CHAPTER-31

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் : நீ என‌க்காக‌தா wait ப‌ண்றியா?

ச‌ந்ரா : ஆமா, உன‌க்காக‌தா wait ப‌ண்றே.

அர்ஜுன் அவ‌ள் அருகில் அம‌ர்ந்து,

அர்ஜுன் : அப்போ சொல்லு.



அர்ஜுன் மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன் பார்த்தான்.

சந்ரா : அது......

அர்ஜுன் : கொஞ்சோ க‌ஷ்ட்ட‌மாதா இருக்கும், ஆனா Please சொல்லீறு.

ச‌ந்ரா : அது என்ன‌ன்னா....

அர்ஜுன் : (மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன்) சொல்லு.

ச‌ந்ரா : அது...Thank you.

அர்ஜுனின் முக‌ம் சுருங்கிவிட்ட‌து.



அர்ஜுன் : இத‌தா சொல்ல‌வ‌ந்தியா?

ச‌ந்ரா : ஆமா. எப்பிடி சொல்ற‌தின்னே தெரிய‌ல‌. நீ என‌க்கு அவ்ளோ ந‌ல்ல‌து ப‌ண்ணியிருக்க‌. Thank you so much அர்ஜுன். நீ உண்மையில‌யே ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌. நா உன்ன இவ்வளவு நாள் தப்பா நெனச்சிட்டிருந்திருக்கே. அயம் வெரி சாரி அர்ஜுன்.

அர்ஜுன் வ‌ருத்த‌தை ம‌றைத்து, போலியாக‌ சிரித்தப்ப‌டி,

அர்ஜுன் : It's Ok.

ச‌ந்ரா : செரி நா தூங்கட்டுமா?

அர்ஜுன் : ஓ sorry. (க‌ட்டிலில் இருந்து இற‌ங்கி) நீ தூங்கு. நானும் போய் ப‌டுத்துக்கிறே.

அர்ஜுன் Sofaவில் ப‌டுத்துக்கொண்டான். ச‌ந்ரா க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டாள். ச‌ந்ரா தூங்கிவிட்டாள். அர்ஜுன் தூங்காம‌ல்,



அர்ஜுன் : (ம‌ன‌திற்க்குள், வேத‌னையுட‌ன்) இன்னிக்கு நீ ஏ என்ன‌ ஏமாத்துன‌ ச‌ந்ரா? நா எவ்ளோ ஆசையா எதிர்ப்பாத்தே தெரியுமா? நீ உன்னோட‌ காத‌ல‌தா சொல்ல‌ப்போற‌ன்னு. ஆனா நீ என்ன‌ ஏமாத்திட்ட‌. ஏ உன்னோட‌ காத‌ல‌ ம‌றைக்கிற‌ ச‌ந்ரா? ஏ?

அப்போது திடீரென‌ ச‌ந்ராவுக்கு Call வ‌ந்த‌து. அவ‌ள் திடுக்கென‌ எழுந்து பார்த்தாள். அர்ஜுன் தூங்குவ‌துப்போல் ந‌டித்தான்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) அபியா?

ச‌ந்ரா Call அட்ட‌ன் ப‌ண்ணினாள்.

ச‌ந்ரா : (மெதுவாக‌) எதுக்காக‌ இந்த‌ நேர‌த்துல‌ Call ப‌ண்ண‌?



அபி : நா உங்க‌ வீட்டுக்கு வெளிய‌தா இருக்கே. நீ வெளிய‌ வா.

ச‌ந்ரா : (மெதுவாக‌) நீ இங்க‌ என்ன‌ ப‌ண்ற‌?

அபி : நீ மொத‌ல்ல‌ வெளிய‌ வா.

அபி க‌ட் ப‌ண்ணிவிட்டான். ச‌ந்ரா அர்ஜுனை பார்த்தாள். அவ‌ன் தூங்குவ‌துப்போல் ந‌டித்தான். அவ‌ன் ந‌ன்றாக‌ தூங்கிக்கொண்டிருப்ப‌தாக நினைத்து, ச‌ந்ரா வெளியே சென்றாள். அபி இருக்கும் இட‌த்திற்க்கு வ‌ந்து,

ச‌ந்ரா : (கோப‌மாக‌) இங்க‌ எதுக்காக‌ வ‌ந்த‌?

