அந்த அம்புகள் அர்ஜுனை நோக்கி பாய்ந்தன. அதை பார்த்த சந்ரா பயந்து,
சந்ரா : அர்ஜுன்ன்ன்......
என கத்திக்கொண்டே, வேகமாக ஓடிவந்து, அர்ஜுனை பிடித்து இழுத்தாள். அர்ஜுன் பயத்தில் அம்பு வந்ததை பார்த்துக்கொண்டே நின்றான். திரும்பு அம்புகள் வந்தது. சந்ரா, அர்ஜுன் கையை பிடித்துக் அவனைக்கூட்டிக்கொண்டு ஓடினாள்.

இருவரும் அங்கிருந்து ஒடினர். ஓடி ஓடி காருக்கு சென்று,
அர்ஜுன் : சந்ரா நீ மொதல்ல கார்ல உக்காரு.
கார் கதவை திறந்து, சந்ராவை உக்கார வைத்தான்.
சந்ரா : நீயும் சீகிரமா உக்காரு.
அர்ஜுனும் வேகமாக உள்ளே அமர்ந்து, காரை Start பன்னினான். இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். அங்கு அபி கோபத்துடன்,
அபி : என்னோட Plan எல்லாத்தையும் கெடுத்துட்டா அந்த சந்ரா. அவளுக்கு என்னதா பிரச்சன? ஏ இப்பிடி பன்றா?

கத்தினான், கதறினான். அங்கு அர்ஜுனும் சந்ராவும் காரில்,
சந்ரா, அர்ஜுன் : உனக்கு ஒன்னு ஆகலல்ல?

ஒரே நேரத்தில் கேட்டனர். அர்ஜுன் சிரித்தான்.
அர்ஜுன் : பாத்தியா Sweet heart? நம்ப வாழ்க்க ஒன்னு சேரலன்னாலு, வார்த்த ஒன்னு சேந்திரிச்சு.
சந்ரா, அர்ஜுனுடைய காதல் பார்வையில் இருந்து தப்பிக்க திரும்பிக்கொண்டாள்.
அர்ஜுன் : அது செரி Sweet heart, நீ எதுக்கு உன்னோட உயிர பத்திக்கூட கவலப்படாம என்ன காப்பாத்துன?

சந்ரா : அது.... அந்த எடத்துல யார் இருந்தாலு நா காப்பாத்தி இருப்பே.
அர்ஜுன் : அது எனக்கே தெரியும் Sweet heart. ஆனா உனக்குதா என்ன பிடிக்காதே. நா எப்ப சாவன்னு காத்திட்டிருக்கல்ல நீ?
சந்ரா : (வேகமாக) அது அப்போ. இப்போ இல்ல. இப்போ நீ என்னோட
அர்ஜுன் : (மிகுந்த எதிர்ப்பார்ப்புடன்) சொல்லு சந்ரா இப்போ நா?

சந்ரா : அது.... ஒன்னு இல்ல.
அர்ஜுன் : ஏ மறைக்கிற? இப்போ நா உன்னோட புருஷ. அததான சொல்ல வந்த?
சந்ரா : இல்ல.
அர்ஜுன் : அப்போ காதலன்னு சொல்ல வந்தியா?
சந்ரா : கொஞ்சோ பேசாமா வண்டி ஓட்டுறியா?

அர்ஜுன் : உண்மய சொன்னா உனக்கு கோவம் வருது?
சந்ரா : (பேச்சை மாற்றி) இப்போ எங்க போறோ?
அர்ஜுன் : உனக்கு ஒரு Surprise இருக்கின்னு சொன்னல்ல? அங்கதா போறோ.
சந்ரா : அதா எங்க?
அர்ஜுன் : Wait பன்னி பாரு, Sweet heart. உனக்கே தெரியும்.
சந்ரா : (மனதிற்க்குள்) நா ஏ அர்ஜுன காப்பாத்துன? சின்ன வயசுல என்னோட உயிர காப்பாத்துனதாலையா? ஆனா அவன நா காப்பாத்த ஓடும்போது, அது எனக்கு ஞாபகமே வரலயே, அர்ஜுன் ஆபத்துல இருந்தது மட்டுந்தா என் கண்ணு முன்னாடி இருந்தது. அப்றோ நா ஏ அவனுக்கு ஆபத்தின்னதும் பதறிப்போனே? ஒரு வேல அர்ஜுன் சொன்னமாதிரி...

