புத்துணர்ச்சியுடன் விடிந்தது சனந்தாவுக்கு அன்று விடியல். சனந்தா அவளது அறையை விட்டு வெளியே வந்து சோம்பல் முறித்து கொண்டிருக்க விக்ரம் மாடியில் இருந்து அவளை புன்னகையுடன் பார்க்கவும், சனந்தா அவனைப் பார்த்ததும் வெட்கத்தோடு குளியலறைக்குள் சென்று விட்டாள்.
சனந்தா குளியல் அறைக்குள் சென்று அவளின் கன்னங்களை தட்டிக் கொண்டு, “நேத்து நைட்டும் இப்படித் தான் ஆச்சு இப்பவும் இப்படி ஆகுது… இவரை பார்த்தாலே இப்படித் தான் ஆகுது… ஹய்யோ!!! இத நான் எப்படி கடந்து வர போறேன்…. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க??? ஆன்ட்டி அங்கிள் எல்லாம் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று அவளையே கடிந்துக் கொண்டாள் சனந்தா.
நேற்றிரவு, விக்ரம் சனந்தாவின் தாடையை பிடித்து அவன் புறம் திருப்பி, “இங்க பாரு இப்ப நீ வெச்சுட்டு வந்திருக்கிறது தான் சரி…. நீ ஒரே இடத்தில தான் இருக்குற…. நான் தான் உன்னை சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கேன்…. இது இப்போ உனக்கு புரியாது கொஞ்ச நாள் ஆகட்டும், எல்லாம் சரியாகும் அப்ப நான் ஏன் இதை சொன்னேன்னு உனக்கு புரியும் சனந்தா” என்று விக்ரம் அவளின் கண்களை பார்த்துக் கொண்டே பேசவும், விக்ரம் கூறியது சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அவன் அவளின் மிக அருகில் நின்று அவள் கண்களை பார்த்து பேசியதில் கரைந்து தான் போனாள் சனந்தா.
விக்ரம் லேசான புன்னகையுடன் சனந்தவிடம் பேசிக் கொண்டிருக்க, சனந்தாவின் கவனம் முழுக்க விக்ரமின் கண்களில் ஓரம் இருக்கும் சிறிய மச்சம், புன்னகையால் மெருகேறி இருந்த கன்னங்கள்…. அவனுக்கே உரித்தான மீசை… அவனுடைய பேச்சை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவனுடைய உதடுகள்… அவனுடைய பேச்சுனால் ஏத்த இறக்கத்தில் இருக்கும் அவனுடைய குரல்வளை இவை அனைத்துக்கும் மேல் சனந்தாவின் தாடையை பிடித்துக் கொண்டிருக்கும் அவனுடைய கை, அவளை ஆட்கொள்ள தான் செய்தான் விக்ரம்.
விக்ரம் பேசியது காதில் விழுந்தாலும் அதில் கவனம் செலுத்த முடியாமல் அவனை ரசித்துக் கொண்டும் அவஸ்தை தான் பட்டுக் கொண்டிருந்தாள் சனந்தா. அவன் கடைசியில், “நான் ஏன் இதை சொன்னேன்னு அப்போ உனக்கு புரியும் சனந்தா” என்று அவளின் பெயரை கூறியது மட்டும் அவள் காதில் ஒலித்து அவள் சுயநினைவுக்கு வந்து அவளை சுதாரித்துக் கொண்டு, “எனக்கு….. ரொம்ப…. ரொம்ப டயர்டா இருக்கு… நம்ம…. நம்ம நாளைக்கு பேசுவோமா… ரொம்ப சாரி சார் குட் நைட்” என்று கூறிய ஓடிவிட்டாள் சனந்தா.
