பாகம் - 29

அன்னைக்கு உன்ன பாத்துட்டு போன பிறகு திடிருணு ஊரிலிருந்து அம்மாக்கு முடியலனு ஃபோன் வந்துச்சு,அதனாலே நான் அன்னைக்கு நைட்டு எங்க சொந்த ஊருக்கு போய்ட்டேன்.

அப்படி இருக்கும் போது நான் எப்படி உன் என்கேஜ்மென்ட் ட நிறுத்த முடியும்.

😡 அப்போ அன்னைக்கு என்ன தான் நடந்துச்சு.மாறன் நல்லா எங்கள முட்டால் ஆக்கிருக்கான் அவனையும் அந்த நங்கயையும் நான் சும்மா விடமாட்டேன்.

வித்யா நீ கொஞ்சமாச்சும் உன்னைய மாத்திக்க கூடாதா இப்படியே குடிச்சு குடிச்சு உடம்பெல்லாம் வீணா போகுது.🍾🍾

ஹே !
என்னடா ரொம்ப நடிக்கிற உனக்கு என்கிட்ட வேண்டியது பணமும் என் உடம்பும் தானே ஏதோ உண்மையா காதலிக்கிற மாதிரி பேசுற. என்றவள்

இதோ பாரு பிரதாப் வந்தியா ஜாலி யா என்ஜாய் பண்ணியா,பணம் வாங்குனியா போனியானு இருக்கணும் இது போலே சென்டிமென்ட் சீன் எல்லாம் இங்கே காட்ட கூடாது என்ன புரியுதா என்றபடி
சில ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தவள்

ஒரு பெண்ணோடு தோளில் கைப் போட்டுகொண்டு ஹோட்டல் ரூமுக்குகுள் சென்றாள் வித்யா.

பிரதாப்க்கு என்ன தான் அவள் மீது காதல் இல்லாத பொழுதிலும் வித்யாவோடு இத்தனை நாள் பழகிய பழக்கத்தின் அடிப்படையில் அவள் மீது சற்று அக்கறை இருக்கிறது.சிறு வயது முதலே ஒன்றாக படித்தவர்கள் கல்லூரி வரையிலும் ஒன்றாக தான் இருந்தனர்.அதை கூட அவள் புரிந்து கொள்ளாதவள் .

போகும் அவளையே பார்த்தபடி நின்று இருந்தான் பிரதாப்.

நங்கைக்கு ஒன்னும் இல்லே மாறா ஷி ஸ் ஃபார்பேக்ட்லி ஆல் ரைட்.
காயம் மட்டும் இன்னும் கொஞ்சம் ஹில் ஆகனும் மத்தபடி கம்லிட்லி கியூர் ஆய்டாங்க.

டேங்க் யூ ஆன்ங்கிள்

இட்ஸ் ஓகே மாறா. எதுவா இருந்தாலும் தயங்காம கால் பண்ணு ஓகே.

ஓகே அன்ங்கிள்

நங்க டேக் கேர் டா. மாறன் ரொம்ப நல்ல பையன் மா என்ன கொஞ்சம் அவனுக்கு கோபம் அதிக வரும் உன் கிட்ட கோப பட்டா சொல்லு.

கோபம் படாத அளவுக்கு பையனுக்கு ஹெவி டோஸ் ல இன்செக்ஸன்💉 போட்டு விட்டடலாம். என்று மாறனை கிண்டல் அடித்தார் Dr கிருஷ்ணா.

நங்கையும் கூட சேர்ந்து 🤭 சிரிக்க முரைத்த பார்வை பார்த்தவனை துளியும் கண்டு கொள்ளாமல் ஓகே Dr என்று மீண்டும் சிரித்தாள்.
சரிம்மா நான் வரேன் டுட்டி நேரமாட்சு என்று விடைபெற்று கொண்டார்.

ஏன் சத்யா ஒரு மாதிரியா இருக்க, எண்ணாட்சு ?

