பாகம் - 38

மாறனின் தந்தை அசோக்
சொன்னதையே நினைத்தபடி அறைக்கு வந்தாள் நங்கை.

அங்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பச்சை குழந்தை தூயில் கொள்வதை போல உறங்கி கொண்டிருந்த மாறன் அருகில் வந்தாள் நங்கை.

அவன் முகம் பார்த்து பரிதாபப்பட்டாள்.

நீங்க யாரு?

உங்களுக்கு என்ன பிரச்சனை?

ஏன் என்னை கல்யாணம் பண்ணினீங்க.

இன்னைக்கு ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டீங்க.

எனக்கு எதுவும் தெரியாது!

ஆனா உங்களுக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியல மனசெல்லாம் பதஷ்டமா இருக்கு.

இது ஏன்னு எனக்கு தெரியல சார்.

என்றவள்

ஐயோ மறந்துட்டேன்.

மாறன் சார் மாறன் சார் என்று தூக்கத்தில் இருந்து எழுப்பியவள் குரல் கேட்டு மெல்ல கண்ணை திறந்தவன்.

என்னாடி பொண்டாட்டி தூங்க விடாம தொல்லை பண்றடி.

மாத்திரை போடாம தூங்குறீங்க? சார்

இந்தாங்க மாத்திரையை போடுங்க.

வேண்டாம் போடி.

சின்ன பிள்ளை போல அடம் பிடிக்காதீங்க சார் எழுந்திருங்க.

என்றதும் வளைந்து நெளிந்து எழுந்தான் மாறன்.

வாயில் மாத்திரையை போட்டு
தண்ணீரையும் ஊற்றி விட்டு அவள் விலகியதும்.

இப்ப படுத்துக்கோங்க சார் என்றவளை கண்ணில் காதல் பொங்க பார்த்தான் மாறன்.

மாறன் படுத்தவுடன் போர்வையை கழுத்து வரை போர்த்தி விட்டவள் அவனை விட்டு திரும்பி விலக

கையைப் பிடித்தான் மாறன்.

அடுத்த நொடி அதிர்ச்சியில் நங்கை
மதியம் நடந்தது நினைவுக்கு வர உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.

மெல்ல திரும்பினாள்.

மாறனும் மாத்திரை உண்டதால்பாதிமயக்க நிலையில் இருந்தான்.

மயக்கத்தில் என்னை விட்டு போகமாட்டியடி என்று ஏக்கத்தோடு கேட்டபடியே தூங்கிப் போனான் மாறன்.

அவனைப் பார்த்தவளுக்கு மனம் பாரமாகிவிட்டது.

கண்கள் கலங்க அவன் கையை தன் கையில் இருந்து பிரித்தால் நங்கை.

என்னை மன்னிச்சிடுங்க மாறன் சார்.

என்னால் உங்கள் கூட சேர்ந்து வாழ முடியாது.

எனக்கு அதுக்கு கொடுத்து வைக்கல என்றபடி தனக்கு என்று ஒதுக்கப்பட்ட படுக்கையின் மறுபகுதியில் படுத்துக்கொண்டு மாறன் புறம் திரும்பிப் படுத்தவள் தன்னவனே பார்த்தபடி விழி வெள்ளம் கண்களில் ததும்பி நிற்க.

அப்படியே உறங்கிப் போனால் பேதை.

உறக்கத்தில் கண்கள் அறியாமல் இமை என்னும் சிப்பி மூடி பாதுகாத்த ஒன்றை விழி நீர் முத்தை உதித்தது நங்கையின் கண்கள்.

இவ்வாறு அன்று இரவும் மெல்ல கடந்து கொண்டிருக்க.

இவர்களின் காதல் கதைக்கு சாட்சியாய் நிலா மகள் மட்டும் இவர்களை எண்ணி தேய்ந்து கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் அதிகாலை வழக்கம் போல எழுந்தவன் கண் விழித்துப் பார்க்க நங்கை அவன் அருகில் இல்லை.

