சனந்தா, சந்திரசேகர் மற்றும் லக்ஷ்மி மூவரும் கோயிலுக்கு சென்று, பின் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் சனந்தாவுடன் நேரத்தை செலவழித்து விட்டு பின் வீட்டிற்கு வந்தனர். “ரொம்ப நாளாச்சு இப்படி நம்ம எல்லாரும் வெளிய போய், விகாஷ் கூட இருந்தா நல்லா இருந்திருக்கும்… அவன் வரும் போதும் திருப்பி எல்லாரும் இப்படி ஒரு வாட்டி சும்மா வெளில போயிட்டு வரலாம்” என்று சந்திரசேகர் கூறவும், “கண்டிப்பா பா…. குட் நைட்” என்று சனந்தா கூறி அவளது அறைக்கு சென்றாள்.
அவளது அறைக்கு சென்று முதலில் அவளது கைபேசியை எடுத்து பார்க்க விக்ரம் எதுவும் மெசேஜ் செய்யவில்லை. “அவர் ஏதுவும் மெசேஜ் பண்ணலயே… காலைல நான் குட் மார்னிங் அனுப்பினதுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி இருக்காரு அவ்வளவு தான்…. ஒரு வேள நான் எதுவும் பண்ணலன்னு அவர் மெசேஜ் பண்ணலையோ…. இப்ப எப்படி நான் அவர் கூட கான்வர்சேஷனை ஸ்டார்ட் பண்ணுவேன்” என்று சனந்தா தடுமாறி கொண்டு இருந்தாள்.
“முதல்ல ஃபிரஷ் ஆகிட்டு வந்து அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்று சனந்தா அவளது இரவு உடையை மாற்றிக் கொண்டு வந்து பின் கைபேசியை எடுத்து, “சரி நம்மளே மெசேஜ் பண்ணுவோம்” என்று நினைத்து பார்க்க விக்ரம் ஒரு மெசேஜ் அனுப்பி அதை டெலிட் செய்திருந்தான்.
அதை பார்த்து, என்ன அனுப்புனீங்க?? என்று சனந்தா மெசேஜ் அனுப்பவும், “ஒன்னும் இல்லை” என்று மட்டும் ரிப்ளை செய்தான் விக்ரம். “இல்லை ஏதோ அனுப்பிட்டு டெலிட் பண்ணி இருந்தீங்க அதான் என்னன்னு கேட்டேன்” என்று சனந்தா அனுப்ப, “ஒன்னும் இல்லை” என்று மட்டும் ரிப்ளை செய்தான் விக்ரம்.
“என்ன இது நேத்து அவ்ளோ நல்லா பேசினாரு… இன்னிக்கு இப்படி பேசுறாரு… திரும்பவும் ஏதாவது கோவமா அவருக்கு என் மேல… நான் எதுவுமே பண்ணலையே” என்று சனந்தா குழப்பத்தில் இருக்க, “இது வேலைக்கு ஆகாது, அவர் இப்படி இருந்தா என்னாலயும் தூங்க முடியாது என்ன ஏதுன்னு அவர் கிட்டயே கேக்கணும்” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சனந்தா விக்ரமுக்கு ஃபோன் செய்தாள்.
“சரி மச்சான் உனக்கு ஃபோன் வந்துருச்சு….. நீ என்னை துரத்துறதுக்குள்ள நானா போயிட்டனா தான் அது எனக்கு மரியாதை… குட் நைட்!!!” என்று கூறி சரவணன் அவனது வீட்டிற்கு சென்றான்.
விக்ரம் ஃபோனை அட்டென்ட் செய்து ஹலோ!!! என்று பேசவும், ஹாய் சார்!!! என்று சனந்தா கூறினாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்கவும், “என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று சனந்தா அமைதியை கலைக்கும் விதமாக கேட்கவும், “என்னாச்சு எனக்கு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கேன்” என்று விக்ரம் கூற, சனந்தாவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.
