CHAPTER-25

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
த‌ன‌க்கு சொந்த‌மான‌தை தொட்டால்தான் அவ‌னுக்கு பிடிக்காதே. இன்றுதான் த‌ன் குதிரையை தொட்ட‌ ஒருவ‌னை கிழித்து தொங்க‌விட்டான். இப்போது த‌ன் காரை தொட்ட‌ ஐவ‌ரை ம‌ட்டும் விடுவானா என்ன‌? அவ‌ர்க‌ளின் அரைவாசி உயிரையே உருவி எடுத்திருந்தான். அதிலும் முக்கிய‌மான‌ ஒருவ‌னின் முக‌த்தையே சிதைத்து எரித்துவிட்டுதான் அங்கிருந்து ந‌க‌ர்ந்தான்.

அனைத்தையும் முடித்துவிட்டு அந்த‌ அரை பிண‌ங்க‌ளை க‌ட‌ந்து த‌ன் காருக்கு வ‌ந்த‌வ‌ன், க‌த‌வை திற‌ந்த‌ நொடி பொத்தென்று அவ‌ன் மீது விழுந்தாள் அமீரா. அதில் அவ‌ன் திடுக்கிட்டு அவ‌ளை தாங்கி பிடிக்க‌, அப்போதே அவ‌ன் வாச‌னையில் அவ‌ள் விழிக‌ள் மெதுவாய் அசைந்து பிரிந்த‌து.

ம‌ங்கிய‌ அவ‌ள் விழிகளில் ம‌ங்க‌லாய் அவ‌ன் உருவ‌ம், அப்ப‌டியே மெதுவாய் தெளிவாக‌, "ஹேய் ஹூ ஆர் யூ?" என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் மிக‌ மெல்லிய‌தாய் தான் அவ‌ள் செவியை அடைந்த‌து.

"ஹ‌லோ!" என்று அவ‌ள் க‌ன்ன‌த்தை த‌ட்டிய‌வ‌னின் முக‌ம் தெளிவாய் அவள் விழி திரையில் ப‌திய‌, மீண்டும் மெதுவாய் அவ‌ள் விழிக‌ள் மூடிய‌து.

"என்ன‌ ஆச்சு பாஸ்?" என்று யோகி அருகில் வ‌ர‌, "யார் இவ‌? என் காருக்குள்ள‌ என்ன‌ ப‌ண்றா?" என்று அவ‌னை பார்த்தான் ருத‌ன்.

அப்போதே அவ‌ள் முக‌த்தை க‌வ‌னித்த‌ யோகியின் முக‌ம் விய‌ப்பில் விரிய, "பாஸ் இவ‌ங்க‌.." என்று அவ‌ன் கூற‌ வ‌ந்த‌ நொடி ப‌டுக்கென்று அந்த‌ டைரியை பிடுங்கினான் யோகி.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, "என்ன‌ போட்டு த‌ள்ளாம‌ விட‌வே கூடாதுன்னு இருக்கீங்க‌ளா?" என்று பாவ‌மாய் கேட்டான் யோகி.

அவ‌ளோ அதை க‌வ‌னிக்காது அந்த‌ டைரியை பிடுங்க‌ போக‌, ச‌ட்டென்று வில‌க்கிக்கொண்ட‌வ‌ன், மீண்டும் உண‌வை அவ‌ள் கையில் திணித்தான்.

"சாப்புடுங்க‌ மொத‌ல்ல‌. அப்ற‌மா குடுக்குறேன்." என்ற‌ப‌டி எடுத்து செல்ல‌, "இல்ல‌ ப்ளீஸ் இருங்க‌." என்றாள் அவ‌ச‌ர‌மாக‌.

அதில் அவ‌னும் நின்று அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ ச‌ற்று த‌ய‌ங்கி, "உங்க‌ளுக்கு.. என்ன‌ தெரியுமா? ஐ மீன் நா அவ‌ர‌ மீட் ப‌ண்ற‌துக்கு முன்னாடியே?" என்று கேட்க‌, அதில் ப‌ட்டென்று புன்ன‌கைத்த‌வ‌ன், "ம்ம்." என்றான்.

"எப்பிடி?" என்று அவ‌ள் சிறு ஆர்வ‌த்துட‌ன் கேட்க‌, "மொத‌ல்ல‌ சாப்புடுங்க‌. அப்ற‌ம் வ‌ர்றேன்.." என்ற‌ப‌டி திரும்ப‌, "இல்ல‌ ப்ளீஸ்." என்றாள் வேக‌மாக‌.