“என்ன ஆச்சு இவளுக்கு??? வாட்ச் எல்லாம் காட்டி அவ்ளோ பேசினா... இப்ப நான் பேசுனதும் இப்படி போயிட்டாளே என்னவா இருக்கும்” என்று குழப்பத்தில் விக்ரம் நின்று கொண்டிருந்தான். சனந்தா கீழே சென்று அவளது அறைக்கு செல்லும் வழியில் அவளது கன்னங்களை தட்டிக் கொண்டு, விக்ரம் அவளின் தாடையை பிடித்த இடத்தில் வெட்கத்துடன் தொட்டு பார்த்துக் கொண்டே அவளது அறைக்கு சென்று கொண்டிருந்ததை விக்ரம் மாடியில் இருந்து பார்க்கவும் தான் விக்ரமுக்கு சனந்தா ஏன் சென்று விட்டாள் என்பது புரிந்தது.
“விக்ரம் இப்படியே இருக்கக் கூடாது… அவ கிட்ட உன்னோட ஃபீலிங்ஸ் சொல்லி சம்மதம் வாங்கணும்… அப்ப தான் அவளும் இப்படி ஓடாம இருப்பா… எனக்கும் நிம்மதியா இருக்கும்…. அவளுக்கும் என்னை புடிச்சிருக்கு தான்… நான் அவகிட்ட சொன்னா ஒத்துப்பா தான்…. இருந்தாலும் அவகிட்ட இதெல்லாம் சொல்லணும்னு நினைச்சாலே எனக்கு இப்படி யோசனையா இருக்கே…. ஒன்னும் பயப்படாத விக்ரம் நம்ம தைரியமா செல்லலாம்” என்று அவனுக்குள் அவனே தைரியத்தை கூறிக் கொண்டு உறங்கியும் போனான்.
“சனா, கிஃப்ட் கொண்டு வந்து கொடுத்தா…. அந்த பெல்ட் ரொம்ப நல்லா இருக்கு… அதுல என்னோட பேரும் உள்பக்கமா பதிஞ்சு இருக்கு… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்க்யூ சோ மச்!!!” என்று குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு உற்சாகத்தில் உறங்கினான் சரவணன்.
சனந்தா குளித்து முடித்து தயாராகி வந்து அவளுக்கு தேவையான உணவையும் தயார் செய்து கொண்டு வள்ளியிடம் கொடுக்க, வள்ளியும் அவர் தயார் செய்த உணவை கொடுக்க, கிச்சன் மேடையில் அமர்ந்து கொண்டே பேசிக் கொண்டு உணவருந்தி விட்டாள் சனந்தா.
“இன்னிக்கு சீக்கிரமா கிளம்புறேன் ஆன்ட்டி… ஏன்னா ஸ்டடி மெட்டீரியல்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கோம்ல அது எல்லாத்தையும் கொண்டு போய் பசங்களுக்கு எல்லாம் கொடுக்கணும் எல்லாம் அரேஞ்ச் பண்ணனும் அதனால கொஞ்சம் வேலை இருக்கு…. அதான் சீக்கிரம் ரெடி ஆயிட்டேன்… மதியம் பசங்களோடவே சாப்பிட்டு அப்புறம் சைன் போட்டுட்டு வரேன் ஆன்ட்டி” என்று சனந்தா கூறி விடை பெற்று சென்றாள்.
சனந்தா கொல்லை பக்கம் செல்லவும் விக்ரம் குளித்து முடித்து ஈரத்தலையுடன் தலையை துவட்டி கொண்டே வர, சனந்தாவுக்கு முதல் முதலில் விக்ரமை இப்படி பார்த்த ஞாபகம் முதல் நேற்று இரவு நடந்த நிகழ்வு வரை அனைத்தும் அலைமோதியது. அவளுடைய இதயத்துடிப்பு அதிகரிக்க எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு அவளது அறைக்கு செல்ல, விக்ரம் ஓய்!!! என்று அழைக்கவும், சனந்தா திரும்பிப் பார்க்காமல் அங்கேயே நின்றாள்.
இங்க பாரு!!! என்று விக்ரம் அழைக்க, லேசாக திரும்பி ம்ம்ம்!! என்று மட்டும் பேசவும், திரும்ப மாட்டியா?? என்று விக்ரம் கேட்க, “ப்ச்…. என்ன வேணும்னு சொல்லுங்க சார்” என்று சனந்தா கேட்க, “நான் கூட்டிட்டு போறேன் வெயிட் பண்ணு” என்று விக்ரம் கூறவும், “இல்ல நான் எல்லாம் ரெடியாயிட்டேன்…. இப்போ நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறி, அவளுடைய அறைக்குள் ஓடி விட்டாள்.
