சனந்தா அவளுடைய அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டு அவளையும் மீறி கண்களில் கண்ணீருடன் முத்து பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா என் பொண்ணுக்கு ஏதேதோ வாங்கிட்டு வந்து கொடுக்கிற…. அவகிட்ட இருக்குற பொருளை எடுக்க தான் இதெல்லாம் பண்ற மாதிரி தெரியுது??” என்று முத்து சனந்தாவிடம் பேச, சனந்தா குழப்பத்தில் இருக்க,
“இங்க பாருமா நீ என்ன படிச்சிருக்க ஏது படிச்சிருக்க இந்த ஊருக்கு வந்து ஏன் இதெல்லாம் பண்றன்னு எனக்கு அதுக்கெல்லாம் பதில் தேவை இல்லை… ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் தான் என் பொண்ணு எப்பயும் சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் இருக்கணும் அத தான் நான் எப்பயும் யோசிக்கிறது…. அதுக்கான வாழ்க்கையை தான் நான் அவளுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்….. அப்படி இருக்கும் போது அந்த வாழ்க்கைல ஏதாவது ஒரு குளறுபடி நடக்குதுன்னா அத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது…. அதுவும் அந்த குளறுபடி உன்னால நடக்குதுன்னா அப்போ நான் உன்கிட்ட தான வந்து பேச முடியும்” என்று முத்து கூறினார்.
“சார் நீங்க ஏதோ தப்பா….” என்று சனந்தா பேசுவதற்குள், “நான் சரியா தான் புரிஞ்சுகிட்டு இருக்கேன்…. நீயும் அதை சரியா புரிஞ்சுகிட்டு நடந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று முத்து கராராக கூறினார்.
“இப்ப பேசுனத நீ யார் கிட்ட வேணாலும் சொல்லலாம்… ஆனா, அப்படி சொன்னன்னா உன்ன தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க…. ஏன்னா அந்த இடத்தில தான் நீ இருக்க புரிஞ்சுக்கோ அத…. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு அதனால தான் உன்கிட்ட இவ்ளோ பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்” என்று முத்து கூறவும், சனந்தா எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டாள்.
“உனக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…. இனிமே ஏதாவது கேட்குற மாதிரி நடந்துக்காத” என்று முத்து சனந்தாவிடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுது விக்ரம் வந்து சேர்ந்தான்.
“எனக்கு ஏன் இவ்வளவு அழுகையா வருது….. எனக்கு அவ்ளோ பிடிக்குமா அவர…. வந்த நாளிலிருந்து அவர் கிட்ட பெருசா பேசலனாலும் ஏதோ ஒரு ஓரத்தில அவர் மேல சாஃப்ட் கார்னர் இருந்துட்டே தான் இருந்துது…. அதுவும் இல்லாம அவரை எங்கேயோ இதுக்கு முன்னாடியே பரிச்சயமான ஒரு உணர்வு எனக்கு இருந்துகிட்டே தான் இருக்கு….. எல்லாத்தையும் தாண்டி அவர் என்கிட்ட அன்பா ரெண்டு வார்த்தை பேசினா நான் அவர் கிட்ட நடந்துக்குற விதமே வேற மாதிரி இருக்கு…. அப்படி நான் யார் கிட்டயும் நடந்துகிட்டதே இல்ல…. அவ்ளோ உரிமையோட நானும் பேசுறேன்…. அப்போ எனக்கு அவர பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்…..”
“ஆனா, அவருக்கு என்னை பிடிக்குமா??? இல்லையா???.... இல்ல சும்மா என்கிட்ட பேசணும் அப்படின்றதுக்காக பேசுனாரா….. ச்சே…. அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை…. அவர் பேசும் போது அவர் சைடுல இருந்து நான் உண்மையான ஃபீலிங்ஸ் தான் உணர்ந்து இருக்கேன்…. இருந்தும் இங்க இருக்கிற நிலைமை வேற தான் சனா…. இது செட் ஆகுமான்னு தெரியாது”.
“ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் சின்ன வயசுல இருந்து வளர்றாங்க….. அதனால அவர் எனக்கு கொடுக்கிற இம்போர்ட்டன்ஸ விட எப்படியும் கவிதாக்கு தான் அதிகமா கொடுப்பாரு…. அவங்க வீட்டுல ஒருத்தியாவே தானே கவிதா இருக்காங்க… நான் இப்ப தான வந்திருக்கேன்….. நான் எதிலுமே தலையிடாம தூரமா இருக்குறது தான் சரி” என்று சனந்தா அழுது கொண்டே அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டாள்.
இருப்பினும் அழுகை என்னமோ நின்ற பாடில்லை. “ஐயோ சனா!!!! அவரை நீ கொஞ்ச நாளா தான் பார்த்துட்டு இருக்க…. இங்க இன்னும் நாலு மாசம் தான் இருப்ப…. அதுக்கு அப்புறமா அவர் யாரோ நீ யாரோ தானே… அதனால இத உன்னால கடந்து வந்துற முடியும் சனா…. தைரியமா இரு” என்று சனந்தா அவளுக்கு தைரியத்தை கூறிக் கொண்டாலும் கண்ணீர் அவள் பேச்சை கேட்கவில்லை. அவள் இரு கைகளையும் அவள் இதயத்திடம் வைத்து கண்களை இறுக்கி மூடி அழுது தீர்த்தாள்.
