CHAPTER-28

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
ச‌ந்ரா : அப்போ அர்ஜுனோட‌தா என்னோட‌ வாழ்க்க‌ இணைக்க‌ப‌ட்டிருக்கா?

அர்ஜுன் : Sweet heart !

ச‌ந்ரா சுய‌ நினைவிற்க்கு வ‌ந்தாள்.

அர்ஜுன் : என்ன‌ யோசிக்கிற‌?

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌. நா போய் குளிச்சிட்டு வ‌ர்றே.

ச‌ந்ரா குளிக்க‌ சென்றாள். அர்ஜுன் ம‌திய‌ உண‌வு சாப்பிட்டுவிட்டு, வெளியில் சென்று Swimming pool அருகில் அம‌ர்ந்து, book ப‌டித்துக்கொண்டிருந்தான். அப்போது அவ‌னுக்கு ச‌ந்ராவுட‌னான‌ அழ‌கிய‌ நினைவுக‌ள் நினைவிற்க்கு வ‌ருகிற‌து. அர்ஜுன் சிரித்த‌ப‌டி Bookஐ மூடிவைத்துவிட்டு,

அர்ஜுன் : என்னால‌ ஒரு Bookக்கூட‌ ப‌டிக்க‌ முடிய‌ல‌. நீ என்ன‌ ரொம்ப‌ disturb ப‌ன்ற‌ ச‌ந்ரா. க‌ண்ண‌ மூடுனாலு நீதா ஞாப‌க‌ம் வ‌ர்ற‌. கண்ண தெறந்தாக்கூட நீதா ஞாபகம் வர்ற.

என்று கூறிய‌வாரே அர்ஜுன் க‌ண்க‌ளை மூடினான். அப்போதும் ச‌ந்ராவின் நினைவுக‌ள் முன்னால் வ‌ந்து வ‌ந்து நின்ற‌து. அர்ஜுன் அப்ப‌டியே தூங்கிவிட்டான்.

அங்கு ச‌ந்ரா குளித்துவிட்டு வெளியே வ‌ந்தாள். அவ‌ளுக்கு Call வ‌ந்த‌து. ச‌ந்ரா எடுத்து பார்த்தாள். அபிதான் Call செய்திருக்கிறான். அட்ட‌ன் செய்து,

ச‌ந்ரா : சொல்லு அபி, இப்ப‌ எதுக்கு Call ப‌ன்ன‌?

அபி : என்ன‌ ச‌ந்ரா, நீ எதுக்கு Call ப‌ன்ன‌ன்னு கேக்குற‌? நீ அர்ஜுனோட‌ ம‌னைவியா பேசுறியா? இல்ல‌ என்னோட‌ காத‌லியா பேசுறியா?

ச‌ந்ரா : இப்போ நா அர்ஜுனோட‌ ம‌னைவிதா. ஒருத்த‌ருக்கு ம‌னைவியா இருந்திட்டு இன்னொருத்த‌னுக்கு காத‌லியா எப்பிடி இருக்க‌ முடியும்?

அபி : அப்பிடீன்னா, நீ அவ‌ன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சிட்டியா? அவ‌ன‌ ஏத்துகிட்ட‌யா? சொல்லு ச‌ந்ரா.

ச‌ந்ரா : என்ன‌? நீ என்ன‌ பேசுற‌ அபி? அது ம‌ட்டு ந‌ட‌க்காது. அவ‌மேல‌ என‌க்கு எப்பிடி காத‌ல் வ‌ரும்?

அபி : அப்றோ ஏ இப்பிடி பேசுற‌?

ச‌ந்ரா : அவ‌ ந‌ம‌க்கு செஞ்ச‌ அஞ்ஞாய‌த்த‌ நா இன்னு ம‌ற‌க்க‌ல‌. அவ‌னுக்கு அத‌ த‌ப்புன்னு புரிய‌ வெச்சு, அதுக்கு அவ‌ன‌ க‌ண்டிப்பா த‌ண்டிப்பே.

அபி : Very good ச‌ந்ரா. அதுக்கு எங்கிட்ட‌ ஒரு Plan இருக்கு.

ச‌ந்ரா : Plan ஆ? என்ன‌ Plan?

அபி : அத‌ Phoneல‌ சொல்ல‌ முடியாது நீ நாளைக்கு அர்ஜுன் Office போன‌தும் நா சொல்ற‌ லொக்கேஷ‌னுக்கு நேர்ல‌ வா.

ச‌ந்ரா : Ok.

