CHAPTER-28

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவள் நெற்றியில் பதிந்த இதழ்களை மெதுவாய் விலக்கி, "யூ ஆர் மைன் ப்ரின்சஸ்." என்றான் மெல்லிய குரலில்.

அதில் அவள் புருவத்தை குறுக்கி அசைந்து படுக்க, அவள் கழுத்தின் கீழ் விலகியது அவள் துப்பட்டா. அதில் இரசனையாய் மெல்ல இதழ் வளைத்தவன், மெதுவாய் அவள் துப்பட்டாவை உருவினான்.

அதில் திடுக்கிட்டு அவள் எழுந்தமர, சூரிய ஒளி அவள் முகத்தில் அடித்தது. அதில் விழியை குறுக்கி முகத்தை மறைத்தவள், அப்போதே சுற்றி பார்க்க விடிந்திருந்தது. அதில்தான் கனவென்று உணர்ந்து நிம்மதியடைந்தவள், அன்னிச்சையாய் தன் துப்பட்டாவை சரி செய்ய, அதுவோ கழுத்திலில்லை.

அதில் அதிர்ந்து குனிந்து பார்த்தவள், புரியாது அவசரமாய் தேட, எங்குமே காணவில்லை. அதில் குழம்பி புருவத்தை சுழித்தவள், போர்வையை விலக்கி உதறி சுற்றியும் தேடி பார்க்க, எங்குமே காணவில்லை. அதில் குழப்பமாய் தலையை சொரிந்தவள், சட்டென்று அதிர்வாய் புருவம் விரித்தாள்.

அப்படியென்றால் அது கனவில்லையா என்று அவள் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, கரம் அவசரமாய் தன் துப்பட்டா இருந்த இடத்தை தடவி பார்க்க, மறு கரம் தன் நெற்றியில் பதற்றமாய் படர்ந்தது.

அங்கே அவன் இதழ் பதித்த இடம் இன்னுமே ஈரத்தை உணர்த்த, "யூ ஆர் மைன் ப்ரின்சஸ்" என்ற அவன் குரல் அவள் காதில் ஒலித்தது.

யார் அவன் என்று பதற்றமாய் யோசிக்க, அதை படித்துக்கொண்டிருந்த அமீராவின் முகம் இறுகியது.

அந்த அமீராவிற்கு அந்த வார்த்தைகள் புதிதாக இருக்கலாம். ஆனால் இந்த அமீராவிற்கோ இது பழக்கப்பட்டது.

"அமீரா மீன்ஸ் ப்ரின்சஸ். இந்த ப்ரின்சஸ சொந்தமாக்க போற கிங்தா நா. அதனாலதா என் பேரு விராஜ்னு நெனைக்குறேன்." என்று அவன் கூற, மெல்லியதாய் சிரித்தபடி பார்வையை தாழ்த்தினாள் அமீரா.

அந்த பார்வை வட்டத்தில் அழகாய் வந்தது ஒரு பின்க் தாமரை மலர். அதில் அவள் மெதுவாய் நிமிர, அவள் முன் ஒற்றை கால் மடக்கியமர்ந்து அதை நீட்டியிருந்தவன், "ஃபார் மை பியூட்டிஃபுல் ப்ரின்சஸ்" என்று இரசனையாய் புன்னகைத்தான்.

அதில் வெட்கத்துடன் இதழ் வளைத்த அவளும் மெதுவாய் அதை வாங்கிக்கொள்ள, அதை பூவைவிட மென்மையாய் பற்றியது அவள் விரல்கள்.

அதே விரல்கள் இன்று இந்த டைரியின் பக்கத்தை கசக்கி சுருட்ட, அவள் உடலெல்லாம் பற்றிக்கொண்டு வந்து ஓங்கி தரையில் உதைத்தாள். அதில் அருகிலிருந்த பெட்டியில் பலமாய் கால் பட்டு, "ஆ!" என்று காலை பிடித்தாள்.

