Chapter-27

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
இசையும், பிரியாவும் தங்களது வேலையில் அவனது வீட்டில் பிஸியாக இருக்க,

நடேசன் அனுப்பிய ஆட்களை வைத்து ராகுலும், ஜீவாவும் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.

டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ரஞ்சனி தனது நண்பன் ஒருவனை கால் செய்து வரவழைத்து இருந்தாள்.

இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடிக் கொண்டு இருக்க,

பூவே என் காதல் பூவே என்ற பாடல் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரில் அலறிக் கொண்டு இருந்தது.

அதன் பின் டான்ஸர்ஸ் சென்று ரெஸ்ட் எடுத்துக் கொள்ள, நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே பாடலை ‌ guitarist வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவர்களது live performance பிரியாவின் ஏற்பாட்டினால் youtube, instagram போன்ற சமூக வலைதளங்களில் இசையின் உணவகத்தின் பெயரில் உள்ள பக்கங்களில் லைவில் ஓடிக் கொண்டு இருந்தது.

அதனால் திருவிழா போல அங்கே காதலர் தினம் கொண்டாடப்படுவதை கண்டு ஏராளமான காதல் ஜோடிகள் அங்கே வந்து குவிய தொடங்கினார்கள்.

இசையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த ஜீவா தனது நண்பர்கள் இரண்டு மூன்று பேருக்கு கால் செய்து அவர்களை வரவழைத்து,

பிரியா ஏற்கனவே சொன்னதைப்போல இசையின் அப்பாவிற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள சமையல் கூடத்தில் இவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த பெண்கள் சமைத்துக் கொடுத்த உணவை கொண்டு வரச் சொல்லி அதை வைத்து அனைத்தையும் சமாளித்தான்.

கிட்டதட்ட கடந்த பத்து நாட்களில் இசையின் அந்த பார்ட்டி வைபுடன் இருந்த உணவகம் ஃபேமஸ் ஆனது.

தன்னுடைய தோழிகளுடன் இங்கே வந்தால் அவர்கள் ராகுலை பார்த்து சைட் அடிக்கிறார்கள் என்று நினைத்து தன் அண்ணனைப் போலவே possessiveness-ல் பொங்கிய சந்தியா கிளாஸ் முடிந்து தனியாக கிளம்பி அங்கே வந்தாள்.

ஆனால் அங்கே அனைவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்ததால் யாரும் அவளை கண்டுக் கொள்ளவில்லை.

அடுத்தடுத்து ஆடர்கள் வந்து குவிந்ததால் ஒரு பக்கம் ஆன்லைன் ஆர்டர்களை மேரேஜ் செய்து சலித்து போன ராகுல்,

அங்கே நேரடியாக வந்து சாப்பிட்டவர்களுக்கும் கை வலிக்க வலிக்க கம்ப்யூட்டர் கீ போர்டில் டைப் செய்து பில் போட்டு கொடுத்துக் கொண்டே இருந்தான்.

நல்ல வேலையாக அங்கே வந்த ஜீவாவின் நண்பர்கள் அவனுக்கு கொஞ்சம் உதவியதால்,

ராகுலுக்கு கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைத்தது.

அதனால் தன் வீட்டிற்கு சென்று கொஞ்சம் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வரலாம் என்று நினைத்தவன்,

வெளியில் இருந்த பெரும் கூட்டத்தை பார்த்து தயங்கியபடி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த சந்தியாவை பார்த்தான்.

அதனால் அவன் தானாக அவள் அருகில் சென்று,

“ஓய்.. உள்ள வராம ஏன் இங்கயே இருக்கிற?

கூட்டமா இருக்கிறதுனால திரும்ப போயிடலாம்னு நினைச்சியா?” என்று அவன் சாதாரணமாக தான் கேட்டான்.

ஆனால் தனக்காக அவன் அங்கே வந்திருக்கிறான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷத்தில் துள்ளி குதித்த சந்தியா,

“நான் உன்ன பாக்க தான் இங்க வந்தேன். அப்புறம் உன்ன பாக்காம எப்படி நான் திரும்பி போவேன்?

இங்க கூட்டமா இருக்கே.. நீ என்ன பண்ணிட்டு இருப்ப? பிஸியா இருப்பியான்னு யோசிச்சிட்டு இருந்தேன்..

நான் யோசிச்சது உனக்கு கேட்ட மாதிரி கரெக்டா நீயே வந்து என் முன்னாடி நிக்கிற..

நமக்குள்ள ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்கு பாத்தியா?” என்று ஆசையுடன் சொல்ல,

“நீ இந்த டைம்ல இங்க வருவன்னு எனக்கு என்ன தெரியும்?

ரொம்ப நேரமா கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்து பில் போட்டு போட்டு எனக்கு கையே வலிக்க ஆரம்பிச்சிருச்சு.

அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமேனு இசை அண்ணாவோட ஃபிரிண்ட் வந்ததால அவர பாத்துக்க சொல்லிட்டு வெளிய வந்தேன்.”

என்று உண்மையை சொல்லி ராகுல் சந்தியாவின் குட்டி இதயத்தை ஒரே நொடியில் குட்டி குட்டியாக உடைத்து விட்டான்.‌

ஆனால் இன்று எப்படியாவது இவனை கரெக்ட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து வந்திருந்த சந்தியா இந்த ஹாட் பிரேக்கிற்க்கு எல்லாம் மனம் வருந்தக்கூடியவளா?

சத்தியமாக இல்லை. சுருங்கி போன தன் முகத்தை உடனே சிரிப்பால் நிறைத்த சந்தியா,

“எது எப்படியோ.. நான் உன்ன பாக்க தான் வந்தேன். பாத்துடன்ல எனக்கு அது போதும்.” என்றாள்.

“என்ன பாக்கவா? நீ எதுக்கு என்ன பாக்கணும்?” என்று அவன் புரியாமல் கேட்க,

“ஏன், நான் உன்ன பாக்க வரக் கூடாதா?

நம்ம அன்னைக்கே பேசி ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம்னு நினைச்சேன்.‌ அப்படி இல்லையா?” என்று உடனே தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் சந்தியா.

“இல்லை இல்லை நான் அப்படி மீன் பண்ணல.

நான் சொன்னத தப்பா புரிஞ்சுக்காத.

இந்த ரெஸ்டாரன்ட்டே உங்களோடது தான்.

நீ எப்ப வேணாலும் இங்க வரலாம் போகலாம். உன்னை யார் கேட்க போறா?” என்று ராகுல் சொல்ல,

“என்னை இப்படியே இங்க நிக்க வச்சே பேசி அனுப்பிவிடுவ போல?

இவ்ளோ தூரம் வெயில்ல வந்தவளுக்கு சில்லுனு ஏதாவது குடுப்பியா மாட்டியா?

எங்க அண்ணன் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் ஐஸ்கிரீம், ஃபலுடா எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்கான்னு கேள்விப்பட்டேன்.

அதுல ஒன்னை கூட என் கண்ணுல காட்ட மாட்டீங்களா?

எங்க அண்ணன் கூட சேர்ந்தாலே எல்லாரும் அவன மாதிரியே கஞ்சன் ஆயிடுவாங்க போல.” என்று அவள் பாட்டிற்கு விடாமல் பேசிக் கொண்டே சென்றாள்.

ராகுல் பொதுவாகவே யாரிடமும் அதிகமாக பேசி பழக மாட்டான்.

ஆனால் இவளோ திறந்த வாயை மூடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால், அவனுக்கு இவளிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை.

சுற்றி முற்றி பார்த்தான். நடேசனின் ஆட்கள் தங்களையே கவனிப்பதை போல அவனுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது.

அதனால் அங்கே நின்று அவளுடன் பேச அவனுக்கு சங்கடமாக இருக்க,

“உங்க அண்ணா டயர்ட்டா இருக்குன்னு சொல்லி ரெஸ்ட் எடுக்க போயிருக்காரு‌.

சோ நீ மேல எங்க வீட்ல போய் வெயிட் பண்ணு.‌

புதுசா வந்திருக்கிற ஃபிளேவர்ஸ்ல இருந்து நானே choose பண்ணி உனக்கு ஐஸ்கிரீம் samples கொண்டு வரேன்.

நீ எல்லாத்தையும் பொறுமையா டேஸ்ட் பண்ணி பாரு.” என்றான்.

சரி என்ற சந்தியா படிகளில் ஏறி நேராக பிரியாவின் வீட்டிற்கு சென்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தாள்.

இதற்கு முன் அவள் வந்தபோது இருந்ததை விட, இப்போது அந்த வீடு அழகாகவும் நேர்த்தியாகவும் மாறி இருந்தது.

அந்த வீட்டில் ஏசி, ஃபிரிட்ஜ், புதிய சோஃபா என்று புதுவரவுகள் ஏராளமாக இருப்பதை கவனித்த சந்தியா,

“இதெல்லாம் எங்க அப்பாவோட வேலையா இல்ல எங்க அண்ணனோட வேலையான்னு தெரியல..

ஆனா அவங்க இங்க இருக்குற வரைக்கும் நம்ம அவங்க ரெண்டு பேரையும் நல்லபடியா கவனிச்சிக்கணும்.

அப்ப தானே அவங்களுக்கு நம்ம மேல நல்ல இம்ப்ரசன் வரும்!

அப்பா ராகுலோட அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்காங்கன்னு சொன்னாரே..

வீட்டுக்கு போகும்போது அவங்களையும் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு போயிடனும்.