ச‌ந்ரா க‌ட் செய்துவிட்டு, கீழே சென்று ம‌திய‌ உண‌வு சாப்பிட்டாள். பிற‌கு அறைக்கு சென்றாள். இருட்ட‌ ஆர‌ம்பித்த‌து.

ச‌ந்ரா : என்ன‌ இந்த‌ அர்ஜுன‌ இவ்ளோ நேர‌மா காணோ? எங்க‌ போய்ட்டா?

ச‌ந்ரா அப்ப‌டியே வெளியே வ‌ந்து தேடினாள். Swimming pool அருகே பார்த்தாள். அர்ஜுன் அங்கு தூங்கி கொண்டிருந்தான். ச‌ந்ரா, அர்ஜுன் அருகில் வ‌ந்தாள்.

ச‌ந்ரா : என்னோட‌ வாழ்க்கைய‌வே நாச‌ம் ப‌ன்னிட்டு, நீ இங்க‌ நிம்ம‌தியா தூங்குறியா?

ச‌ந்ரா, அர்ஜுனுக்கு இன்னும் அருகில் மெதுவாக‌ வ‌ந்தாள். உட‌னே அவ‌னை த‌ண்ணீரில் த‌ள்ளிவிட்டாள். அர்ஜுன் த‌ண்ணீரில் விழுந்த‌தும் அதிர்ச்சியில் ப‌ய‌ந்துப்போய் எழுந்து பார்த்தான்.

க‌ன‌வில் க‌ண்ட‌ ச‌ந்ரா நேரில் நின்றுக்கொண்டிருந்தாள். அர்ஜுன் அவ‌ளை மெய்ம‌ற‌ந்து பார்த்தான்.

ச‌ந்ரா : (கேளியாக‌) எப்பிடி அர்ஜுன் என்னோட‌ இன்ப‌ அதிர்ச்சி? ந‌ல்லா இருக்கா? செரி செரி இந்த‌ நேர‌த்துல‌ ஏ ந‌ன‌ஞ்ச‌ துணியோட‌ இருக்க‌? மேல‌ வா.

சிரித்தபடி, ச‌ந்ரா கையை நீட்டினாள். ச‌ந்ரா கை நீட்டிய‌வுட‌ன் சுய‌னினைவிற்க்கு வ‌ந்த‌ அர்ஜுன், சிரித்த‌ப‌டி ச‌ந்ராவிட‌ம் கை கொடுத்தான்.

திடீரென‌ ச‌ந்ராவையும் த‌ண்ணீரில் இழுத்துவிட்டான்.

ச‌ந்ரா எழுந்து அதிர்ச்சியில் நின்றாள். அர்ஜுன் அவ‌ள் கையை பிடித்து ச‌ந்ராவை த‌ன்னிட‌ம் இழுத்து,

அர்ஜுன் : எப்பிடி என்னோட‌ காத‌ல் ப‌ரிசு?

ச‌ந்ரா கோவ‌த்துட‌ன் அர்ஜுனை பார்த்தாள்.


அர்ஜுன் காத‌லுட‌ன் ச‌ந்ராவை பார்த்தான். இப்ப‌டியே பார்த்துக்கொண்டிருந்த‌ன‌ர். திடீரென‌ ச‌ந்ராவுக்கு தும்ம‌ல் வ‌ந்த‌து. உட‌னே அர்ஜுன் சுய‌ நினைவிற்க்கு வ‌ந்தான்.

அர்ஜுன் : என்ன‌ ஆச்சு Sweet heart? செரி வா ந‌ம்ப‌ மேல‌ போலா. உன‌க்கு ஜொரோ வ‌ந்திற‌ போகுது.

இருவ‌ரும் அவ‌ர்க‌ளின் அறைக்கு சென்று த‌லையை துவ‌ட்டினார்க‌ள். உடைக‌ளை மாற்றிக்கொண்டு அர்ஜுன் Sofaவில் ப‌டுத்தான். ச‌ந்ரா க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டாள்.

அர்ஜுன் : (சிரித்த‌ப‌டி) Good night Sweet heart....

ச‌ந்ரா திரும்பி ப‌டுத்துக்கொண்டாள். அர்ஜுன் சிரித்தான். இருவ‌ரும் தூங்கிவிட்ட‌ன‌ர். காலை விடிந்த‌து. அர்ஜுன் Office சென்றுவிட்டான். சிறிது நேர‌ம் க‌ழித்து ச‌ந்ரா, அபி கூறியதுப்போல், அபியை பார்க்க‌ சென்றாள். அது ஒரு காட்டு ப‌குதி. அங்கு அபி இருந்தான். இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அபி : இங்க‌ பாரு ச‌ந்ரா, நாளைக்கு இதே எட‌த்துக்கு அர்ஜுன‌ கூட்டிட்டு வ‌ந்திரு.