“என்ன பேசுறது இப்ப இவர் கிட்ட” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டு, “இன்னிக்கு கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் அதான்….” என்று சனந்தா தயக்கத்துடன் பேசுவதற்குள், “அதான் ஸ்டேட்டஸ் பார்த்தேனே…. நீங்க ரொம்ப பிசியா இருந்தீங்களே” என்று விக்ரம் முகத்தில் அறைந்தார் போல் கூறினான்.
எவ்வளவு உற்சாகத்தில் நேற்று பேசினாளோ அவை அனைத்தும் கலைக்கும் விதமாக இன்று விக்ரம் பதில் அளிக்கவும் சனந்தா வருத்தத்துக்குள்ளானாள்.
“சார் நீங்க ஏதோ பிஸியாவோ இல்ல டென்ஷனாவோ இருக்கீங்கன்னு நினைக்கிறேன் நான் வேணா அப்புறமா பேசவா?” என்று சனந்தா வார்த்தைகளை திறட்டி பேசவும், “இவளுக்கு நான் ஏன் எப்படி இருக்கேன்னு ஒரு ஹின்ட் கொடுத்தா தான் அவளுக்கும் புரியும்” என்று விக்ரம் அவனையே கடிந்து கொண்டு, “ஆமா என்னெல்லாம் பண்ண இன்னிக்கு” என்று விக்ரம் கேட்டான்.
“ம்ம்…. அதான் சொன்னேனே காலையில ஹாஸ்பிடலுக்கு போனேன்… அப்புறம் எங்க டீம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பார்க்க போனேன்…. அதுக்கப்புறம் இன்னிக்கு நான் அனுப்பின சேஜ் ரிப்போர்ட்ஸும் வந்துருச்சு அதையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன்…. அப்பா வெளியில போலாம்னு கூட்டிட்டு போனாரு… கோயிலுக்கு போயிட்டு சாப்பிட்டு கொஞ்ச நேரம் வெளிய இருந்துட்டு வந்துட்டோம்” என்று சனந்தா சிறு பிள்ளை போல் விக்ரமிடம் அனைத்தையும் ஒப்பித்தாள்.
சனந்தா தயக்கத்துடன் அனைத்தையும் ஒப்பித்துக் கொண்டிருப்பதை விக்ரம் ரசித்துக் கொண்டிருந்தான். “அந்த ஸ்டேட்டஸ்ல இருந்தது எல்லாம் உன் ஃபிரண்ட்ஸா?” என்று விக்ரம் கேட்க, “ஆமா அவங்க கூட தான் நான் வேலை பார்க்குறான்” என்று சனந்தா கூற, “கொஞ்சம் பேர் தான் இருக்கீங்க… நீங்க மட்டுமா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க எல்லாரும் ஏதோ ஒரு வேலையா போயிருந்தாங்க…. நான் போனப்ப இவங்க மட்டும் தான் இருந்தாங்க” என்று சனந்தா கூறினாள்.
“ஃபிரண்ட்ஸ் பெருசா இல்லன்னு சொன்ன…. ஆனா, எல்லார் கூடயும் நின்னு ஃபோட்டோ எடுக்கிற அளவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான் போலயே” விக்ரம் கேட்க, “ஏன் அவர் இதையே திருப்பி திருப்பி கேட்கிறாரு அப்படி என்ன இருக்கு அந்த ஃபோட்டோல…. என்ன கேட்க வராரு இவர், எனக்கு ஒன்னும் புரியலையே” என்று சனந்தா மனதில் குழப்பத்துடன், “அவங்க என்னோட டீம் சார் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணோம்னு ஒரு ஃபோட்டோ எடுத்தோம் அவ்வளவு தான் சார்” என்று சனந்தா பேசிக் கொண்டே அவள் அந்த புகைப்படத்தில் என்ன தான் உள்ளது என்று பார்க்க, “ஒரு வேள சீனியர் மகேஷ் பக்கத்துல நின்னுட்டு இருக்கேன் அதனால விக்ரம் அப்படி பேசுறாரோ” என்று அவளுக்கு புரிய ஆரம்பித்தது.
