“எப்போ தான் மா வீட்டுக்கு போவோம்… ஹாஸ்பிடலையே எவ்வளவு நாள் தான் இருக்குறது” என்று சனந்தா சலித்துக் கொள்ள, “நீ ஏன் சொல்ல மாட்ட… ஆன்… கண் முழிச்சு ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ள உனக்கு சலிக்குதா???.... நாங்க எவ்வளவு நாள் இங்கே இருந்தோம் தெரியுமா… அதுவும் வெயிட்டிங் ஹால்லையே இருந்தோம்… நானும் உங்க அப்பாவும், நீ கண் முழிப்பியா??? நீ திரும்பி எங்கள எல்லாம் பார்ப்பியா??? எங்க கிட்ட திரும்பி பேசுவியான்னு அவ்வளவு தவிச்சுக்கிட்டு இருந்தோம்…. நாங்களே ஒரு நாள் கூட சலிச்சுக்காம இருந்தா…. உனக்கு அதுக்குள்ள இது சரி இல்ல அது சரி இல்லைன்னு குறை சொல்றியா??” என்று லக்ஷ்மி முறையிட்டார்.
“சரி சரி விடு மா… இப்ப என்ன கேட்டுட்டேன்னு மூச்சு விடாம பேசுற….. ஆமா அப்பா எங்க ஆளையே காணோம்?” என்று சனா பேச்சை மாற்றும் விதமாக கேட்க, “அவர் வேலை விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனாரு… வர நேரம் தான்” என்று லக்ஷ்மி கூறுவும் சந்திரசேகர் வந்தார்.
“எப்படிடா இருக்கு… இப்போ எங்கயாவது வலிக்குதா?? சாப்டியா?? ஏதாவது வேணுமா??” என்று சந்திரசேகர் வந்ததும் கேள்விகளை அடுக்கி கொண்டே போக, “எனக்கு ஒன்னும் இல்லப்பா நான் நல்லா தான் இருக்கேன்… நான் சாப்பிட்டேன் பா…. வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டு இருந்தேன் அம்மா கிட்ட இப்ப தான்” என்று சனந்தா கூறினாள்.
“அதுக்கு கொஞ்ச நாளாகும்னு தான் நினைக்கிறேன் சனா… இப்ப தானே கண் முழிச்சிருக்க…. இன்னிக்கு தான் உன்ன நார்மல் வார்டுக்கு மாத்தி இருக்காங்க… இனிமே செக் பண்ணிட்டு உன்ன டிஸ்டார்ஜ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று சந்திரசேகருக்கு கூறினார்.
“என்னவோ போங்க… ஆமா எங்க போனீங்க நீங்க?” என்று சனா கேட்க, அது!!! என்று தன்னை ஆசுவாசிப்படுத்திக் கொண்டு, “பிரகாஷ பார்க்க போனேன்டா வேலை விஷயமா” என்று சந்திரசேகர் பட்டும் படாமலும் கூறினார்.
“ஏங்க… நான் வீட்டுக்கு போயிட்டு சாப்பாடு கொண்டு வரேன் இந்த ஹாஸ்பிடல்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு எனக்கு… அது வரைக்கும் நீங்க இருங்க” என்று லக்ஷ்மி கூறவும் சரி என்று சந்திரசேகர் தலையை அசைக்க லக்ஷ்மி வீட்டிற்கு புறப்பட்டார்.
“அப்பா… என்ன ஆச்சு?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??” என்று சனந்தா அக்கறையாக கேட்க, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா” என்று கூறினார் சந்திரசேகர்.
“என் கிட்டயே மறைக்குறீங்களா? எப்படி இருந்தாலும் திருப்பி என்னடா பண்றதுன்னு என்கிட்ட தானே வருவீங்க அப்ப பார்த்துக்குறேன் உங்கள” என்று போலியாக சனந்தா மிரட்ட, “அப்படி இல்ல சனா ஒரு சின்ன ஒரு யோசனை… அது ஒன்னும் இல்ல நானே பார்த்துக்குறேன் டா… ஏதாவது ஹெல்ப் வேணும்னா உன்கிட்ட தானே கேட்பேன் வேற யார் கிட்ட கேட்பேன்னு சொல்லு” என்று சந்திரசேகர் முறையிட சனந்தா புன்னகையுடன் தலையை அசைத்தாள்.