ச‌ந்ரா : உன்னோட‌ Plan என்ன‌?

அபி : நீ அவ‌ன‌ இங்க‌ கூட்டிட்டு வா, அப்ற‌ம் அவ‌னுக்கு இங்க‌ ச‌மாதிதா.

இவ‌ர்க‌ள் பேசிக்கொண்டிருக்கும்போது, அர்ஜுன் Office இலிருந்து வீடு திரும்பும்போது, அவ‌ர்க‌ளை பார்த்துவிட்டான். உட‌னே அர்ஜுன் காரிலிருந்து இற‌ங்கி,

அர்ஜுன் : டேய் தொட‌ப்ப‌ குச்சி ! உன‌க்கு எவ்ளோ த‌யிரிய‌ம் இருந்தா என்னோட‌ ம‌னைவிய‌ த‌னியா ச‌ந்திச்சு பேசுவ‌?

அபி : டேய் ஏமாத்துக்காரா ! உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ன்ன‌துல‌ ச‌ந்ராவுக்கு விருப்ப‌மே இல்ல‌. அதா அவ‌ளே என்ன‌ பாக்க‌ வ‌ந்திட்டா.

அர்ஜுன் வேத‌னையுட‌ன் ச‌ந்ராவை பார்த்து,

அர்ஜுன் : ச‌ந்ரா ! நீ இந்த‌ தொட‌ப்ப‌ குச்சிக்காக‌, உன்னோட‌ Husband டையே ஒதிக்கீறுவியா? உன‌க்கும் என‌க்கும் க‌ல்யாண‌ம் ஆயிரிச்சு. ஞாப‌க‌ம் இருக்கா?

ச‌ந்ரா : ஆ, ந‌ல்லா ஞாப‌க‌ம் இருக்கு. நீ என்ன‌ வ‌லுக்க‌ட்டாய‌மா க‌ல்யாண‌ம் ப‌ன்ன‌துதான‌? அதுக்கு பேரெல்லா ஒரு க‌ல்யாண‌மா?

அர்ஜுன் : (வேத‌னை க‌ல‌ந்த‌ கோவ‌த்தில்) ச‌ந்ரா நீ என்ன‌ பேசுற‌? நீ மொத‌ல்ல‌ என்கூட‌ வா.

அர்ஜுன், ச‌ந்ராவின் கையை பிடித்து இழுத்துச்சென்று காரில் ஏற்றி வீட்டிற்க்கு சென்றான். ச‌ந்ரா இற‌ங்கினாள். அர்ஜுன் திரும்ப‌ அவ‌ளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அர்ஜுன், ச‌ந்ராவை அவ‌னுடைய‌ அறைக்குள் த‌ள்ளி க‌த‌வை சாத்தினான்.

ச‌ந்ரா : அர்ஜுன் நீ என்ன‌ ப‌ன்ற‌? ஏ இப்பிடி ந‌ட‌ந்துக்குற‌? என் கைய‌ விடு.

அர்ஜுன் : (வேத‌னையுட‌ன் க‌ல‌ந்த‌ கோப‌த்தில்) நீ என‌க்கு ம‌னைவி ஆக‌ற‌துக்கு முன்னாடியே அந்த‌ தொட‌ப்ப‌ குச்சியோட‌ நீ பேசுனா என்னால‌ தாங்கிக்க‌ முடியாது, இப்போ நீ என்னோட‌ ம‌னைவி. என் க‌ண்ணு முன்னாடியே அவ‌ உன்ன‌ தொட்டு பேசுறா. நா எப்பிடி சும்மா இருப்பே. சொல்லு ச‌ந்ரா.

ச‌ந்ரா : அர்ஜுன் என்னோட‌.

அர்ஜுன் : சொல்லு.

ச‌ந்ரா : (வ‌லியில்) என்னோட‌ கை ரொம்ப‌ வ‌லிக்குது.

அர்ஜுன், ச‌ந்ராவின் க‌ண்க‌ளில் வ‌லியை பார்த்து, அவ‌ள் கையை விட்டுவிட்டான்.

அர்ஜுன் : (வேத‌னையில்) Iam sorry ச‌ந்ரா. ரொம்ப‌ வ‌லிக்கிதா?

