CHAPTER-3

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
இங்கு ஹாலில் ச‌ந்ரா அவ‌ளுடைய‌ த‌ந்தையுட‌ன் அம‌ர்ந்து பேசிக்கொண்டிருக்க‌, அப்போது உள்ளே நுழைந்த‌ அர்ஜுன் லிங்கேஷ்வ‌ரை பார்த்த‌தும், "பாஸ்!" என்று ம‌கிழ்ச்சியுட‌ன் வேக‌மாக‌ ஓடி சென்று அவ‌ரை க‌ட்டிக்கொண்டான். அதில் மெல்ல‌ எழுந்து நின்ற‌வ‌ர், ப‌திலுக்கு அவ‌ரும் அவ‌னை ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ட்டி த‌ழுவிக்கொள்ள‌, அவ‌ர் அணைப்பிலிருந்த‌ப‌டியே ம‌கிழ்ச்சியுட‌ன், "தேங்க் யூ சோ ம‌ச் பாஸ்." என்றான் அர்ஜுன்.

அதை பார்த்த‌ ச‌ந்ராவும் ம‌கிழ்ச்சியுட‌ன் புன்ன‌கைக்க‌, அப்போது அவ‌னை அணைப்பிலிருந்து வில‌க்கிய‌வ‌ர், "எல்லாத்தையும் என் பொண்ணு சொன்னா. நா உன்ன‌ சேஃபாதான‌ இருக்க‌ சொன்னேன்? செரி செரின்னு ம‌ண்டைய‌ ஆட்டிட்டுட்டு, அங்க‌ போய் அவ‌ன் சுடும்போது க‌ண்ண‌ மூடி நின்னுகிட்டிருந்திருக்க‌. கொஞ்ச‌ம் மிஸ் ஆயிருந்தா இப்போ என் முன்னாடி இப்பிடி நிப்பியா நீ?" என்று சிறு ப‌த‌ட்ட‌த்துட‌ன் கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "அட‌ இல்ல‌ பாஸ். நா சேஃப்டிக்கு ஒரு க‌ன் எடுத்துட்டுதா போனேன். ப‌ட் அது எங்க‌யோ மிஸ் ஆயிருச்சு." என்று த‌லை சொறிந்தான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "இல்ல‌ன்னா ம‌ட்டும்? அந்த‌ க‌ன்ன‌ எடுத்து அவ‌ன‌ பொட்டுன்னு சுட்டிருப்பியா?" என்று ந‌க்க‌லாக‌ கேட்க‌,

அதை கேட்டு ச‌ற்று த‌டுமாறிய‌ அர்ஜுன், "அது... இல்ல‌தா. ப‌ட் சீலிங் லைட்ட‌ சுட்டாவ‌து எஸ்கேஸ் ஆயிர‌லான்னுதா பிளான் ப‌ண்ணியிருந்தேன்... ப‌ட் அது அப்பிடியே உல்டா ஆயிருச்சு." என்றான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "ஆதான‌? நீயாவ‌து ஒருத்த‌ன‌ சுடுற‌தாவ‌து. உன்மேல‌ இருக்குற‌ ந‌ம்பிக்கையில‌தான‌ உன்ன‌ அவ்ளோ தூர‌ம் தைரிய‌மா அனுப்புனேன்? நீ இவ்ளோ கேர்லெஸா இருந்தா என்ன‌ அர்த்த‌ம்?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ஐயோ பாஸ். நாம‌ வெறும் ஸ்ம‌க்லிங் ம‌ட்டுந்தா ப‌ண்றோம். அதுவும் உங்க‌ பிஸ்ன‌ஸ்ல‌ தேவ‌ப்ப‌டுற‌ப்ப‌ ம‌ட்டும். நீங்க‌ என்ன‌டான்னா என்ன‌ ம‌ர்ட‌ர‌ர் ஆக்க‌ பிளான் ப‌ண்ணுவீங்க‌ போல‌. அதா ச‌ரியான‌ நேர‌த்துக்கு உங்க‌ பொண்ணு வ‌ந்து என்ன‌ காப்பாத்தீட்டாங்க‌ளே. அப்ற‌ம் ஏ வ‌ரி ப‌ண்ணிக்கிறீங்க‌ விடுங்க‌." என்று கூற‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "வ‌ரி ப‌ண்ணிக்காம‌? ந‌ல்ல‌வேள் எங்கிட்ட‌ பிளான் B இருந்துச்சு. இல்ல‌ன்னா இன்னிக்கு நா உன்ன‌ எழ‌ந்திருப்பேன்." என்று ஆத‌ங்க‌மாக‌ கூற‌, உட‌னே மீண்டும் அவ‌ரை அணைத்துக்கொண்ட‌வ‌ன், "செரி விடுங்க‌ பாஸ்." என்று கூறி மெல்ல‌ வில‌கி அவ‌ர் முக‌ம் பார்த்த‌வ‌ன், "என் க‌ன் மிஸ் ஆயிருச்சுன்னு தெரிஞ்ச‌ப்ப‌க்கூட‌ என‌க்கு ந‌ம்பிக்க‌ இருந்துச்சு. நீங்க‌ க‌ண்டிப்பா என்ன‌ காப்பாத்திருவீங்க‌ன்னு. அத‌னால‌தா நா ஓட‌க்கூட‌ முய‌ற்சி ப‌ண்ண‌ல‌." என்றான்.

