பிரியா செல்ல வேண்டாம் என்று சொல்வதற்குள் இசை அந்த பெண்ணுடன் சேர்ந்து டான்ஸ் ஆட தொடங்கி இருந்ததால் அவர்களை எரித்து விடும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கிட்டத்தட்ட பத்து நிமிடமாக அவர்கள் இருவரும் ஜோடியாக பின்னாடி இசைக்கு தகுந்த மாதிரி ஜாலியாக டான்ஸ் பெர்பார்மன்ஸ் செய்து கொண்டிருக்க,
அங்கே வந்திருந்தவர்கள் அனைவரும் “வாவ் செம பர்பாமென்ஸ்!
ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுறாங்க இல்ல..
இவங்க ரெண்டு பேரும் நல்ல பேர்!
இதுக்கு முன்னாடி டான்ஸ் ஆடிட்டு இருந்தவரை விட இவர் நல்ல அந்த பொண்ணு கூட டான்ஸ் ஆடுறாரு.
இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்கு.
ஒருவேளை இவங்க ரெண்டு பேரும் லவ்வர்சா இருப்பாங்களோ?” ஒன்று தங்களுக்குள் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டு இருப்பதை எல்லாம் கவனித்தபடி நின்ற பிரியாவிற்கு காதில் இருந்து புகை வராத குறை தான்.
“என்ன இவன் ஓவரா பண்றான்?
நான் ஒருத்தி இங்க இருக்கும்போதே எப்படி இவன் அவ கூட டான்ஸ் ஆடலாம்?
என்னமோ என்ன பார்த்த ஃபர்ஸ்ட் டேவே வேகமா என் கிட்ட வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகேவான்னு கேட்டான்...
அன்னைக்கு நாங்க கிஸ் பண்ணதுக்கு அப்புறம் மார்னிங் வந்து தெரியாம பண்ணிட்டேன்..
என்னால உன் முன்னாடி கண்ட்ரோலா இருக்க முடியல அப்படி இப்படின்னு என்ன லவ் பண்ற மாதிரியே பேசிட்டு..
இப்ப என்ன எவளோ ஒருத்தி கூட ஜாலியா எந்த கவலையும் இல்லாம இவ்ளோ க்ளோசா டான்ஸ் ஆடிட்டு இருக்கான்?
என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க இவன்?
இவன் இஷ்டத்துக்கு இப்படி ஆட்டிகிட்டு இருக்கிறது எல்லாம் என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது.”
என்று நினைத்த பிரியா அவர்களை ஆட விடாமல் எப்படி தடுப்பது? என்று யோசித்தவாறு சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது நடேசன் பிரியாவின் பாதுகாப்பிற்காக அனுப்பிய ஆட்களுக்காக ஒரு பெரிய டிரேவில் நிறைய டீ போட்டு கப்பில் ஊற்றிக் கொண்டு வெளியில் வந்த ஜீவா அவள் கண்களில் பட்டான்.
அந்த டீ கப்பை பார்த்தவுடன் பிரியாவின் மண்டையில் ஒரு ஐடியா பளிச்சிட,
வேகமாக ஜீவாவின் அருகே சென்று அவன் கையில் இருந்த டிரைவை வாங்கி “எனக்கு இந்த டீ வேணும். நீங்க போய் வேற போட்டுக்கோங்க.” என்றாள்.
“ஏய்.. ஏய்.. இரு மா.. என்னமா பண்ண போற?
ஆல்ரெடி அப்பா அனுப்பிச்சு விட்ட ஆளுங்க எல்லாம் மத்தியானத்துக்கு பிரியாணியும் சில்லி சிக்கனமும் போட்டே ஆகணும்னு அடம் புடிச்சிட்டு இருக்காங்க.
நான் தான் இப்ப வர்ற கூட்டத்தையே சமாளிக்க முடியல.
இப்போதைக்கு மறுபடியும் பிரியாணி எல்லாம் செய்ய முடியாது.
நான் டீ போட்டு கொண்டு வரேன்.
குடிச்சிட்டு தெம்பா வேலை பாருங்கன்னு சொல்லி ஆஃப் பண்ணி வச்சுட்டு வந்து இருக்கேன்.
நான் டீயோட இப்ப போகலைன்னா அந்த தடி பசங்க எல்லாம் டென்ஷன் ஆயிடுவாங்க மா.
உனக்கு வேணும்னா கவிதா அக்கா கிட்ட சொல்லி ஸ்ட்ராங்கா நல்ல டீயா போட்டு தர சொல்லி குடி.
பால் கம்மியா இருந்துச்சுன்னு இதுல தண்ணி நிறைய ஊத்தி டீத்தூள் எக்ஸ்ட்ரா போட்டு மிக்ஸ் பண்ணிருக்கேன்.
