சரவணன் முடிந்த அளவுக்கு அபிலாஷ் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சமாளித்து கொண்டிருக்க, சனந்தா சற்றுக் குழப்பத்துடன் அவனுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்தாள். “டாக்டர் எனக்கு வால்வ் ஷ்ரிங்க் ஆகிட்டு இருந்துது…. அத அனிமல் வால்வ் வெச்சு ரீப்ளேஸ் பண்ணாங்கன்னு தெரியும்…. அது போக சின்ன சின்ன காயம் ஏற்பட்டு இருந்துது அவ்வளவு தான்…. நீங்க லிவர் பத்தி பர்டிகுலரா கேட்டீங்கன்றதுனால சொல்றேன்…. அங்க எனக்கு ஒரு சின்ன கட் இருக்கும்” என்று சனந்தா கூறினாள்.
“அங்க ஆப்ரேஷன் அந்த மாதிரி எதுவும் பண்ணலையா??” என்று அபிலாஷ் கேட்க, “இல்ல டாக்டர் அப்படி எதுவும் இல்லை… ஏன்னா இவ்வளவு தான் நான் மருந்து மாத்திரை சாப்பிட்டது…. நீங்க சொன்ன எந்த மருந்து மாத்திரையும் நான் சாப்பிடல… இந்த ஆக்சிடென்ட்னால தான் அங்க எனக்கு ஒரு சின்ன கட் மத்தபடி வேற எந்த பிரச்சனையும் இல்ல எனக்கு” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்…. சரி ஓகே!! உங்கள ரொம்ப சங்கடப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன்…. சாரி!!!” என்று அபிலாஷ் கூற, “பரவால்ல டாக்டர் உங்க வேலைக்காக தானே கேட்குறீங்க பரவால்ல…. அப்புறம் உங்களுக்கு ஹாஸ்பிடல் சார்ந்து ஏதாவது தகவல் வேணும்னா சொல்லுங்க என்னுடைய டிஸ்சார்ஜ் சம்மரி வேணா நான் கொண்டு வந்து கொடுக்க சொல்றேன்” என்று சனந்தா கூறவும்,
“அப்படியா…. சரி ஓகே எனக்கு அது கொஞ்சம் சீக்கிரம் கிடைக்கிற மாதிரி பண்ண முடியுமா??” என்று அபிலாஷ் கேட்க, “இந்த வாரத்துக்குள்ள அப்பாவ அனுப்பி வெக்க சொல்றேன்… ஊட்டியிலிருந்து நம்ம வாங்கிக்கலாம்” என்று சனந்தா கூறி, “சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சனந்தா புறப்பட்டாள்.
“என்ன ஆச்சு டா??” என்று விக்ரம் கேட்க, “சனந்தா சொல்றபடி பார்த்தா அவளுக்கு லிவர் ஆப்ரேஷன் பண்ண மாதிரியே தெரியலையே” என்று அபிலாஷ் கூற, “பிரகாஷ் சார் கூட லிவர் டிரான்ஸ்பிளான்ட் நடந்துதுன்னு தானே சொன்னாரு ஒரு வேளை நடந்து அவளுக்கு தெரியாம கூட இருக்கலாம் இல்லை…??” என்று விக்ரம் கேட்டான்.
“அப்படி இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி தான்…. ஏன்னா ஆப்ரேஷன் முடிஞ்சு போடற ஸ்டிச்சஸ்க்கும் ஒரு சின்ன கட் ஆனதுக்கு மட்டும் போடுற ஸ்டிச்சஸ்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் மச்சான்…. அதுலயும் லிவர் டிரான்ஸ்பிளான்ட்னா இன்னும் நல்லாவே அவங்களுக்கு வலிக்கும்… என்ன தான் கோமால இருந்து வெளியில் வந்தாலும் அவங்க நிறைய ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ஃபேஸ் பண்ணுவாங்க…. அதனால சனா சொல்றத பார்த்தா எனக்கு என்னமோ லிவர் ஆப்ரேஷன் நடந்திருக்குமான்னு தோணல…. சரி அவளோட டிஸ்சார்ஜ் சம்மரி வரும்ல அதுல என்னன்னு பார்க்கலாம்” என்று அபிலாஷ் கூறினான்.
