Chapter 34

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சரவணன் அவளது லக்கேஜை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “சரவணன் தான விக்ரமுக்கு நம்பர் கொடுத்தாரு… எப்படியும் நான் பேசுறேன்னு விக்ரம், இவர் கிட்ட சொல்லி இருப்பாரு… எப்படியாவது கேட்டுடு சனா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சரவணா!! என்று அழைக்க போகவும், சனந்தாவின் காதில் ஓய்!!! என்று அழைக்கவும் அவள் சட்டென்று பயத்தில் திரும்பி பார்க்க இங்கே விக்ரம் நின்று கொண்டிருந்தான்.

சனந்தா முதலில் அதிர்ச்சியில் அவனை பார்க்கவும், விக்ரம் இரு புருவங்களை உயர்த்தி “என்ன பயந்துட்டியா??” என்று கேட்க, சனந்தா வெட்கத்துடன் புன்னகைத்து ஆமாம்!! என்று தலையை அசைத்து திரும்பிக் கொண்டாள்.

“ஃபோன்ல பேசுனதுக்கே அப்படி சுத்திட்டு இருந்தான்… இப்ப இவ நேர்ல வேற வந்துட்டா என்ன எல்லாம் அட்டூழியம் பண்ண போறானோ இவன்” என்று சரவணன் விக்ரமை நினைத்துக் கொண்டு, அவளது லக்கேஜை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“சரவணன் மட்டும் தான் வண்டி ஓட்டிட்டு வந்தாரு நீங்க காணமே??” என்று சனந்தா கேட்க, “அந்த ஜங்ஷன்ல கொஞ்சம் டிராபிக் இருந்துது அதான் நான் இறங்கி என்னன்னு பார்த்திட்டு அப்படியே நடந்து வந்தேன் அதனால தான்” என்று விக்ரம் கூறவும், ம்ம்!!! என்று தலையை அசைத்தாள் சனந்தா. “ஏன், நான் வரலைன்னு நினைச்சுட்டியா??” என்று விக்ரம் கேட்க, ஆமாம்!!! என்று குழந்தையை போல் தலையை அசைத்தாள் சனந்தா.

“டேய் போதும்டா இங்க வாடா இந்த லக்கேஜ் பின்னால வெக்க முடியல இவ்வளவு தான் வெக்க முடியுது… முன்னாடி கொஞ்சம் எடுத்து வை இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா உடனே டிராபிக்கும் ஆயிரும் கடைக்காரங்க எல்லாம் திட்ட ஆரம்பிப்பாங்க டா” என்று சரவணன் கூற, விக்ரம் அவனுக்கு உதவி செய்தான்.

“என்னடா இது வெக்கவே முடியல” என்று விக்ரம் கூற, “சரி குடு இதை நான் முன்னாடி சீட்ல கீழ வெச்சிடுறேன்… நீங்க ரெண்டு பேரும் பின்னால உட்கார்ந்துக்கோங்க” என்று கூறி சரவணன் முன்னாள் சீட்டில் காட்டன் பாக்ஸை வைத்தான்.

“மச்சான்னா மச்சான் தான்டா!!” என்று சரவணனை நினைத்து பாராட்டிக் கொண்டு, சரவணன் வண்டி ஓட்ட விக்ரம் மற்றும் சனந்தா பின்னால் சீட்டில் அமர்ந்து கொண்டனர். “அப்புறம் சனா எப்படி போச்சு?? உனக்கு ஜாலியா இருந்துதா??” என்று சரவணன் பேச்சை கொடுக்க, “ம்ம்… ரொம்ப நல்லா இருந்தது” என்று சனந்தா கூறவும், “ஆமா அதான் உன் ஸ்டேட்டஸ்ல பார்த்தோமே நாங்க” என்று சரவணன் கூறினான்.