இது எதுக்கு உனக்கு?” என்ற ஜீவா மீண்டும் அவளிடம் இருந்து டிரேவை பிடுங்க பார்க்க,
“நடேசன் அங்கிள் எனக்காக தானே அவங்கள எல்லாம் இங்க இருக்க வச்சிருக்காரு!
கொஞ்ச நேரம் டீக்காக வெயிட் பண்ணுங்கன்னு நான் சொன்னதா போய் அவங்க கிட்ட சொல்லுங்க.
அவங்க பிரியாணி தானே கேட்டாங்க!
ஆல்ரெடி இங்க நம்மளால சமைக்கிறதுக்கு முடியலன்னா backup optionஆ இருக்கட்டுமேன்னு வீட்டு வேலைக்கு போய் சமைக்கிற பொம்பளைங்க ஒரு பத்து பேர நாங்க செலக்ட் பண்ணி இசையோட அப்பா கல்யாண மண்டபத்தில வச்சு சமைச்சு தர அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.
இங்க நம்ம ரெடி பண்ணி இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாத்தையும் போது நீங்க அவங்களுக்கு இன்பார்ம் மட்டும் பண்ணீங்கன்னா போதும்.
அங்க சமைக்கிறதோட சேர்த்து அவங்க நமக்கும் சமைச்சு இங்கே கொண்டு வந்து டெலிவரி பண்ணிட்டு போயிடுவாங்க.
இங்க இருக்கிறவங்க கேட்ட மாதிரி அவங்களுக்கு பிரியாணியும் கொ
குடுத்துடுங்க.
இவங்களுக்கு ஆகுற எக்ஸ்பென்சஸ் எல்லாத்துக்கும் நடேசன் அங்கிள் தனியா பே பண்றதா சொல்லிட்டாரு.
எனக்கு இப்ப இந்த டீ வேணும் அவ்ளோ தான்." என்ற பிரியா அவனிடம் இருந்து டிரேவை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இசையை நோக்கி நடந்தாள்.
அவள் டீயுடன் வருவதை பார்த்தவுடன் இசை டான்ஸ் ஆடாமல் நின்றுவிட,
அவனுடன் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்த பெண்ணும் உடனே ஆடாமல் நின்று “ஓய் மியூசிக் லவ்வர் என்னாச்சு உனக்கு?
அதுக்குள்ள பேட்டரி புட்டுக்குச்சா..?? உன்னால டான்ஸ் ஆட முடியலையா?” என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்டுவிட்டு சிரித்தாள்.
இசை அவளை தன் காலேஜ் ஜூனியர் என்று சொல்லி பிரியாவிடம் அறிமுகப்படுத்தி இருந்ததால்,
“என்ன இவ மரியாதை இல்லாம சீனியர அவன் இவன் பேசுறா?
இதுல இசை பிரியன்னு இருக்கிற இவன் பேர அப்படியே மேடம் ஸ்டைலா இங்கிலீஷ்ல வேற மியூசிக் லவ்வர்னு சொல்றாங்க!
அப்படியே எனக்கு வர்ற கோபத்துக்கு இந்த டீயை எல்லாம் இவ மூஞ்சில ஊத்தணும் போல இருக்கு!”
என்று நினைத்த பிரியா சிரித்த முகமாக அவர்கள் அருகில் சென்று,
“நீங்க எல்லாரும் நான் ஸ்டாப்பா ரொம்ப நேரமா டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க.
உங்களுக்கு டயர்டா இருக்கும்ல! டீ குடிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.
உங்களுக்காக தான் இத கொண்டு வந்தேன். எடுத்துக்கோங்க!” என்று சொல்லி அனைவருக்கும் டீயை கொடுத்தாள்.
அதைப் பார்த்தாலே கண்டிப்பாக அது கேவலமாக தான் இருக்கும் என்று இசைக்கு தெரியும்.
இருப்பினும் அதைக் கொண்டு வந்து கொடுத்தது அவள் என்ற ஒரே காரணத்திற்காக அதை வாங்கி குடித்தான்.
அப்போது மெயின் guitarist ஒருவன் வந்து அவள் கொடுத்த டீயை எடுத்துக் கொண்டு,
“ஹாய் மேம்! உங்கள பார்த்த உடனே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு நெனச்சேன்.
பட் இப்பதான் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு இருக்குன்னு தெரியுது.
நீங்க இங்க மேனேஜரா வொர்க் பண்றீங்கன்னு நான் கேள்விப்பட்டேன்.