அதில் அவ‌ன் நின்று விழி உருட்டி ச‌லித்துக்கொண்டு, திரும்பி அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ "நா க‌ண்டிப்பா சாப்புடுறேன். ப‌ட் ப்ளீஸ் நீங்க‌ளே க‌தைய‌ க‌ண்டினியூ ப‌ண்ணுங்க‌." என்றாள்.

அவ‌ள் க‌ண்ணில் தெரிந்த‌ கெஞ்ச‌லில் மெல்லிய‌தாய் யோசித்த‌வ‌ன், ச‌ரியென்று அதே மேசையில் ஏறி அம‌ர்ந்தான்.

அதில் அவ‌ளும் ஆர்வ‌மாய் அவ‌னை பார்க்க‌, "மொத‌ல்ல‌ சாப்ப‌ட‌ ஆர‌ம்பிங்க‌. அப்ப‌தா நானும் ஆர‌ம்பிப்பேன்." என்றான் யோகி.

அதில் அவ‌ளும் வேக‌மாய் இர‌ண்டு மூன்று வாய் எடுத்து வாயில் வைக்க‌, அதில் மெல்லிய‌தாய் சிரித்துக்கொண்ட‌ யோகி, அப்ப‌டியே யோச‌னையில் மூழ்கி மீண்டும் அந்த‌ நாளுக்குள் சென்றான்.

"ரேஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வ‌ந்திட்டிருந்த‌ப்போ, கிட்ட‌த்த‌ட்ட‌ இருட்ட‌ ஆர‌ம்பிச்சிருச்சு. அன்னிக்குதா அடுத்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து.." என்று கூற‌ வ‌ர‌, "ஒரு நிமிஷ‌ம்." என்றாள் அமீரா.

அதில் ப‌ட்டென்று நிக‌ழ் உல‌கிற்கு வ‌ந்த‌வ‌ன், நிமிர்ந்து அவ‌ளை பார்க்க‌, "அதெல்லாம் என‌க்கே தெரியும். அவ‌ரு என்ன‌ பாத்த‌துக்கு அப்ற‌ம் என்ன‌ ஆச்சு? உங்க‌ளுக்கு என்ன‌ எப்பிடி தெரியும்? அதுல‌ இருந்து சொல்லுங்க‌." என்றாள் அமீரா.

அதில் அவ‌ன் மீண்டும் அந்த‌ நாளுக்குள் புகுந்து, அப்ப‌டியே சில‌வ‌ற்றை க‌ட‌ந்து பின்னால் வ‌ந்து, ச‌ரியாக‌ க‌த‌வை திற‌ந்து பொத்தென்று அவ‌ள் விழுந்த‌ நிக‌ழ்விற்கு வ‌ந்து நின்றான்.

அவ‌ள் முக‌த்தை பார்த்து விய‌ப்பாய் விழி விரித்த‌வ‌ன், "பாஸ் இது லிங்கா சாரோட பொண்ணு." என்றான் யோகி.

அதில் புருவத்தை சுழித்து, "ஹூஸ் தட்?" என்று கேட்டான் ருத‌ன்.

"அதா பாஸ். விக்ரமன் சாரோட பிஸ்னஸ் பார்ட்னர்." என்றான்.

"என்ன? என் அப்பாவும் அவர் அப்பாவும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸா?" என்று வியப்பாய் கேட்டாள் அமீரா.

"ஆமா மேடம். பட் அந்த பிஸ்னஸ்க்கும் என் பாஸ்க்கும் எந்த சம்மந்தமும் இல்ல. சோ அவருக்கு உங்கள தெரிய வாய்ப்பில்ல." என்றான் யோகி.

அதில் குழப்பமாய் புருவம் சுழித்தவள், "சம்மந்தம் இல்லயா? அப்படின்னா?" என்று கேட்க, "சொல்றேன். மொதல்ல இத கேளுங்க." என்றபடி மீண்டும் அந்த நாளுக்குள் சென்றான்.

ருத‌னோ குழ‌ப்ப‌மாய் அவ‌ள் முக‌த்தை பார்க்க‌, "என்ன ப்ராப்ளம்னு தெரியல. நாமலே வீட்டுல விட்டரலாமா பாஸ்?" என்று தயக்கமாய் கேட்டான் யோகி.

அதில் அவனை முறைத்தவன், "அது என் வேல இல்ல." என்று இறுக்கமாய் கூறிய‌ப‌டியே அவ‌ளை காரின் இருக்கையில் சாய்த்தான்.

அவ‌ன் வார்த்தைக்கும் செய‌லுக்கும் ச‌ம்ம‌ந்த‌மே இல்லாதிருக்க‌, குழ‌ம்பி விழித்தான் யோகி. அதில் அவ‌ள் ப‌க்க‌ க‌த‌வை மூடிவிட்டு, "கார எடு." என்ற‌ப‌டி முன்னிருக்கைக்கு சென்றான் ருத‌ன்.