....Flash back....
அர்ஜுன் : கூடிய சீக்கிரமே, நா நல்லவன்னு உனக்கு புரியும். நீ என்ன காதலிப்ப.
.... Flash back முடிந்தது.....
சந்ரா : (மனதிற்க்குள்) அர்ஜுன் சொன்ன மாதிரி எனக்குள்ள காதல் வந்திருச்சா?
அர்ஜுன் : சந்ரா !
சந்ரா : ஹா?
அர்ஜுன் : எடம் வந்திரிச்சு. எறங்கு.
இருவரும் இறங்கினர். சந்ரா ஒன்றும் புரியாமல் பார்த்துகொண்டே இறங்கினாள்.
அர்ஜுன் : வா Sweet heart, உள்ள போலா.
சந்ரா : யார் வீடு இது?
அர்ஜுன் : உனக்கு வேண்டியவங்க வீடு.
சந்ரா : எனக்கா?
அர்ஜுன் : ஆமா உள்ள வா. கமான்.
இருவரும் உள்ளே சென்றனர். அங்கு ஒரு பெண் இருந்தாள்.

அவள், சந்ராவை பார்த்ததும் கட்டி பிடித்து அழுதாள். சந்ரா ஒன்றும் புரியாமல் நின்றாள்.
அர்ஜுன் : என்ன சந்ரா பாக்குற? இவங்கதா உன்னோட அக்கா மீரா.
சந்ரா அதிர்ச்சியில் மீராவை பார்த்தாள். அதே அதிர்ச்சியில்,
சந்ரா : மீரா அக்கா....
அவளும் மீராவை கட்டி பிடித்து அழுதாள்.

அர்ஜுன் சந்ராவின் மகிழ்ச்சியை பார்த்து சந்தோஷப்பட்டான்.
அர்ஜுன் : (மனதிற்க்குள்) அக்கா, தங்கச்சிக்குள்ள நா எதுக்கு நடுவுல?
என்று கூறி, அர்ஜுன் வெளியே சென்றுவிட்டான்.
சந்ரா : நீங்க இத்தன நாள் எங்க இருந்தீங்க மீரா அக்கா? எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க உயிரோட இருக்கிறது தெரியாது. நீங்களாவது என்ன பாக்க வந்திருக்கலால்ல?