“ஃபோட்டோ எடுத்தா உங்களுக்குள்ளையே வெச்சுக்க வேண்டியது தானே… ஏன் இப்படி ஸ்டேட்டஸ்ல எல்லாம் போடணுமா என்ன??” என்று விக்ரம் கேட்க, “ஆமா சார் அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்…. நான் மட்டும் இல்ல நான் போன உடனே அங்க இருக்குற எல்லாருமே என்னை ரொம்ப மிஸ் பண்ணாங்கனு சொன்னாங்க…. குறிப்பா என்னுடைய சீனியர் ரொம்ப மிஸ் பண்ணாங்களாம் அதனால ஸ்டேட்டஸ்ல போடலாமேன்னு ஒரு ஃபோட்டோ போட்டேன்” என்று சனந்தா கூறினாள் விக்ரமை வெறுப்பு ஏற்ற.
“அது என்ன சீனியர்?? அண்ணான்னு கூப்பிடலாம்ல” என்று விக்ரம் கேட்க, “யார சொல்றீங்க??” என்று சனந்தா கேட்க, “ம்ம்.. அந்த ஃபோட்டோல இருக்குறவங்கள தான்” என்று விக்ரம் கேட்க, “அங்க இருக்குற எல்லாருமே என்னுடைய சீனியர்ஸ் தான்…. எனக்கு லெப்ட் சைடு இருக்கிற அக்காவும் என்னுடைய சீனியர் தான்…. என்னோட ரைட் சைடுல இருக்குற அவரும் என்னோட சீனியர் தான்…. பின்னால இருக்குற அவரும் சீனியர் தான்… இன்னொரு அக்காவும் என்னோட சீனியர் தான்” என்று சனந்தா கூறினாள்.
“அது என்ன அவங்க மட்டும் அக்கா இவங்க மட்டும் வெறும் சீனியர்… அண்ணா இல்லையா உனக்கு???” என்று விக்ரம் கூறவும், “அது தெரியலைங்க சார் முதல்ல இருந்தே சீனியர் சீனியர்னு சொல்லி பழகிட்டேன் அதனால தான்” என்று சனந்தா கூறவும், “அண்ணான்னு கூட கூப்பிடலாம் தப்பில்லையே” என்று விக்ரம் கூற, “கூப்பிடலாம் தான்…. ஆனா, என்னமோ எனக்கு அது வரல சார்” என்று சனந்தாவும் அவனுக்கு ஈடு கொடுத்து பேசவும், “உனக்கு அப்படி கூப்பிட வரலைன்னா எனக்கு ரொம்ப கோபம் வருது” என்று விக்ரம் முணுமுணுத்துக் கொண்டான்.
அது சனந்தாவின் காதில் விழ அவள் அதை ரசித்துக் கொண்டிருந்தாள். “ம்ம்…. அவர் பேரு மகேஷ் அவர் தான் எங்க டீமோட ஹெட், அப்புறம் அவருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு… கூடிய சீக்கிரம் கல்யாணம்னு சொன்னாரு இன்னிக்கு பேசும் போது” என்று சனந்தா கூறவும், “இவளுக்கு எல்லாம் புரியுது வேணும்னே தான் என்னை சீண்டி பார்க்குறா இவ” என்று விக்ரம் அவனுக்குள் நினைத்துக் கொண்டு, “சரி ஓகே அத ஏன் இப்ப என்கிட்ட சொல்ற??” என்ற விக்ரம் கேட்க, “சும்மா சொன்னேன்…. தோணிச்சு அதனால… ஏன் சொல்ல கூடாதா??” என்று சனந்தா கேட்க, “சொல்லலாம் சொல்லலாம் என்ன வேணாலும் சொல்லலாம்” என்று புன்னகைத்துக் கொண்டான் விக்ரம்.