அதை கேட்டு அவ‌ர் பெருமையுட‌ன் அவ‌ன் த‌லையை மெல்ல‌ கோத‌, அப்போது அர்ஜுன், "ஹா பாஸ். நா அந்த‌ ட்ர‌க்குல‌ இருந்து குதிக்கும்போது, சேஃபான‌ ப‌க்க‌மாதா குதிச்சேன். ஆனாலும் அங்க‌ எதாவ‌து சி.சி.டி.வி கேம‌ராஸ் இருந்திருக்குமோன்னு ச‌ந்தேக‌மாதா இருக்கு. நாவேற‌ மொக‌த்த மூட‌வே இல்ல‌ அப்போ." என்று சிறிது ப‌ய‌த்துட‌ன் கூறினான்.

லின்கேஷ்வ‌ர‌ன், "டோன்ட் வ‌ரி. அதெல்லா நா எப்ப‌வோ டெலிட் ப‌ண்ண‌ ஏற்பாடு ப‌ண்ணிட்டேன். நீ அத‌ ப‌த்தி யோசிக்காம‌ வ‌ந்து உக்காரு." என்றார்.

அத‌ற்கு அவ‌னும் அவ‌ருட‌ன் செல்லும்போது அங்கிருந்த‌ ச‌ந்ராவை பார்த்த‌வ‌ன் ந‌ன்றியுட‌ன் புன்ன‌கைத்த‌ப‌டி, "தேங்க் யூ." என்றான்.

அத‌ற்கு ச‌ந்ராவும் ப‌தில் புன்ன‌கையை கொடுத்து மெல்ல‌ க‌ண்க‌ளை இமைத்தாள்.

அப்போது லிங்கேஷ்வ‌ரின் ப‌க்க‌ம் திரும்பிய‌ அர்ஜுன், "ஆனா பாஸ். இங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ற‌ந்தா இவ‌ங்க‌ பொண்ணுங்குற‌ விஷ‌ய‌மே என‌க்கு தெரிஞ்ச‌து. த‌ப்பி த‌வ‌றிக்கூட‌ வ‌ர்ற‌ வ‌ழியில‌ அவ‌ங்க‌ வாய‌ தெற‌க்க‌ல‌ தெரியுமா?." என்றான்.

