பிரகாஷ், சந்திரசேகர் மற்றும் விக்ரம் மூவரும் பேசிக் கொண்டிருக்க, “சார் உங்களுக்கு ஒருத்தரை காட்டுறேன் இவர எப்படி உங்க பொண்ணுக்கு தெரியும்னு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க” என்று விக்ரம் கூறி, காளி அவர்களின் ஃபோட்டோவை காண்பித்தான்.
“இது காளி தானே விக்ரம்” என்று பிரகாஷ் கேட்க, ஆமா சார்!! என்று விக்ரம் கூறினான். “இது எனக்கு தெரியல…. பிரகாஷ் சொல்லி இருக்கான் உங்க கிராமத்துக்கும் இவருக்கும் பெருசா ஒத்துக்காதன்னு அப்படி தான் எனக்கு தெரியும்.. மத்தபடி இவர நான் பார்த்ததில்ல எனக்கே தெரியலன்னா சனாக்கு கூட தெரிய வாய்ப்பு இல்ல தான் விக்ரம் அவ போன ஸ்கூல்ல பிரச்சனைன்னு சொல்லி வந்தா… அது வேலுமணின்னு ஒரு ஆளு அவர பத்தி தான் நான் விசாரிச்சு இருக்கேன்… ஆனா, இவரு எனக்கு ஐடியா இல்ல பா வேணும்னா நான் அவகிட்ட கேட்டுப் பார்க்கவா??” என்று சந்திரசேகர் கேட்டார்.
“இல்ல சார் வேண்டாம் அப்படியே இருக்கட்டும் ஏன்னா அவங்களுக்கு நிறைய விஷயம் ஞாபகம் இல்லைன்னு எங்களுக்கு புரிய ஆரம்பிச்சுது…. அதனால தான் நான் உங்க கிட்ட கேட்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
“ஆமா விக்ரம்… அவளுக்கு கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை…. இத உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல, நாங்க சனாக்கே சொல்லல அதனால தான் உங்க கிட்டயும் சொல்லல” என்று பிரகாஷ் கூறினார்.
“ம்ம்….. புரியுது சார் எங்களுக்கும் ஒரு சில தருணத்துல தான் தெரிஞ்சுது அவங்களுக்கு இந்த ஆக்சிடென்ட்னால மறந்து இருக்காங்க போலன்னு….. அபர்ணா ஃபோட்டோவ பார்த்து அவங்களுக்கு யாருன்னே தெரியல…. அதே மாதிரி அவங்க ஊட்டிக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு போன ஸ்கூல் கூட ஏதோ இப்ப மூணு மாசத்துக்கு முன்னாடி தான் போனேன்னு நினைச்சுட்டு இருந்திருக்காங்க…. அதுவும் இல்ல அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே போயிருக்காங்கன்னு தெரிஞ்சுது அவங்களுக்கு… ஏன்னா எங்க ஊர்ல அந்த ஸ்கூல்ல இருந்து ஒரு பொண்ணு படிக்கிறா அவள பார்த்து பேசின்னப்போ தெரிஞ்சுது”.
“அடுத்து என்கேஜ்மென்ட் பார்ட்டிக்கு போயி ஆக்சிடென்ட் ஆச்சுல அப்படி ஒன்னு நடந்ததே அவங்களுக்கு தெரியல….. ரோகிணி கல்யாண பத்திரிக்கை எடுத்துட்டு ஊருக்கு வந்து இருந்தாங்க அப்போ ரோகிணிய பார்த்து ரொம்ப ஷாக் ஆயிட்டாங்க…. இது எல்லாத்துக்கும் மேல ரோகிணி வேற பார்ட்டிக்கு வந்து போனப்ப தானே ஆக்சிடென்ட் ஆச்சுன்னு சொன்னாங்க அத அவங்களால நம்பவே முடியல…. இது எல்லாமே அவங்க மண்டைக்குள்ள ஒரு குழப்பமா தான் போயிட்டு இருக்கு” என்று விக்ரம் கூறினான்.
“ஆமாம் பா…. கௌதம் இதெல்லாம் சொன்னான்…. நமக்கே இப்படி குழப்பமா இருக்குன்னா அதெல்லாம் அனுபவிக்கிற அவளுக்கு இன்னும் எவ்ளோ கஷ்டமா இருக்கும்…. கூடிய சீக்கிரம் அவளுக்கே எல்லாம் ஞாபகம் வரணும்னு தான் நாங்க ரொம்ப ஆசைப்படறோம்” என்ற பிரகாஷ் கூற, “அது வந்தா தான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம் எதனாலன்னு தெரிஞ்சுக்கலாம்” என்று சந்திரசேகர் கூறினார்.