மீரா : இல்ல சந்ரா. நேத்துதா நீ உயிரோட இருக்கிற விஷியமே எனக்கு தெரியும்.
சந்ரா : எப்பிடி தெரிஞ்சது?
மீரா : நேத்து நா ரோட்ல நடந்து வந்திட்டிருக்கும்போது, ஒரு கார் வந்து என்மேல மோதிரிச்சு. நல்லவேள எனக்கு பெருசா ஒன்னும் ஆகல. கால்ல மட்டு அடிப்பட்டிரிச்சு. அப்போ,
....Flash back....
மீரா காரில் அடிப்பட்டு கீழே விழுந்தாள். அவளுடைய காலில் அடிப்பட்டுவிட்டது. மீரா எழுந்து உக்கார்ந்தாள். கூட்டம் கூடியது.
ஒரு பெண் : உனக்கு ஒன்னு ஆகலல்லம்மா?
மீரா : எனக்கு ஒன்னு ஆகல. நா நல்லா இருக்கேங்க.
மிரா எழுந்து, நொன்டி நொன்டி நடந்து, நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டாள். அர்ஜுன் அங்கு வந்து, மீராவை கைக்கொடுத்து தூக்கிவிட்டான்.
அர்ஜுன் : நீங்க எங்க போகனுன்னு சொல்லுங்க. நா உங்கள கொண்டுப்போய்விட்டர்றே.
மீரா : உங்களுக்கு எதுக்கிங்க கஷ்ட்டோ? விடுங்க நா போய்க்கிறே.
அர்ஜுன் : இதுல என்னங்க கஷ்ட்டோ இருக்கு? வாங்க உங்கள Drop பன்றே.
மீரா : ரொம்ப நன்றிங்க.
அர்ஜுன், மீராவின் கையை பிடித்து தூக்கிவிட்டான்.
அர்ஜுன் : பாத்து மெதுவா. மெதுவா வாங்க.
அர்ஜுன் காரில் மீராவை ஏற்றி சென்றான். சிறிது தூரம் சென்றதும்,
மீரா : இங்கதா என்னோட வீடு. இங்க நிப்பாட்டுங்க.
அர்ஜுன் : Ok.
அர்ஜுன், மீராவை இறக்கிவிட்டு வீட்டிற்க்குள் அழைத்து சென்றான்.
மீரா : நீங்க விடுங்க நா போய்க்கிறே.
அர்ஜுன் : கால்ல அடிப்பட்டிருக்கு எப்பிடிங்க போவீங்க? நா உங்கள வீட்டுக்குள்ள விட்டிட்டு போறே.
அப்படியே அர்ஜுன், மீராவை வீட்டிற்க்குள் அழைத்து சென்று, Sofaவில் அமர வைத்தான்.
அர்ஜுன் : பாத்து உக்காருங்க. ஏங்க வீட்டில யாரு இல்லையா?
மீரா : வீட்ல மட்டு இல்ல, எனக்கு சொந்தொன்னு சொல்லிக்க யாருமே இல்ல.
அர்ஜுன் : Iam so sorryங்க.
அர்ஜுன் எதிர்ச்சியாக சுவரில் இருக்கும் மீராவின் Family Photoவை பார்த்தான்.
அர்ஜுன் : அந்த photoல இருக்கிறது யாரு?
மீரா : அதுதா என்னோட Family. நா, எங்கப்பா, அம்மா அதோட என்னோட தங்கச்சி சந்ரா.
அர்ஜுன் : உங்க தங்கச்சி பேரு சந்ராவா?
மீரா : ஆமா ஏ?
அர்ஜுன் : என்னோட மனைவி பேரும் சந்ராதா.
மீரா : ஓ அதனாலதா அந்த பேர கேட்டதும், உங்க மொகத்துல இவ்ளோ சந்தோஷமா?
அர்ஜுன் புன்னகைத்தான்.
மீரா : எனக்கு இந்த உலகத்திலயே என்னோட தங்கச்சியதா ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் அப்பிடிதா. என்னதா ரொம்ப பிடிக்கும்.
அர்ஜுன் : எனக்கும் என்னோட சந்ராவ ரொம்ப பிடிக்கும்.
மீரா : Iam sorry, நீங்க இவ்ளோ பன்னியிருக்கீங்க உங்க பேருக்கூட நா கேக்கல. உங்க பேரு என்ன?
அர்ஜுன் : நா அர்ஜுன்.
என்று கூறி கை நீட்டினான்.
மீரா : நா மீரா.
மீராவும் கை கொடுத்தாள். இருவரும் கைக்கொடுக்கும்போது, அர்ஜுன் மீராவின் விரலில் இருக்கும் மோதிரத்தை பார்த்தான்.
அர்ஜுன் : கேக்கறன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இந்த ரிங்..... எங்க வாங்கினீங்க?
மீரா : இது எங்க அப்பா குடுத்த ரிங். சின்ன வயசுல எங்க அப்பா எனக்கு குடுத்தாரு. இது அவரே Order பன்னி செஞ்சது. இந்த மாதிரி ரிங் உலகத்திலயே ரெண்டுதா இருந்தது. ஒன்னு எங்கிட்ட இருக்கு, இன்னொன்னு என்னோட தங்கச்சிகிட்ட இருந்தது. ஆனா அவ உயிரோட இல்ல. இப்போ எங்கிட்ட மட்டுந்தா இருக்கு.
அர்ஜுன் : உங்களுக்கு Sure ரா தெரியுமா இந்த மாதிரி Model ring வேற எங்கயும் கெடைக்காதா?
மீரா : கண்டிப்பா கெடைக்காது. எங்க அப்பா, நானு என்னோட தங்கச்சியும் எப்பவும் பிரியக்கூடாதின்னு ஒரே மாதிரி ரெண்டு Ring Order பன்னி எங்களுக்கு குடுத்தாரு. அது எப்பவுமே எங்க கைலதா இருக்கனுன்னு சொல்லுவாரு. ஆமா, அத ஏ நீங்க கேக்குறீங்க?
அர்ஜுன் : உங்க தங்கச்சி சாகல. அவ உயிரோடதா இருக்கா.
மீரா : (அதிர்ச்சியில்) என்ன சொல்றீங்க?
அர்ஜுன் : இதே Ring என்னோட மனைவி சந்ரா வெரல்லையும் இருக்கு.
மீரா : (சந்தோஷத்துடன்) அப்பிடியா? என்னால நம்பவே முடியல. அப்பிடின்னா, அவதா என்னோட தங்கச்சி. இப்போவே அவள நா பாக்கனும்.
அர்ஜுன் : இல்ல. நீங்க ரெஸ்ட் எடுங்க. அவள நா நாளைக்கே கூட்டிட்டு வர்றே. இன்னிக்கு நீங்க ரெஸ்ட் எடுங்க. சந்ராவும் உங்கள பாத்தா ரொம்ப சந்தோஷப்புவா.
.....Flash back முடிந்தது.....
மீரா : இதுதா நடந்தது. அர்ஜுன் உண்மையிலேயே ரொம்ப நல்லவ. அவ உன்ன ரொம்ப காதலிக்கிறா சந்ரா.
சந்ரா : (புன்னகையுடன்) உண்மையிலேயே அர்ஜுன் ரொம்ப நல்லவந்தா.
மீரா : ஆமா, அர்ஜுன் எங்க?
சந்ரா : இங்கதான இருந்தா? எங்க போய்ட்டா?
சந்ரா அர்ஜுனை தேடினாள். தேடிக்கொண்டே வெளியே சென்றாள். அர்ஜுன் அங்கு நின்று வானத்தை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்தான்.