"மேடம் என்ன ஆச்சு?" என்று பதறி உள்ளே வந்தான் யோகி.

அதில் அவளோ இறுக்கி விழி மூடி காலை தூக்கி மெத்தையில் வைக்க, அவள் சுண்டு விரல் நகம் கிழிந்து இரத்தம் கசிந்தது. அதில் பதறியபடி அருகில் வந்தவன், "காட்டுங்க." என்று அவள் காலை தொட போக, "இல்ல ஒன்னும் இல்ல." என்று காலை விலக்கினாள்.

அதில் அவசரமாய் சென்று ட்ராவை திறந்து மருந்து பெட்டியை எடுத்தவன், வேகமாய் வந்து அவள் காலருகே தரையில் மண்டியிட்டு, "கால குடுங்க." என்றான்.

அதில் அவளுக்கோ அந்த விராஜ் தன் முன் மண்டியிட்டதே கண்முன் வர, வேகமாய் எழுந்துவிட்டாள். அதில் அவன் புரியாது நிமிர, "சின்ன காயந்தா விடுங்க." என்றாள்.

அதில் மெதுவாய் எழுந்து, "சரி மேடம். வலி இருந்தா.." என்றபடி ஒரு மருந்தை எடுத்து அவளிடம் நீட்டியவன், "இத போட்டுக்கோங்க." என்றான் தன்மையாக.

அதில் அவளும் அமைதியாய் அதை வாங்கிக்கொள்ள, "எதாவதுன்னா என்னையே கூப்புடுங்க. நா வெளியதா இருப்பேன்." என்றான் யோகி.

அதில் அவளும் சரியென்று தலையசைக்க, அவனும் தன்மையாய் தலையசைத்துவிட்டு நகர்ந்தான்.

"ஹா ஒரு நிமிஷம்." என்று அவள் கூற, அதில் அவன் திரும்பி அவளை பார்க்க, "எனக்கு ஒரு விஷயம் சொல்றீங்களா?" என்று குழப்பமான தயக்கமாய் கேட்டாள்.

"சொல்லுங்க மேடம்." என்று அவன் அருகில் வர, "உங்க பாஸ்தான மூத்த பையன்? அப்றம் எதுக்காக அவங்க எனக்கும் விராஜ்க்கும்.." என்று கேட்க வர, "சம்மந்தம் பேசுனாங்கன்னு கேக்குறீங்களா?" என்று கேட்டான் யோகி.

அதில் அவளும் குழப்பமாய் ஆம் என்று தலையசைக்க, அதில் மெல்லியதாய் சிரித்துவிட்டு, "அதுதா பிஸ்னஸ் மேடம்." என்றான்.

அதில் சட்டென்று புருவம் விரித்தவள், "என்ன?" என்று கேட்க, "நாந்தா சொன்னனே மேடம். உங்கப்பாவும் அவங்கப்பாவும் பிஸ்னஸ் பார்ட்ஸ். சோ இந்த ரெண்டு பெரிய கம்பனியையும் ஒன்னா ஒரே ப்ராண்டா மாத்துறதுக்காகதா இந்த கல்யாணம். சொல்ல போனா இது ஒரு பிஸ்னஸ் அக்ரிமண்ட்." என்றான்.

"இ..இல்ல புரியல." என்று குழம்பியவள், "அப்போ அவருக்கும் அந்த கம்பனிக்கும்.." என்று கேட்க வர, "சம்மந்தம் இல்ல." என்றான் யோகி.

அதில் அவள் அதிர்வாய் புருவம் விரிக்க, "அதையும் நா ஏற்கனவே சொன்னனே மேடம். என் பாஸ்க்கும் அந்த பிஸ்னஸ்க்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. அதா உங்களக்கூட அவருக்கு தெரியாது." என்றான்.