“நிறைய ஃபோட்டோஸ் எடுத்தோம் சும்மா இரண்டு மட்டும் தான் போஸ்ட் பண்ணேன்” என்று சனந்தா கூற, “யாரு உன் சீனியர் கூடவா” என்று விக்ரம் கேட்க, சனந்தா அவனை பார்த்து புன்னகைத்து, “இல்ல அவங்க கூட குரூப் ஃபோட்டோ மட்டும் தான் எடுத்தேன்… அம்மா அப்பா நான் எல்லாம் வெளியில போனோம் அங்க ஃபோட்டோஸ் நிறைய எடுத்தோம் அதை தான் சொன்னேன்” என்று சனந்தா கூறினாள்.

“சரி எங்களுக்கெல்லாம் என்ன வாங்கிட்டு வந்த??” என்று சரவணன் கேட்க, “எனக்கு என்ன தோணிச்சோ அத வாங்கிட்டு வந்தேன் உங்களுக்கு பிடிக்குமான்னு எனக்கு தெரியல” என்று சனந்தா தயக்கத்துடன் கூற, “நான் எல்லாம் எது கொடுத்தாலும் வாங்கிப்பேன் சனா” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்… ஆனா, ஒன்னு சரவணன்… நான் நியூயார்க்ல படிக்கப் போனப்போ கூட வீட்டுக்கு வந்துட்டு போயிருந்தேன்…. அப்போ அம்மா அப்பாவை பார்க்குற அந்த எக்ஸைட்மென்ட் மட்டும் தான் இருக்கும்… ஆனா, இப்ப நான் இங்க இருந்து போனப்போ எனக்கு நிறைய மாற்றங்கள் எனக்குள்ளயே இருந்துது…. இங்க நம்ம நிறைய நடக்குறோம், நிறைய ஆட்களோட பேசுறோம், அதே மாதிரி டைம் கூட நிதானமா போற மாதிரி இருக்கும், ஆனா, அப்ப எல்லாம் வீட்டுக்கு போகும் போது ஏதோ நேரமே இல்லாத மாதிரி நான் நிறைய வாட்டி ஃபீல் பண்ணி இருக்கேன்… அப்பா, அம்மா, நாங்க வளர்ந்ததுக்கு அப்புறமா அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலன்னு கேட்கும் போது எங்களுக்கே நேரம் இல்லைன்னு சொல்லி இருக்கேன்… ஒரு சின்ன விஷயம் கூட ரொம்ப சோம்பேறித்தனமா நானும் என் தம்பியும் உணர்ந்து இருக்கோம்…. அது எல்லாமே நான் இந்த வாட்டி போனப்ப இல்ல… நானே எல்லாம் செஞ்சுகிட்டேன்…. அம்மா கிட்ட பெருசா எனக்கு இதை செய்யுங்க அதை செய்யுங்க அப்படின்னு நான் கேட்கல…. இந்த வாட்டி அவங்க கூட நான் நிறைய நேரம் செலவழிச்ச மாதிரி எனக்கு ஒரு உணர்வு இருக்கு அது அவங்களுக்கும் ரொம்ப திருப்தியா இருந்துது” என்று சனந்தா அவளுடைய அனுபவத்தை கூறினாள்.

“இப்படி யாரும் இந்த ஊருக்கு வந்துட்டு போயிட்டு சொன்னது இல்ல சனா… பெரும்பாலும், “ஹப்பாடா வீட்டுக்கு போனோம்… என் பெட்ல படுத்தோம்… எங்க ஊருக்கு போனப்போ எங்க ஃபிரெண்ட்ஸ் கூட சுத்துனோம்…. வெளியில இந்த சாப்பாடு சாப்பிட்டோம்” இப்படித் தான் இதுவரைக்கும் வந்துட்டு போன வாலன்டியர்ஸ் டாக்டரா இருக்கட்டும், டீச்சரா இருக்கட்டும், ஆஃபீஸர்ஸா இருக்கட்டும் இப்படித் தான் சொல்லி இருக்காங்க…. நீ சொல்றது ரொம்ப புதுசா இருக்கு” என்று சரவணன் கூறினான்.

