அத்தியாயம் 3: ஓடு ராஜா ஓடு
மோனிஷா பிக் பாஸுன் உடலில் உள்ள குண்டுகளை எப்படி நீக்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, கலங்கிய கண்களோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சோனியா “அத என் கிட்ட குடு.” என்று சொல்லி அவளிடம் இருந்த கத்தியை வாங்கி ஒரே செகண்டில் பிக் பாஸின் தோள்களில் இருந்த குண்டை எடுத்து விட்டாள். அப்போது அவன் லேசாக ஸ்ஸ்ஸ்.. என்று வலியில் முனக “சாரி பாஸ் சாரி பாஸ். அவ்ளோ தான் இன்னும் ஒன்னே ஒன்னு தான்.” என்று கண்ணீருடன் சொன்ன சோனியா அவளது இதயத்தை கல்லாக்கி கொண்டு சிரமப்பட்டு அவன் கால்களில் இருந்த குண்டையும் நீக்கினாள்.
இருப்பினும் அந்த காயங்களில் இருந்து ரத்தம் அதிகமாக வந்து கொண்டு இருந்ததால் அதை சுத்தம் செய்து மோனிஷா கட்டு போட்டுக் கொண்டு இருக்க, என்ன தான் அவன் மனதளவில் தைரியமானவனாக இருந்தாலும், அதிக ரத்தம் வெளியேறியதால் தன்னை அறியாமல் மயங்கி விழுந்தான் பிக் பாஸ். அதை பார்த்து பதறிப்போன சோனியா “பாஸ் என்னாச்சு.. ஏன் மயங்கிட்டீங்க?
கண்ணை தொறந்து என்ன பாருங்க பாஸ்..!!” என்று சொல்லி தொடர்ந்து அவன் கன்னத்தில் தட்டி அவனை எழுப்ப முயற்சிக்க, அவனது நாடித்துடிப்பை பிடித்து சோதித்து பார்த்த மோனிஷா “அண்ணாவுக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்ல சோனியா.
நிறைய பிளட் லாஸ் ஆனதுனால மயங்கிட்டாரு. பட் இவர இப்படியே வச்சுட்டு இருக்கிறது safe இல்ல. நம்ம இவர சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்கணும். பிளட் ஏத்தணும்.” என்றாள்.
“இவர் பிளட் குரூப் என்ன? உனக்கு தெரியுமா?” என்று சோனியா அவசரமான குரலில் கேட்க, “O negative. அந்த பிளட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம். இப்ப போலீஸ் வேற நம்மள round up பண்ணிட்டாங்க. இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு போறதே பெரிய விஷயம். இதுல அண்ணாவை எப்படி பத்திரமா காப்பாத்தி நான் வீட்டுக்கு கூட்டிட்டு போக போறனோ எனக்கு பயமா இருக்கு சோனியா.” என்று சொல்லிவிட்டு மோனிஷா கதறி அழுதாள். தன் கண்ணீரை துடைத்துவிட்டு அவளது கண்ணீரையும் துடைத்த சோனியா “எனக்கும் blood group o negative தான்.
என் பாடில இருந்து எவ்ளோ பிளட் வேணும்னாலும் எடுத்துக்கோ. எனக்கு Boss சரியானா போதும்.” என்று சொல்லி தன் கையை அவள் முன்னே நீட்டினாள்.
“நீ blood குடுக்க ரெடியா இருந்தா போதுமா? அதை எப்படி எடுத்து இவர் உடம்பில ஏத்துறது? அதுக்கு தேவையான needle syringe blood bags எல்லாம் வேணுமே.. அதுக்கு எங்க போறது..??” என்று மோனிஷா உடைந்த குரலில் கேட்க, “அப்போ முதல்ல நம்ம இங்கே இருந்து எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பனும். அதுக்கு இந்த கேம்ம முதல்ல முடிக்கணும். நீ இவரை பார்த்துக்கோ.
Safeஆ இரு. நான் வெளியில இருக்கிறவங்களை ஒரு கை பார்த்துட்டு வரேன்...!!” என்று கண்களில் தீப்பொறிகள் மின்ன சொன்ன சோனியா உடனே அவளது பெரிய துப்பாக்கியை எடுத்து தோள்களில் மாட்டி கொண்டு அடுத்த ஆக்சன் சீனுக்கு ரெடி ஆனாள்.
வெளியே அவர்களது கண்டெய்னர் வேனை சுற்றி வளைத்திருந்த போலீஸ்காரர்கள் அவர்களை சரமரியாக சுட, இவர்களும் பதிலுக்கு அவர்களை சுட்டுக் கொண்டு இருந்தார்கள். தானும் வெளியே சென்று ஈவு இரக்கம் இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொன்ற சோனியா “பாஸ் மயங்கி விழுந்துட்டாரு அஜய்.
