பாகம் -31

அப்போ நான் கூட தான் நங்கையை பார்த்ததும் லவ் 💕 பண்ணேன்.

அப்போ என் காதல் பொய்யா?

😳😳😳 விழித்தவன்

என்ன மாறா நீயும் இப்படி புரியாம பேசற?

என் வயசு என்ன அவ வயசு என்ன?

காதலுக்கு ஏது மாமா வயசு எப்பவும் காதல் காதல் தான்.

மாமா இதோ பாருங்க ஆளையோ வயசையோ அழகையோ பார்த்து வரது கிடையாது காதல்💕 , பார்த்ததும் தோணும் இவங்க தான் நமக்கானவங்கனு அப்போ முடிவு தெய்ரியமா எடுக்க தெரியணும்.

சத்யா மாதிரி.

சும்மா கொலத்தனமா காரணம் சொல்ல கூடாது உங்களை மாதிரி,🤨

மாறா 😡!!!!!!?????

அட சும்மா நிறுத்துங்க மாமா!!!

ஒரு பொண்ணு இவளோ வெளிப்படையா தைரியமா வந்து லவ் வ சொன்னா அவளை இப்படி கேவள படுத்தியா அனுப்புவிங்க?!!!!!

உங்கள என்னவோ நினட்சேன்?🤗

ஆனா நீங்களும் மத்தவங்க மாதிரி தான்.😔

இப்போ என்ன உங்களுக்கு எனக்காகவே உங்க வாழ்க்கை முழுசா தியாகம் பண்ணிட்டிங்கனு இந்த உலகம் உங்களை புகழனும் நான் அயசுக்கும் குற்ற உணர்ச்சியோடு வாழனும் அதுக்கு தானே இப்படி பண்றீங்க.

ஜஸ்ட் ஷட் ஆஃப் மாறா?

என்ன என்னவோ பேசிட்டு இருக்க .

சத்யா உனக்கு கால் பண்ணி சொன்னாலோ?

சத்யா எதுக்கு கால் பண்ணனும் நேத்து வீட்டுக்கு வந்ததில இருந்தே முகம் சரி இல்லே அத பார்த்தா கூட கண்டு பிடிக்க முடியாதவன் இல்லே நான்.

எப்படி சிரிச்சி சந்தோசமா இருந்த பொண்ணு அவ 😔 இப்போ சிரிக்கறதையே மறந்துட்டா. எல்லாம் உங்களால.

நான் அவ நல்லதுகாக தான் சொல்லறேன் மாறா.

இனியும் உங்க கிட்ட பேசுறதுல எந்த புரோஜனமும் இல்லே.

ஆனா ஒன்னு உங்க லைஃப் ல ஒரு நல்ல பொண்ண மிஸ் பண்றீங்க என்னைக்காவது இத நினட்சி கண்டிப்பா ஃபீல் பானுவிங்க. ஆன அப்போ எல்லாம் கை மீறி போய் இருக்கும்.

இதுக்கு மேல உங்க விருப்பம்.

என்ற படி அங்கிருந்து மாறன் செல்ல

அண்ணா கொஞ்சம் யோசிங்க என்று நங்கையும் அவன் பின்னே சென்றாள்.

சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தவன்.

ஒரு முடிவுக்கு வந்தான்.


காலை கதிரவன் தன் கடமையை ஆற்ற கிழக்கில் மெல்ல உதயமாக

பரபரப்பாக ஷ்யாம்,

வேலு கொஞ்சம் இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து கார்ல வைங்க.

சரிங்க ஷ்யாம் தம்பி.

கையில் ஆஃபீஸ் ஃபயில் ளுடன் தேநீர் அருந்தி கொண்டிருந்த ஆஷோக்கிடம்

அப்போ நான் கிளம்பறேன் என்றான் ஷ்யாம்.

தேநீரை ஒரு மிடறு அருந்தியவர் நிமிர்ந்தும் பாராமல்.

ம்ம் ஓகே போனதும் இன்பார்ம் பண்ணு, அத்தைய விசாரிட்சதா சொல்லு சரி அப்போ நானும் ஆபீஸ் கிளம்பறேன்.

என்ற அஷோக் சரி என்று ஷ்யாம் முடிப்பதற்குள் எழுந்து சென்று விட்டார்.

ஷ்யாமை அஷோக்கிற்கு பிடிக்காது அஷோக்கயும் ஷயாம்மிற்கு பிடிக்காது.சீதா திருமணத்தில் கடும் எதிர்ப்பை காட்டியவன் நம் ஷ்யாம் தான்.

