"இதுதா எங்க பையன். புடிச்சிருக்கா?" என்று மொபைலை முகத்திற்கு நேரே நீட்டவும் அவள் விழிகள் தன் தந்தையிடம் அனுமதி கேட்கும் முன்பே, அந்த புகைப்படம் இவள் விழியில் விழுந்துவிட, சட்டென்று அவள் விழிகள் வியந்தது. அந்த ஸ்கீரீனில் கூலருடன் ஸ்டையிலாய் நின்றிருந்தான் விராஜ்.
"பேரு விராஜ். ரொம்ப நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கம்கூட கெடையாதும்மா" என்றார் விமலா.
வியப்பிலிருந்த அமீராவிற்கோ இவனை எங்கேயோ பார்த்த உணர்வு. ஆனால் எங்கு என்றுதான் நினைவு வராமல் புருவத்தை குறுக்கி யோசிக்க, "மீரா!" என்று அழுத்தி அழைத்தார் லிங்கா.
அதில் அவள் திடுக்கிட்டு அவரை பார்க்க, "நீ உள்ள போ." என்றார்.
அதில் அவளும் வேகமாய் எழுந்துவிட, விமலாவோ புரியாது லிங்காவை பார்க்க, அவரோ அமீராவிடம் பார்வையை அழுத்தி காட்டினார்.
அதில் அவளும் பார்வையை தாழ்த்தி சரியென்று தலையசைத்தபடி வேகமாய் அங்கிருந்து நகர்ந்தாள். அதை பார்த்த விக்ரமன் புரியாது லிங்காவின் பக்கம் திரும்பி, "இப்ப எதுக்கு பொண்ண உள்ள அனுப்புற?" என்று கேட்டார்.
அதில் அவரும் விக்ரமனின் பக்கம் திரும்பி, "இங்க பாரு அவகிட்ட சம்மதம் வாங்கணும்னு எந்த அவசியமும் இல்ல. எல்லா என் முடிவுதா. சோ எனக்கு அடுத்த முகூர்த்தத்துலையே கல்யாணம் நடந்தாகணும்." என்றார்.
"என்ன?" என்று இருவருமே அதிர்ந்து கேட்க, அதில் லிங்காவோ தன் கையிலிருந்த க்ளாஸை கீழே வைத்துவிட்டு அவர்களை பார்த்து, "எப்பிடியும் நாம சம்மந்தி ஆக போறவங்க. சோ உங்ககிட்ட எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு கெடையாது." என்று கூற, இவர்களோ குழப்பமாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, "அந்த ஆர்.கேவோட பையன் என் பொண்ண கிட்னேப் பண்ண ட்ரை பண்ணிருக்கான்." என்றார் லிங்கா.
அதில் இருவரும் அதிர்ந்து அவர் பக்கம் திரும்ப, "நேத்து என் ட்ரைவர அடிச்சு போட்டுட்டு என் பொண்ண தூக்க முயற்சி பண்ணிருக்கான். அந்த ஆர்.கே எனக்கே ஃபோன் பண்ணி சவால் விடுறான்." என்று பல்லை கடித்தார் லிங்கா.
அதில் விக்ரமனின் முகமும் இறுக, "என்னடா சொல்ற?" என்று கேட்டார்.
"அவன் கண்டிப்பா சும்மா இருக்க மாட்டான். அதுக்குள்ள அவன் கண்ணு முன்னாலயே கல்யாணத்த முடிச்சாகணும்." என்றார் லிங்கா.
அதில் சரியென்று தலையசைத்த விக்ரமனின் முகத்திலும் இப்போது வன்மம் தெரிந்தது.
இங்கே தன் அறைக்குள் வந்து மெத்தையில் அமர்ந்த அமீராவிற்கோ அழுகைதான் வர, தன் கால்களை மடக்கி கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
நேற்றுதான் 21 வயது ஆனது, நேற்றுதான் மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறினார், இன்றே பெண் பார்க்க வந்து, புகைப்படத்தை மட்டும் காட்டி கல்யாணம் வரை சென்றுவிட்டனர்.
