Chapter-27

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அனைவரையும் ஒரு பார்வை பார்த்த அர்ஜுன் தனது சிஸ்டமில் அவனது ஐடியை லாகின் செய்து அதில் இருந்து

“I am Back!” என்று ஒரு போஸ்ட் போட்டான்.

உடனே அவன் அருகில் இருந்த அவனது டீமில் இருந்த அனைவரும்

“Welcome back chief!” என்று அடுத்தடுத்து கமெண்ட் செய்தார்கள்.‌

அது ஒரு டார்க் நெட்வொர்க்.

அதில் உலகில் உள்ள பெரும் பணக்காரர்கள் அனைவரும் இருப்பார்கள்.

அதே போன்று மாஃபியா ஆட்களும், அரசியல்வாதிகளும் கூட இருந்தனர்.

அவர்கள் அனைவரையும் ஆட்டி வைக்கவும், அவர்களுக்கு கட்டளையிடவும் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் அர்ஜுனின் டீமில் உள்ளவர்கள் தான்.

அவர்கள் அனைவருக்கும் சீஃப் அர்ஜுன் தான்.

அப்படி என்றால் இந்த மொத்த உலகத்தையே தன் கையில் வைத்து சுற்றிக் கொண்டு இருக்கும் அனைத்து இயக்கத்திற்க்கும் காரணமான காரியகார்த்தா அவள் தான்.

அதனால் கடந்த இரண்டு வருடங்களாக அவன் இல்லாததால் திடிரென்று முளைத்த அனைவரும் அவர்கள் தான் இனி எல்லாமே என்று ஆடிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு எல்லாம் அர்ஜுனின் வருகை ஒரு பயத்தையும், பதட்டத்தையும் கொடுத்து.

அதே சமயம் இரண்டு வருடத்திற்கு முன் அவனை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கி அவனை கோமாவில் படுக்க வைத்தவனும் அந்த போஸ்டை பார்த்து அதிர்ந்தான்.

“டேய் அர்ஜுன் நீ ஒரேயடியா அழிஞ்ச்சுட்டேன்னு நான் சந்தோஷப்பட்டு கெஞ்சும் கெஞ்சமா எல்லாத்தையும் பிளான் பண்ணி இந்த Chief positionஐ டேக் ஓவர் பண்றத்துக்கான டைம் கைக் கூடி வரும்போது,

நீ மறுபடியும் ஏன் டா என் lifeல குறுக்க வர்ற?

உனக்கு என்ன என் மேல பயம் இல்லாம போயிடுச்சா?

இல்ல தைரியமா என்ன பழிவாங்க வந்துட்டியா நீ?

நீ பீனிக்ஸ் மாதிரி எத்தனை தடவை திரும்ப திரும்ப வந்தாலும் நானும் உன்ன மறுபடியும் கொல்லுவேன் டா.”

என்று நினைத்து இருந்த கடுப்பில் அவன் கையில் இருந்த துப்பாக்கியால் எதிரில் இருந்த சுவற்றில் சுட்டான்.

அங்கே டமால் டாமால் என்று அந்த துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அந்த அறை முழுதும் எதிரொலித்தது.

அங்கே சிஸ்டமின் முன்னே அமர்ந்திருந்த அர்ஜுன் கண்களில் தீப்பொறிகள் மின்ன,

“நீ என்ன பண்ணி இருந்தாலும் நான் உன்னை மன்னிச்சிருப்பேன்.

ஆனா நீ என் இடத்துக்கு வரணும்னு ஆசைப்பட்டு ஒரு கேவலமான வேலையை செஞ்சு என் கையாலேயே என் சியாவை கொல்ல வைத்துவிட்டல்ல...

இதுக்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகணும் டா..

நீ எனக்கு எதிரா என்னமோ பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும்,

நம்ம பழைய ஃபிரண்ட்ஷிப்பை மனசுல வச்சு உனக்கு ஒரு சான்ஸ் குடுத்து உன்ன விட்டேன்ல...

அதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத நீ பண்ணிட்ட..

இனிமே நான் என்ன பண்ண போறேன்னு பாரு...