அப்போதில் இருந்து இப்போது வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்துக்கொள்வதில்லை அப்படியே பார்த்தாள் பேசிகொள்வதில்லை

பேசினாலும் ஓரிரு வார்த்தைகள் தான் அதற்கு மேல் மிகாது.😴

இத்தனை வருடத்தில் ஷ்யாமின் அலை பேசி எண் கூட அஷோக்கிடம் இல்லை என்பதே பெரிய ஆட்சரியம்.

🐀×🐈

சரி மாறா நங்கைய ஒழுங்கா பத்திரமா பாத்துக்கோ உன் கோபத்தை எல்லாம் பாப்பா கிட்ட காட்டாத.

ஓகே மாமா,

அமைதி

அப்போ நான் சொன்னது பத்தி நீங்க யோசிக்கவே இல்லே ல.

சத்யாவுக்கு ஒன் டைம் கால் பண்ணுங்க மாமா.

நங்க வரேன் என்றவன் ஏர்போர்ட்க்கு கிளம்பினான்.

டிரிங் டிரிங்....

ஹலோ சொல்லுங்க அக்கா

சத்யா ஷ்யாம் அண்ணா லண்டன் கிளம்பிட்டாரு,இன்னும் ஹாஃப் ஹார்ஸ் தான் இருக்கு ஃப்ளைட் கிளம்ப.

அதுக்கு என்ன என்ன பண்ண சொல்றீங்க அக்கா. போன போகட்டும்

ஹே என்ன சொல்ற.

ஆமாம் கா நான் உண்மைய தான் சொல்றேன் அவர் போகட்டும்.

ஒரு பொண்ணா நான் என் கடைசி எல்லை வர இறங்கி கெட்டுப்பாத்துட்டேன் ஆனா அவர் என்னையும் என் பெண்மையையும் அசிங்க படுத்திட்டார்.

சோ இனி அவர் போக்குல அவர விட்றுங்க கா. எனக்குனு தன்மானம் இருக்கு.

கட்டாய படுத்தி யாரும் காதல பெற முடியாதுனு தெரிஜிகிட்டேன் என்றவள் அழைப்பை துண்டிதாள் சத்யா.

இதை மாறனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.

என்ன சார் என்று மாறனிடம் கேட்டவள்,

விட்டுட்டு என்றான் மாறன்.

ஏர்போர்ட் இறுதி வாயிலைக் கடந்த ஷ்யாம் யாரோ அலைப்பதைப் போல் உணர்ந்து திரும்ப அங்கு யாரும் இருந்திட வில்லை.

அவன் மனதும் அவளைத் தான் தேடியது போழும்.

இது நமக்கு புரிகிறது இந்த ஷ்யாம் மரமண்டைக்கு தான் புரியவில்லை.😄

அவ்வாறாக ஃப்ளைட்டும் 🛫✈️டேக் ஆஃப் ஆனது.

ஆம் ஷ்யாமை யாரோ அழைத்தது உண்மைதான்.ஆனால் வாயால் அல்ல அவள் மனதால் ❤️

ஆம் நம் சத்யாவும் ஏர்போர்ட்டில் தான் இருந்தாள், என்ன தான் நங்கையிடம் வீர வசனம் பேசி இருந்தாலும்.

அவன் செல்வதை அறிந்த அவள் மனம் ஆற்பரிக்க ❤️‍🔥துவங்கியது,இதற்கு மேலும் அவனை காணவில்லை என்றாள் அவள் இதயம் வெடித்தே விடும்💔 என்பதை உணர்ந்தவள், தன்னவனை காண மனம் ஏங்கியது.

அடுத்த நொடி காரை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் வந்தடைந்தாள்,

அங்கே பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்து இருந்த ஷ்யாமைக்கண்ட உடன் தன்னை அறியாமல் அவனை நோக்கி ஓடியவள் கால்கள் பின்னிகொண்டது

உனக்கு என் மேலே இருக்கறது "செக்சுவல் அட்டிராக்சன்"
அதுக்கு நிறைய பேர் கிடைப்பாங்க
அதுக்கு நான் ஆள் இல்லே

என்ற அந்த ஒற்றை வார்த்தை அவளை மேலும் நகர விடாமல் செய்தது.

அப்படியே அவன் காணா வண்ணம் மெதுவாக அவன் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கு பின் இரு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.

கண் இமைக்கவும்வில்லை பாவம் அவளுக்கு காட்சிகள் யாவும் அவன் பிம்பமே.