“ம்ம்… நீங்க பேசுங்க நான் போறேன்” என்று விக்ரம் புறப்பட, “என்னடா இவன் அந்த பொண்ணு பின்னாடி இப்படி சுத்திட்டு இருக்கான்… நான் அன்னிக்கும் ஸ்கூல்லயும் பார்த்தேன் அவ்வளவு துடிக்கிறான்… அதுக்கப்புறம் அவ மேல கோபத்தையும் காட்டுறான்…. இப்படி பண்றான் இவன்” என்று அபிலாஷ் முறையிட்டான்.
“டேய்!!! அவனுக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்கு டா… அவன் தெரு தெருவா தேடிட்டு சுத்தின பொண்ணு டா…. நீயே யோசிச்சு பாரு உனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு உன் முன்னாடி நிக்கிறா உனக்கு என்ன எல்லாம் தோணும், அப்படித்தானே அவனுக்கும் இருக்கும்” என்று சரவணன் கூற,
“அதுக்குன்னு இவ மேலயா” என்று அபிலாஷ் கேட்க, “இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் சரி….. சனா உன் கூட பழகுனது இங்க இருக்கிறது எல்லாத்தையும் பார்த்ததுக்கு அப்புறமும் அவ மேல உண்மையிலேயே உனக்கு சந்தேகம் இருக்கா??” என்று சரவணன் கேட்டான்.
“உண்மைய சொல்லனும்னா இல்ல தான் மச்சான்…. ஆனா, எங்க தப்பு நடந்து இருக்குன்னு தெரிஞ்சுகிட்டா தானே நிம்மதியா இருக்கும்” என்று அபிலாஷ் கூற, “நமக்கு எதுவுமே தெரியாத சமயத்துல அவ மேல சந்தேக படுற மாதிரி நிலைமையும் அமைஞ்சதுனால தான் நம்மளும் அவள தப்பா நினைச்சுட்டு இருக்கோம்…. அதே மாதிரி விக்ரமும் உண்மை என்னென்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கான்…. எல்லா சைடுலையும் சொல்லி வெச்சிருக்கான் அவனும் தேடிட்டு இருக்கான் உண்மை என்னன்னு கண்டிப்பா ஒரு நாள் தெரிய வரும்…. அப்போ தெரிய வரும் போது அவனுக்கு ரொம்ப புடிச்ச பொண்ண மிஸ் பண்ணுற வேதனையை யோசிச்சு பாரு…. அது எவ்ளோ கஷ்டமா இருக்கும் அவனுக்கு” என்று சரவணன் கூறினான்.
“ம்ம்…. புரியுது… நம்ம நிலைமைல அவ தான் ஒரே ஆள் தப்பு பண்ணது… ஆனா, உண்மை என்னென்னு எனக்கும் தெரிஞ்சிக்கனும்னு தான் இருக்கு… அதே மாதிரி இந்த காரணங்களால அவள விக்கி மிஸ் பண்ணிட்டான்னா ரொம்ப வருத்தப்படுவான் தான்…. அது எனக்கு புரியுது மச்சான்…. உண்மை என்னன்னு தெரிஞ்சா தான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்…. சரி நான் போய் இந்த பிரிஸ்கிரிப்ஷனை, எல்லாம் தகவல் கேட்டிருக்கிற ஆளுக்கு ஃபார்வர்ட் பண்றேன் அங்க இருந்து என்ன இன்ஃபர்மேஷன் வருதுன்னு பார்க்கலாம்” என்று அபிலாஷ் சென்றான்.
“ஒருத்தன் வேலையை பார்க்க போயிட்டான்” என்று அபிலாஷையும் “இன்னொருத்தன் அவனுடைய வேலைய பார்க்க போயிட்டன்” என்று விக்ரமை பற்றியும் நினைத்துக் கொண்டு அவனது வேலையை காணச் சென்றான் சரவணன்.