“அப்பா நான் உங்க கிட்ட இத சொன்னேன்னான்னு எனக்கு சரியா ஞாபகமில்லை…. அங்க ஊட்டி ஸ்கூல்ல இருந்து என்னை ஒரு பொண்ணு மெயில் முலமா காண்டாக்ட் பண்ணி தானே நாங்க அந்த ஸ்கூலுடைய ஃபுட் இன்ஸ்பெக்ஷன்காக போயிருந்தோம்… அதே ஆள் மத்த ஸ்கூல்ல கூட கான்டிராக்ட் எடுத்திருக்காரு…. இன்னொரு ஸ்கூலுக்கு போகும் போது அங்க கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு பா அதான்….” என்று சனந்தா பேச, “இது சொல்லிட்ட டா என்கிட்ட…. அதையும் நான் விசாரிச்சிட்டேன் அங்க இருக்கிற யாரோ கொஞ்சம் இன்ஃபிலைன்ஸ் ஆனா ஆள் தான் அந்த ஸ்கூல் உடைய ஹாஸ்டல் காண்ட்ராக்ட் எல்லாம் எடுத்து நடத்தறாரு…. அவர் கொஞ்சம் பெரிய கை என்றதுனால யாரும் அவரை பகைச்சிக்கிறது இல்ல…. அதனால அவர் என்ன ஃபுட் கொடுத்தாலும் சரி அப்படின்றாங்க…. கவர்ன்மென்ட்ல இருந்து கூட போய் இருக்காங்க… ஆனா, அதை எல்லாம் பெருசு பண்ணாம அவர் கவர் பண்ணிட்டாரு… இப்ப நீ போயி சாப்பாடு சரியில்ல எல்லாம் மாத்தணும்னு இரண்டு ஸ்கூல்ல சொல்லி மாத்திட்டு வந்துட்ட… மீதி இருக்குற ஸ்கூல்ல கைய வெக்க விடாம பண்ணுறாரு” என்று சந்திரசேகர் கூறினார்.
“அது சரிப்பா ஆனா, அது மட்டும் இல்ல இன்னும்….” என்று சனந்தா பேசவும், “இன்னும் நிறைய ஸ்கூல்ஸ்ல அவர் தான் காண்ட்ராக்ட் எடுத்து பண்றாரு அது தானே அதெல்லாம் பார்த்துக்கலாம் சனா… முதல்ல நீ வீட்டுட்டு வா” என்று சந்திரசேகர் கூற, சரிப்பா என்றாள் சனந்தா.
“ஏன்டா இப்படி பேசிட்டு வந்து இருக்க?” என்று சரவணன் ஆச்சரியத்தில் கேட்க, “எனக்கே தெரியல அந்த இடத்துல பிரகாஷ் சாரை மட்டும் பார்த்து இருந்தா எனக்கு எதுவும் தோணி இருக்காது… கூடவே அந்த பொண்ணோட அப்பா வந்ததும் அவர், “நீங்க என்ன வேணா கேளுங்க செய்றன்னு” சொன்னதுமே அப்படி கேட்டுட்டேன்டா” என்று விக்ரம் கூறினான்.
“சரி அந்த பொண்ணு இங்க வந்து மட்டும் என்ன பண்ணப் போகுதுன்னு நினைக்கிற… நம்ம அபர்ணாவ ஞாபகப்படுத்திட்டே தான் இருப்பா அதுக்கு வராமலே இருக்கலாமே…. வர வெச்சு எதுக்கு நம்ம இன்னும் கஷ்டப்படுத்திக்கணும் நம்மள… அதுவும் இல்லாம அந்த பொண்ணு யாரு என்ன பண்ணுறா?? படிக்கிறாளா?? என்ன ஏதுன்னு கூட தெரியாது டா” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் அப்படி விட முடியாது… அவ தானே கூட்டிட்டு போனா கார்ல அப்புவை…. அப்பு செத்துட்டா… ஆனா, இவ மட்டும் உயிரோட இருக்கா… அதுவும் யாரால உயிரோட இருக்கா அபர்ணாவால தானே உயிரோடவே இருக்கா…. அப்ப அந்த நன்றி கடனுக்காக வந்து ஏதாவது பண்ணனும்ல… வரட்டும் மச்சான்” என்று அபிலாஷ் கோபத்தில் கூறினான்.