உன்ன வேரோட புடுங்கி எரியாம நான் ஓயமாட்டேன் டா.” என்று நினைத்தான்.

அர்ஜுனுக்கு அவனை இப்போதே ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியாக இருந்தது.

அதனால் உடனே அவன் தனது ஐடியில் இருந்து அனைவரும் பார்க்கும்படி ஒரு போஸ்ட்டை தயார் செய்தான்.

அதில்..

தன்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தவன்,

“நான் இங்க இல்லாத இந்த கொஞ்ச நாள்ல என் இடத்தைப் பிடிக்கறதுக்கு நிறைய பேர் மெனக்கெட்டு ரொம்ப வேலை பார்த்திருக்காங்க.

சோ நான் அவங்க எல்லாருக்கும் ரெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

நான் யாரை பத்தி பேசறேன்னு உங்களுக்கே தெரியும்.

மேபி அவங்களோட நம்ம வெப்சைட் சீக்ரெட் ஐடி நேம் உங்களுக்கு தெரிஞ்சாலும், அவங்களோட ஒரிஜினல் ஐடென்டிட்டி உங்களுக்கு என்னனு தெரியாம இருக்கலாம்.

அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை.

எனக்கு வேணுங்கறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்.

எனக்கு எதிரியாக துடிக்கிறவங்களுக்கு நான் ஒரு பெர்மனென்ட் ரெஸ்ட் கொடுக்கணும்.

பட் அதுக்காக டைம் ஸ்பென்ட் பண்றதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.

சோ எனக்காக அந்த வேலைய பாக்குறவங்க யாரா இருந்தாலும்,

அவங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு என் சைட்ல இருந்து அவங்களுக்கு ரிவார்ட்ஸ் கிடைக்கும்.

அதையும் தாண்டி ஒரு ஸ்பெஷல் ரிவார்டா..

நான் குடுக்குற இந்த அசைன்மென்ட்ட முடிக்கிறவங்களோட டீம் headஐயும் அவங்க டீம்ல இருக்க டாப் 3 மெம்பர்ஸையும்,

நான் டைரக்டா என் டீம்ல சேத்துக்க போறேன்.

இந்த வேலைய உங்களுக்கு செஞ்சு முடிக்கிறதுக்கு நான் கொடுக்கிற டைம் 48 hours.

And your time starts now..!!” என்று வெளிப்படையாக ஒரு போஸ்ட்டை பதிவிட்டான்.

அடுத்த இரண்டாவது நொடியில் இருந்து தொடர்ந்து அந்த போஸ்டிற்கு,

“கண்டிப்பா உங்களுக்காக நாங்க என்ன வேணாலும் செய்வோம் Chief.

உங்க டீம்ல ஜாயின் பண்றதுக்காக நான் என் உயிரை கொடுக்க கூட ரெடியா இருக்கேன்.

நாங்க இந்த டீம்ல இருந்தா போதும்.

நீங்க குடுக்குற என்ன ரிவார்டும் கூட எங்களுக்கு வேண்டாம்.

நீங்க ஆசைப்பட்ட மாதிரி நாங்க அவங்கள permanentஆ தூங்க வைக்கிறோம் Chief.

You don't worry.” என்று அடுத்தடுத்து கமெண்ட்டுகள் குவிந்தது.

ஆயிரம், இரண்டாயிரம் அல்ல லட்சக்கணக்கானவர்கள் தங்களது Chiefஇன் எதிரியை கூண்டோடு அழித்துவிட்டு,

அவர் மனதில் இடம் பிடிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்கள்.

உலக நாடுகளில் உள்ள பெரும்பாலானோர் இப்போது அர்ஜுனின் எதிரியை அவனுக்காக வீழ்த்த வியூகம் வகுக்க தொடங்கினார்கள்.

இதில் அந்த நாடுகளின் உயர் பதவியில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்கள் என்று அனைவரும் அடக்கம்.

The golden sparrow‌ என்ற ஐடியில் இருந்து நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,

அந்த கமெண்ட்களை பார்த்து தலையே சுற்றியது.