“ம்ம்…. விக்ரம் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆன அப்போ இடிச்ச லாரியும் வந்துட்டு லோக்கல் லாரி கிடையாது…. அதோட டீடைல்ஸ் நான் உனக்கும் அனுப்புறேன் கொஞ்சம் அது என்னன்னு விசாரி உன் சைடுல இருந்தும்…. அதுக்கப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கௌதம் சொன்னது அவ ஊட்டிக்கு போயிட்டு வரும் போது ஏதாவது நடந்ததுதான்னு விசாரிக்க சொன்னான்” என்று பிரகாஷ் கூறினார்.
“இதை நான் லக்ஷ்மி கிட்ட கேட்டேன் டா…. ஏன்னா அவ ஊட்டிக்கு போயிட்டு வரும் போது நான் வீட்ல இல்ல…. அடுத்த நாள் காலையிலேயே சீக்கிரமா வண்டியை கொண்டு போய் சர்வீஸ் விட்டுட்டா… கேட்டா கிளட்ச் பிரச்சனன்னு சொன்னா…. நானும் சரி ஊட்டி மலை மேல எல்லாம் ஏறனும்ல அதனால அவளுக்கு தெரியும் தானே வண்டி கன்டீஷன் பத்தின்னு நானும் நம்பினேன்…. அதுவும் இல்லாம அன்னிக்கு நைட் லேட்டா தான் வந்து இருக்கா, அவளே தான் பூட்டு எல்லாம் திறந்துட்டு உள்ள வந்து இருக்கா… லக்ஷ்மி கூட அவளை பார்க்கவே இல்லையாம்” என்று சந்திரசேகர் கூறினார்.
“ஏன் சார் திடீர்னு இதை பத்தி விசாரிக்கிறீங்க??” என்று விக்ரம் கேட்க, “இல்லப்பா அவ கண் முழிச்சதுக்கு அப்புறமா ஊட்டிக்கு தான் கடைசியா போனேன்னு சொன்னா, அங்க தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு உறுதியாவே நம்புனா…. எங்களயும் எந்த கேள்வியும் பெருசா கேட்கல…. ஆக்சிடென்ட் ஆச்சு மா உனக்குன்னு நாங்க சொன்னதுமே ஊட்டி தான்னு அவளே முடிவு பண்ணிட்டா…. அப்போதைக்கு எங்களுக்கு அது சாதகமா இருந்ததுனால நாங்களும் ஆமான்னு சொல்லி சமாளிச்சுட்டோம்…. ஆனா, இப்போ விகாஷ்கும் கௌதம்கும் இதுல நிறைய சந்தேகம் இருக்கு…. அது எப்படி ரொம்ப உறுதியாக அந்த ட்ரிப்ல தான் ஆக்சிடென்ட் ஆயிருக்குன்னு சொல்றான்னு… அப்ப அங்க ஏதாவது நடந்து இருக்கும் தானே அப்படின்னு அவங்க கேட்டாங்க… அது தான் என்ன நடந்ததுன்னு எங்களுக்கும் தெரியல” என்று சந்திரசேகர் கூறினார்.
“எங்களுக்கு இப்ப அத விசாரிக்குறதுக்கு கூட பெருசா எந்த சோர்சும் இல்ல விக்ரம்… ஏன்னா அவ காரையும் நாங்க ஸ்கிரேப் பண்ணிட்டோம்” என்று பிரகாஷ் கூறினார்.
“ஏன் சார் கார் டிஸ்போஸ் பண்ணிட்டீங்க??” என்று விக்ரம் கேட்க, “கார் ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிருச்சு…. அதை நம்ம திருப்பி சரி பண்ணி கொண்டு வந்தாலும் கூட பழைய படி இருக்காது… அதனால தான் டிஸ்போஸ் பண்ணிட்டோம்…. சைடுல லாரி இடிச்சது முன்னாடி பெரிய மரத்துல மோதுனது அப்படி ரொம்ப டேமேஜ் ஆயிருச்சு கார் அதனால தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
“ம்ம்…. ஒன்னு மட்டும் புரியுது சார் நம்ம எல்லாரும் ஒன்னா சேர்ந்து தான் என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க முடியும்ன்னு எனக்கு தோணுது” என்று விக்ரம் கூற, “ஆமாம் பா அதனால தான் நீ வரேன்னு சொன்னதும் இதெல்லாம் உன்கிட்ட பேசணும்னு நான் முடிவு பண்ணி இருந்தேன்” என்ற பிரகாஷ் கூறினார்.