“ஆங்…. சார் நாளைக்கு நானே ஊட்டி வரைக்கும் வந்துடுவேன்… அப்பா ஹோட்டல்ல வேலை இருக்குன்னு சொன்னாரு அதனால நானும் அப்பாவும் ஊட்டி வரைக்கும் வந்துருவோம் அங்கிருந்து வேணா என்னை பிக் பண்ணிக்கோங்க” என்று சனந்தா கூற, “கிளம்பும் போது இவன் கூடயா கிளம்பனும்னு பேசுன… இப்போ என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு என்கிட்ட கேக்குற… ஏன் சரவணா கிட்ட கேட்க மாட்டியா??” என்று விக்ரம் கூற, “யாரா இருந்தாலும் சரி நாளைக்கு சாயந்திரம் போல ஊட்டிக்கு வந்துருவேன் அப்போ வந்து பிக் பண்ணிக்கோங்க” என்று சனந்தா கூறினாள்.
“அப்ப சரவணனையே வர சொல்லிக்கோ என்கிட்ட எதுக்கு சொல்ற??” என்று விக்ரம் போலியாக கோபித்துக் கொள்ள, “சரவணன் வந்தா சந்தோஷம் தான்….. நீங்க வந்தீங்கன்னா ரொம்ப சந்தோஷம்” என்று சனந்தா கூறவும், விக்ரம் அதை ரசித்து புன்னகைத்துக் கொண்டான்.
இப்படி இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு பின் உறங்க சென்றனர். சனந்தா மறு நாள் காலை எழுந்து விக்ரமுக்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டு, “உங்களுக்கு ஏதாவது வேணுமா நான் இங்க இருந்து வாங்கிட்டு வரேன்” என்று சனந்தா குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
“எனக்கு எதுவும் வேணாம் நீ மட்டும் வா போதும்” என்று விக்ரம் அதற்கு ரிப்ளை செய்யவும், அதை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்து சனந்தா என்ன கூறுவது என்று தெரியாமல் வெறும் பிளஷ் ஸ்மைலியை மட்டும் அனுப்பினாள்.
“மச்சான் அவள கூட்டிட்டு வர போகலையா நீங்க??” என்று அபிலாஷ் கேட்க, “இல்ல அவ ஊட்டி வரைக்கும் வந்திடுரேன்னு சொல்லிட்டா…. அவங்க அப்பா கூட சாயந்திரம் போல வந்துடுறேன்னு சொல்லி இருக்கா அதனால ஊட்டிக்கு போய் நம்ம கூட்டிட்டு வந்துட்டா போதும்” என்று விக்ரம் கூறினான்.
“சரி சனா வந்ததுக்கு அப்புறமா அவளுடைய மெடிசன் லிஸ்ட் மட்டும் எனக்கு கொஞ்சம் கண்டிப்பா வேணும்… அப்ப தான் நான் அங்க ஹாஸ்பிடல்ல விசாரிக்க சொல்லிருக்கேன்ல அதையும் இவ குடுக்குறதையும் வெச்சு எங்க பிரச்சனைன்னு கண்டு பிடிக்கலாம்” என்று அபிலாஷ் கூற, “அதை வாங்கிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல…. ஏன்னா அவ பிரிஸ்கிரிப்ஷன் ஃபோட்டோ எடுத்து அவளோட ஃபோன்லயே வெச்சிருப்பா அதை ஒரு வாட்டி என்கிட்ட சொல்லி இருக்கா நான் அதைக் கேட்டு வாங்கி தரேன்” என்று சரவணன் கூறினான்.