அவங்க என் வருங்கால மாமியார் ஆச்சே.. இப்போல இருந்தே அவங்கள நான்தான் நல்லா பாத்துக்கணும்.” என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது ஒரு பெரிய ட்ரேயில் விதவிதமான ஐஸ்கிரீம்களை சிறிய கப்புகளில் போட்டு கொண்டு வந்த ராகுல் அவனது மற்றொரு கையில் ஃபலூடாவை தூக்கிக் கொண்டு சிரமப்பட்டு உள்ளே நடந்து வந்தான்.

அவனைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்து அவன் அருகில் சென்ற சந்தியா அவன் கையில் இருந்த ஃபலுூடா கிளாசை வாங்கி கீழே வைத்துவிட்டு,

அவனது மற்றொரு கையில் இருந்த ட்ரேவை பிடிக்கப் போனாள்.

அப்போது அவளது கை அவன் கைகளில் உரச, ஒரு நொடி அதில் கரண்ட் ஷாக் அடித்ததை போல உணர்ந்த சந்தியா தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவனும் அதே நிலையில் தான் இருந்தான். பின் சுதாரித்துக் கொண்டு அந்த ட்ரேவை கொண்டு போய் காஃபி டேபிளில் வைத்தான்.

அப்போது ஜன்னல் வழியாக மாலை நேர மஞ்சள் நிற சூரிய கதிர்கள் உள்ளே வர,

வெள்ளை நிறத்தில் ஷர்ட் ஒன்றையும், வெள்ளை மற்றும் ஸ்கை ப்ளூ நிறத்தில் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்து தனது சுருள் முடியை ஒற்றை கிளிப்பிற்குள் அடக்கி இருந்த சந்தியாவின் தேகம் சூரிய பகவான் செய்த மேஜிக்கின் காரணமாக பல பலவென்று குளோயிங்காக இருந்தது.

அதனால் ராகுல் தன்னையும் மீறி அவளை ஒரு நொடி சைட் அடிக்க,

தவறாமல் அதை கவனித்துவிட்ட சந்தியா தனக்குள், “பார்றா.. இதுவரைக்கும் நம்ம தான் இவன எப்பயும் ‌முழுங்கிற மாதிரி சைட் அடிச்சிட்டு இருப்போம்..

ஃபர்ஸ்ட் டைமா இவன் நம்மளை இப்படி பார்க்கிறான்..

அப்ப இவனுக்கும் நம்மளை பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்!” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

லேசாக வந்த வெட்கத்தில் அவள் கன்னங்கள் சிவக்க,

மேக்கப் எதுவும் இல்லாமல் தன் அக்காவை போலவே எளிமையான தோற்றத்தில் அழகாக இருந்த சந்தியா அவன் மனதை கவர்ந்தாள்.

இருப்பினும் வெகு நேரம் அங்கேயே நின்று இருக்கும் சூழ்நிலையில் இந்த வயதில் தேவை இல்லாமல் தன் மனதை அழைப்பாயா விட வேண்டாம் என்று நினைத்தாய் ராகுல்,

“நீ இங்கயே உக்காந்து சாப்பிடு. உனக்கு ஏதாவது வேணும்னா ரெஸ்டாரன்ட் நம்பருக்கு கால் பண்ணு.

நான் கொண்டு வந்து குடுக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர,

அவன் கையைப் பிடித்து தடுத்த சந்தியா “நான் உன்ன பாக்க தான் இங்க வந்தேன்னு சொன்னேன் மறந்துட்டியா?

இப்ப என்ன பாக்காம எங்க ஓடிப்போக பார்க்கிற?” என்று கேட்க,

அவளை திரும்பி பார்த்தான் ராகுல். உடனே சந்தியா தன் இரு புருவங்களையும் அவனைப் பார்த்து உயர்த்தி என்ன என்பதைப் போல கேட்க,

அவள் முன்னே வழக்கம்போல் பேச்சுற்றுப்போன ராகுல் எதிரில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

உடனே தானும் தனது இருக்கையில் அமர்ந்த சந்தியா ஒரு ஸ்பூனை எடுத்து அவனிடம் கொடுத்து தானும் ஒரு ஸ்பூனை எடுத்து ஐஸ்கிரீமை சாப்பிட தொடங்கினாள்‌.

அவளது முகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்த ராகுல் தலை குனிந்தவாறு அவள் கொடுத்த ஐஸ்கிரீமை மெல்ல சாப்பிட்டுக் கொண்டிருக்க,

“நான் உன்னை எதுக்காக பார்க்க வந்தேன்னு கேட்க மாட்டியா?” என்று கேட்டாள் அவள்.

“நீ சொன்னா தானே தெரியும்.” என்று அவன் சொல்ல,

“ம்ம்.. அப்ப சொல்லிட்டா போச்சு..” என்ற சந்தியா அவளது பேக்கில் இருந்து ஒரு கிஃப்ட் பாக்ஸை எடுத்து அவன் முன்னே நீட்டி,

“இத உன் கிட்ட குடுக்குறதுக்கு தான் வந்தேன்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.