அலோன்ஸ்மென்ட் ஒலிக்க உள்ளே சென்றவனை மறைந்து நின்று பார்த்தவள் 😔💚 ஐ மிஸ் யூ ஷ்யாம் என்று கண்ணீர் மழ்க உதடுகள் துடிக்க கூற தான் ,

தன் உள்ளுணரவு அறிந்து திருப்பினான் ஷ்யாம்.
ஆனால் அவளோ அவன் பார்க்கும் முன்னே போய் ஒழிந்தாள்.


சரண்யா மா அங்க மாறன் சார் ரூம்க்கு பக்கத்துல இருக்கற ரூம் யாரோடது பூட்டியே கிடக்கு.

காய்கறிகளை நறுக்கிக் கொண்டே கேட்டவளை ஒரு பார்வைப் பார்த்த சரண்யா.
இத நீ வந்த அன்னைக்கே கேபீனு எதிர் பார்த்தேன்,ஆன இப்போ தான் கேக்குற.

ம்ம் அது சீத்தா அம்மா ரூம் மா,மாறன் தம்பியோட அம்மா,

ஓஹோ.....

ஆமாம் அவங்க பேருல மட்டும் இல்லே குணத்திலையும் சீதா தான்.

அழகுனா அப்படி ஒரு அழகு,சாந்தமான முகம், எல்லார்கிட்டயும் கள்ளம் கபடம் இல்லாம பலகுவாங்க.

ரொம்ப அன்பானவங்க.

மாறன் தம்பினா கொள்ள பாசம்,
உசுரே அவர் தான் பாத்துகோங்களேன்.

அப்படியா? ☺️

மேலே சொல்லுங்க மா சீதா அம்மா பத்தி என்று ஆவலாய் கேட்டவளை

அத்தேனு சொல்லு மா நங்கை.


உங்க அத்தே கொணத்துல தங்கம் அடுத்தவங்களுக்கு கேட்காமலே உதவி செய்வாங்க , ஏன் நானும் என் பொண்ணும் இப்போ சந்தோசமா வாழரோம்னா அதுக்கு சீதா அம்மாவும் மாறன் தம்பியும் தான் காரணம்.


என்றிட கன்னத்தில் கை வைத்தபடி பார்திருந்தாள் நங்கை.

என் பொண்ணு காலேஜ் படிக்கரா அதுக்கு காரணம் மாறன் தம்பி தான்.

அம்மா போனதுக்கு அப்பறம் தம்பி தான் எங்களுக்கு எல்லாமே , லண்டன் போனதுக்கு அப்பறம் ஒரு தடவ கூட பேசல ஆன மாசம் மாசம் எங்களுக்கு வேண்டியது எல்லாம் கரெக்ட் டா வந்து சேர்ந்திடும்.

அது தான் மா எங்க மாறன் தம்பி சீதா அம்மா வாரிசு ஆட்சே என்று பெருமை பட்டு கொண்டார் சரண்யா.

டிராகுலா இவ்வளவு நல்லவரா.
ச்ச இது தெரியாம தப்பா புறிஞ்சிகிட்டோமே.என்று எண்ணியபடி கேட்டுக்கொண்டு இருக்க

உள்ளே நுழைந்தார் அஷோக்.

சரண்யா தேவ இல்லாம குடும்ப கதை எல்லாம் ஏன் சொல்லிட்டு இருக்க யார்ட எத சொல்லணும் எத சொள்ளக்குடாதுனு உங்களுக்கு வர வர தெரியாம போட்சீ.

என்று அதட்ட

நங்கைக்கு தான் முகம் வாடி போனது.

கண்கள் கலங்க அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள் எங்கே அழுது விடுவோமோ என்ற பயத்தில்.

சாரி நங்க திடிறுனு ஆபீஸ் ல இருந்து கால் வர அவசரமாக போக வேண்டியது இருந்தது.

ஒரு கிளைன்ட் நம்ம பிராஜக் ட ரிஜெக்ட் பண்ண போறத சொல்லி தகவல் வந்துட்சி அத என்னனு பாக்குற அவசரத்தில் உன் கிட்ட கூட சொல்லாம போய்ட்டேன் என்றான் மாறன்.

பரவா இல்லை மாறன் சார்?

ஏன் என்னாட்சீ வாய்ஸ் டல்லா இருக்கு?
ஒன்னு
ம் இல்லே தல வலி?

டாக்டர் ர கூப்பிடவா? எனக்கு ஃபோன் பண்ணிருக்க வேண்டியது தானே.


தொடரும்..
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.