ஒன்னும் இல்லே கா

நீ ஒன்னும் இல்லேன்னு சொல்லும்போதே ஏதோ இருக்குன்னு தான் அர்த்தம் என்னனு சொல்லு.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே கா.
சரி ஏதோ என் கிட்டே இருந்து மறைக்கர பரவா இல்லை எப்ப சொல்லணும் தோணுதோ அப்போ சொல்லு.

ஆனா நீ இப்படி இருக்காதா எப்பவும் போலே கலகலன்னு சிரிச்சுக்கிட்டே இரு சத்யா என் தங்கைக்கு அதுதான் எப்பயும் அழகு.

என்றவளை நோக்கி மெலிதாக புன்னகைத்தால் சத்யா.
சரிக்கா நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

இரு சத்யா போலாம். அதுக்குள்ள போறேங்குற பொறுமையா போய்க்கலாம்.

அது வந்து இல்ல அக்கா.

இந்த கதை எல்லாம் வேணாம் சொல்றது செய் எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் அதுக்கப்புறம் போ. 🤨


சரி என்று தலை ஆட்டினால் சத்யா?
ஷியாம்யாமும் வந்துவிட அனைவரும் அமர்ந்து உணவை உட்கொண்டனர்.

என்ன சத்யா ஓயாம பேசிக்கிட்டே இருப்ப இப்ப என்ன சைலன்டா சாப்டுற?

அதான் சார் எனக்கும் தெரியல காலையில் இருந்தே இப்படி தான். மூட் அப்செட்டாவே இருக்கா என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டெங்கரா ?

என்று நங்கை கூறிட மாறன் ஷ்யாம்மை தான் பார்த்தான்.

ஷ்யாம் இதை எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சிறிது நேர அமைதிக்கு பின்

சரி மாறா நான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்.

என்ன மாமா ஒரு வாரம் இருக்கிறதா தானே என்கிட்ட சொன்னீங்க.

மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுது மாறா காண்ட்ராக்ட் சைன் பண்ணியாச்சு உன்னையும் உன் வைப்பையும் பாத்துட்டேன், சோ இனி எனக்கு இங்க என்ன வேலை ,என்றபடி கை கழுக எழுந்து போனான் ஷ்யாம்.

சத்யாவிருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

என்ன தான் சத்யா தைரியமான வெளிப்படையான பெண் என்றாலும்.
காதல் விஷயத்தில் பெரிய வீரனும் கோலைத்தான்.அவ்வாறு இருக்கையில் சத்யா மட்டும் விதி விலக்கா என்ன.?


அப்படி இருந்தும் தன் காதலை வெட்கத்தை விட்டு சொல்லியும் கூட ஷியாம் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் நிராகரிப்பது சத்யாவிற்கு மேலும் வருத்தத்தை கூட்டியது.

இதற்கு மேலும் இங்கு இருந்தால் எங்கே அழுது விடுவோமோ என்று நினைத்த சத்யா

சரி அக்கா அப்ப நானும் கிளம்புறேன்.
மாமா அக்காவுக்கு கொஞ்சம் உடம்பு சரியானதும் வெளிய கூட்டிட்டு போயிட்டு வாங்க அவங்க வீட்டுக்குள்ளேயே அடைந்து இருந்தவங்க இனிமே ஆச்சும் சுதந்திரமா இருக்கட்டும்.

ம்ம் சரி சத்யா.

சத்யா அங்கிருந்து நகர
ஒரு நிமிசம்

நில்லு சத்யா.

ஷ்யாம்ம் அண்ணா ஒரு ஹெல்ப் பண்றீங்களா சத்யாவை மட்டும் கொஞ்சம் ட்ராப் பண்றீங்களா பாவம் தனியா போகணும்.

ஏம்மா அவங்க கார்ல தானே வந்து இருப்பாங்க.