“நீ வேற ஏன்டா இன்னும் ஏத்தி விட்டுட்டு இருக்க?” என்று சரவணன் கேட்க, “ஏத்தி எல்லாம் ஒன்னும் விடல…. ஏன் உனக்கு கோபம் இல்லையா?” என்று அபிலாஷ் கேட்க, “எனக்கும் கோபம் இருக்கு…. அதுக்கு மேல வருத்தமும் நிறைய இருக்கு…. சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருந்த பொண்ணு அப்பு…. என் கூட பொறக்காத தங்கச்சி…. அவ இல்லன்ற வருத்தம் எனக்கு என் வாழ்நாள் முழுக்க இருக்கும்…. ஆனா, இப்ப நீ பண்ணிட்டு வந்த விஷயம் எப்படி அதுக்கு ஈடாகும்னு நினைக்குறன்னே எனக்கு தெரியல அதான் அதாங்கத்தோட கேட்குறேன் நான்” என்று சரவணன் கொட்டி தீர்த்தான்.
“அது தான் எனக்கு தெரியல மச்சான் அந்த நேரத்துல தோணுச்சு அதான் அப்படி கேட்டுட்டேன்…. ரெண்டு மாசம் இருக்குல்ல அதுக்கப்புறம் மனசு மாறிட்டா அப்படியே விட்டுவிடுவோம்” என்று விக்ரம் கூற, “அப்படியெல்லாம் விடக்கூடாது விக்கி…. வர வெக்குறோம் வெச்சி செய்யுறோம் அது தான் நம்ம அபர்ணாக்கு நம்ம செய்யுறதே” என்ற அபிலாஷ் கூற, “என்னவோ பண்ணுங்கடா எனக்கு என்னமோ இது சரியா தோணல” என்று கூறி சரவணன் சென்றான்.
“விக்கி!!! எங்க போறான் இவன்…. ஏன் அவனுக்கு புரியவே இல்ல” என்று அபிலாஷ் கேட்க, “அவன் அப்படித் தான்னு தெரியும்ல… என்ன இருந்தாலும் பரவாயில்லை விட்டுடலாம்னு யோசிப்பான் அவன்…. வேற எங்க போவான் எங்க ஆஃபீஸ்க்கு தான் போவான்…. சரி நானும் கிளம்புறேன் போயிட்டு கொஞ்சம் வேலை இருக்கு எல்லாத்தையும் முடிச்சிட்டு சாயந்திரம் பார்க்கலாம்” என்று விக்ரம் கூறி புறப்பட்டான்.
ஊட்டியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உயரத்தில் அமைந்திருக்கும் கிராமம் தான் வண்ணம். அங்கிருந்து நேரடியாக ஊட்டிக்கு பெரும்பாலும் போக்குவரத்து வசதி எதுவும் இருக்காது. கிராமத்தில் இருந்து சுமார் ஒரு ஐந்து கிலோமீட்டர் நடந்து வந்தால் மட்டுமே அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள், அன்றாட தேவைக்கான பொருட்கள், ஒரு சிறிய மார்க்கெட் என அனைத்தும் இருக்கும்.
அப்படி கிராமத்தில் இருந்து வெளியே வருவதற்குள் சுமார் அரைமணி நேரம் ஆவது ஆகும் அதுவும் ஜீப்பில் வந்தால் மட்டுமே. அதுவே நடந்து வந்தால் பழகியவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகும் புதியதாக வருபவர்களுக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் வரை எடுக்கும். கிராமத்தில் வாழும் மக்களின் பிரதான தொழில் அங்கு கிடைக்கும் மூலிகைகளை வைத்து பொருட்களை தயார் செய்வது தான் அதனை கொண்டு வந்து ஊட்டியில் உள்ள பெரிய கடை முதல் சிறிய கடை வரை அனைவருக்கும் விநியோகம் செய்வதே தொழிலாகும்.