தனக்கென்று ஒரு மனது, தனக்கென்று ஒரு ஆசை, கனவுகள் இதெல்லாம் இருக்கும் என்று யாருக்குமே தோன்றாதா? தானும் ஒரு பெண்தானே? ஒரு சராசரி பெண் திருமணத்தை பற்றி ஆயிரம் கனவுகள் வைத்திருப்பாள். ஆனால் இவளுடையது சராசரி பெண்ணின் வாழ்க்கை அல்லவே. அதனால் ஒரே ஒரு கனவுதான் வைத்திருந்தாள். காதலித்து திருமணம் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
ஆனால் இவருக்குதான் காதல் என்ற வார்த்தையே பிடிக்காதே. அந்த வார்த்தைக்கு கொச்சையான அர்த்தங்களையல்லவா புரிந்து வைத்துள்ளார்.
இவளை பொருத்தவரை முன்பின் தெரியாதவனுடன் வாழ்வது விபச்சராத்திற்கு சமம். ஒருவருக்கொருவர் பழகி, நன்கு புரிந்து, பிடித்து, அன்பை வளர்த்து, பகிர்ந்து வாழ்வதுதான் கணவன் மனைவி வாழ்க்கை. இதெல்லாம் அவளின் அம்மா அவளிடம் கூறிய வார்த்தைகள். தான் பட்ட துன்பங்களை தன் மகள் படக்கூடாது என்று இதையெல்லாம் சொல்லி சொல்லி வளர்த்திருந்தார். ஆனால் என்ன பிரயோஜனம்? அதுதான் இப்போது இவளுக்கு நடந்துக்கொண்டு இருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வது என்றும் தெரியாமல் தன் முழங்கால்களுள் முகத்தை புதைத்து கதறி அழுதாள் அமீரா.
எத்தனை நேரம் அழுதுக்கொண்டிருந்தாளோ திடீரென்று அவள் அறை கதவு சாத்தப்பட, திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
அவளின் தந்தைதான் கதவை தாழிட்டுவிட்டு அவள் பக்கம் திரும்ப, அவர் கையில் உணவு இருந்தது.
அதில் அவள் அவசரமாய் தன் கண்களை துடைத்துக்கொண்டு, மெத்தையைவிட்டு இறங்க, "உக்காரு உக்காரு." என்றபடி அவள் அருகே அமர்ந்தார் லிங்கா.
அதில் அவளும் பதற்றத்துடனே அப்படியே அமர்ந்துக்கொள்ள, அவரே பூரியை பிய்த்து அவளுக்கு ஊட்டினார். அதில் அவளோ நடுக்கமாய் நிமிர்ந்து அவரை பார்க்க, அவரோ சாதாரணமாய் வாங்கிக்கொள் என்று கண் அசைக்க, அவளும் தயக்கமாய் மெல்ல வாய் திறந்து அதை வாங்கிக்கொண்டாள்.
"இன்னிக்குதா அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா." என்றபடி அவர் அடுத்த வாயை ஊட்ட, அவளும் இதயம் படபடக்க அதை அமைதியாய் வாங்கினாள்.
இது ஒன்றும் புதிதல்ல. இவருடைய தந்தை பாசம் எப்போதாவது இப்படி வெளியில் வருவதுண்டு. ஆனால் எத்தனை நேரத்திற்கு என்றுதான் தெரியாது. அந்த பதற்றத்தில் அவள் மெதுவாய் மென்று விழுங்க, "இன்னும் அஞ்சு நாள்ல உனக்கு கல்யாணம்." என்றார் லிங்கா.
அதில் சட்டென்று தொண்டையில் சிக்கி புரையேறிவிட வேகமாய் இரும ஆரம்பித்தாள். அதில் அவளின் தலையை தட்டிவிட்டு தண்ணீர் கொடுத்தார் அவர். அதில் அவளும் பயத்துடனே க்ளாஸை பிடித்து குடிக்க ஆரம்பிக்க, "அந்த ராகுல்தா உன்ன நெனைக்குறான்னு நெனைக்குறேன்." என்றார்.
அதில் அவள் அதிர்ந்து விழுங்கி அவரை பார்க்க, அவரோ க்ளாஸை இறக்கிவிட்டு புருவத்தை உயர்த்தி, "என்ன? அந்த நாய்தான நேத்து உன்ன கடத்துனது?" என்றார்.
அதில் அவளுக்கோ இப்போதாவது புரிந்ததே என்று முட்டிக்கொண்டு அழுகை வர, "அவன்.. அங்க என்ன.." என்று கூற வர, உடனே தன் கரத்தை நீட்டி தடுத்தார் அவர். அதில் அவளும் சட்டென்று அமைதியாகி தேம்பியபடியே அவரை பார்க்க, அவரோ யோசனையாய் புருவத்தை குறுக்கி, "பட் நீ வர்ற ரூட்டு அவனுக்கு எப்பிடி தெரிஞ்சது?" என்று கேட்டார்.