அதை கேட்டு ச‌ந்ரா சிரித்த‌ப‌டி த‌ன் த‌ந்தையை பார்க்க‌, அத‌ற்கு அவ‌ரும் சிரித்த‌ப‌டி, "அவ‌ பொண்னுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ம‌ட்டும் என்ன‌ ப‌ண்ணியிருப்ப‌? ஒட‌னே பாதி வ‌ழியில‌ எற‌ங்கிருப்ப‌ல்ல‌? அதா இங்க‌ ரீச் ஆகுற‌ வ‌ரைக்கும் அவ‌ள‌ வாய‌ தெற‌க்க‌ வேண்டான்னு சொன்னேன்." என்று கூற‌,

அப்போதுதான் "உன‌க்கும் பொண்ணுங்க‌ளுகும்தா ஆகாதே." என்ற‌ப‌டி அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் நால்வ‌ரும் அங்கு வ‌ந்த‌ன‌ர்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா, "ஏ?" என்று அவ‌ர்க‌ளிட‌ம் கேட்க‌,

அத‌ற்கு ஒருவ‌ன், "அது என்ன‌மோங்க‌. பொண்ணுங்க‌ள‌ பாத்தாலே இவ‌ன் ப‌த்த‌டி த‌ள்ளி போவான். எந்த‌ பொண்ணுக்கூடையும் டிஸ்ட‌ன்ஸோட‌தா இருப்பான்." என்றான்.

அதை கேட்டு விய‌ந்த‌ ச‌ந்ரா அர்ஜுனின் ப‌க்க‌ம் திரும்பி, "ஏ பொண்ணுங்க‌ன்னா அவ்ளோ ப‌ய‌மா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் த‌டுமாற்ற‌த்துட‌ன், "ஐயோ அப்பிடியெல்லா இல்ல‌ங்க‌. ஜ‌ஸ்ட் டிஸ்ட‌ன்ஸ் மெயின்ட‌ன் ப‌ண்ண‌ணுன்னு நெனைப்பேன் அவ்ளோதா." என்றப‌டி த‌ன் த‌லையை அழுந்த‌ கோதிய‌ப‌டி பார்வையை திருப்பிக்கொண்டான்.

பெண்க‌ள் என்றாலே நெருங்க‌ துடிக்கும் இந்த‌ ஆண்வ‌ர்க‌த்தின் ம‌த்தியில், பெண்க‌ளிட‌ம் ஒரு இடைவெளியுட‌ன் இருக்க‌ நினைக்கும் இவ‌னின் இந்த‌ த‌னித்துவ‌மான‌ குண‌ம் ச‌ந்ராவை வெகுவாய் க‌வ‌ர்ந்த‌து.

அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன், "ப‌ட் இனி அப்பிடியெல்லா முடியாது. ஏன்னா என் பொண்ணு இனி இங்க‌தா இருக்க‌ போறா." என்று அவ‌ளை பார்த்து கூற‌, அவ‌ளும் புன்ன‌கைத்தாள்.

மேலும் அவ‌ர் அர்ஜுனை பார்த்து, "இனி இங்க‌ வ‌ரும்போதெல்லா என் பொண்ணுகிட்ட‌ பேசிதா ஆக‌ணும். அப்போ என்ன‌ ப‌ண்ற‌ன்னு பாக்குறேன்." என்றார்.

அத‌ற்கு சாமாளிப்பு புன்ன‌கையை அளித்த‌வ‌ன் ம‌ன‌திற்குள், "ஆனா என்ன‌மோ தெரிய‌ல‌, என்னால‌ இவ‌ள‌ ம‌ட்டும் ம‌த்த‌ பொண்ணுங்க‌ மாதிரி நெனைக்க‌ முடிய‌ல‌. என்ன‌ மீறி என‌க்குள்ள‌ என்னென்ன‌மோ ந‌ட‌க்குது." என்று எண்ணிக்கொண்டான்.

பிற‌கு லிங்கேஷ்வ‌ர‌ன், "செரி வாங்க‌ எல்லாரும் என் பொண்ணு கையால‌ பாயாச‌ம் சாப்ப‌ட‌லாம்." என்று அழைக்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "இல்ல‌ பாஸ். இப்பிடி அன்டைம்ல‌ பாயாச‌ம்..." என்று ஏதோ கூற‌ வ‌ர‌, அவ‌ன் கையை த‌ன் இரு கைக‌ளால் முழுதாக‌ ப‌ற்றிக்கொண்ட‌ ச‌ந்ரா, "ஏ நாங்கெல்ல‌ ச‌ம‌ச்சா சாப்ப‌ட‌ மாட்டிங்க‌ளோ?" என்று அவ‌னை இழுத்து சென்றாள்.