“என்னமோ எனக்கு அப்படி தான் தோணுச்சு சொன்னேன்” என்று சனந்தா கூறினாள். “ஆன், அப்புறம் சனா இப்போ இந்த ரோட்ல நேத்து தான் கொஞ்சம் பாலம் வேலை எல்லாம் நடந்து முடிஞ்சிருக்கு அதனால ரோட் இன்னும் சரியா போடல நிறைய ஆடும் பத்திரமா புடிச்சுக்கோ” என்று சரவணன் முன்னெச்சரிக்கையாக கூறவும், சரி என்று சனந்தா பக்கத்தில் இருக்கும் கம்பியை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் முன்னிருக்கை பிடிக்க போகவும் விக்ரம் அந்த கையை இழுத்து அவன் கையுடன் சேர்த்து பிடித்துக் கொண்டான்.

அதை சற்றும் எதிர்பாராத சனந்தா அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, விக்ரம் அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி “பத்திரமா பிடிச்சுக்கோ!!” என்று குறும்பாக கூறினான். அவன் கூறியதில் சனந்தாவிற்கு பட்டாம்பூச்சிகள் பந்தாடியது அவளுடைய வயிற்றில். பின் தன்னை சுதரித்துக் கொண்டு எதுவும் பேச பேசாமல் அமைதியாக இருந்தாள்.

விக்ரம் வேண்டுமென்றே அவளுடன் சற்று நெருங்கி அமர்ந்து கொள்ள, சனந்தா முகத்தை கூட திருப்பாமல் அதே அதிர்ச்சியில் இருந்தாள். அந்தி சாய்ந்த லேசான இரவு, அவ்வூருக்கே உரித்தான சில்லென்ற காற்று, மலையின் வாசம், அவளின் ஸ்பரிசம் விக்ரமின் மனது சற்று தடுமாற தான் செய்தது.

அவனின் நெருக்கம், அவனின் சிரிப்பு, அவ்வப்போது அவன் கைகளை இறுக்கி பிடித்துக் கொள்ளும் ஸ்பரிசம், இதனால் பெண்ணுக்கே உரித்தான நாணத்தில் நினைந்துக் கொண்டிருந்தாள் சனந்தா.

இருவரும் அவர்களின் உலகத்தில் சிலாகித்துக் கொண்டிருக்க, அதை கலைக்கும் விதமாக, “விக்ரமுடைய அம்மா அப்பா உன்ன ரொம்ப மிஸ் பண்ணாங்க சனா” என்று சரவணன் கூற, சனந்தா தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஆமா ஆன்ட்டி என்கிட்ட ஃபோன்ல பேசும் போது கூட சொன்னாங்க…. எனக்கும் கொஞ்சம் அப்படித் தான் இருந்தது… ஏன்னா நான் அவங்க கூடயே இருந்ததுனாலையோ என்னமோ அவங்கள மிஸ் ரொம்ப பண்ணிட்டு தான் இருந்தேன் நானும்” என்று சனந்தா கூறினாள்.

“பசங்க எல்லாரும் கூட கேட்க ஆரம்பிச்சுட்டாங்க எப்போ வருவ எப்போ வருவேன்னு?? அவங்க கேட்டா அவங்களை கூட சமாதானம் பண்ணிடலாம் போல…. இதெல்லாம் விட இன்னொரு பெரிய குழந்தையை என்னால சமாதானப்படுத்தவே முடியல சனா” என்று சரவணன் விக்ரமை சுட்டிக்காட்டி கேலியாக கூறவும், “யாரை சொல்றீங்க சரவணன்??” என்று சனந்தா புரியாமல் கேட்டாள்.