அபி : நீ எதுக்காக‌ அப்பிடி ப‌ண்ண‌? அர்ஜுன‌ எதுக்காக‌ காப்பாத்துன‌?

ச‌ந்ரா : ஏன்னா அவ‌ சாக‌வேண்டிய‌வ‌ இல்ல‌. அவ‌னோட‌ போன‌ ஜென்ம‌த்து த‌ப்புக்காக‌, இந்த‌ ஜென்ம‌த்துலையும் அவ‌ன‌ கொல்ல‌னுமா?



அபி : நீ என்ன‌ பேசுற‌ ச‌ந்ரா? அவ‌ ந‌ம்ப‌ வாழ்க்கைய‌வே அழிச்ச‌வ‌.

ச‌ந்ரா : அதுக்காக‌தா அவ‌ன‌ நா போன‌ ஜென்ம‌த்தில‌யே கொன்னுட்ட‌ல்ல‌? இந்த‌ ஜென்ம‌த்துல‌ நா வாழுற இந்த வாழ்க்கையே அவன் கொடுத்தது தான். அவ இல்லன்னா இன்னிக்கு நா அனாத.

அங்கு அர்ஜுன் க‌ண் திற‌ந்து பார்த்து,



அர்ஜுன் : இந்த‌ நேர‌த்துல‌ ச‌ந்ரா எங்க‌ போனா?

அர்ஜுனும் வெளியே வ‌ந்தான்.
அபி, ச‌ந்ராவின் தோள்கள் மீது கைவைத்து,

அபி : அதுக்காக‌ அவ‌ன‌ சும்மா விட்ட‌ர‌லாங்கிறியா?

தூர‌த்தில் இருப்ப‌தால், அர்ஜுனுக்கு அவ‌ர்க‌ள் பேசுவ‌து கேக்க‌வில்லை. ஆனால் அபி, ச‌ந்ரா மீது கைவைத்து பேசுவ‌தை பார்த்து,



அர்ஜுன் : (கோப‌த்துட‌ன்) என்ன‌ த‌யிரியோ அந்த‌ தொட‌ப்ப‌ குச்சிக்கு? என்னோட‌ பொன்டாட்டி மேலையே கை வெச்சு பேசுறா. இப்ப‌வே இவ‌ன‌,



அபியிட‌ம் செல்ல‌ காலை முன்னால் வைத்தான்.

அர்ஜுன் : இல்ல‌. நா எதுவும் ப‌ண்ண‌ கூடாது. ச‌ந்ரா இவ‌ன‌ பாக்க‌ இந்த‌ நேர‌த்துக்கு வெளிய‌ வ‌ந்திருக்கா. அப்போ ச‌ந்ராக்கு என்ன‌ பிடிக்க‌ல‌, அவ‌ளுக்கு அந்த‌ தொட‌ப்ப‌ குச்சியதா புடிச்சிருக்கு. அத‌னால‌தா அவ‌ எங்கிட்ட‌ காத‌ல‌ சொல்ல‌ல‌. (வருத்தத்துடன்) ஏன்னா அவ‌ என்ன‌ காத‌லிக்க‌வே இல்ல‌. அவளுக்கு என்மேல காதலே வரல.

அர்ஜுன் வேத‌னையுட‌ன் அவ‌னுடைய‌ அறைக்கு சென்றுவிட்டான்.

இங்கு அபி : சொல்லு ச‌ந்ரா. அவ‌ன‌ சும்மா விட‌ப்போறியா?

சந்ரா அவனுடைய கையை தட்டிவிட்டுவிட்டு,

ச‌ந்ரா : ஆமா. எனக்கு இந்த புது வாழ்க்கைய குடுத்தது மட்டும் இல்லாம, என்னோட‌ பழைய வாழ்க்கையோட அக்காவையும் எங்கூட‌ சேத்து வெச்சிருக்கா.

அபி : அத‌னால‌ என்ன‌ ச‌ந்ரா? அவ‌ உன்ன‌ காத‌லிக்கிறா, அத‌னால‌தா உன‌க்காக‌ இவ்ளோ ப‌ண்றா. அவ‌ உன‌க்காக‌ என்ன‌வேணாலு ப‌ண்ணுவா. ஆனா ந‌ம்ப‌ ரெண்டு பேரையும் சேர‌விட‌மாட்டா.