"ப..பட் எப்பிடி?" என்று அவள் தடுமாறி கேட்க, "ஏன்னா என் பாஸ் யாரோட நெழல்லையும் வாழ மாட்டாரு. அவருக்குன்னு தனி அடையாளம் இருக்கு. அதுல அவரோட பேரு மட்டுந்தா இருக்கு." என்று அழுத்தி கூற, Ruthan BioVerse என்ற கம்பனியின் பெயர் அவன் கண்ணில் வந்து நின்றது.

அந்த வானுயர பிரமாண்ட கருப்பு கட்டிடத்தின் முகப்பில், Ruthan BioVerse என்ற பெயர் பொலிர் சிவப்பாய் மின்னிக்கொண்டிருக்க, அதன் வாசலில் புயலாய் வந்து நின்றது அந்த கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். அடுத்த நொடியே அதன் கதவு திறக்கப்பட, அதன் கைப்பிடியில் இருந்த அவன் விரலில் மின்னியது அந்த கருப்பு கல் பதித்த மோதிரம்.

அவன் காலை தூக்கி மண்ணில் பதிக்க, அந்த கருப்பு நிற ஆடம்பர ஷூ பளிச்சென்று மின்னியது. அப்படியே இறங்கி கதவை அடைத்தவனின் ஒரு கரம் தன் கருப்பு கோட்டை இழுத்து சரி செய்ய, மறு கரம் தன் கூலரை கழற்றியது.

அடுத்த நொடி அவன் முகத்தில் அடித்த காற்றில் அவன் நெற்றிக்கு மேலிருந்த சிறிய சிகைகள் அலையாய் பின்னால் சாய்ந்து அசைய, மெதுவாய் கூலரை இறக்கியவனின் விழிகள் அனலாய் முன்னால் பதிந்தது. அப்படியே கையிலிருந்த கூலரை சுழற்றி வீசியவன் முன்னால் நடக்க, வேகமாய் அதை கேட்ச் செய்தபடி அவன் பின்னால் நடந்தான் யோகி.

அவனோ வேகமாய் படிகள் ஏறி உள்ளே நுழைய, அவனை பார்த்ததும் ரிசப்ஷனிலிருந்த அனைவருமே வேகமாய் எழுந்து நின்றனர். அவன் விழிகளோ யாரையுமே கண்டுக்கொள்ளாது உள்ளே செல்ல, அவன் கடந்து சென்ற ஒரு சுவரில் மரபணு சம்மந்தமான 3D விஷ்வல்ஸ் அழகாய் அமைக்கப்பட்டிருந்தது.

ஆங்காங்கே டி.என்.ஏ ஸ்ட்ரக்சர்ஸ், ஜீன்ஸ், க்லோனிங் போன்ற பல அறிவியல் சம்மந்தமான அமைப்புகள், புகைப்படங்கள் என்று வைத்திருக்க, அனைத்தையும் கடந்து தனக்கான தனித்துவமான லிஃப்ட்டிற்குள் புகுந்தான் ருதன்.

பின்னாலே யோகியும் அவசரமாய் உள்ளே நுழைந்துக்கொள்ள, நேராக Executive Floorல் வந்து நின்றது அந்த லிஃப்ட். அப்படியே அந்த கதவுகள் இரண்டாய் திறக்க, அதனுள் கருப்பு கோட் சூட்டில் முழு பிஸ்னஸ் லுக்கில் நின்றிருந்தான் ருதன். சி.இ.ஓ ருதன்.

அந்த கதவு முழுதாய் திறந்து நிற்க, அவனோ நிமிர்வாய் வெளியில் வந்து தன் கேபினை நோக்கி செல்ல, அங்கிருந்த அனைவருமே வரிசையாய் எழுந்து நின்றனர். ஆனால் குட் மார்னிங் என்ற வார்த்தைக்கூட அவர்கள் வாயிலிருந்து வரவில்லை. ஏனென்றால் அவனுக்கு தேவையில்லாமல் பேசினால் சுத்தமாக பிடிக்காது. அதில் அவர்கள் பயத்துடன் அமைதியாய் எழுந்து மட்டும் நிற்க, அவனோ யாரையும் கண்டுக்கொள்ளாது தன் கேபினை சென்று திறக்க, உள்ளே அத்தனை விசாலமாய் இருந்தது அந்த கேபின்.