“இவர் என்ன பண்றாருனு தெரிஞ்சு தான் பண்றாரா…. இப்படி வந்து நிற்குறாரு…. ஆன்ட்டி, அங்கிள் யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க??? குளிச்சிட்டு வந்து நின்ன உடனே நான் அவர் கிட்ட பேசினா என்ன யோசிப்பாங்க…. இதெல்லாம் ஏன் இவருக்கு புரியவே இல்லை” என்று அவனை கடிந்து கொண்டு அவளது உடைமைகளை எடுத்து வைத்து கொண்டு புறப்பட்டாள்.
விக்ரம் தலையை துவட்டிக் கொண்டே, “ஏன் இப்படி உள்ள ஓடிட்டா??” என்று யோசித்துக் கொண்டே அவனது அறைக்குள் சென்று தயாராகி வந்தான். சரவணன் மற்றும் விக்ரம் உணவருந்தி விட்டு, வண்டியில் புறப்பட, விக்ரம் நடந்ததை கூறினான்.
“அறிவில்லையா உனக்கு…. நீ குளிச்சிட்டு வந்து நிற்குற…. அம்மா அப்பா பார்த்தா என்ன நினைப்பாங்க?? அப்ப வந்து அவகிட்ட பேசிட்டு இருந்தா??? இதெல்லாம் அவளும் யோசிக்க மாட்டாளா” என்று சரவணன் கூறி விக்ரமின் தலையில் தட்ட, “ஓ!! அப்படி ஒன்னு இருக்குல்ல…. நான் அதை யோசிக்கவே இல்ல…. நைட்டும் என்கிட்ட பேசாம போயிட்டா… காலையிலேயே மூஞ்சி கொடுத்த பேச மாட்டென்றான்னு அப்படி யோசிச்சுட்டேன் நானு” என்று விக்ரம் கூறினான்.
“எப்படி டா??, இந்த லவ் பண்ணா மூளை கெட்டு போயிரும்னு கேள்வி பட்டு இருக்கேன்… உனக்கும் நடக்கும்னு நான் யோசிக்கல” என்று சரவணன் கேலி செய்ய, “நீ என்னை என்ன வேணாலும் பேசுவடா… ஆமா, நேத்து கிஃப்ட் வந்ததுதே, அது என்ன??? அதை பத்தி சார் சொல்லுங்க பார்க்கலாம்” என்று விக்ரம் சரவணனை கேலியாக கேட்க, “மூடிட்டு வண்டியை ஓட்டு இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு போ” என்று சரவணன் கூறவும் விக்ரம் சிரித்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.
சரவணன் மற்றும் விக்ரம் அவர்களின் ஆஃபீஸ்க்கு சென்று வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அபிலாஷ் வந்து, “மச்சான் அவளுடைய மருந்து லிஸ்ட் கேட்டனே??” என்று கேட்க, “சனா மதியம் சைன் போட வருவா அப்ப நான் கேட்டு வாங்கி தரேன் டா” என்று சரவணன் கூறவும், “கண்டிப்பா கிடைச்சுரும்ல??” என்று அபிலாஷ் கேட்க,
“அது கிடைக்கும் தான்…. ஆனா, நீ ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கேன்னு தெரியலையே??” என்று சரவணன் கேட்க, “பின்ன என்னடா…. ஏதோ மர்மம் இருக்குற மாதிரியே இருக்கு… அப்ப அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு நமக்கு ஒரு கியூரியாசிட்டி இருக்கும் இல்ல அதான் வேற ஒன்னும் இல்லை” என்று அபிலாஷ் சமாளித்தான். “சரி ஓகே வந்ததுக்கப்புறம் கேட்டு வாங்கி தரேன்” என்று சரவணன் கூறினான்.