ச‌ந்ரா : சும்மா ந‌டிக்காத‌ அர்ஜுன். என்ன‌ நீப்பாட்டுக்கு என்னோட‌ ம‌னைவி ம‌னைவின்னு சொல்ற‌? நீ ப‌ன்ன‌துக்கு பேரு க‌ல்யாண‌மா? அதுல‌ குங்கும‌ம் கூட‌ Orginal இல்ல‌. அத‌யெல்லா ஒரு க‌ல்யாண‌ம்னு சொல்லிட்டு இருக்க‌.

அர்ஜுன் : அப்பிடியா ? அப்போ உன்னொட‌ ஆசைய‌ நெர‌வேத்திற‌வேண்டிய‌துதா.

ச‌ந்ரா : (ப‌ய‌த்துட‌ன்) இப்போ என்ன‌ ப‌ன்ன‌ போற‌?

அர்ஜுன் : ப‌ய‌ப்ப‌டாத‌ Sweet heart. நா உன்னோட‌ ஆசைய‌தா நெறவேத்தபோறே. அப்பிடியே அசையாம‌ இரு.

அர்ஜுன் க‌போர்டிலிருந்து எதையோ எடுத்து வ‌ந்தான்.

ச‌ந்ரா : என்ன‌ அது?

அர்ஜுன் : ஷ்ஷ்ஷ்ஷ்.....அசையாம‌ க‌ண்ணாடிய‌ பாரு.

ச‌ந்ரா க‌ண்ணாடியை பார்த்த‌ப‌டி நின்றாள். அர்ஜுன் அவ‌ளுக்கு தாலியை க‌ட்டிவிட்டான்.

ச‌ந்ரா திடீர் அதிர்ச்சியில் இருந்தாள்.

அர்ஜுன் குங்கும‌த்தையும் அவ‌ள் நெற்றியில் வைத்துவிட்டான்.

ச‌ந்ரா அதிர்ச்சியில் அசையாம‌ல் நின்றாள்.

அர்ஜுன் : போதுமா Sweet heart, நீ சொன்ன‌மாதிரி, உன‌க்கு புடிச்ச‌ மாதிரி ந‌ம‌க்கு இப்போ க‌ல்யாண‌ம் ஆயிரிச்சு. இனிமே நீ என்னோட‌ ம‌னைவிதான‌?

ச‌ந்ரா அதிர்ச்சியில் இருந்து மீழ‌வில்லை. அப்ப‌டியே அசையாம‌ல் நின்றாள்.

அர்ஜுன் : உன் க‌ண்ணுக்கு அந்த‌ தொட‌ப்ப‌ குச்சி நல்லவனா தெறியுறா, ஆனா நா கெட்டவனா தெறியிறே, ஏ?

ச‌ந்ரா : ஏன்னா அதுதா உண்ம‌ அர்ஜுன்.

அர்ஜுன் : கூடிய‌ சீக்கிர‌மே நா கெட்ட‌வ‌ இல்ல‌ன்னு உன‌க்கு புரியும். நீ என்ன‌ காதலிப்ப.

ச‌ந்ரா : அதுக்கு வாய்ப்பே இல்ல‌. நீ ந‌ல்ல‌வ‌னும் இல்ல‌. நா உன்ன‌ காத‌லிக்க‌ப்போற‌தும் இல்ல‌.

அர்ஜுன் : என்னோட மனசு சொல்லுது. சீக்கிரமாவே, நா கெட்ட‌வ‌ இல்ல‌ன்னு நீ புரிஞ்சுப்ப‌, என்ன‌ காத‌லிப்ப‌.

ச‌ந்ரா : வாய்ப்பே இல்ல‌.

அர்ஜுன் : க‌ண்டிப்பா நடக்கும். அது நாளைக்கா கூட இருக்கலாம்.