அர்ஜுனை அன்று கொலை செய்ய முயற்சி செய்தது அவன் தான் என்று அவனுக்கு நன்றாக தெரியும் என்பதை இவனும் அறிவான்.

இப்போது அவன் மீண்டும் வந்து விட்டதால் தன்னை அவன் பழிவாங்க ஏதேனும் திட்டம் தீட்டுவான் என்று அவன் எதிர்பார்த்து இருந்ததே..

இருப்பினும் அவன் நேருக்கு நேராக தன்னுடன் மோதுவான் என்று இவன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில்,

அர்ஜுன் இப்படி உலக நாடுகளில் உள்ள பெரும்பான்மையானவர்களை தனக்கு எதிராக ஒரே நொடியில் திருப்பி விட்டு தன்னை கார்னர் செய்வான் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.

‌ அவனது அசிஸ்டன்ட் கூட அர்ஜுனின் இந்த அதிரடி செயலால் அதிர்ந்து,

“என்ன பாஸ் உங்க பெஸ்ட் ஃபிரண்டு திடீர்னு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட்டை, அதுவும் கொஞ்சம் கூட மத்தவங்கள பத்தி யோசிக்காம பப்ளிக்கா கொடுத்திருக்காரு...

அர்ஜுன் நம்ம மேல கொலை வெறியில இருக்காருன்னு மட்டும் நல்லா தெரியுது.” என்று அவனிடம் சொல்ல,

கோல்டன் ஸ்பேரோ என்ற பெயருக்கு சொந்தக்காரன் தன் உயிர் இன்னும் எத்தனை மணி நேரங்களுக்கு தனக்கு சொந்தமாக இருக்கும் என்று யோசித்து ஒரு நொடி பயத்தில் நடுங்கினான்.

பின் அவனது மண்டைக்குள் ஏதோ ஒரு பல்பு எறிய,

உடனே தனக்கு தெரிந்த ஒருவனுக்கு கால் செய்து அந்த தளத்தில் அர்ஜுனின் போஸ்டிற்கு எதிராக ஒரு கமெண்ட் போட சொன்னான்.

அதில்..

“இத்தனை நாளா எங்கயோ
காணாம போன Chief இப்ப மட்டும் எங்க இருந்து திரும்பி வந்தாரு?

இது நிஜமாவே அவர் தான்னு எப்படி நம்பறது?

வேற எவனும் ஒருத்தன் இந்த Chief இடத்தை பிடிக்க ட்ரை பண்றாங்கன்னு தெரிஞ்சுகிட்டு வேற யாரோ இந்த chanceஐ யூஸ் பண்ணி அவரோட ஐ.டி.ய ஹாக் பண்ணி யூஸ் பண்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு இல்ல..

இப்ப இந்த அசைன்மென்ட் கொடுக்கிறது நம்ம சீஃப் தான்னு நம்ம எப்படி நம்ப முடியும்?

எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.

Chief என்ற ஐடியில இருந்து பேசுறவன் யாரா இருந்தாலும் அவன உடனே Chiefஆ ஏத்துக்க முடியாது." என்று அவன் உடனே கொளுத்தி போட,

அந்த போஸ்டும் உடனே அனைவராலும் கவனிக்கப்பட்டது.

அவன் எழுப்பிய இந்த கேள்வி மற்றவர்களின் மனதிலும் இல்லாமல் ஒன்றும் இல்லை.

ஆனால் இப்படி உலகத்தையே தனது கைகளுக்குள் வைத்து அடக்கி ஆளும் ஒருவனின் ஐடியை அப்படி சாதாரணமாக இன்னொருவனால் ஹேக் எல்லாம் செய்து விட முடியாது என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் இப்போது இந்த கேள்வி நேரடியாக எழுந்தவுடன்,

கோல்டன் ஸ்பேரோவின் ஆட்கள் உடனே பதிலுக்கு தாங்களும் அவனை ஆதரிப்பதாக போஸ்ட் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் இப்போது அர்ஜுனின் அடையாளம் மீண்டும் கேள்விக்குறியானது.

அதை தனது நெற்றிப் பொட்டு சுருங்க கோபமாக பார்த்துக் கொண்டு இருந்த அர்ஜுன்,

யாருக்கும் எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் உடனே தனது ஐடியில் இருந்து லைவ் chat ஆன் செய்தான்..