அர்ஜுன் : அக்காவ பாத்ததும் சந்ரா மொகத்துல எவ்ளோ சந்தோஷம். அப்பிடியே பௌர்ணமி நிலாவ பக்கத்தில பாத்த மாதிரி இருந்தது.
அதை கேட்ட சந்ரா,
சந்ரா : (மனதிற்க்குள்) எப்பவுமே என்னோட அர்ஜுனுக்கு என்னோட நெனப்புதா. அவ என்ன ரொம்ப காதலிகிறா.
சந்ராவுக்கு அர்ஜுன் கூறிய, "கூடிய சீக்கிரமா நா நல்லவன்னு உனக்கு புரியும், நீ என்ன காதலிப்ப". என்று கூறியது ஞாபகம் வருகிறது. அதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே சந்ரா அர்ஜுன் அருகில் வருகிறாள்.

அதில் குறிப்பாக, அர்ஜுன் கூறிய, "நீ என்ன காதலிப்ப". என்பதை மட்டும் அடிக்கடி நினைத்து பார்த்து, புன்னகையுடன் அர்ஜுன் அருகில் வந்தாள். வந்து,
சந்ரா : அர்ஜுன் !
அர்ஜுன் திடீரென திரும்பி,
அர்ஜுன் : சந்ரா, நீ இங்க என்ன பன்ற? மீராக்கூடதான பேசிட்டிருந்த?
அவன் பேச பேச, சந்ரா உடனே அர்ஜுனை கட்டிப்பிடித்துவிட்டாள்.
அர்ஜுனுக்கு ஒரே அதிர்ச்சி,
சந்தோஷத்துடன் கலந்த அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: Chapter-29
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.