இங்க வேலை பாக்குறதுக்கு இத்தனை பேர் இருந்தும், எங்களுக்காக நீங்களே கொண்டு வந்து டீ குடுக்கிறது பெரிய விஷயம்.” என்று சொல்ல,
தன்னிடம் ஒரு அழகான இளைஞன் பேசுவதை கண்டவுடன் இசையின் முகம் அஷ்ட கோணலாக மாறுவதை பார்த்து உள்ளுக்குள் பிரியாவிற்கு குதூகலமாக இருந்தது.
அதனால் சிரித்த முகமாக அவனிடம், “நம்ப ரெஸ்டாரண்ட்ல இருக்கிறது எல்லாமே நம்ம வேலை தானே மிஸ்டர்!
ஓனரே இங்க வந்து சகஜமா உங்க கூட டான்ஸ் ஆடும் போது, ஜஸ்ட் மேனேஜர் நானு.
நான் உங்களுக்கு டீ சர்வ் பண்ண கூடாதா?
உங்களோட மியூசிக் ஸ்கில்ஸ் நல்லா இருக்கு.
And you are looking handsome too!
நீங்க ஏதாவது பேன்ட்ல ஒர்க் பண்றீங்களா?” என்று தொடர்ந்து அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.
பிரியாவின் அழகிலும், எளிமையான தோற்றத்திலும் மயங்கிய அவனும் தொடர்ந்து அவளிடம் தற்புகழ் பாடி பேசிக் கொண்டே இருந்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்தபடி பொறாமையில் பொங்கிக் கொண்டு இருந்த இசை தன் கையில் இருந்த use and throw cupஐ அழுத்தி பிடிக்க,
கொதிக்க கொதிக்க சூடாக இருந்த டீ அவன் கையில் ஊற்றியது.
அந்த வலியை கூட பொருட்படுத்தாமல் இசை கையில் இருந்த டீ கப்பை கீழே தூக்கிப் போட்டுவிட்டு,
“இவன் ரொம்ப ஓவரா போறான்.
நான் காசு கொடுத்து இவன இங்கே பெர்ஃபார்மன்ஸ் பண்ண கூட்டிட்டு வந்தா..
என் ஆளு முன்னாடியே பர்பாமென்ஸ் பண்ணி இவன் ஸ்கோர் பண்ண பார்க்கிறானா?
இந்த பிரியா.. இத்தனை நாளா என் கூட இருக்காளே..
என்னைக்காவது நான் பாக்குறதுக்கு நல்லா இருக்கேன்னு சொல்லி இருக்காளா இவ?
அவன் மட்டும் இவ கண்ணுக்கு handsomeஆ தெரியுறானா?
என் கூட பேசக் கூட டைம் இல்லாம எப்ப பாத்தாலும் நானே சொன்னாலும் கேட்காம எதாவது ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருப்பா இவ!
இப்ப இங்க வந்து இவன் கூட இவ்ளோ நேரமா பேசிட்டு இருக்கா!
ச்சே.. பார்த்தாலே பத்திகிட்டு வருதே!” என்று நினைத்து அவர்கள் இருவரையும் மாறி மாறி வயிற்றெரிச்சலில் பார்த்துக் கொண்டிருந்தான்.
உண்மையில் அவன் தன்னை விட ஒரு ஆங்கிலில் அழகாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது.
இசை கோதுமை நிறத்தை விடவே கொஞ்சம் கம்மியாக தான் இருந்தான்.
ஆனால் எதிரில் இருப்பவனோ பிரியாவை விடவே கொஞ்சம் கலராக இருந்தான்.
அவனது சர்மம் பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு அத்தனை அழகாக பளபளப்பாக இருந்தது.
அதனால் தன்னையும் அவனையும் ஒப்பிட்டு பார்த்த இசைக்கு திடீரென inferiority complexஏ வந்துவிட்டது.
அதனால் அவன் “எனக்கு இனிமே டான்ஸ் ஆடறதுக்கு மூட் இல்ல.
எனக்கு டயர்டா இருக்கு. நான் மேல போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.
நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு உன் ஃபிரண்டு எவனோ ஒருத்தன் நல்லா டான்ஸ் ஆடுவான்னு சொன்னேன்ல..
அவனை கூப்பிட்டு ஆட சொல்லு. அவன் எவ்வளவு கேட்டாலும் குடுத்துடலாம்.” என்று தனது ஜூனியர் பெண்ணிடம் சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இசை.
Guitarist உடன் பேசிக் கொண்டிருந்தாலும் பிரியாவின் கவனம் முழுக்க இசையின் மீது தான் இருந்தது.
அதனால் அவன் அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு சென்றதை கவனித்து விட்டு,
“ஓகே, நீங்க டான்சர் வந்தவுடனே கண்டினியூ பண்ணுங்க.