விக்ரம் அவனது வண்டியை எடுத்துக் கொண்டு செல்லவும், சனந்தா நடந்த போக, விக்ரம் சனந்தாவிற்கு அருகில் சென்று, “ஓய்!!! வா வண்டியில கூட்டிட்டு போறேன்” என்று விக்ரம் கூற, “எனக்கு பேர் இருக்கு சார்… எல்லாம் வாட்டியும் ஓய் ஓய்ன்னு கூப்பிடுறீங்க” என்று சனந்தா கேட்க, “உன் பேர வெச்சி கூப்பிட்டா தான் நீ ஒரு மாதிரி ஆகிடுரியே” என்று குறும்பாக விக்ரம் கூறினான்.
விக்ரம் அவளின் பெயரை அழைத்தால் அவளுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை நினைத்து கொண்டு, “இல்ல பரவால்ல சார் நடந்து போறேன்” என்று சனந்தா கூறினாள். “ஏன் என் கூட வண்டியில வரமாட்டியா??” என்று விக்ரம் கேட்க, “அப்படி இல்ல சும்மா தான் நடந்து போலாம்னு” என்று சனந்தா கூறவும், “காலையிலயும் கூப்பிட்டா வரல… இப்பயும் வர மாட்டேங்குற ஏதாவது என் மேல கோபமா??” என்று விக்ரம் வருத்தத்துடன் கேட்டான்.
“ஹய்யோ!! அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. யாராவது பார்த்தா??” என்று சனந்தா தயக்கத்துடன் கூற, “யாராவது பார்த்தா என்ன?.? சரவணன் கூட எத்தனை வாட்டி போயிருக்க, வந்திருக்க??? அபிலாஷ் கூடவும் தானே போன அப்பெல்லாம் யாரும் யோசிக்க மாட்டாங்களா…. என் கூட வந்தா மட்டும் என்ன பேசுவாங்க??” என்று விக்ரம் கேட்டான்
“அவர் கேட்குறதும் சரி தானே… அந்த உறுத்தல் என் மனசுல தான் இருக்கு… அதனால தான் நான் இப்படி பயப்படுறேன்… அவங்க ரெண்டு பேரும் வேற இவர் வேறன்னு அத எப்படி நான் இவருக்கு புரிய வெப்பேன்” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டிருக்க, கவிதா எதிரில் நடந்து வந்து, “வந்துட்டீங்களா, நீங்க வீட்டுக்கு போயிட்டு” என்று கவிதா கேட்க, “ம்ம்… ஆமா நேத்து நைட் வந்தேன்” என்று சனந்தா கூறினாள்.
“எப்படி இருந்துது உங்களுக்கு இந்த லீவ்???” என்று கவிதா கேட்க, “ம்ம்…. ரொம்ப நல்லா போச்சு கவிதா” என்ற சனந்தா கூறினாள்.
“ஆமா, விக்ரம் நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க வீட்டுக்கு போறியா?” என்று கவிதா கேட்க, ஆமாம் என்று விக்ரம் கூறவும், “சரி என்னை கூட்டிட்டு போய் விடு” என்று கவிதா வண்டியில் ஏற போகவும், “இந்த பக்கம் தானே வந்துட்டு இருக்க, திரும்பவும் அங்கேயே போக சொல்லுற” என்று விக்ரம் கேட்க, “அது… ப்ச் சொல்றேன்ல கூட்டிட்டு போ” என்று வண்டியில் ஏறி, பாய் சனா!!! என்று கவிதா கூறவும், பாய்!!! என்று லேசாக புன்னகைத்தாள் சனந்தா.
“அவர் கூப்பிட்டப்பவே அவர் கூட போயிருந்திருக்கலாம்… எனக்கு ஏன் இப்படி யோசனையா இருக்கு…. அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க அவங்க அப்படித் தானே இருப்பாங்க…. நான் ஏன் கவிதா அவர் கூட போனதுக்கு இவ்வளவு யோசிக்கிறேன்” என்ற சனந்தா அவளையே கடிந்து கொண்டு, மெதுவாக நடந்து சென்றாள்.