சனந்தா புதிதாக வாங்கி கொண்டு வந்த ஸ்டடி மெட்டீரியல்ஸ் அனைத்தையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பாடத்தை கற்றுக் கொடுத்தாள். அனைத்து குழந்தைகளும் அவளிடம் நன்றாக ஒற்றிக் கொண்டனர். அவள் என்ன கற்றுக் கொடுத்தாலும் அதை அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொள்ளும் அளவுக்கு அவளுடன் ஒன்றாகி விட்டனர்.
சனந்தாவும் அனைவருடனும் சேர்ந்து உணவருந்தி விட்டு அவரவர்களின் பெற்றோர்கள் வந்தவுடன் அனைவரிடமும் பேசி குழந்தைகளை அனுப்பிவிட்டு ஆஃபீஸுக்கு சைன் போட சென்றாள்.
அங்கே அபிலாஷ் இருக்கவும் அவனை பார்த்து புன்னகைத்து சைன் போட்டு விட்டு, “நான் கிளம்புறேன் டாக்டர்” என்று கூறவும், “ஒரு நிமிஷம்” என்று அபிலாஷ் கூற, சனந்தா அவனை கேள்விக்குறியாக பார்க்க, “ம்ம்… பசங்க எல்லாரும் வீட்டுக்கு போயாச்சா??” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா அவனை குழப்பத்துடன் பார்த்து, “ம்ம்… கிளம்பிட்டாங்க டாக்டர்… எல்லாரும் கிளம்பினதுக்கு அப்புறம் தான் நான் வந்தேன்” என்று சனந்தா கூற, “ஓகே… சாப்டீங்களா நீங்க??” என்று அபிலாஷ் கேட்டான்.
“என்ன…. இவரு முதல்ல என்கிட்ட பேசவே மாட்டாரு?? பசங்க போய்ட்டாங்களா சாப்பிட்டீங்களான்னு கேக்குறாரு ஒன்னுமே புரியல” என்று சனந்தா இன்னும் குழப்பத்துடன், “சாப்பிட்டேன் டாக்டர்… நீங்க சாப்டீங்களா??” என்று சனா கேட்க, “இப்ப தான் சாப்பிட்டு முடிச்சேன்” என்று அபிலாஷ் கூறினான்.
“என்னடா இவனுங்கள இன்னும் காணல…. எவ்வளவு நேரம் இவள பிடிச்சு வெப்பேன் நானு…. நானே கேட்டா இவ என்ன நினைப்பான்னு தெரியலையே…. என்னென்னு காரணத்தை சொல்லுவேன்” என்று அபிலாஷ் மனதில் புலம்பி கொண்டிருக்க, சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் வந்தடைந்தனர்.
அப்பொழுது தான் அபிலாஷுக்கு ஹப்பாடா என்றிருந்தது. “இல்லை சும்மா தான் கேட்டேன்… நீங்க வீட்டுக்கு வேற போய்ட்டு வந்தீங்கல அதான்” என்று ஏதோ கேவலமாக அபிலாஷ் சமாளிக்க, சனந்தா புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்து, “சரி நான் கிளம்புறேன் டாக்டர்” என்று சனந்தா கூற, “இங்க வா சனா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சரவணன் அழைக்க, அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்ன சரவணன் என்ன பேசணும்??” என்று சனந்தா கேட்க, “ஒன்னும் இல்ல… அது…. அபிக்கு உன்னுடைய மெடிக்கல் ஹிஸ்டரி இன்னும் வரல… அப்போ தானே இவன் இங்க இருந்து ஃபைல் பண்றதுக்கு…. அட்லீஸ்ட் உன்னுடைய மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தா ஆச்சும் இப்போதைக்கு அதை வெச்சு ஃபைல் பண்ணுவான்… அது தான் உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தான்” என்று சரவணன் கூற, “இதற்கு தான் இவர் இவ்வளவு சுத்தி வந்தாரா?? என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டு, “இது தான் என்னோட பிரிஸ்கிரிப்ஷன்ஸ்” என்று மூன்று ஃபோட்டோக்களை காட்டினாள் சனந்தா.