All the best for your future performances.” என்று சொல்லி அவனிடம் ஹேண்ட் ஷேக் செய்துவிட்டு இசையை பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
அங்கே இருக்க பிடிக்காமல் இசை தன் வீட்டிற்கு செல்லும் படிகளில் ஏறிக் கொண்டிருக்க,
மூச்சு வாங்க அவன் பின்னே சென்ற ப்ரியா கொஞ்சம் அவன் அருகில் சென்றவுடன்,
“ஹே இசை!” என்று அவனை சத்தமாக கூப்பிட்டு பார்த்தாள்.
அது தன் காதில் விழுந்தும் அவளை கவனிக்காததை போல பாவலா செய்து இசை நேராக தன் வீட்டிற்கு சென்றான்.
மூச்சு வாங்க மேலே வந்த பிரியா இருந்த கோபத்தில் நேராக அவன் அருகில் சென்று அவன் கையைப் பிடித்து இழுத்து,
“என்ன டா வேணும்னுன்னே பண்றியா?
நான் அவ்வளவு சத்தமா பக்கத்துல வந்து கூப்பிடுறேன்..
உனக்கு அது நிஜமாவே கேட்கலையா?
இப்போ எதுக்கு நீ நடிக்கிற? என் மேல இருக்கிற கோவத்துல தானே நீங்க வந்த?” என்று அவனிடம் கேட்க,
சூடான டீ கையில் ஊற்றி இருந்ததால் அவனது ரைட் ஹேண்டில் லேசாக எரிச்சல் இருந்தது.
இப்போது பிரியா வந்து அவன் கையை அழுத்திப் பிடித்தவுடன் அது அவனுக்கு கடுமையான வலியை கொடுக்க,
“ஆஆஆ..!!” என்ற இசை அவளிடம் இருந்து தன் கையை உருவினான்.
அப்போது தான் அவன் கையை கவனித்த பிரியா,
“அச்சச்சோ என்ன ஆச்சு? கைல டீ கொட்டிடுச்சா?
இப்படி செவந்து போய் இருக்கு!
சொல்ல மாட்டியா நீ? இரு நான் போய் தேங்காய் எண்ணெய் எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
உடனே தன் கையை முதுகுக்கு பின்னே மறைத்துக் கொண்ட இசை,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பரவாயில்ல.
இதை விட மோசமான வலியை எல்லாம் நான் நிறைய அனுபவிச்சிட்டேன்.
இந்த வலி என்ன என்ன செஞ்சிட போகுது?
எனக்காக நீ கஷ்டப்பட்டு எதுவும் பண்ண வேண்டாம்.
என்ன நானே பாத்துக்கிறேன்.” என்று உடைந்த குரலில் சொல்ல,
“ஓஹோ.. இப்ப தான் அவ கூட டான்ஸ் ஆடிட்டு வந்த..
அதுக்குள்ள உனக்கு நான் யாரோ மாதிரி தெரியுறேனா?
என்ன ஒரே செகண்ட்ல பிரிச்சு பேசிட்ட இல்ல?
நீ அவ்ளோ தானா இசை? ச்சே! உன்ன பத்தி நான் என்னவோ நினைச்சு வச்சிருந்தேன்.
ஆனா நீயும் மத்த எச்ச பசங்க மாதிரி தான்னு இவ்ளோ சீக்கிரம் ப்ரூவ் பண்ணுவேன் நான் நினைச்சு கூட பாக்கல.
நேத்து வரைக்கும் இங்க நீயும் நானும் எப்படி இருந்தோம்?
நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்கலையா?
இப்ப அது எல்லாத்தையும் மறந்துட்டு இந்த சின்ன விஷயத்துல உனக்கு நான் எதுவும் செய்யக்கூடாதுன்னு சொல்றியா?
அப்போ நான் யார் இங்க? ஜஸ்ட் உன் ரெஸ்டாரண்ட்ல ஒர்க் பண்ற லேபர்!
அப்படித் தானே? சொல்லு இசை.. எதுக்கு வாய மூடிட்டு நிக்கிற?
நீ என்ன நெனச்சி என் கூட பழகிட்டு இருக்க?
இப்ப என் முன்னாடி நிக்கிற நீ என்னை எடுத்து எரிஞ்சி பேசுறியே.. இது உ
ண்மையா?
இல்ல எனக்காக எதுவேனாலும் செய்ய ரெடியா இருக்கேன்னு சொன்னியே அது உண்மையா?
உன்ன நம்புன நான் முட்டாளா?” என்று ஆத்திரம் பொங்க கேட்ட பிரியாவின் கண்களில் இவனும் தன்னை ஏமாற்றி விட்டானா? என்ற சோகத்தில் கண்ணீர் கசிந்தது.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.