அவ‌ள் த‌ன்னை இவ்வாறு உரிமையாக‌ அழைத்து செல்வ‌து, அர்ஜுனின் ம‌ன‌தில் ஏனோ அவ‌ளுட‌ன் ப‌ல‌ நாள் ப‌ழ‌கிய‌து போன்று ஒரு உண‌ர்வு எழுந்த‌து.

ஆனால் அவ‌ளின் த‌ந்தை லிங்கேஷ்வ‌ர‌னுக்கு அவ‌ளின் இந்த‌ செய‌ல் எதுவும் த‌வ‌றாக‌ தெரிய‌வில்லை. அவ‌ள் எப்போதும் அனைவ‌ரிட‌மும் ந‌ட்பாக‌ ப‌ழ‌குப‌வ‌ள், அதுவும் வெளிநாட்டில் ப‌டித்துவிட்டு வ‌ந்த‌வ‌ள் இவ்வாறுதான் இருப்பாள் என்று நினைத்து விட்டுவிட்டார். ஆனால் அந்த‌ எண்ண‌த்தையும் மீறி அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் இவ்வாறு சேர்த்து பார்ப்ப‌து அவ‌ருக்கு ஒருவித‌த்தில் ம‌கிழ்ச்சியைதான் கொடுத்த‌து.

பிற‌கு அனைவ‌ரும் ஹாலில் அம‌ர்ந்திருக்க‌, ச‌ந்ரா ஒரு ட்ரேவில் அனைவ‌ருக்கும் பாயாச‌ம் எடுத்து வ‌ந்து ப‌ரிமாறினாள்.

அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன், "இன்னிக்கு என‌க்கு ட்ரிபிள் ச‌ந்தோஷ‌ம். ஒன்னு அர்ஜுன் ந‌ல்ல‌ப‌டியா திரும்பி வ‌ந்த‌து. இன்னொன்னு நீங்க‌ நாலு பேரும் ந‌ல்ல‌ப‌டியா வ‌ந்து சேந்த‌து. அப்ற‌ம் என் பொண்ணு ப‌டிப்பு முடிஞ்சு எங்கிட்ட‌யே வ‌ந்து சேந்த‌து. இதெல்லாத்தையும் செலிபிரேட் ப‌ண்ணதா இந்த‌ ஸ்வீட்." என்று கூறி ம‌கிழ்ச்சியாக‌ பாயாசத்தை ருசித்தார்.

அதை பார்த்த‌ அனைவ‌ருமே த‌ங்க‌ளின் ம‌கிழ்ச்சி த‌ருண‌த்தை அவ‌ருட‌னும் அந்த‌ ப‌யாச‌த்துட‌ன் கொண்டாடின‌ர். அப்போது அனைவ‌ருக்கும் ப‌ரிமாறிய‌ பிற‌கு, தானும் ஒரு பாயாச‌த்தை எடுத்துக்கொண்டு அம‌ர‌ செல்ல‌, அப்போது ஒரு இட‌ம் ம‌ட்டுமே காலியாக‌ இருக்க‌, அங்கு சென்று அம‌ர்ந்துக்கொண்டாள் ச‌ந்ரா.

