பாகம் -39
என்ன நானா?
கொள்ள பார்த்தேன்னா?
ஆமா நீங்க தான் நீங்களே தான்
என் கழுத்தை நெரிச்சு கொல்ல பாத்தீங்க.
என்னடி உலர
யாரு நான் உலறுரேனா?
சரி வாங்க நேத்து என்ன நடந்துச்சுன்னு வீட்ல இருக்க எல்லாத்தையும் கேட்போம்.
என்ன சொல்றாங்கன்னு பாருங்க!
அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
நிஜத்துக்கும் நினைவிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவித்தான் மாறன்.
அப்பொழுதும் நங்கை விடாது அவன் கையைப் பிடித்து
இதோ பாருங்க இந்த காயம் உங்களுக்கு எப்படி வந்துச்சு?
நேத்து நீங்க ஒரு அரக்கனை போல ஆக்ரோஷமா நடந்துக்கிட்டிங்க
அசோக் சார் மட்டும் வரலைன்னா என் நிலைமை என்ன ஆயிருக்கும்.
மீண்டும் மீண்டும் மாறன் அதை யோசிக்க அவன் தலை வெடிப்பது போல உணர்ந்தான்.
ஒரு சாதாரண போட்டோ பிரேம் ஒடஞ்சதுக்காக என்ன கொல்லர அளவுக்கு போயிட்டீங்க.
உங்க கூட நான் எந்த நம்பிக்கையில வாழ முடியும்.
நாளைக்கு இதைவிட ஒரு பெரிய விஷயம் நடக்கலாம் .அதுக்கும் நீங்க இது மாதிரி என்ன கொள்ள வருவீங்க.
அதனால நான் இந்த வீட்டை விட்டு போறேன்.
தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க.
என்றபடி அறைய விட்டு செல்ல
ஏய் நில்லுடி
நீ பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிட்டு போறே
அப்படி எல்லாம் என்ன விட்டு உன்னால ஈஸியா போக முடியாது.
கோபத்தின் உச்ச நிலை ஆரம்பமாகிவிட்டது மாறனுக்கு.

நேத்து என்ன நடந்துச்சு ன்னு ஒன்னு விடாம சொல்லுடி.
சொல்லனுமா சொல்றேன் சார்.
நல்லா கேட்டுக்கோங்க.
நேத்து உங்க அம்மாவோட ஃபோட்டோ கை தவற கீழ போட்டுட்டேன்.
அதுக்கு என்ன கொல்ல பாத்தீங்க எத்தனையோ வாட்டி நான் தெரியாமல் செஞ்சுட்டேன் மன்னிச்சுக்கோங்கன்னு கேட்டேன்
ஆனாலும் நீங்க கொஞ்சம் கூட கருணை இல்லாம என் கழுத்தை நெரிச்சு கொல்ல பார்த்தீங்க என்று
தன் கழுத்தில் இருந்து துப்பட்டாவை எடுத்து பாருங்க எப்படி உங்க கை அச்சு பதிஞ்சு இருக்குன்னு.
காட்ட
இதை பார்த்த மாறனுக்கு நினைவும் நிஜமும் மாறி மாறி குழப்பத்தை கொடுத்தது.
அந்த ரிப்போர்ட்டை எடுத்து நீட்டி
இத பாருங்க இதுல என்ன போட்டு இருக்கு இது உங்க ரிப்போர்ட் தானே.
உங்களுக்கு மனநல பிரச்சன இருக்கு அப்படின்னு ஏன் என்கிட்ட இருந்து மறைச்சீங்க.
அவனுக்கும் அப்பொழுது தான் சிறுக சிறுக நினைவு வந்தது.
ஆமாம் மாறன் மனநிலை பாதிக்கப்பட்டவன் தான்.
அதை அவன் மறந்தே விட்ட ஒன்று.
அது அவனுக்கு நினைவு வரக்கூடாது என்று தான் இத்தனை முயற்சியும் செய்து கொண்டிருந்தான் ஷியாம்.
ஆனால் எல்லாவற்றையும் ஒற்றை நொடியில் பாலாக்கி விட்டாள் நங்கை.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவனை
இப்ப சொல்லுங்க நான் எப்படி உங்க கூட இருக்கிறது.
அவன் அமைதி காத்தான்.
ஏன் பேசாம நிக்கிறீங்க.
யாரும் இல்லாத அனாத தானே அப்படின்னு நீங்கலும் கூட என்னை பயன்படுத்திக்க தான் நினைச்சு இருக்கீங்க.
அவள் வார்த்தைகளில் அதிர்ந்தவன்.