“அது ஒரு பெரிய குழந்தை, அது ஒரு மீசை வச்ச குழந்தை, எல்லாத்துக்கும் கோபப்படுற குழந்தை, அந்த குழந்தை யாருன்னு நான் சொன்னேன்னா அந்த குழந்தை என்னை கொன்னாலும் கொன்னுடும்” என்று சரவணன் கூறவும் சனந்தாவுக்கு விக்ரமை தான் கூறுகிறான் என்பது புரியவும், விக்ரமை பார்த்து புன்னகைத்தாள்.

“அவன் தான் சொல்றான்னா நீயும் என்னை பார்த்து சிரிக்கிற” என்று விக்ரம் கேட்க, சனந்தா ஒன்னும் என்பது இல்லை என்பது போல் தலையை அசைத்தாள். “இல்ல பரவால்ல சொல்லு…. வாய் வரைக்கும் வந்திருச்சு சொல்லு” என்று விக்ரம் கேட்க, “நான் அப்புறமா சொல்றேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள் சனந்தா.

மூவரும் வண்ணம் கிராமத்திற்கு வந்தடைந்து சனந்தா கொண்டு வந்த லக்கேஜ் அனைத்தையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். சனந்தா முதலில் வீட்டுக்குள் சென்று ஆன்ட்டி!!! என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே போக, வள்ளி சனந்தாவை பார்த்ததும் சென்று அணைத்து கொண்டார்.

“சனா எப்படி இருக்க??” என்று வள்ளி கேட்க, “நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி…. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரிக்க, “நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் டா” என்றார் வள்ளி. “அங்கிள் எப்படி இருக்கீங்க??” என்று ஸ்ரீனிவாசனை பார்த்து கேட்க, “நான் நல்லா இருக்கேன் மா… வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று நலம் விசாரிக்க, “எல்லாரும் நல்லா இருக்காங்க அங்கிள்” என்று சனந்தா கூறினாள்.

“என்ன சனா இளச்சிட்ட” என்று வள்ளி கேட்க, “அம்மா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. அவ ரெண்டு நாள் தான போனா…. அதுவும் எங்க? அவங்க வீட்டுக்கு தானே போனா அதுக்குள்ள இளைச்சிட்டியானு கேக்குறீங்க பார்த்தீங்களா???” என்று சரவணன் கூறிக் கொண்டே வந்தான்.

“என்னடா இது இவ்வளவு லக்கேஜ் எடுத்துட்டு வரீங்க .. எத்தனை காட்டன் பாக்ஸ் டா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “நாங்க எங்க இருந்து இதெல்லாம் எடுத்துட்டு வந்தோம்…. எல்லாம் இவ எடுத்திட்டு வந்தது தான்… இதுல கொஞ்சம் கீழ வெச்சிட்டு மீதிய தான் கொண்டு வந்து இருக்கோம்” என்று சனாவை குறை கூறினான் சரவணன்.

“என்னம்மா இது இத்தனை பாக்ஸ் இருக்கு??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அதுல ரெண்டு பாக்ஸ் பசங்களோட ஸ்டடி மெட்டீரியல் அதெல்லாம் இருக்கு… இன்னொரு பாக்ஸ்ல எல்லாருக்கும் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்குனது இருக்கு…. மீதி இருக்கிற ரெண்டு பாக்ஸ் தான் எனக்கு தேவையான திங்க்ஸ், உங்களுக்கு வாங்கிட்டு வந்த திங்க்ஸ் இருக்கு அங்கிள்” என்று சனந்தா கூறினாள்.

“அப்படியா!!! சரி ஸ்டடி மெட்டீரியல்ஸ் எல்லாம் ரூம்ல வெச்சிடு விக்ரம்…. சாப்பிடுற பொருள் எல்லாம் நாளைக்கு எல்லாருக்கும் குடுத்து விடுவோம்” என்று ஸ்ரீனிவாசன் கூற. சரி என்றான் விக்ரம்.