நம்ம இவங்க கூட விளையாடிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. அவர சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் பண்ணனும்னு மோனி சொல்லிட்டு இருக்கா. நம்ம கிட்ட இருக்கிற எல்லா bombs-ஐயும் யூஸ் பண்ணுங்க. இங்க இருக்கிறவங்கள நீங்க டிஸ்போஸ் பண்றதுக்குள்ள, நான் பக்கத்துல இருக்கிற நம்ம ஆளுங்கள அலர்ட் பண்ணி இங்க இருந்து நம்ம safe ஆ தப்பிச்சு போறதுக்கு ஹெல்ப் பண்ண சொல்றேன்.” என்று அஜய் இடம் சொல்ல,
“ஓகே நீ போய் அந்த வேலையை பாரு. இவனுங்கள நாங்க பாத்துக்கிறோம். இன்னும் 2 மினிட்ஸ்ல இங்க எவனும் இருக்க மாட்டான். மெடிக்கல் எமர்ஜென்சி மெடிசன்ஸ் எதாவது வேணும்னா மோனிஷா கிட்ட கேட்டு சொல்லு. போற வழியில ஏதாவது மெடிக்கல் ஷாப் இருந்தா அடிச்சு தூக்கி அங்க இருந்து எடுத்துக்கலாம்.” என்றான் அஜய்.
சோனியா ஒரு பக்கம் தங்களது ஆட்களை அலர்ட் செய்ய சென்று விட, மற்றவர்கள் அவர்களை சுற்றி வளைத்த போலீசார்களை பந்தாடிக் கொண்டு இருந்தார்கள்.
இதற்கிடையில், மயக்கத்தில் கிடந்த நம் பிக் பாஸுக்கு ஒரு வருடத்திற்கு முன் நடந்த இதே போன்ற சம்பவம் இப்போது கனவு போல அப்படியே விழி திரையில் படமாக தெரிந்தது. இப்படி மறைமுக திருடனாக மாரி அவ்வப்போது பயங்கர கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் பிக் பாஸ் இந்த வெளி உலகத்தை பொறுத்தவரை ஒரு சாதாரண மனிதனாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவனிடம் வசதியான வாழ்க்கை, அவனுக்கு என்று ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் இப்படி தன்னை யாராலும் அழிக்க முடியாதவனாக தான் நினைத்ததை செய்யக் கூடியவனாக தன்னை காட்டிக் கொள்வது தான் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அதனால் மற்றவர்கள் அவனைப் பார்த்து பயப்பட தொடங்கி விட, அவனது எதிரிகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. பெரிய பெரிய கொள்ளை சம்பவங்களை பேட் பாய்ஸ் டீம் திறம்பட செய்வதால் விரைவில் மாபியா கும்பலின் தலைமை இடத்திற்கு செல்லும் வாய்ப்பு நம் பிக் பாஸீற்க்கு அதிகமாகவே இருந்தது. அதனால் சின்ன சின்ன திருட்டுத்தன வேலைகளை செய்து கொண்டு இருந்தவர்களும், ஏற்கனவே உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி துறையிலும், கஞ்சா போன்ற போதை பொருட்களை சப்ளை செய்வதிலும் பெரிய கையாக இருந்தவர்கள் எல்லாம் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பிக் பாஸுன் குழுவை அளிக்க நினைத்தார்கள்.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே போன்று பிசியான சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் வங்கியில் அவன் தனது குழுவினருடன் சேர்ந்து கொள்ள அடித்துவிட்டு தப்பித்து சென்று கொண்டிருந்தான். ஒரு பக்கம் அவனை போலீசார்கள் துரத்தி பிடிக்க வலை வீசி தேடிக் கொண்டு இருக்க,
“டேய் அந்த பேட் பாய்ஸ் டீம்ல இருக்கிறவனுங்க யாருன்னு கண்டு பிடிக்கிறதுக்கும், அவனுங்கள ஒரேடியா போட்டு தள்ளுறதுக்கும் இது நம்மளுக்கு கிடைச்சிருக்கிற பெரிய chance. போலீஸ்காரனுங்க அவனுங்கள புடிக்கிறதுக்கு முன்னாடி நம்ப அவங்களை புடிச்சு அவனுங்கள மிரட்டி அவங்க கிட்ட இருக்கிற டீலிங் எல்லாத்தையும் அவங்கள வெச்சே நம்ம கைக்கு மாத்தணும். அவனுங்கள பிளாக் மெயில் பண்ணி அவங்க கிட்ட இருக்கிற எல்லாத்தையும் புடுங்கனும்.” என்று சில லோக்கல் தாதாக்கள் ஒன்றாக கூடி திட்டம் போட்டு பல குழுக்களாக பிரிந்து அவர்கள் ஒரு பக்கம் நமது bad boys team ஐ பிடிக்க பொறி வைத்து காத்திருந்தார்கள்.