என்று கூறிவிட்டு அர்ஜுன் சென்றுவிட்டான். இர‌வு வ‌ந்த‌து. இருவ‌ரும் தூங்க‌ சென்ற‌ன‌ர். வ‌ழ‌க்க‌ம்ப்போல் ச‌ந்ரா க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டாள். அர்ஜுன் Sofaவில் ப‌டுத்துக்கொண்டாள். ஆனால் இன்று அர்ஜுன் சீக்கிர‌மாக‌ தூங்கிவிட்டான். ஆனால் ச‌ந்ரா தூங்க‌வில்லை. அவ‌ள் ம‌ன‌திற்க்குள்,

ச‌ந்ரா : ஏற்க்க‌ன‌வே அபி அர்ஜுன‌ அந்த‌ எட‌த்துக்கு கூட்டிட்டு வ‌ர‌சொல்லி என்ன‌ டென்ஷ‌ன் ப‌டுத்திவிட்டுட்டா. இதுல‌ இந்த‌ அர்ஜுன் வேற‌, நீ என்ன‌ காத‌லிப்ப‌ன்னு அவ்ளோ நிச்சியம சொல்றா. இதுல‌ ஒன்னு ம‌ட்டு புரியுது, நாளைக்கு என்ன‌மோ ஒன்னு ந‌ட‌க்க‌ போகுது.

இர‌வு வ‌ந்த‌து. இருவ‌ரும் தூங்க‌ சென்ற‌ன‌ர். வ‌ழ‌க்க‌ம்ப்போல் ச‌ந்ரா க‌ட்டிலில் ப‌டுத்துக்கொண்டாள். அர்ஜுன் Sofaவில் ப‌டுத்துக்கொண்டாள். ஆனால் இன்று அர்ஜுன் சீக்கிர‌மாக‌ தூங்கிவிட்டான். ஆனால் ச‌ந்ரா தூங்க‌வில்லை. அவ‌ள் ம‌ன‌திற்க்குள்,

ச‌ந்ரா : ஏற்க்க‌ன‌வே அபி அர்ஜுன‌ அந்த‌ எட‌த்துக்கு கூட்டிட்டு வ‌ர‌சொல்லி என்ன‌ டென்ஷ‌ன் ப‌டுத்திவிட்டுட்டா. இதுல‌ இந்த‌ அர்ஜுன் வேற‌, நீ என்ன‌ காத‌லிப்ப‌ன்னு அவ்ளோ நிச்சியம சொல்றா. இதுல‌ ஒன்னு ம‌ட்டு புரியுது, நாளைக்கு என்ன‌மோ ஒன்னு ந‌ட‌க்க‌ போகுது.

அடுத்த‌ நாள், காலை அர்ஜுன் எழுந்து குளிக்க‌ சென்றுவிட்டான். ச‌ந்ராவுக்கு அபி Call ப‌ன்னினான்.

ச‌ந்ரா : Helo.

அபி : ச‌ந்ரா ! அர்ஜுன் ப‌க்க‌த்துல‌ இருக்கானா?

ச‌ந்ரா : இல்ல‌. அர்ஜுன் குளிக்க‌ போய்ட்டா. நீ சொல்லு.

அபி : நேத்து சொன்ன‌தெல்லா ஞாப‌க‌ம் இருக்கில்ல‌?

ச‌ந்ரா : ஆ, இருக்கு. ஆனா அவ‌ன‌ நா எப்பிடி கூப்பிட்டு வ‌ர்ற‌து?

அபி : நீ எதாவ‌து ப‌ன்னு. ஆனா அவ‌ன‌ எப்பிடியாவ‌து இங்க‌ கூட்டிட்டு வா. நா இங்க‌ Wait ப‌ன்னிட்டு இருக்கே.

ச‌ந்ரா : செரி நா எதாவ‌து ப‌ன்றே. நீ phoneன க‌ட் ப‌ன்னு.

அபி : நீ வ‌ரும்போது காதுல‌ Bluetooth மாட்டிக்கோ. அதுல‌ நா என்ன‌ ப‌ன்ன‌னுன்னு சொல்லிகிட்டே இருக்கே.

ச‌ந்ரா : செரி Ok.

அபி க‌ட் செய்துவிட்டான்.

ச‌ந்ரா : அர்ஜுன‌ அந்த‌ எட‌த்துக்கு எப்பிடி கூட்டிட்டு போற‌து?

அர்ஜுன் குளித்துவிட்டு வெளியே வ‌ந்தான்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) எப்பிடியாவ‌து அவ‌ங்கிட்ட‌ வெளில‌ போலான்னு சொல்லு ச‌ந்ரா. சொல்லு.

த‌ய‌ங்கிய‌ப‌டி நின்றுக்கொண்டிருந்தாள்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) நா கூப்ட்டா இவ‌ வ‌ருவானா? செரி மொத‌ல்ல‌ சொல்லி பாப்போ.

த‌ய‌ங்கிய‌ப‌டி ச‌ந்ரா, அர்ஜுன் அருகில் வ‌ந்தாள். அர்ஜுன் அவ‌ள் த‌ய‌க்க‌த்தை பார்த்து,

அர்ஜுன் : Sweet heart ! நீ எதாவ‌து சொல்ல‌ நெனைக்கிறியா?