லக்ஷ்மிடம் விடை பெற்றுக் கொண்டு சனந்தா மற்றும் சந்திரசேகர் ஊட்டிக்கு புறப்பட்டனர். வழியில் சிறிது நேரம் பேசிக் கொண்டே பின் சிறிது நேரம் உறங்கியும் விட்டாள் சனந்தா. சந்திரசேகர் தனக்கு மீட்டிங் இருப்பதினால் சனந்தாவை மார்க்கெட்டுக்கு அருகில் இறக்கிவிட்டு, “பத்திரமா போ ரீச் ஆனதும் எனக்கு ஃபோன் பண்ணு…. இப்ப வந்துருவாங்கல ஏன்னா எனக்கு டைம் ஆகுது அதனால தான் சனா… இல்லேன்னா நம்ம ஹோட்டல் கிட்ட வர சொல்லு அங்க வெயிட் பண்ணு” என்று சந்திரசேகர் கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நீங்க போங்க அவங்க இப்ப வந்துருவாங்க” என்று சனந்தா உறுதி அளித்தாள்.
சந்திரசேகர் புறப்பட்ட சில நிமிடங்களில் சரவணன் ஃபோன் செய்து, எங்க இருக்க?? என்று கேட்க, “நம்ம ஒரு வாட்டி மார்க்கெட்டுக்கு வந்தோம்ல அதுக்கு கொஞ்சம் முன்னாடி நின்னுட்டு இருக்கேன்” என்று சனந்தா கூறவும், “ஆன்…. நான் உன்னை பார்த்துட்டேன்” என்று சரவணன் ஃபோனை வைத்தான்.
“சரவணன் வராரா அப்போ விக்ரம் வரலையா??” என்று சனந்தா சற்று ஏமாற்றத்துடன் இருந்தாள். “ஹாய் சனா எப்படி இருக்க?? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று சரவணன் உற்சாகத்துடன் கேட்க, “ஆல் குட்… எல்லாரும் நல்லா இருக்காங்க” என்று கூறினாள் சனந்தா.
“எப்படி போச்சு உனக்கு இந்த ஹாலிடேஸ்??” என்று சரவணன் கேட்க, “ரொம்ப நல்லா போச்சு” என்று சனந்தா கூறினாள். “நாங்க உன்னை அனுப்பும் போது பேக் பண்ணி அனுப்பினத விட நீ என்ன ரிட்டன் வரும் போது இவ்வளவு எடுத்துட்டு வந்து இருக்க??” என்று சரவணன் அவளது லக்கேஜ் பார்த்து கேலியாக கூற, “இல்ல,.. இதுல பசங்களுக்கு ஸ்டடி மெட்டீரியல்ஸ் இருக்கு அப்புறம் எல்லாருக்கும் சின்ன சின்னதா எதாவது வாங்கணும்னு தோணுச்சு அதான் வாங்கிட்டு வந்தேன்….. அதுவும் இல்லாம பிரகாஷ் அங்கிள் அனுப்பினதும் இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“இவர் கிட்ட எப்படி கேட்குறது விக்ரம் வரலையான்னு” என்று தயக்கத்துடன் சனந்தா நின்று கொண்டிருக்க, என்ன?? என்று சரவணன் கேட்க, ஒன்றும் இல்லை என்பது போல் தலையை அசைத்து அமைதியாகிவிட்டாள்.
சரவணன் அவளது லக்கேஜை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “இவர் தான விக்ரமுக்கு நம்பர் கொடுத்தாரு… எப்படியும் நான் பேசுறேன்னு விக்ரம் இவர் கிட்ட சொல்லி இருப்பாரு… எப்படியாவது கேட்டுடு சனா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சரவணா!! என்று அழைக்க போகவும், சனந்தாவின் காதில் ஓய்!!! என்று அழைக்கவும் அவள் சட்டென்று பயத்தில் திரும்பி பார்க்க அவளுக்கு மிக அருகில் அங்கே விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.

Author: Bhavani Varun
Article Title: Chapter 33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.