கிராமத்தில் முதலில் ஐந்து குடும்பங்களுடன் ஆரம்பித்து தற்போது முப்பது குடும்பங்கள் வரை பெருகி உள்ளது. கிராமத்தில் மக்கள் அனைவரும் சேர்ந்து ஸ்ரீனிவாசனை தலைவர் ஆக்கினர். அதற்கு காரணம், அங்கிருக்கும் மக்களுக்குகாக என போராடி அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்புக்காக ஃபாரஸ்ட் ரேஞ்சர் இன்ஸ்பெக்டரை வரவழைத்தார். பின் அங்கு இருக்கும் மக்களுக்கு அடிப்படை போக்குவரத்து தேவை என்பதையும் வலியுறுத்தி அரசாங்கத்தின் மூலம் இரண்டு ஜீப் ஏற்பாடு செய்தார். அங்கு மருத்துவமும் முக்கியம் என்பதால் அதற்கும் போராடி வாலண்டியர் டாக்டர், ஆறு மாதத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டு இருப்பது போல் காண்ட்ராக்ட் ஒன்றை அரசாங்கம் முடிவு செய்து அவர்களுக்கு மருத்துவர்களை ஏற்பாடு செய்தது. அதனால், அங்கிருக்கும் மக்கள் அவரை ஊர் தலைவராக நியமித்தனர்.
வண்ணம் கிராமம் சுற்றி ஒரு பதினைந்து கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அங்கே இரண்டு நீர்வீழ்ச்சிகளும் மேலும் ஒரு சிறிய அணை மக்களே அவர்களுக்காக கட்டமைத்துக் கொண்டனர். மேலும், ஒரு ஆறும் அக்கிராமத்தின் வழியாகவே பாயும் என்பதால் அவர்களுக்கு குடிநீருக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.
மேலும் அவ்வூருக்கும் மின்சார வசதியும் விக்ரம் கல்லூரிக்கு சென்ற பின் அரசாங்கத்திடம் வலியுறுத்தி அதையும் செய்து கொண்டனர். அங்கே கிராமத்தின் சுற்றளவிலும் சுத்தி அலாரம் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் ஏதேனும் விலங்குகள் மற்றும் காப்பு மிருகங்கள் உள்ளே வந்தால் மக்களுக்கு உடனே அலாரம் மூலம் தெரியப்படுத்தி அம்மக்களும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இந்த ஏற்பாடு முழுக்க சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் சேர்ந்து செய்தனர்.
மக்களுக்கு அடிப்படை மருத்துவமும் தெரிய வேண்டும் என்பதால் அபர்ணா நர்சிங் காலேஜ் சேர்ந்த ஒரு வருடத்தில் அங்கே இருக்கும் கோயில் பக்கத்திலேயே ஒரு சிறிய குடிசையை அமைத்து அங்கே பள்ளியும், முதலுதவிக்கான அனைத்து பொருட்களையும் வைத்து எப்படி அதை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அனைவருக்கும் கற்று கொடுத்தாள்.
ஒரு சிறிய மருத்துவமனை கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் அதற்கு பக்கத்திலேயே ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்கான ஒரு சிறிய ஆஃபீஸ் ரூம் இருக்கும். ஒரு சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு அங்கேயே விக்ரம், சரவணன் மற்றும் மீதி போலீஸ் ஆஃபீஸ்சர்ஸ் தங்கி விடுவார்கள். அதற்கு ஏற்ப ஒரு ஓய்வறையும் இருக்கும்.
அங்கு மருத்துவமனையை ஒட்டி ஒரு சிறிய ரூம் போன்று அமைந்திருக்கும் அபிலாஷும் அங்கேயே தங்கிக் கொள்வான். எப்பொழுதாவது விக்ரம் உடைய வீட்டிற்கு செல்வான். சரவணன் இங்கேயே பழகி விட்டதால் அவனும் கிராமத்திலேயே விக்ரம் வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய வீடு கட்டிக் கொண்டு கிராமத்திலும் இருப்பான், ஆஃபீஸிலும் இருப்பான், அவ்வப்போது அவர்களின் வீடு இருக்கும் ஊட்டிக்கும் சென்று வருவான்.
அபிலாஷ் கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவன் கிராமத்திற்கு வாலன்டியராக வந்து அவனுக்கு அங்கே பிடித்துப் போக சுமார் மூன்று வருடங்களாக அங்கேயே வாலன்டியர் டாக்டராக பணிபுரிந்து வருகிறான். இப்பொழுது ஒரு இன்டர்டன் மற்றும் நர்ஸ் இருவரும் அங்கே வாலன்டிராக வந்திருக்கும் அவர்களுக்கும், மருத்துவமனைக்கும் ஃபாரஸ்ட் ஆஃபீஸுக்கும் இடையில் தனித்தனி அறைகளை கட்டி அவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தனர் அங்கிருக்கும் மக்கள் அனைவரும்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.