"ஆங்.. என்ன‌ பாஸ்?" என்று அவ‌ன் திடுக்கிட்டு விழிக்க‌, "கார எடுன்னு சொன்னேன்." என்று அழுத்தி கூறி க‌த‌வை திற‌ந்து உள்ளே அம‌ர்ந்தான் ருத‌ன்.

அதில் குழ‌ம்பி த‌லையை சொரிந்துக்கொண்ட‌வ‌ன், அவ‌ச‌ர‌மாய் க‌த‌வை திற‌ந்து ஓட்டுந‌ர் இருக்கையில் அம‌ர‌, "க்ளீன் ப‌ண்ணியா?" என்று கேட்டான் ருத‌ன்.

அதில் திடுக்கிட்டு, "ச‌..சாரி பாஸ்" என்ற‌ப‌டி வாட்ட‌ர் பாட்டிலை தேடியெடுத்துவிட்டு இற‌ங்கினான் யோகி.

அவ‌ன் வெளியே சென்று அந்த‌ ம‌து சித‌றிய‌ முக‌ப்பு க‌ண்ணாடியை க்ளீன் செய்துக்கொண்டிருக்க‌, உள்ளே ருத‌னோ த‌ன் முன்னிருந்த‌ பேக் மிர‌ரை த‌ன் ப‌க்க‌ம் திருப்பிய‌ப‌டி, அதை பார்த்து த‌ன் சிகையை ச‌ரி செய்துக்கொண்டிருந்தான். அப்போதே பின்னிருந்த‌ அவ‌ளின் பிம்ப‌ம் அதில் தெரிய‌, அதை க‌ண்டு அப்ப‌டியே நிறுத்திவிட்ட‌வ‌னின் விர‌ல்க‌ள் சிகையிலிருந்து மெதுவாய் வெளி வ‌ந்த‌து.

அவ‌ளின் ம‌ய‌ங்கிய‌ பிம்ப‌த்தில் இவ‌னின் இத‌ய‌ துடிப்பு மெதுவாய் அதிக‌ரிக்க‌, அந்த இத‌ய‌த்தில் அவ‌ள் சாய்ந்த‌ இத‌ம் இன்னுமே மிச்ச‌மிருந்த‌து. அதில் அவ‌ன் மெதுவாய் குனிந்து பார்க்க‌, அவ‌ன் ச‌ட்டையில் முத‌ல் முறையாய் ஒரு பெண்ணின் வாச‌னை ப‌டிந்திருந்த‌து. அதில் த‌ன்னையும் மீறி அவ‌ன் விழிக‌ள் மூட‌, அவ‌ன் நாசியோ அவ‌ள் வாச‌னையை இர‌ச‌னையாய் உள்ளிழுத்த‌து. அந்நொடி ஒரு இனம் புரியா உணர்வு அவன் உடலெங்கும் படர்ந்து, அணுக்கள் ஒவ்வொன்றிலும் வந்து நிரம்புவதுப்போல் இருந்தது.

ச‌ட்டென்று க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்ட‌ ச‌த்த‌த்தில், ப‌ட்டென்று விழி திற‌ந்தான் ருத‌ன். அவ‌ன் அருகே வ‌ந்த‌ம‌ர்ந்து க‌த‌வை அடைத்த‌ யோகி, "சாரி பாஸ். கெள‌ம்ப‌லாம்." என்ற‌ப‌டி காரை ஸ்டார்ட் செய்தான்.

அதில் ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌ம் திரும்பிவிட்ட‌ ருத‌னின் முக‌த்தில் மீண்டும் இறுக்க‌ம் குடிக்கொள்ள‌, மெதுவாய் தன் விரல்களை உயர்த்த, அதில் ஆள்காட்டி விர‌லில் அணிந்திருந்த‌ பெரிய க‌ருப்பு கல் பதித்த மோதிரம் அழகாய் மின்னியது. அதை இழுத்து அதே விரல் நுனிக்கு கொண்டு வ‌ந்து, அதை க‌ட்டை விர‌லால் சுழ‌ற்றிய‌ப‌டியே எதையோ யோசிக்க‌ ஆர‌ம்பித்தான் ருத‌ன்.

அப்போது த‌ய‌க்க‌மாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பிய‌ யோகி, "பாஸ்!" என்று மிக‌ மெல்ல‌மாய் அழைக்க‌, அவ‌னுக்கோ செவியில் விழுந்தால்தானே, ஆழ்ந்த‌ யோச‌னையில் மோதிர‌த்தை சுழ‌ற்றிய‌ப‌டியே இருந்தான் ருதன்.