“நீங்க முதல்ல ஊருக்கு கூப்பிட்டு போனப்போ ரொம்ப பயந்துட்டேன்…. சனாவ எப்படி நடத்துவீங்களோன்னு நினைச்சேன்… ஆனா, அப்படி இல்லாம இருந்ததுக்கு ரொம்ப நன்றி விக்ரம்…. அதுவும் இல்லாம இங்க இருந்தா நாங்க வீட்டை விட்டு வெளியே விட்டிருக்கவே மாட்டோம் அவள ரொம்ப மாசத்துக்கு…. அங்க இருக்கிறதுனாலே அவ கொஞ்சம் ஃப்ரீயா இருக்கா…. அது போக ஒரு சேஞ்ச் கூட அவளுக்கு நல்லது தான்” என்று சந்திரசேகர் கூறினார்.
“நான் உண்மைய சொல்லனும்னா கோபத்துல தான் சார் அப்படி பேசினேன்…. எங்க தங்கச்சி தான் அந்த ஊருக்கு ஒரு தேவதை மாதிரி இருந்தா…. அந்தப் பார்டில சும்மா சுத்திக்கிட்டு இருந்த அவளை புடிச்சு கூட்டிட்டு போயி ஆக்சிடென்ட் ஆகிருச்சுன்னு அந்த கோணத்தில் யோசிச்சு தான் நான் கோபத்தை எல்லாத்தையும் உங்க மேல காட்டிட்டேன்” என்று விக்ரம் கூறவும்,
“புரியுது பா…. அதே நேரம் சனந்தா குடிக்கிற பொண்ணெல்லாம் கிடையாது…. அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது, அது தான் எங்களுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சியா இருந்தது…. சிசிடிவ் ஃபுட்டேஜ் பார்க்கும் போதும் சரி, டாக்டர் வந்து சொல்லும் போதும் சரி ரொம்ப அதிர்ச்சியா இருந்துது…. அவ குடிக்க மாட்டா, ஆனா என்ன நடந்ததுன்னு தான் எங்களுக்கு புரியல” என்று சந்திரசேகர் வருத்தத்துடன் கூறினார்.
“வருத்தப்படாதீங்க சார் எல்லாரும் ஒன்னா சேர்ந்து என்ன நடந்ததுன்னு கண்டுபிடிச்சிடலாம் என்று விக்ரம் தைரியத்தை கூறினான்.
“சரி நான் முதல்ல நீங்க காரை எங்க ஸ்கிரப் பண்ணீங்கன்னு சொல்லுங்க அங்க போய் என்ன ஏதுன்னு விசாரிச்சு இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ண முடியுமான்னு நான் பார்த்துட்டு… அப்படியே ஊட்டில என்ன நடந்துச்சுன்னு நான் விசாரிக்க முயற்சி பண்றேன்…. ஏன்னா அந்த காண்ட்ராக்டர் பிரச்சனை பண்ணி இருக்காருன்னு சொல்றீங்கல.... சோ, வேலுமணி பத்தி கொஞ்சம் நான் விசாரிச்சு பார்க்கிறேன்” என்று விக்ரம் கூறினான்.
“கார் எப்பயோ ஸ்கிரேப் பண்ணிட்டோம் பா….. இப்போ எப்படி அதை பத்தி எல்லாம் கேட்க முடியும்??” என்று சந்திரசேகர் கேட்க, “நீங்க விவரம் குடுங்க என்ன தகவல் எடுக்க முடியுன்னு பார்க்கலாம்” என்று விக்ரம் காரின் விவரங்களை வாங்கிக் கொண்டான்.
“விக்ரம்!!! எங்க பொண்ணு தப்பு பண்ணிருக்கவே மாட்டான்னு சொல்ற அளவுக்கு உறுதியா எங்க கிட்ட எந்த தகவலும் இல்ல…. ஆனா, அவ என்ன பண்ணி இருந்தாலும் அதுக்கு பின்னால ஒரு காரணம் இருக்கும்னு நாங்க நம்புறோம்…. அந்த நம்பிக்கையோடவே நீயும் உண்மைய தேடுனா எல்லாம் கிடைக்கும்” என்று பிரகாஷ் கூற, விக்ரம் தலையை அசைத்து ஆமோதித்து, “சரிங்க சார் நான் கிளம்புறேன்… ரொம்ப தேங்க்ஸ், சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது” என்று கூறி விக்ரம் அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றான்.