திகைத்துப் போய் நின்றான்.
உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கறத என்கிட்ட மறச்சு என்னை கட்டாயப்படுத்தி தாலி கட்டி கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க.
இது உங்களுக்கு சுயநலமா தெரியலையா?
உங்க காதல் கத்திரிக்காய் எல்லாம் பொய்.
இது உங்க சுயநலம்.
மாறனால் அத்தனை சொல்லையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மெல்ல மெல்ல கண்கள் மங்க ஆரம்பித்தது.
இப்ப சொல்லுங்க எந்த பொண்ணு உங்க கூட வாழ்வா.
மௌனம்.
உங்களால சொல்ல முடியல அப்போ என்ன போக விடுங்க.
அடுத்த நொடி நங்கையின் கையை தளர்த்தினான்.
அவள் மாறனை விட்டு இரண்டடி எடுத்து வைக்க தொப்பென்று விழுந்தான் மாறன்.
திரும்பி பார்த்த நங்கைக்கு அதிர்ச்சி
ஐயோ மாறன் சார்.
என்று ஓடிவந்து அவனை தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள் .
மாறன் சார் உங்களுக்கு என்ன ஆச்சு தயவு செஞ்சு எந்திரிங்க.
எனக்கு பயமா இருக்கு.
என்று அழ அவனுக்கு பேச்சு மூச்சு இல்லை.
ஐயோ சரண்யா மா கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்!
என்று அழற சத்தம் கேட்டு ஓடி வந்தார் சரண்யா.
என்ன நங்க என்ன ஆச்சு ?
இங்க பாருங்க மாறன் சாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.
என்று கூற அங்கே வந்தார் அசோக் மற்றும் ஷியாம்.
ஷாம் மாறனை கண்டவுடன் தன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். அசோக்கும் ஷயாம்முடன் போக
நங்கை மற்றும் சரண்யா இருவரும் அவர்கள் பின்னே ஓடினார்கள்.
மாறனை காரில் கிடத்திய ஷ்யாம் டிரைவர் சீட்டில் அமர பக்கத்து சீட்டில் அசோக்கும் அமர்ந்தார்.
நங்கை பின் இருக்கையில் அமர்ந்தவள் மாறனின் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
சரண்யா நீங்க வீட்டை பார்த்துக்கோங்க நாங்க போறோம்.
என்றால் அசோக்.
சரிங்க சார்.
கார் விரைந்தது மருத்துவமனைக்கு.
அசோக் வரும் வழியிலேயே கிருஷ்ணாவிற்கு அழைத்து நடந்ததை கூறி விட மருத்துவமனை வாயிலில் மாறனுக்காக அனைத்தும் ரெடியாக இருந்தது.
மருத்துவமனையை அடைந்ததும் மாறனை தூக்கிய ஷாம் ஸ்ட்ரக்சர்ரில் கிடத்த அங்கு கூடியிருந்த மருத்துவ பணியாளர்கள் எமர்ஜென்சி வார்டுக்குள் அழைத்துச் சென்றனர் .
2மருத்துவர்கள் மற்றும் அவருடன் கிருஷ்ணாவும் அந்த எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்.
வெளியே ஏதும் புரியாமல் திகைத்து கண்கள் விரிய வெளியே காத்திருந்தாள் நங்கை.
சில மணி நேரங்களுக்குப் பிறகு டாக்டர் கிருஷ்ணா வெளியே வர.
அசோக் என்ன நடந்துச்சு பழசு எல்லாம் எதையும் ஞாபகப்படுத்தாதீங்கன்னு எத்தன முறை உங்களுக்கு சொல்லி இருக்கேன் ஆனா இவ்வளவு கேர்லஸா மாறன் விஷயத்துல நீங்க எல்லாரும் பிகேவ் பண்றீங்க.
இல்ல கிருஷ்ணன் நாங்க யாரும் அவனுக்கு எதையும் சொல்லல.
அப்புறம் எப்படி அவனுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்திருக்கு.
பழைய நினைவுகளுக்கும் புதிய நினைவுகளுக்கும் இடையில நடந்த போராட்டத்தில் மனசும் மூளையும் சண்டை போட்டு கடைசியில இப்படி மாறனுக்கு அன்கான்சென்ஸ் மைண்டுக்கு கொண்டு போயிடுச்சு.
இப்ப ஏதும் பிரச்சனையா டாக்டர் என்று ஷியாம் வினவ.
எஸ்
ஆமாம் இப்ப மாறன் அண் கான்ஷியன்ஸ் மைண்டுக்குள்ள போயிட்டாரு.