மாறனுக்கு நங்கை எழுந்தவுடன் அவள் முகம் ஒரு முறையேனும் பார்த்தாக வேண்டும்.

நங்க நங்க என்று அழைத்தபடியே ஓடி வந்தவள் கால் இடறி விழ
கீழே விழாமல் தாங்கி பிடித்தால் அவனவள்.

என்னாச்சு என்று கேட்டவளின் முகம் பார்த்து.

எங்க போன காலையில
இப்படி ஒரு வார்த்தை சொல்லாம

ஏங்க கீழ தானே வந்தேன்.

உங்களை விட்டு நிரந்தரமாக போயிட்ட மாதிரி பயப்படுறீங்க.

என்றவளை முறைத்தான் மாறன்.

போட்சே ஹி ஹி ஹி

இந்தாங்க தம்பி காபி என்று முன்னே நீட்டினார் சரண்யா.

சரண்யா அம்மா நீங்க எப்ப வந்தீங்க? என்று கேட்டுக் கொண்டே காபி கப்பை கையில் எடுத்தான் மாறன்.

நான் நேத்து நைட் வந்தேன் தம்பி என்றார் அவர்.
ஓ சூப்பர்மா சங்கவி எப்படி இருக்காங்க? படிப்பெல்லாம் எப்படி போகுது?

நல்லா இருக்கா தம்பி நடந்து முடிஞ்சா செமஸ்டர் ல எதுலையும் அறிய வைக்காம பாஸ் பண்ணிட்டா தம்பி.

சூப்பர சரண்யா அம்மா.
சங்கவிய காலேஜ் லீவுக்கு வீட்டுக்கு வர சொல்லுங்க சின்ன வயசுல பார்த்தது.
சரிங்க தம்பி என்றார் அவர்.

தன் லேப்டாப்பை எடுத்து சோபாவில் அமர்ந்தான் அப்படியே வேலையில் மூழ்கிப் போனான் மாறன்.

நாங்க அப்பா ரூம் செல்ஃப்ல ரெண்டு இம்போர்ட்டண்ட் ஃபைல் வச்சிருப்பாரு போய் எடுத்துட்டு வரியா என்றான் மாறன்.
பிளாக் கலர் ஃபைல்.

ம்ம் சரி என்றபடி தலையாட்டிய நங்கை அசோக் அறைக்குள் நுழைந்தாள் காலையில் அசோக் வெளியே கிளம்பி சென்று விட்டார் அசோக்கின் அறைக்கு வந்த நங்கை சுற்று மற்றும் பார்க்க,

இதோ செல்ப் இங்கே இருக்கு.
என்று அண்ணாந்து பார்த்தவள் செல்ஃபின் மேலடுக்கில் இரண்டு பைல்கள் இருப்பதை பார்த்தால் மேலே இருக்கிற ரெண்டா தான் இருக்கும் என்ன இது எவ்வளவு உயரமா இருக்கு எனக்கு இது எட்டாதே என்று யோசித்தவள் அருகில் இருந்த ஒரு ஸ்டூலை பயன்படுத்தி மேலே ஏறினாள்.

அவள் ஏறி நின்று ஸ்டூல் தடுமாறு செல்பவை பிடித்தவள் அப்படியே கீழே விழுந்தால் செல்பில் உள்ள அத்தனை பைல்களும் இழுத்து கீழே தள்ளிவிட்டால் நங்கை அவை அனைத்தும் கீழே விழுந்து சிதறின.

அடச்ச என்ற படி கீழே விழுந்தவற்றை ஒவ்வொன்றாய் வேகவேகமாக எடுத்து ஒரு வழியாக அனைத்தையும் செல்பில் ஒதுங்க வைத்தாள்.

அப்போது அவள் பார்வையில் பட்டது மாறன் என்று பெயர் குறிப்பிட்ட ஒரு மஞ்சள் நிற பைல்.