அப்போது திடுகிட்ட‌ அர்ஜுன், த‌ன் அருகில் அம‌ர்ந்திருப்ப‌வ‌ளை மெல்ல‌ நிமிர்ந்து பார்க்க‌, அவ‌ளோ எந்த‌ ஒரு உண‌ர்வுமின்றி சாத‌ர‌ணாமாக‌ பாய‌ச‌த்தை ருசித்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்த‌ பிற‌கு இவ‌னும் த‌ன் ம‌ன‌தை ச‌ம‌ன் செய்த‌ப‌டி சாதார‌ண‌மாக‌ அம‌ர்ந்தான். இதே வேறு ஒரு பெண்ணாக‌ இருந்திருந்தால், அவ‌ள் வ‌ந்து அம‌ர்ந்த‌ அடுத்த‌ நொடி த‌ள்ளி அம‌ர்ந்திருப்பான். ஆனால் இவ‌ளிட‌ம் ஏனோ அவ‌னால் அவ்வாறு ந‌ட‌ந்துக்கொள்ள‌ ம‌ன‌ம் முன் வ‌ர‌வில்லை. த‌ன்னை அறியாம‌லே த‌ன் ம‌ன‌ம் அவ‌ளின் அருகாமையை விரும்புவ‌தை உண‌ர்ந்துக்கொண்டான் அர்ஜுன். அது அவ‌னுக்கும் பிடித்துதான் இருந்த‌து.

அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன், "அன்டு இன்னொரு விஷ‌ய‌ம்." என்று கூற‌, அனைவ‌ரும் த‌ங்க‌ள் பார்வையை அவ‌ரின் ப‌க்க‌ம் திருப்பின‌ர்.

அப்போது அவ‌ர், "என் பொண்ணுக்காக‌ நா ஒரு ஸ்பெஷ‌ல் பூஜ‌ அரேஜ் ப‌ண்ணியிருக்கேன். நாளைக்கு நீங்க‌ எல்லாரும் க‌ண்டிப்பா வ‌ர‌ணும்." என்றார்.

அத‌ற்கு ஒருவ‌ன், "எல்லாரும் இந்த‌ மாதிரி மூமெண்ட்டுல‌ பார்ட்டிதா வெப்பாங்க‌. ஆனா இவ‌ரு ம‌ட்டுந்தா கோவில் பூஜ‌ன்னு சொல்லிகிட்டு திரியுறாரு." என்று ம‌ன‌திற்குள் எண்ணிக்கொண்டான்.

அவ‌ன் முக‌த்தை பார்த்தே அவ‌ன் ம‌ன‌தை ப‌டித்த‌வ‌ர், "ஏன்னா பார்ட்டி ப‌ண்ணா, ந‌ம்ப‌கிட்ட‌ இருக்குற‌ காசுதா க‌ரியாகும். அதே பூஜ‌ வெச்சா, எதிர்கால‌த்துல‌ என் பொண்ணோட‌ வாழ்க்க‌ ந‌ல்லா இருக்கும்." என்றார்.

அதை கேட்டு அவ‌ன் அதிர்ந்து அவ‌ரை பார்க்க‌, அப்போது பார்வையை ச‌ந்ராவின் ப‌க்க‌ம் திருப்பிய‌வ‌ர், "அதோட‌ இந்த‌ பூஜ‌ முக்கிய‌மா, என் பொண்ணுக்கு ஒரு ந‌ல்ல‌ பைய‌ன் கெடைக்க‌ணுங்குற‌துக்காக‌ ப‌ண்றேன்." என்றார்.

அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கு ச‌ற்று அதிர்ச்சியாக‌தான் இருந்த‌து. இப்போதுதான் ப‌டிப்பை முடித்தோம், அத‌ற்குள் அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ க‌ல்யாண‌மா என்று ச‌லித்துக்கொண்டாள். ஆனால் அருகிலிருந்த‌ அர்ஜுனுக்குதான் அதிர்ச்சி அப்ப‌ட்ட‌மாக‌ அவ‌ன் முக‌த்தில் தெரிந்த‌து. ஆனால் அதை அவ‌னும் அறிய‌வில்லை, ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அறிய‌வில்லை.

அடுத்த‌ நாள் காலை....

லிங்கேஷ்வ‌ர‌ன் அடிக்க‌டி செல்லும் அவ‌ருடைய‌ வீட்டின் அருகிலிருக்கும் ஒரு சிவ‌ன் கோவிலில், பூஜை ஏற்பாடுக‌ள் ந‌ட‌ந்துக்கொண்டிருக்க‌, அர்ஜுனும் அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ளும் லிங்கேஷ்வ‌ர‌னை வேலை செய்ய‌ விடாம‌ல் அனைத்தையும் தாங்க‌ளே முன் நின்று ந‌ட‌த்திக்கொண்டிருந்த‌ன‌ர்.