ச‌ந்ரா : அவ‌ என‌க்காக‌ என்னவேணாலும் ப‌ண்ணுவான்னு என‌க்கும் தெரியும்.

அபி : ந‌ம்ப‌ ரெண்டு பேரும் சேர‌னுன்னா, அவ‌ன‌ கொன்னாதா முடியும். இல்ல‌ன்னா, போன‌ ஜென்ம‌த்துல‌ ந‌ட‌ந்த‌துதா இப்ப‌வும் ந‌ட‌க்கும்.

ச‌ந்ரா : நீ என்ன‌ பேசுற‌ அபி? ந‌ம்ப‌ எதுக்காக‌ சேர‌ணும்? அதுக்கான‌ நேரோ க‌ட‌ந்து போயிரிச்சு. இன்னு நீ ஏ அத‌ ப‌த்தி பேசிட்டிருக்க‌யா?

அபி : நேரோ க‌ட‌ந்து போயிரிச்சா? அப்பிடின்னா என்ன‌ அர்த்தோ ச‌ந்ரா?



ச‌ந்ரா : நா இப்போ அர்ஜுனோட‌ மனைவி. அதுதா அர்த்தோ.

அபி : (கோப‌த்துட‌ன்) அப்போ நீ அவ‌ன‌ புருஷ‌னா ஏத்துகிட்டியா? சொல்லு ச‌ந்ரா. சொல்லு அவ‌ன‌ ஏத்துகிட்டியா?

ச‌ந்ரா : (கோப‌த்துட‌ன் ) ஆமா நா அவ‌ன‌ ஏத்துகிட்டேன். அதுனால‌ என்ன‌ இப்போ.

அபி : அப்போ ந‌ம்ப‌ காத‌ல‌ நீ ம‌ற‌ந்திட்டியா?

ச‌ந்ரா : இங்க‌ பாரு அபி, போன‌ ஜென்ம‌த்துல‌தா ந‌ம்ப‌ காத‌லிச்சோ, இந்த‌ ஜென்ம‌த்துல‌ ந‌ம்ப‌ ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள்.

அபி : (அதிர்ச்சியில்) ந‌ண்ப‌ர்க‌ளா? அப்போ அன்னிக்கு கோவில்ல‌ ந‌ம்ப‌ க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்க‌லான்னு சொன்ன‌?



ச‌ந்ரா : ஆமா நா சொன்னே. அப்போ நீதா என்னோட‌ பூர்வ‌ ஜென்ம‌த்து காத‌ல‌ன்னு என‌க்கு தெரிய‌ வ‌ந்த‌து. ஆனா என‌க்கு உன்மேல‌ காத‌ல் வ‌ர‌ல‌. இன்னிக்கு வ‌ரிக்கும் நா உன்ன‌ காத‌லிக்க‌ முய‌ற்ச்சிதா ப‌ன்னிகிட்டிருந்தே. நீ என்னோட பூர்வ ஜென்மத்து காதலன் இங்குறதாலதா, நா உன்ன காதலிக்க இத்தன நாள் முயற்சிதா பண்ணிகிட்டிருந்தே. ஆனா இப்ப வரிக்கும் உன்மேல எனக்கு காதல் வரவே இல்ல. ஏன்னு எனக்கு தெரியல. இனிமே உன்ன காதலிக்க முய‌ற்ச்சியும் ப‌ண்ண‌ மாட்டே, ஏன்னா என‌க்கு க‌ல்யாண‌ம் ஆயிரிச்சு.

அபி : என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா? நீயும் நானு சேந்து, அந்த‌ அர்ஜுன‌ ப‌ழிக்கூட‌ வாங்குனோமே?

ச‌ந்ரா : அதுதா நா ப‌ன்ன‌ பெரிய‌ முட்டாள்த்த‌னோ. ஒரு அப்பாவிய‌ கொல்ல‌ முய‌ற்ச்சி ப‌ண்ணியிருக்கே. ஆனா இனிமே அந்த‌ முட்டாள்த்த‌ன‌த்த‌ ப‌ண்ண‌மாட்டே.

