பாகம் -36

எது டி சின்ன விசயம்

எங்க அம்மா ஃபோட்டோவ உடைச்சது உனக்கு சின்ன விஷயமா?

ப்ளீஸ் மாறன் சார் எனக்கு கழுத்து ரொம்ப வலிக்குது என்ன விடுங்க.

நான் தெரியாமல் சொல்லிட்டேன்.

அவள் கழுத்தை விடாமல் அவளை மேலும் அழுத்த
பல்லை நர நரவென கடித்தான்.

என்ன எல்லாரும் இங்க நிக்கிறீங்க?

என்ன ஆச்சு ?

என்ன வீட்ல ஒரே சத்தம்.
அசோக் கேட்க

யாரும் எந்த பதிலும் கூறவில்லை.

சத்தம் கேட்டு அசோக் வேகமாக மேலே செல்ல,

அங்கு பார்த்த காட்சியில் கதி கலங்கி போனார் அசோக்.

நங்கையின் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு மேலே தூக்கி தொங்க விட்டபடி நின்று இருந்தான் மாறன்.

நங்கை கால்கள் உதற மூச்சு திணறல் அதிகரித்து அவனிடம் போராடி களைத்தவள் அரை மயக்க நிலையை அடைந்தாள்

மாறா என்ன காரியம் பண்ணிட்டு இருக்க அவளவிடு.

என்றபடி உள்ளே ஓடிவந்து மாறன் கைகளை பிடித்து இழுக்க அவனுக்கு எந்தவித உணர்வும் இல்லை.

மாறா நான் சொல்றதை கேளு நீ என்ன பண்ணிட்டு இருக்க பாரு.
சுயத்துக்கு வா மாறா. வா

அவளை விடுல அவ செத்துருவா.

மாறா என்று கத்திகொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அறைந்த வேகத்தில் நங்கை விட

அவன் பிடியிலிருந்து கீழே விழுந்தால் நங்கை.

அடுத்த நொடி அசோக்கின் கழுத்தில் மாறனின் கையிருந்தது.

அவரையும் ஒரு வழி படுத்த

மாறா என்ன விடு.

சீதா இருந்திருந்தா உன்ன இப்படி பண்ண விட்டுருவாளா?

இது தான் உன் அம்மாவுக்கு நீ கொடுக்கற மரியாதையா?
குரல் அடைக்க கேட்ட கேள்வியில் அசோக்கை விடுவித்து உறைந்தான் மாறன்.

பாவம் பேச்சு மூச்சற்று கிடக்கும் நாங்கையை
பார்க்கும்போது அசோகிக்கும் சற்று பாவமாகத்தான் இருந்தது.

கன்னத்தில் தட்டி இதோ பாரு பொண்ணு எழுந்திரு என்ன ஆச்சு உனக்கு.
அவள் உடல் அசைய வில்லை

டேய் கிருஷ்ணா கொஞ்சம் வீட்டுக்கு உடனே வாடா என்று தன் நண்பனான dr கிருஷ்ணாவை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

எதிர் முனையில் ஏன் என்னாச்சு.

வாடா சொல்றேன்.

ஜஸ்ட் 5 மினிட்ஸ்

மாறா நீ என்ன பண்றேன்னு உனக்கு புரியுதா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தவ அவளுக்கு ஏதாச்சும் ஆனா நாளைக்கு நா தான் பதில் சொல்லணும்.

ஏண்டா அந்த பொண்ண இப்படி பண்ண.

இந்தப் பொண்ணு பேரு கூட என்னன்னு எனக்கு தெரியலையே.
ஏ பொண்ணு எழுதிரு. கீழ யார் இருக்கீங்க கொஞ்சம் மேல தண்ணி எடுத்துட்டு வாங்க வேலு.

வேலூ தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க,
வாங்கி நங்கையின் முகத்தில் தெளித்தார்.

ஆனாலும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை.

மாறா அவள தூக்கிட்டு வா டா.

எந்த பதிலும் கூறாமல் சீதாவின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் அவருக்கு புரிந்தது.

அதற்குப்பின் அசோக்கும் ஏதும் கூறவில்லை.

பணி பெண்களை அழைத்து அசோக் நங்கையை கை தாங்கலாக கூட்டி சென்று மற்றொரு அறையில் உள்ள சோபாவில் கிடத்தினார்.

மாறன் பிரம்மை பிடித்ததை போல் நின்று கொண்டிருக்க.

வேலு மாறனை அவன் அறைக்கு
சற்று பயத்தோடு அழைத்து சென்றார்

மாறன் தம்பி வாங்க.....

சிறு குழந்தை என அவர் முன்னே கையை பற்றி கொண்டு நடக்க பின்னே நடந்தான் மாறன்.

அங்கே வந்தார் டாக்டர் கிருஷ்ணா.

வாடா கிருஷ்ணா என்னன்னு கொஞ்சம் பாரு தண்ணி தெளிட்சும் பாத்துட்டேன் எழவே இல்ல.