ஆனால் த‌ன் ம‌க‌ளுக்கு ந‌ட‌க்கும் பூஜையில் தானும் வேலை செய்ய‌ வேண்டும் என்று எண்ணிய‌வ‌ர், முடிந்த‌ள‌வு சிறிய‌ வேலையையாவ‌து அவ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌றித்து செய்துக்கொண்டிருந்தார்.

இப்படி அனைவ‌ரும் பூஜை ஏற்பாடுக‌ளில் ப‌ர‌ப்ப‌ர‌ப்பாக‌ இருக்க‌, ப‌ண்டித‌ரோ அங்கு வ‌ந்து ந‌ல்ல‌ நேர‌ம் க‌ட‌ப்ப‌த‌ற்குள் பூஜைய ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று கூறினார்.

அதை கேட்ட‌ லிங்கேஷ்வ‌ர‌ன், "இருங்க‌ என் பொண்ணு இன்னும் வ‌ர‌ல‌." என்று கூறி அவ‌ளுக்கு அழைப்ப‌த‌ற்காக‌ த‌ன் அழைப்பேசியை கையில் எடுக்க‌ போகும் ச‌ம‌ய‌ம், "அப்பா!" என்று ச‌ந்ராவின் குர‌ல் கேட்க‌, அனைவ‌ரும் குர‌ல் வ‌ந்த‌ திசையில் கோவிலின் வாச‌லை பார்த்த‌ன‌ர்.

அடுத்த‌ நொடி அனைவ‌ரின் க‌ண்க‌ளும் ஆச்ச‌ரிய‌த்தில் விரிந்த‌து. அப்போது சிவ‌ப்பு நிற‌ புட‌யில் உள்ளே நுழைந்த‌வ‌ள், வாயில் நிறைந்த‌ புன்ன‌கையுட‌ன், த‌ன் ஒற்றை கையால் புட‌வை ம‌டிப்புக‌ளை பிடித்து மெல்ல‌ அன்ன‌ம் போல் ந‌ட‌ந்து வ‌ந்தாள் ச‌ந்ரா.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு எப்பிடியோ, ஆனால் ந‌ம் அர்ஜுனுக்கு ஏனோ ஒரு சிவ‌ப்பு நிற‌ ரோஜாவே பெண்ணாக‌ மாறி த‌ன்னை நோக்கி வ‌ருவ‌துப்போல் உண‌ர்ந்தான். அவ‌னின் க‌ண்க‌ளோ அவ‌ளிட‌மிருந்து வில‌க‌ ம‌றுக்க‌, அவ‌ன் இத‌ழ்க‌ளோ அவ‌னின் அனும‌தியின்றி தானாக‌வே புன்ன‌கைத்துக் கொண்டிருந்த‌து.

அப்போது மெல்ல‌ ந‌ட‌ந்த‌ப‌டி அவ‌னின் அருகில் வ‌ந்த‌வ‌ள், அவ‌னை க‌ட‌ந்து சென்று உள்ளே இருந்த‌ சிவ‌ பெருமானை த‌ரிசித்தாள். அப்போது அவ‌ள் கைக‌ளை கூப்பி க‌ண்க‌ளை மூடிய‌ நேர‌ம், எங்கிருந்தோ வீசிய‌ காற்று அவ‌ளின் புட‌வை முந்தாணையை அர்ஜுனுடைய‌ முக‌த்தில் ப‌ட‌ர‌விட்ட‌து. அந்த‌ ஸ்ப‌ரிச‌த்தில் த‌ன்னை மீறி க‌ண்க‌ளை மூடி அத‌ன் வாச‌னையை நுக‌ர்ந்த‌வ‌ன், அதில் உண்மையிலேயே ஆயிர‌ம் ரோஜா பூக்க‌ளின் வாச‌னையை உண‌ர்ந்தான்.