சனந்தா முடிந்த அளவுக்கு விக்ரமின் கண்ணில் படாமல் இருப்பதற்காக காலையில சீக்கிரமாக பள்ளிக்கூடத்திற்கு செல்வது, வள்ளி உணவருந்த அழைத்தாலும் ஏதாவது ஒரு காரணம் கூறுவது அதையும் மீறி அவர்களுடன் உணவருந்த நேரிட்டாலும் சாப்பிட்டு முடித்த உடனே ஃபோன் பேசுவதாக ஏதோ காரணத்தை கூறி விக்ரமை பெறும்பாலும் தவிர்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
விக்ரமுக்கு அவளது செய்கை அவளது நடவடிக்கை அனைத்தும் பெரும் வலியை ஏற்படுத்தியது. அவளிடம் பேச எண்ணினாலும் ஏதோ ஒரு காரணத்தை கூறிக் கொண்டே தான் இருந்தாள். இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் எப்படியும் சனந்தா விக்ரமை தவிர்க்க முயற்சி செய்து கொண்டு தான் இருந்தாள். ஒரு சில நேரம் எதிர்கொள்ள நேரிட்டாலும் அவள் முகத்தில் எதையும் காட்டாமல் இயல்பாக இருக்கவே முயற்சி செய்தாள் சனந்தா.
“நான் தான் சொன்னேன்ல மச்சான் அன்னிலிருந்து இப்ப வரைக்கும் அவ என்கிட்ட பேசக்கூட இல்ல…. அவ்ளோ மெசேஜ் பண்ணி இருக்கேன் ஒன்னுதுக்கு கூட ரிப்ளையே வரல…. ஃபோன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கற…. நான் நேர்ல போய் நிக்கிறேன், பேச ட்ரை பண்ணாலும் வேற ஏதாவது ஒன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கா”.
“அன்னிக்கு காலைல அப்படித் தான் அவ வீட்டுக்குள்ள இருந்து வெளியில வரா, நான் குளிச்சிட்டு உள்ள போறேன் அவ பேசனும்னு தான் அவளை வழி மறைச்சு நிக்குறேன், அப்போ ஆச்சும் தள்ளி போங்கனு சொல்லுவான்னு நினைச்சேன்…. ஆனா அவ முன்வாசல் வழியா சுத்திட்டு போயிட்டா…எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு…. ஏன் இப்படி பண்றான்னே தெரியல…. இது கூட பரவால்ல இன்னொரு வாட்டி பேச போனப்போ அப்பா வந்ததும் “லைட் எல்லாம் போட்டு இருந்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சார்னு” சொல்றா டா….. சம்மந்தமே இல்லாமே ஏதோ பேசிட்டு போயிடுறா” என்று விக்ரம் புலம்பி கொண்டு இருந்தான்.
“நீ சொன்ன மாதிரி அவங்க அப்பா ஏதாவது பேசி இருப்பார் போல டா…. நான் சனா கிட்ட பேசி பார்க்கிறேன் அவ ஏதாவது சொன்னா என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்…. ஆனா, மச்சான் உனக்காவது நீ வந்து பொலம்ப நான் இருக்கேன்…. ஆனா, அவளுக்கு அப்படி யாருமே இல்ல…. நீ உன்னோட கஷ்டத்த என்கிட்ட சொல்ற நான் காது கொடுத்தாவது கேட்கிறேன்…. அவ சிரிச்சாலும் அழுதாலும் சோகமா இருந்தாலும் எல்லாமே அவளுக்குள்ள தான் இருக்கும்….. யாராவது ஒருத்தர் கிட்ட சொல்லி அழுது தீர்க்க கூட அவளுக்கு ஆளே இல்ல மச்சான்” என்று சரவணன் கூறினான்.
“ஆமா மச்சான்….. அது என்னமோ உண்மை தான்… அவர் என்ன பேசினாருன்னு தெரில…. ஆனா, அதுல அவ கண்டிப்பா காயப்பட்டு இருக்கான்னு மட்டும் தெரியுது…. அவளால எதுவும் வெளியில கூட சொல்ல முடியலல நான் அதை பத்தி யோசிக்கவே இல்லடா… என்கிட்ட பேசல, அவளுக்கு என்ன ஆச்சு, என்னை பத்தி தான் நிறைய யோசிச்சிட்டேன்….. நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியுது சரவணா….. அவ அங்க என்ன பண்ணுவா பாவம்ல” என்று விக்ரம் கூறவும்,
“ஆமா டா…. ஒரு சின்ன விஷயம் கூட ஷேர் பண்ணிப்போம் நம்ம…. அவ என்ன தான் பண்ணுறாளோ…. சரி நான் அவகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று சரவணன் கூறினான்.