அதில் அவன் தனது ஆக்ரோஷமான குரலில்,

“இந்த அக்கவுண்ட்டை ஹேக் பண்ணி என் இடத்தில இருந்து யாரால வேணும்னாலும் எது வேணுமானாலும் பண்ண முடியும்னா,

ரெண்டு வருஷமா என் ப்ளேஸ்க்கு வர்றதுக்கு ஏன் டா எல்லாரும் முக்கிட்டு இருக்கீங்க?

நான் ஒன்னும் ஒரே நாள்ல Chief ஆகல.

உங்களுக்கு என் மேல டவுட் இருந்தா, நீங்களே உங்க கிட்ட இருக்கிற சோர்ஸ் எல்லாத்தையும் யூஸ் பண்ணி நான் யாருன்னு தைரியம் இருந்தா verify பண்ணி பாத்துக்கோங்க.

உங்க யாருக்கும் தனித்தனியா நான் யாருன்னு சொல்லி ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.

இங்க தேவையில்லாம டிஸ்கஸ் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாம போய் நான் சொன்ன வேலையை பாருங்க.”

என்று சுத்தமான சரளமான ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அந்த லைவை ஆஃப் செய்தான்.

அவன் மாஸ்க் அணிந்திருந்ததால் அவன் முகம் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் அவனது பிரத்யோகமான குரலை அனைவரும் அறிந்து இருந்தனர்.

இருப்பினும் அந்த குரலை இதற்கு முன் கேட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அதை மிமிக்ரி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அப்படி யோசித்து அதைப் பற்றி இப்போது கருத்து சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.

ஒருவேளை தங்களுக்கு எதிரில் இருப்பது தங்களுடைய பழைய Chiefஆக இருந்தால் அவனை எதிர்த்து ஒரு கருத்தை பதிவிடுவது கூட,

கண்டிப்பாக ஒரு மோசமான முடிவு தான்.

அது தங்களது மரண வாசலை திறந்து நேராக தங்களை உள்ளே அங்கே அனுப்பி விடும் என்று அனைவருக்கும் தெரியும்.

அதை நினைத்துப் பார்த்த யாருக்கும் இப்போது அர்ஜுனின் அடையாளத்தைப் பற்றி டவுட் கேட்க தைரியம் இல்லாமல் போய்விட்டது.

இப்போது அனைவரும் அவனைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு,

அவன் கொடுத்த வேலையில் இறங்கி அவனது குழுவில் சேய கிடைத்த இந்த அரிய வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளாளுக்கு தங்களது அணியில் உள்ளவர்களை திரட்ட தொடங்கினார்கள்.

அதைக் கண்டு எரிச்சல் அடைந்த கோல்டன் ஸ்பேரோ,

“அடச்சே.. மறுபடியும் நான் சொன்னத நம்பாம இவனுங்க எல்லாரும் என்னை தேடி கிளம்பிட்டாங்களே...

இந்த வெறியில இவனுங்க இத்தனை பேரும் சேர்ந்து என்னை தேடினா கண்டிப்பா அவன் சொன்ன டைம்க்குள்ள என்ன கண்டுபிடிச்சிடுவானுங்க..!!”

என்று நினைத்து பயந்தான்.‌

அர்ஜுன் ஒருவன் தன்னைத் தேடி கண்டுபிடித்தால் கூட அவனால் தன்னை சுலபமாக கண்டுபிடித்து விட முடியும் என்று அவனுக்கே நல்லா தெரியும்.

இப்படி உலகில் உள்ள முக்கியமானவர்கள் அனைவரும் அவனுடன் சேர்ந்து இவனை தேடினால்,

கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களுக்குள் இவனுக்கு சாவு மணி அடிக்க போவது உறுதி.

அதனால் இப்போது என்ன செய்து இவர்களிடம் இருந்து தப்புவது?

என்று யோசித்தவாறு தன் தலையைப் பிய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் கோல்டன் ஸ்பேரோ.