சனந்தா ஒரு பையை எடுத்துக் கொண்டு வள்ளியிடம் கொடுத்த, “ஆன்ட்டி இது அம்மா கொடுக்க சொன்னாங்க” என்று நீட்ட, “என்னது சனா??” என்று வள்ளி கேட்டார். “எனக்கு தெரியாது ஆன்ட்டி, அம்மா கொடுக்க சொன்னாங்க நான் கொடுத்துட்டேன்…. இதை நான் பிரிக்க கூட இல்ல” என்று சனந்தா கூறினாள்.

“ஆங்… அப்புறம் அங்கிள் ரிப்போர்ட்ஸ் வந்துருச்சு… அந்த சேஜ் ஒரிஜினல் தான்… இங்க அத வெச்சு நம்ம எண்ணெய், டீ பாக்கெட் அதெல்லாம் ரெடி பண்ணலாம்… அதுக்கு தேவையான சின்ன சின்ன எக்யூப்மென்ட் நான் வாங்கிட்டு வந்து இருக்கேன்.. அது எப்படின்னு நான் சொல்லி தரேன்…. நம்ம ட்ரை பண்ணி பார்க்கலாம்” என்று சனந்தா கூற, “அப்படியா ரொம்ப சந்தோஷம் மா…. அது மூலமா இங்க இருக்கிற ஆட்களுக்கு ஒரு வேலையும் கிடைக்கும் வருமானம் கிடைக்கும் அதுல ரொம்ப சந்தோஷம்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.

“அங்கிள் இங்க பசங்களுக்கு எல்லாம் சும்மா நானே தானே ஒரு சிலபஸ் போட்டு பாடம் எடுத்துட்டு இருக்கேன்…. அம்மாவோட ஃப்ரெண்டு கோயம்புத்தூர்ல ஸ்கூல் பிரின்சிபல் அவங்க கிட்ட கரிக்குளம் டீடெயில்ஸ் எல்லாம் கேட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன்…. ஏன்னா பசங்க இங்க இருந்து ஊட்டில ஸ்கூலுக்கு போய் படிக்கும் போது எப்படியும் அவங்கள ரெண்டு கிளாஸ் ஆவது கம்மியா போடுறாங்கன்னு சொல்லி நீங்க வருத்தப்பட்டீங்க இல்ல…. இனிமே அப்படி நடக்காது நம்ம இந்த கரிக்குளம் தான் யூஸ் பண்றோம்னு சொல்லி அந்த ஸ்கூல்ல சர்டிஃபிகேஷன் வாங்கி தரேன்….. அப்ப அந்த சர்டிபிகேஷனோட போனா பசங்களுக்கு அந்த வயசுக்கு ஏத்த கிளாஸ்ல போட்டுடுவாங்க” என்று சனந்தா கூறவும், “நீ ரெஸ்ட் எடுக்க போனியா இல்ல இந்த வேலையெல்லாம் பார்க்க போனியா??” என்று சரவணன் கேட்டான்.

“இதெல்லாம் நான் இங்க இருக்கும் போதே அம்மா கிட்ட சொல்லி இருந்ததால அவங்க ஃபிரண்டு கிட்ட கேட்டுட்டு எனக்கு சொன்னாங்க…. நான் போனதும் அவங்க ஏற்கனவே கரிக்குளம் எல்லாமே ரெடி பண்ணி வெச்சிருந்தத கொடுத்தாங்க… அப்படியே அவங்க ஸ்கூல் சைடுல இந்த கரிக்குளம் தான் இந்த பசங்க படிச்சிருக்காங்கன்னு அவங்களும் சர்டிஃபிகேஷன் கொடுக்குறேன்னு சொன்னாங்க” என்று சனந்தா கூறினாள்.

“சரி நீ முதல்ல போயிட்டு கை கால் மூஞ்செல்லாம் கழுவிட்டு வா நம்ம சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பேசலாம்” என்று வள்ளி கூற, சரி என்று சனந்தா அவளுடைய அறைக்கு சென்றாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 34
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.