ச‌ந்ரா : ஆமா. அது..... நாம‌.....

அர்ஜுன் : நாம‌ வெளிய‌ போலாமா?

ச‌ந்ரா : ஆ என்ன‌?

அர்ஜுன் : நாம‌ வெளிய‌ போலாமான்னு கெட்டே.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) என்ன‌ நா சொல்ல‌வேண்டிய‌த‌ இவ‌ சொல்றா?

அர்ஜுன் : என்ன‌ யோசிகிற‌? போலாமா?

ச‌ந்ரா : ஆ. போலா.

அர்ஜுன் : என்ன‌டா இது அதிச‌ய‌மா இருக்கு? நா கூப்பிட்டு நீ வ‌ர்ர‌ன்னு சொல்லீட்ட‌?

ச‌ந்ரா : செரி அப்ப‌ நா வ‌ர‌ல‌.

அர்ஜுன் : Ok Ok cool cool. கோவ‌ப்ப‌டாத‌, போய் ரெடி ஆகு.

இருவ‌ரும் கிள‌ம்பின‌ர். ச‌ந்ரா, அபிக்கு Call செய்து, Bluetooth ஐ மாட்டிக்கொண்டாள்.

அபி : Helo. கெள‌ம்பிட்டீங்க‌ளா?

ச‌ந்ரா : கெள‌ம்பிட்டோ.

அர்ஜுன் : யார்கிட்ட‌ பேசுற‌?

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌ ந‌ம்ப‌ கெள‌ம்பிட்டோன்னு உன்கிட்ட‌தா சொன்னே.

அர்ஜுன் : எங்கிட்டயா? செரி வா.

இருவ‌ரும் காரில் சென்ற‌ன‌ர். காரில் செல்லும்போது,

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) போற‌ வ‌ழில‌ அந்த‌ எட‌த்துக்கு எப்பிடி இவ‌ன‌ கூட்டிட்டு போற‌து?(அர்ஜுனிட‌ம்) நாம‌ எங்க‌ போறோ?

அர்ஜுன் : உன‌க்கு ஒரு Surprise இருக்கு Sweet heart.

Bluetoothல் அபி : அவ‌ எந்த‌ Surpriseச‌ ப‌த்தி பேசுறா ச‌ந்ரா?

ச‌ந்ரா : தெரில‌.

அர்ஜுன் : என்ன‌ தெரில‌?

ச‌ந்ரா : அது.... நீ Surpriseனு சொன்ன‌ல்ல‌? அதுதா என்ன‌ன்னு தெரில‌ன்னு சொன்னே.

அர்ஜுன் : நீ அந்த‌ Surpriseச‌ பாத்தா அப்பிடியே ச‌ந்தோஷ‌த்துல‌ தெக‌ச்சுப்போய் நின்றுவ‌.

ச‌ந்ரா : (அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌) ஒரு நிமிஷ‌ம் வ‌ண்டிய‌ நிப்பாட்டு அர்ஜுன்.

அர்ஜுன் : ஏ என்ன‌ ஆச்சு?

ச‌ந்ரா : நிப்பாட்டு Please.

அர்ஜுன் : Ok Ok.

அர்ஜுன் காரை நிப்பாட்டினான்.
ச‌ந்ரா வேக‌மா இற‌ங்கி,

Blurtoothல் ச‌ந்ரா : (மெதுவாக‌) அபி நீ சொன்ன‌ எட‌த்துக்கு நாங்க‌ வ‌ந்திட்டோ.

அபி : Ok அப்பிடியே அர்ஜுன‌ காட்டுக்குள்ள‌ கூட்டிட்டு வா.

ச‌ந்ரா : செரி.

அர்ஜுனும் காரைவிட்டு இற‌ங்கினான்.

அர்ஜுன் : என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? ஏ வ‌ண்டிய‌ நிப்பாட்ட‌ சொன்ன‌?

ச‌ந்ரா : அது வ‌ந்து அர்ஜுன்.... இந்த‌ எடோ ரொம்ப‌ அழ‌கா இருந்தது, அதா காத்துவாங்கிட்டே கொஞ்ச‌ம் ந‌ட‌க்க‌லான்னு தோனுச்சு. அதா நிறுத்த‌ சொன்னே.

அர்ஜுன் : என்ன‌? இந்த‌ காட்ல‌ ந‌ட‌க்க‌ போறியா?