என்ன இந்த ஒரு ஃபைல்ல மாறன் சார் பேரு போட்டு இருக்கு என்று கூறிக் கொண்டே அதை எடுத்தவள் திறந்து பார்தாள்.

அதில் தமிழ் மாறன் வயசு 15 என்று முன்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அதை கண்டவர் அதிர்ச்சி அடைந்தால் இது ஒரு மருத்துவர் ரிப்போர்ட் நங்கை அதை வாசிக்கத் துவங்க நாங்க என்ன ரெண்டு பைல் எடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா என்று மாறன் சத்தம் கொடுத்தான்.

இ…இதோ வந்துட்டேன் என்றவள் அந்த ரிப்போர்ட்டை எடுத்து தம் துப்பட்டாவில் ஒலித்துக் கொண்டாள் இந்தாங்க சார் மாறன் கேட்ட பைலை கொடுத்தவளை கண்டு புன்னகைத்தபடியே தேங்க்யூ என்றான் மாறன்.

ஏன் இவ்வளவு நேரம்?
செல்ப்ல இருந்து ஃபைல் எடுக்கும் போது எல்லாம் மொத்தமா கீழே விழுந்துடுச்சு அடுக்கி வச்சுட்டு இருந்தேன் அதுதான் கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு.

நான் வேணும்னா வந்து பாக்கட்டுமா?
வேண்டாம் வேண்டாம் நானே எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டேன்
சரி சரி என்றபடி தன் வேலையில் மூழ்கினால் மாறன்.

பழனியம்மா இன்னைக்கு எனக்கு என்னவோ போல இருக்கு கோபித்துக்கொள்ளாமல் இன்னைக்கு நீங்க சமைச்சிடீங்களா நான் கொஞ்ச நேரம் போய் படுத்து இருக்கேன்.

சரிமா நான் பாத்துக்குறேன் நீ போ என்றார் சரண்யா.
என்ன நாங்க உனக்கு உடம்புக்கு முடியலையா?

இல்லைங்க சும்மா டயர்டா இருக்கு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் வேற ஒன்னும் இல்ல.
நாம வேணா ஹாஸ்பிடல் போலாமா
வேண்டாங்க நீங்க வேலைய பாருங்க எனக்கு ரெஸ்ட் எடுத்துட்டா சரியா போயிடும் என்று அவனை சமாளித்தாள்.

எதுவும் பிரச்சனை இல்ல இல்ல.
அதெல்லாம் இல்லைங்க சார் சரி அப்ப நான் போய் ரெஸ்ட் எடு
ம்ம் என்றவள் தன் அறைக்கு அவசரமாக சென்றவள் அதை கதவை மூடி தாளிட்டுக் கொண்டாள்.

துப்பட்டாவிலிருந்து அந்த ரிப்போர்ட்டை எடுத்தவள் வாசிக்க துவங்கினார் ஆனால் அது முழுமையாக ஆங்கிலத்தில் இருந்தது நம் நங்கைக்கு ஆங்கிலம் தெரியாதல்லவா ஆனாலும் முடிந்தவரை படித்துப் பார்தாள்.

அதில் போஸ்ட் டுமார்ட்டிக் -டிரஸ் டிஸ் ஆர்டர் post -traumatic stress disorder , என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் நங்கைக்கு தான் எதுவும் புரியவில்லை இதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும்?
எனக்கு ஒன்னும் புரியலையே?

சரி நம்ம சத்யாவுக்கு இந்த ரிப்போட்ட அனுபவம் என்னன்னு பார்த்து சொல்லிடுவா என்றபடி வாட்ஸ் அப்பில் ரிப்போர்ட்டை புகைப்படம் எடுத்து சத்யாவிற்கு அனுப்பினால் நங்கை.

டிரிங் டிரிங்…
ஹலோ சொல்லுங்க அக்கா என்றால் சத்யா.
ஹலோ சத்யா உனக்கு ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன் அது என்னன்னு எனக்கு பார்த்து சொல்லு.