என்னடா என்ன நடந்துச்சு.

அதெல்லாம் அப்புறம் சொல்றேன் டா இப்ப பாருடா முதல்ல.

செத்தஸ்கோப் 🩺 எடுத்து ஹார்ட் பீட் செக் செய்ய அது இயல்பாகவே துடித்தது. தன் மருத்துவ பையை💼 திறந்து ஒரு இன்ஜெக்ஷன் எடுத்து நங்கைக்கு போட்டுவிட்டார் டாக்டர் கிருஷ்ணா.

கன்னத்தைக் தட்டி எழுப்பினர் டாக்டர்

எழுந்திரிமா நங்க, நங்க

மெதுவாக கண்விழித்தவள்

ஆ வென பதறி எழுந்தாள்

ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல

காம்டோன் காம்டோன்

சுற்றி முற்றி பார்த்தவள் சற்று அமைதியானாள்.

பயப்படாத மா.

உனக்கு ஒன்னும் இல்லே என்றார் டாக்டர்.

பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல ல கிருஷ்ணா.
என்று பதற்றத்தோடு கேட்க.

இல்ல அசோக் அவங்க நார்மலா தான் இருக்காங்க என்ன கழுத்தை பிடித்து அழுத்துனதுல மூச்சுக் குழலுக்கு காற்று போகாம மூச்சு அடைச்சு மயக்கம் வந்து இருக்கு.

ஆனா இதுவே கொஞ்சம் டிலே ஆகி இருந்தா அவங்க உயிர் கூட போயிருக்க வாய்ப்பு இருக்கு.
பி கேர்ஃபுல் இனிமே இது மாதிரி நடக்காமல் பாத்துக்கோங்க.

இப்போ இவங்க பர்பெக்ட் லி ஆள் ரைட்.

டேக் கேர் மா

ம்ம்...என்று தலை அசைத்தாள் நங்கை.

ஆமா மாறன் எங்க

அங்கதான் அவன் ரூம்ல வேலு கொண்டு போயி விட்டுருக்காரு.

சரி நான் போய் பாத்துக்கிறேன்.

என்றவர் நேராக மாறன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டார்.

அசோக் நங்கை பார்த்தவர் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து செல்ல

ரொம்ப தேங்க்யூ சார் என்றாள் நங்கை.

திரும்பிப் பார்த்த அசோக்.

இன்னொரு வாட்டி அந்த ரூமுக்கு போகாத சீதா பொருளை எதையும் தொடாத. அது உனக்கு நல்லது இல்ல
என்று கூற

ம்ம்... என்று தலை ஆட்டினாள் நங்கை.

மாறன் அறையில் இருந்து சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் சரி அசோக் நான் கிளம்புறேன் என் வேல முடிஞ்சிடுச்சு.

கையில இருந்த காயத்துக்கு எல்லாம் ட்ரெஸ்ஸிங் பண்ணி இருக்கேன் டேப்லெட் ரெகுலரா எடுத்துக்க சொல்லு. இப்ப கொஞ்ச நாளாவே டேப்லெட் எடுத்துக்கறது இல்ல நினைக்கிறேன்.

அதனாலே தான் இவளோ வைலன்ட்டா பிகேவ் பண்றான்

ரொம்ப கேர்புல்லா இருக்கணும் அசோக்.


ம்ம்...சரி.

அப்புறம் ஒரு விஷயம்.
மாறன பத்திரமா பாத்துக்கோ அவன இந்த அளவுக்கு டென்ஷனாக விடாத

உனக்கு எத்தனை வாட்டி சொல்றது அவன் இந்த மாதிரி டென்ஷன் ஆகிறது அவனுக்கு நல்லது இல்ல அசோக்.

ஒன்னு அவன் தன்னையே காயப்படுத்திக்குவான்.

இல்லனா மத்தவங்கள காயப்படுத்துவான்.


சரி நான் பார்த்துக்கிறேன் கிருஷ்ணா.

ரொம்ப தேங்க்ஸ்.

போடா இவனே....
😃

என்று கிளம்பினார் டாக்டர் கிருஷ்ணன்.

சிறிது நேரம் கழித்து எழுந்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

பேசாம இங்க இருந்து ஓடிடலாமா?

இந்த ஜெயிலுக்கு அந்த ஜெயிலே தேவலம் போல என்று எண்ணியவள்.

😒
கதவின் பின் ஒளிந்து மாறன் வெளியே இருக்கிறானா என்று உறுதி செய்து கொண்டாள்.

அவன் இல்லாமையை அறிந்து


கொழுசின் ஒலி கேட்காமல் மெல்ல நடந்தவலுக்கு பின்

நங்கை எங்க போற என்ற மாறனின்
குரல் ஒலிக்க ஃபிரீஸ் ஆகிவிட்டாள் நங்கை.

அந்த கேள்வியில் மீண்டும் மயக்கம் வருவதைப்போல உணர்ந்தாள்.

மெல்ல திரும்பி நான் சமைக்க போறேன்.

அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நீ ரூமுக்கு வா.

😳

கழுத்தை வருடிக்கொண்டாள்.

மெல்ல அறையை நோக்கி நடக்க

என்ன வறத்துக்கு இவளோ நேரமா?

என்ற கத்தலில்

இதோ வந்துட்டேன் என்று ஓடினாள் நங்கை.

அறையில் தன் படுக்கையில் இரு கைகளின் விரல்களையும் கோர்த்துக் கட்டிக்கொண்டு இரு கால்களின் முட்டியில் வைத்து உடல் வளைத்து தலையை மட்டும் மேலே உயர்த்தி அமர்ந்து இருந்தான் மாறன்.

என்ன பாக்குற

என்றபடி தனக்கு பக்கத்தில் அமரும்படி படுக்கையில் கையை காட்டி

இங்க உக்காரு.

இல்லே பரவா இல்லே

நான் இங்கே நின்னுகரே சொல்லுங்க.

🤨 மாறன் முறைக்க

அடுத்த நொடி பக்கத்தில் அமர்ந்தாள்.

நங்கை அமர்ந்தவுடன் அவள் மடியில் அப்படியே சாய்ந்து தலை வைத்து படுத்துக்கொண்டான் மாறன்.

அவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

அவள் கைகளை பிடித்து விரல்கள் சேர்த்து தன் கழுத்தில் மாலை என போட்டுக்கொண்டான் மாறன். தன் காயங்களையும்,அது தரும் வலியையும் பொருட்படுத்தாமல்.

😳🤨🥺🤔

நங்கைக்கு பைத்தியம் பிடிப்பதை போலே இருந்தது.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னன்னா என்ன கொல்ற அளவுக்கு கோவப்பட்டாரு இப்ப என்னன்னா சின்ன குழந்தை மாதிரி என் மடியில படுத்து இருக்காரு.

சில நேரங்களில்
அரசனாக 🤴🏻

சில நேரங்களில்

அசுரனாக 🧛🏻‍♂️
என்னால புரிஜிக்கவே முடியல.

அவன் மெல்ல அப்படியே கண்ணை மூடினான்

அவன் மனதில் ஒலிக்கும் பாடல் இது.

தாய் மடியே உன்னை தேடுகிறேன்.
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே.
ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே
🤱🏻🤱🏻🤱🏻🤱🏻🤱🏻🤰🤰🤰🤰🤰🤱🏻🤱🏻🤱🏻🤱🏻🤱🏻

நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் 🩸🩸🩸காயங்களில் என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே.

தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்.

விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள் அல்லி கொடுத்த கைகள் அசைவில் வந்ததென்ன.

கானல்கள் தின்னும் கண்கள் கனிந்து நிற்கும் இதழ்கள் உதவி செய்யும் பார்வை உயிரும் குறைந்தது என்ன


பாரத போர்கள் முடிந்த பின்னாலும் கொடுமைகள் இங்கே குறையவில்லை ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும் சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை.

தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக வாடுகிறேன்.


அப்படியே நங்கை மடியில் உறங்கி போனான்.

நங்கையை அசையக் கூட அனுமதிக்கவில்லை.

அவன் பிடியில் அசையவும் முடியாது.

இரண்டு மணி நேரங்கள் கடந்தன.

அவனுக்கு அளிக்கப்பட்ட மருந்தின் வீரியம்
அப்படியாப்பட்டது.

மெல்ல கண்களைத் திறந்தவன்.

சாரி ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ.
என்ன ஒரு அரை மணி நேரம் இருக்குமா?
😳🥺

என்றபடி அவள் மடியிலிருந்து எழ நங்கைக்கு கால்கள் மறுத்து போய் இருந்தன.

காலை அவளால் அசைக்கக்கூட முடியவில்லை.

அடப்பாவி மனுஷா முழுசா ரெண்டு மணி நேரம் படுத்துட்டு இப்படி அரை மணி நேரம் படுத்து இருப்பேன் நானு கேட்கிற.
😭
இது நங்கையின் மைண்ட் வாய்ஸ் மட்டுமே இதை அவனிடம் கேட்க அவளுக்கு தைரியம் இருக்குமா?

கழுத்தை நெரித்து விடுவானே படுபாவி 🥺


நீ போ நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்,என்றவன் தலையணையில் படித்துக் கொண்டான்.

இவருக்கு நிஜமாவே மதியம் நடந்தது எதுவும் நினைவில்லையா? இல்ல நம்மகிட்ட நடிக்கிறார் ரா?
தெரியலையே.

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.
ஐயோ கடவுளே

பூனைக்கு பயந்து புலிவால் புடிச்ச கதை ஆயிடுச்சு
என்ன எப்படி ஆச்சு காப்பாத்து கடவுளே.
என பல குழப்பத்தில் இருக்கிறாள் நங்கை.

நங்கையின் வாழ்வில் புதிய பிரச்சனைகள் பல ஆரம்பம் ஆகப்போகிறது.

தொடரும்
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -36
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.