ச‌ந்ரா : Please அர்ஜுன் கொஞ்ச‌ நேர‌ம் ந‌ட‌க்க‌லா.

அர்ஜுன் : என்னால‌ ந‌ம்ப‌வே முடிய‌ல‌ ச‌ந்ரா. மொத‌ தெட‌வ‌யா நீ இப்பிடி கேட்டிருக்க‌, நா எப்பிடி வேண்டானு சொல்லுவே. க‌ண்டிப்பா போலா வா.

இருவ‌ரும் ந‌ட‌ந்து காட்டிற்க்குள் சென்ற‌ன‌ர். போகும் வ‌ழியில்,

அர்ஜுன் : ச‌ந்ரா ! இந்த எடத்த எங்கயோ பாத்த மாதிரி இருக்கில்ல?

சந்ராவுமே அதை தான் யோசித்தபடியே வந்தாள்.

அர்ஜுன் : பட் எங்கன்னுதா...

என்று யோசித்தபடியே வந்தான்.

சிறிது தூர‌ம் சென்ற‌தும், அதிர்ந்து அப்படியே நின்றான் அர்ஜூன்.

"என்ன ஆச்சு?" என்று புரியாமல் கேட்டாள் சந்ரா.

அவனோ கண்களில் கண்ணீருடன் "இங்கதா நாம மொதல்ல சந்திச்சோம்."

அதில் கேள்வியாய் திரும்பி அவன் பார்வை குவிந்த இடத்தை பார்த்தாள் சந்ரா.

அங்கே இருந்ததோ ஒரு பெரிய பள்ளம். அதில் அவள் அதிர்ந்து அப்படியே நிற்க, ஏதேதோ நினைவுகள் அவளுள் ஓடியது.

அதில் திடீரென்று ப‌த்து வ‌ய‌தே ஆன‌ இவ‌ள் குடுப்ப‌த்துட‌ன் சென்ற‌ கார் சென்று இந்த‌ ப‌ள்ள‌த்தில் விழ‌ அத‌ற்கு முன்பே அவ‌ளை வெளியில் த‌ள்ளிவிட்டிருந்தார் இவ‌ளின் த‌ந்தை.

அழுதுக்கொண்டே அம‌ர்ந்திருந்த‌ இவ‌ளின் தோள்க‌ளில் ப‌திந்த‌து ஒரு சிறுவ‌னின் க‌ர‌ம். அவ‌ன்தான் ந‌ம் அர்ஜுன்.

அதில் திரும்பி அவ‌னை பார்த்த‌வ‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்க‌, "ரிலேக்ஸ். இங்க‌ என்ன‌ ப‌ண்ற‌? என்ன ஆச்சு?" என்று கேட்டான் சிறுவன் அர்ஜுன்.

அவ‌ளோ அந்த‌ ப‌ள்ள‌த்தை கை காட்ட‌, அவ‌னுமே அவ‌ற்றை எட்டி பார்த்து அதிர்ச்சியாகி, "ஓ மை காட்!" என்ற‌ப‌டி அவ‌ளின் க‌ர‌த்தை ப‌ற்றி, "என்கூட‌ வா." என்று கூறி அவ‌ளை த‌ன்னுட‌ன் அழைத்து சென்ற‌வ‌ன், ரோட்டில் நின்றிருந்த‌ காரை நோக்கி செல்ல‌, அங்கே ப‌த‌றிய‌ப‌டி இற‌ங்கி வ‌ந்த‌ லிங்கேஷ்வ‌ர‌ன் தான் அவ‌ளை தூக்கிக்கொண்டு என்ன‌ ஏதென்று விசாரித்தார்.

அப்போதே த‌ன் அப்பா அம்மா அந்த‌ ப‌ள்ள‌த்தில் விழுந்துவிட்ட‌தாக‌ அவ‌ள் கூற‌, அதில் ப‌த‌றிய‌ அவ‌ரும் அவ‌ருடைய‌ ஆட்க‌ளுட‌ன் அங்கு சென்று என்ன‌ ஏதென்று பார்த்தார்.

அத‌ற்குள் இவ‌ளையும் அர்ஜுனையும் ட்ரைவ‌ருட‌ன் வீட்டிற்கு அனுப்பியிருந்தார். அஷ‌ன் பிற‌கு காலையில் அவ‌ளுடைய‌ அப்பா அம்மா இற‌ந்த‌ செய்திதான் அவ‌ளுக்கு கிடைத்த‌து. அதில் உடைந்து போய் க‌த‌றி அழுத‌ அவ‌ளை லிங்கேஷ்வ‌ர‌ன் தான் த‌ன் ம‌க‌ளாக‌வே எடுத்து வ‌ள‌த்தார்.