என்ன போட்டோ அது
அது ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட் மாதிரி இருக்கு ஃபுல்லா இங்கிலீஷ்ல இருக்கிறதுனால என்னால சரியா புரிஞ்சுக்க முடியல அதனால நீ எனக்கு இந்த ரிப்போர்ட்ல என்ன போட்டு இருக்குன்னு பார்த்து சொல்லு

ஓகே அக்கா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க என்றபடி அழைப்பை துண்டித்தால் சத்யா.
மாறன் வேலையில் மூழ்கி இருந்ததால் நங்கையை கண்டு கொள்ளவில்லை.

சத்யா சீக்கிரம் போன் பண்ணு சார் வந்துட போறாரு என்று தன் போனை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தால் போனும் அடித்தது.

ஹலோ சத்யா என்ன ஆச்சு சொல்லு சத்யா கூறிய வார்த்தையில் அதிர்ந்தவள் அப்படியே வேறு ஏதும் பேசாமல் உறைந்தாள்.

ஹலோ அக்கா ஹலோ பதில் ஏதும் கூறாமல் அழைப்பில் துண்டித்தால் நங்கை என்றபடி மேலே வந்த மாறன்

என்ன இப்படி நிக்கிற என்று அவள் அருகில் நெருங்க பயந்தபடி பின்னோக்கி நகர்ந்தால்.

ஹே நாங்க உனக்கு என்ன ஆச்சு என்று மீண்டும் அவளை தொட வர மேலும் அவள் பின்னோக்கி விலகிச் சென்றாள்.
என் பக்கத்துல வராதீங்க அங்கே நில்லுங்க என்றால் நங்கை மாறன் நங்கையை வினோதமாக பார்க்க நங்கையின் கண்களில் என்றும் இல்லாத பயம் தோன்றியது.

இதுவரை நங்கையின் கண்களில் அவன் இப்படி ஒரு உணர்வை கண்டதில்லை மாறனுக்கு இது புதிதாக தான் இருந்தது உனக்கு என்ன ஆச்சு நாங்க ஏன் இப்படி நடந்துக்கிற யாரும் ஏதாச்சும் சொன்னாங்களா இல்ல அப்பா ஏதும் திட்டினாரா அப்பா கூட வீட்ல இல்லையே அப்புறம் என்ன ஆச்சு?

எனக்கு பயமா இருக்கு
பயமா?
எதுக்கு ?யாரை பார்த்து? என்று சாதாரணமாக புன்னகைத்தான்.

உங்களைப் பார்த்து தான்.
புரியாமல் விழித்து என்ன பாத்தா? என்றான் முன்னோக்கி நகர்ந்தபடி மாறன் முன்னோக்கி நகர அவள் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள்.

ஏன்?
நீங்க என் பக்கத்துல வராதீங்க என்று மேலும் பின்னோக்கி நகர சுவற்றில் போய் முட்டினால் ஏன் அங்க பார்த்து என்றபடி அவளை தொட கண்களை இறுக மூடியவள் கைகளை தன் நெஞ்சோடு பிழித்து ப்ளீஸ் என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க என்ன விட்டுடுங்க என்ற அவளுக்கு உடல் எல்லாம் நடுங்கத் துவங்கியது.

மாறன் எதுவும் புரியாதவனாய் அவளை விட்டு நகர்ந்தான். நான் இப்போ உன்னை
ஆனா என்ன பண்ண நீ ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படுற?

என்ன பண்ணிங்களா நேத்து என்ன கொலை பண்ண பாத்தீங்க உங்களுக்கு அது ஞாபகம் இல்லையா?

அதிர்ச்சியுடன் வாட் நானா?
ஆமா நீங்க தான்.
என்னடி உளர

தொடரும் ....
நங்கை இப்படி பயப்படும் அளவிற்கு அந்த ரிப்போர்ட்டில் என்ன தான் இருந்தது பொறுத்திருந்து பார்ப்போம்.

Shahiabi.writer ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -38
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.