அதில் சட்டென்று அதிர்ந்த அவள் விழிகளில் கண்ணீர் வழிந்து கன்னம் தொட, "என்ன அந்த பொறுக்கி பையன்கூட ஓடி போகதா நேத்து வெளிய போனியா?" என்று பல்லை கடித்து கேட்டார்.
அதில் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கியவள் உயிர் எரியும் வேதனையுடன் அவரை பார்த்தாள்.
"சொல்லு." என்று இவர் மேலும் அழுத்தம் கொடுக்க, அவளுக்கோ கண்ணீர் பொழ பொழவென்று வெளியில் வந்திருக்க, "சத்தியமா எனக்கு தெரியாதுப்பா. நா எக்ஸாம் எழுத மட்டும்தா போனேன். என்ன நம்புங்க." என்று கதறி அழுதாள்.
"வாய மூடு" என்று அவர் சத்தமாய் கூற, பட்டென்று வாயில் கை வைத்து அழுகையை விழுங்கிக்கொண்டாள்.
"இன்னும் அஞ்சு நாள்ல நா பாக்குற பையனோடதா உனக்கு கல்யாணம். அதுல எதாவது பிரச்சன வந்துச்சு.." என்று அவர் பல்லை கடிக்க, இவளோ வாயில் கை வைத்து கதறி அழுதபடியே வராது என்று தலையசைத்தாள்.
"ம்ம்" என்றபடி உணவை அங்கேயே வைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
அதில் பொத்தென்று மெத்தையில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள் அமீரா. எதை நினைத்து முதலில் அழுவது என்றே புரியவில்லை அவளுக்கு. தன் தந்தையின் இழிவான பேச்சுகளை நினைத்தா, இல்லை இன்னும் ஐந்து நாளில் அடுத்த சிறைக்கு மாற போவதை நினைத்தா? அனைத்தும் சேர்ந்து அவள் உயிரை சிதைத்து எடுக்க, கதறி அழுதாள் அமீரா.
அப்படியாக அந்த நாள் முழுவதும் அழுகையிலேயே முடிவடைய, வெளியே வானம் முழுதாய் இருள் பூசி முழு நிலவு ஒளிர துவங்கியிருந்தது.
அந்த முழு நிலவின் ஒளி ஜன்னல் வழியே அந்த அறைக்குள் வந்து நிறம்ப, அமைதியாய் இருந்த அந்த மெத்தையில் அழுது அழுது சோர்ந்து போய் உறங்கிக்கொண்டிருந்தாள் அமீரா. அவள் முகத்தில் ஈர சுவடுகள் இன்னுமே மிச்சமிருக்க, ஜன்னல் வழி வந்த அழகிய தென்றல் மெதுவாய் அந்த ஈரத்தை கரைத்து சென்றது. அதில் அழகாய் சில முடிகள் வந்து அவள் முகத்தில் விழ, அந்த மெல்லிய தென்றலுக்கு மெதுவாய் அசைந்தாடியது அவள் கூந்தல்.
அந்த குறைந்த இருளிலும் அவள் தேகம் பளிங்காய் ஒளிவீச, அதன் மீது ஒரு கருப்பு நிழல் மெதுவாய் படர்ந்தது. அந்த நிழல் அப்படியே அவள் முகம் வரை படர, அங்கே ஏற்கனவே படர்ந்து கிடந்த முடிகளை அழகாய் விலக்கி ஒதுக்கியது அவன் விரல்கள்.
அதில் அவள் புருவங்கள் குறுக, அதன் நடுவே மென்மையாய் பதிந்தது அவன் இதழ்கள்.
அவன் இதழ் ஈரத்தில் மேலும் அவள் நெற்றி சுழிய, மெதுவாய் இதழை விலக்கி, "யூ ஆர் மைன் ப்ரின்சஸ்." என்றான் மெல்லிய குரலில்.
அதில் புரியாது அவள் மெல்ல அசைந்து படுக்க, அவள் கழுத்தின் கீழ் விலகியது அவள் துப்பட்டா. அதில் இரசனையாய் மெல்ல இதழ் வளைத்தவன், மெதுவாய் அவள் துப்பட்டாவை உருவினான்.
- நொடிகள் தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.