சனந்தாவின் கைபேசியிலிருந்து அபிலாஷ் மூன்று ஃபோட்டோக்களையும் பார்த்து என்னென்ன மருந்துகள் என்பதை குறிப்பெடுத்துக் கொண்டான். “இது மட்டும் தானா வேற எந்த மாத்திரையும் நீங்க போடுறது இல்லையா??” என்று அபிலாஷ் கேட்க, “இல்ல டாகடர் இவ்வளவு மட்டும் தான்… அதுவும் இந்த வாட்டி போனப்போ பெருசா மாத்திர இல்ல இந்த ரெண்டு மட்டும் தான் கொடுத்தாங்க” என்று சனந்தா கூற, “அப்படியா!! என்று யோசனையில் அபிலாஷ் இருக்க, “என்ன ஆச்சு டாக்டர்??” என்று சனந்தா கேட்க, “ஒன்னும் இல்ல நான் ஒரு சில மெடிசன் சொல்றேன் அதெல்லாம் நீங்க யூஸ் பண்ணி இருக்கீங்களானு எனக்கு சொல்றீங்களா??’ என்று அபிலாஷ் கேட்க, சரி என்று தலையை அசைத்தாள் சனந்தா.
அபிலாஷ் லிவர் சார்ந்து அனைத்து மருந்துகளையும் கூற சனந்தா எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள். “எப்படி இவ்வளவு உறுதியா தெரியும் இதெல்லாம் நீ யூஸ் பண்ணலன்னு” என்று சரவணன் கேட்க, “இதுல என்ன இருக்கோ அது மட்டும் தான் நான் எடுத்துட்டு இருக்கேன்…. இத தவிர நான் வேற எந்த ஒரு மாத்திரை கூட நான் போட்டதில்ல… அது எனக்கு ரொம்ப உறுதியாக தெரியும்…. ஏன்னா நான் தான் எல்லா மருந்தும் மார்க் பண்ணிப்பேன் மார்னிங் நைட் எல்லாம் எழுதுவேன்…. அதே மாதிரி ஹாஸ்பிடல்ல கொடுத்த மெடிசன் என்கிட்ட இருக்கு அதுவும் இதுவும் ஒன்னு தான் அதனால தான் எனக்கு ரொம்ப உறுதியா தெரியும்” என்று சனா கூறினாள்.
அபிலாஷ் இன்னுமும் குழப்பத்தில் இருக்க, என்னடா?? என்று சரவணன் கேட்க, “சனா இப்ப நீங்க செக்கப்புக்கு போனீங்கல…. தப்பா எடுத்துக்காதீங்க நான் இப்படி கேட்கிறேன்னு…. என்னென்ன செக் பண்ணாங்கனு கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று அபிலாஷ் கேட்க, சனந்தா சற்று யோசித்து, “எனக்கு ஹார்ட் வால்வ் ரீப்ளேஸ் பண்ணி இருக்காங்க… அதுக்கு செக் பண்ணாங்க, அதுல கொஞ்சம் எக்சர்சைஸ் எல்லாம் செஞ்சு காமிக்க சொன்னாங்க பண்ணேன்…. அதுக்கப்புறம் ஸ்கின் டாக்டர் கிட்ட போனேன் ஏன்னா எனக்கு ஆக்ஸிடென்ட்னால நிறைய தழும்பு ஏற்பட்டுருச்சு அதுக்காக போனேன் அவ்வளவு தான் டாக்டர்…. ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க??” என்று சனா கேட்க,
“இல்ல நாங்க…. இங்க….” என்று அபிலாஷ் தடுமாறிக் கொண்டிருக்க, “இவன் ஒருத்தன்…. அது ஒன்னும் இல்ல உன்னோட டீடைல்ஸ் ஒன்னுமே வரல…. உன்கிட்ட கேட்டா நீ தப்பா எடுத்துப்பன்னு பயப்படுறான் வேற ஒன்னும் இல்ல” என்று சரவணன் சமாளித்தான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.