ஆனால் இத்த‌னை நாட்க‌ளில் அந்த‌ சிறுவ‌னின் பெய‌ரைக்கூட‌ ம‌ற‌ந்திருந்தாள். இப்போதே அனைத்தும் நினைவிற்கு வ‌ர‌, தான் ஆனாதையாக‌ நிற்கும்போது, த‌ன‌க்கென்று இரு உற‌வை கொடுத்த‌து இவ‌ன்தானா என்று அவ‌னை ஆச்ச‌ரிய‌மாய் பார்த்தாள்.

அவ‌ள் யோசிப்ப‌தை பார்த்து ப‌த‌றிய‌வ‌ன், "செரி செரி அதெல்லா யோசிக்காத‌. இங்கிருந்து போலாம் வா." என்ற‌ப‌டி அவ‌ளின் க‌ர‌ம் ப‌ற்ற‌ வ‌ர‌, "முன்னாடி போ." என்றாள் ச‌ந்ரா உறைந்த‌ நிலையிலேயே.

அவ‌ளுக்குதான் தான் தொட்டால் பிடிக்காதே. அத‌னால் புரிந்துக்கொண்ட‌ ஆனும் த‌லைய‌சைத்துவிட்டு முன்னால் ந‌ட‌ந்தான்.

அபி : ச‌ந்ரா சீக்கிர‌மா அவ‌ன‌ கூட்டிட்டு வா. நா எவ்ளோ நேர‌மா wait ப‌ன்ற‌து?

ச‌ந்ரா : (மெதுவாக‌) அபி அர்ஜுன்தா எனக்கு புது வாழ்க்கைய குடுத்திருக்கான். இவனாலதா எனக்கு லிங்கேஷ்வரன் அப்பாவா கெடச்சாரு.

அபி : அத‌னால‌ என்ன‌? அவ‌ போன‌ ஜென்ம‌த்துல‌ ந‌ம‌க்கு என்ன‌ ப‌ன்னான்னு ம‌ற‌ந்திட்டியா?

ச‌ந்ரா : அது முடிஞ்சுப்போன‌ க‌த‌. இந்த‌ ஜென்ம‌த்துல‌ இவ‌ அப்பாவி. இவ‌ன கொல்ற‌து செரி இல்ல‌.

அபி : சந்ரா அதெல்லா யோசிக்காத‌. இப்போ அவ‌ன‌ கொல்ல‌ற‌த‌ ப‌த்தி ம‌ட்டு யோசி. வேற‌ எதுவும் யோசிக்காத‌.

ச‌ந்ரா அதையெல்லாம் காதில் வாங்கி கொல்லாம‌ல்,

Bluetooth ஐ க‌ல‌ட்டி தூக்கி வீசிவிட்டு, அர்ஜுனை பார்த்த‌ப‌டியே ந‌ட‌ந்து சென்றாள்.

அபி : ஹலோ. ச‌ந்ரா ! லைன்ல‌ இருக்கியா? ச‌ந்ரா! ச்செ, க‌ட் ப‌ன்னிடாளே.

அப்போது அன்னிச்சையாய் திரும்பி பார்த்த அர்ஜுன்,

அர்ஜுன் : என்ன‌ சந்ரா, இவ்ளோ மெதுவா ந‌ட‌க்குற‌? சீகிர‌மா வா காருக்கு போலாம்.

ச‌ந்ரா, அர்ஜுனை வியப்புடன் பார்த்துக்கொண்டே ந‌ட‌ந்து வ‌ந்தாள். ந‌ட‌ந்துக்கொண்டே அபி இருக்கும் இட‌த்திற்க்கு இருவ‌ரும் வ‌ந்துவிட்ட‌ன‌ர்.

அபி : ஒரு வ‌ழியா வ‌ந்துட்டாங்க.

அபி ம‌றைந்திருந்த‌ப‌டி, அம்பு பாயும் துப்பாக்கியை த‌யாராக‌ வைத்திருந்தான். அர்ஜுன் அத‌ற்க்கு நேராக‌ வ‌ந்த‌தும், அபி துப்பாக்கியை அழுத்தினான். நிறைய‌ அம்புக‌ள் அதிலிருந்து பாய்ந்த‌து. அவை அர்ஜுனை நோக்கி பாய்ந்த‌து.


தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.