அபி : இன்னு ஏ ச‌ந்ரா சுத்தி வ‌ள‌ச்சு சொல்ற‌? நேரா சொல்லு. நா அர்ஜுன‌தா காத‌லிக்கிற‌ன்னு.

ச‌ந்ரா : இல்ல‌ அபி, நீ த‌ப்பா புரிஞ்சுகிட்டிருக்க‌.

அபி கோப‌த்துட‌ன் அங்கிருந்து சென்றுவிட்டான்.



ச‌ந்ரா : இவ‌ என்ன‌ சொல்ல‌ சொல்ல‌ கேக்காம‌ போறா. நா அர்ஜுன‌ காத‌லிக்கிற‌னா? அதுக்கு வாய்ப்பே இல்ல‌. ஆனா நா ஏ அபிக்கிட்ட‌ அப்பிடி பேசுனே? என‌க்கே தெரியாம‌ என்ன‌ன்ன‌மோ பேசிட்டே. நா அபிய‌ காத‌லிக்க‌வே இல்ல‌ங்குற‌து உண்ம‌தா. ஏன்னே தெரிய‌ல‌, நா எவ்ளோ முய‌ற்ச்சி ப‌ண்ணாலும்,இந்த‌ ஜென்ம‌த்துல‌ என‌க்கு அபிமேல‌ காத‌ல் உண‌ர்வு தோன‌வே இல்ல‌. ஆனா அர்ஜுன்மேல‌ என‌க்கு.........(அர்ஜுனின் நினைவுக‌ளை நினைத்துப்பார்த்தாள்) இல்ல‌ நா க‌ண்ட‌தெல்ல‌ யோசிக்க‌ கூடாது.

ச‌ந்ரா அவ‌ளுடைய‌ அறைக்கு சென்றாள். அர்ஜுன் அங்கு தூங்கிக்கொண்டிருந்தான்.



ச‌ந்ரா : ந‌ல்ல‌வேள அர்ஜுன் தூங்குறா.

ச‌ந்ரா சென்று ப‌டுத்துக்கொண்டாள். அங்கு அபி கோப‌த்தில்,



அபி : இனிமே இந்த‌ ச‌ந்ராவ‌ வெச்சு ஒன்னும் ப‌ண்ண‌முடியாது. அவ‌ளும் அர்ஜுன் ப‌க்க‌மா சாஞ்சிட்டா. நாளைக்கே இதுக்கெல்லா ஒரு முடிவு க‌ட்டுறே. பாத்துகிட்டே இரு ச‌ந்ரா, நாளைக்கு என்ன‌ ந‌ட‌க்குதின்னு.

காலை விடிந்த‌து. ச‌ந்ரா எழுந்தாள். அர்ஜுனை தேடினாள். ஆனால் அவ‌னை காண‌வில்லை.

ச‌ந்ரா : இந்த‌ அர்ஜுன் எங்க‌ போய்ட்டா? இங்க‌தான‌ இருப்பா?(அவ‌ள் க‌ண்க‌ள் அங்கும் இங்கும் தேடிய‌து)

அர்ஜுன் வெளியில் நின்று Phone பேசிக்கொண்டிருந்தான். அதை பார்த்த்தும் ச‌ந்ராவின் முக‌த்தில் புன்ன‌கை வ‌ந்த‌து.



அவ‌ள் புன்னகை அவ‌ள் உண‌ர்ந்து,



ச‌ந்ரா : இப்போ நா எதுக்காக‌ Smile ப‌ண்ணே? அர்ஜுன‌ பாத்தா என‌க்கு ஏ இவ்ளோ ச‌ந்தோஷ‌மா இருக்கு? அவ‌ கொஞ்ச‌ நேரோ இல்ல‌ன்னாலு நா ஏ அவ‌ன‌ தேடுறே? அர்ஜுன‌ பாக்கும்போது, என‌க்கு ஏதோ அவ‌ன‌ புதுசா பாக்குற‌ மாதிரி இருக்கு. இது என்ன‌ மாதிரி உண‌ர்வு? இதுக்கு முன்னாடி இப்பிடி ஆன‌தே இல்லயே? ஒருவேள‌ நேத்து அபி சொல்லிட்டு போன‌ மாதிரி, நா அர்ஜுன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்ட‌னா?


தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.