்று விக்ரம் சத்தமாக கேட்கவும், சனந்தாவின் கையை விடுவித்துக் கொண்டு, “இப்ப தான் வந்தேன்… நான் வந்து உங்கள எல்லாரையும் பார்த்துட்டு அதுக்கப்புறம் வீட்டுக்கு போலாம்னு தான்” என்று கார்த்திக் கூறினான்.
“இதுக்கு அப்புறமா என்ன பண்றதா இருக்க கார்த்திக்” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “பி.ஜி படிக்கலாம்னு இருக்கேன் ஐயா…. அதுவரைக்கும் ஊர்ல இருக்கலாம்னு தான் வந்தேன்…. சீட் கிடைச்சதுக்கு அப்புறம் போகணும்” என்று கார்த்திக் கூறினான்.
“ஹப்பாடா!!! எங்களுக்கும் ஒரு ஆள் சேர்ந்தாப்புல இருக்கும்…. இப்பதான் இந்த பசங்களுக்கு எல்லாம் ஸ்ப்போர்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கோம்…. நீயும் வா எங்களுக்கு இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ்க்கு எல்லாம் ஹெல்ப் பண்ணு” என்று சரவணன் கூற,
“அவனே இப்ப தாண்டா வந்திருக்கான் அவன ஏன் தொந்தரவு பண்ற நீ” என்று விக்ரம் கூற, “அதெல்லாம் ஒன்னும் பரவால்ல நான் பண்றேன்… எனக்கு ஒன்னும் களைப்பு எல்லாம் இல்ல” என்று கார்த்திக் கூறினான்.
“விக்ரம் ஏன் அவனை கூப்பிட வேணாங்கிறான்…. கார்த்திக் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுறான்… என்ன நடக்குது??” என்று சரவணன் குழப்பத்தில் இருந்தான்.
“சனா நம்ம ஆஃபீஸ் பக்கத்திலேயே தான் இடம் இருக்கு…. அந்த இடத்துல வேணா நம்ம சின்ன சின்னதா ஆக்டிவிட்டீஸ் வைக்கலாம்… வேற எங்கேயுமே நமக்கு ஃபிளாட்டா இடம் கிடையாது அப்படியே இருந்தாலும் அங்கெல்லாம் இவ்வளவு இடம் இருக்காது” என்று சரவணன் கூற,
“சரி ஓகே சரவணன் அப்போ வாரத்துல ஒரு நாள் இதை பண்ணலாம்…. எனக்கு பசங்கள கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போறது அது எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணனும்” என்று சனந்தா கூறினாள்.
“இப்ப தான் நான் வந்துட்டேன்ல சனா நான் ஹெல்ப் பண்றேன் உங்களுக்கு” என்று கார்த்திக் கூறினான். “என்னது சனாவா இப்ப தான வந்தான்… அதுக்குள்ள சனான்னு கூப்பிடுறான்… என்ன நினைச்சிட்டு இருக்கான்” என்று விக்ரம் கோபத்தில் அவனுள் கொந்தளிக்க, “அவங்க எவ்வளவு பெரியவங்க தெரியுமா அவங்கள சனான்னு பேர் வெச்சு கூப்பிடுற??” என்று சரவணன் கூறினான்.
“அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே” என்று கார்த்திக் கூற, “அப்படி தான் பா இருப்பா… காலேஜ் முடிச்சுட்டு மேற்படிப்பும் படிச்சுட்டு வேலையும் செஞ்சுட்டு இருக்காங்க…. உன்ன விட எப்படியும் நாலு அஞ்சு வயசு ஆவது பெரிய பொண்ணு” என்று ஸ்ரீனிவாசன் கூற, “அப்படியா!!! அப்ப ரம்யா கூட சனான்னு தான சொல்லுவா” என்று முறையிட்டான் கார்த்திக்.
சனா அவனை கேள்விக்குறியாக பார்க்க, “ரம்யாவும் நானும் பக்கத்து வீடு, சித்தி பொண்ணு…. ரம்யா உங்களை பத்தி சொல்லி இருக்கா…. நீங்க இங்க வந்த முதல் நாள் உங்கள பத்தி சொன்னது ரம்யா தான்…. அவளும் சனான்னு தானே கூப்பிடுற அதனால நானும் அப்படி கூப்பிட்டேன்” என்று கார்த்திக் கூறவும், “பரவால்ல உங்களுக்கு எப்படி வசதியா இருக்கோ அப்படியே கூப்பிடுங்க…. பேர் வெச்சு கூப்பிடுறதுல எதும் தப்பில்லை” என்று சனா புன்னகையுடன் கூறினாள்.
“அவன் கிட்ட மட்டும் பரவால்லன்றா என்கிட்ட மட்டும் தான் பேச மாட்டேங்குறா என்ன நடக்குது இங்க??” என்று விக்ரம் கோபத்தில் கைகளை பிசைந்து கொண்டு இருந்தான். இதை கவனித்த சரவணன், “சரி நீ என்ன பண்ற லக்கேஜ் எல்லாம் வெச்சுட்டு நாளிலிருந்து வா…. வந்து ஹெல்ப் பண்ணு சரியா… இப்ப போய் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சரவணன் கூறினான்.
“சரிப்பா நாங்களும் கிளம்புறோம் அவ்வளவு தானே சனா வேற ஏதாவது பேசணுமா??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “இல்ல அங்கிள் அவ்வளவு தான் நம்ம கிளம்பலாம்” என்று சனா கூறவும், “ஓகே நாங்க மூணு பேரும் கிளம்புறோம்” என்று கார்த்திக் கூறினான்.
“என்னடா நடக்குது இங்க… அவன் என்னடா அப்படி பேசிட்டு போறான்… இவளும் அமைதியா இருக்கா” என்று கோபத்தில் விக்ரம் பேச,
“கார்த்திக் என்ன பேசினான் சொல்லு…. அவன் ஒன்னும் பேசல சரியா…. நீ ஏதாவது குழப்பத்துல இருக்காத…. அதுவும் இல்லாம நீ அவ்ளோ கோவப்பட்டாலும் சரி, அபி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டே போனாலும் சரி சனா இப்படித் தானே உங்க கிட்டயும் இருந்தா… அவ எல்லார் கிட்டயும் ஒரே மாதிரி தான் பழகுறா… அதனால கார்த்தி கிட்ட மட்டும் தனியா ஒன்னும் புதுசா அவ பழகல அத ஞாபகம் வெச்சுக்கோ…. இந்த கோபத்தை எடுத்துட்டு போய் திருப்பி அவ மேல காட்டாத… அவளே பாவம் நொந்து போய் இருக்கா” என்று சரவணன் கூறவும், விக்ரம் அமைதியாகி விட்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.