“சனந்தாவ கூட்டிட்டு போகலாம்னு நினைச்சா கவிதா நடுவுல வந்து… ப்ச் எதுவும் பேசக்கூட முடியல…. கிளம்பும் போது கண்ணாடியில பார்த்தப்போ அவ மூஞ்சியே வாடி போய் இருந்தது…. என்ன எல்லாம் யோசிச்சு இருப்பாளோன்னு தெரியலையே” என்று விக்ரம் யோசனையுடன் வண்டியை ஓட்டினான்.
கவிதா விக்ரம் வீட்டிற்கு சென்று அங்கு விக்ரம் இல்லாததனால் ஆஃபிஸில் தான் இருப்பான் என்று அவனை காண நடந்த வரவும், வழியில் விக்ரம் மற்றும் சனந்தா பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும், விக்ரமிடம் ஏதோ காரணத்தை கூறி அவனுடன் சென்றாள் கவிதா.
“இப்ப தானே இங்க வந்த ஏதாவது மறந்து வெச்சிட்டு போயிட்டியா கவிதா??” என்று வள்ளி கேட்க, “அது… அத்தை… ஒன்னும் இல்ல நீங்க உள்ள வாங்க” என்று வள்ளியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் சமாளித்தாள் கவிதா.
இதை விக்ரம் கவனித்தாலும் சனந்தாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். “அவ எங்க வரா?? என்ன யோசிச்சு இருப்பா” என்று வீட்டு வாசலில் வண்டியின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான் விக்ரம்.
சனந்தா வரவும், “நான் உன்னை அப்பவே கூப்பிட்டேன்ல கூட்டிட்டு போறேன்னு நீ என் கூட வர வேண்டியது தானே” என்று விக்ரம் கேட்க, “பரவாயில்ல சார்!! எனக்கு இங்க நடக்க பிடிச்சிருக்கு அதனால எனக்கு எதுவும் பெருசா கஷ்டம் இல்லை” என்று சனா கூற,
“இவளோட மூஞ்சி என்ன இப்படி டல்லாயிருச்சு…. இவ கிட்ட இப்ப நான் எப்படி பேசுவேன்” என்று விக்ரம் மனதில் யோசித்துக் கொண்டிருக்க, “நான் ரூமுக்கு போறேன் சார்” என்று சனந்தா புறப்படவும், சனந்தா!! என்று விக்ரம் அழைப்பதற்க்குள், “விக்ரம் இங்க வாயேன்” என்று கவிதாவும் ஒரு சேர கூறவும், சனந்தா அமைதியாக அவளது அறைக்கு சென்று விட்டாள்.
“என்னாச்சு கவிதா எதுக்கு கூப்பிட்ட??” என்று விக்ரம் கேட்க, “ஒன்னும் இல்ல நாளைக்கு காலையில எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள்ள போகலாம்னு இருக்கோம் அதான் கூட வரியான்னு கேக்குறதுக்கு தான் கூப்பிட்டேன்” என்று கவிதா கூற, “நான் பார்த்திட்டு சொல்றேன்… ஏன்னா நாளைக்கு நான் ஊட்டிக்கு போற மாதிரி இருக்கும்” என்று விக்ரம் கூறிவிட்டு கவிதாவின் பதிலுக்கு கூட நிற்காமல் சென்று விட்டான்.
“அவகிட்ட பேசிட்டு இருந்தத நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு கோபத்துல போறானா??? ஏன் அதை என்கிட்ட அவன் இப்படி காட்டுறான்… என்னை உண்மையிலேயே விக்ரமுக்கு பிடிக்கலையா??” என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு கவிதாவின் வீட்டிற்கு சென்று, ஏதேதோ யோசனையுடன் அழுது கொண்டிருந்தாள்.
“சனா முதல்ல நீ உன்னோட ஃபீலிங்ஸ்ஸ க்ளியரா புரிஞ்சுக்கோ…. அப்ப தான் என்ன பண்ணனும்னு உனக்கு ஒரு பதில் கிடைக்கும்…. அதை விட்டுட்டு கவிதா அவர் கூட பேசுறாங்க, அவர் கூட போறாங்கன்னு, நீ தேவையில்லாம இப்படி டல்லா இருக்காத” என்று சனந்தா அவளுக்கு அறிவுரை கூறிக் கொண்டு, சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.