ஹலோ!!! என்று சரவணன் பேச, “சொல்லுங்க சரவணன்” என்று சனந்தா பேசவும், “சனா உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே” என்று சரவணன் கூற, “எங்கே விக்ரமை பற்றி பேசுவானோ” என்று சனந்தா யோசித்து, “ஏதாவது முக்கியமான விஷயமா இல்ல ஃபோன்லயே பேசலாமா??” என்று சனந்தா கூற, “நேர்ல பேசினா நம்ம சும்மா நடந்துட்டே பேசுவோம்ல அதுக்காக தான்” என்று சரவணன் கூறினான்.
“உங்க கூட மட்டும் தானே?” என்று சனந்தா கேட்கவும், “ஏன் வேற யாராவது கூட வருவாங்கனு எதிர்பார்க்குறியா??”என்று சரவணன் கேட்க, “யாரும் இல்ல…. சரி வரேன் இருங்க” என்று சனந்தா கூறி ஃபோனை வைத்தாள்.
சரவணன் அவனுடைய வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருக்க, “சொல்லுங்க சரவணன்” என்று சனந்தா பேசவும், “என்ன இப்பல்லாம் ஆளையே பார்க்கவே முடியல…. ஒரே பிசியா இருக்கியே??” என்று சரவணன் கேட்க,
“இல்ல… அது….. பசங்களுக்கு கிளாஸ் எல்லாம் முடிச்சிட்டு வந்த அப்புறம் மதியத்துக்கு மேல இங்க இருக்குறவங்க கூட எல்லாம் சேர்ந்து ஆயில் ரெடி பண்றது டீ பாக்கெட் ரெடி பண்றதுன்னு அதுக்காக போய்கிட்டு இருக்கேன்…. ஈவினிங் வந்ததும் பசிக்குது…. அதான் நீங்க வரர்துக்குள்ளயே சாப்பிட்டு தூங்கிடுறேன் டயர்டா இருக்கிறதுனால” என்று சனந்தா பொய்யை கோர்வையாக கூறினாள்.
“ஓ!!! அப்படியா அது மட்டும் தான் காரணமா??” என்று சரவணன் கேட்க, சனந்தா, ஆமாம் என்பது போல் தலையை அசைத்தாள்.
“சனா!! நான் சுத்தி வளைக்க விரும்பல…. நேராவே உன்கிட்ட பேசுறேன்… உனக்கும் விக்ரமுக்கும் நடுவுல என்ன நடந்துதுன்னு எனக்கு தெரியல… எனக்கு மட்டும் இல்ல விக்ரமுக்கும் தெரியல… ஆனா, ஒன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் நீயும் சந்தோஷமா இல்ல அவனும் சந்தோஷமா இல்ல”.
“நீ ஊருக்கு போயிட்டு இங்க வந்தப்போ எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருந்தீங்க நீங்க ரெண்டு பேரும்…. இப்ப இப்படி இருக்குறதுக்கு என்ன காரணம்னு உனக்கு தெரியும் சனா… ரெண்டு பேரும் பேசினாலே சரி ஆகும்னு எனக்கு தோணுது”.
“இப்ப கூட பாரு நான் அவ்வளவு பேசுறேன் நீ அழுதுட்டு மட்டும் தான் இருக்க… உனக்குள்ளேயே வெச்சிட்டு கஷ்ட பட்டுட்டே இருக்க போறியா… கொஞ்சம் யோசி சனா… எனக்கே நீ இப்படி இருக்குறத பார்க்க கஷ்டமா இருக்குன்னா அப்ப விக்ரம் நிலைமையை யோசி… இது எல்லாதுக்கும் மேல நீ யார் கிட்ட ஆச்சும் பேசு… உன்னோட உணர்வ ஷேர் பண்ணு அப்ப தான் நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடியும் சனா”.
“ம்ம்… நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்… இதுக்கு அப்புறம் நீ என்ன முடிவு பண்ணுறியோ உன் இஷ்டம்” என்று சரவணன் அவனின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான். சரவணன் விக்ரம் என்று பெயரை எடுத்தது முதல் பேசி முடிக்கும் வரை அழுதுக் கொண்டே தான் இருந்தாள் சனந்தா.
சரவணன் சனந்தாவிடம் பேசி முடித்து அவனுடைய வீட்டிற்கு வந்த பின், அவனின் மனது பாரமாக உணர விகாஷுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான்.
விகாஷ் உடனே ஃபோன் செய்யவும், “உனக்கு கிளாஸ் இருக்கும்ன்னு தான் நான் மெசேஜ் பண்ணேன்… நீ ஃப்ரீ ஆகிட்டே எனக்கு ஃபோன் பண்ணு” என்று சரவணன் கூற, “அது பரவால்ல சரவணன்… நீங்க ஏதாவது முக்கியமா இருந்தா மட்டும் தான் இப்படி பேசணும்னு சொல்லுவீங்க…. அதனால தான் நான் உடனே ஃபோன் பண்ணிட்டேன்… என்ன ஆச்சு??” என்று விகாஷ் கேட்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.