அப்படின்னா.
உண்மைக்கும் நினைவுகளுக்குமான வித்தியாசம் தெரியாம மூளை தன்னோட செயல்பாட்ட யோசிக்கும் திறனை நிறுத்தி இருக்கு.
இது எப்ப சரியாகும்.
சரியாகலாம் சரி ஆகாமலும் போகணும்
🥺
இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண் விழிச்சிட்டா எந்த பிரச்சினையும் இல்ல.
ஆனா கண் முழிக்காமல் போனா அவரு இதே நிலையில கோமாவுக்கு போயிடுவாரு.
அதுக்கப்புறம்.
சொல்லுங்க டாக்டர்
அதுக்கப்புறம் அவரின் கான்ஷியன்ஸ்க்கு வருது ரொம்ப ரேர்.
நங்கை இவை அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்க.
இங்க என்ன நடக்குது.
யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்க.
மாறன் சாருக்கு என்ன பிரச்சனை.
என்றபடி அவள் கையில் இருந்த அந்த பழைய ரிப்போர்ட்டை எடுத்து ஷாமிடம் நீட்டினாள்.
என்ன இது?
இப்பயாச்சும் உண்மைய சொல்லுங்க ஷ்யாம் அண்ணா.
இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது என்று எண்ணி
மாறனுக்கு போஸ்ட் -ட்ருமாட்ரிக் ஸ்ட்ரெஸ் டிசோர்டர்.(Post traumatic disorder)
அப்படின்னா???
அது ஒரு மன ரீதியான பிரச்சனை.
மனசளவுல அதிர்ச்சி அதற்குப் பிறகான மன அழுத்த குறைபாடு இது ஒரு நபர் பயங்கரமான அல்லது அதிர்ச்சியான சம்பவத்தை அவங்க வாழ்க்கையில நடக்கும் பொழுதும் அல்லது பார்க்கும்பொழுது ஏற்படும்.
😳
அப்படித்தான் நம்ம மாறனுக்கும்.
அவன் லைஃப்ல நடந்த இன்சிடென்ட் அவன இப்படி மாத்திடுச்சு.
என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல அண்ணா.
உனக்கு புரியிற மாதிரி சொல்றேன்.
அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)
அதிர்ச்சி தரும் நிகழ்வு சந்திக்கிற ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு மன நல நிலை குறைபாடு தான் நம்ம மாறனுக்கு ஏற்பட்டிருக்கு.
அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்றைச் சந்திக்கும் போது எதிர்மறை உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நினைவுகளை எதிர்கொள்வார்கள்.
இந்த எதிர்மறை எதிர்வினைகள் அவ்வாறு விலகாதபோது, ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும்போது, அவர்களுக்கு PTSD பிரச்சனை ஏற்படும்.
சரி ஷ்யாம் அண்ணா அது எதனால் ஒரு மனிதருக்கு ஏற்படும்.
எடுத்துக்காட்டுக்காக
மரணம்
தீவிரக் காயம்
பாலியல் வன்முறை இப்படி பட்ட வன்முறையால பாதிக்கப்படும் போதும் மனசு காயப்படுத்துற மாதிரி விஷயங்கள் நம்ம லைஃப்ல நடக்கும்போது இது மாதிரி பிரச்சனை ஏற்படும்.
அப்படின்னா மாறன் சாருக்கும் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கா. என்று எண்ணினால் நங்கை.
அந்த நிகழ்வைப்பற்றிய தேவையில்லாத நினைவுகள் திரும்பத் திரும்ப வரும்.
அப்போ அவங்க அதிகமா கோபப்படுவாங்க தன் சுயத்தை இழப்பாங்க.
ஆனா இது எதுவும் அவங்களுக்கு ஞாபகத்துல இருக்காது.
அந்த இன்சிடெண்ட்ல அவங்களுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி வரும் ஆனா அது நிஜத்துல நடந்தது என்று அவங்களுக்கு தெரியாது.
அதிர்ச்சி தரும் அந்த நிகழ்வு மீண்டும் நடப்பதுபோல் உணர்வாங்க.
அப்படி இல்லைனா (பழைய நினைவில் மூழ்கிருவாங்க). சில
சில சமயத்துல மாறனை சுற்றி என்ன நடக்குது என்பது மாறனுக்கு தெரியாமல்கூட இருக்கலாம்.
நங்கை அதிர்ந்தாள்.
மாறனின் வாழ்வில் என்ன அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது என்பதை அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம் அதுவரை இணைந்திருங்கள்
தொடரும்....
ஷாஹிபி. Writer ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.