அதை தனது ஆட்கள் மூலமாக தெரிந்து கொண்ட பிக் பாஸ் “இந்த மாதிரி டைம்ல நம்ம ஒன்னா இருந்தா ஈஸியா நம்மள தூக்கிருவானுங்க. எல்லாரும் தனித்தனியா பிரிஞ்சு போங்க. இன்னைக்கு நைட் மட்டும் எப்படியாவது எங்கயாவது யாருக்கும் தெரியாம ஒளிஞ்சி இருங்க. நாளைக்கு காலைல 7:00 மணிக்கு கரெக்டா எல்லாரும் நம்ம safe houseக்கு வந்துருங்க.” என்று கட்டளை இட்டுவிட்டு தனது ஸ்போர்ட்ஸ் பைக்கில் நெடுஞ்சாலையில் சென்றால் தன்னை ஈசியாக பிடித்து விடுவார்கள் என்று நினைத்து ஊருக்குள் புகுந்தான். அவனைப் போல மற்றவர்களும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து தப்பித்து சென்றார்கள்.
அப்போது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதிக்குள் பிக் பாஸ் சென்று கொண்டிருக்க, அவனை அவனுக்கே தெரியாமல் பின் தொடர்ந்து வந்த ரவுடி கும்பல் ஒரு சந்தில் அவனை சுற்றி வளைத்து கையில் கத்தி மற்றும் துப்பாக்கிகளோடு அவனைத் தாக்குவதற்காக சென்றார்கள்.
“டேய் BB.. போலீஸ்காரன் கையில கூட அடிபட்டு சாகலாம். அதுல கூட ஒரு பெருமை இருக்கு. ஆனா இந்த பொறுக்கி பயலுக கிட்ட சிக்கி செத்துடக் கூடாது டா. அப்படி நடந்துச்சுன்னா அது உனக்கு பெரிய அசிங்கம்.” என்று நினைத்தவன் தனது வண்டியை திருப்பி அதன் acceleratorஐ வேகமாக முறுக்கி வீலிங் சாகசங்கள் எல்லாம் செய்து அவர்களை திசை திருப்பி தப்பித்து செல்ல முயற்சித்தான்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி மொத்தமாக சேர்ந்து அவனை தாக்க வந்தார்கள். அதனால் தனது பணப்பையுடன் அவனது பைக்கில் இருந்து இறங்கிய பிக் பாஸ் அவர்களுக்கு தண்ணீ காட்டிவிட்டு தப்பித்து ஓட தொடங்கினான்.
அவர்களும் விடாமல் அவனை துரத்திக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவன் பைக்கில் வேகமாக சென்று அவனது வயிற்றில் தன் கத்தியை வைத்து நேராக ஒரு கிளி கிளிக்க, பிக் பாஸுன் ரத்தம் தரையில் சிந்தியது. தன் வயிற்றை பிடித்துக் கொண்டு கூட்டமாக இருந்த இரவு சந்தை நடக்கும் பகுதிக்குள் நுழைந்தவன், “இப்படியே ஓடிக்கிட்டே இருந்தா எனக்கு blood loss வேற ஆகுறதுக்கு சீக்கிரமா என் பாடில இருக்கிற எனர்ஜி drain out ஆகி நான் செத்துருவேன்.
இவனுங்களால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு safeஆன இடத்துக்கு நான் போயே ஆகணும்.” என்று நினைத்தவன் அவனது உடலில் உள்ள எல்லா சக்திகளையும் திரட்டி உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினான்.
அவன் அந்த சாலையில் முடிவிற்கு சென்று விட, இப்போது அவன் முன்னை இரண்டு பாதைகள் இருந்தது. யோசிக்க நேரம் இல்லாமல் ஒரு பக்கம் ஓடியவன், அதற்குள் இன்னும் இரண்டாக பிரிந்து சென்ற நடுத்தர வாசிகள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சிறிய சுற்றுப்புறச் சுவர் உள்ள வீடாக பார்த்து ஏறி உள்ளே குதித்தான். பின் அங்கே கீழே ஓரமாக இருந்த பூச்செடிகளுக்கு மத்தியில் மறைந்து அமர்ந்து கொண்டு, அவனது சட்டையை கிழித்து தனக்கு தானே கட்டு போட்டுக் கொண்டான். ஆனால் இப்போது அவனைக் காப்பாற்ற கண்டிப்பாக ஒரு டாக்டரின் உதவி அவனுக்கு தேவை என்று அவனுக்கே தெரியும். ஆனால் இப்போது டாக்டரை தேடி எப்படி செல்வது? அது தான் அவனுக்கு தெரியவில்லை.
தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.