இந்த நிலையில் அர்ஜூனின் மர்டர் அட்டெம்ப்ட் திட்டத்தில் அவனுடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் அனைவரும்

இப்போது அவன் நேரடியாக விடுத்திருக்கும் இந்த கொலை மிரட்டலை கண்டு பயந்து,

ஆளுக்கு ஒரு திசையில் அவனை விட்டு பிரிந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து ஓடினார்கள்.

அங்கே தனது கேமை ஸ்டார்ட் செய்து முதல் மூவை நகர்த்திருந்த அர்ஜூன்,

திருப்தியாக தனது சிஸ்டமை ஆஃப் செய்துவிட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்தான்.

உடனே அவனது குழுவில் இருந்தவர்களும் எழுந்து நின்றார்கள்.

அதில் ஒருவன் ஆர்வமாக அவன் அருகில் சென்று,

“Chief நீங்க இந்நேரம் அவங்க யாருன்னு கண்டுபிடிச்சு இருப்பீங்கன்னு எங்களுக்கு தெரியும்..

அந்த டீமோட ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க.

மத்தவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி அவன் தலையை கொண்டு வந்து நாங்க உங்க கால்ல போடுறோம்.

நம்ம டீம்ல இருக்கிறவங்க எல்லாரும் உங்களுக்காக இத்தனை நாள் கழிச்சு இந்த அசைன்மென்ட்ட செய்ய இகரா இருக்காங்க.” என்று சொல்ல,

அவன் தோள்களில் லேசாக தட்டிய அர்ஜுன்,

“அவனுக்கும் எனக்கும் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு நிறைய இருக்கு.

அவன நான் என் கையால தான் முடிப்பேன்.” என்று சொல்லிவிட்டு ஆகாஷ் மற்றும் தனது குழுவினருடன் அந்த அறையை விட்டு வெளியேறி சுரங்க பாதையில் நடக்க தொடங்கினான்.

அப்போது ஆகாஷ் அவனிடம்,

“அவன் யாருன்னு என் கிட்டயாவது சொல்லுங்க அண்ணா.

உங்க கூட சேர்ந்து நானும் அவனை கதற கதற கொல்லனும்.

அப்ப தான் என் ஆத்திரம் அடங்கும்.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான்‌.

தானே அந்த கோல்டன் ஸ்பேரோவின் ஒவ்வொரு இறக்கைகளாக பிய்த்து எடுத்து அவனுக்கு தன்னால் முடிந்தவரை வாழும் போதே நரக வேதனை என்றால் என்னவென்று காட்டி,

பின் அவன் உயிரை பிரித்து இந்த உலகத்தில் இருந்து அவனுக்கு தன் கையால் விடுதலை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று நினைத்த அர்ஜுன்,

“இது என் தனிப்பட்ட பிரச்சனை.

ஆக்சுவலி இது மத்தவங்களுக்கு நான் கொடுத்த டாஸ்க் இல்ல.

எனக்கு நானே குடுத்துகிட்ட டாஸ்க்.

மத்தவங்க அவனை கண்டுபிடிச்சு போடுறதுக்கு முன்னாடி,

அவனையும், அவன் கூட இருக்கிறவங்களையும், அவனுங்களுக்கு தெரிஞ்சவங்க, அவனுங்க ஃபேமிலில இருக்கிறவங்கன்னு ஒருத்தனையும் விட மாட்டேன்.

ரத்தம் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.

இந்த வார்ல நான் ஜெய்க்கிறனா, இல்ல எனக்காக சண்டை போட ரெடியா இருக்கிற என் சோல்ஜர்ஸ் ஜெயிக்கறாங்களான்னு பார்க்கலாம்.”

என்ற அர்ஜுன் ‌ அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினான்.

இப்போதே மற்றவர்களுக்கு முன் அவனுக்கு அந்த கோல்டன் ஸ்பேரோவை கண்டுபிடித்து குருமா வைக்க வேண்டிய முக்கியமான வேலை இருக்கிறது.

அதனால் மற்ற அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அங்கே இருந்து தனது குழுவினரோடு புறப்பட்டான் அர்ஜூன்.

‌- மீண்டும் வருவாள்.. ❤️

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-27
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.