"பாஸ்" என்று இவ‌ன் ச‌ற்று ச‌த்த‌மாய் அழைக்க‌, சுழ‌ற்றுவ‌தை நிறுத்தி அவ‌னை பார்த்தான் ருத‌ன்.

அதில் ச‌ட்டென்று இவ‌னுள் ப‌த‌ற்ற‌ம் தொற்ற‌, தைரிய‌த்தை கூட்டி த‌டுமாறிய‌வ‌ன், "அ..து அந்த‌ பொண்ணு வீட்டுக்குத்தான‌ பாஸ்?" என்று த‌ய‌க்க‌மாய் கேட்டான்.

அதில் அவ‌ன் விழியில் அழுத்த‌த்தை கொடுத்து இவ‌னை முறைக்க‌, அதில் ப‌த‌ற்ற‌ம் அதிக‌ரித்து, "ச‌..சாரி பாஸ். " என்று த‌டுமாறி சாலையில் பார்வையை ப‌தித்தான் யோகி.

அதில் அவ‌னையே முறைத்த‌வ‌ன், "ஜ‌ஸ்ட் 20 மினிட்ஸ்" என்று அழுத்தி கூறினான் ருத‌ன்.

அதில் அவ‌ன் திரும்பி ருத‌னை பார்க்க‌, "20 மினிட்ஸ்தா உன‌க்கு டைம்." என்றான் அழுத்த‌மாக‌.

அதில் தான் புரிந்து முக‌ம் ம‌ல‌ர்ந்த‌வ‌ன், "ஓகே பாஸ்." என்றப‌டி வேக‌த்தை இன்னும் அதிக‌மாய் கூட்டி, அவ‌ச‌ர‌மாய் குனிந்து ஸ்பீட் மீட்ட‌ரை பார்த்தான். "இங்கிருந்து அவ‌ங்க‌ வீட்டுக்கு ப‌த்து நிமிஷ‌ம், அங்க‌ போய் ட்ராப் ப‌ண்ண‌ ஒரு ப‌த்து நிமிஷ‌ம்." என்று அவ‌ன் த‌ன‌க்குள் க‌ண‌க்கு போட்டுக்கொண்டிருக்க‌, அவ‌ன் முக‌த்தை வைத்தே அதை புரிந்த‌வ‌ன், "அவ வீட்டுக்கு இல்ல‌." என்றான் ருத‌ன்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு அவ‌னை பார்த்து, "பாஸ்?" என்று விழிக்க‌, "இன்னும் 20 மினிட்ஸ்ல‌ என் வீட்டுல‌ இருக்க‌ணும்." என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அக‌ல‌ விழி விரித்து, "பாஸ்!" என்றான் அதிர்வாக‌.

"புரிஞ்சிருக்கும்." என்ற‌ப‌டி பார்வையை திருப்பிக்கொண்டான் ருத‌ன்.

அதில் யோகி வேக‌மாய் திரும்பி பின்னால் ம‌ய‌ங்கி கிட‌ப்ப‌வ‌ளை பார்த்துவிட்டு இவ‌னை பார்த்து, "அப்போ இந்த‌ பொண்ணு?" என்று அதிர்வாய் கேட்க‌, "அவ‌ளும்தா." என்றான் ருத‌ன்.

அதில் ப‌ட்டென்று இவ‌ன் நெஞ்சை பிடித்திருக்க‌, ச‌ட்டென்று கார் த‌ட‌ம் புர‌ண்ட‌தில் திடுக்கிட்டு மீண்டும் ஸ்டிய‌ரிங்கை பிடித்து திருப்பியிருந்தான் யோகி.

ஒரு நொடி அவ‌னுக்கு மூச்சே நின்று திரும்பி வ‌ர‌, இங்கே அத‌ற்கெல்லாம் சிறிதும் அசாராம‌ல் மீண்டும் த‌ன் மோதிர‌த்தை சுழ‌ற்ற‌ ஆர‌ம்பித்த‌வ‌னின் க‌ண்ணில் இப்போது இர‌ச‌னை தெரிய‌, பார்வை த‌ன் முன்னிருந்த‌ அவ‌ள் பிம்ப‌த்தில் ப‌திந்திருந்த‌து.

இனி இது எனக்குதான் சொந்தம் என்ற பார்வை அது.

(உன் வண்டியில ஏறுனது ஒரு குத்தமாடா? அதுக்குன்னு பாத்த‌வொட‌னே கிட்னாப்பா? அவ‌ அப்ப‌னுக்கு ம‌ட்டும் தெரிஞ்ச‌து... ச‌ந்திப்போம் அடுத்த‌ பாக‌த்தில்.)

- நொடிக‌ள் தொட‌ரும்..
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.