பிற‌கு ப‌ண்டித‌ர், "ஐயா பூஜையா ஆர‌ம்பிக்க‌லாங்க‌ளா?" என்று கேட்க‌, அப்போதுதான் த‌ன்னிலைய‌டைந்து அவ‌ளைவிட்டு வில‌கி நின்றான் அர்ஜுன்.

அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன், "ஹா ஆர‌ம்பிச்சிருங்க‌." என்றார்.

பிற‌கு பூஜை ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌, முத‌லில் உள்ளிருக்கும் சிவ‌ப்பெருமானுக்கு ஆர‌த்தி எடுக்க‌ப்ப‌ட்டு, பிற‌கு பூஜையை ஆர‌ம்பித்த‌ன‌ர்.

அப்போது த‌ரையிலிருந்த விரிப்பில் அனைவ‌ரும் அம‌ர‌, ப‌ண்டித‌ரும் ஓம‌குண்ட‌த்தின் அருகே அம‌ர்ந்து பூஜையை ஆர‌ம்பித்தார். அப்போது ப‌ண்டித‌ர் ஒரு மாலையை எடுத்து ச‌ந்ராவிட‌ம் கொடுத்து, அவ‌ற்றை த‌ன் க‌ழுத்தில் போட‌ கூற‌, அவ‌ளும் அவ‌ற்றை வாங்கி த‌ன் கழுத்தில் போட்டுக்கொண்டு க‌ண்க‌ளை மூடி இறைவ‌னை வேண்டினாள். அப்போது பூஜை ந‌ல்ல‌ப‌டியாக‌ சென்றுக்கொண்டிருக்க‌, அந்த‌ இட‌மே அமைதியாக‌ நில‌விய‌து.

ஆனால் அதே கோவிலுக்கு வெளியில் நின்றுக்கொண்டிருந்த‌ அந்த‌ அகோரி சாமியாரோ, அவ‌ர்க‌ளின் இந்த‌ நிம்ம‌தியை பார்த்து சிரித்த‌ப‌டி, "புய‌லுக்கு முன்னாடிக்கூட‌ இப்பிடிதா அமைதியா இருக்கும். ஆனா புய‌ல் வ‌ர்ற‌த‌ யாராலையும் த‌டுக்க‌ முடியாது. ஏன்னா அது ந‌ம்ப‌ கையில‌ இல்ல‌. அது அந்த‌ ப‌ர‌ம‌சிவ‌னோட‌ கையில‌." என்று உள்ளிருக்கும் சிவ‌னை நோக்கி கைக‌ளை உய‌ர்த்தி கூறினார்.

அடுத்த‌ நொடி அமைதியாக‌ இருந்த‌ அந்த‌ இட‌த்தில் பெரும் காற்று வீச‌ ஆர‌ம்பிக்க‌, அந்த‌ கோவில் ம‌ணிக‌ள் ஒன்றுட‌ன் ஒன்று அடித்துக்கொள்வ‌துட‌ன், க‌ண்க‌ளை மூடி ஆழ்ந்த‌ வேண்டுத‌லில் இருந்த‌ ச‌ந்ராவின் அருகில் இருந்த‌ குத்து விள‌க்கும் சாய்ந்த‌து. அது ச‌ரியாக‌ அங்கு ப‌ட‌ர்ந்திருந்த‌ அவ‌ளின் சேலை முந்தாணையில் விழ‌, அதை யாரும் க‌வ‌னிக்காம‌ல் இருந்த‌தால் அந்த‌ தீ அவ‌ளின் முந்தாணை வ‌ழியாக‌ ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்த‌து. தீ பெரிதான‌ பிற‌கே அனைவ‌ரும் அவ‌ற்றை க‌வ‌னித்து ப‌த‌ற‌, அதை உண‌ர்ந்த‌ ச‌ந்ராவோ ச‌ட்டென‌ எழுந்து நின்று ப‌ய‌த்தில் க‌த்த‌ ஆர‌ம்பித்தாள்.

"அப்பா எதாவ‌து ப‌ண்ணுங்க‌. நெருப்பு! நெருப்பு!" என்று ப‌த‌றி க‌த்தினாள்.