“நான் கூட அந்த பையன் சொன்னா இந்த புரிஞ்சுக்க மாட்டானோன்னு நினைச்சேன் டா…. ஆனா, நம்ம கொஞ்சம் எடுத்து சொன்னா புரிஞ்சுக்குறான் தான்…. அப்ப தான் அந்த பொண்ணு இறந்த சமயம் வேற, அதனால தான் கோபத்த நம்ம மேல காட்டிட்டான்” என்று சந்திரசேகர் விக்ரமை பற்றி கூறவும், “ஆமாண்டா இல்லனா அங்க எல்லாருமே பொறுமையான ஆட்கள் தான் நான் சொல்லி இருக்கேன்ல அப்படித் தான் இருப்பாங்க அங்க….. சொன்ன மாதிரி அபர்ணாவை இழந்த அந்த சோகத்துல அவங்களுக்கு கிடைச்ச ஒரே எவிடன்ஸ் சனா மட்டும் தான் அதனால தான் அப்படி கோவமா நடந்துக்கிட்டான்” என்று பிரகாஷ் கூறினார்.
“ஆன்…. எனக்கு என்னமோ சனா அங்க இருந்தா, அந்த ஊரு கிட்ட உள்ளவங்க தானே காளி, வேலுமணி, அபர்ணா… அவங்களை பார்க்க பார்க்க அவளுக்கு ஏதாவது ஞாபகம் வரர்துக்கு கூட வாய்ப்பு இருக்குல” என்று பிரகாஷ் கூற,
“எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தாலே போதும்னு இருக்கு…. எனக்கு அவளுக்கு ஞாபகம் கூட வர வேணாம்னு ஒரு பக்கம் தோணுது…. ஆனா, ஒரு பக்கம் அவ குழப்பத்திலேயே வாழணுமா அதுக்கு உண்மை என்னன்னாவது தெரிஞ்சுக்கலாம்னு இருக்குடா” என்று சந்திரசேகர் வருத்தத்துடன் கூறவும், “கூடிய சீக்கிரம் சரியாயிடும் நீ வருத்தப்படாத…. நாளைக்கு அவளுக்கு செக்கப் இருக்குல கூட்டிட்டு போங்க…. என்ன சொல்றாங்கன்னு பாருங்க அவ்வளவு தானே” என்று பிரகாஷ் ஆறுதல் கூறினார்.
“ஐயோ!!!!! என்ன சார் இது இந்த கார் டிஸ்போஸ் பண்ணி ரொம்ப மாசம் ஆயிருச்சு…. இந்த கார பத்தி இத்தனை பேர் வந்து விசாரிக்கிறீங்களே?” என்று அங்கு வேலை செய்யும் ஒருவன் சலித்துக் கொண்டு கூற, “அப்படியா!!! யாரெல்லாம் வந்து கேட்டாங்க?” என்று விக்ரம் கேட்டான்.
“இப்படி கேட்டா எப்படி சார் பதில் சொல்றது??” என்று அவன் கூற, விக்ரம் அவனுடைய ஐ.டி கார்டை காட்டி, “இப்ப பதில் சொல்ல முடியுமா??” என்று கேட்க, “ம்ம்… ரெண்டு போலீஸ் ஆஃபீஸ்ர் வந்து விசாரிச்சாங்க சார்…. அதுக்குள்ள ஏதாவது பொருட்கள் இருந்துதான்னு கேட்டாங்க…. அதோட இன்சூரன்ஸ் காப்பி மத்த விவரம் அதெல்லாம் கேட்டாங்க அவங்களுக்கு கொடுத்தோம்…. இவங்க எல்லாத்துக்கும் முன்னாடி இன்னொருத்தர் வந்து விசாரிச்சாரு….. அவர் தான் முதல்ல வந்து விசாரிச்சாரு அவர் ஒரு டாக்டர்ன்னு சொன்னாரு” என்று வேலையாள் கூறினான்.
“முதல்ல வந்தார்ன்னா எத்தனை மாசத்துக்கு முன்னாடி இருக்கும்??” என்று விக்ரம் கேட்க, “ஒரு நாலு மாசம் மேலேயே இருக்கும் சார்… அந்த கார் ஸ்க்ரைப் பண்ண கொஞ்ச நாள்ல வந்து இருந்தாருன்னு நினைக்கிறேன்….. அவர் பேர் எல்லாம் தெரியலைங்க சார்” என்று வேலையாள் கூற, விக்ரம் எதையோ உணர்ந்தவன் போல் அவனுடைய ஃபோனை எடுத்து ஒரு புகைப்படத்தை காட்ட, “ஆமாம் சார் இவர் தான்” என்று காட்டினான் அவ்வேலையாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.

Author: Bhavani Varun
Article Title: Chapter 28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.