சுற்றியும் நிறைய அறிவியல் மாதிரிகள், புகைப்படங்கள் என்று நீட்டாய் காட்சியளிக்க, அதன் ஒரு பக்கம் முழுக்க க்ளாஸால் ஆன சுவர் அமைந்திருந்தது. உள்ளிருந்து பார்த்தால் வெளியிலிருப்பது அப்படியே தெரியும். ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு கருப்பான கண்ணாடி மட்டுமே தெரியும். வெளியில் மட்டுமல்ல உள்ளே அந்த கேபினின் தரை முதல் சுவர் வரை அனைத்துமே கருப்புதான்.

சுற்றியிருந்த பொருட்களில் முக்காவாசி கருப்புதான். அதன் நடுவே அத்தனை பெரிதாய் இருந்த அந்த டேபிளும் கருப்புதான், அதன் நடுவே இருந்த அவனின் சொகுசு இருக்கையும் கருப்புதான். அதை இழுத்து நிம்மதியாய் சாய்ந்தமர்ந்தவன், தன் மணிக்கட்டை தூக்கி பார்க்க, அவனின் கருப்பு கைக் கடிகாரத்தில் மணி சரியாக ஒன்பது என்று காட்டியது.

என்றுமே சரியாக ஒன்பது மணிக்கு தன் இருக்கையில் இருக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். அதில் கரத்தை இறக்கிவிட்டு நிமிர்ந்தவன், "அவங்கள வர சொல்லு." என்றான்.

"ஓகே பாஸ்." என்று தலையசைத்த யோகி, வேகமாய் வெளியில் சென்றான்.

அதில் இவனோ தன் முன்னிருந்த கருப்பு லேப்டாப்பை ஓப்பன் செய்து வேலையை பார்க்க ஆரம்பிக்க, "எக்ஸ்கியூஸ் மீ சார்!" என்றது ஒரு குரல்.

அதில் இவனோ பார்வையை நிமிர்த்தாது, "கம் இன்" என்றபடி வேலையை பார்த்தபடியே இருக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தது ஒரு ஹை ஹீல்ஸ் பாதங்கள்.

அதன் கால்களை முழுதாய் மறைத்திருந்த அந்த நெட் சேரி, அப்படியே மேலே அவள் அங்கங்களை மறைக்க மறந்து கவர்ச்சியை காட்ட, தன் கூந்தலை சிலிப்பிவிட்டு முன்னால் நடந்தாள்.

அவள் நடையிலிருந்த நிமிர்வும், அவள் முகத்திலிருந்த திமிருமே கூறியது அவள் பெரிய இடத்து பெண் என்று. அப்படியே அவன் அருகில் நெருங்கி வந்து நின்றவள், "ஹாய் மிஸ்டர் ருதன்." என்று அவனிடம் கரத்தை நீட்ட, "யா ப்ளீஸ் சிட்." என்றான் அவளை நிமிர்ந்துக்கூட பாராமல்.

அதில் அப்படியே கரத்தை மடக்கி சரியென்று தோள்களை உலுக்கியவள், அவன் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அப்போதும் அவன் லேப்டாப்பிலேயே மூழ்கியிருக்க, இவளோ அமைதியாய் சாய்ந்து அவனையே பார்த்திருந்தாள்.

அத்தனை வேகமாய் மடிக்கணினியை தட்டும் அவன் விரல்கள், ஸ்கிரீனில் உண்ணிப்பாய் சுழலும் அவன் விழிகள், யோசனையாய் சுழிந்த அவன் மீசையோரம் முதல் முரட்டு இதழ் வரை ஒவ்வொன்றும் இவள் இரசனையை தூண்டிவிட, அப்படியே தலையை சாய்த்து கன்னத்தில் கை வைத்தவள், இவனுடன் ஒரு நாளாவது வாழ்ந்துவிட மாட்டோமா என்று ஏக்க பெருமூச்சை வெளியிட்டாள்.