அதை பார்த்து ப‌த‌றிய‌ லிங்கேஷ்வ‌ர‌ன், "உட‌னே த‌ண்ணி எடுத்துட்டு வாங்க‌." என்று க‌த்த‌,

அதை கேட்ட‌ அர்ஜுனும், ம‌ற்ற‌ அனைவ‌ரும் த‌ண்ணீர் எடுத்து வ‌ர‌ வேக‌மாக‌ ஓடின‌ர். ஆனால் அத‌ற்குள் தீ வேக‌மாக‌ ப‌ர‌வ‌, ப‌ய‌த்தில் த‌ன் முந்தாணையை முன்புற‌மாக‌ எடுத்து போட்டு ப‌ய‌ந்து அல‌றினாள் ச‌ந்ரா. அதை பார்த்து சட்டென‌ நின்ற‌ அர்ஜுன், உட‌னே ப‌த‌றிய‌ப‌டி அவ‌ள் அருகில் வ‌ந்து, அந்த‌ தீயை த‌ன் வெற்று கை கொண்டு அணைக்க‌ முய‌ற்சித்தான். அதை பார்த்த‌ லிங்கேஷ‌வ‌ர‌ன் மேலும் ப‌த‌றி வேண்டாம் என்று கூற‌, கூற‌, அர்ஜுன் மேலும் அவ‌ற்றை அணைக்க‌ அரும்பாடுப்ப‌ட்டான்.

ஆனால் தீ அதிக‌மாக‌ இருக்க‌ அவ‌ன் இரு கைக‌ளும் ப‌த்தாம‌ல் போக‌, உட‌னே தீ ப‌ற‌விய‌ அவ‌ளின் சேலையின் அந்த‌ ப‌குதியை ம‌ட்டும் வேக‌மாக‌ கிழித்து எறிந்து அவ‌ளை காப்பாற்றினான். அதில் நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன் அப்போதுதான் த‌ன் முன் அரைகுறை புட‌வையில் நிற்கும் அவ‌ளை பார்த்து உட‌னே த‌ன் ஓவ‌ர் கோட்டை க‌ழ‌ற்றி அவ‌ளுக்கு அணிவிக்க‌, அடுத்த‌ நொடி அவ‌னை இறுக‌ அணைத்துக்கொண்டாள் ச‌ந்ரா.

அதில் ஒரு நிமிட‌ம் அவ‌ன் திடுகிட்டாலும், த‌ன்னை அணைத்திருக்கும் அவ‌ளின் உட‌லின் ந‌டுக்க‌த்தை ந‌ன்றாக‌ உண‌ர‌, ஆறுத‌லாக‌ அவ‌ளை அணைத்துக்கொண்ட‌வ‌ன், அவ‌ள் த‌லைமுடியை அழுந்த‌ கோதிய‌ப‌டி, "ரிலேக்ஸ். ரிலேக்ஸ்" என்று கூறி அவ‌ளை ச‌ம‌ன் செய்தான்.

அவ‌ளோ விய‌ர்வையும் க‌ண்ணீரும் முக‌த்தை நிறைத்திருக்க, அவ‌ன் மார்ப்புக்குள் புதைந்த‌ப‌டி, ப‌ய‌த்துட‌ன் அவ‌னை இறுக‌ க‌ட்டிக்கொண்டு நிம்ம‌தியை தேடினாள்.

அவை அனைத்தையும் இங்கு கோவிலுக்கு வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த‌ அந்த‌ சாமியாரோ, விதியின் விளையாட்டை எண்ணி சிரித்துக்கொண்ட‌ப‌டி, "நெருப்பு பெரும் ஆப‌த்துக்கான‌ அறிகுறி. இது அந்த‌ ஈச‌னே உங்க‌ளுக்கு காட்டுற‌ குறியீடு. அந்த‌ பெரும் ஆப‌த்து வ‌ர‌ போற‌துக்கான‌ நேர‌ம் நெருங்கிருச்சு. அத‌ ச‌ந்திக்க‌ நீங்க‌ எல்லாரும் த‌யாரா இருங்க‌." என்றார்.

- ஜென்மம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.