இல்லை அண்ணா கார்ல வந்தா அவங்களுக்கு தெரிஞ்சிரும்னு அவ ஆட்டோல தான் வந்தா அதுவும் இல்லாம இங்க தனியா போறது அவ்வளவு சேஃப் கிடையாது அதனாலே தான் அண்ணா என்றிட

அதை யார் சொல்றா நீங்களா மேடம் என்றான் மாறன்.
நங்கை புன்னகைக்க

விடுக்கா அவருக்கு வர விருப்பம் இல்லனா ஏன் கம்பெல் பண்றீங்க?

சரி விடுங்க ஷ்யாம் மாமா நானே போய் டிராப் பண்றேன் என்று மாறன் கூறிட

பரவாயில்லை மாறா நீ நங்கைய பாத்துக்கோ நான் போய் விட்டுட்டு வரேன் அதுமட்டும் இல்லாம எப்படியா இருந்தாலும் நாளைக்கு நான் ஊருக்கு போக போறேன். சோ லாஸ்ட்டா போய் விட்டுட்டு வரேன். என்று சூட்சகமாக கூறினான் ஷியாம்.

செல்லும் இருவரையும் பார்த்து இவங்க ரெண்டு பேருக்குள்ள என்னவோ இருக்கு என்றால் நங்கை.

ஆமாமா மத்தவங்க எல்லாரோட பீலிங்ஸ்உம் புரிஞ்சுக்கோ உன் பக்கத்துல இருக்க என்ன புரிஞ்சுக்காத என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட மாறனை பார்த்து, நங்கை

என்ன?

ஒன்னும் இல்ல!

என்றவனை ஒரு பக்க இதழை வளைத்து ஒற்றை பிருவத்தை உயர்த்தி

ம்ம் ..... என்றாள் நங்கை.

என்ன சொல்ற வித்யா?

ஆமாம் மா! அன்னைக்கு பிரதாப் ஊரிலேயே இல்ல, அப்படி இருக்கும் போது எப்படி மாறனுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சுச்சு.

அப்போ வேற யார் சொல்லி இருப்பா மாது,

அதுதாங்க எனக்கும் குழப்பமா இருக்கு இந்த உண்மை தெரிஞ்ச ஆளு நீங்க நானு பிரதாப் அப்பறம் வித்யா அப்படி இருக்கும்போது பிரதாப் சொல்லலைன்னு சொல்றான் அப்போ யாரு?

கண்டுபிடிக்கணுமா?

சீக்கிரம் கண்டுபிடிக்கணும் அந்த மாறனையும் நங்கையயும் சும்மா விட கூடாது என்னைய அத்தனை பேரு முன்னாடி அசிங்க படுத்துட்டாங்க.

என்று கையில் மது பாட்டலுடன் கூறியவள்.

மது குப்பியை வாயில் வைத்து மூச்சிவிடாமல் குடித்தாள் வித்யா.

காரில் அமைதியாக இருக்கும் சத்யாவை கண்டுகொள்ளாமல் கவனத்தை சாலையில் பதித்தான் ஷ்யாம்.

நாளைக்கு உண்மையாவே லண்டன் போக போறீங்களா?

என்றவளை ஏறெடுத்தும் பாராமல்

ஆமாம்!

உங்களுக்கு என்ன புரியுதா இல்ல புரிஞ்சும் புரியாம நடிக்கிறீங்களா?

அமைதி

உங்கள தான் கேட்டுட்டு இருக்கேன்?

இப்ப நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?

உங்க கிட்ட வெக்கத்த விட்டு என் காதலை சொல்லியும் நீங்க எந்த ரெஸ்பான்ஸ்வும் பண்ணாம இருந்தா என்ன அர்த்தம்.




ம்..உன்ன பிடிக்கலைன்னு அர்த்தம்?

ஓ அப்படியா?

அது என் முகத்த பாத்து சொல்லுங்க?

என்று சத்யா கூறிட ஷ்யாம் அவள் கண்களைப் பார்த்து உன்ன எனக்கு பிடிக்கல சுத்தமா பிடிக்கல என்று
அழுத்தமாக கூறினான்.

அதை தாங்கிக் கொள்ள முடியாத சத்தியா காரின் கதவை திறந்து குதிக்க முற்பட்டாள்.


தொடரும்..
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -29
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.