அப்போதே வேலையை முடித்துவிட்டு அவன் நிமிர, சட்டென்று தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தாள் இவள்.

"வெல்.. மிஸ் நேகா! உங்க ப்ரசன்டேஷன் எனக்கு புடிச்சிருக்கு." என்று கூற, இவளுக்கோ ஜிவ்வென்று ஒரு மகிழ்ச்சி முகத்தில் விரிய, "தேங்க்ஸ் மிஸ்டர் ருதன்." என்றாள் தன்மையாக.

"சோ இன்னிக்கு ஃபைனல் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டோம்னா, நெக்ஸ்ட் வீக்கே வேலைய ஸ்டார்ட் பண்ணிரலாம். வாட் யூ திங்க்?" என்று அவன் கேட்க, "ஷ்யோர். ஷ்யோர் மிஸ்டர் ருதன்." என்றாள் அத்தனை மகிழ்வாக.

"ஓகே அப்போ.. இந்த அக்ரிமண்ட்டுல சைன் பண்ணிருங்க." என்று ஒரு ஃபைலை நீட்ட, அவளும் அதை வாங்கி படித்து பார்க்க, "இது முடியுற வர நீங்க வேற எந்த கமிட்மண்ட்டும் வெச்சுக்க கூடாது." என்றபடி அவள் முன் பென்னை நகர்த்தி வைத்தான் ருதன்.

"ஓகே" என்றபடி அவளும் அந்த பென்னை எடுத்து சைன் செய்து அவனிடம் நீட்ட, அவனும் அதை வாங்கி சரி பார்த்தான்.

அதில் மீண்டும் சாய்ந்தமர்ந்து அவனையே பார்த்தவள், "ஏக்ச்சுலி... நம்ப டீல் உங்களுக்கு நியாபகம் இருக்கா?" என்று புருவத்தை நெளித்து கேட்க, அவனோ பக்கங்களை திருப்பி சரிப்பார்த்தபடியே, "என்ன டீல்?" என்றான்.

"என் பிரசண்டேஷன் உங்களுக்கு புடிச்சா, என் டிமேண்ட் என்னவா இருந்தாலும் தருவன்னு சொல்லிருக்கீங்க." என்று நினைவூட்டினாள்.

அதில் அவனும் சிறு பாவனையும் காட்டாது, "கம் டூ த பாய்ன்ட்" என்றான்.

"ஏக்ச்சுவலி..." என்றபடி டேபிளில் கரங்களை மடக்கி வைத்து முன்னால் வந்தவள், "கேன் யூ டேட் வித் மீ?" என்று தயக்கமாய் கேட்டாள்.

அதில் நிமிர்ந்து, "பார்டன்?" என்று அவன் புருவத்தை நெளிக்க, "ஜஸ்ட் ஃபார் ஒன் டே?" என்று எதிர்பார்பாய் விழியில் கெஞ்சினாள்.

அதில் அந்த பென்னை கையிலெடுத்தவன், "ரொம்ப அதிகம்." என்று கூற, அதில் திடுக்கிட்டு வியந்து, "ஒ..ஒன் நைட்?" என்று வேகமாய் கேட்க, "தட்ஸ் பெட்டர்." என்றபடி சைன் செய்து முடித்தான் அவன்.

அதில் ஒரு நொடி வியந்து விழித்தவள், "சீரியஸ்லி?" என்று அத்தனை மகிழ்வாய் கேட்க, அவனோ அழுத்தமாய் அவளை முறைத்தான். அதன் அர்த்தம் இன்னொரு முறை சொல்ல வைக்காதே.

- நொடிகள் தொடரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.